ஆயிரம் கதை சொல்லும் திண்ணை
எங்கடா அந்த கெழத்தைக் காணும்
காலையில்
ஆறு மணிக்கு எழுந்தவுடன்
(தன் அம்மாவை)
பாட்டியைக் காணவில்லை என்றால்
அப்பாவின் குரல் கோபத்துடன்
அலறும்
வீடே கிடுகிடுக்கும்
காணவில்லை என்று
அப்பா சொன்னது
ஜெண்பகம் பாட்டியை
காலையில் எழுந்தவுடன்
ஆத்து மனிதர்கள் எல்லாரும்
கண்ணில் பட வேண்டும்
இல்லையேல் டென்ஷன்தான்
(இது ஒரு மாதிரியான கணக்கெடுப்பு)
இன்னைக்கு அமாவாசை
அம்மா காவேரி ஸ்நானம் பண்ணப்
போயிருக்கா என்று அம்மா மெதுவாகச் சொல்வாள்
ராஜு
அவன்கிட்ட சொல்லாதே
கத்துவான்
நாளைக்கு கார்த்தால
காவேரிக்கு சென்று
ஸ்நானம் செய்து வருகிறேன்
என்று பாட்டி
முதல் நாளே அம்மாவிடம்
சொல்லிவிடுவாள்
அதிகாலையில் எழுந்து
க்ஷேத்ரபாலபுரம் காவேரிக்கு
தீர்த்தாமாடச் சென்றுவிடுவாள்
விசேஷ தினம் என்றால்
புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் என்ற சிந்தனை கொண்டவள் பாட்டி
ஸ்நானம் செய்யும்போது
ஜெகத்தரக்ஷஹா
கங்கா காயத்ரி காவேரி கோவிந்த
என்று சொல்லி தீர்த்தாமாடுவாள்
போகும்போது
மாற்றுத் துணி
ஸ்ரீசூர்ணம்
கையில் ஒரு கொளஹாத்ரம்
எல்லாம் எடுத்துச் செல்வாள்
தீர்த்தாமாடி
நெத்திக்கு இட்டுக் கொண்டு
ஜெபம் செய்து
காவேரி புனித தீர்த்தத்தை
ஒரு வெள்ளி கொஸஹாத்திரத்தில்
துணியினால் போர்த்தி
ஆச்சாரமாகக் கொண்டு வருவாள்
போய்ட்டாளா
டேய் ராகவா
அத்தான் ஜில் நரஸிம்ஹனைக் கூப்பிடுறா
கெழம் போய்டுத்து
காரியம் பண்ணனும் என்பார்
எத்தனை
பஸ் போறது
வண்டி போறது
கெழம் அடிபட்டு சாகப் போறது
என்று
சத்தம் போட்டுவிட்டு
பாட்டி வரும் வரை
வாசலில்
கிழக்கே பார்த்து அமர்ந்து இருப்பார்
பாட்டி கொண்டு வந்த தீர்த்தத்தை
பெருமாள் சந்நிதியில் வைத்து
நமஸ்கரிப்பாள்
பின்
ராசா (எங்க அப்பா)
ராஜு
கோத
அம்பி
பாபு
செல்லா
இந்தாடா காவேரி தீர்த்தம்
என பரிவுடன் உத்ருணியால் தருவாள்
ராசா
இந்தாடா காவேரி தீர்த்தம்
என்று கொடுப்பாள்
பாட்டியைப் பார்த்த உடன் தான்
அப்பாவுக்கு நிம்மதி வரும்
அம்மா வந்துட்டியா
போய் தலைய தோட்டு
என்று பரிவுடன் சொல்வார்
நானும்
பாபுவும் விழுந்து விழுந்து சிரிப்போம்
ராகவா இன்னைக்கு
பூஷணிக்காய் கொழம்பு
கத்திரிக்காய் கறமது செய்
என்று பேச்சை மாற்றுவார்
அப்பா
அப்பா ராகவா எனக் கூப்பிட்டது
என் அம்மாவை
அந்த காலத்து மனிதர்களின்
பாசம்
ஆழமானது
நெருக்கமானது
ஆழ் மனதில் பாசத்தை வைத்து
நுணி நாவில் பொய் கோபத்தை வைத்து
வாழ்ந்த
கலப்படமில்லா மாசற்ற மனிதர்கள்
பாசம் என்பது
செயலில் தெரியும்
கோபம் என்பது
நாவில் தெரியும்
காலத்தால் மறைந்து போனவர்கள்
No comments:
Post a Comment