*கல்லீரல் பாதுகாப்பு*
நமது உடலில் உள்ள மிக முக்கியமான பெரிய உறுப்பு கல்லீரல். இவை தான் நமது உணவில் உள்ள சத்துக்களை சேமித்து தேவைப்படும்போது ஆற்றலாகத் தருகிறது. அப்படிப்பட்ட கல்லீரலை எப்படி உணவின் மூலம் பாதுகாப்பாக வைக்க முடியும்.
நமது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பு இந்தக் கல்லீரல் தான். ஏனெனில் இந்தக் கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை சேகரிக்கும் வேலை, பித்த நீர் சுரப்பு, பிலிரூபின் என்ற புரத உருவாக்கத்திற்கு, ரத்த செல்கள் உருவாக, தேவைப்படும்போது ஆற்றலைத் தர என்று ஏகப்பட்ட வேலைகளைக் கல்லீரல் செய்கிறது.
இப்படிப்பட்ட கல்லீரலை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்குத் தகுந்தாற் போல் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் மட்டும் கல்லீரலை பாதிப்பதில்லை. நாம் உண்ணும் சில வகை உணவுகளும் கல்லீரலை பாதிப்படைய செய்கின்றன. அதே போல் சில வகை உணவுகள் கல்லீரலுக்கு நண்பனாகச் செயல்படுகிறது. சரி வாங்க இப்படி எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொண்டு கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.
*ஓட்ஸ்மீல்*
ஓட்ஸ்மீலில் அதிகப்படியான நார்ச்சத்துகள் உள்ளன. இதனால் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பைக் கரைத்து ஈரல் நோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக ஓட்ஸை எடுத்துக் கொண்டு வரலாம்.
*க்ரீன் டீ*
க்ரீன் டீயில் கேட்சின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இதனால் கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கிறது. எனவே தினமும் ஒரு கப் க்ரீன் டீ எடுத்துக் கொள்ளுங்கள். உங்க கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
*தண்ணீர்*
தண்ணீர் தான் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் செயல்பட உதவுகிறது. எனவே போதுமான தண்ணீர் குடிக்கும் நமது மெட்டா பாலிசம் இயக்கம் சரியாகி ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முடியும். இதனால் நமது கல்லீரலும் கொழுப்புகள் படியாமல் ஆரோக்கியமாக இருக்கும். அதே நேரத்தில் கார்பனேட்டேடு பானங்களைத் தவிருங்கள்.
*பாதாம் பருப்பு*
நட்ஸில் ஏராளமான விட்டமின் ஈ உள்ளது. இது கொழுப்பு கல்லீரல் நோய் வராமல் தடுக்க உதவுகிறது.மேலும் உங்க இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. எனவே ஒரு கைப்பிடி அளவு நட்ஸை ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளுங்கள்.
*உப்பு*
நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையில் இருக்க உணவில் உப்பு சேர்ப்பது அவசியம். அதே நேரத்தில் அதிகப்படியான உப்பால் (சோடியம்) கல்லீரலில் நார்த்திசுக்கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது. இது கல்லீரல் பாதிப்பை உண்டாக்கி விடுகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், உப்பு சேர்க்கப்பட்ட ஊறுகாய்கள் போன்றவற்றை தவிருங்கள். போதுமான அளவு மட்டுமே உணவில் உப்பைச் சேருங்கள்.
*கீரைகள்*
கீரைகளில் குளுதாதயோன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இவை கல்லீரல் சரியாக வேலை செய்ய உதவுகிறது. எனவே கீரைக் பொறியல், கடையல் வைத்துச் சாப்பிடுங்கள். கீரையில் இல்லாத ஊட்டச்சத்துக்களே கிடையாது. எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
*ப்ளூபெர்ரி*
ப்ளூபெர்ரியில் உள்ள பாலிபினால்கள் கொழுப்பு அல்லாத கல்லீரல் நோயை நீக்குகிறது. எனவே இதை உணவில் சேர்த்து கொள்ளலாம். ப்ளூபெர்ரி மட்டும் அல்ல நீங்கள் டார்க் சாக்லேட், ஆலிவ்ஸ் மற்றும் ப்ளெம்ஸ் இவற்றைக் கூட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றிலும் பாலிபினால்கள் உள்ளன.
*மூலிகை*
சில வகை மூலிகைகள் நம் கல்லீரலை காக்க உதவுகிறது. ஆர்கனோ, சூனிய வகை செடி, ரோஸ் மேரி போன்ற மூலிகைகள் உதவுகின்றன. இதில் உள்ள பாலிபினால்கள் தான் இதற்குக் காரணம். அதே போல உணவில் பட்டை, கறிவேப்பிலை, சீரகம் போன்ற மசாலா பொருட்களையும் சேர்த்து வாருங்கள். இது உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
வெந்தயக் கீரை, கொத்தமல்லி, புதினா போன்ற கீரை வகைகளை உங்களுடைய தினசரி உணவுகளில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
*கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்*
மஞ்சள் காமாலை ஏற்படுதல்பசியின்மைசரும பிரச்சனைகள்வயிற்றில் வீக்கம் உண்டாதல்நீர் வீக்கம்வாந்தி, சோர்வு, குமட்டல், தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.எனவே நமது கல்லீரலை பாதுகாப்பாக வைப்பது நமது கையில் தான் உள்ளது. அதற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பேணுங்கள்.
No comments:
Post a Comment