Tuesday, October 22, 2019

வாழைக்காய் பொரியல்

வாழைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள் 

வாழைக்காய்- 1
சாம்பார்பொடி- 2 டீஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப 
காயம்- சிறிதளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை விளக்கம் 

முதலில் வாழைக்காயை நன்றாக அலம்பி, தோலைச் சீவி தனியே வைத்துக் கொள்ளவும்.பிடித்த வடிவத்தில் வாழைக்காயைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்யிட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளைஉளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை போடவும். கடுகு வெடித்தவுடன் சீரகத்தைப் போட்டு வதக்கி விடவும்.
வாழைக்காய் துண்டுகளை தாளித்தவற்றுடன் போட்டு உப்பு போட்டு 1/4 டம்ளர் நீரிட்டு மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். பாதி வெந்ததும் சாம்பார்பொடி,பெருங்காயம் சேர்த்து கிளறி வரவும். அடிப்பிடிக்காமல் இருக்க எண்ணெய் இட்டு வரவும்.வறுவலாகத் தயாரானதும் அடுப்பை அணைக்கவும்.இப்போது சுவையான வாழைக்காய் பொரியல் தயார்.

வாழைக்காய் பருப்பு பொரியல் 
தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
வாழைக்காய் ஒன்று 
பாசிபருப்பு கால் கப் 
பெரிய வெங்காயம் ஒன்று 
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் 5 
உப்பு தேவைக்கேற்ப 
இஞ்சி விழுது1 டீஸ்பு ன் 
கொத்தமல்லி 1 கைப்பிடி அளவு 
தாளிக்க :
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப 

செய்முறை :

 வாழைக்காயை துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

 வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 

 வெங்காயம், இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். 

 அதனுடன் வாழைக்காய் சேர்த்து பிசுபிசுப்பு போகும் வரை வதக்கவும். 

 பருப்பு, உப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 

 வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். வேண்டுமானால் தேங்காய் துருவல் சேர்க்கலாம். 


 சுவையான வாழைக்காய் பருப்பு பொரியல் தயார்.

வாழைத்தண்டு பொரியல்

தேவையான பொருட்கள்:

பொருள் - அளவு
நறுக்கிய வாழைத்தண்டு1 கப்
பெரிய வெங்காயம்1
பச்சை மிளகாய்3
கறிவேப்பிலை 1 கொத்து
கடுகுகால் டீஸ்பூன்
எண்ணெய்தேவைக்கேற்ப
உப்புதேவைக்கேற்ப
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
தேங்காய் துருவல்கால் கப்
செய்முறை :

  வாழைத்தண்டை பொடியாக நறுக்கி முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுத்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேக வைத்த வாழைத்தண்டு, சிறிது உப்பு சேர்க்கவும்.

  தண்ணீர் வற்றும் சமயத்தில் மஞ்சள் தூள் சேர்க்கவும். வாழைத்தண்டு வெந்து தண்ணீர் முற்றிலும் வற்றியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

  சுவையான சத்தான வாழைத்தண்டு பொரியல் ரெடி.


இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம்.


No comments:

Post a Comment