காஞ்சி மஹா பெரியவா ஒரு பண்டிதரிடம் கிருஷ்ணபிரேமி அண்ணாவின் பாகவதம் கேட்க சொன்னார். அதன் படி கேட்டார் பண்டிதர். பாகவத ஸ்ரவணம் முடித்து பெரியவாளை தரிசனம் செய்தார். அப்பொழுது பெரியவா அந்த பண்டிதரிடம் எப்படி இருந்தது என்று கேட்டார். அந்த பண்டிதர் தான் நிறைய பாகவதம் கேட்டுள்ளேன் ஆனால் அண்ணாவின் கதையில் சில விஷயங்கள் புதிதாகவும் ரசமாகவும் இருந்தது. அதில் ஒன்று கிருஷ்ணன் ரதத்தில் இருந்து இறங்கி பீஷ்மரை தாக்க போகும் பொழுது தனது உத்தறியத்தை எடுத்து தேரில் வைத்து விட்டு செல்கிறான் இதற்கு அண்ணாவின் விவரம் மிகவும் ரசமாக இருந்தது என்றார். அதற்கு மஹா பெறியவா அன்று அதை செய்தவன் தான் இன்று பாகவதம் சொல்கிறான் என்று சொன்னார்களாம்.
திருவண்ணாமலையில் பகவான் யோகி ராம் சுரத்குமார் இருந்த காலத்தில் கிருஷ்ண பிரேமி அண்ணா அங்கு சென்றார். அப்போது யோகி ராம் சுரத்குமார் எல்லா பக்தர்களையும் பார்த்து இப்பொழுது கிருஷ்ணர் எங்கே இருக்கிறார் என்று கேட்டார்களாம். அங்கு இருந்த பக்தர்கள் கிருஷ்ண பிரேமி அண்ணாவை காண்பித்து இங்கு இருக்கிறார் என்று சொன்னார்கள். அதற்கு அண்ணா அப்படியெல்லாம் இல்லை என்று தலை அசைத்தாற்கள் யோகி ராம் சுரத்குமார் அண்ணாவை அருகில் அழைத்து அண்ணாவின் காதில் திருட்டுப்பயலே நீதான் கிருஷ்ணன் என்று சொல்லி வெடி சிரிப்பு சிரித்தாற்கலாம். ஒரு மஹாத்மாவை ஒரு மஹாத்மாவால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவர் அவர்கள் அவதரித்த காரியத்தை அவரவர்கள் செய்கிறார்கள். மஹான்களின் கை அசைவு கூட லோகக்ஷேயத்திற்க்காகவே. அண்ணாவின் வாக்கு வரதனின் வாக்கு என்று நாம் எடுத்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment