Thursday, October 24, 2019

திருக்கண்ணங் குடி!

# (18) தினம் ஒரு திவ்ய  தேசம்.
திருக்கண்ணங் குடி!

நாகப் பட்டினத்தில்
இருந்து திருவாரூர்
செல்லும் பேருந்து வழி,
ஆழியூர் என்ற இடத்தில்
இறங்கி,தெற்கே ஒரு
கி.மீ தூரத்திலே உள்ளது.

கிருஷ்ண பக்தியில்
வசிஷ்டர் மிக சிறந்தவர்
அவர் வெண்ணையில் 
கிருஷ்ண விக்ரகம் செய்து, தன் பக்தியால்
அதனை, உருகாமல்
கட்டி வைத்து அதனை வழிப்படுவது வழக்கம்.

கிருஷ்ணன் ஒரு நாள்,
அந்த வெண்ணையை
விழுங்கி விட்டு ஓட,
வசிஷ்டர் அவரை துரத்தி ஓடினார்.

இந்த தலம் கிருஷ்ணா
ஆரண்யம் ஆதலால்,
இங்கு நிறைய மகிழ
மரத்தடியில், எண்ணற்ற
ரிஷிகள் பெருமானை
எண்ணி, தவமியற்றி
கொண்டிருக்க, அவர்கள் ஞானதிருஷ்டி
கொண்டு, கண்ணனை
உணர்ந்தனர்.

அதனால், பக்தி எனும்
 பாசக கயிறால் அவன்
ஒட்டத்தை நிறுத்தினர்.
வசிஷ்டர் தன்னை
விரட்டி வருவதாகவும்,
வேண்டிய வரம் உடனே
கேளுங்கள் என நம்
பெருமான் கூற,

இங்கேயே நின்று,
எப்பொழுதும்,காட்சி
கொடுக்க வேண்டும்
அனைவருக்கும் என
வேண்டினர்.

அது படியே,சரியென
கூற, வசிஷ்டரும் ஓடி
வந்து, அவரது பாதார
விந்தங்களை பற்ற,
உடனே,கோபுரங்கள்,
விமானங்கள் தோன்றி
தேவர்களும் வந்தங்கே,
பிரும்மோத்ஸவம் நடத்தி வைத்தனராம்.

கண்ணன் கட்டுண்டு
நின்ற படியால் இது
கண்ணங்குடி ஆயிற்று.

மூலவர் லோக நாதன்.
நீல மேக வண்ணன்
( சியாமள மேனி)
தாயார் லோக நாயகி.
உற்சவர் இடது கையை
இடுப்பில் கொண்டு
( கண்ணன் போல
தோற்றம்)
தீர்த்தம் சிரவண புஷ்கரணி( பெயரை
கேட்ட மாத்திரத்திலே
சகல பாவங்களை
தீர்ப்பது)
ஸ்தல விருட்சம்-மகிழ
மரம்.
தாயார் ஸன்னதியில்
மூலவரும், உற்சவரும்,
ஒரே ஜாடையில் உள்ளனர்.

கருடாழ்வார் தனது
கைகளை குவித்து
இல்லாமல், கட்டிக்கொண்டு காட்சி
தருவது,வைகுண்டம்
தனிலே எழுந்தருளி
இருப்பது போலவாகும்.

திரு மங்கை ஆழ்வார்
பத்து பாசுரங்களில்
மங்களாசாசனம் 
செய்து உள்ளார்.

திரு மங்கை ஆழ்வார்
சம்பந்தப்பட்ட
காயாமகிழ்,
உறங்காபுளி,
ஊராக்கிணறு,
தோல் வழக்கு
திருக்கண்ணங்குடி
என்பது இவ்வூரை பற்றி
பழமொழியாகும்.

அரங்கனுக்கு, மதில்
கட்ட, தங்கம் புத்த சிலை
யிடம் பெற்று, நிலத்தில்
மறைத்து புளிய மரம்
காவல் வைத்து உறங்கி,

நில சொந்த காரனுடன்
தீராத வழக்கு ஆகி,
தவணை ஒரு நாள்
கேட்டு, இரவு, தங்கம்
எடுத்துக்கொண்டு,
ஸ்ரீரங்கம் போய் விட்டார்.
மகிழ மரத்தடியில்
தூங்கியவருக்கு வழி
போக்கனாய், நீரும்,
உணவையும் பெருமான்
கொடுத்தாராம்.
புளிய மரம் தங்கத்துக்கு
காவல் இருந்ததால்
"உறங்கா புளியே" வாழ்க
என வாழ்த்தினார்.
வழக்கு தீர்க்காமல்
ஓடி விட்டதால்,
" தோலா வழக்கு" ஆனது.
தாகத்திற்கு தண்ணீர்
ஒரு பெண் தராததால்
"ஊறாக்கிணறு" என
சபித்து விட்டார்.
" காயா மகிழ்" மரத்தின்
கீழே, நீரும், உணவும்,
பெருமான் மூலம் அவருக்கு கிடைத்ததால்
மரத்தை வாழ்த்தினார்.

நடு வழியில் பெருமான்,
வழிப்போக்கனாக வந்து,கண்ணங்குடி
பெருமானாக, சங்கு,
சக்ரத்துடன் காட்சி
கொடுத்தாராம்.

இத்தனை பெருமைகள்
கொண்ட நம்பெருமான்
கண்ணங்குடியில், காட்சி தரும் கண்ணன்
திருவடியை சென்று
சேவித்து மகிழ்வோம்.
ரமா ராஜகோபாலன்.

No comments:

Post a Comment