Monday, August 5, 2024

மசாலா பூரி

மசாலா பூரி செய்வது எப்படி. ...

தேவையான பொருட்கள்

1/2 cup காய்ந்த பட்டாணி
2 உருளைக்கிழங்கு
2 வெங்காயம்
1 1/4 தக்காளி
4 பச்சை மிளகாய்
2 பல் பூண்டு
2 சிறு துண்டு இஞ்சி
1/4 tsp மஞ்சள் தூள்
1 1/2 tsp காஷ்மீரி மிளகாய் தூள்
1/4 tsp ஆம்சூர் தூள்
1 1/4 tsp சாட் மசாலா
1/2 tsp சீரக தூள்
1/2 tsp மல்லி தூள்
1 tsp கரம் மசாலா
1/2 tsp பிளாக் சால்ட்
1/2 tsp இஞ்சி பொடி
2 tsp பொடித்த வெல்லம்
1 எலுமிச்சம் பழம்
10 விதைகளை நீக்கிய பேரிச்சம்பழம்
1 துண்டு புளி
தேவையான அளவு பூரி
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு ஓமப் பொடி
தேவையான அளவு கொத்தமல்லி
தேவையான அளவு புதினா
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு தண்ணீர்

செய்முறை :::::

காய்ந்த  பட்டாணியை நாம் செய்வதற்கு முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும்.

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, பூண்டு, இஞ்சி, மற்றும் பேரிச்சம் பழத்தை நறுக்கி, புளியை சுமார் அரை கப் அளவு தண்ணீரில் கரைத்து வைத்து, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது புளி  சட்னியை அரைக்க ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், ஒரு சிறு துண்டு இஞ்சி, ஒரு கை அளவு புதினா, ஒரு கை அளவு கொத்தமல்லி, நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழசார், கால் மேஜைகரண்டி அளவு உப்பு, மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து கொத்தமல்லி சட்னியை அரைக்க ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பேரிச்சம் பழத்தை போட்டு அதை நன்கு ஒரு கரண்டியின் மூலம் கிளறி விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.

ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் புளி தண்ணீரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் இரண்டு நிமிடம் வரை வேக விடவும்.

இரண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் அரை மேஜைகரண்டி சீரக தூள், அரை மேஜைகரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை மேஜைகரண்டி உப்பு, ப்ளாக் சால்ட், மல்லி தூள், பொடித்த வெல்லம், மற்றும் இஞ்சி பொடியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

பின்பு அதில் கொஞ்சம் தண்ணீரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் மூன்று நிமிடம் வரை வேக விடவும்.

மூன்று நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை கீழே இறக்கி வைத்து சற்று நேரம் ஆற விடவும்.

அது ஆறியதும் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் பச்சை  பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

பின்பு அதில் நம் ஊற வைத்திருக்கும் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை ரெண்டு துண்டாக நறுக்கி போட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் ஐந்தில் இருந்து ஆறு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

ஆறு விசில் வந்தவுடன் குக்கர் மூடியை திறந்து சுமார் ஒரு கிண்ணம் அளவு  பட்டாணியை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு குக்கரில் இருக்கும் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசித்து கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு சிறு துண்டு இஞ்சி, மற்றும் பூண்டை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வெங்காயம் சற்று பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் சற்று பொன்னிறமானதும் அடுப்பு அணைத்துவிட்டு அதை சற்று நேரம் ஆறவிடவும்.

அது ஆறியதும் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியில் இருந்து சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு சேர்த்து அதனுடன் சற்று தண்ணீர் சேர்த்து அதை நன்கு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

 எண்ணெய் சுட்டதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும்  மசாலா பேஸ்ட்டை ஊற்றி அதனுடன் ஒரு மேஜைகரண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு மேஜைகரண்டி அளவு சாட் மசாலா, மஞ்சள் தூள், கரம் மசாலா, மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

பின்பு அதில் சுமார் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் பத்து நிமிடம் வரை வேக விடவும்.

பத்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் மசித்து வைத்திருக்கும்  பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து அதனுடன் சுமார் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.

அடுத்து அதில் நாம் தனியாக எடுத்து வைத்திருக்கும் பட்டாணி மற்றும் கொஞ்சம் கொத்தமல்லியை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும்.

15 நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே வைக்கவும்.

இப்பொழுது ஒரு தட்டை எடுத்து அதில் உங்களுக்கு தேவையான அளவு பூரியை நொறுக்கி போட்டு அதன் மேலே நாம் செய்து வைத்திருக்கும் பட்டாணி மசாலாவை எடுத்து ஊற்றவும்.

பின்பு அதன் மேலே ஒரு சிட்டிகை அளவு காஷ்மீரி மிளகாய் தூள், ஆம்சூர் தூள், சாட் மசாலாவை தூவி அதன் மேலே நாம் செய்து வைத்திருக்கும் புளி  சட்னி, மற்றும் கொத்தமல்லி சட்னியை சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு எடுத்து ஊற்றவும்.

அடுத்து அதன் மேலே ஓமப் பொடி, நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, வெங்காயம், மற்றும் கொத்தமல்லியை போட்டு அதை சுட சுட பரிமாறவும்.

   *·.·´ பகிர்வு:·.·*

   *🌹மல்லிகா*🌹       

*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*

No comments:

Post a Comment