Thursday, October 24, 2019

திருக்குருகூர்

,, என்ற அவர் கணிப்பு பொய்த்தது..

 ஜோதி  ஒளி அவரைத் திருக்குருகூர் புளியமரத்தடியில் கொண்டு வந்து சேர்த்தது.. பத்மாஸனமிட்டு அமர்ந்திருந்த நம்மாழ்வார் முன் இரு கைகளாலும் நன்றாக ஓசை எழுமாறு  தட்டினார்.. அது கருடத்வனி போலிருக்கவே நம்மாழ்வார் கண்மலர்ந்தார்.. 

மதுரகவியார், ''செத்ததன் வயிற்றிலே சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ?''என்று கேட்டார்.. இதன் பொருள்:- சரீரத்தில் அணுவடிவான ஆத்மா வந்து புகுந்து கொண்டால் எதனை அனுபவித்துக் கொண்டு, எவ்விடத்தில் இன்பம் உண்டென்று எண்ணியிருக்கும்??.

அதற்கு நம்மாழ்வார்,, '' அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' (அந்த ஆத்மா அந்த தேகம் அனுபவிக்கும் சுகதுக்கங்களை அனுபவித்துக் கொண்டு அங்கேயே கிடக்கும் என்பது இதன் விளக்கம்) என்றார்...

உடனே மதுரகவியார் நம்மாழ்வாரின் திருப்பாதகமலங்களில் விழுந்து சேவித்து, ''அடியேனை ஆட்கொண்டருள்வீர்'' என வேண்டினார்.

அவ்வாறே ஆட்கொண்டு-- திருவிருத்தம் 100 ,, 

திருவாசிரியம் ஏழு,, பெரிய திருவந்தாதி 87,, திருவாய்மொழி 1102 அனைத்தையும் மொழிய,, அவற்றை ஏட்டில் பதிப்பித்தார் மதுரகவியார்.. அவற்றின் பொருளையும் மதுரகவியாருக்கு உபதேசித்தார்.

உலகம் உய்ய நம்மாழ்வார் முப்பத்தோராண்டு திருப்புளியடியில் எழுந்தருளியிருந்து பேரின்ப வீட்டை அடைந்தருளினார்...

மதுரகவியாழ்வார் 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' என்று தொடங்கும் குருஆராதனைப் பாடல்களை மட்டுமே பாடி நாடெங்கும் திவ்யப் பிரபந்தங்களைப் பரப்பி வந்தார்.. திருவாய்மொழியிலுள்ள 'கண்ணன் கழலிணை'  என்ற பாசுரத்தை எழுதி சங்கப் பலகையில் வைத்தார்.. சங்கப்பலகை தமிழ்ப் புலவர்களைக் கீழே தள்ளி நம்மாழ்வாரின் பாசுர ஓலையை மட்டுமே தாங்கி மிதந்திருக்கிறது.

ஆச்சார்யாளுடைய கைங்கர்யமே பரமபதத்திலும் பேறு பெற்றதாகும் என்று வாழ்ந்தவர் மதுரகவியார். நம்மாழ்வார், மதுரகவியார் என்ற இரு மகான்களின் பாதம் பட்ட ஸ்தலமிது...

நாதமுனிகள், 'கண்ணிநுண் சிறுத்தாம்பு '  பாடல் தொகுப்பை மதுரகவியாரின் வம்சத்தாரிடம்  பெற்று, அதை 12000 முறை ஜபிக்க, ஶ்ரீநம்மாழ்வாரே பிரத்யட்சமாகி ஒரு திரைக்குப் பின் அமர்ந்துகொண்டு நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பாட,  நாதமுனி அவற்றை எழுதி தமிழ் தாய்க்கு பக்தி மாலையாக அணிவித்தார்.

இத்தலத்தின் வடகரையிலுள்ள காந்திஸ்வரத்தில் கருவூர் சித்தர்  சில காலம் வாழ்ந்து வந்தார் .. அவர் பின்னாலேயே ஒரு நாய் சுற்றிக் கொண்டிருந்தது. அது தினந்தோறும் குருகூர் வீதிக்கு வந்து அக்கிரகாரத்து எச்சில் இலைகளிலுள்ள உணவை உண்டு வாழ்ந்தது.. ஒரு நாள் எச்சிலை உண்டு ஆற்றைக் கடந்து வருகையில் சூழலில் சிக்கி உயிர்துறந்தது.

அப்போது அதன் கபாலம் வெடித்து ஒரு ஜோதி எழுந்து ஆகாயத்தில் கலந்தது.. ஆஹா!, நமக்கு அந்த பாக்கியம் வாய்க்கவில்லையே என்று கருவூரார் பாடிய பாடலை இத்தல வரலாற்றின் இறுதியில் காணலாம்.

குருகமாலை என்ற நூல் யானையும் வேடனும் சண்டையிட, வேடனின் ஆயுதத்தால் யானையும், யானையின் தும்பிக்கையால் வேடனும் மாண்டதாகச் சொல்கிறது.. இத்தலத்தில் இறந்த ஒரே காரணத்தால் இருவரையும் விஷ்ணுதூதர்கள்  வைகுண்டம் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

புளியமரத்தில் பகவான் யோகத்தவத்தில் ஆழ்ந்திருந்தார்.. திருமகள் எம்பெருமானை நாடிவந்தாள். மகிழமாலையாக அவளை ஏற்றுக் கொண்டார்..

 இங்குள்ள நம்மாழ்வார் பிரதிமை தாமிரபரணித் தண்ணீரைக்காய்ச்சி அதில் செய்யப்பட்டு ஆழ்வார் தனது சக்தியைப் பிரயோகித்ததாகக் கூறப்படுகிறது...

இந்திரன் இந்திராணியுடன் சோமபானம் அருந்தி மகிழ்ச்சியுடன் இருந்த சமயம் தந்தையான கஸ்யபர் வர, அவரை மதிக்காமல் இருந்திருக்கிறார்.. ''இந்திரா! இந்தச் சொர்க்க போகத்தாலும் வாலிபத் திமிராலும் செருக்குற்றிருக்கிறாய் !, இரண்டும் அழியக் கடவது ''  என்று சபித்துவிட்டார்..  உடனே இந்திரன் பதறி  தந்தையின் காலில் விழுந்து சாபவிமோசனம் கேட்டான்.

''தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள ஆதிப்பிரானைத் தியானித்துத் தவம் செய்'' என்றார் கச்யபர். அமராவதியை அசுரர்களிடம் தோற்று, வயோதிகனாய் குருகூர் வந்து தவம் செய்து இளமையையும் நாட்டையும் திரும்பப் பெற்றார் அமரர்கோன்.

"இதுவோ திருநகரி! ஈதோ பொருநை 
இதுவோ பரமபதத்து எல்லை   இதுவேதான் 

வேதம் பகிர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை ஓதும் சடகோபன் ஊர்"
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
என்று இராமானுஜர் வெகுதூரத்தில் வரும்போதே இத்தலத்தைக் கண்டு திருவாய்மலர்ந்தருளியிருக்கிறார்..

ஆதிப்பிரான் சந்நதிக்கு முன்புறம் உள்ள கருட மண்டபத்தை நிறுவியவர் 🌕🌕🌕🌕 மணவாளமாமுனிகள்... பெருமாள் சந்நிதியிலிருந்து 60 அடி தூரம் தள்ளி சடகோபர் சந்நிதி உள்ளது.. ஆதிப்பிரான் விமானத்தையும்விட நம்மாழ்வார் விமானம் பெரியது..

 நம்மாழ்வார் தங்கித் தவம் செய்த புளியமரம் ஏழு கிளைகளோடு இருக்கிறது.. 🍀🍀🍀🍀   ஆழ்வார் கோயிலைச்சூழ  இருந்த பகுதிக்கு  ஶ்ரீபராங்குச (நம்மாழ்வாரின் வேறு பெயர்) சதுர்வேதி மங்கலம் என்று பெயர்.. 700 ஆண்டுகள் முன் வரை அப்பெயரே பிரசித்தமாயிருந்தது.

இங்குள்ள கண்ணாடி மண்டபம், திருமஞ்சன மண்டபம் மிகவும் வேலைப்பாடுடன் மனதைச் சுண்டி இழுக்கிறது.✨✨✨

 ஆதிப்பிரான் சுயம்புவானவர். பெரிய திருமேனியையுடைய இவரது திருவடிகள் பூமிக்குள் இருப்பதாக நம்பப்படுகிறது..ஶ்ரீரங்கத்தில் இருப்பது போல் இங்கும் அரையர் சேவை உண்டு.🎶🎶🎶🎶

ஒரு அடி நீளம், மேல்பாகம் கால் அங்குலம்,, அடிப்பாகம் ஒரு அங்குலமுள்ள  அருமையான வேலைப்பாடமைந்த கருங்கல்லினாலான அதிசய நாதஸ்வரத்தை இங்கு காணலாம்.. 🎻🎻🎻🎻🎻    இதன் அடிப்பாகம் பித்தளைப் பூணால் ஆனது. இதை மோகன வீணை என்கின்றனர்.. மரத்தால் செய்யப்பட்டது போலுள்ள இதைக் கோயில் பரதநாட்டியம் நடைபெறும்போது வாசித்திருக்கின்றனர்.. இது சுமார் 350 ஆண்டுகளுக்குமுன் கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற அரசரால் வழங்கப்பட்டிருக்கிறது.

''குறுமுனிவன்(அகத்தியர்) முத்தமிழும் எம்குறளும் (திருக்குறள்) சிறு முனிவன் (நம்மாழ்வார்) (திரு)வாய்மொழியின் சேய்(குழந்தை)'' என்று போற்றியிருக்கிறார் திருவள்ளுவர்..🌴🌴🌴🌴

""வாய்க்குங் குருகை திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதமளித்தாய்
அந்த நாயோடிந்தப் பேய்க்குமிடமளித்தாற் பழுதோ பெருமாள்  மகுடஞ்
சாய்க்கும் படிக்கு கவிசொல்லு ஞானத்தமிழ்க்கடலே""
         -- கருவூர்த் தேவர்.
✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

ஓம் நமோ நாராயணாய|||

No comments:

Post a Comment