நவ திருப்பதிகள் 1. ஸ்ரீவைகுண்டம்
(சூரிய கிரக தோஷ நிவர்த்தி ) தரிசனம் பதிவு செய்துள்ளோம்
(சூரிய கிரக தோஷ நிவர்த்தி ) தரிசனம் பதிவு செய்துள்ளோம்
நவ திருப்பதிகள் என அழைக்கப்படும் அந்த தலங்கள் 1.ஸ்ரீவைகுண்டம், 2-நத்தம், 3. திருப்புளியங்குடி, 4.தொலைவில்லி மங்கலம், 5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது). 6.பெருங்குளம், 7. தென்திருப்பேரை, 8. திருக்கோளூர், 9. ஆழ்வார் திருநகரி ஆகிய நவதிருப்பதிகளின் பெருமாள் சேவை கண்டு வாழ்வில் வளம் பெறுவோம் ஓம் நமோ நாராயணா !
நவகிரக தோஷம் நீக்கும் நவ திருப்பதி கோவில்கள்
ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி நதி கரையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிரக தோஷம் நீக்கக்கூடியதாகும்.
நவகிரக தோஷம் நீக்கும் நவ திருப்பதி கோவில்கள் தரிசிப்பது எப்படி?
நவகிரகங்களில் தலைமை பதவி வகிக்கும் சூரியன் மகா விஷ்ணுவே ஆவார். அவரை சூரிய நாராயணன் என்றும் கூறுகின்றனர். ஈஸ்வரப்பட்டம் பெற்ற சனி பகவானைத் தவிர மற்ற கோள்கலெல்லாம் நெற்றியில் நாமம் திருமண் எனும் வைணவச் சின்னத்தை அணிந்திருப்பதில் இருந்து நவக்கிரகங்கள் வைணவத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதை உணர்கிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஆலயங்களை திருவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி (தேவர்பிரான்) இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனார்) பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய வரிசைப்படி தரிசிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் இந்த வரிசைப்படியே தலங்களுக்கு செல்கின்றன.
ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி நதி கரையில் அமைந்துள்ளன. நவ திருப்பதிகள் என அழைக்கப்படும் அந்த தலங்கள்
1.ஸ்ரீவைகுண்டம்,
2-நத்தம்,
3. திருப்புளியங்குடி,
4.தொலைவில்லி மங்கலம்,
5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது).
6.பெருங்குளம்,
7. தென்திருப்பேரை,
8. திருக்கோளூர்,
9. ஆழ்வார் திருநகரி. நவக்கிரக தோஷம் போக்கும் இந்த தலங்களில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வழிபாடு நடத்துவது சிறப்பு வாய்ந்ததாகும்.
ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிரக தோஷம் நீக்கக்கூடியதாகும். அந்த கோவில்களின் சிறப்புகளை காண்போம்.
1. ஸ்ரீவைகுண்டம்
நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீவைகுண் டத்தில் வைகுண்ட நாதன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒரு காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் இருந்து படைப்புத் தொழில் குறித்த ரகசியம் அடங்கிய ஏடுகளை ஒளித்து வைத்துக்கொண்டாராம். அந்த ஏடுகளை மீட்க தாமிரபரணி ஆற்றங்கரையில் விஷ்ணுவை நோக்கி பிரம்மா தவம் இருந்தார்.
கடும் தவம் செய்துகொண்டிருந்த பிரம்மாவுக்கு திருமால் நேரில் காட்சியளித்து படைப்புத் தொழில் குறித்த ரகசியத்தை சோமுகாசுரனிடமிருந்து மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க வேண்டும் என்று பிரம்மா வேண்ட திருமாலும் அப்படியே ஆகட்டும் என வைகுண்டநாதனாக நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காலதூஷகன் எனும் திருடன் திருடிய பொருளில் பாதியை ஸ்ரீவைகுண்டம் பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தி வந்துள்ளான். ஒருநாள் திருடனின் கூட்டத்தினர் திருடச் சென்ற போது பிடிபட்டனர். உடனே திருடன் வைகுண்டநாதனிடம் சரணடைந்து தன்னை காக்க வேண்டினான். அதன்பொருட்டு வைகுண்டநாதனே அரண் மனைக்கு வந்து அரசனுக்கு தனது சுயரூபத்தைக்காட்டி, தர்மம் காக்க உன்னை தர்மத்தில் ஈடுபடச்செய்யவே நான் வந்தேன் என்று கூற, அரசனும் தனக்கு கிடைத்த பாக்கியம் மக்களுக்கும் கிடைக்க உற்சவமூர்த்தியை கள்ளபிரான் என்று கூறி வழிபடதொடங்கினான். ஸ்ரீவைகுண்டத்தில் மூலவர் வைகுண்டநாதனாகவும், உற்சவர் கள்ளபிரானாகவும் எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இது சூரிய கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
ஓம் நமோ நாராயணா !
நன்றி:
முக நூல் பதிவு
அன்பன்
ஸ்ரீனிவாசன், திருவள்ளுர்.
No comments:
Post a Comment