நவ திருப்பதியின் 2-வது திருப்பதி திருவரகுணமங்கை நத்தத்தில் உள்ளது.வேதவிக்கு காட்சி கொடுத்த தலம்
இது சந்திரகிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம். புரட்டாசி சனிக்கிழமை இன்று 28/9/2019 நவ திருப்பதிகள் 2 நத்தம் (சந்திரகிரக தோஷ நிவர்த்தி ) தரிசனம் பதிவு செய்துள்ளோம்
நவ திருப்பதிகள் என அழைக்கப்படும் அந்த தலங்கள் 1.ஸ்ரீவைகுண்டம், 2-நத்தம், 3. திருப்புளியங்குடி, 4.தொலைவில்லி மங்கலம், 5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது). 6.பெருங்குளம், 7. தென்திருப்பேரை, 8. திருக்கோளூர், 9. ஆழ்வார் திருநகரி ஆகிய நவதிருப்பதிகளின் பெருமாள் சேவை கண்டு வாழ்வில் வளம் பெறுவோம் ஓம் நமோ நாராயணா !
2. வேதவிக்கு காட்சி கொடுத்த தலம் நவ திருப்பதியின் 2-வது திருப்பதி நத்தத்தில் உள்ளது. இது சந்திரகிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
நவ திருப்பதியின் 2-வது திருப்பதி திருவரகுணமங்கை நத்தத்தில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவரகுணமங்கை எனப்படும் நத்தத்தில், மூலவர் விஜயாசன பெருமாள் ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலத்தில் தாயார்கள் வரகுண வல்லித் தாயர், வரகுண மங்கைத் தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இது சந்திரகிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
திருவரகுணமங்கையில் வேதவி என்பவர் தன் மாதா, பிதா, குரு ஆகியோருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆசன மந்திரத்தை ஜெபித்து கடும் தவம் புரிந்தார். அப்போது திருமால் அங்கு தோன்றி வேதவிக்கு காட்சியளிதார். திருமாலின் அருள் பெற்று வேதவி பரம பதம் அடைந்தார்.
ஆசன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் விஜயாசனர் என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானது. இத்திருப்பதியில் உயிர் நீத்தால் மோட்சம் கிட்டும் என ரோமேச முனிவர் கூறியுள்ளார். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
ஓம் நமோ நாராயணா !
ஓம் நமோ நாராயணா !
நன்றி:
முக நூல் பதிவு
அன்பன்
ஸ்ரீனிவாசன், திருவள்ளுர்.
No comments:
Post a Comment