Wednesday, August 28, 2019

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்.

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம். அதிகாலையில் எழுந்ததும் இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்து கிழக்குப் புறமாகப் பார்த்து அமர்ந்து கொள்ள வேண்டும்.
கைகளில் உப்பை இறுக்கமாக மூடிக் கொள்ள வேண்டும். அதன்பின் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனதுக்குள்ளாகவோ ஆழமான நம்பிக்கையோடு சொல்ல வேண்டும். பத்து நிமிடங்கள் வரை சொல்ல வேண்டும்.


பணப்பிரச்னை இருந்தால்,

கண்ணை மூடிக்கொண்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும். என்னுடைய கஷ்டங்கள் பனி போல விலகி விடும் என்று எண்ண வேண்டும்.

உடம்பில் ஏதாவது பிரச்னையென்றால்,

உடம்பில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று திரும்பத் திரும்ப ஆழமாக எண்ணிக் கொண்டே இருக்க வேண்டும் 

இறுதியாகச் செய்ய வேண்டியது : கையில் வைத்திருக்கும் உப்பை அதை ஓடும் தண்ணீரில் விட்டு விட வேண்டும்.

காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த முறை தான் உப்பைக் கொண்டு பிரச்னையைப் போக்குவது.

திருஷ்டி சுத்தும்போதும் மந்திரிக்கும் போது உப்பை வைத்து சுற்றிப் போடுவதைப் பார்த்திருப்போம்.

அதேபோல் சில கோயில்களில் பிரச்னைகள் தீர வேண்டும் என்பதற்காக உப்பை வாங்கிக் கொண்டு போய் கொட்டுவார்கள்.

அறிவியலில் இதை ஓரா சயின்ஸ் என்று சொல்வார்கள். எதிர்மறை சக்தி ( negative energy) நேர்மறை சக்தி (positive energy) என்ற இரண்டும் தான் நம்முடைய வாழ்க்கையை வழி நடத்திச் செல்லும்.

உப்பு எதிர்மறை சக்தியை வெளியேற்றும் ஒரு பொருள். கைக்குள் உப்பை வைத்துக் கொண்டு நேர்மறையாகப் பேசினால் உடலில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். நேர்மறை அலைக்கற்றைகள் நம்மைச் சுற்றி பரவ ஆரம்பிக்கும்.

கிராமங்களில் உப்பை கடன் வாங்க மாட்டார்கள். அப்படியே வாங்கினாலும் கைகளில் வாங்க மாட்டார்கள். அப்படி வாங்கினால் உப்பை கொடுப்பவர்களிடம் இருக்கும் எதிர்மறை சக்தி மற்றவர்களிடம் வந்து விடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது.

No comments:

Post a Comment