Thursday, October 24, 2019

திரு நறையூர் எனும் நாச்சியார் கோவில்.

# (14) தினம் ஒரு திவ்ய  தேசம்!

திரு நறையூர் எனும்நாச்சியார் கோவில்.

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில்
ஐந்து கி்.மீ தொலைவில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது.

திரு+ நறையூர்  என்பது, இலக்குமிக்கு, தேன் போல இனிக்கும் இடம் என பொருள் கொள்வர்.

மேதாவி என்ற முனிவர்,
திருமகள் தனக்கு மகள்
என வரவேணும் என
தவம் செய்ய, மனம் அதனால் கனிந்து,திரு
மகள்,பங்குனி உத்திரம்
அன்று, வஞ்சுள மரம்
அடியிலே, அவதரித்து
நின்றாள் ஒரு சிறிய 
பெண் குழந்தையாக.

முனிவர் வஞ்சுள வல்லி
என பெயரிட்டு வளர்த்து
வந்தார்.
பெருமான் தேவியை
தேடி,ஐந்து நிலைகளில்
( சங்கர்ஷணன்,
பிரத்யுமனன்,
அனிருத்தன்,
புருஷோத்தமன்,
வாசுதேவன்)
என்ற தனது வியூக
நிலையில் தனது சகல
சக்தியும் அளித்து
மணந்து கொண்டார்
என்பது வரலாறு.

கிருஷ்ணாரண்ய
க்ஷேத்ரங்களில் ஒன்று.
1) திரு நறையூர்.
2) திருச்சேரை.
3) திருக்கண்ண மங்கை
4)திருக்கண்ணபுரம்.
5)திருக்கண்ணங்குடி.
இவை ஐந்தும் கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்கள் என்பர்.

மூலவர். திரு நறையூர்
நம்பி,ஸ்ரீனிவாசன்,
வ்யூக வாசுதேவன்.
தாயார் வஞ்சுள வல்லி
நம்பிக்கை நாச்சியார்.

ஸ்ரீ தேவிக்கு பெருமை ஸ்ரீரங்கம்.
பூமா தேவிக்கு பெருமை ஸ்ரீ வில்லி புத்தூர்.
நீளா தேவிக்கு பெருமை நாச்சியார் கோவில் என்ற உருவாகும்.
முக்தி தர பன்னிரண்டு ஸ்தலங்கள் முக்கியம் என்பர் இது அதிலே ஒன்று.

கருடாழ்வாருக்கு தனி சிறப்பு!  கல் கருட சேவை இங்கு பிரசித்தம்!

திரு மங்கை ஆழ்வார்
நூறு பாசுரங்களுக்கும்
மேலே இவர் மீது பாடி
உள்ளார் தன்னுடைய
பெரிய திரு மொழியில்.

தவிர, அவர் தனது
திருநெடுந்தாண்டகம்,
பெரிய திரு மடல், 
சிறிய திரு மடல்,
ஆகியவற்றிலே
மங்களாசாசனம் செய்து
உள்ளார்.

 இந்த பெருமானே திரு மங்கை ஆழ்வாருக்கு,
பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்து அவர்
ஆச்சாரியரானார்.

சோழ மன்னன் கப்பம்
கட்ட இருந்த தொகை
ததியாரதனம் செய்து
நாச்சியார் கோவிலில்
மூன்று நாட்கள் சிறை
தண்டனை பெற்றார்.

பெருமாளால் வேக வதி
ஆற்றில் புதையலை
காண்பிக்க பெற்று
கப்பம் கட்டினார்.

இந்த பெருமான் மீது
இரண்டுமடல் விடுத்தார்
அரங்கனுக்கு மதில்
கட்டினார்.

ஆழ்வீர் திருமடல் 
பிரபந்தங்களை இங்கு
நமக்கு அருளி செய்தல்
ஆகாதோ என அரங்கன்
கேட்டதாகவும்,
மதில் இங்கே!
மடல் அங்கே! என
ஆழ்வார் பதில் சொன்னதாக வரலாறு.

நம்பி என்றால் பூரணர்
என்று பொருள்.
திருக்குறுங்குடி நம்பி,
திரு நறையூர் நம்பியும்
புகழ் பெற்றவர்கள்.

இப்பெருமான் மீது
மோகம் கொண்டு மடல்
விடுக்கிறார் ஆழ்வார்
என்றால்,பெருமான்
எத்தனை அழகு?என
யோசியுங்கள்!

(மடலூர்தல் என்றால்
சங்க இலக்கியங்களில்
காதலன்,எருக்கம்பூ
 மாலையணிந்து,தலை
விரித்து ,காதலி உருவம்
வரைந்த ஒரு கொடியை
எடுத்துக் கொண்டு,
பனை மடலால் குதிரை
செய்து உலகறிய அதில்
வருதல்!

இப்பெருமானின்
சிறப்புக்களை சொல்லி
கொண்டே போகலாம்!
நேரிலே தரிசித்தால்
அவர் உங்களை மயங்க
வைத்து விடுவார்! 
அனைவரும் அவரை
தரிசிக்க அருளட்டும்.
ரமா ராஜகோபாலன்!

No comments:

Post a Comment