Thursday, October 24, 2019

திருச்சேறை!

# (15) தினம் ஒரு திவ்ய
             தேசம்!
      

கும்பகோணத்தில்
இருந்து திருவாரூர்
செல்லும் வழியில்
நாச்சியார் கோவில்
தாண்டி, இந்த க்ஷேத்ரம்
உள்ளது.

முன்பு ஒரு காலத்திலே,
பிரளயத்தில் இருந்து
வேதங்களை காப்பாற்ற
பிரும்மன் ஒரு கடம் செய்து அதில் வைக்க
எல்லா இடங்களிலும்
மண் எடுத்து செய்ய
முயன்றார்.

எல்லாம் உடைந்து போக, திருமாலை அவர்
வேண்ட, திரு மால்,
இந்த ஸார க்ஷேத்ரம்
தனக்கு உகப்பானது!
அதில் செய்! என ஆணையிட, 

இந்த திருச்சேறையில்,
கடம் செய்து வேதங்கள்
காத்தார் பிரும்மன்.
அவர் மண் எடுத்த இடம்
ஸார புஷ்கரணி ஆயிற்று.

ஒரு சமயம் விந்திய
பர்வதம் அடியிலே,
கங்கை,யமுனை,சிந்து,
சரஸ்வதி,காவேரி,
கோதாவரி ஆகிய ஏழு
நதிகள் விளையாடி
கொண்டிருந்தார்கள்.

அவ் வழியாக போன
கந்தர்வன் அவர்களை
வணங்க, யாரை வணங்கினாய் என
ஏழு நதிகளும் வினவ,
கந்தர்வன் உங்களில்
யார் பெரியவரோ அவருக்கு என்றான்

யார் பெரியவர் என
அவர்களுக்குள் கேள்வி
எழ, ஐவர் விலக,
காவிரி, கங்கை இருவரும் வாதம் செய்ய
பிரும்மனிடம் விடை
கேட்டு சென்றனர்.

பிரும்மன் முன்பு
எம்பெருமான் திருவடி
சத்தியலோகம் வரை
நீண்டபொழுது தான்
செய்த திருமஞ்சனம்
கங்கையாய் மாறியது.

அதனாலவிமானம்
 தான்
பெரியவள் என தீர்ப்பு
கூற, வருத்தமுற்ற
காவிரி, தனக்கும் அந்த
சிறப்பு வேண்டும் என
கேட்க, அது திருமாலால்
மட்டுமே முடியும் என்று
பிரும்மன் சொன்னார்.

காவிரி சார புஷ்கரணி
வந்து, பெருமானை நோக்கி, கடுந்தவம்
செய்ய, பெருமான்
ஐந்து தேவிகளுடன்
காவேரிக்கு காட்சி தர,

திரேதா யுகத்திலே
உன்னிடத்திலே நான்
தங்குவேன் என்றார்.
அது மாதிரியே, அவர்
இராமாவதாரம் முடிந்து
விபீஷணன் எம்பெருமானை தன்
இலங்கைக்கு கொண்டு
செல்கையிலே அரங்க
நாதனாக,காவிரியில்
பள்ளிக்கொண்டார்.

மூலவர் ஸாரநாதன்
தாயார் ஸார நாயகி
தீர்த்தம் ஸார புஷ்கரணி.
விமானம் சார விமானம்

108 க்ஷேத்திரங்களில்,
தனது ஐந்து மனைவிகளுடன்
(ஸ்ரீதேவி, பூமா தேவி,
நீளா தேவி,மகா லட்சுமி,
ஸார நாயகி)காட்சி
தருவது வேறு எங்கும்
இல்லை.

மூலவர்,தனது வலது
கையில் பத்மம்,பரம
பதத்தில் அவர் வைத்திருப்பது போல.

கங்கையிற் புனிதமான
காவேரி என ஆழ்வார்
பாடியுள்ளார்.

திரு மங்கை ஆழ்வார்
13 பாக்கள் பாடியுள்ளார்

குளிர்ச்சி பொருந்திய
இந்த திருச்சேறை சென்று நாம் பெருமாள்
அனுக்கிரஹம் பெற்று
உய்வோம்!
ரமா ராஜகோபாலன்!

No comments:

Post a Comment