உருளைக் கிழங்கு பஜ்ஜி செய்வது எப்படி????
தேவையான பொருள்கள்:
1. பெரிய உருளைக் கிழங்கு - 1/2kg
2. கடலை மாவு - 1/4kg
3. அரிசி மாவு - 100g
4. மிளகாய்ப் பொடி - 2tp
5. நெய் - 2tp
6. மைதா மாவு - 100g
7. உப்பு - தேவையான அளவு
8. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - பொரிப்பதற்கு
9. சிவப்பு கேசரி பவுடர் - சிறிதளவு
செய்முறை:
1. மேற்கண்ட பொருள்களை சிறிது தளர, தயிர் போல தண்ணீர் விட்டுக் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். (தேவைப் பட்டால் கேசரி பவுடரையும் சேர்த்துக் கொள்ளலாம்)
2. பின்னர் உருளைக் கிழங்கை மெல்லியதாக வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. இப்போது மெல்லிய வட்டமாக நறுக்கிய உருளைக் கிழங்கை தயிர் போல தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து வைத்து இருக்கும் மேற்சொன்ன கலவை மாவில் தோய்த்து ஏற்கனவே கொதிக்க வைத்து இருக்கும் எண்ணெய்யில் பொன்னிறம் வரும் வரையில் காத்திருந்து (தீய விடாமல்) பொரித்து எடுக்கவும்.
4. இதோ இப்போது சுவையான உருளைக் கிழங்கு பஜ்ஜி தயார்.
No comments:
Post a Comment