Thursday, October 24, 2019

திருக்கண்ண மங்கை!

# (16) தினம் ஒரு திவ்ய
            தேசம்.

திருக்கண்ண மங்கை!

இதுவும் திருவாரூர் 
போகும் வழியிலே
திருச்சேறை தாண்டியே,
அமைந்துள்ளது!

பாற்கடல் கடைந்த
பொழுது தோன்றிய
இலக்குமி,திருமாலை
அடைய இத்தலத்தில்
வந்து தவம் இருந்தாள்.

முப்பத்து முக்கோடி
தேவர்கள் புடைசூழ
பெருமான் திருமகளை
இங்கு வந்து மணந்து
கொண்டார்.

இலக்குமி தவம் இருந்த
இடம் இலக்குமி வனம்.
திருமணம் நடந்ததால்,
கிருஷ்ண மங்கள
க்ஷேத்திரம்.
ஒரு ஸ்தலத்திற்கு இருக்க வேண்டிய ஏழு
வகை இலட்சணங்கள்
இங்கு இருப்பதால்,
ஸப்தாம்ருத க்ஷேத்திரம்
என்றும் பெயர்.

மூலவர் பக்தவத்சல
பெருமாள்.( பத்ராவி
பெருமாள்) மிகவும்
பிருமாண்டமான பேரழகு பொருந்திய
திரு உருவம்.
தாயார் கண்ணமங்கை
நாயகி.
உற்சவர் அபிஷேகவல்லி.

 இது கிருஷ்ணாரண்ய 
க்ஷேத்திரம்.
விமானம், ஆரண்யம்,
மண்டபம்,தீர்த்தம், நதி,
க்ஷேத்திரம், நகரம், என
ஏழு லட்சணங்கள் கொண்டு இது,
ஸப்த புண்ய க்ஷேத்திரம், (ஸப்தாம்ருத க்ஷேத்ரம்)
என சிறப்பிக்கபடுகிறது

 திருமணத்தை காண 
வந்த தேவர்கள் ,
தேனிக்களாக உருவம்
கொண்டு, இன்றும்
சேவித்து மகிழ்கிறார்கள்.
இன்றும் தாயார் ஸன்னதி வடபுறம் உள்ள மதிலின் ஒரு
சாளரத்திற்கு அருகே
தேன்கூடு, பல நூறு
ஆண்டுகளாக,உள்ளது.

ஒரு இரவாவது இங்கு
வாசம் செய்தால், மோட்சம் கிட்டும் என்பது
ஐதீகம்!
பக்தர்+ ஆவி- பத்தராவி,
வேகமாக வந்து அருள்
செய்பவர்!

திரு மங்கை ஆழ்வார்
14 பாடல்கள் மங்களா
சாசனம்.
சந்திரனின் சாபம் இங்கு வந்து தீர்ந்தது.

தர்சன புஷ்கரணி நீரால்
பெருமான் கைகளால்,
பிராட்டிக்கு, பட்ட மகிஷி
என அபிஷேகம் செய்ய
பட்டதால் பிராட்டிக்கு
அபிஷேக வல்லி என்ற
திரு நாமம்

 என் கவியின் பொருள்
விரும்பினால் நீயும்
கற்கலாம் என
ஆழ்வார் கண்ணா! என
விளித்து, பெருமானிடம்
கூற,

பெருமாள், கண்ணன்
உதித்த, ஆவணி ரோகிணியான அதே
விதமாய் 
பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தார்!
ஆழ்வாரும் அவரது
நட்சத்திரமான
கார்த்திகை மாதம்
கார்த்திகை நட்சத்திரம்
நம்பிள்ளையாக பிறந்து
ஆசிரியராக கற்று
கொடுத்தாராம்.

பக்தனான ஆழ்வார்,
விரும்பினால், நீயும்
கற்கலாம் என்றதற்கு,
உகந்து கற்க வந்த
இந்த பெருமானின்
கருணையை என்ன
என்பது?
அந்த கருணையை
நம் மீதும் பொழிய நாம்
அவரை வேண்டுவோம்.
ரமா ராஜகோபாலன்.

No comments:

Post a Comment