அவியல் - Aviyal
தேவையான பொருட்கள்
அரைக்க
தாளிக்க
செய்முறை
1. கேரட்டை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காயையும் தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய் காம்பை நீக்கி பாதியாக நறுக்கி மீண்டும் நடுவில் நறுக்கவும்.
2. ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து 3/4 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
கேரட் சிறிது நிறம் மாறும் போது நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்.
3. காய்கறிகள் வேகும் போது தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
காய்கறிகள் வெந்ததும் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
4. பின் தயிர் சேர்த்து நன்கு கலந்து சீரகத்தின் பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கும் போது தேங்காய் எண்ணெய் விட்டு கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து மெதுவாக பிரட்டி இறக்கவும்.
வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து சூடான அவியலில் கலந்து மூடிவைக்கவும்.
இதில் தயிருக்கு பதிலாக ஒரு சிறிய துண்டு ஊறவைத்த புளியை தேங்காயோடு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். அல்லது காய்கறிகள் வெந்த பின் சிறிது நீளமாக நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
வெள்ளரிக்காய், சேனைக்கிழங்கு, வெள்ளை பூசணி, புடலங்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளும் சேர்க்கலாம்.
No comments:
Post a Comment