Monday, August 5, 2024

மைசூர் ரசம் பொடி

மைசூர் ரசம் பொடி செய்வது எப்படி ..

தேவையான பொருட்கள்

3/4 கப்தனியா
1/2 கப்து.பருப்பு
2 டேபிள் ஸ்பூன்மிளகு
3 டேபிள் ஸ்பூன்சீரகம்
25சி.மிளகாய்
ஒரு கைப்பிடிகருவேப்பிலை
2 டேபிள் ஸ்பூன்பெருங்காயத் தூள்
1டேபிள் ஸ்பூன்மஞ்சள் கிழங்கு(உடைத்தது)
1 டேபிள் ஸ்பூன்கல் உப்பு
1 டேபிள் ஸ்பூன்தே.எண்ணெய்
  

செய்முறை ::::

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், தே.எண்ணெய் காய்ந்ததும்,து.பருப்பை, நன்கு வறுத்து, தட்டில் ஆற விடவும்.

பிறகு தனியாவை வறுத்து சேர்க்கவும்.

அடுத்து கடுகை கருகாமல் வறுத்து சேர்க்கவும்.

பின், மிளகு, சீரகம்,வெந்தயத்தை,வறுத்து சேர்க்கவும்.

மிளகாய், உப்பை வறுத்து சேர்த்து, ஆறவிடவும்.

அடுப்பை சிம்மில் வைத்து,தனியாக, கருவேப்பிலை, உடைத்த மஞ்சளை, வறுத்து, ஆறவிடவும்.

அடுப்பை நிறுத்தி விட்டு, அதன் சூட்டிலேயே, பெருங்காயத் தூளை கருகாமல், வறுத்துக் கொள்ளவும்.

பெரிய மிக்ஸி ஜாரில், முதலில், வறுத்து ஆறின, மிளகாய்,உடைத்த மஞ்சள், உப்பை சேர்த்து அரைக்கவும்.

அடுத்து, தனியா, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.

கருவேப்பிலையை அரைக்கவும்.

கடைசியாக, வறுத்த, பெருங்காயத் தூளை சேர்த்து, ஒரு சுற்று சுற்றி,அரைக்கவும்.

அனைத்தையும் ஒன்று சேர கலந்துக் கொள்ளவும்......

   *·.·´ பகிர்வு:·.·*

   *🌹மல்லிகா*🌹       

*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*

No comments:

Post a Comment