ஶ்ரீகாஞ்சி சங்கரா சரணம்
ஶ்ரீமஹாபெரியவா சரணம்
நாக சதுர்த்தி ஸ்பெஷல்
நாகம்மாவின் ஆஶிர்வாதம்...
ஒருமுறை ஒரு தம்பதி பெரியவாளிடம் வந்து தங்கள் மனக்குறையை கூறினர்....
"கல்யாணமாயி.... நாலஞ்சு வர்ஷம் ஆகியும்.... எங்களுக்கு கொழந்தை பாக்யம் இல்ல.... பெரியவா!...."
"ராமேஶ்வரம் போனேளோ?..."
"ராமேஶ்வரத்ல புத்ரகாமேஷ்டி யாகம் கூட பண்ணினோம்.... பெரியவா...."
சற்று நேரம் கண்களை மூடியபடி இருந்துவிட்டு, அவர்களிடம்.....
"ஸெரி.... இன்னிலேர்ந்து.... ரெண்டு பேரும்... ஒங்களோட பெட் ரூமை பூட்டு போட்டு பூட்டிட்டு..... வெளிலேயே படுத்துக்கோங்கோ!...... நா..... சொல்ற வரைக்கும்.... ஒங்க பெட் ரூம் கதவை தெறக்கப்டாது!...... "
"உத்தரவு பெரியவா....."
ப்ரஶாதம் வாங்கிக் கொண்டு சென்றவர்கள், பெரியவா சொன்னபடியே செய்தனர். பெட்ரூமுக்கு பூட்டு போடப்பட்டது. சிலநாட்கள் கழித்து, பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார்கள்.
"இனிமே.... ஒங்க பெட்ரூம் கதவை தெறந்துட்டு.... ஜாக்ரதையா..... எந்த ஜீவனுக்கும் ஹிம்ஸை இல்லாம....
க்ளீன் பண்ணிட்டு.... இனிமே அங்கியே படுத்துக்கோங்கோ!....."
வேலை செய்பவர்களைக் கொண்டு... ரூமின் கதவைத் திறந்தால்......... பயங்கர ஒட்டடை! தூஸி !
அவர்களுடைய கட்டிலருகே சென்றவர்கள், பத்தடி 'குபீர்' பாய்ச்சலில் பின் பக்கமாக எகிறி... ஒரே குதியில் கதவருகே போய்விட்டனர்!
படுக்கை முழுக்க... 'விளுவிளு"வென்று நெளிந்து கொண்டிருக்கும்.... தன் குட்டிகளோடு... 'ஜம்மென்று'சுருட்டிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.......
ஒரு பெரிய்ய.. 'நாகம்மா!..."
"எந்த ஜீவனுக்கும் ஹிம்ஸை பண்ணாம.... க்ளீன்பண்ணிட்டு....."
ஆஹா! பெரியவாளின் தீர்க்கதர்ஶனமான குரல் மனஸில் ஒலித்தது!
உடனே கதவை அப்படியே ஸாத்திவிட்டு, Forest Department-க்கு விஷயத்தை சொல்லி, அந்த அம்மாப்பாம்பும், அவளுடைய குட்டிகளும் பதவிஸாக பிடிக்கப்பட்டு... எங்கேயோ காட்டுக்குள் விடப்பட்டார்கள்!
பக்தர்களையும் காப்பாற்றி, பாம்புக் குட்டிகளையும், அம்மா பாம்பையும் காப்பாற்றிவிட்டாள் நம் மஹா மாதா!
சில மாஸங்களில்.... நிறைய புத்ரஸந்தானம் பெற்ற, நாகம்மாவின் ஆஶிர்வாதமும் சேர்ந்து..... அந்த தம்பதிக்கு அழகான புத்ரஸந்தானம் உண்டாகி, அவர்களுடைய நெடுநாள் மனக்குறை தீர்ந்தது
ஸ்ரீ மஹா பெரியவா எனக்கு அபயம் கொடுத்து காத்துரக்ஷிப்பாய் பரமகருணா மூர்த்தி.
👏👏👏🙏🙏🙏
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர
காஞ்சி சங்கர
காமாட்சி சங்கர
காலடி சங்கர
காமகோடி சங்கர☘💐🙏🙏🙏🙏💐☘
No comments:
Post a Comment