ஜாதகம் இல்லாதவர்களுக்கு துன்பங்கள் வந்தால் அதை சரி செய்ய எளிமையான ஒரு பரிகாரம்.
நல்ல முற்றிய கொப்பரை தேங்காய் ஒன்றினை மட்டையோடு எடுத்துக்கொள்ளுங்கள்.அதன் மேலே சீவி அதில் ஒரு ஓட்டை போடுங்கள். அதனுள்பேரீச்சம்பழம்,கரும்புச்சர்க்கரை,முந்திரி ஆகிய மூன்றையும் போட்டு அடைத்து எடுத்துச்சென்று ஒரு அரச மரத்தின் அடியில் பதித்து விடவும்.அதன் பிறகு துன்பங்கள் குறைந்து நன்மைகள் நடக்கும்.
ஜாதகம் இல்லாதவர்கள் எந்த கோவிலுக்கு போக வேண்டும்...??
விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோவிலின் உள்ளே ஆழத்து விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோயில் இருக்கும் ஆழத்து விநாயகர் தரைமட்டத்தில் இருந்து கீழே பள்ளத்தில் இருப்பதால் ஆழத்து விநாயகர் என்று அழைக்க
படுகின்றார்.
ஆழத்து விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். பிரம்மாவுக்கு அறிவு புகுத்தியவர் இந்த ஆழத்து விநாயகர் என்று கூறப்படுகிறது.
பிரம்மா, விருத்தாசலத்தில் மலையை உருவாக்க எண்ணினார். அங்கு சிவபெருமான் பழைய(ஆதி) மலையாக காட்சி அளித்தார்.
ஆகையால் பிரம்மா, சிவனே மலையாக இருக்கிறார் என்று சென்றுவிட்டார்.
இங்கு உள்ள ஆழத்து விநாயகர், திருமண தடை நீக்குகிறார், குழந்தை பாக்கியம் தருகின்றார், சிறந்த கல்வி வழங்குகின்றார்.21 பிறவிகளில் ஏற்பட்ட தோஷங்களை நீக்குகிறார்.
ஜாதகம் இல்லாதவர்கள் இங்கு வந்து இவரை வேண்டி வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்க பெறுகின்றனர்.
சங்கடகர சதுர்த்தி அன்று இவரை வேண்டி வணங்கினால் எல்லா சங்கடங்களும் நீங்கும்.
உலகின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து 108, 27, என்ற எண்ணிக்கையில் சிதறு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
ஜாதகம் இல்லாதவர்களின் கிரக தோஷங்களை நீக்கும் பரிகாரம்
பச்சரிசி-தேங்காய் துருவல் – வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து, கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் ஜாதகம் இல்லாதவர்களின் கிரக தோஷங்கள், கண்திருஷ்டியால் தடைபடும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும்.
ஜாதகம் இல்லாதவர்களுக்கு மிக சக்தி வாய்ந்த பரிகாரமாக எந்த எந்த நாளில் எந்த உயிர்களுக்கு உணவிட்டு பலன் தேடி கொள்ளலாம் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது-
ஜாதகம் இல்லாதவர்கள் ஏழு நாட்களும் அந்தந்த நாட்களுக்குரிய கிரகத்தின் அருளை பெறுவதற்கு தங்களால் முடிந்த அளவு மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் போன்ற உயிர்களுக்கு உணவிட்டு வருவது அவர்களது அனேக பிரச்சனைகளுக்கு உடனடி பலன் அளிக்க கூடிய பரிகாரமாகும்.அன்றாட வாழ்வில் இதன் பயனை உடனடியாக உணரலாம்.
நாட்கள் - கிரகம் - உணவு
ஞாயிறு - சூரியகிரகம்- சப்பாத்தி மற்றும் ஊற வைத்த கோதுமையை பசுக்களுக்கு கொடுக்கலாம். வெல்லம் குரங்குகளுக்கு கொடுக்கலாம்.
திங்கள் - சந்திரகிரகம் - கோதுமை மாவை சீறிய உருண்டைகள் செய்து மீன்களுக்கு உணவிடலாம். (வீட்டில் உள்ள மீன் தொட்டி மீன்களுக்கல்ல) பசுவிற்க்கு நீர் அருந்த வைக்கலாம்.
செவ்வாய் - செவ்வாய கிரகம்-ஊற வைத்த கடலை பருப்பு மற்றும் வெல்லம் குரங்குகளுக்கு கொடுக்கலாம்.இனிப்பு பொடி எறும்புகளுக்கு போடலாம்.
புதன் -புதன்கிரகம்-பச்சை புற்கள், அகத்தி கீரை பசுக்களுக்கு கோடுக்கலாம அல்லது குதிரைவாலி அரிசியை (உணவு பொருள்-நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) புறாக்களுக்கு இடலாம்.
வியாழன் - குரு - ஊற வைத்த கொண்டை கடலையை- குதிரை மற்றும்பசுக்களுக்கும்- சோளத்தை புறாக்களுக்கும் வழங்கலாம்.
வெள்ளி - சுக்கிர கிரகம் - பூனைகளுக்கு பாலும் - பசுக்களுக்கு புற்கள் அல்லது அகத்திகீரையையும் வழங்கலாம்.
சனி - சனிகிரகம்- கருப்பு நாய்கள் மற்றும் கருப்பு பசுக்களுக்கு நல்லெண்ணையில்சுட்ட சப்பாத்தி அல்லது வேறு உணவுகளை வழங்கலாம்
புதன் அல்லது சனி - ராகுகிரகம்- எருமைகளுக்கு தீனி வைத்தல் மற்றும் யானைகளுக்கு இலை தழை,வாழைப்பழங்கள் ஏதேனும் வழங்கலாம்.
வெள்ளி-கேதுகிரகம்- நாய் வளர்க்கலாம், அல்லது முயல், பசு எது முடிகிறதோ அது. ஆனால் அவைகளை துன்புறுத்தாமல் தினசரி உணவிட்டு பராமரிக்க வேண்டும்.
பொதுவாகவே தினசரி நாய்களுக்கு ஒரு மூன்று ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டாவது வாங்கி போட்டு வருவது நலம். மேலும்
உங்கள் குழந்தைகளுக்கும் நாய்,பூனை சிறு உயிரினங்கள்,எறும்பு போன்றவற்றை துன்புறுத்தாமல் இருக்க கற்று கொடுத்து, கர்ம வினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றி வாருங்கள்.
No comments:
Post a Comment