💐💐💐💐💐💐💐💐💐💐💐
வழங்கியவர்:
ஶ்ரீல பிரபுபாதாவின் சீடர்
தவத்திரு.தீரசாந்தகோஸ்வாமி
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
முன்னொரு காலத்தில் ஒரு மிகப்பெரிய
மன்னர் இருந்தார். அவர் தனது ஆட்சியை
அறம் வழுவாது ஆண்டு வந்தார். அவர் ஒரு
கலைபிரியராகவும் இருந்தார். தனது நாட்டில்
உள்ள பல்வேறு கலைஞர்களை வரவழைத்து
அவர்களுடைய கலைத் திறமையை பார்த்து
அதற்குண்டான வெகுமதிகளை அளித்து வருவது
அவரது வழக்கம்.
அரண்மனைக்கு வந்த 'ஓவியர்'
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
ஒருநாள் அந்த மன்னரைப் பார்க்க ஒரு ஓவியக்
கலைஞர் வந்தார் அவர் மன்னரைப் பார்த்து,
''அன்பார்ந்த மன்னரே! தங்களது அரண்மனையில்
ஒரு மிகப்பெரிய சுவரை காண்பியுங்கள். அதில்
நான் ஒரு அருமையான ஓவியத்தை வரைகின்
றேன். அந்த ஓவியம் இதுவரை தாங்கள் பார்த்து
ரசித்த ஓவியங்களை விட மிக அழகாக இருக்கும்.
இதை நான் உறுதியாகக் கூறுகின்றேன். எனக்கு
வாயப்பளியுங்கள்',
அந்தசமயத்தில் மன்னர், தனது அரண்மனையின்
பின்புறத்தில் ஒரு மிகப் பெரிய கலைக் கட்டிடம்
ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். அந்தக் கட்டிடம்
முழுக்க பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டு
வந்தது.
மன்னர் உடனே அந்த கலைக் கட்டிடத்தில் ஒரு
பெரிய பளிங்கு சுவரை இவருக்கு காண்பித்து,
அதில் வரையும்படி கூறினார்.
அந்த ஓவியரும் மகிழ்ச்சியுடன் மன்னருக்கு
நன்றி கூறி தனது ஓவியத்தை நாளை துவக்குவதாக
கூறினார்.
மன்னரைச் சந்தித்த இளைஞர்'
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
அதே தருணத்தில் இளைஞர் ஒருவர், மன்னரை
அணுகினார். அவர் மன்னரிடம், "மன்னா ! இந்த
ஒவியர் வரையும் சுவற்றுக்கு எதிரே உள்ள சுவரை
எனக்கு அளியுங்கள். நானும் ஒரு அருமையான
ஒவியத்தை வரைகிறேன்'' என்றார்.
உடனே மன்னர், 'நீ என்ன ஓவியத்தை
வரையப் போகின்றாய்'' என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞர், ''இந்த ஒவியர் எந்த
ஒவியத்தை வரைகின்றாரோ, அதை அப்படியே
எந்த மாற்றமும் இல்லாமல், நானும் வரைந்து
காண்பிக்கின்றேன்'',
இந்த இரண்டு சுவர்களுக்கு இடையில்,
நீங்கள் ஒரு பெரிய திரையைப் போட்டு
விடுங்கள். நான் அதை பார்க்காமலேயே அதே
ஓவியத்தை அப்படியே வரைந்து விடுவேன்''
என்று ஆர்வத்துடன் கூறினான் அந்த இளைஞன்.
இதைக் கேட்ட மன்னருக்கும், அங்கு கூடியிருந்த பையோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. முக்கியமாக அந்த ஓவியருக்கு தூக்கி வாரிப் போட்டது.
அடுத்த நாள் அந்த ஓவியனும், இளைஞனும் தங்களது ஓவியத்தை துவக்கினர்.
அந்த ஓவியன், அரண்மனைக்கு வரும் போது தினமும் பல்வேறு வர்ணங்களையும், உபகரணங்களையும் கொண்டு வந்தார். நாள் முழுக்க தனது ஓவியத்தை கண்ணும் கருத்துமாக வரைந்து வந்தார்.
அந்த பல துணிகளுடனும், பானையில் நீருடனும்
வருவார். அவரும் நாள் முழுக்க தனது சுவற்றில்
வேலையைச் செய்து வந்தார். இருவருக்கும் இடையில்
பெரிய கருப்புத் துணி திரை போடப்பட்டிருந்தது.
யாராலும் ஒருவரையொருவர் என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க
முடியவில்லை ,
இப்படியாக ஒரு மாத காலம் முடிந்தது.
பிறகு ஒவியன் மன்னரிடம் சென்று, "மன்னா !
எனது ஒவியம் நிறைவடைந்து விட்டது. நாளை
தாங்கள் நேரில் வந்து என்னுடைய ஒவியத்தைக்
காணலாம்'' என்று கூறினார்.
மன்னரும், ''சரி! வருகிறேன்'' என்றார். பிறகு
மன்னர் உடனே அந்த இளைஞனை அழைத்து
வருமாறு கூறினார். "
மன்னர் அந்த இளைஞனிடம், 'இளைஞனே!
அந்த ஒவியர் கூறியபடி தனது ஓவியத்தை முடித்து
விட்டார். நாளை நான் அந்த ஓவியத்தைக்
காண வருகின்றேன். உன்னுடையது
என்னாயிற்று?" என்று கேட்டார்.
உடனே அந்த இளைஞன், "என்னுடைய
ஒவியமும் தயாராக உள்ளது மன்னா !"
என்று சற்றும் தாமதிக்காமல் கூறினான்.
அதிசியத்தக்க ஓவியம்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
மறுநாள் மன்னர் முதலில் அந்த
ஒவியன் வரைந்த ஓவியத்தை காணச்
சென்றார். ஒவியத்தைக் கண்டதும் மன்னர்
மெய்சிலிர்த்து போனார். உண்மையிலேயே
அது போன்ற ஒவியத்தை அவர் கண்டதே
இல்லை. அந்த இடத்திலேயே அந்த
ஒவியருக்கு மிகுந்த சன்மானம் அளித்தார்.
ஒவியரும் பெரும் திருப்தி அடைந்தார்.
பிறகு மன்னர் திரையை விலக்கச்
சொன்னார். என்ன ஆச்சர்யம்! அந்த ஒவியன்
வரைந்த அதே அருமையான ஒவியம் எதிர்
சுவரிலும் அப்படியே இருந்தது. மன்னர்,
பிரமித்துப் போனார்.
இளைஞனின் திறமையை பெரிதும்
பாராட்டினார். அந்த ஓவியத்தை கொடுத்த
சன்மானத்தை காட்டிலும் இரு மடங்குக்
கொடுத்தார்.
பிறகு மன்னன் இளைஞனிடம்,
''இளைஞனே! இதை எப்படி சாதித்தாய்?”
என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன்,
''ஒன்றுமில்லை மன்னா ! நான் தினமும்
எதிரே இருக்கின்ற பளிங்குச் சுவரை
நன்றாக தேய்த்து தேய்த்து சுத்தப்ப படுத்திக்
கொண்டே இருந்தேன்.
பிறகு அந்த சுவர் ஒரு கட்டத்தில்
கண்ணாடி போல மினுக்க ஆரம்பித்தது.
பிறகு தொடர்ந்து தேய்த்து தேய்து மேலும்
மேலும் பளபளப்பாக்கினேன்.
எனவே தான் அந்த ஓவியம் அப்படியே
இந்த சுவரிலும் வரைந்தது போல் காணப்படுகிறது.
அந்த இளைஞனின் பதிலால் மன்னர் மிகுந்த
திருப்தி அடைந்தார். அவனது திறமையை வெகுவாக
பாராட்டினார்.
ஓவியம் கூறும் உண்மை
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
அதே போல நாமும், நமது இதயத்தை நன்கு
சுத்தப்படுத்தி தூய்மையாக்கினோம் என்றால் பகவான்
கிருஷ்ணரை படிப்படியாக உணர முடியும். நமது
இதயத்தை அப்படி தூய்மைப் படுத்த எளிய வழி,
தினமும் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்வதே ஆகும்.
ஸ்ரீசைதன்ய மஹாபிரபு தனது சிக்ஷாஷ்டகத்தில்,
சேதோ தர்பண மார்ஜனம் பல மஹா தாவாக்னி நிர்வாபணம்
ஸ்ரேய: கைரவ சந்த்ரிகா விதரணம் வித்யா வதூ ஜிவனம்
ஆனந்தாம்புதி வர்தனம் ப்ரதி பதம் பூர்ணாம்ருதாஸ்வாதனம்
ஸர்வாத்ம ஸ்நபனம் பரம் விஜயதே ஸ்ரீ க்ருஷ்ண ஸங்கீர்த்தனம்
என்று வலியுறுத்துகிறார்.
| ''ஸ்ரீகிருஷ்ண நாம சங்கீர்த்தனத்திற்கு எல்லா புகழும்
உரித்தாகுக! இந்த நாம சங்கீர்த்தனம், பல்லாண்டுகளாக
நமது இதயத்தில் படிந்திருக்கும் ஜடமாசுகளை அகற்றி,
பிறப்பு இறப்பு எனும் நெருப்பை அணைத்து விடுகிறது''
| இது குறித்து ஸ்ரீலபிரபுபாதா கூறுகையில், ''நமது
இதயத்தில் பல்வேறு களங்கங்கள் படிந்துள்ளன. இந்த
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரிப்பதனால்
ஏற்படுகின்ற முதல் பலன் என்னவென்றால், எல்லா
களங்கங்களும் நமது இதயத்தில் இருந்து நீங்கி விடும்”
நமது இதயத்தில் உள்ள களங்கங்கள் மற்றும்
பாவங்கள் நீங்காமல் உண்மையான அமைதியோ,
மகிழ்ச்சியோ அடைய முடியாது.
ஆகவே ஒருவர் ,
| ''ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம்
| ராம ராம ஹரே ஹரே”
என்ற 16 வார்த்தைகளடங்கிய மஹாமந்திரத்தை
தினமும் குறைந்தபட்சம் 108 முறையாவது உச்சரிக்க
வேண்டும்.
இதன் பலனாக பகவானின் திருவருளைப் பெற்று
மன அமைதியையும், மகிழ்ச்சியையும் நித்யமாக பெற
முடியும்...!
ஹரே கிருஷ்ண.!
No comments:
Post a Comment