Wednesday, June 29, 2022

ஒப்பிலியப்பன் ஆலயம்

 இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு ஒப்பிலியப்பன் ஆலயம்,

தஞ்சை மாவட்டம்.

உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ்வதற்கு அவசியமானது உணவு. அதிலும் மனிதர்கள் மற்ற உயிர்களை காட்டிலும் பலவகையான உணவுகளை சமைத்து உண்ணும் திறன் கொண்டவர்கள். “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று சொல்வார்கள் மனிதர்கள் உண்ணும் எந்த ஒரு உணவும் சிறப்பாக இருப்பதற்கு உப்பு அவசியம். ஆனால் மனித வடிவில் வந்த இறைவனே உப்பில்லா உணவை சாப்பிட விருப்பம் தெரிவித்த தலம்தான் திருநாகேஸ்வரம் அருள்மிகு ஒப்பிலியப்பன் ஆலயமாகும் .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான கோயிலாக இந்த ஒப்பிலியப்பன் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான இறைவனான திருமால் ஒப்பிலியப்பன், திருவிண்ணகரப்பன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் பூமா தேவி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படும் இவ்வூர் முற்காலத்தில் திருவிண்ணகரம் என அழைக்கப்பட்டது. இக்கோயிலின் தீர்த்தம் அஹோத்ரபுஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. வைணவ கோயில்களில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் இந்த கோயில்.

தல புராணங்களின் படி திருமாலின் நெஞ்சில் எப்போதும் லட்சுமி தேவி வீற்றிருப்பதை போன்ற பேறு தனக்கும் வேண்டும் என பூமாதேவி தனது கணவரான பெருமாளிடம் கேட்ட போது, பூலோகத்தில் மகரிஷி ஒருவருக்கு துளசி எனும் பொருள்படும் திருத்துழாய் என்கிற பெயரில் மகளாக வளரும் போது, தனது இதயத்தில் இடப்பெறும் பேறு கிட்டும் என பெருமாள் வரமளித்தார்.

மார்கண்டேய மகரிஷி துளசி வனத்தில் மகாலட்சமியின் அம்சங்களுடன், குழந்தையாக கிடந்த பூமா தேவியை எடுத்து சென்று துளசி என்று பெயர் சூட்டி தனது மகளாக வளர்க்க தொடங்கினார்.

துளசி மணப்பருவம் அடைந்ததும் மகாவிஷ்ணுவாகிய பெருமாள் ஒரு அந்தணர் வேடத்தில் வந்து மார்கண்டேய மகரிஷியிடம் அவரின் மகளான துளசியை மணமுடித்து தருமாறு கேட்டார். மார்கண்டேயரோ இளம் வயது பெண்ணான துளசிக்கு உணவில் சரியான பதத்தில் உப்பு சேர்த்து சமைக்ககும் பக்குவம் கூட அறியாதவள் என்பதால் அவளை மணமுடித்து தருவது நன்றாக இருக்காது என்று கூறினார். 

அந்தணரோ துளசி செய்யும் உப்பில்லாத உணவை தான் சாப்பிட தயார் என்று கூறினார். இப்போது தனது தவ ஆற்றலால் அந்தணராக வந்திருப்பது அந்த திருமால் என்பதை உணர்ந்து தனது மகள் துளசியை அவருக்கே மணமுடித்து தந்தார்.

உப்பில்லா உணவை சாப்பிட ஒப்பு கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் இத்தல பெருமாள் பெயர் பெற்றார். துளசி தேவி பெருமாளின் இதயஸ்தானத்தில் துளசிமாலையாக இடம்பெற்றார். இந்த நிகழ்வுக்கு பிறகு தான் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றும் வழக்கம் உண்டானது.

இக்கோயிலின் தீர்த்தமான அஹோத்ரபுஷ்கரணியில் பகல், இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராடலாம் என்பது சிறப்பு அம்சமாகும். மார்கண்டேயர் வசித்த தலம் என்பதால் இக்கோயிலில் வழிபடுபவர்களுக்கு ஆயுள் கூடுகிறது.

 இங்கு ஆயுள்விருத்தியை தரும் ம்ரிதுஞ்சய ஹோமமும் செய்யப்படுகிறது.பிரிந்து வாழும் தம்பதிகள், கருத்தொற்றுமை இல்லாத கணவன் – மனைவி இங்கு வந்து வழிபடுவதால் தம்பதிகளிடையே ஒற்றுமை உண்டாகும் என்பது அனுபவம் பெற்ற பக்தர்களின் கருத்தாகும்.

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இராவ்வு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. தஞ்சை மற்றும் கும்பகோணம் நகரங்களிலிருந்து இவ்வூருக்கு வாகன வசதிகள் உள்ளன.

தொகுப்பு:

ஆரூர். அரவிந்தன்

உஞ்சவிருத்தி - சுஜாதா

 உஞ்சவிருத்தி - சுஜாதா சிறுகதை

-- ஸ்ரீரங்கத்துக் கதைகள் தொகுப்பிலிருந்த்து.....

சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பையன் அமெரிக்காவில் இருக்கிறான். பாச்சாவோ, யாரோ… அவன் கொடுத்ததாம். வழக்கம்போல் தம்பு, சீது போன்றவர்கள் வந்து அரசியலையும் சினிமாவையும் அலசினார்கள்.

தம்பு தேவகாந்தாரிக்கும் ஆரபிக்கும் வித்தியாசம் என்னவென்று பாடிக் காட்டினான். சீது யாருக்கு மொட்டைக் கடுதாசி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

‘‘நீ எப்ப வந்தே?’’ என்று கேட்டான் ரங்கு.

‘நேத்திக்குதான்.’’

‘‘கொஞ்ச நாள் இருப்பியா?’’

‘‘ஒரு மாசம் இருக்கலாம்னு ஆன்யுவல் லீவ்ல வந்திருக்கேன்.’’

‘‘நீ ஏர்ஃபோர்ஸ்லதான இருக்கே?’’

‘‘ஏர்போர்ட்ல.’’

‘‘ப்ளேன் எல்லாம் ஓட்டுவியாமே! பாகிஸ்தான் மேல நீதான் பாம் போட்டதா பேசிக்கிறா.’’

‘‘ரங்கா… பாரு, சரியா புரிஞ்சுக்கோ! நான் இருக்கறது ஏர்போர்ட். டெல்லில சஃப்தர்ஜங்னு பேரு, விமான நிலையம். நீ சொல்றது ஏர்ஃபோர்ஸ். அது ‘பாலம்’ (Palam) கிற இடத்தில் இருக்கு.’’

‘‘ரெண்டும் ஒண்ணுதானே .’’

‘‘இல்…லை.’’

‘‘பின்ன… ஏர்ஃபோர்ஸ்ல யார் இருக்கா?’’

‘‘மேலச் சித்திரை வீதில ரங்காச்சாரிடா அது… அவன்கூட பைலட் இல்லை.’’

‘‘ஏர்ஃபோர்ஸ்னா எல்லாரும் பறக்க மாட்டாளோ?’’

‘‘மாட்டா!!’’

‘‘அப்ப நீ ஏர்ஃபோர்ஸ்ல இல்லை?’’

‘‘ஏர்போர்ட்… ஏர்போர்ட்!’’

‘‘பின்ன யாரோ, நீ ப்ளேன் ஓட்டறதா சொன்னாளே..?’’

‘‘அது சின்ன ப்ளேன். டிரெய்னிங் ப்ளேன்.’’

‘‘ஏர்போர்ட்ல பெரிய ப்ளேன்தானே இருக்கும்! போட்டுக் குழப்பறாங்கப்பா!’’

நான் அவனுக்கு மேலும் விளக்கும் முயற்சியைக் கைவிட்டேன். ரங்குவின் உலகம் அவன் வீடு, கடை இரண்டை விட்டு வெளியே எதும் கிடையாது. உலகம் முழுக்க அவன் கடைக்கு அரட்டையடிக்க வரும். இவன் இடத்தைவிட்டு நகரமாட்டான். பெருமாளைக்கூட பங்குனி, சித்திரை உற்சவங்களில் கடையைக் கடந்து செல்லும்போதுதான் சேவிப்பான்.

அப்போது ஒரு கிழவனார் கையில் சொம்புடன், ஒரு சிறுவன் குச்சியைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்ல… ‘உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்…’ என்று ஏறத்தாழ உளறலாகச் சொல்லிக்கொண்டு நட்ட நடுத் தெருவில் வந்துகொண்டிருந்தார். முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான வெண் தாடி. மார்பில் பூணூல். சவுக்கம். பத்தாறு வேஷ்டி.

‘‘ரங்கு, இது யாரு?’’

‘‘இவர் பேரு தேசிகாச்சாரி. ஜி.பி>னு ஐஸ்கூல்ல மேத்ஸ் டீச்சர் இருக்காரே, அவரோட அப்பா.’’

‘‘ஆமாம். எதுக்கு சொம்பை கைல வெச்சுண்டு பிரபந்தம் சொல்லிண்டுபோறார்?’’

யாரோ அவர் சொம்பில் அரிசி போட்டுவிட்டு வணங்கி விட்டுச் சென்றார்கள்.

‘‘உஞ்சவிருத்தி.’’

‘‘புரியலை. ஜி.பி. இவரை வெச்சுக் காப்பாத்தலியா?’’

‘‘அதெல்லாம் இல்லை. பிடிவாதம்.’’

‘‘பணம் காசு இல்லையா? ஜி.பி. நிறையச் சம்பாதிக்கிறாரே!’’

‘இவருக்கே நிறைய சொத்து இருக்கு. சித்திரை வீதில ஜி.பி. இருக்கற வீடு இவர்துதான். மகேந்திர மங்கலத்தில் நெலம் எல்லாம் இருக்கு.’’

‘‘உஞ்சவிருத்தின்னா பிச்சை எடுக்கறதில்லையோ?!’’

‘‘ஆமாம். ‘பவதி பிக்ஷாம் தேஹி’ன்னு சொல்லலே… அவ்ளவுதான்!’’

‘‘புரியலை ரங்கு.’’

‘‘சில வேளைல பெரியவர்களுடைய பிடிவாதங்கள் புரியாது நமக்கு. இந்த பிராமணனுக்கு வீம்பு. போக்கடாத்தனம்.’’

ஜி.பி. என்னும் பார்த்தசாரதி செயலாக இருப்பவர். கணக்குப் பாடப் புத்தகம், நோட்ஸ் எல்லாம் போடுபவர். லட்சக்கணக்கில் விலை போகும்.

எஸ்.எஸ்.எல்.சிக்கு ஒரு செக்ஷனுக்கு கிளாஸ் டீச்சர். ஹைஸ்கூலில் சீனியர் டீச்சர் என்று மதிக்கப்பட்ட ஆசிரியர். தேசிய விருது வாங்கியிருக்கிறார். அடுத்த ஹெட்மாஸ்டர் அவர்தான் என்று பேசிக்கொண்டார்கள். அவர் தந்தை பிச்சை எடுக்கிறார் என்றால்…

‘‘வேணும்னுட்டே, மகனை அவமானப்படுத்தறதுக்குன்னுட்டே..’’

‘‘கண்ணு வேற தெரியலை.’’

‘‘கண்ணெல்லாம் நன்னாத் தெரியறது. தன்மேல சிம்பதியை வரவழைச்சுக்க, கண் தெரியாத மாதிரி பாடசாலைப் பையனை வெச்சுண்டு குச்சியைப் பிடிச்சுண்டு போறார்.’’

‘‘என்ன ப்ராப்ளம் அவருக்கு?’’

‘‘வரார். கேட்டுப் பாரேன்.’’

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது அவரே கடைக்கு வந்து பெஞ்சில் உட்கார்ந்தார். அவருடன் கொஞ்சம் ஈரம் காயாத வேஷ்டியின் நாற்றமும் வந்தது. எதையோ வாயிலே மென்றுகொண்டிருந்தார். கிட்டப் பார்க்கையில் ஆரோக்கிய மாகத்தான் இருந்தார். நல்ல மூங்கில் கம்பு. அதைப் பையன் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு நின்றுகொண்டிருக்க…

‘‘ஓய்! லைப்பாய், ரெக்சோனான்னு சோப்பு ஏதாவது போட்டுக் குளிக்கிறதுதானே? கிட்ட வந்தாலே கத்தாழை நாத்தம்!’’

‘‘மாட்டுப்பொண்ணு எங்கடா சோப்பு கொடுக்கறா? ஒரு அண்டா தண்ணிகூட வெக்கமாட்டேங்கறா ரங்கு.’’

‘‘ஜி.பி>கிட்ட சொல்றதுதானே ?’’

‘‘அவனா? பொண்டாட்டிதாசன்..! தொச்சு, அது என்னடா சாக்லெட்டு?’’

‘‘பட்டை சாக்லெட் தாத்தா.’’

‘‘அது எனக்கு ஒண்ணு இவனுக்கு ஒண்ணு கொடு! ரங்கநாதா..!’’ என்று பெஞ்ச்சில் உட்கார்ந்து, ‘‘தீர்த்தம் இருக்குமா? என்ன வெயில்.. என்ன வெயில்!’’

ரங்கு சாக்லெட் எடுத்துத் தர, மடியிலிருந்து அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

‘‘நீ யாரு… கோதை பேரன்தானே?’’ என்றார் என்னைப் பார்த்து.

‘‘ஆமாம் மாமா!’’

‘‘நீ ஏர்போர்ஸ்ல இருக்கியா?’’

‘‘ஏர்போர்ட்! மாமா, எதுக்காக இந்த வெயில்ல அலையறீங்க? வெயில் தாழ வீதிப் பிரதட்சணம் போகக்கூடாதா?’’

‘‘பாரு, வைஷ்ணவனா பொறந்தா பஞ்ச சம்ஸ்காரங்கள்னு அஞ்சு காரியங்கள் செய்யணும். அதான் ஐயங்கார். ஊர்த்வ புண்ட்ரம், சமாஸ்ரணம், திருவாராதனம், ஆசார்யன்கிட்ட உபதேசம் கேக்கறது, பரன்யாசம் வாங்கிண்டப்றம் உஞ்ச விருத்தி. பிச்சைபோடற அரிசியைத் தான் சாதம் வெச்சு சாப்பிடணும்!’’

‘‘மாமா, அதெல்லாம் வசதியில்லாதவாளுக்கு!’’

‘‘இல்லை. வைஷ்ணவனா பொறந்த எல்லாருக்கும். உனக்கு, எனக்கு… அந்த நாராயணனே மகாபலிகிட்ட யாசகம் போனான்.’’

‘‘நீங்க இப்படித் தெருவில போறது அந்தக் கடமையை நிறைவேத்தறதுக்காகவா?’’

‘‘ஆமா, வேறென்ன..?’’

‘‘உங்க ஃபேமிலியில அவாளுக்கு சங்கடமா இருக்காதோ?’’

‘‘எதுக்குச் சங்கடப்படணும்? எதுக்குங்கறேன்?’’

‘‘இல்லை மாமா… உங்க சன் பெரிய கணக்கு வாத்தியார். ஹெட்மாஸ்டர் ஆகப் போறார். நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினவர்.’’

‘‘அதனால?’’

‘‘மத்தவாள்ளாம் என்ன நினைச்சுப்பா? தோப்பனாரை சரியா வெச்சுக்காம தெருவில யாசகம் பண்ண அனுப்பிச்சுட்டார் பாரு, இவர் என்ன வாத்தியார்னு தானே நினைச்சுப்பா?’’

‘‘நினைக்கத்தான் நினைச்சுப்பா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?’’

ரங்கு சில சமயம் பட்டென்று போட்டு உடைத்துவிடுவான்.

‘‘ஓய்… உமக்கு மாட்டுப் பெண்ணோட சண்டை. ஜி.பி. அவ பேச்சைக் கேட்டுக்கறார். அந்தக் கோபத்தைத்தான் நீங்க இப்படி அவரை அவமானப்படுத்திக் காட்டறீர்னு ஊர் உலகமெல்லாம் பேசிக்கிறது. உஞ்சவிருத்தி குஞ்ச விருத்தியெல்லாம் சால்ஜாப்பு!’’

‘‘சரி, அப்படியே பேசிக்கிறான்னா நீ என்ன செய்யணும்?’’

அவர் ‘நீ’ என்று அழைத்தது ரங்குவை அல்ல. அங்கு இல்லாத தன் மகன் ஜி.பியை. ‘‘நீ என்ன செய்திருக்கணும்? ‘அப்பா, நீங்க சொல்றதிலயும் நியாயம் இருக்கு. கொஞ்சம் தழைஞ்சு போங்கப்பா. நானும் அவளைத் தூக்கி எறிஞ்சு பேசாம இருக்கச் சொல்றேன்’னு சமாதானமா போகலாம் இல்லையோ..? எப்ப பார்த்தாலும் ‘அவ சொல்றதுதான் ரைட்டு, அப்பா… வாயை மூடுங்கோ’னு அதட்டினா எனக்கு எப்படி இருக்கும்..?’’

‘‘தனியா இருந்து பாருமேன்.’’

‘‘அதைத்தான் யோசிச்சிண்டிருக்கேன்.’’

‘‘இப்ப வீட்ல சாப்பிடறதில்லையா?’’

‘‘ரெண்டு தளிகை. எனக்கு உண்டான ஒரு மெந்தியக் (வெந்தையக்) குழம்பு, அப்பளத்தை நானே பண்ணிக்கறேன். ஒரு நெய் கிடையாது, கறமுது கிடையாது, தயிர் கிடையாது. மோர்தான். ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கலையே ரங்கா! பேதியாறது. அவா என்னவோ சாப்ட்டுட்டுப் போகட்டும். எனக்கு?’’

‘‘பிள்ளை?’’

‘‘அவனோட பேசியே ஒரு மாசம் ஆச்சு, ஒரே ஆத்துல இருந்துண்டு.’’

‘‘இதெல்லாம் சரி, உஞ்சவிருத்தி எப்டி உடம்புக்கு ஆறது உமக்கு? ரேஷன் அரிசியும் புழுங்கரிசியும் கைக்குத்தலும் கலந்திருக்குமே?’’

‘‘ஏதோ ரங்கநாதன் கிருபையில கல்லையும் ஜீரணிக்கிறது இந்த வயிறு. ஓடிண்டிருக்கு வண்டி.. இன்னும் எத்தனை நாள்… பார்க்கலாம். நான் செத்துப் போனேன்னா இந்தப் பாடசாலைப் பையன்தான் எனக்குக் கொள்ளி போடணும், கேட்டுக்கோ ரங்கு.’’

‘‘நீர் எங்கே செத்துப் போவீர்? இருக்கறவாளை சாகடிச்சுட்டுத் தான் போவீர். ஆயுசு கெட்டி உமக்கு!’’

அவர் மறுபடி வீதி பிரதட்சிணத் துக்குப் புறப்பட, ‘‘ஸ்ட்ரேஞ்ச்… வெரி ஸ்ட்ரேஞ்ச்’’ என்றேன்.

ஹைஸ்கூல் எப்படி நடக்கிறது என்று… என் கிளாஸ்மேட்தான் கரெஸ்பாண் டெண்டாக இருந்தான், அவனை விசாரிக்கப் போயிருந்தபோது ஜி.பி-யைச் சந்தித்தேன். பொதுவாக மேத்ஸில் மல்ட்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் வந்து தரமே போய்விட்டதாகச் சொன்னார். அவரேதான் ஆரம்பித்தார்…

‘‘அப்பாவைப் பாத்தியோ..?’’

‘‘பாத்தேன் சார்.’’

‘‘என்ன பிடிவாதம் பாத்தியா?’’

‘‘அவர் சொல்றதைப் பார்த்தா அவருக்குச் சோறு தண்ணி கூட சரியா கொடுக்கறதில்லைன்னு…’’

‘‘அப்படியா சொன்னார்? ஒரு நா எங்காத்துக்கு வந்து மாமியை சந்திச்சுக் கேட்டுப்பாரு. என் அப்பாதான்… இல்லேங்கலை. ஆனா, அவர் கார்த்தாலை எழுந்திருக்கறதிலிருந்து பண்ற அட்டகாசம்… எனக்கு நாலும் பொண்ணு. நாலும் நன்னாப் படிக்கறதுகள். அதுகளைப் படிக்க விடாம சத்தமா பாராயணம் பண்ணிண்டு, எல்லாரையும் கண்டார… வல்லாரன்னு திட்டிண்டு, கோமணத்தோட புழக்கடைல அலைஞ்சுண்டு…’’

‘‘தனி வீடு பாத்துக் கொடுத்துர்றதுதானே ?’’

‘‘போகமாட்டேங்கறாரே! ‘என் வீடு, நான்தான் இருப்பேன்’கறார்!’’

‘‘சரி, நீங்க போய்டறதுதானே ?’’

‘‘யோசிச்சிண்டிருக்கேன். வாடகை கொடுத்து மாளுமா?’’

‘‘அவர்கிட்ட பணம் இருக்கில்லே?’’

‘‘இருக்கு. என்ன வெச்சிருக்கார்னு காட்டமாட்டார். வக்கீலைக் கூப்ட்டு நாலு தடவை வில்லை ) மாத்தி மாத்தி எழுதிட் டார். சீரங்கம்னு ஒரு பேத்தி மேல கொஞ்சம் பிரியம். அதுங் கிட்ட எதோ சொல்லிண்டிருக்கார்… ‘உங்க யாருக்குமே நன்னி கிடையாது. தொச்சுக்குத்தான் எல்லாம்னு உங்கம்மா கிட்ட சொல்லிடு…’ ’’

‘‘தொச்சுங்கறது…’’

‘‘பாடசாலைப் பையன். அவரை கார்த் தால கம்பு பிடிச்சு அழைச்சுண்டு போறானே அவன். கேக்கறதுக்கு நன்னாவா இருக்கு? எதுக்குக் கிழத்துக்கு நான் சிசுருஷை பண்ண ணும்கறா என் ஆம்டையா! நான்தான் அவளை சமாதானப்படுத்தி வெக்கறேன்… ‘அப்படியெல் லாம் செய்ய மாட்டார். கோபத்தில ஏதோ சொல் றார்’னு. அவ சொல்றது நியாயம்தானே?’’

‘‘தானே தளிப்பண்றதா…’’

‘‘அதெல்லாம் வெட்டிப்பேச்சு! ஆடிக் கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தளிப்பண்ற உள்ளை மாடு கன்னுபோட்ட எடம் மாதிரி பண்ணிட்டுப் போவார். என் அப்பாவா இருந்தாலும், இந்த மாதிரி ஒரு பிடிவாதம் புடிச்ச கிழவனை நான் பாத்ததில்லை, போய்த் தொலைஞ்சாலும் பரவாயில்லைன்னு சில சமயம் அவ்வளவு வெறுப்பேத்தறார்.’’

‘‘அவருக்கு என்ன வேணுமாம்? எதாவது மனசில குறை வெச்சுண்டு இருக்கலாம் ஒரு இன்சொல், ஒரு பரிவு… அல்லது, ‘தாத்தா எப்டி இருக்கே?’னு பேத்திகள் கேட்டாலே போறுமா இருக்கலாம். உங்க மனைவியும் ‘அப்பா, எப்டி இருக்கீங்க? கண்ணுக்கு மருந்து போடட்டுமா’னு எதாவது கேக்கலாம்.’’

‘‘அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை. நீ வேணா சீதாகூட பேசிப்பாரு. நான் சொன்னது பாதிதான். அவ ஆங்கிள்ள பார்த்தா கதை ரொம்பக் கடுமையா இருக்கும். டெல்லிக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு தடவை சாப்பிட வா, எங்காத்துக்கு!’’

போயிருந்தேன். நான்கு பெண்கள் பதினைந்து, பதின்மூன்று, பத்து, எட்டு என்று அலைந்தன. எனக்கு முன்னால் ஸ்டூல் போட்டு தீர்த்தம் எல்லாம் பதவிசாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். எனக்காக மாமி ஜவ்வரிசிப் பாயசம் பண்ணியிருந்தாள். சமையல் எல்லாம் சூப்பராக இருந்தது.

நான் சென்றபோது, கிழவர் வாசல் திண்ணையில் காலை அகட்டி உட்கார்ந்து கொண்டு பனை விசிறியால் கீழே விசிறிக் கொண்டிருந்தார். நெற்றி சுருங்கி விரோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘‘இருக்கறவனுக்கு ஒரு வேப்பம்பூ சாத்துமது கிடையாது. வரவா போறவாளுக்கெல்லாம் பால்பாயசம். கேக்கறவா கிடையாது இந்தாத்துல’’ என்றார்.

‘‘வாங்களேன் மாமா… உங்காம்தானே? வாங்கோ, பாயசம் சாப்டலாம்’’ என்றேன்.

‘‘இந்தாத்திலயா? ஒரு திருஸ்தம்(துளி) கூட எடுத்துக்கமாட்டேன்.’’

வாத்தியார் ஜி.பி-யின் மனைவி வெளிப்படையாகப் பேசினாள். ‘‘எவ்வளவு தூரம் பொறுத்துக்கறது? ‘பொறுத்துப் போ’னு இவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் பள்ளிக் கூடம் போய்டறார். இருபத்துநாலு மணி நேரமும் இவர் கூட மல்லுக் கட்ட வேண்டியிருக்கு. ரெண்டு பொண் வயசுக்கு வந்துட்டா. அவா முன்னாலயே கோமணத்தை அவுத்துக் கட்டிக்கறேர். ரெங்கராஜுவை கூப்ட்டு திண்ணைல உக்காந்துண்டு சர்வாங்க க்ஷவரம் பண்ணிக்கறேர். சாக்லெட்டு, பப்பர்மிட்டுனு வாங்கி ஒளிச்சு வெச்சுக்கறேர். பாட சாலைப் பையன்களுக்குக் கொடுத்தாலும் கொடுப்பேர்… பேத்திகளுக்குக் கொடுக்க மாட்டேர். அதுகளைப் படிக்க வெக்கறதே அவருக்குப் பிடிக்கலை. என்னைக் கண்டா ஆகவே ஆகலை…’’

‘‘இதுக்கெல்லாம் ஆதாரமா ஒரு சம்பவம் அல்லது காரணம் இருக்கணும் மாமி.’’

‘‘இருக்கு. அதைச் சொல்லிட்டுத் தான் ரசாபாசமாய்டுத்து! எங்காத்தில எனக்கு நிறைய செஞ்சிருந்தா. அதை அவர் அலமாரில வெச்சுப் பூட்டியிருந்தார். மாமியார் போறவரைக்கும் அதை நான் பார்த்தேன். பண்டிகை நாளில் என்னை எடுத்துப் போட்டுக்கச் சொல்வா. மாமியார் தங்கமான மனுஷி. அவர் போனதும், இது எதோ தங்கை பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்துக் கொடுத் துடுத்து போல! பாலிஷ் போட்டு வெள்ளிப் பாத்திரத் தையெல்லாம் கொடுத்திருக் கேர். போனாப் போறது, சொல்லிருக்கலாமில்லையா? ரங்கநாதன் கிருபை இவரும் சம்பாதிக்கிறேர். ஒரே ஒரு தடவை எச்சுமிக்கு தோடு செஞ்சு போடலாம். ‘அப்பா, அம்மா என் நகையெல்லாம் எங்க வெச்சிருக்கா?’னு கேட்டதுக்கு, ‘‘நகையா… உன்னை எதிர்ஜாமீன் இல்லாம இலவசமா கல்யாணம் பண்ணிண்டோம். உங்காத்துல உனக்கு என்ன போட்டா? உங்கப்பன் ஏமாத்திட்டான்’னார்.

எனக்கே தெரியும்… எனக்கு எத்தனை கேஷா கொடுத்தா, வைர மோதரத்துக்கு, பட்டு வேஷ்டிக்குன்னு… எத்தனை நகை போட்டான்னுட்டு. அதை எடுத்துச் சொன்னப்ப எல்லாம் கவரிங்னார். ‘இதை அப்பவே சொல்லியிருக்கறதுதானே. இவ்வளவுதாம்பா கேட்டேன். அதிலேர்ந்து என் மேலயும் என் பெண்கள் மேலயும் வெறுப்புன்னா வெறுப்பு அப்படிப்பட்ட வெறுப்பு. நின்னா குத்தம்.. உக்காந்தா குத்தம்…’’

இந்தச் சம்பாஷணை முழுவதும் அவருக்குக் கேட்டிருக்கவேண்டும்.

திண்ணையிலிருந்து சத்தம் போட்டார்… ‘‘எல்லாத்தையும் சொன்னியே, உன் நகை அத்தனையும் சப்ஜாடா நான் திருப்பித் தந்ததைச் சொன்னியா?’’

இவள் ‘‘மொத்தத்தில கால்பாகம் கூடத் திரும்ப வரலைப்பா. ரெட்டை வடம் சங்கிலி என்ன ஆச்சு, பச்சைக்கல் தோடு என்னாச்சு, பேசரி என்னாச்சு, ஒட்டியாணம், நாககொத்து என்ன ஆச்சு, வங்கி என்னாச்சு..?’’ என்றாள்.

‘‘பச்சைப்பொய். உங்களுக்கெல்லாம் என் கெட்ட குணம் மட்டும் தான் தெரியும். நல்ல குணம் எதும் கண்ணுக்கே தெரியாது.’’

இவள் சன்னமாக ‘‘நல்லது எதாவது இருந்தா சொல்லுங்கப்பா’’ எனறாள்.

நான் இந்தச் சண்டை ஓயாது என்று புறப்பட்டு வந்துவிட்டேன். என் சமாதான முயற்சிகள் அத்தோடு முடிந்தன.

அடுத்த வாரம், புறக்கடையில் பாசி வழுக்கி விழுந்துவிட்டார் கிழவர். தொடை எலும்பும் இடுப் பிலும் முறிந்துபோய் ஜி.பி. அவரை புத்தூருக்கு அழைத்துப் போக, அங்கே இன்னமும் சீரியஸாகி, அப்புறம் தில்லைநகரில் அவரை அட்மிட் பண்ணி, மாற்றி மாற்றி வாத்தியாரும் மாமியும் பதினைந்து தினம் அவருக்கு வேளா வேளைக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய்… ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நான் ஊருக்குக் கிளம்பும் முதல் நாள்தான் இறந்து போனார்.

இத்தனைப் பாடுபட்டதுக்கு ஜி.பிக்கோ மனைவிக்கோ பேத்திகளுக்கோ எந்தவிதப் பயனும் இல்லை. சொத்து முழுவதையும் தொச்சு என்கிற துரைசாமியின் பேரில் எழுதி வைத்துவிட்டு, அவன் மேஜராகும் வரை - பதினெட்டு வயசு வரும் வரையில் - வக்கீலை அந்தச் சொத்துக்கு கார்டியனாகப் போட்டு பதினெட்டாம் வயதில் அந்தச் சொத்து அவன் படிப்புக்கும் பராமரிப்புக்கும் போகவேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.

பாடி எடுக்குமுன் துக்கம் விசாரிக்க அவர் வீட்டுக்குப் போய் திண்ணையில் சற்று மௌனமாக உட்கார்ந்திருந்தேன். உள்ளே பேத்தி ஒருத்தி மட்டும் ‘தாத்தாஆஆஆ…’ என்று அழுது கொண்டிருந்தது. உஞ்ச விருத்திக்கு அழைத்துச் சென்ற பாடசாலைப் பையன் ‘‘மாமா, நாளைலருந்து வரவேண்டாமா? வேற எதாவது ஒத்தாசையா இருக்கேன்!’’ என்றான்.

‘‘இந்த ஆமே உன்னுதுரா’’ என்றார் ஜி.பி. விசும் பலுடன். அவனுக்குப் புரியவில்லை. மாமிக்கு ஆத்து ஆத்துப் போயிற்று. ‘‘என்ன பாவம் பண்ணோம்னு இந்தத் தண்டனை கொடுத்துட்டுப் போனார் கிழவனார். எங்கப் பாம்மா போட்ட நகை எங்கேனு கேட்டது ஒரு பெரிய தப்பா? அதுக்கு இத்தனை பெரிய தண்டனையா?’’

ரங்கு ஜி.பி-யிடம் ‘‘ஓய்… இது பிதுரார்ஜித சொத்து. அதை எழுதி வெக்க கிழத்துக்கு உரிமையே கிடையாது. கிறுக்குப் புடிச்சாப்ல இப்படியெல்லாம் வில் எழுதினா கோர்ட்டில ஒத்துக்க மாட்டா. சண்டை போட்டு வாங்கிடலாம்.’’

ஜி.பி-தான் ‘‘ரங்கு, நமக்கு எது உண்டு, எது இல்லைன்னு தீர்மானிக்கிறதெல்லாம் ஸ்ரீரங்கநாதன்தான்’’ என்றார்.

அதன்பின் நான் அலகாபாத் போய்விட்டு கல்கத்தா, டெல்லி, அல்மோரா, பதான்கோட், கொழும்பு என்று சுற்றிவிட்டு ஆறு வருஷம் கழித்துதான் ஸ்ரீரங்கம் திரும்ப முடிந்தது. ரங்குவை முதல் காரியமாக விசாரித்தேன்… ‘‘ஜி.பி. வாத்தியார் என்ன ஆனார் ரங்கு?’’

‘‘ஏன் கேக்கறே… ஸ்கூல்ல புதுசா ஹெட்மாஸ்டரை நியமனம் பண்ணிட்டா. ரெண்டு பேருக்கும் ஆகலை. நோட்ஸ் போடக் கூடாதுன்னு தடை பண்ணிட்டா. கோவிச்சுண்டு ரிஸைன் பண்ணிட்டேர். மணச்சநல்லூர்ல போய்ச் சேர்ந்தேர். அங்கயும் சரிப்பட்டு வரலை. சம்பளம் சரியா வரலை. அதுக்கப்புறம் நோட்ஸ் போட்டு விக்கறதும் பாழாப் போச்சு. இவர் போட்ட நோட்ஸையே காப்பி அடிச்சு இன்னொருத்தன் போட்டு அரை விலைக்கு வித்தான். அவன்மேல கேஸ் போடறேன்னு வக்கீல்கள்ட்ட காசு நிறைய விட்டேர். ஏறக்குறைய பாப்பர் ஆறநிலைக்கு வந்துட்டேர். சொத்தும் இல்லை. பத்ரிக்கு போறேன்னு காலை ஓடிச்சுண்டேர். மனசொடிஞ்சு போய்ட்டேர். அப்றம்…’’ என்று ரங்கு பேச்சை நிறுத்தினான்.

நான் சன்னமாக, ‘‘எதாவது விபரீதமா ரங்கு?’’ என்றேன்.

‘‘அதை ஏன் கேக்கறே… கடைசியா ரங்கநாதன் கண்ணைத் திறந்துட்டார்".

‘‘எப்படி?’’

‘‘மூத்த பொண்ணு எச்சுமி இருக்கு பாரு, தொச்சுவைக் கல்யாணம் பண்ணிண்டுடுத்து. எல்லாம் சரியாப் போய்டுத்து. உஞ்சவிருத்தி தேசிகாச்சாரி சொத்து மறுபடி ஃபேமிலிக்கே வந்துடுத்து!’’

‘‘அந்தப் பையன் அதிகம் படிச்சிருந் தானா?’’

‘‘எட்டாம் கிளாஸ்க்கு மேல படிப்பு ஏறலை…’’

‘‘இந்தப் பொண்ணு?’’

‘‘எம்.சி.ஏ.’"

நான் வியப்புடன் ‘‘எப்படிக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது அந்தப் பொண்ணு… ஃபேமலிக்காக தியாகமா?’’

‘‘அதெல்லாம் இல்லை, காதல்!’’ என்றான் ரங்கு.

Monday, June 27, 2022

அஜினோமோட்டோ

 *அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது?*

*அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது?*

அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்...!

பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி, நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்...

அது லைட்டா தூவி விட்டால், டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று...

ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்?

அஜினமோட்டோ என்பது நாம் நினைப்பது போல, அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...

அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது..

உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும்,

இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்..

ஜப்பான் தலைநகர் டோக்கியோ, சிவோவை தலைமையிடமாக கொண்டு, கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது,

அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் monosodium ஆகும்..

முதலில் கிகுனே இகெடா, 1909ல் அவர் தனது வீட்டில் நடத்தி வந்த வைத்தியசாலையில், அதனை மருந்தாக பயன்படுத்தி வந்தார்...

பிறகு உணவுகளில் சேர்த்து, அதில் ருசி கூட்டப்பட்ட இருந்ததை அறிந்து பிறகு, அதனை உபயோகித்து Seasoning, cooking oil, sweetener, amino acids வரை தயாரித்து, பின் Pharmaceutical துறையிலும் இந்த உப்பை அறிமுகம் செய்தார்...

முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர் தரமானதாக இருந்தது.

ஆனால் 1917இல் அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்த்து, வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சாலையில் , Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும், அந்த monosodium உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர்..

Glutamate என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரியமாகும்..

ஒரு முறை உண்டால், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்..

முதலில் இந்த glutamate ஐ உபயோகித்து, Artificial Sweetener என்னும் Aspartame ஐ தயாரித்து வந்தனர்.

பிறகு இதன் அபாயமறிந்து, அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர் ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும்.

இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில், தவறாமல் இடம்பெறும் இந்த அஜினோமோட்டோ உப்பை, பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்..

சாலையோர கடைகள் தொடங்கி, மல்டி குஷன் ரெஸ்டாரண்ட் வரை.. சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங்களிலும், இதனை ருசிகூட்ட பயன்படுத்தாதவர்கள் இல்லை..

முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான், அஜினோமோட்டோ தூவப்படும் என்ற மாயை போய், தமிழகத்து ரசம் வரை இதை தூவ ஆரம்பித்துவிட்டார்கள்...

சரி இதை நாம வாங்கி பயன்படுத்த வேண்டாம் என நினைத்து புறக்கணித்தாலும், நாம் உபயோகிக்கும் அத்தனை வகையான பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களிலும், இது மறைமுகமாக கலக்கப்பட்டுள்ளது..

அது நாம் விரும்பியும், விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது, குறிப்பாக குழந்தைகள்...

அவர்கள் உண்ணும் பாக்கெட் சிப்ஸ், கிரீம் பிஸ்கட், சாதாரண பிஸ்கட், நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள், டின்னில் வரும் மீன், சிக்கன்,ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, சமோசா,பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள், சாக்லேட்கள், KFC, Pizza , Maggi மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாத்திலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer உண்டு,

அதனால் தான் இந்த Lays, Kurkure வகையறாக்களை உண்ணும் நம் வாண்டுகள், அதற்கு அடிமையாகிறார்கள்.

*உண்பதால் வரும் பக்க விளைவுகள்:-*

1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி

2. Glutamate இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால், அதிகமான பசி எடுக்கிறது.

நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது, பிறகு அதை குறைப்பது மிக கடினம்.. உடல் எடை கூடினால், தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.

3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்.. ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.

4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி, பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும்.

இதனை மருத்துவர்கள் Over Stimulation of Nervous System என்கிறார்கள்.

5. இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சில நேரம் வலியும் உருவாக்கும்.

6. முகத்தில் எந்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும், சிலரது முகம் கருத்திருக்கும்.

7. வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு, ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை , அதீத வியர்வை சுரப்பியால் உண்டாகும் Dehydration என்னும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.

8. இவை எல்லாம் ஒரு நாள், நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்..

 அஜினோமோட்டோவை தவிர்ப்போம்.

Sunday, June 26, 2022

Trivandrum Medical College Hospital

 #அன்பு_நண்பர்களே...!!!

நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்...

4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் நண்பனின் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, 

கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 

மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை, 8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர். 

மிரண்டுப் போன நண்பனின் மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில்...

அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.

"மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில், 

தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச் செல்லுங்கள்", எனக்கூறினார். 

உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர். 

உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து, 

அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச் சொல்கின்றனர்.( ஒரு 40000 to 60000 ஆகலாம்). 

டாக்ட்டர் ஃபீஸ் இல்லை. சரியாகி வீடு திரும்பும்வரை அட்மிஷன் தருகிறார்கள். 

உணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ளவேண்டும்.

நண்பர்களே, 

ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு அசிரத்தையாக இருக்காதீர்கள். 

உலகத்தரம் வாய்ந்த, இராணுவக் கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது. 

இதயம்,நரம்பு, மூளை போன்ற மிகச்செலவுப் பிடிக்கும் வியாதிகளுக்கு 

மிக மிகச் சிறப்பான , செலவு மிக மிகக் குறைவாக ஆகும் மருத்துவமனை. 

அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

ரேஷன் அட்டை, ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள். 

நகை நட்டை விற்று, வீடு தோட்டம் விற்று, 

நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல் 

சிறந்தச் சிகிச்சையைப் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

Trivandrum Medical College Hospital

Casualty Enquiry Number

0471 - 2528300

Important Telephone Numbers...

Superintendent 2442234

RMO 2528246

Casualty 2528300

Blood Bank 2528230

Cath Lab (ICCU) 2528499

CT Scan 2528232

Nursing Superintendent 2528231

Mortuary 2528236

Security officer 2528398

Paying counter 2528461

Anasthaesiaology 2528233

Anatomy 2528371

Applied Nutririon 2528391

Biochemistry 2528399

Cardiology 2528267

Cardiothoracic surgery 2528293

Community Medicine 2528379

Dematology and Venerology 2528213

Forensic Medicine 2528373

Gasroentrology 2528241

Gastro Entrology Surgical 2528295

General Medicine 2528234

General Surgery 2528325

Infectious diseases 2528296

Micro Biology 2528372

Nephrology 2528268

Neurology 2528260

Neuro Surgery 2528224

Gynaecology 2528365

Orthopaedics 2528242

ENT 2528277

Paediatrics 2528331

Paediatric surgery 2528312

Pathology 2528376

Peed Cell 2528369

Pharmacology 2528379

Physical Medicine and Rehabilitation 2528237

Physiology 2528377

Plastic and Reconstructive surgery 2528299

Psychatry 2528222

Radio diagnosis 2528211

Radio therapy 2528232

Respiratory medicine 2448484

Urology 2528282

பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்...

#உடல்நலக்குறைவால்_அவதிப்படுவோருக்கு உதவக்கூடும்...

#Address:

Trivandrum Medical College, Medical College PO, Thiruvananthapuram,

Kerala State. India PIN - 695 011

ரங்கநாத பெருமாள் திருக்கோயில்

 🛟🛟🛟🛟🛟🛟🛟🛟🛟

பாற்கடலில் பள்ளி கொண்ட மூலவர்.. தங்க விமானம்..!!

                அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில்...!!

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் என்னும் ஊரில் அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

திருச்சியில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் ஸ்ரீரங்கம் உள்ளது. ஸ்ரீரங்கத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தலத்தில் ரங்கநாதர் பாற்கடலில் பள்ளி கொண்டு சயன கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.

மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. இத்தலத்து விமானம் பிரணவாக்ருதி எனப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் இத்தலத்தில் சுவாமி முத்தங்கி சேவை சாதிக்கிறார்.

இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ராஜகோபுரங்களில் ஒன்றாகும். 

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 1வது திவ்ய தேசமாகும்.

ஸ்ரீரங்கம் கோயிலில் வருடத்திற்கு 7 முறை பெருமாள் திருக்கோயிலை விட்டு வெளியே வந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்.

வேறென்ன சிறப்பு?

ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில், அஷ்ட நாகாபரணம் அணிந்து, இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர்

பொதுவாக ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூதேவி என இருவரும் காட்சி தருகின்றனர்.

இது மோட்சம் தரும் தலம் என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும்.

மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம் அடைந்தார். இவருக்கு இங்கு தனிச்சன்னதி உள்ளது. 

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம், மாசி மாத தெப்பத்திருவிழா ஆகியவை இக்கோயிலில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு, சனிக்கிழமை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வி ஞானம் பெருக, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமிக்கு வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாற்றுதல், மார்பிலும் பாதங்களிலும் சந்தன குழம்பு அணிவித்தல், தூய உலர்ந்த ஆடை சாற்றுதல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்

🛟🛟🛟🛟🛟🛟🛟🛟🛟🛟

Saturday, June 25, 2022

வராஹி அம்மன் ஆலயங்கள்

 🏯வராஹி அம்மன் ஆலயங்கள்🏯

🔮தஞ்சை பெரிய கோவிலில் மஹாவராகி அம்மன் என தனி சன்னதியாக உள்ளது.

🔮திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியில் அருள்மிகு செரைக்கன்னிமார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.                  

🔮விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோவில் உள்ளது. இக்கோவில் உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோவிலாகக் கருதப்படுகிறது.

🔮நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோவில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது.

🔮கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது.

இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.

🔮தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம்(எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாரஹி அம்மன் கோவில் உள்ளது.

       🔮வாரஹியை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை நீங்கி, வளமான வாழ்வு உண்டாகும்.இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர்.

🔮சப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம்,வழுவூர் அருள்மிகு இளங்கிளை நாயகி சமேத வீரட்டேசுரர் திருக்கோவில் ஆகும்.இவருக்கு கிருத்திவாசர் என்ற பெயரும் உண்டு. அஷ்டவீரட்டத் தலங்களில் கஜசம்காரம் நிகழ்ந்த தலம்.கஜசம்ஹார மூர்த்தி திருவுருவம் மிக்க சிறப்புடையது. இவர் எழுந்தருளிய சபை ஞானசபை எனப்பெறும்.தேவார வைப்புத் தலம்.

🔮வராஹி பூஜித்த தலம்.திருமாலின் வராக அவதார அம்சம் உடையவள். கறுப்புப் பட்டாடை உடுத்தியவள்.பன்றி முகம் உடையவள். மிக்க செல்வமும் அணிகலன் பூண்ட அழகிய மார்பும் உடையவள். பாதங்களில் நூபுரம் அணிந்தவள். கலப்பை,முசலம், வரதம், அபயம் அமைந்த நாற்கரத்தினள். கருநிறம் உடையவள்.

🏯தமிழகத்திலேயே மிகவும் சிறப்பு பெற்ற ஸ்ரீ வராஹி அம்மன் ஆலயம்🏯

🏵ராமநாதபுரம் மாவட்டம் அருகே திருஉத்திரகோசமங்கை பகுதியில் பழமையான ஸ்ரீ வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

🏵இந்த ஆலயத்தில் பன்றி முகத்துடன் சுயம்புவாக உருவான ஸ்ரீ வராஹி அம்மன் ஆலயம் கிட்டத்தட்ட 3200 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலாகும்.

🏵வராகி அம்மனுக்கு பால், பன்னீர்,இளநீர், பச்சரிசி,திரவியம் மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

🏵இவ்வாலயத்தில் ஸ்ரீ சுயம்பு வராஹி அம்மன்,ஸ்ரீ மங்கை மாகாளி அம்மன், பைரவர்,கருப்பணசாமி,ராக்காச்சி அம்மன்,உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர்.

🏵தமிழகத்திலேயே மிகவும் சிறப்பு பெற்ற ஆலயமாக ஸ்ரீ வராஹி அம்மன் ஆலயம் அருள் விளங்கி வருகிறது. 

🏵பௌர்ணமி , அமாவாசை மற்றும் தேய்பிறை, வளர்பிறை ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை விழா நடைபெற்று வருகிறது.குழந்தை வரம் வேண்டி ஆலயத்தின் ஸ்தல விருட்சமாக உள்ள வேப்பமரத்தில் தொட்டில் கட்டுதல், சுமங்கலிகளுக்கு வளையல்கள் சாத்துதல் உள்ளிட்ட நேர்த்தி கடனை பெண்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர்.

🏵பகல் 12 மணிக்கு திறக்கப்படும் இவ்வாலயத்தில் இரவு 8 மணி வரை பல்வேறு பூஜைகள் செய்யப்படுகிறது.

🏵இயற்கை எழிலுடன் மிகவும் அழகாக உருவான ஸ்ரீ வராஹி அம்மன் ஆலயம் தனி ஆலயமாக உருவெடுத்துள்ளது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

🙏🏻🔱ௐ சக்தி பராசக்தி🔱🙏🏻

🙏🏻🐷#சர்வம் #சக்திமயம்🐷 கீதாலட்சுமி சென்னை 7358451587🙏🏻

சென்னையில் டாப் 5 கையேந்தி பவன்!

சென்னையில் டாப் 5 #கையேந்தி #பவன்!

சேட் சப்பாத்திக் கடை

‘வெல்கம் ஓட்டல்’னு இதுல பேர் வச்சிருப்பாங்க. அதைப் பத்தி யாருக்கும் கவலை இல்ல. ‘சேட் சப்பாத்திக்கடை’ன்னுதான் இது பிரபலம். சைதாப்பேட்டை தர்மராஜா கோயில் தெருவோட தொடக்கத்துலயே இருக்கு. காலை 11 மணியில இருந்தே வெஜ் ரைஸ், தக்காளி சாதம்னு கடை பிஸியாகிடும். சாயந்திரம் சோலாபூரி, இட்லி, தோசை, ராகி தோசை, ரவாதோசைன்னு டேஸ்ட்டி மெனு. எல்லாத்துக்கும் மேல இங்க ஸ்பெஷல், சப்பாத்திதான். அதுதான் இந்தப் பேரைத் தக்க வச்சிருக்கு!

பாரதி மெஸ்

மெஸ் என்றதுமே அட்ரஸ் தெரிஞ்சிருக்குமே... ரைட், திருவல்லிக்கேணி தான். ரத்னா கபேல இருந்து பீச் போற ரோட்ல இடது பக்கம் தெரியும் போர்டு. இன்னிக்கும் 50 ரூபாய்ல ஒரு குவாலிட்டியான டிபன் திருப்தியா சாப்பிட்டுட்டு வர முடியுது இங்க. நின்னுட்டுதான் சாப்பிடணும்... ஆனா, க்ளீனா வச்சிருப்பாங்க. பெண்கள் சமையல்... அப்படியே வீட்டு ஃபீல்!

சீனா பாய் கடை

இது பாரீஸ் பூக்கடை கிட்ட இருக்கு. மின்ட் தெருவும் என்.எஸ்.சி போஸ் ரோடும் கட்டாகுற இடத்துல பட்டுன்னு நெய் வாசம் வீசுனா அதுதான் இந்த ஸ்பாட். இட்லியும் ஊத்தப்ப வெரைட்டியும் இங்க ஸ்பெஷல். செட் ஊத்தப்பம் 40 ரூபாய்க்கு வித்தாலும் அதை சுத்தமான நெய்யில செய்ய முடியும்னு நிரூபிக்கிற கடை. 12 குட்டி இட்லியில் சாம்பாரும் நெய்யும் விட்டு பொடி தூவிக் கொடுப்பாங்க பாருங்க... சான்ஸே இல்ல!

சூப்பர் பிரியாணி

இன்னிக்கு நேத்தில்ல... 25 வருஷமா நிலைச்சிருக்குற பிரியாணி கடை இது. சைதாப்பேட்டை டு வெஸ்ட் மாம்பலம் ரோட்ல காந்திமதி கல்யாண மண்டபம் தாண்டினீங்கன்னா இதோட மணமே இழுக்கும். பிரியாணியில சேர்க்குற மணம் எல்லாமே மருந்து. கடைசி வாய் சாப்பிடும்போதே மொத வாய் ஜீரணம் ஆகியிருக்கணும். அதுதான் நல்ல பிரியாணி. அந்த இலக்கணத்தை இங்க மீட் பண்ணுவீங்க!

லட்சுமி பாஸ்ட் ஃபுட்

ஆழ்வார்பேட்டை டி.டி.கே ரோடு பிரிட்ஜ் ஏறி இறங்கினா இந்தக் கடை. இது மத்தியான கூத்து. சிட்டில எத்தனை ஆட்டோக்காரங்க இருக்காங்கன்னு இங்க வந்து தெரிஞ்சிக்கலாம். மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்போட திருப்தியான சீப் சாப்பாடு இங்க ரெடி. உக்கார இடமில்லாத இந்தக் கடையில இப்ப ஐ.டி மக்களும் வந்து நின்னு அதகளம் பண்றாங்க.

எலுமிச்சை பயன்கள்

 எலுமிச்சை பயன்கள்

புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citrus limon) என்னும் அறிவியல் பெயர் கொண்டது.

எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை தருகிறது. இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

எலுமிச்சை இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். 

100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து - 50 கிராம்

கொழுப்பு - 1.0 கிராம்

புரதம் - 1.4 கிராம்

மாவுப்பொருள் - 11.0 கிராம்

தாதுப்பொருள் - 0.8 கிராம்

நார்ச்சத்து - 1.2 கிராம்

சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.

பாஸ்பரஸ் - 0.20 மி.கி.

இரும்புச் சத்து - 0.4 மி.கி.

கரோட்டின் - 12.மி.கி.

தையாமின் - 0.2 மி.கி.

நியாசின் - 0.1 மி.கி.

வைட்டமின் ஏ - 1.8 மி.கி.

வைட்டமின் பி - 1.5 மி.கி.

வைட்டமின் சி - 63.0 மி.கி

 இதிலுள்ல அதிகமான வைட்டமின் சி சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்றவல்லது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.

    எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறையும்.

   தலைச்சுற்றல் வாந்தியா? எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

    எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.

   கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது.

   சருமப் புண்களுககு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.

எலுமிச்சைச் சாறை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறைகின்றன. பாலேட்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

   தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேனூடன் பருகி வர உடல் எடை குறையும்.

    பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல் போன்ற உபாதைகள் நீங்கும்.

   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி அடையும். மனஅழுத்தம், ஸ்டிரெஸ் நீங்கும்.

  உடலிலிருந்து நச்சுப் பொருள்களையும், பாக்டிரியாக்களையும் வெளியேற்றி மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

    இரத்த சுத்திகரிப்பாக உதவுகிறது. காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின் போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப் பெரிதும் உதவுகிறது.

   சில துளிகள் எலுமிச்சைச் சாறை நீர் கலக்காமல் அப்படியே விட்டுக் கொண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை தெரியும்.

   தலையில் பொடுகுத் தொல்லை நீங்க,  எலுமிச்சைச் சாறினை தடவி சிறிது நேரம் ஊறியபின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்.

இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...தேள்கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும் நிற்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும்.

அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது.

எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.

எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும்.

உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்.

இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது.

உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெற‌லாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும்.

கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்ட‌ழகு மேனி பெறும். கனிகளில் மதியூக மந்தி‌ரி குணத்தை உடையது எலுமிச்சை.

எலுமிச்சைச் சாறை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது  தேன் போன்றவற்றுடன் கலந்து அருந்தலாம்.

எலுமிச்சை, வெங்காயம் போன்றவைகளை வெட்டியதும் பயன்படுத்தி விட வேண்டும்.

மகேந்திரனின் ஹோண்டா !! - சுஜாதா

 மகேந்திரனின் ஹோண்டா !! - சுஜாதா

இந்தியாவிலேயே அதிக சக்தி வாய்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருச்சியில் என் நண்பர் மகேந்திரன் வைத்திருக்கிறார்.

ஜப்பானிய வண்டி. ஸி - எக்ஸ் 500 மாடல். ஜிலுஜிலுவென்று அலுமினியப் பளபளப்புடன் ரேடியேட்டர் எஞ்சின் - 50 குதிரை சக்தி - பத்தாயிரம் RPM !!

ஏதோ ஃபோர் ஸ்ட்ரோக் பஞ்சக்கல்யாணி போல இருக்கிறது. விரலை வைத்தவுடன் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்பது சொல்லித்தான் தெரிந்தது.

எஞ்சின் ரகசியம் பேசுகிறது. ஐந்தே ஆரங்களுடன் சக்கரம் - பங்ச்சர் ஆனால் தானாக ஒட்டிக் கொள்ளக்கூடிய ட்யூப்லெஸ் டயர்.

"உட்காருங்களேன், ஒரு ரவுண்டு போகலாம்" என்றார் மகேந்திரன்.

"ரொம்ப வேகம் வேண்டாம்" என்று தயக்கத்துடன் அவர் பின்னால் உட்கார்ந்தேன்.

முதல் கியரிலேயே க்ஷண நேரத்தில் அறுபது கிலோமீட்டரைத் தொட்டார்.

"ஈஸி, ஈஸி" என்றேன்.

"இன்னும் நன்கு கியர் பாக்கியிருக்கிறது" என்றார்.

திண்டுக்கல் ரோடில் வெ..............................கு தூரத்தில் ஒரு பஸ் தெரிந்தது.

"அதை ஓவர்டேக் செய்யலாமா?' என்றார் மகேந்திரன்.

"அப்படி எதுவும் அவசியமில்லை" என்றேன். சொல்லி முடிப்பதற்குள், அந்த பஸ், ஸ்ஸ்ஸ்ஸ்....என்று எங்கள் பின்னால் வந்துகொண்டிருந்தது.

"பிரேக் எப்படி?" என்று தவறுதலாகக் கேட்டுவிட்டேன்.

குறக்களி, மென்னி எல்லாவற்றையும் ஒருங்கே பிடிப்பது போல ஒரு பிரேக் போட்டு அச்சாக அதே இடத்தில அப்படியே நிறுத்திக் காட்டினார்.

"இருநூறு கிலோமீட்டர் வேகம் வரை போகலாம். நூற்றைம்பதைத்தான் இதுவரைத் தொட்டிருக்கிறேன். அதற்கு மேல் கண்ணில் தண்ணீர் வந்துவிடுகிறது" என்றார்.

"வாஸ்தவம்" என்றேன் கண்ணீருடன்.

"நீங்க வேணும்னா ஒரு தடவை ஓட்டிப் பாருங்களேன்" என்றார் மகேந்திரன்.

எனக்கும் அந்த ஹோண்டாவை ஓட்டிப் பார்க்க ஆசைதான். ஏரோப்ளேன் போல இருந்த அந்த பச்சை நிற மீட்டர் பானலைப் பார்த்தேன். எழுத வேண்டிய தொடர்கதைகளை யோசித்தேன்.

"வேண்டாம்" என்று வந்துவிட்டேன்.

Friday, June 24, 2022

ஆனி மாதம்

 *ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?* 

ஆங்கில மாதங்களைப் போல, தமிழ் மாதங்கள் சமமாக 30, 31 தேதிகளுடன் இருப்பதில்லை. பங்குனி மாதத்தில் 30 நாட்கள் என்றால், சித்திரை மாதம் 31 நாட்கள் என இருக்கும்.

கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் 29 நாட்கள் கூட இருக்கும். அதே சமய ஆனி, ஆவணி மாதத்தில் 32 நாட்கள் கொண்டாதாக இருக்கின்றன.

ஆனி மாதம் :

ஆனி மாதத்தில் சூரியன் வடதிசை நோக்கிய பயணமான உத்தராயண காலத்தின் கடைசி மாதாக வருகிறது. நம் நாட்டில் நீண்ட பொழுது கொண்ட மாதமாகவும் ஆனி மாதம் அமைகிறது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை கூட பகல் பொழுது நீண்டிருக்கும்.

ஆனியில் 32 நாட்கள் :

தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. பிற மாதங்களில் இல்லாத வகையில் இந்த ஆனி மாதத்தில் 32 நாட்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.

ஜோதிடத்தின் படி மிதுன ராசி சற்று பெரிய ராசி என்பதால், இதைக் கடக்க சூரியனுக்கு சற்று கூடுதல் காலம் தேவைப்படுகிறது என்பதால் ஒரு நாள் கூடுகிறது. இதன் காரணமாக இந்த மாதத்தில் பகல் பொழுதின் அளவும் அதிகரிக்கிறது.

ஜேஷ்டாபிஷேகம் விழா:

ஆனி மாதத்தில் வரக்கூடிய கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் விழா ஆலயங்களில் நடைபெறுவது வழக்கம். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்ட நட்சத்திரம் என்ற பெயர் உண்டு.. இந்த நட்சத்திரத்திற்கான அதி தேவதை இந்திரன். தேவர்களின் தலைவன் இந்திரன், தலைமை பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுபை நிர்வகிக்கும் திறனை புதுப்பித்துக் கொள்ள இறைவனை வழிபட்டு, நன்றி செலுத்தும் விதமாக, ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று விசேஷ அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது.

ஆனி மூலம் நட்சத்திரம் அரசாளும்:

ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரமும், பௌர்ணமியும் பெரும்பாலும் சேர்ந்து வரும். பௌர்ணமி அன்று பிறக்கும் குழந்தை பிரகாசமாகவும், அரசாளும் யோகத்தையும், ஆளுமைத் திறன் பெற்றிருப்பார். அதனால் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழியும் கூறப்படுகிறது.

Thursday, June 23, 2022

மணத்தக்காளி

 *மணத்தக்காளி..!*

மணத்தக்காளி வியர்வையையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.

 மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். 

தேகம் குளிர்ச்சியாகும். மணத்தக்காளி இலையை வதக்கி வலியுடன் கூடிய விரை வீக்கத்திற்கு இளஞ்சூட்டுடன் வைத்துக் கட்டி வர நன்மை பயக்கும். மணத்தக்காளிக் கீரையை தினந்தோறும் பருப்புடன் கலந்து சமைத்து உண்டு வரலாம்.

மலக்கட்டை நீக்கும். நெஞ்சில் கட்டியுள்ள கோழையை அகற்றி வாத ரோகங்களை நீக்கும். மணத்தக்காளி வற்றலுக்கு சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும் குணம் உண்டு.

 மணத்தக்காளிக் காய்களைப் பறித்து சுத்தம் செய்து, மோருடன் சிறிது உப்பு சேர்த்து வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வதே மணத்தக்காளி வற்றல்.

 இதனை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து சோற்றுடன் கலந்து சிறிது நெய் சேர்த்து உண்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றில் கிருமியினால் உண்டாகும் தொந்தரவுகள் விடுபடும். 

ஆஸ்துமா, நீரிழிவு முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.

நீர்க்கோவை, நீர்ச்சுருக்கு முதலியவற்றிற்கு இதன் வற்றலை 135 கிராம் எடுத்து 700 மி.லி. வெந்நீரில் ஊறவைத்து ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.

 பின்னர் அதனை இறுத்து 35 மி.லி. அருந்தி வருவது நல்லது. மணத்தக்காளி இலையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் இருமல், இரைப்பு முதலிய நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும். 

சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம்.

 மணத்தக்காளி இலையைக் கீரை போல் கடைந்து உண்டு வர, அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. 

மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.

மணத்தக்காளி கீரை உடன் பாதியளவு பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு வைத்து அல்லது கடைந்து சாதத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலத்தில் ரத்தம் வருவது நின்றுவிடும்.

 மணத்தக்காளிக் கீரையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு, வேகவைத்து அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். பிறகு கீரையை சமைத்து ஐந்து நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் ஆறிவிடும்.

 மணத்தக்காளியிலைச்சாறு, வல்லாரை இலைச்சாறு, தேன் மூன்றிலும் ஒரு தேக்கரண்டி எடுத்து தினசரி காலை, பகல் மாலையாக மூன்று வேளையும் காமாலை நோய் தீரும் வரை கொடுக்க வேண்டும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது மணத்தக்காளிக்கீரை. 

கையளவு கீரையை எடுத்து வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும்.

 உடலுறுப்புகளில் வேறெங்கும் புண் இருந்தால் அவையும் குணமாகும். வெறும் கீரையை உண்டாலே வாய்ப்புண்கள் ஆறும். சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கீரையை வேக வைத்து உண்டால் புண்கள் சீக்கிரம் ஆறும். 

குடல் புண்களையும், மணத்தக்காளி ஆற்றும். வாய்ப்புண், நாக்குப்புண், குடல் புண் போன்றவற்றுக்கு மணத்தக்காளி கீரை சிறந்த மருந்தாகும். காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு தணியும். 

உடல் குளிர்ச்சியடையும். ஒரு கைப்பிடி அளவு கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து கஷாயமாக செய்து குடித்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

நீர்க்கடுப்பு, எரிச்சல் குணமாகும். வாத நோய்கள் குணமாக, மணத்தக்காளி கீரையை உப்பு போட்டு சமைத்து சாப்பிட வேண்டும். கப நோய்களுக்கும் நல்ல மருந்தாகும்.

 கப நோய்கள் தீர, ஒரு கைப்பிடி மணத்தக்காளிக்கீரையை எடுத்து 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து விழுதாக அரைத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் தணியும். 

மணத்தக்காளிக்கீரை மலச்சிக்கலை போக்கும்.மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லது. கருவை வலிமையாக்கும்.

 மணத்தக்காளி இலை, காய், பழம் இவற்றுடன் சேர்த்து இடித்து பிழிந்தெடுத்த சாறு கல்லீரல் வீக்கம், கணைய வீக்கம் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.

*ஆரோக்ய வாழ்வுக்கு மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!*

Wednesday, June 22, 2022

சிகையை ஏன் எடுக்க_கூடாது

சிகையை ஏன் எடுக்க_கூடாது

முடிந்த சிகையுடன் செய்யவேண்டிய சுப கர்ம அனுஷ்டானங்களும் அவிழ்ந்த சிகையுடன் செய்யவேண்டிய அசுப கர்ம அனுஷ்டானங்களும் வீணாக வீணாகாமல் இருப்பதற்காக.

இறந்த உறவினர்களுடைய சாவு தீட்டு களையெல்லாம் ஓரங்க சேமித்து வைத்துக் கொள்ளாமல் இருப்பதற்காக விதிமுறைப்படி க்ஷௌரமும் தர்ப்பணமும் செய்தால் ஒழிய தீட்டு அகலாது.

வேதமந்த்ரபூர்வமாக தெய்வசாக்ஷியாகச் சௌளகர்மாவில் வைக்கப்பட்ட சிகையை திரும்பவும் வேதமந்த்ரபூர்வமாக ஸன்யாஸ சமயத்திலேயே எடுக்கவேண்டி இருக்க இடையே இஷ்டப்படி எடுத்து விடுவதால் வேததுரோகமும், தெய்வதுரோகமும் ஏற்படாமலிருக்க.

ஒரு மனிதன் ஸ்நானம் செய்தவுடன் அவன் மேல் வஸ்திரத்தை பிழிந்த ஜலமும் சிகையின் நுனியின் மூலமாய் கீழே விட்ட ஜலமுமே அவனுடைய வம்சத்தில் பிறந்த முன்னோர்களில் யாரேனும் அதிக பாதகங்கள் செய்து நரகத்தில் இருந்தால் அவர்களை போய் சேரும் தர்ப்பன ‌ஜலமாகிறது ஆதலால் அவர்களுக்கு கொஞ்சமேனும் ஏற்படும் ஆறுதலையும் தடுக்காமல் இருப்பதற்கும்.

( விநா யத் சிகயா கர்ம விநா யஞோபவீதத:।

ராக்ஷஸம் தத்தி விஜ்ஞேயம் ஸமஸ்தம் நிஷ்பலா: க்ரியா:॥

विना यच्छिखया कर्म विना यज्ञोपवीततः।

राक्षसं तद्धि विज्ञेयं समस्तं निष्फलाः क्रियाः॥

முடிந்த சிகையும்,யஞோபவீதமுமில்லாதவனின் கர்மம் நிஷ்பலம்)

#ராஸுப்பரத்னம்அய்யர்

1954

மூலம் ; ஸ்வதர்மம்

ஒரு நாள் திறக்கும் வாசல்

 ஒரு நாள் திறக்கும் வாசல் !

திருச்செந்துாரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப் பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். ஆனாலும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

ஸ்கந்தா சரணம் ! ஸ்கந்தா சரணம்...!



சரவணபவ குஹா சரணம்...!

ஸ்ரீ கல்யாண நரசிங்க பெருமாள்

 மாங்கல்யம் கூடி வர வழிபட வேண்டிய கோவில்...🛕

     ஸ்ரீ கல்யாண நரசிங்க பெருமாள் 

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இப்பகுதியில் அமைந்துள்ள பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துள்ளனர்.

 நாளைடைவில் குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து 'குஜிலியம்பாறை' என இவ்வூர் அழைக்கப்பட்டது.

 குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. 

நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.

திருமணக்கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும்.

 தனி சன்னதியிலுள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் வறுமை நீங்கி பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி ஏற்படும். இங்குள்ள விஷ்ணு, துர்க்கையை வணங்கினால் பாவங்கள் அகன்று தோ ஷங்கள் நீங்கி சுகம் உண்டாகும். 

வாசலில் உள்ள ஆஞ்சநேயரை வடை மாலை, துளசி மாலை, நெய்வேத்யம் செய்து வழிபட்டால் எக்காரியமும் வெற்றியடையும். 

இங்கு வேதநாயகனாக விளங்கும் பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து பூஜித்தால் நாகதோஷம், பட்சி தோஷம் விலகி சுகம் உண்டாகும்..



மயிலாப்பூர் மல்லீஸ்வரர் ஆலயம்

 சென்னை மயிலாப்பூர் மல்லீஸ்வரர் ஆலயம்

சென்னையில் காஸ்யபர், அகஸ்தியர், பிருகு போன்ற பல முனிவர்கள் வழிபட்ட சில முக்கியமான சிவஸ்தலங்கள் உண்டு. அந்த காலத்தில் இந்த இடம் தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்டதாம். மேலும் இங்குதான் சிவபெருமானிடம் பல முக்கியமான புராண நாயகர்கள் அருள் பெற்ற பல முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

ஒரு முறை சிவபெருமான் பார்வதியை மணந்து கொண்டார். பலமுறை பல்வேறு ரூபங்களிலும் அவதாரங்களிலும் சாப விமோசனம் அடைந்த பார்வதியை சிவபெருமான் மீண்டும் மீண்டும் பல சந்தர்ப்பங்களில் மணந்து கொள்ள வேண்டி இருந்தது. திருமணம் ஆனவுடன் ஆலயம் உள்ள இடத்தில் வந்து தங்கினார்கள். பார்வதி தேவி தனக்கு மல்லிகைப் பூ மிகவும் பிடிக்கும் எனக் கூறியதினால் தற்போது ஆலயம் உள்ள இந்த இடத்தில் வந்து தங்கினாராம். அந்த இடம் அந்த காலத்தில் மூழுவதும் மல்லிகை மலர்களைக் கொண்ட காடாகவே இருந்தது. அவள் தினமும் மல்லிகைப் பூக்களினால் ஆன மாலையை அணிந்து கொண்டு சிவபெருமான் முன் நின்று நடனம் ஆடுவாளாம். ஆகவே அவளை மல்லீஸ்வரி என அழைத்தாராம்.

அப்போது அயோத்தியாவில் பிரதான் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகளுக்கு வெகு காலம் திருமணம் ஆகவில்லை. ஆகவே அவன் பிருகு முனிவருடைய அறிவுறையை ஏற்று மல்லீஸ்வரர் உள்ள இந்த இடத்திற்கு வந்து நாக தோஷத்தை விலக்கி அவளுடைய திருமணத் தடையை விலக்க வேண்டும் என சிவபெருமானைத் துதித்தபடி கடுமையான தவத்தில் இருந்தார். அவருடைய தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர் முன் தமது மனைவியான பார்வதியுடன் காட்சி அளித்து அவருக்கு அருள் புரிய அந்த மன்னனின் மகளுக்கு திருமண பாக்கியம் கிடைத்ததாம். அது முதல் திருமணத் தடையிருந்தவர்கள் லிங்க உருவில் அங்கு இருந்த மல்லீஸ்வரர்களை (சிவன் -பார்வதி) வந்து வழிபட்டு திருமணத் தடைகளை விலக்கிக் கொண்டனர். அந்த ஆலயத்திற்கு திங்கள் கிழமை சென்று மல்லிகை மாலைப் போட்டு ஆறு திங்கள் கிழமைகள் மல்லீஸ்வரரை வணங்கினால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகும் என்ற நம்பிக்கை துவங்கியது.  இருவர் பெயரையும் கொண்டு மல்லீஸ்வரி ஈசன் என்ற பெயர் ஏற்பட அதுவே மல்லீஸ்வரர் என பிற்காலத்தில் மருவியதாம். ஆனால் ஆலயம் அமைக்கப்பட்ட கால விவரம் தெரியவில்லை.

சோட்டானிக்கரை பகவதி அம்மன்

 சோட்டானிக்கரை பகவதி அம்மன்

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரையில் 2000 ஆண்டுகள் பழைமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது.கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது பெண்களின் சபரி மலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மனுக்கு உண்டு.இந்த அம்மனை வழிப்பட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமும், தீர்க்க ஆயிளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பில்லி, சூனியம் ஏவல் போன்றவற்றில் இருந்தும் அம்மனை வழிப்பட்டு பக்தர்கள் பலன் பெறுகிறார்கள்.

மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலை ரூத்திராட்சத்தால் செய்யப்பட்டது. இங்கு அதிகாலை நிர்மால்யம் தரிசனம் முடிந்தும் தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவில்களில் இந்த கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலை ரூத்திராட்சத்தால் செய்யப்பட்டது. இங்கு அதிகாலை நிர்மால்யம் தரிசனம் முடிந்தும் தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவில்களில் இந்த கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

பசு வடிவில் வந்த அம்பாள் :

இங்கு ஆதிவாசிகள் அதிகளவு வாழ்ந்து வந்தனர். ஆதிவாசிகளின் தலைவனான கண்ணப்பன் என்பவர் பசுக்களை கொன்று அதன் இறைச்சி உண்பவராக இருந்தார். ஒரு நாள் அவரது மகள் தந்தையால் கொல்லப்பட இருந்த பசு மாட்டை காப்பாற்றினாள்.

மகள் மீது அதிக பாசம் கொண்ட கண்ணப்பன் அன்று முதல் தானும் பசுவை வதைப்பதில்லை என்று சபதம் செய்தார். ஆனாலும் அவர் முன்பு செய்த பாவம் காரணமாக அவரது அன்பு மகள் உயிர் துறக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட கண்ணப்பன் கனவில் அவரது மகளால் காப்பாற்றப்பட்ட பசு தோன்றியது. தான் பசு வடிவில் வந்த தேவி என்றும், கண்ணப்பனின் மாட்டு தொழுவத்தில் தான் சிலையாக காட்சி அளிப்பதாகவும் அருகில் மகாவிஷ்ணு சிலையும் இருக்கும் என்று கூறி விட்டு அந்த பசு மறைந்து விட்டது.

மறுநாள் தொழுவத்திற்கு சென்று பார்த்த கண்ணப்பன் அங்கு தேவி சிலையும், மகாவிஷ்ணு சிலையும் இருப்பதை பார்த்து அதை இயற்கை கோவிலாக்கி வழிபாடு செய்யத் தொடங்கினார். அந்த கோவில் புதர்கள் அடர்ந்து காடாக மாறியது.

இந்த நிலையில் ஒரு பெண் புல்வெட்டும்போது அவரது அரிவாள் பட்டு விக்ரகத்தில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதுபற்றி அங்குள்ள பெரிய நம்பூதிரியிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் தேவபிரசனம் பார்த்து தேவியின் பெருமையை உணர்ந்து மீண்டும் வழிபாடு நடைபெற ஏற்பாடு செய்தார். அந்த தேவியே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறார்.

12 ஆயிரம் புஷ்பாஞ்சலி :

இந்த மண்டபத்தில் உள்ள கொடிமரம் அருகில் நின்று பார்த்தால் மூலஸ்தானத்தில் உள்ள தேவி பகவதியை கண் குளிர தரிசிக்கலாம். குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பவர்கள் பிரகாரத்தின் வடக்கு பக்கம் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் விசேஷ பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார்கள்.

இங்கு 12 ஆயிரம் புஷ்பாஞ்சலி செய்வதும், அம்மனுக்கு சிவப்பு நிற பட்டுபுடவை காணிக்கையாக கொடுப்பதும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் இங்கு உயிர் பலி கொடுக்கப்பட்டாலும் தற்போது அது கைவிடப்பட்டு, சைவ வழிபாடு நடை பெறுகிறது.

பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து நலம் பெற்று செல்கிறார்கள். பக்தர்கள் மனம் சார்ந்த கோளாறுகள் கொண்ட தங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து அன்னையை வழிபட்டு பூரணகுணம் பெற்று செல்வதை காணமுடிகிறது.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பிரச்சித்தி பெற்ற பூஜைகளில் ஒன்று தான் குருதிபூஜையாகும். இந்த கோவிலின் கீழ்காவில் நடைபெறும் குருதிபூஜையில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்று செல்கிறார்கள்.

முன்பு இங்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே குருதிபூஜை நடத்தப்பட்டு வந்தது. இப்போது இந்த பூஜை ஒவ்வொரு நாளும் நடத்தப்படுவது சிறப்பாகும். ஆண்டுதோறும் இந்த கோவிலில் நடைபெறும் சோட்டானிக்கரை மகம் என்ற திருவிழா மாசிமகத்தில் நடைபெறுகிறது.

அப்போது ஏராளமான பக்தர்கள் இங்கு திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்கிறார்கள். திருமணமான பெண்களுக்கு தீர்க்க ஆயுளும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதும், மாசி மகம் வழிபாடின் ஐதீகமாக இருக்கிறது. இங்கு தேவியின் வலது பக்கம் மகாவிஷ்ணு இருப்பதால் அம்மே நாராயணா, தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரி நாராயணா என்று பக்தர்கள் போற்றி பாடுகிறார்கள்.



அமைவீடம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 20 கீலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில்

 ஏழரைச்சனியின் துன்பத்தை நீக்கும் பரிகார தலம் 

இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில் சனி பகவான் பரிகாரத் தலம் ஆகும். ஏழரைச்சனியின் துன்பத்தை நீக்கும் பரிகார தலம் இதுவாகும்

இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்தது. சனி பகவான் பரிகாரத் தலம் இது. நவக்கிரகங்களுள் ஒன்றான சனீஸ்வர பகவான் தனிச்சன்னிதி கொண்டு தெற்கு நோக்கி வீற்றிருக்கும் ஒரே தலம் இலத்தூர் ஆகும்.

மனிதர்கள் மட்டுமல்லாமல் சிவனையே சனி பகவான் சில காலங்களில் பிடித்து ஆட்டிப் படைத்துள்ளார். சிவன் விஷமுண்டது கண்டகச்சனி காலத்திலும், தட்சனிடம் அவமானப்பட்டது அஷ்டமச்சனி காலத்திலும், குளத்தில் உள்ள கருங்குவளை மலருக்கடியில் ஏழரை நாழிகை மறைந்திருந்தது ஏழரைச்சனி காலத்திலும் ஆகும். அத்திருக்குளம்தான் இத்திருக்கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளதாக தல வரலாறு சொல்கிறது.

அகத்தியருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்ததும், பொதிகை மலையில் இருந்து புறப்பட்டு, ஏழரை ஆண்டுகள் வடதிசை சென்று திரும்பும் வழியில் அனுமன் நதி பாயும் இத்திருக்குளத்தில் நீராடிவிட்டு புளிய மரத்தடியில் உள்ள சிவனை வழிபட்டு, அருகிலேயே ஈசனின் இருப்பிடமான கயிலாயத்தை (வடக்கு) நோக்கி அமர்ந்து சனிபகவானை நினைத்து, சனீஸ்வர ஸ்தோத்திரம் பாடினார். இதையடுத்து அவருக்கு சனீஸ்வர பகவான் காட்சியளித்தார். அகத்தியர் வடக்கு நோக்கி அமர்ந்திருந்ததால் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அகத்தியருக்குக் காட்சியளித்தார்.

குளத்தில் இருந்த கருங்குவளை மலருக்கடியில் ஈஸ்வரன் மறைந்திருந்ததாலும், ஏழரைச்சனி போக்கின்போது அகத்தியர் இக்குளத்தில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசித்ததாலும் இக்குளம் அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

பொங்கு சனி

ஏழரைச்சனி விலகுபவர்கள் மட்டும் இதில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசிக்க வேண்டும். மற்றவர்கள் நேரடியாக கோவிலுக்குள் சென்று வணங்கலாம். இங்கு பொங்கு சனியாக வீற்றிருந்து அருள்பாலிப்பதால் சனீஸ்வர பகவான் பிரசாதத்தை வீட்டிற்குக் கொண்டு செல்லலாம்.

இருப்பிடம்

திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது இலத்தூர். சென்னை, மதுரை, திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு பேருந்து வசதிகளும், ரெயில் சேவையும் உள்ளது.

வித்தியாசமான தட்சிணாமூர்த்தி

 வித்தியாசமான தட்சிணாமூர்த்தி திருக்கோலங்கள்

* மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் சாலையில் 15 கிலோமீட்டரில் உள்ளது, கழுகத்தூர். இங்குள்ள சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் பிராகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால் 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

* சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிவபுரி எனும் திருநெல்வாய். இந்த ஊரை அடுத்த திருக்கழிப்பாலை என்ற இடத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சிலை, காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக் கல்லால் ஆனது.

* திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

* எல்லாக் கோவில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான், திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.

* திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராக தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். இவர் காலடியின் கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோவிலிலும் காணமுடியாது.

* ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஆதிரத்தினேஸ்வரர் கோவிலிலும், சென்னை திரிசூலம் கோவிலிலும், தட்சிணாமூர்த்தி வீராசன நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

* திருவொற்றியூர், தியாகராஜர் - வடிவுடையம்மன் கோவில் வாசலுக்கு முன்புள்ள பக்க மண்டபத்தில் வடக்கு நோக்கி 9 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட பிரமாண்ட வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.


திருவண்ணாமலை

 திருவண்ணாமலை! 

அடி முடி காண முடியாத இடம் ஒன்று திருவண்ணாமலையில் இருக்கிறது என்றால் கேட்க மிக ஆச்சர்யமாக இருக்கிறது தானே...!! எனக்கு என் குரு அன்னை சித்தர் ஐயா அவர்கள் கூட்டி சென்று காட்டிய அற்புத idam இது....

அது எப்படி அவ்வளவு பெரிய திருவண்ணாமலையை மறைக்க எதனால் முடியும், மலை உச்சியில் தீபம் ஏற்றினால் சுற்றி இருபது கிலோமீட்டர் தாண்டி தெரியும். அப்படிப்பட்ட மலையை மறைக்க யாரால் முடியும் என்று தான் நினைக்க தோன்றும். நமக்கும் அவ்வாறே நினைக்க தோன்றியது ஆரம்பத்தில், 

கிரிவல பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்க்கும் போது அண்ணாமலையார் மலை சுற்றிலும் மறைந்து விடுகிறது. நின்று பார்க்கும் நமக்கு கொஞ்சம் கூட தெரியாமல் ஒரு சிறு மலை மறைத்து விடுகிறது. 

அடியையும் பார்க்க முடிவதில்லை 

முடியையும் பார்க்க முடிவதில்லை..

அப்படி மறைத்தவாறு நிற்கும் மலையின் பெயர் என்ன தெரியுமா?

             உண்ணாமலை அம்மன் பெயரில் அழைக்கப்படும் மலை தான் அது.  இதன் பின்னால் ஒரு கதையே இருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.... 

சிவனை சக்தி தனக்குள் நிறுத்தி மறைத்து வைத்திருக்கும் சூட்சுமம் நிறைந்த இடமாகும் அந்த இடம். அந்த இடம்

அகத்தீஸ்வரர் திருக்கோயில்

 தினம் ஒரு திருத்தலம்.. 🛕



சதுர வடிவில் ஆவுடையார்.. 


சூரியன் மற்றும் சந்திரனோடு பைரவர்..!!

                

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்...!!

 இந்த கோயில் எங்கு உள்ளது? 

சென்னை மாவட்டத்தில் உள்ள நெமிலிச்சேரி என்னும் ஊரில் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

 இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? 

சென்னை, குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் நெமிலிச்சேரி என்னும் ஊர் அமைந்துள்ளது. நெமிலிச்சேரியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.

 இந்த கோயிலின் சிறப்புகள் என்ன? 

கருவறையில் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி, சதுர வடிவிலான ஆவுடையார் மீது காட்சியளிக்கிறார்.

இங்குள்ள அம்மன் ஆனந்தவல்லி தெற்கு நோக்கிய திசையில் அபயஹஸ்த முத்திரை காட்டி அருள்பாலிக்கின்றாள். 

இங்கு ஈசன் போகலிங்க வடிவில் காட்சி தருகிறார். நோயால் அவதிப்படுவோர் இவரை வணங்கினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சுற்று பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் ஆகியோர் சன்னதிகள் அமைந்துள்ளன.

வடகிழக்கு மூலையில் நவகிரகங்கள் அமைந்திருக்க, அதற்கு எதிரில் சூரியன் மற்றும் சந்திரனோடு பைரவரும் சேர்ந்து ஒரே சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பு.

நெமிலி என்றால் தெலுங்கில் மயில் என்று அர்த்தம். முற்காலத்தில் இப்பகுதியில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் இத்தலம் 'நெமிலிச்சேரி" எனப் பெயர் பெற்றது.

 வேறென்ன சிறப்பு? 

கருவறையின் வெளியே கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் விஷ்ணு துர்க்கையும் காட்சி தருகின்றனர்.

கருவறைக்கு இடது புறம் வெளிச்சுற்றில் சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கின்றார்.

கோயிலுக்கு வெளியே இடது புறத்தில் அகத்திய புஷ்கரணி உள்ளது. அதன் கரையில் மிகப்பெரிய அரசமரமும், அதன்கீழ் நாகதேவதைகள், பிள்ளையார், பரமேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரி சிலையும் அமைந்துள்ளன.

 என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது? 

சிவராத்திரி, திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், நவராத்திரி, பிரதோஷம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது? 

நோயால் பாதிக்கபட்டவர்கள் தங்களது பிரச்சனைகள் தீர இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் பிரார்த்தனை செய்கின்றனர்.

 இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது? 

தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


ஒத்திகை

 ஒத்திகை

எதற்காக அதிகாலையிலேயே பரத் அழைக்கிறான்? சாரங்கபாணிக்கு ஏதேனும் ஆகிட்ச்சா? மனதிற்குள் பல குழப்பமான கேள்விகளுடன் பதறியபடி போனை எடுத்தேன். கை லேசாக நடுங்கியது,

"ஹலோ.. பரத்.. என்னாச்சுப்பா..?"

"மாமா.. ஹலோ.. மாமா.. கேக்குதா.. நான் பேசுறது? ஹலோ.. இருப்பா... சிக்னல் கெடைக்கல.. என்று சற்றே அவிழ்ந்திருந்த கைலியை என் வலக்கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ரூமிலிருந்து வெளியே வந்தேன்.

சொல்லுப்பா.. என்னாச்சு..? சாரங்கனுக்கு ஒண்ணுமில்லியே.. நல்லா இருக்கான்ல..?

"அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா.. நீங்க உடனே கொஞ்சம் கெளம்பி நம்ம வீட்டுக்கு வர்றீங்களா?"

ஏம்ப்பா...?

சாரி மாமா.. என்று ஃபோன்ல கேக்காதீங்க ப்ளீஸ்... நீங்க நேர்ல நம்ம வீட்டுக்கு வந்தாத்தான் புரியும்.."

இப்பதான் எந்த்ரிச்சேன்ப்பா.. எனக்கு ஒரே பதட்டமா இருக்கு. காப்பி டிபன் சாப்ட்டுட்டு ஒரு எட்டரை மணிவாக்குல வர்றேன். சரியா?

"மாமா.. நான் காரை எடுத்துட்டு இன்னுமொரு அரை மணி நேரத்துல அங்க வந்துர்றேன். நீங்க ரெடியா இருங்க ப்ளீஸ்ஸ்..."

"சரிப்பா.. ரெடியா இருக்கேன். டேக் கேர்.."என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு குழப்பத்துடன் புறப்பட எத்தனித்தேன். காப்பி குடிக்கும் போது மருமகள் தீபாவிடம் விஷயத்தைச் சொன்னேன்.

சொன்னபடி அடுத்த அரை மணியில் பரத் வந்ததும் காரிலேறி என்னைச் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு விபரம் கேட்க முனைந்தேன். ஆனால் ஏதோ தடுக்க நான் பரத்திடம் எதுவும் பேசவில்லை. பயணத்தின் போது பலத்த சிந்தனையில் ஆழ்ந்தேன்.. எதற்காக இவ்வளவு காலையில் வீட்டிற்கு வந்து கூட்டிட்டு போறான்? மூணு நாள் முன்னாடிதான கடைக்குட்டிப் பெண் பவித்ராவிற்கு கல்யாணம் பண்ணி மறுவீட்டுச் சடங்குகளும் நடந்துச்சு. சம்மந்தி வீட்டாளுங்க ஏதானும் பிரச்சனை பண்ணிட்டாங்களா? இல்ல சாரங்கன் ஒடம்புக்கு ஏதாச்சும் பண்ணிருச்சா? இவன் கூட அதல்லாம் ஒண்ணுமில்லனு சொன்னானே..

அடுத்த ஐந்தாம் நிமிஷத்தில் வீட்டிற்குள் நுழைந்ததும்..

வாய் நிறைய வாங்க வாங்கண்ணே என்று கூப்பிட்டு சோஃபாவில் உட்காரும் முன்னரே குசல விசாரிப்புடன் ஒரு‌ நாலைந்து கேள்விகள் வீட்டார் பற்றி படபடவெனக் கேட்டுவிடும் வசந்தா இறுக்கமான முகத்தோடு, "வாங்கண்ணே. அண்ணி வரல்லயா? என்று சுரத்தில்லாமல் கேட்டது போலிருந்ததே கனமாக இருந்தது.

சாரங்கனோ ரொம்பவும் கூலாக, "குட்மார்னிங் டா வாமனா! என்ன அதுக்குள்ள உனக்கு நியூஸ் வந்துருச்சா? நேத்திக்கு ராத்திரியே உன்ட்ட சொல்லணும்னு நெனச்சேன்.‌ மறுவீடுலாம் போய்ட்டு வந்ததுல ரொம்ப டயர்டா இருந்தது. சரி என்ன சாப்பிட்ற சொல்லு?" என்றதும் எனக்குக் கோபம் வந்துவிட்டது. ஆனாலும் 'ஒண்ணும் வேணாம்' என்று மட்டும் சொல்லி சாரங்கனையும் அவனைச் சுற்றி நின்றிருந்த வசந்தா, அவனது மூன்று‌ பிள்ளைகள் மற்றும்‌ அவர்களின் குடும்பத்தினரைப் பார்த்தேன்.

வானமாமலை எனும் என்னை நட்பு வட்டத்தில் சிலர் வானம் என்றும் மல, மலை, மலேய் என்று அவர்கள் வாய்க்கு வாகாக வருவதைக் கூப்பிடுவார்கள். நான் சிறிது குள்ளமானதால் பள்ளித் தோழன் சாரங்கன் மட்டும் வாமனா என்றுதான் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக உரிமையாகவும் செல்லமாகவும் கூப்பிட்டு என்னையும் சந்தோஷத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறான்.

என்னை வேறு யாரேனும் வாமனா என்று என் வித்து ரூபத்தை வைத்துக் கூப்பிட்டால் எனது விஸ்வரூபத்தைக் காட்டிவிடுவேன் அவர்களிடம். என் வாழ்வில் சாரங்கனுக்கு மட்டுமே என்னை அப்படிக் கூப்பிட உரிமையுண்டு என்றென்றும். சிற்சில நொடிகளில் எங்கேயோ போகிறானே என் மனப் பிரயாணி?!...

சாரங்கா என்னாச்சு? என்ன சொல்லுணும்ன்னு நெனச்ச என்கிட்ட? ஏதாச்சும் பிரச்சனையா? ஏன் காலேலையே பரத் எனக்கு கால் பண்ணி வரச் சொன்னான்?

"டேய் வாமனா... இருடா.. ஒவ்வொரு கேள்வியா கேளு. பதில் சொல்றேன்."

"கடுப்பாக்காத என்னய.. சீக்கிரமா சொல்லு.. என்னதான் ஆச்சு?" என்றதும்,

சாரங்கன் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு யாராச்சும் எதாவது சொல்லணுமா? என்று கேட்கவும்,

பரத் உடனே, மாமா.. அப்பா நம்ம எல்லாருக்கும் பெரிய ஷாக்கிங் நீயூஸ் வச்சுருக்கார்... மறுவீடு முடிஞ்ச கையோட நேத்து இங்க வந்த பவி அப்பாகிட்ட போயி,

"அப்பா உங்களுக்கு ஏதாச்சும் கிஃப்ட் தரணும்ன்னு உங்க மாப்ள ஆசைப்பட்றார். என்ன வேணும்னு கேளுங்கப்பா"ன்னு ரொம்ப ஆசையா கேட்டதுக்கு இவர், "நானே உங்கள்ட்ட ஒண்ணு கேக்கனும்னு நெனச்சேன். இப்போ எனக்கு டயர்டா இருக்கு. நாளைக்கு காலைல சொல்றேன்"னு சொல்லிட்டு படுக்கப் போயிட்டாரு.

இன்னக்கி எந்திரிச்ச உடனே எங்க எல்லாரையும் கூப்பிட்டு நான் உங்க மூணு பேர் கிட்டேயும் ஒரு ஃகிப்ட் கேக்கப் போறேன். அதைக் கண்டிப்பா மறுக்காம நீங்க மூணு பேரும் சேந்து தரணும்னாரு.

பவி கொஞ்சம் பதற்றத்துடன் இடையில் புகுந்து,

மாமா.. அப்பா என்ன கிஃப்ட் கேட்டாரு தெரியுமா? அம்மாகிட்ட இருந்து டைவர்ஸ் கேக்குறாரு மாமா.." என்று சொல்லி அழத் தொடங்கினாள்.

அதைக் கேட்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சாரங்கனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட வேண்டும் போலிருந்தது.

"என்னடா கிறுக்கு பிடிச்சிருச்சா ஒனக்கு? விஷேசம் நடந்த வீட்ல ஏன்டா இப்படி ஒரு அபசகுண சங்கதி? வயசானதால உன் புத்தி பேதலிச்சுருச்சா? என்று கத்தினேன்.

வாமனா.. "ஷட்டப்.. ஐ ஸே" என்று என்னைச் சொன்ன சாரங்கனைப் பார்க்கப் பிடிக்கவில்லை எனக்கு..

"பரத், வா நாம எல்லாரும் சேர்ந்து கீழ்ப்பாக்கம் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போலாம் இந்தப் பைத்தியக்காரன.‌" என்று சொல்லிக் கொண்டிருந்த போதே சாரங்கன்,

"டேய்.. நீயும் ஷார்ட் டெம்பராத்தான் இருக்க. யூ நோ ஹவ் மச் லவ் அயம் ஹேவிங் ஃபார் வசந்தா? எனக்கு இத்தனை வருஷம் மண்டையாட்டி மகாதேவியாவே அவ இருந்துட்டா. லெட் ஷி லிவ் ஹெர் ஓன் லைஃப்.

ஐ வான்ட் ஹெர் டு லிவ் எ யுனீக் லைஃப் வித் அவுட் மை இன்டர்ஃபெரன்ஸ் அண்ட் நான்சென்ஸ் டிஸ்டர்பன்ஸஸ்." ஐ ஆம் கோயிங் டு ஜாயின் இன் அ சீனியர் சிட்டிசன் கம்யூனிட்டி லிவிங். இட்ஸ் மை ஃபைனல் டெஷிஷன் அண்ட் நோ காம்ப்ரமைஸ் ஆன் தேட் எனி மோர். டாட்."

நான் வசந்தாவைப் பார்த்தேன். அவளோ சாரங்கனையே பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு இன்னும் கோபம் அதிகமானது.

சாரங்கனைப் பார்த்து ஒரே ஒரு கேள்வியைக் கேட்டேன்.

"டேய்.. உன் நெஞ்சுல கை வச்சு சொல்லு? வசந்தா இல்லாம தனியா இருந்திடுவியா நீயி?

"எஸ். ஒய் நாட். டெஃபெனெட்லி.."

வசந்தாவால அப்டி இருக்க முடியுமான்னு கொஞ்சமாச்சும் நெனச்சுப் பாத்தியா? மொதல்ல அவள்ட்ட கேட்டியா நீ?

"ஷி டஸ்ஸின் நோ எனிதிங் டா. தேட்ஸ் ஒய் ஐ டிசைடட் டு கெட் ‌ஹெர் அவுட் ஃப்ரம் மீ ஸோ தேட் ஷி கேன் எக்ஸ்ப்ளோரர் ஹெர்ஸெல்ஃப். ஐ ஹேவ் ஸ்பாயில்ட் ஹெர் ஹோல் ஜர்னி ஆஃப் லைஃப்"

விம்மலுடன் இருந்த வசந்தா சடாரென்று, 

"அண்ணா! அவர் எல்லாம் தெரிஞ்ச அதிமேதாவி.. அவர ஒண்ணுமே கேட்காதீங்க.. நீங்க மட்டுமில்லை.. யாருமே எதுவும் கேக்க வேணாம்... விட்ருங்க.. அவர் சொல்றாப்புல நான் எனக்குப் பிடிச்ச வாழ்க்கையை இனிமே வாழ்ந்து பாக்கப் போறேன்.

இதுவும் ஒரு விதமான அர்த்தமுள்ள புரிதல் கலந்த காதல்தான். இவ்வளவு நாள் புகுந்த வீடு, புருஷன், கொழந்தைங்க, வயசான மாமியார் மாமனார் அவங்க காலத்துக்கு அப்புறமா மருமகப் புள்ளைங்க சம்பந்திங்க பேரன் பேத்தி மக்கள்னே இருந்துட்டேன். எனக்கென்ன அண்ணே..? என் வழிய நான் பாத்துகறேன் இனிமே.."

சாரங்கன் உட்பட நாங்கள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. நான்தான் உடனே குறுக்கிட்டு,

"இரும்மா இரு.. அவசரப்பட்டு வார்த்தைய விட்றாத.." எப்டிம்மா இனிமே போயி தனியா வாழுவே?

"என்னயப் பத்தி இவ்வளோ யோசிச்ச அவரு இதைப் பத்தி யோசிச்சிருக்க மாட்டாரா என்ன? நான் என்ன தொண்டுக் கெழாமாவா ஆயிட்டேன்? கைகால்ல வலு இருக்கு. நீங்க எல்லாருமே அவர் எனக்கு வலி கொடுக்கறார்ன்னு நெனைக்கிறீங்க. நான் அவரு எனக்கு வழி விடுறார்ன்னு நெனக்கிறேன்ணே.."

அம்சமான எங்க ஜீவனுத்துக்கு ஜீவனாம்சமும்‌ ஏற்பாடு பண்ணி மகாராணியாத்தான் என்னய அனுப்பி வைக்க ஏற்பாடு செஞ்சிருப்பாருன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா இந்த எடத்துல நான் ஒண்ணு‌ சொல்லிக்க பிரியப்பட்றேன். நாங்க சட்டப்பூர்வமா பிரிஞ்சாத்தான் அவர்‌ நினைக்கிறது நடக்கும்ன்னு நெனைக்கிறார். அதனாலதான் இந்த முடிவை எடுத்துருக்கார்.

அவர்‌ சொன்னாப்புல பூம்பூம் மாடாத்தான் இவ்வளவு காலம் அவர் பேச்சுக்கு மறுபேச்சு இல்லாம அவரோட வாழ்ந்துருக்கேன்னு சொன்னாருல்ல. அவர்தான் அப்படி நெனச்சுகிட்டு‌ இருக்கார். அதுக்கான விளக்கமா இப்போ நான் சொல்றேன்.

இவ்ளோ காலமா அவர் நினைக்கிறதும் நான் நெனைக்கிறதும் ஒரே ரசனையோடதான் இருந்திருக்கு எப்பவுமே..‌ அது அத்தி பூத்தாப்புல அபூர்வமா எப்பவாவது நடந்திருந்தா சுவாரசியமானதா இருந்திருக்குமோ என்னவோ தெரியலை.. எல்லா விதத்திலயும், ஏன் எங்க பிள்ளைங்க பேர் வைக்கறதுல இருந்து படிப்பு, வேலைன்னு தேர்ந்தெடுத்த மருமகள் மாப்ளைங்க வரையில எல்லாமே ஒத்த ரசனையா இருந்தா எப்படி‌ இருக்கும் ஒரு மணுஷனுக்கு?

நான் எனக்குப் பிடிக்காததைச் செய்யுறார்ன்னு ஒரு‌ ஊடல்ல சண்டை போட்டுச் சாப்பிடாம‌ கொள்ளாம அடம் புடிச்சு ரெண்டு மூணு நாள் பிடிவாதமா மூஞ்சி காட்டாம அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி இருந்திருந்தா சமாதானப் படலம் அதுஇதுன்னு கொஞ்சமாச்சும் எங்க வாழ்க்கைல நவரசம் கலந்திருந்து இருக்கும். நான்தான் அது எதுக்கும் எடங்கொடுக்காம இருந்திருக்கேனே. அவர் என்ன செய்வாரு பாவம்? அவர்‌ இது வரைக்கும் என்னய சின்ன விஷயத்துக்காகவாவது கண் கலங்க விட்டுருக்காரா? எங்க யோசிச்சு சொல்லுங்க பாப்போம்?"

"ஒரே மாதிரி எண்ணங்களோட‌ இருக்குறவங்க நண்பர்களா வேணா சண்டை சச்சரவு இல்லாம இணக்கமா ஜென்மம் பூராவும் இருந்திரலாம். ஆனா தாம்பத்யத்துல அது சீக்கிரமாவே போர் அடிச்சிடும். உங்க எல்லாருக்கும் இது ரொம்ப வித்தியாசமானதா தெரியலாம். ஆனா அப்படியே முப்பத்தி அஞ்சு வருஷமா வாழ்றது ஒரு சாபம்னே சொல்லுவேன் நான். ஏன் அவரும் தான்.. எல்லா கடமைகளையும் நிறைவேத்துறகுத்தான் காத்திருந்தார்.

தயவு செஞ்சு யாரும் எதையும் பேச வேணாம். எல்லா கடமைகளையும் சரிவர முடிச்சுட்டோம். இனிமே அவங்கவங்க வாழ்க்கைய அவங்கவங்க பாத்துப்பாங்க. இது என்னோட தனிப்பட்ட வாழ்க்கை. நான் பாத்துக்கறேன்.

என்னோட நர்சிங் படிப்பை வச்சுகிட்டு சமூக சேவைக்கான அத்யாயத்தோட மனசுக்கு புடிச்ச வாழ்க்கையையும் நான் வாழ ஆரம்பிக்கப் போறேன். என்னோட புது அட்ரெஸ், ஃபோன் நம்பரை எல்லார்க்கும் தர்றேன். நீங்க யார் வேணும்னாலும் என்னய சாயங்காலம் ஆறு மணிக்கு மேல கான்டாக்ட் செய்யலாம்.

"ரொம்ப தேங்ஸ்ங்க, அந்த பத்திரத்த தாங்க இப்பிடி" என்று எந்தவொரு நடுக்கமும் இல்லாமல் கையெழுத்து போட்ட வசந்தாவைக் கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்த எங்களைக் கண்ணிமைக்கச் செய்தது சாரங்கனின் கைதட்டல் சத்தம்!

-- செல்லா

#சிலாகிக்கும்_சிறுகதைகள்