தன்வினை....-33
By N Krishnamurthy
அடுத்த ஒரு மாதத்தில் ஒரு முகூர்த்தத்தில் வினயா, ஜகனின் கல்யாணம்,
நங்க நல்லூரிலுள்ள உத்தர குருவாயூரப்பன் கோவில் பக்கத்திலுள்ள கல்யாண மண்டபத்தில் நடந்நது. திருமணத்திற்கு நிறைய பேர்கள் வந்திருந்தார்கள். பெருவனத்தில் இருந்து கேசவதாசும், அர்ஜுனும் வந்திருந்தார்கள்.
ராஜராஜபுரத்திலிருந்து சிதம்பரம்,சாரதா மற்றும் ஜகதீசன்,சீதா வந்திருந்தார்கள். சிதம்பரம் எல்லோருக்கும் ஜகதீசனையும்,சீதாவையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.ஜகன் ஆபிசிலிருந்து பணிக்கரும் மற்ற பலரும் வந்திருந்தனர்.
பணிக்கர் வினயாவை பார்த்து "சீக்கிரம் ஆபிஸ் ஜாயின்பண்ணீடு.வேல தலைக்கு மேல இருக்கு"என்றார் ."ஆகட்டும் சார்.அப்படியே செய்யறேன்"என்றாள் வினயா.ஜகன் சிரித்துக்கொண்டே அவரிடம் "ஹனிமூனுக்கு ரெண்டு வாரம் லீவு வேணும் சார்"என்றான். பணிக்கரும் சிரித்துக்கொண்டே "ஓகே. சேங்ஷன்ட் "என்றார். இதையெல்லாம் அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த சிதம்பரம் ஜகனிடம் "வினயா கல்யாணம் முடிஞ்ச உடனே ஆபிஸ் ஜாயன் பண்ணணம். உனக்கு ஹனிமூனுக்கு ரெண்டு வாரம் லீவுன்னா புரியலயே.இடிக்கறதே.அப்போ நீ மட்டும் ஹனிமூனுக்கு போகப்போறயா" என்றார்.இதை கேட்ட அனைவரும் சிரித்தனர்.
சௌஜன்யாவும், அவள் அப்பா, அம்மாவுடனும், அவளுடைய கணவன் வினோதுடனும் வந்திருந்தாள்.
வினயாவின் இரு கைகளைப் பற்றிக் கொண்ட சௌஜன்யா, "ஏதோ முட்டாள்தனமாக நான் நடந்துகொண்டு விட்டேன். உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். பழையபடி நாம் இருவரும் நட்பாக இருக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள். இதைக் கேட்ட வினயா அவளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு
" எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா" என்று கூறினாள். "அப்புறம் ஒரு நாள் உன் வீட்டுக்கு நான் வரேன். உனக்கும் வினோதுக்கும் நடந்த காதல் கல்யாணத்தை பற்றி விவரமாக எனக்கு சொல்லணம்" என்று கண் சிமிட்டினாள் .
" நிச்சயம்" என்றாள் சௌயன்யா. மனதுக்குள் வசியப்பொடி மேட்டரை மறைத்து மீதி எல்லாவற்றையும் வினயாவிடம் சொல்லி விடலாம் என சௌஜன்யா எண்ணினாள்.
மனோகரன் மட்டும் மருமானின் கல்யாணத்திற்கு வந்திருந்தார். அவர் முகத்தில் மருந்துக்கூட சுரத்தில்லை.
சுபம் போட்டு கதையை இத்தோடு முடித்திருக்கலாம் ஆனால் இன்னும் சில அத்தியாயங்கள் பாக்கி இருக்கின்றன.
No comments:
Post a Comment