Thursday, October 24, 2019

திருப்பதி தரிசனம் தனியாக செல்பவர்கள் கவனத்திற்கு..

திருப்பதி தரிசனம் தனியாக செல்பவர்கள் கவனத்திற்கு..

 நேற்றுதான் முடிவு செய்தேன்,புரட்டாசி கூட்டத்தை தவிர்க்க,தரிசன டிக்கெட் கிடைக்கவில்லை

சரி என்று google செய்த போது நடந்துவரும் பக்தர்களுக்கு தினமும்  5000+5000 தரிசன சீட்டுக்கள் வழங்குவதை அறிந்தேன்..

#திருப்பதி இறங்கியவுடன் மதிய உணவு முடித்து ஸ்ரீ வாரி மெட்டு எனும் நடைப்பாதையை 2.30 மணிக்கு அடைந்தேன்

பலமுறை திருப்பதி சென்று இருக்கிறேன் ,அலிபிரி வழியாக 4 மணி நேரம் நடந்து இருக்கிறேன் 3500 படி என்று நினைக்கிறேன், இந்த முறை போலாம் என்று முடிவு செய்த உடன் கூகுலில் தேடினேன் ,மேலே செல்வதற்கு இரண்டு வழி இருக்கிறது என்று வந்தது ஆச்சர்யம் அடைந்தேன்

சரி இந்த முறை. ஸ்ரீ வாரி மெட்டு பாதை வழியாக செல்வதாக முடிவு செய்தேன்,

திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து கூட்டத்தை பொறுத்து 30 நிமிடத்துக்கு ஒரு பேருந்து செல்கிறது,25 ரூபாய் கட்டணம்

2.30 மணிக்கு இந்த பாதை துவங்கும் இடத்துக்கு சென்று அடைந்தேன் ,5 கார்கள் மட்டும் அங்கே இருந்தது,மற்றபடி பஸ்சில் நாங்க 35 பேர்,கொண்டு போயிருந்த கைப்பையை அங்கே இருக்கும் இடத்தில் ஒப்படைத்து பயணம் 2.45 மணிக்கு தொடங்கினேன்

மொத்தம் 2388 படிகள் மட்டுமே சரியாக,அலிபிரி வழிபோல இல்லாமல் இது மொத்தமும் படி மட்டுமே , படி எற ஆரம்பித்தவுடன் ஒரு அட்டை கொடுக்கப்பட்டது,நான் 3000 ஆளாக கூட இல்லை,இன்னும்ப2000 பேருக்கு டோக்கன் பாக்கி இருந்தது,சரியாய் 5 மணிக்கு அதாவது 2.15 மணி நேரத்தில் மலையை அடைந்தேன்,இடையில் இரண்டு இடத்தில மலை ஏறும்போது கொடுக்கப்பட்ட டோகெனில் சீல் வாங்க வேண்டும் ,இரண்டாவது இடத்தில் 8 மணிக்கு தரிசனம் என்று டோக்கன் கொடுத்தார்கள

குறிப்பு: இந்த பாதை வன விலங்குகள் நடமாட்டம் காரணமாக. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி,8 மணிக்குள் எதோ ஒரு முனையை எட்டி இருக்க வேண்டும்,வழியில் நிறைய தேவஸ்தான பாதுகாப்பு ஆட்கள் இருக்கிறார்கள்,தண்ணீர் வசதி நிறைய உண்டு,ஒரு கடை கூட கிடையாது,அதனால் முன்னமே நமக்கு வேண்டியதை எடுத்து கொள்ள வேண்டும்,மொத்தம் 2.2 km மட்டுமே,(அலிபிரி 14 km) பாதை முழுவதும் பசுமை,முழுவதும் கூரை போடப்பட்டு இருக்கிறது

மேல போனவுடன் கைப்பையை எடுத்து கொண்டு,வியர்வையால் முழுவதும் நனைந்து போன சட்டையை மாற்ற நினைத்தேன்,நிறைய இருக்கும் சுத்தமான குளியல் அறையில்பகுளித்து விட்டு உடை மாற்றியபோது மணி 6.15,சரி என்று தரிசன வரிசைக்கு சென்றால் 8 மணி தரிசனதுக்கும் உள்ளே செல்ல அனுமதி, உள்ளே செல்லும்போதே நமது உடமைகள் அனைத்தும் செல் உட்பட மீண்டும் ஒப்படைத்து விட்டு, படி ஏறி வந்ததால்  70 ரூபாய்க்கு 5 லட்டுக்கான டோக்கன் வாங்கி கொண்டு நகர ஆரம்பித்தேன்

இதுவரை இந்த மாதிரி தரிசனம் போனதே இல்லை 

ஒரு பெரிய ஹாலில் கொண்டு போய் அடைந்தார்கள்,ஆக மாட்டி டோம் போலுள்ளது என்று நினைட்கபோது மணி 7..

உடனே அனைவருக்கும் சூடான பால் கொடுக்கப்பட்டது,கூடவே சாம்பார் சாதம்,அனைவரும் பறந்து வாங்கி உண்டு முடிட்கபோது மணி 7.45,

தரிசனத்துக்கு வாசல் திறக்கப்பட்டது,அருமையான தரிசனம் முடித்து 9 மணிக்கு வெளியே  தள்ளப்பட்டோம்🤪

லட்டு வாங்கிக்கொண்டு ,மீண்டும் கைப்பையை வாங்கிக்கொண்டு வெளியே வந்தால் பஸ் ரெடியாக இருந்தது ,மணி 10

10.40 க்கு திருப்பதி பஸ் stand, வரும்போதே பஸ் ஏறி உக்கார்த்துவிட்டு இதை அனைவருக்கும் பகிர நினைத்தேன்

மற்றவர்களும் இந்த ஸ்ரீ வாரி மெட்டு பாதையை உபயோகிலாம்

அனைத்து இடங்களிலும் சரியான வழி காட்டும் ஊழியர்கள்,அருமையான சிரமம் இல்லாத வழிமுறைகள்!!

வெல்டன்  TTD!!!!!

From fb...

No comments:

Post a Comment