சிகையை ஏன் எடுக்க_கூடாது
முடிந்த சிகையுடன் செய்யவேண்டிய சுப கர்ம அனுஷ்டானங்களும் அவிழ்ந்த சிகையுடன் செய்யவேண்டிய அசுப கர்ம அனுஷ்டானங்களும் வீணாக வீணாகாமல் இருப்பதற்காக.
இறந்த உறவினர்களுடைய சாவு தீட்டு களையெல்லாம் ஓரங்க சேமித்து வைத்துக் கொள்ளாமல் இருப்பதற்காக விதிமுறைப்படி க்ஷௌரமும் தர்ப்பணமும் செய்தால் ஒழிய தீட்டு அகலாது.
வேதமந்த்ரபூர்வமாக தெய்வசாக்ஷியாகச் சௌளகர்மாவில் வைக்கப்பட்ட சிகையை திரும்பவும் வேதமந்த்ரபூர்வமாக ஸன்யாஸ சமயத்திலேயே எடுக்கவேண்டி இருக்க இடையே இஷ்டப்படி எடுத்து விடுவதால் வேததுரோகமும், தெய்வதுரோகமும் ஏற்படாமலிருக்க.
ஒரு மனிதன் ஸ்நானம் செய்தவுடன் அவன் மேல் வஸ்திரத்தை பிழிந்த ஜலமும் சிகையின் நுனியின் மூலமாய் கீழே விட்ட ஜலமுமே அவனுடைய வம்சத்தில் பிறந்த முன்னோர்களில் யாரேனும் அதிக பாதகங்கள் செய்து நரகத்தில் இருந்தால் அவர்களை போய் சேரும் தர்ப்பன ஜலமாகிறது ஆதலால் அவர்களுக்கு கொஞ்சமேனும் ஏற்படும் ஆறுதலையும் தடுக்காமல் இருப்பதற்கும்.
( விநா யத் சிகயா கர்ம விநா யஞோபவீதத:।
ராக்ஷஸம் தத்தி விஜ்ஞேயம் ஸமஸ்தம் நிஷ்பலா: க்ரியா:॥
विना यच्छिखया कर्म विना यज्ञोपवीततः।
राक्षसं तद्धि विज्ञेयं समस्तं निष्फलाः क्रियाः॥
முடிந்த சிகையும்,யஞோபவீதமுமில்லாதவனின் கர்மம் நிஷ்பலம்)
#ராஸுப்பரத்னம்அய்யர்
1954
மூலம் ; ஸ்வதர்மம்
No comments:
Post a Comment