Wednesday, August 28, 2019

#புதுகண்டுபிடிப்பு

#புதுகண்டுபிடிப்பு

ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றும் நவீன மாத்திரை: ‘கிளன்மார்க்’ நிறுவனம் கண்டுபிடிப்பு

ரத்தத்தில் கூடுதல் சர்க்கரை சேருவதை தடுத்து சிறுநீரகம் மூலம் சிறுநீராக வெளியேறச் செய்யும் நவீன மருந்தை இந்திய கிளன்மார்க் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது நீரழிவு நோய் சிகிச்சையில் ஒரு புரட்சி.
இது தமிழ்நாட்டில் ‘ரெமோஜென்’ என்ற மாத்திரையாக அறிமுகம் செய்யப்பட்டது. ராயபுரம் எம்.வி. சிறப்பு நீரழிவு மருத்துவமனை சேர்மன் விஜய் விசுவநாதன், கிளன்மார்க் சீனியர் துணைத்தலைவர்கள் அலோக் மாலிக், ஜேசன் டிசவுசா ஆகியோர் இந்த ரெமோ மாத்திரையை அறிமுகம் செய்தனர்.

ஆராய்ச்சியை அடித்தளமாக கொண்டு உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான கிளன்மார்க் பார்மாசூட்டிக்கல்ஸ் (க்ளென்மார்க்) தமிழ்நாட்டில் அதன் புதுமையான, காப்புரிமை பாதுகாப்பு பெற்ற புதிய மருந்து அறிமுகம் செய்துள்ளது. வயதான சர்க்கரை நோயாளிக்கு இது ஏற்றது.
இது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் மருத்துவத்தில் ஒரு புதுமை. நீரிழிவுக்கு எதிரான மருந்தாகும். சிறுநீரக சிறுநீரில் குளுக்கோஸ் வெளியேற்றப்படுவதை இது ஊக்குவிக்கிறது. 

ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை அளிக்கிறது. உடல் எடை குறைப்பை தூண்டிவிடவும் மற்றும் இருதயநாள இடர்ப்பாடுகளை குறைக்கவும் இந்த மருந்து உதவுகிறது. உலகளவில் ரெமோக்லிஃப்லோஸின் அறிமுகம் செய்யும் முதல் நிறுவனம் என்ற பெருமையை கிளன்மார்க் பெறுகிறது. இந்த புதுமையான மருந்துக்கான கண்டுபிடிப்பை பெறும் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. ரெமோ மற்றும் ரொமோஜென் என்ற பெயர்களின் கீழ் இந்தியாவில் ரெமோக்லிஃப்லோஸின் மருந்தை கிளன்மார்க் அறிமுகம் செய்திருக்கிறது.
ஒரு நாளில் இருமுறை உட்கொள்ளலாம். ஒரு மாத்திரை விலை ரூ.12.50. இந்தியாவில் தற்போது கிடைக்கின்ற SGLT2 இன்ஹிபிட்டர்களின் விலையைவிட இது பாதிக்கும் குறைவானது.

தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை மக்கள்தொகையில் 10.4% என மதிப்பிடப்பட்டுள்ளது. தென் சென்னையில் வயது வந்த நபர்கள் மத்தியில் நோய் அடையாளம் காணப்படாத மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் இல்லாத நீரிழிவு நிலை குறித்து 1361 நபர்களை ஈடுபடுத்தி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி ஏறக்குறைய 22% நபர்களுக்கு நீரிழிவு இருப்பதாக அறியப்பட்டவர்கள் மற்றும் 10.3% நபர்கள் புதிதாக நீரிழிவு நிலை இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள். நீரிழிவு நிலை அறியப்பட்ட நபர்களின் 65%-க்கும் அதிகமானவர்களுக்கு >200 மில்லி கிராம் என கட்டுப்பாட்டின்கீழ் இல்லாத இரத்த சர்க்கரை அளவுகள் இருப்பதையும் மற்றும் ஆண்டுகள் வயதுக்கு குறைவானவர்களில் 20%-க்கும் அதிகமானவர்களிடம் நீரிழிவு நிலை இருப்பதையும் அது வெளிப்படுத்தியிருந்தது.

No comments:

Post a Comment