Thursday, October 24, 2019

திருக்கண்ணபுரம்!

தினம் ஒரு திவ்ய
          தேசம்!
திருக்கண்ணபுரம்!

திருவாரூரில் இருந்து
கோவில் வாசல் வரை
பேருந்து போகிறது.

பெருமானின் சௌரி
என்ற பெயர் சொன்ன
மாத்திரத்திலே- என் துயர் போயின என்று
பாடுகிறார் நம்மாழ்வார்.

நைமி சாரண்ய முனிவர்
கள்,மோட்சம் அளிக்க
வல்லவர் யாரென ஸுத
முனிவரைக் கேட்க,
அவர் இந்த ஸ்தல பெருமையைப் பரக்க
பேசுகிறார்.

வானத்திலே பறக்கும்
சக்திப்பெற்ற மன்னன், உபரிசரவசுவிடம், அசுரர்களை அழிக்க தேவர்கள் உதவிக்கேட்டனர்.

உதவிய வசு, வெற்றி
தேடித்தந்தான். போர்
முடிந்ததும்,தாகவிடாய்
தீர்க்க அவன் வீரர்கள்,
கிருஷ்ணாரண்யத்தில்,
இறங்க,

அங்கே, மெலிந்த தேகம்
கொண்ட முனிவர்கள்
தவம் செய்து கொண்டு
இருந்தனர்.

சாமைக்கதிர்கள் என
நினைத்து, வசுவின்
வீரர்கள் தங்கள் வாளால் கொல்ல,
அபயக்குரல் அவர்கள்
எழுப்பினர்.

பதினாறு வயது பாலகனாய் பெருமான்
வந்து, அவன் படையை
த்வம்சம் செய்ய, அசுரர்களை வென்ற
நமக்கு இவனென்ன?
ஒரு பொருட்டோ? என

அஷ்டாச்சர மந்திரம்
ஜெபித்து அவன், நாராயணஸ்திரத்தை
பாலகன் மீது ஏவி விட,
அது, சுழன்று, சுழன்று,
பாலகனின் காலடியில்
சரணடைய, பாலகன்
மஹாவிஷ்ணு என
உணர்ந்து, அவர் காலில்
வீழ்ந்து பாவமன்னிப்பு
வேண்டினான்.

பெருமாளும் மன்னித்து
அவன் மகளையும்
திருமணம் புரிந்தார்.

மூலவர் நீலமேகப்
பெருமாள்.
உற்சவர் சௌரி ராஜ
பெருமாள்.
தாயார் கண்ணபுர
நாயகி.

எண்ணற்ற சிறப்புகள்
கொண்டவை இந்த
க்ஷேத்திரம்.
1 முக்தி அளிக்கும்
ஏழு ஸ்தலங்களான
வேங்கடம்,ஸ்ரீமுஷ்ணம்,
திருவரங்கம்,
தோத்தாத்ரி,
ஸாளக்கிராமம்,
பத்ரிகாச்ரமம்,
நைமிசாரண்யம் ஆகிய
ஸ்தலங்களில், ஒவ்வொரன்றிலும்
அஷ்டாச்சரத்தின்
ஒவ்வொரு எழுத்தாக
இயங்கும் பெருமாள்,
இங்கே அவற்றின்
மொத்த சொரூபமாக
திகழ்கிறார்.

சௌரி என்ற பெயர்
யுகங்கள் தோறும்
அவதாரம் எடுப்பவன்
என பொருள்.
75, சதுர்யுகங்களை
கொண்டது இந்த ஸ்தலம் என்பர்.

வைகாசி பிரும்மோச்வத்தில்
இவர் ஏழாம் திருநாள்
மும்மூர்த்திகளாக
காத்தருளும் விஷ்ணு,
தாமரையில் பிரும்மன்,
ஸம்ஹாரம் செய்யும்
ருத்ரன் என காட்சி
கொடுக்கிறார்.

"நீ கிடந்த அழகை திரு
வரங்கம்,கண்டேன்,
நின் நடையழகு காண
வேணும்"! என விபீடணன் கேட்க,
"கண்ணபுரம் வா"! காட்டுவோம் என 
நடையழகை காட்டினார்
என ஐதீகம்.

தலம், வனம்,நதி, கடல்,
நகரம், தீர்த்தம்,
விமானம் என ஏழு
புண்ணியங்களும்
ஒருங்கே அமைந்த
ஸ்தலம். இவ்வமைப்பில் தான்
அஷ்டாச்சர மந்திரம் 
சித்திக்கும் என்பது
சூட்சமம்.

பெருமாளின் அர்ச்சகர்
சிரீதரன் தன் காதலிக்கு
மாலையை தந்து பிறகு
பெருமாளுக்கு சூட்டி,
அதை, மன்னனுக்கு தர,
அதில் தலைமுடி இருக்க

விவரம் கேட்ட அரசன்
கேள்விக்கு, பெருமாளுக்கும் முடி
இருப்பதாக, அர்ச்சகன்
சாதிக்க,நம்பாத அரசன்
பெருமாள் சன்னதிக்கு
வந்து, சோதிக்க,
இரத்த துளிகள் மன்னன் முகத்திலே
தெளித்ததாம்.அதன்
காரணமாக பெருமான்
பெயர் சௌரி ராஜன்
என்பர்.

நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடினார்.
திரு மங்கை ஆழ்வார்
100 பாசுரங்கள்.
குல சேகர ஆழ்வார்
10 பாசுரங்கள்.
ஆண்டாள் 1.
பெரியாழ்வார் 1.

நூற்றெட்டு திவ்ய
க்ஷேத்திரங்களில்
கீழை வீடு என குறிக்க
படுவது இது தான்.

இத்தனை சிறப்புக்கள்
பெற்ற இந்த பெருமான்
உகந்த இந்த இடத்தை,
நாமும் சென்று அங்கே,
அவர் அருளை, பெறுவோம்!
ரமா ராஜகோபாலன்.

No comments:

Post a Comment