Thursday, May 30, 2024

கொண்டக்கடலை புலாவ்

 லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பீஸ் | Easy Lunch Box Recipes | Rice Recipes | Pulao Recipes 

😊😊😊

கொண்டக்கடலை புலாவ்

தேவையான பொருட்கள்

கொண்டக்கடலை - 1 கப் ( 250 மி.லி கப் 
பாஸ்மதி அரிசி - 300 கிராம் 
நெய் - 2 மேசைக்கரண்டி 
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 
பட்டை 
கிராம்பு 
ஏலக்காய் 
பிரியாணி இலை 
சீரகம் - 1 தேக்கரண்டி 
சோம்பு - 1 தேக்கரண்டி 
வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 5 கீறியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி 
தக்காளி - 4 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 
தனியா தூள் - 1 தேக்கரண்டி 
சென்னா மசாலா தூள் - 2 தேக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை
உப்பு  
தண்ணீர்
சூடு தண்ணீர் - 2 கப் ( 250 மி.லி கப் )

கொத்தமல்லி புதினா புலாவ்

தேவையான பொருட்கள் 

பாஸ்மதி அரிசி - 1 1/2 கப் 
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பூண்டு - 5 பற்கள் நறுக்கியது
சின்ன வெங்காயம் - 6 நறுக்கியது
பச்சை மிளகாய் - 5 நறுக்கியது
துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை
புதினா இலை
தண்ணீர்
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
அன்னாசி பூ, கல்பாசி, ஜாவித்ரி
பிரியாணி இலை
வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப் நீர் சேர்த்தது

தவா புலாவ்

தேவையான பொருட்கள்

தண்ணீர்
பாஸ்மதி அரிசி - 1 கப்  
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 50 கிராம்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
குடைமிளகாய் - 1 நறுக்கியது
தக்காளி - 3 நறுக்கியது
மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
பாவ் பாஜி மசாலா - 3 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2 வேகவைத்து நறுக்கியது
பச்சை பட்டாணி - 1 கப் வேகவைத்தது
கொத்தமல்லி இலை நறுக்கியது

பன்னீர் பட்டாணி புலாவ் 

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 2 கப் (250 மி.லி கப்)                                                                                                  
பன்னீர் - 400 கிராம் 
பச்சை பட்டாணி - 1 கப்
நெய் - 3 மேசைக்கரண்டி 
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 
பட்டை 
கிராம்பு 
ஏலக்காய் 
அன்னாசி பூ  
ஜாதிபத்திரி 
சீரகம் - 1 தேக்கரண்டி 
பிரியாணி இலை - 2 
வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 கீறியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி 
தக்காளி - 3 பொடியாக நறுக்கியது
தயிர் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 
சீரக தூள் - 1 தேக்கரண்டி 
மல்லி தூள் - 1 தேக்கரண்டி 
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
உப்பு  
புதினா இலை
கொத்தமல்லி இலை.✍🏼🌹

கத்திரிக்காய் தவா வறுவல்

 *கத்திரிக்காய் தவா வறுவல் | Kathirikai Tawa Varuval*

கத்திரிக்காய் தவா வறுவல்

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 1
எண்ணெய் 

மசாலா கலவை செய்ய

கடலை மாவு - 2 மேசைக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 
தனியா தூள் - 2 தேக்கரண்டி 
சீரக தூள் - 1 1/2 தேக்கரண்டி 
ஆம்சூர் தூள் - 2 தேக்கரண்டி 
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
பெருங்காய தூள் - 1 சிட்டிகை 
உப்பு - 1 தேக்கரண்டி  

செய்முறை:

1. கடலை மாவு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், ஆம்சூர் தூள், கரம் மசாலா தூள், பெருங்காய தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

2. அனைத்தையும் நன்கு கலக்கவும். மசாலாவை ஒதுக்கி வைக்கவும்.

3. கத்தரிக்காயை கழுவி சுத்தம் செய்யவும்.

4. கத்தரிக்காயை நடுத்தர தடிமன் கொண்ட துண்டுகளாக வெட்டுங்கள்.

5. ஒவ்வொரு துண்டுகளையும் இருபுறமும் மசாலாவுடன் பூசவும். பூசப்பட்ட கத்தரிக்காயின் துண்டுகளை குறைந்தது 5 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.

6. தவாவை சூடாக்கி சிறிது எண்ணெய் ஊற்றவும்.

7. தவா முழுவதும் பரப்பவும்.

8. கடாயில் மசாலா பூசப்பட்ட துண்டுகளை வைக்கவும் மற்றும் அனைத்து துண்டுகளின் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் தடவவும் .

9. அவற்றை 5 நிமிடங்களுக்கு வறுக்கவும், அவற்றை மறுபுறம் திருப்பவும்.

10. பக்கவாட்டில் சிறிது எண்ணெய் தடவி, கத்தரிக்காயை மறுபுறம் 5 நிமிடங்கள் வறுக்கவும்.

11. கத்தரிக்காய் துண்டுகள் நன்றாக வறுத்தவுடன், அவற்றை கடாயில் இருந்து இறக்கி, இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.

12. சுவையான கத்தரிக்காய் தவா வறுவல், சூடாக சாம்பார் சாதம்/ரசம் சாதம்/தயிர் சாதத்துடன் பரிமாற தயாராக உள்ளது.

Brinjal tawa fry is a nice side dish recipe made with brinjals. For this recipe, brinjals are marinated with the basic Indian spice powders and then fried on a hot skillet with oil. This can be had as it s or you can also enjoy this fry with any main meal of your choice like plain rice/sambar rice/rasam rice etc. It is important to note that this recipe requires only the big brinjals (aubergine/egg plant) and not the native Indian small size brinjals. So try this recipe and enjoy!✍🏼🌹

😊😊😊

வெண்டைக்காய் பொரியல்

 *பேச்சுலர்ஸ் உங்களுக்குதான்.. இனி ஈஸியா நீங்கள் வெண்டைக்காய் பொரியல் செய்யலாம்.. இதோ பாருங்க!*

🌷🌷🌷

_Ladies finger fry : வழவழப்பு இல்லாமல் பேச்சுலர்ஸ் எப்படி ஈசியாக வெண்டைக்காய் பொரியல் செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். இந்த முறையில் செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்._

வெண்டைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்
1 டீஸ்பூன் எண்ணெய்
3 வர மிளகாய்
ஒரு டீஸ்பூன் அளவு கடலைப்பருப்பு
ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை
அரை கிலோ வெண்டைக்காய்
கடுகு அரை ஸ்பூன்
கருவேப்பிலை
வெங்காயம் 
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
 உப்பு தேவையான அளவு

செய்முறை

வழவழப்பு இல்லாமல் பேச்சுலர்ஸ் எப்படி ஈசியாக வெண்டைக்காய் பொரியல் செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 3 வர மிளகாய் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடலைப்பருப்பு, ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை சேர்த்து வதக்குங்கள். இதனை நீங்கள் சிம்மில் வைத்து வறுக்க வேண்டும் நன்கு வருத்ததும் அதனை எடுத்து ஆறவிடுங்கள். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். மிகவும் நைசாக அரைக்க வேண்டாம் கொரகொரப்பாக அரைத்தாலே போதும்.

அரை கிலோ வெண்டைக்காயை எடுத்து நன்கு கழுவி அதனை துடைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து வெட்டி வைத்த வெண்டைக்காயை வழவழப்பு இல்லாமல் ஒரு ஐந்திலிருந்து ஏழு நிமிடம் கலர் மாறும்வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள் ரொம்ப மிகவும் வதக்க வேண்டாம் கலர் லைட் ஆக மாறியதும் எடுத்து விடுங்கள்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு அரை ஸ்பூன் சேர்த்து அதில் கருவேப்பிலை, ஒரு வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை வணக்கி அதில் நாம் கட் செய்து வதக்கி வைத்த வெண்டைக்காயை இப்பொழுது சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சிறிது நாம் அரைத்து வைத்த கல்லை கடலைப்பருப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து இதனை கிளறி வதக்கினால் போதும் உங்களுக்கு அட்டகாசமான வெண்டைக்காய் பொரியல் ரெடி. இது பேச்சுலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

வெண்டைக்காய் நன்மைகள்

வெண்டைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து, குடலில் இருந்து சர்க்கரை உறிஞ்சப்படும் விகிதத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. வெண்டை தவறாமல் சாப்பிடுவது சிறுநீரக நோயைத் தடுக்கவும், அதிக கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவும். வெண்டைக்காய் செரிமான பிரச்சினைகளுக்கும் நிவாரணம் தருகிறது.

முதிர்ச்சியடையாத வெண்டைக்காயில் காய்களில் உள்ள பாலிசாக்கரைடுகள் கணிசமான ஆண்டிபிசின் பண்புகளைக் கொண்டுள்ளன, அதாவது அவை பாக்டீரியா மற்றும் வயிற்று திசுக்களுக்கு இடையிலான பிசின் அகற்றுகிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

வெண்டை, ஒரு ஊட்டச்சத்து அடர்த்தியான உணவாகும், அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உணவு நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும், இது மலச்சிக்கலைத் தடுக்கவும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். வெண்டைக்காயில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அதிக அளவு தாதுக்களும், வைட்டமின்கள் சி, கே மற்றும் ஃபோலேட் போன்ற தாதுக்களும் உள்ளன.

🌷🌷🌷

உருளைக் கிழங்கு பஜ்ஜி

 உருளைக் கிழங்கு பஜ்ஜி செய்வது எப்படி????

தேவையான பொருள்கள்:

1. பெரிய உருளைக் கிழங்கு - 1/2kg
2. கடலை மாவு - 1/4kg
3. அரிசி மாவு - 100g
4. மிளகாய்ப் பொடி - 2tp
5. நெய்  - 2tp
6. மைதா மாவு - 100g
7. உப்பு - தேவையான அளவு 
8. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - பொரிப்பதற்கு 
9. சிவப்பு கேசரி பவுடர் - சிறிதளவு 

செய்முறை:

1. மேற்கண்ட பொருள்களை சிறிது தளர, தயிர் போல தண்ணீர் விட்டுக் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். (தேவைப் பட்டால் கேசரி பவுடரையும் சேர்த்துக் கொள்ளலாம்)

2. பின்னர் உருளைக் கிழங்கை மெல்லியதாக வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3. இப்போது மெல்லிய வட்டமாக நறுக்கிய உருளைக் கிழங்கை தயிர் போல தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து வைத்து இருக்கும் மேற்சொன்ன கலவை மாவில் தோய்த்து ஏற்கனவே கொதிக்க வைத்து இருக்கும் எண்ணெய்யில் பொன்னிறம் வரும் வரையில் காத்திருந்து (தீய விடாமல்) பொரித்து  எடுக்கவும்.

4. இதோ இப்போது சுவையான உருளைக் கிழங்கு பஜ்ஜி தயார்.

Wednesday, May 29, 2024

சுவையான போளி ரெசிப்பீஸ்

 *சுவையான போளி ரெசிப்பீஸ் | Poli Recipes In Tamil | Kara Poli | Parupu Poli |*

கார போளி😊😊😊

தேவையான பொருட்கள்

மேல் மாவு செய்ய

மைதா - 1 1/2 கப்

உப்பு - 1 தேக்கரண்டி 
எண்ணெய் - 2 தேக்கரண்டி 
தண்ணீர்

பூரணம் செய்ய

உருளைக்கிழங்கு - 3
கேரட் - 1
பீன்ஸ் நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
பச்சை பட்டாணி
உப்பு - 1 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி 
பெருங்காய தூள் - 1 சிட்டிகை 
எண்ணெய் - 1 தேக்கரண்டி 
தண்ணீர்

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் மைதா, மாவு, உப்பு, எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்

2. பிசைந்த மாவை 15 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்

3. ஒரு பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி, மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்

4. 4 விசில் வந்த பின் குக்கரை திறந்து, அதில் தண்ணீர் இருந்தால், கொதிக்கவிட்டு வற்ற வைக்கவும்

5. தண்ணீர் வற்றிய பின் காய்கறிகளை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மசித்து வைத்துக் கொள்ளவும்

6. பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக்கி வைத்துக் கொள்ளவும்

7. ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போல் தேய்க்கவும்

8. மசித்த காய்கறி கலவையை நடுவில் வைத்து சப்பாத்தியை மூடி மறுபடியும் சப்பாத்திப் போல் தேய்க்கவும்

9. தவாவை சூடு செய்த செய்த சப்பாத்தியை அதில் போட்டு நெய் ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்

10. கார போளி தயார்.

பருப்பு போளி

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு  - 1/2 கப்
தண்ணீர் 
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள்
நாட்டுச்சர்க்கரை  - 1 1/2  கப்

மாவு தயாரிக்க 

கோதுமை மாவு - 1 கப்
மைதா  - 1 கப்
உப்பு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
தண்ணீர் 

😊😊😊

காலிஃபிளவர் பக்கோடா

 காலிஃபிளவர் பக்கோடா 

*காலிஃபிளவர் பக்கோடா*😊😊😊

தேவையான பொருட்கள்

காலிஃபிளவர் - 1 
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தண்ணீர்
எண்ணெய்

வேர்க்கடலை அடை

 வேர்க்கடலை அடை

தேவையானவை:

ஒரு கப் வேர்க்கடலை
ஒரு கப் ரவை
¾ கப் கோதுமை மாவு
2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
1 டீ ஸ்பூன் ஜீரகம்
பச்சை மிளகாய் 4
ஒரு பெரிய வெங்காயம்
கொஞ்சம் கொத்தமல்லி
கருவேப்பிலை
உப்பு

செய்முறை:

வேர்க்கடலைய தோல் நீக்கி நன்கு கழுவி 1 லிட்டர் தண்ணீரில் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி அப்படியே ஒரு மணிநேரம் ஊறவிடவும் !

மிக்ஸியில் முதலில் ரவை,கோதுமை மாவு,அரிசிமாவு போட்டு தண்ணீர் சேர்க்காமல் மாவாக அரைத்துக் கொண்டு

அதோடு ஜீரகம் , பச்சைமிளகாய், ஊற வைத்த கடலை, தேவையான உப்பு சேர்த்து நீர் சேர்த்து நல்ல மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும் ! அதை ஒரு பௌலில் போட்டு மிக்ஸி ஜாரை கொஞ்சமாக தண்ணீர் விட்டுக் கழுவி மாவோடு கலந்து கொண்டு நன்கு கலக்கி, அதோடு பெரிய  வெங்காயத்தை நன்கு பொடியாக்கிக் கலந்து அதோடு கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாய் நறுக்கிச் சேர்க்கவும் !

நன்கு பீட் செய்து ஒரு 20-30 நிமிடங்கள் கழித்து தோசைக் கல்லில் தோசை வார்க்க ஆரம்பிக்கவும் ! 

எண்ணெய் ஊற்றி 2 பக்கமும் புரட்டி எடுக்கவும் ! 

ரொம்ப மெல்லிசால்லாம் வராது! 

அடை  மாதிரி தான் வரும் !

(அடை தானே!?😛 )  

நல்ல சுவையான வேர்க்கடலை அடை ரெடி

#சுரேஷின்_நளபாகம்

சமையல் டிப்ஸ்

 சமையல் டிப்ஸ்:-

வெண்டைக்காய் வதக்கும் போது சிறிது தயிர் சேர்த்து வதக்கினால் பிசுபிசுப்பு இருக்காது.

மாங்காய் ஊறுகாய் செய்யும்போது பச்சை நல்லெண்ணெய் இரண்டு அங்குலம் மேலே நிற்குமாறு ஊற்றினால் ஊறுகாய் நீண்டநாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

வெண்டைக்காய் குழம்புக்கு வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது புளித்த மோரை சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும். 

உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும் போது அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிரை சேர்த்து வதக்கினால் மிகவும் ருசியாக இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கி போட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். 

உருளைக் கிழங்கை உப்பு நீரில் சிறிது நேரம் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் உருளைக் கிழங்கு சீக்கிரம் வெந்துவிடும்.

பாகற்காயை நறுக்கி காயவைத்து தூளாக்கி, ஒரு டீஸ்புன் தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.

மரவள்ளிக்கிழங்கில் வறுவல் செய்யும்போது, மரவள்ளிக்கிழங்கை 5 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்தபின் வறுத்தால் மரவள்ளிக்கிழங்கு வறுவல் மொறுமொறுவென சுவையாக இருக்கும்.

எலுமிச்சை சாதம் செய்யும் போது ஒரு டேபிள் ஸ்பு ன் சர்க்கரை சேர்த்தால் சுவையாக இருக்கும்.

சிறிது மிளகை எண்ணெய் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால், எண்ணெய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

பெங்களூர் மசால் தோசை

 சமையல் குறிப்புகள்:

〰️〰️〰️〰️〰️

🤎🩵🤎🩵🤎

சமையல் குறிப்புகளில்:

இன்று பெங்களூர் மசால் தோசை பற்றி பார்க்கலாம் வாங்க...

பெங்களூர் மசால் தோசை:

தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 4 கப்பச்சரிசி - 2 கப்உளுந்து - 2 கப் கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்ஆப்பசோடா - 2 சிட்டிகைஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - தேவையான அளவுஉருளைக்கிழங்கு மசாலா - தேவையான அளவுகார சட்னி - தேவையான அளவு

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பு வகைகள் அனைத்தையும் ஒன்றாக கலந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.ஊறிய பொருட்களை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.மாவில் ஆப்பசோடா மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவவும்.ஒரு கரண்டியில் மாவை எடுத்து மெல்லியதாக வார்க்கவும்.தோசை முழுவதும் வெந்ததும், திருப்பி போடாமல் எடுக்கவும்.தோசையின் மீது கார சட்னி தடவி, நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து இரண்டு புறமும் மடித்து எடுக்கவும். சுவையான பெங்களூர் மசால் தோசை தயார்.

ஹோட்டல் சுவையில் பூரி மசாலா

 ​​பூரி என்றால் குழந்தைகளுக்கு மற்றும் பெண்களுக்கும் கொள்ளை பிரியம் அதிலும் கூடவே உருளைக்கிழங்கு மசாலா என்றால் டபுள் ஹேப்பி  எங்க வீட்ல பூரி வாங்கிட்டு வந்தா ஒரே ஒரு பிடித்து விடுவார்கள் ஐந்தே நிமிடத்தில் அனைத்தும் முடிந்துவிடும்

பெரும்பாலான குழந்தைகள் ஹோட்டல் மெனு கார்டை பார்த்ததும் விரும்பி அதிகம் ஆர்டர் செய்யும் உணவு இந்த பூரி தான் ❤️. குழந்தைகள் மட்டுமில்லை இந்த லிஸ்டில் பெரியவர்களும் உண்டு சின்ன சின்ன வாண்டுகளும் உண்டு

வாலிபால் பந்து போல சுடச்சுட வரும் பூரியுடன் மசாலா கிழங்கை வைத்து சாப்பிடும் ருசியே தனிதான். இந்த விஷயத்துல பெரிய பெரிய ரெஸ்டாரண்ட்ல பூரி சாப்பிடறத விட சின்ன கடைகள்ல ருசியா இருக்கும்.

ஆனால் வீட்டில் பூரி செய்தால் 2க்கு மேல் யாருக்கும் இறங்காது. ஏனென்றால் அதே டேஸ்ட் அதே சுவை ஆகையால் தழட்டிவிடும் இனிப்பு எடுத்துங்கள் அளவுக்கு அதிகமானால் இனிப்பு திங்க முடியாது தெகட்டிவிடும்

அதற்கு என்ன காரணம் தெரியுமா? ஹோட்டல் பூரி மசாலாவில் இருக்கும் சுவை வீட்டில் மிஸ் ஆவது தான். அந்த ரகசியத்தை தான் இந்த பதிவில் சொல்ல போறேன்.

ஹோட்டல் சுவை போன்று அல்லது ஹோட்டல் சுவையில் பூரி மசாலா செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
ரவை - 2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

செய்முறை

முதலில் பாத்திரத்தில் கோதுமை மாவுடன் உப்பு, ரவை, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.

ஹோட்டல் பூரி மொறு மொறுப்பாக உப்பி வருவதற்கான ரகசியம் இந்த சாதாரண ரவை தான். கட்டாயம் பூரி செய்யும் போது சிறிதளவு ரவையை மாவுடன் சேர்த்து கொள்ளுங்கள். அப்போது நன்றாக இருக்கும்

பின்பு இந்த மாவை வட்டமாக தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் பூரி தயார்.

அடுத்து உருளைக்கிழங்கை பஞ்சு போல் குக்கரில் வேக விட்டு எடுத்து கொள்ளவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் வேக வைத்த உருளை கிழங்கு, மஞ்சள் தூள், சால்ட் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இப்போது அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது அதில் மிளகு தூள் சேர்க்கவும்.

ஹோட்டல் உருளைக்கிழங்கு சுவையின் ரகசியம் இந்த மிளகு தூளில் தான் உள்ளது.

10 நிமிடம் கொதிக்க வைத்து இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் அட்டகாசமான உருளைக்கிழங்கு மசாலா தயார்.

செட்டிநாடு இட்லி பொடி

 ஆச்சி ஸ்டைலில் செட்டிநாடு சுவையில் இட்லி பொடி! ஓ இதுதான் ரகசியமா? இதோ ரெசிபி!

நாம் பல்வேறு வகையில் இட்லி பொடிகளை செய்திருப்போம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள இட்லிப்பொடியை அதே சுவையில் செய்து பாருங்கள். உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு – ஒரு கப்
உளுந்தம்பருப்பு – ஒரு கப்
பச்சரிசி – 3 டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் – கால் கப்
வர மிளகாய் – 15
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
பெருங்காயத்தூள் – சிறிது
கஷ்மீரி சில்லிப்பவுடர் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயை சூடாக்கி கடலை பருப்பு, உளுந்து, பச்சரிசி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெள்ளை எள் என அனைத்து பொட்களையும் தனித்தனியாக சேர்த்து பொன்னிறமாகும் வரையோ அல்லது வாசம் வரும் வரையோ வறுத்து எடுக்கவேண்டும்.

அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து நன்றாக ஆறவைக்கவேண்டும். பின்னர் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் கடைசியாக கஷ்மீரி மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தப்பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவைஅள்ளும். இந்தப்பொடி செட்டிநாடு பகுதிகளில் ஆச்சி அரைக்கும் இட்லி பொடியாகும். இதில் உள்ள ரகசியமான உட்பொருளே கஷ்மீரி மிளகாய் தூள் தான்.

நாம் மீண்டும் கஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்போம், அது நிறத்தை மட்டும்தான் கொடுக்கும் காரம் இருக்காது என்றாலும், வர மிளகாயை சேர்க்கும்போது நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.

இந்தப்பொடி காரைக்குடி, செட்டிநாடு பகுதிகளில் அதிகம் செய்யப்படும் முறை.

வாழ்க வளமுடன்

Wednesday, May 22, 2024

வாழை இலை துவையல்...

 *திருநெல்வேலி ஸ்பெஷல்- ☝🏻👇🏻 வாழை இலை துவையல்...

தேவையான பொருட்கள்:

ஒரு வாழை இலை – துண்டு துண்டுகளாக நறுக்கியது,
கடலைபருப்பு – 2 தேக்கரண்டி,
தோலிபருப்பு – 2 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் – 6 உரித்தது,
பூண்டு – 5 உரித்தது,
மொளகா 
வத்தல் – 5,
புளி – ஒரு சிறு உருண்டை,
உப்பு – தேவைக்கு.

 செய்முறை

அடுப்பில் இருப்புச் சட்டி வைத்து சூடேறியதும் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைபருப்பு, தோலிபருப்பு, சின்னவெங்காயம், பூண்டு, மொளகா வத்தல் ஆகிய வற்றை ஒன்னு ஒன்னா போட்டு வதக்கி கடைசியா நறுக்கிய வாழை இலைத்துண்டுகளையும் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

வாழை இலைகளை சேர்த்ததும்  வெடி வெடிப்பது போல சத்தம் வரும். 

இந்த பக்குவத்தில் நன்றாக வதக்கி இறக்கி ஆற வைத்து, பின் புளியும், உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் வாழை இலை துவையல் தயார்.

முரட்டு வாழை இலை பயன் படுத்த்தினால் அதிகமா நார் தங்கும். நீங்க இளம் வாழை இலையா பாத்து பயன் படுத்துங்க.

இது இட்லி, தோசை, சாதத்துக்கு தொட்டுக்க பேஷா இருக்கும் போங்க…☝🏻☝🏻

காசியில் தங்க சத்திரம்

 காசிக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். 

G.R.T. ஆனது காசி அல்லது வாரணாசியில் ஒரு ஹோட்டல் / சத்திரம் தொடங்கியுள்ளது.

தென்னிந்திய உணவு பரிமாறப்படுகிறது.  அறை வாடகைகள் பெயரளவு.  உணவு இலவசம்.

 வணக்கம் நண்பர்களே, நான் சமீபத்தில் வாரணாசிக்கு சென்றிருந்தேன், ஜி.ஆர்.டி.யால் கட்டப்பட்ட சத்திரத்தில் தங்கியிருந்தேன். பெயர் மட்டுமே சத்திரம் ஆனால் அறைகள் எல்லா வசதிகளுடன் அற்புதமாக இருக்கின்றன, அது உங்களுக்கு எங்கும் கிடைக்காது. அதிகபட்சம் 3ppl ஒரு அறையில் தங்கலாம். அவர்கள் காலையில் காபி, பாஸ்ட், மதிய உணவு, மாலை டீ மற்றும் இரவு உணவு வழங்குகிறார்கள். அறை சேவை இல்லை. அனைத்து உணவுகளும் இலவசம் மற்றும் வரம்பற்றது. கிருத்திகை அமாவாசை அன்று வெங்காய பூண்டு இல்லாமல் உணவு பரிமாறவும்.  கடந்த அமாவாசைக்கு அங்கே இருந்தவர்கள் எப்படி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தனர். சென்ற சாப்பாட்டுப் பகுதிக்கு அமாவாசை உணவு வெங்காயம் பூண்டு இல்லாதது என்று ஒரு பெரிய பலகை இருந்தது. வடை மற்றும் பாயசத்துடன் உணவு பரிமாறப்பட்டது  பலவகையான பொருட்களுடன். வெளி உணவு நமக்குப் பொருந்தாது என்பதால், விருந்தினர்களை அங்கேயே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். காலி செய்யும் போது அந்த அன்னதான அறக்கட்டளைக்கு பங்களிக்க விரும்பினர். அவர்கள் ஏற்கவில்லை. இருந்தது.  டிப் பாக்ஸ். டிப் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அது இல்லாமல் போக முடியாது, ஏனெனில் அவர்களின் சேவை உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சுற்றி செல்ல நிறைய EVகள் கிடைக்கும். நாங்கள் தங்கியிருந்ததை ரசித்தேன்.  ஜிஆர்டியின் சேவைக்கு இனிய நன்றிகள். வாரணாசிக்கு செல்லும் எந்தவொரு அமைப்பும், ஜிஆர்டியில் இருங்கள் அறை வாடகையும் மிகவும் மலிவானது. அறைகள் நட்சத்திர ஹோட்டல் அறைகள் போல அனைத்து லேட்டஸ்ட் மாடல் ஹைஃபை ஃபிட்டிங்குகளுடன் இங்கிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள அனைத்து இடங்களும் சங்கர மடம், கங்கை, விஸ்வநாதர் கோயில் மற்றும் பிற கோயில்களுக்குச் செல்ல ஏராளமான மின்சார வாகனங்கள் கிடைக்கும்.

 GRT ஹோட்டல் தொடர்பு எண். 7607605660.

 தங்குமிடத்திற்கு அவர்களின் இணையதளத்தைப் பார்க்கவும்.

 www.grtkashichatram.com அல்லது GOOGLE IT மற்றும் உள்நுழையவும்.

 ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு.

 அவர்களிடம் பேசி உறுதி செய்து கொண்டேன்.

 உங்கள் முடிவில் இருந்து முயற்சி செய்யுங்கள்.

Monday, May 13, 2024

காசிக்கு போகலாமா-1

 காசிக்கு போகலாமா👇🏻

காசிக்கு போகும் சன்யாசி , உன் குடும்பம் என்னாகும் நீ யோசி 👇🏻

காசிக்கு போகிறோம் வருகிறீர்களா?’ என்று யாராவது சொன்னால் அந்த நாட்களில் மேலே உள்ள பாடல் தான் நினைவில் வரும்  

சென்னை – டில்லி – வாராணசி -டில்லி – சென்னை ரவுண்டு ட்ரிப் ஏர் டிக்கெட் புக் பண்ணினால் யாத்திரை சுகமாக இருக்கும் 

ஏனெனில் அந்த நாட்களில் இந்த வசதிகள் இல்லை.  

இதை செய்து முடித்ததும், ‘இந்த யாத்திரையின் முதல் விசிட் ராமேஸ்வரம் தான் போக வேண்டும்.  

அங்கே தீர்த்த ஸ்ராத்தம் முடித்து, தனுஷ் கோடியில் இருந்து திரிவேணி சங்கமத்தில் கரைக்க வேணி மாதவரை (மண்) எடுத்துக்கொண்டும் – இந்த மண்ணைக் கொண்டு சேது, பிந்து மாதவர் களையும் கூட சிவ லிங்கங்களாக பிடித்து பூஜை செய்து அதன் பின் பிந்து மாதவரை காசி யாத்திரை நல்ல படியாக முடிய பிரார்த்தித்துக் கொண்டு தானமாகவும், சேது மாதவரை தற்போது அவர் சன்னதியில் சமர்ப்பிக்க முடியாது என்பதால் (செய்தால் காசி யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்) கடலில் கரைப்பதற்கும் பூஜை செய்த இடத்திலேயே _வைத்து வந்து விடலாம்’ . 

மேற்கில் (தென் மேற்கு, மேற்கு, வடமேற்கு) இருந்து ராமேஸ்வரம் செல்பவர்களுக்கு மையப்புள்ளி மதுரை (தெற்கு திசையில் இருந்து வருபவர்களுக்கு திருச்செந்தூர், தூத்துக்குடி. வடக்கில் இருந்து (சென்னை) பயணிப்பவர்கள் திருச்சி – புதுக் கோட்டை – தேவ கோட்டை வழியாக ராமேஸ்வரம் அடையலாம்). 

எப்படி வந்தாலும் காமன் மீட்டிங் பாயிண்ட் ராமநாதபுரம். 

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சுமார் 175 கிலோமீட்டர். சிலைமான்-திருபுவனம்-திருப் பாச்சேத்தி-மானாமதுரை-பார்த்திபனூர்-பரமக்குடி-ராமநாத……வெயிட். கொஞ்சம் வேகத்தை குறைத்து ராம்நாடுக்கு (இங்கிலீஷ்யா) சுமார் எட்டு கிலோமீட்டருக்கு முன் வலதில் ‘உத்தர கோச மங்கை’ – உத்திரம் என்றால் உபதேசம், கோசம் – ரகசியம், மங்கை என்பது உமையை குறிக்கும். 

மீனவப் பெண்ணாக பிறந்து வளர்ந்த அம்பிகையை மணந்து அவளுக்கு ஞான உபதேசம் செய்த தலம் – என்று பலகை காட்டும் திசையில் எட்டு கிலோமீட்டர் பயணித்தால் மங்கலேஸ்வரர், மங்களேஸ்வரி, சந்தனக்காப்பு நடராஜர், சஹஸ்ர லிங்கம், மாணிக்க வாசகர் (இருவருக்கும் தொடர்பு உண்டு. ஆயிரம் முனி புங்கவர்கள் சிவ தரிசனம் பெற வேள்வி நடத்த, அவர் மண்டோ தரிக்கு குழந்தையாய் காட்சி கொடுக்கப் போக, அக்னியில் இருந்து ஜோதி எழுந்தது. தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது முனிவர்கள் அதில் மூழ்கி மறைய – அவர்கள் ஈசனோடு ஐக்கியமாகி சஹஸ்ரலிங்க மாயினர்) .

சிவன் கொடுத்துச் சென்றிருந்த மறையை காக்கும் பொருட்டு ஒருவர் மட்டும் தங்கிவிட, அதனால் மகிழ்ச்சி யுற்ற ஈசன் அவர் பெருமையை உலகத்திற்கு பறை சாற்ற மாணிக்க வாசகனாய் பிறப்பித்தான். 

திருவாசகத்தானும் இதுவே இறைவனின் வீடு என போற்று கின்றான். ஆவுடையார் கோவில் எனப்படும் திருப்பெருந் துறையைக் காட்டிலும் புகழுடைய தலம்) ஆகியோரை தரிசிக்கலாம்.

பொய் சொல்லி சாபம் பெற்ற பிரம்மன் தவமியற்றி விமோசனம் பெற்ற தலம். ஆகவே, இக்கோவிலில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ சார்த்தப் படுகிறது.ஸ்தல வ்ருக்ஷம் இலந்தை. 

மூவாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது. இன்றும் காணக் கிடைக்கிறது.

மீண்டும் மெயின் ரோடை அடைந்து கிழக்கு நோக்கி பயணித்து ராமநாத புரத்திலிருந்து தெற்கே போனால் சேதுக்கரையில் திருப்புல்லாணி (தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி வழி) வடக்கில் சென்றால் நவ பாஷாணம் (திருச்சி, சென்னை மார்கம்).

சீதையை தேடி வந்த ராமன் முதலில் வேதாரண்யம் சென்றடைந்தான். அங்கு கடலுக்கு குறுக்கே அணையோ, பாலமோ கட்ட முடியாது என்று தெரிந்த உடனே கோடிக்கரை பக்கம் வந்தான். M

அங்கிருந்து ராமேஸ்வரம் (த்ரேத யுகத்தில் இந்திய துணைக் கண்டத்துடன் சேர்ந்தே இருந்தது), தனுஷ் கோடி (அன்று பிரிந்து இன்று சேர்ந்து விட்டது) வந்த ராமன் தன் முன் விரிந்து கிடந்த இரு மாபெரும் கடல்களை பார்த்தான். 

வலப்பக்கம் ரத்னா கரம் (ராவணன், இந்தியப் பெருங் கடல், ஆர்ப்பாட்டம், ஆபத்தில்லை) இடதில் மகோததி (மண்டோதரி, வங்காள விரிகுடா, அமைதி ஆபத்தானது). 

இவ்விரண்டும் இணையும் வில் முனை போன்ற இடம் (ஆகவே, தனுஷ் கோடி). 

சரி, இதுவே இலங்கையை அடையும் வழி என்று முடிவு செய்து அங்கு பாலம் கட்ட இடம் தேடி அலைந்த ராமன் அருகில் உள்ள உப்பூரை (லவண புரி) சென்றடைந்து தான் வந்த கார்யம் தடை இல்லாமல் நடக்க விக்னேஸ்வரனை வழிபட்டான். 

இந்த மூஷிக வாகனர் தன் தலை மீது கூரையின்றி இருப்பதால் ‘ *வெய்யில் உகந்த விநாயகர்’* என்று நாமகரணம் கொண்டுள்ளார். 

காரணம் சூர்யன். தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்றதால் சிவனின் சாபம் பெற்று அது நீங்க நாரதன் சொற்படி ஆனை வயிற்றானை நோக்கி தவிமிருந்து விமோசனம் அடைந்து, தான் ஒவ்வொரு நாளும் அவரை பூஜிக்க வேண்டுமென வேண்ட, வினை களைபவன் வேய் கூரை இன்றிப் போனார்.

அங்கிருந்து தேவி பட்டணம் வந்த ராமனுக்கு மகிஷாசுர மர்த்தினியாக தேவி காட்சி தர அவளிடம் சக்தியை வேண்டிப் பெற்றிருக்கிறான். அங்கு நவக்ரஹ வழிபாடும் செய்திருக்கிறான். அதுவே நவ பாஷாணம். மகோததியில் உள்ளது. 

ஐந்து வெளியே தெரிய, மீதம் நான்கும் தண்ணீருக்குள்ளே. கடல் அலைகள் அவன் பிரதிஷ்டை செய்த க்ரஹங்களை புரட்டிப் போட நினைக்க ராமன் ஜகன்னாத பெருமாளை வேண்டி இருக்கிறான். 

அவர் அக்கடலில் அலையே இல்லாத படி செய்து விட்டார். அதனால், கடலடைத்த பெருமாள் என்கிற நாமமும் பெற்றார். 

அதற்கருகில் திலகேஸ்வரர் கோவில். எள் கொண்டு ராமன் ஈசனை பூஜிக்க இவ்விடம் நீத்தார் புகழ் கூறும் தலமாகி விட்டது.

ராமன் பாலம் கட்ட தேர்ந்தெடுத்த சேதுக்கரையில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் திரு மங்கை மன்னன் மங்களா சாசனம் செய்த திருப் புல்லாணி திவ்ய தேசம். இங்குள்ள பெருமாளின் நாமம் ஆதி ஜகன்னாதர். 

ராமன் அஸ்திரங்கள் பெற்ற க்ஷேத்ரம். விபீஷணன் சரணாகதி அடைந்த தலம். ராவணனின் தூதுவர்களை ராமன் சந்தித்த இடம். 

இங்கு, தசரதன் பிள்ளைப்பேறு வேண்டி ஜகன்னாத பெருமாளை வணங்கி புத்திர காமேஷ்டி யாகம் செய்திருக்கிறார். 

ஆகவே, ராமாயண காலத்துக்கு முற்பட்ட தலம்.

கிழக்கு நோக்கிய ஆலயம். கோவில் எதிரில் பிரம்மாண்ட சக்கர தீர்த்தக் குளம் (நீர் தெளிவாக இருந்தால் நன்மை, பொன்னிறமானால் விளைச்சல் குறையும், பாசி படிந்தால் கால் நடைகள் மடியும்). M

கருவறையில் ஆதி ஜகன்னாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன். பிராகாரத்தில் தாயார் சன்னதி. சுற்றி வந்தால், ராமன் இளைப் பாறியதன் அடையாளமாக 

 தர்ப்ப சயன பெருமாள்.

மழலைப்பேறு வேண்டுவோர் இங்குள்ள சந்தான கோபால கிருஷ்ணனிடம் பிரார்த்தித்துக் கொள்ளலாம். அடுத்தது, பட்டா பிஷேக ராமன்.

இந்த தரிசனங்கள் எல்லாம் முடிந்து மீண்டும் ராமநாத புரத்தை அடைந்து மண்டபத்தில் பாலம் ஏறி பாம்பனில் இறங்கி சற்று தூரம் சென்றால் தங்கச்சி மடம், வில்லுறுணி தீர்த்தம். ராமன் தனது வில்லின் நுனியால் நிலத்தை கீறி நீர் எடுத்ததால் இப்பெயர். 

தில ஹோமம் (பித்ரு, அகால, துர் மரண, சர்ப்ப, இதர தோஷ நிவர்த்திக் கென செய்யப் படுவது) பண்ண உத்தேசித்து இருந்தால் அது முடிந்தவுடன் ஜீப்பில் ஏறி தனுஷ்கோடி செல்லலாம். 

செல்லும் பாதை பின் பார்க்கப் போவதை முன்னமே எடுத்துக் காட்டும் வகையில் சற்று சூன்யமாகத்தான் இருக்கும். 

தனுஷ்கோடி செல்லும் பாதையில் ஜன, கால் நடைகள் நடமாட்டம் அதிகம் இருக்காது. இரு பக்கங்களிலும் கருவேலம், பனை (அ) தென்னை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கும் சில கிராமங்கள். எப்போதோ, எதிர் திசையில் இருந்து கடந்து செல்லும் மினி பஸ்கள், ஜீப்புகள். ஜீப் முகுந்த ராயர் சத்திரத்தை அடைந்ததும்  கீழிறங்கி வண்டியை போர் வீல் டிரைவ் ஆக மாற்றவேண்டும் இல்லையேல் கடற்கரை மணலில் ஜீப்பை நினைத்த படி வளைத்து செலுத்த முடியாது. 

போகும் வழி யெங்கும் 1964 ஆண்டில் அடித்த புயலின் சேதாரங்கள் நினைவுச் சின்னங்களாக தென்படும். 

துருப்பிடித்த படகுகள்,உருக்குலைந்த ரயில் நிலையம்….அந்த ரயில்….சட்டென்று மின்விளக்குகள் அணைய, என்ன செய்வது என்று புரியாமல் என்ஜின் டிரைவர் ரயிலை மேற்கொண்டு செலுத்த, கடல் எனும் பகாசுரன் மொத்த பயணி களுடன் அதை அப்படியே விழுங்கி விடுகிறது. 

நினைக்கும் போதே மனசு படபடக்கும். ஓரத்தில் கொஞ்சம் பயமும் எட்டிப் பார்க்கும். என்றாலும் இது மாதிரியான அட்வென்ச்சர் எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல.

இப்படியே சுமார் எட்டு கிலோமீட்டர் பயணம் செய்யணும் . சில இடங்களில் கடல் நீர், சகதி. ஒரு வழியாக கரையை அடைந்து, முன்னோர்களுக்கான பிண்டங்களை கடலில் இட்டு, முப்பத்தி ஆறு முறை மூழ்கிக் குளித்து, கரையில் இருந்து சிவ லிங்கங்கள் பிடிக்க மண் எடுத்துக் கொண்டு மீண்டும் ஜீப்புக்கு திரும்ப வேண்டும். 

முகுந்த ராயர் சத்திரம் வந்ததும் டிரைவர் மீண்டும் டூ வீல் டிரைவுக்கு மாற்றி தான் ஓட்ட வேண்டும்..... (மைலேஜ் கிடைக்க வேண்டுமே). 

இந்த வாகனங்கள் வெகு சீக்கிரத்தில் பழுதாகி விடும். நீங்கள் ஜீப் ப்ரேக் டௌன் ஆகி வேலை பார்த்துக் கொண்டிருப்பதை சில சமயம் பார்க்க முடியும். 

வரும் வழியில் கோதண்ட ராமர் கோவிலில் ஜீப்பை நிறுத்தி,  ஸ்ரீராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்து இருக்கும் கோவிலும் அதன் எச்சம்  புயலின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்த தடத்தை காணலாம். 

அதன் மீதமாக வாசலில் இரு தூண்கள் மட்டுமே. சுவாமி தரிசனத்திற்கு ஈரத்தை உடுத்திக் கொண்டு போகக் கூடாது . எல்லோரும் அப்படிதான் செல்கிறார்கள் . (ஆனால் இதற்கு ஒரு உபாயம் உண்டு. வேஷ்டியை 6/7 முறை உதறி கட்டிக்கொண்டால் அது உலர்ந்ததை கட்டிக் கொண்டதற்கு சமம் என்று சாஸ்திரம் சொல்கிறது).

இன்னும் கொஞ்ச தூரம் வந்ததும் ஜடா மகுட தீர்த்தம். ராவண சம்ஹாரம் முடிந்து ராமன் தன் ஜடையை களைந்து இங்கு நீராடி இருக்கிறார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு சிம்ம ராசிக்கு வரும் போது மாசி மகமும், பௌர்ணமி திதியும் கூடிய சுப தினத்தில் இத்தீர்த்தத்தில் குளிப்பது விசேஷம். 

மற்ற நாட்களில் யாரும் இங்கு போவது இல்லை. 

அங்கேசிருங்கேரி மடத்தை அடைந்து, கொண்டு வந்த மண்ணை மூன்று சிவலிங்களாக (சேது, பிந்து, வேணி மாதவர்) பிடித்து பூஜை செய்யலாம். 

பிறகு, வேணி மாதவரை ஒரு பெரிய துண்டில் கட்டி எடுத்துக் கொண்டு (மூடி போட்ட தாமிர (அ ) பித்தளை பாத்திரத்தில் எடுத்துக் கொள்வது உசிதம்).

இது இனி திரிவேணி சங்கமத்தில் கரைக்கும் வரை நம் பூஜை அறையில். சேது மாதவரை அவர் சன்னதியில் சேர்க்க வேண்டும். 

ஆனால், அது  சாத்தியம் இல்லை. எனவே, அவரை கடலில் கரைப்பதற்கு அங்கேயே வைத்து விட வேண்டும். பிந்து மாதவரை காசி யாத்திரையில் நம் கூட வருமாறு வேண்டிக்கொண்டு அந்தணருக்கு தானமாக தர வேண்டும் (அவர் பஞ்ச கங்கா 

காட்டில் (காசி) இருக்கும் போது ஏன் இங்கேயே தானம் கொடுக்க வேண்டும் ).

அது சரி, எதற்காக இங்கிருந்து சிவலிங்கம் பிடித்துக் கொண்டு போய் அங்கு கரைத்து, அங்கிருந்து கங்கை நீர் எடுத்து வந்து இங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்? என்று நீங்கள் கேட்கலாம் 

கங்கையைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய நினைத்த ஸ்ரீராமர் தன் வில்லைக் கொண்டு நிலத்தை கீற அவளும் பீறிட்டு வெளிப்பட்டாள் (கோடி தீர்த்தம்). 

ஆனால், நாம் கீறினால் கங்கை வருவாளா? அதனால், சிவன் மனம் குளிர இங்கிருந்து பிரயாகை கொண்டு போய் கங்கையில் சேர்க்கிறோம். 

அங்கிருந்து கங்கையை கொண்டு வந்து இங்கு ஸ்ரீசீதை பிடித்த சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறோம். 

மேலும், இங்கிருந்து சிவன் நமக்கு துணையாகவும், அங்கிருந்து கங்கை நம் கூடவும் வருகிறார்கள். கிட்டத் தட்ட  நாமும் பகீரதன் போலத் தான்.

பகீரதன் என்று சொன்னவுடன், அவன் சகர மன்னனின் புதல்வர்களான தன் பாட்டனார்கள் அறுபதினாயிரம் பேரை கரை சேர்க்கத் (சத் கதி அடைய) தானே கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான், 

ஆகவே அந்த கங்கையின் கரைகளில் காசியிலும், அவள் யமுனை, சரஸ்வதி யுடன் சங்கமிக்கும் பிரயாகையிலும் நம் மூதாதையர்களுக்கு பித்ரு கார்யங்கள் செய்வது தானே விசேஷம். 

நம் பாக்கியம். நம் வம்சத்திற்கு அனுக்ரஹமும் கூட எனத் தோன்று கிறது.

தில ஹோமம் செய்த அன்று மதியம் ராமேஸ்வர கோவில்களை சுற்றிப் பார்க்கலாம். 

அங்கே கண்டக்டட் டூர் நடத்து கிறார்கள். அந்த லிஸ்டில் சர்வரோக ஹர தீர்த்தத்தக் கரையில் தென் திசை காவல் தெய்வமாக கோவில் கொண்டு உள்ள மிகவும் சக்திவாய்ந்த நம்பு நாயகி அம்மன் கோவிலுக்கு சென்று வர பேர் இருக்கிறதா என்று அதில் செல்லலாம் . 

ஆனால் அந்த கோவில் அதிக தூரம் எனவும் அதையும் சேர்த்தால் அதிக ரூபாய் கொடுக்கும் படி இருக்கும்.  

கொஞ்சம் பேரம் பேசி  ஒப்புக் கொண்டால் சென்று வாருங்கள்.

முதலில் அவர்கள் கந்த மாதன பர்வதத்திற்கு செல்வார்கள். ஸ்ரீராமர் இந்த மலை ஏறித்தான் இலங்கைக்கு பாலம் கட்ட உகந்த இடத்தை தேடியிருக்கிறார். 

அவர் இம்மணல் குன்றின் மீது தன் பாதம் பதித்ததின் அடையாளம் இன்றும் காணக் கிடைக்கிறது. 

இதன் காரணமாக இவ்விடம் ‘ராமர் பாதம்’ என்றும் வழங்கப்படுகிறது.

இருட்டிவிட்டால் போக முடியாது, கோவிலையும் மூடிவிடுவார்கள் என்பதால் நீங்கள் அடுத்து சென்றது நம்பு நாயகி கோவிலுக்கு செல்லலாம் . 

சுயம்பு அம்மன். அருகிலேயே பூஜைக்குரிய விக்ரஹம். 

வயதான பூசாரி மிகவும் மெல்லிய குரலில் பேசுவார். குனிந்து, சுயம்பு நம்பு நாயகியிடம் நம்மைப் பற்றி விவரம் கூறுவார். 

அவள் அளப்பரிய சக்தி உடையவள், நம் கூடவே இருந்து காப்பவள்  ...தன் தந்தை, பாட்டன் பரம்பரை வழி வந்த நம்பு நாயகியின் பிரசித்தத்தை கூறும் பல கதைகள் உள்ளன...

அங்கிருந்து பஞ்ச முக ஆஞ்சநேயர் கோவில் செல்லவும். பிரம்மாண்ட சிலா ரூபம். இங்குதான், ஸ்ரீராமர் பாலம் அமைக்க உபயோக படுத்திய மிதக்கும் கற்களைக் காணலாம். 

அங்கே ஏதாவது ஒரு கல்லை தூக்கி தண்ணீரை விட்டு வெளியே எடுத்ததும் கனம் கூடி விடும். 

இங்கு, இக்கற்கள் விலைக்கு கிடைக்கிறது.

அடுத்தது, லக்ஷ்மண தீர்த்தம். சேது மகாத்மியம் இத்தீர்த்தத்தின் மஹிமையை விஸ்தாரமாக எடுத்துரைக்கிறது. *இத்தலத்தில் தீர்த்த ஸ்ராத்தம் செய்வது விசேஷமானது.

சங்கல்பம் செய்து, முடி கொடுத்து, இக்குளத்தில் நீராடி பிண்டப்ரதானம் செய்து பித்ருக் கடனை நிறை வேற்ற வேண்டும்.

‘ அஸ்வத்தாமா ஹத : குஞ்ஜர :’* என்று தர்ம புத்திரனை சொல்ல வைத்து ‘ *குஞ்ஜர* :’ என்பது துரோணாச்சாரியர் காதில் விழாமல் துந்துபி முழக்கி அவரை வீழ்த்திய ஸ்ரீகிருஷ்ணனின் தந்திரம் என்று தெரிந்ததும் யுதிஷ்டிரர் மனக் கிலேசமுற்று இங்கு அமைந்துள்ள ராம தீர்த்தத்தில் நீராடி அருகிலேயே கோவில் கொண்டுள்ள ஸ்ரீராமரை தரிசித்திருக்கிறார்.

எதிர் திசையில் சீதா தீர்த்தம்.

ராமேஸ்வரத்தின் மற்ற திசை களுக்கும் காவல் தெய்வங்கள் உண்டு. வடக்கில் பத்ரகாளி. கிழக்கில் உஜ்ஜயினி காளி (அக்னி தீர்த்தம், சங்கர மடம் அருகில்),மேற்கில் துர்க்கை அம்மன். இவர்களையும் தரிசித்து விட்டு சிருங்கேரி மடம் செல்லலாம் 

உங்கள் கவனத்திற்கு

‘காசி யாத்திரை’ என்பது எல்லோருக்கு மானது, எந்த வட்டத்திற்குள்ளும் அடக்க முடியாதது. நம் குலம் தழைக்க, செழிக்க ஒவ்வொரு வரும் அத்யா வஸ்யமாக செய்ய வேண்டியது பித்ரு கார்யம் (ஸ்ராத்தம், தர்ப்பணம்), இதற்கு அடுத்ததுதான் மற்ற எல்லாமே (நித்ய கர்மா, குல தெய்வம், குல குரு, இஷ்ட தெய்வம், கோவில், குளம், மந்த்ரம், ஜபம், தியானம், ஹோமம், யாகம், இத்யாதிகள்). 

பித்ரு கர்மா செய்யாமல் கோவில் போவதனால் எந்த பிரயோசனமும் இல்லை. கோவிலில் இருக்கும் தெய்வம் எல்லோருக்கும் பொதுவானது. 

ஆனால், நம் முன்னோர்கள் நமக்கானவர்கள் மட்டுமே. அவர்கள் வாழ்த்தினால் நம் வம்சம் செழித் தோங்கும். வருந்தினால் கஷ்டப்படும். 

அது எப்படி, நம் பித்ருக்கள் நம்மை சபிப்பார்களா என்றால், இல்லை. ஆனால், பித்ரு தேவதைகள் அப்படி சும்மா விட்டு விட மாட்டார்கள். 

இது ஏதடா, பயமுறுத்துகிறானே, நாம் இதுவரை ஒன்றும் செய்ய வில்லையே என்றால், கவலைப் படவேண்டாம் அதற்குத்தான் இந்த ராமேஸ்வர, பிரயாக, காசி, கயா ஸ்ராத்தங்கள் (முக்கியமாக, கயாவில் பிண்டம் அளிப்பது நம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல, இறந்து போன நம் அடுத்த வட்ட உறவினர்கள், நண்பர்கள், எதிரிகள், எதிர், பக்கத்து வீட்டார்கள், ஏன் நாம் வளர்த்த மாடு, ஆடு, குதிரை, நாய், பூனைகள் போன்ற பிராணி களுக்காகவும் கூட). 

இதை எல்லாம் செய்து முடித்து விட்டு ஸ்ராத்தம், தர்ப்பணம் (ஆண்டுக்கு குறைந்த பட்சம் 15) இவற்றை தொடர்ந்து செய்து வந்தாலே போதுமானது நம் வம்சம் சுபிக்ஷம் அடைய. இதில் மாளய பக்ஷ ஸ்ராத்தங்களும் அடங்கும்.

ஆனால், இந்த யாத்திரை அவ்வளவு சுலபமானது அல்ல. ராமேஸ்வரம் வேண்டுமானால் தனித்து இருப்பதனால் கொஞ்சம் எளிதாக இருக்கும். 

ஊரும் நம்ம ஊர். கர்மாக்களும் குறைவு. ஆனால், காசி போய் சேர்ந்து விட்டால் காலில் சக்கரம்தான் கட்டிக் கொள்ளவேண்டும். பித்ரு கர்மாக்கள் அதிகம். 

எல்லாமே ஜெட் வேகத்தில் நடக்கும். ஒவ்வொருநாளும் அதிகாலையிலேயே எழுந்து ஒவ்வொரு திசையில் 3 –5 மணி நேர பயணம். போய் சேர்ந்த உடனே கார்யங்களை ஆரம்பிக்க வேண்டி இருக்கும். 

நாம் என்ன செய்து கொண்டிருக் கிறோம் என்று புரிவதற்கு முன்பே முடிந்தும் விடும். 

சரியாக செய்தோமா என்று சந்தேகமாகவே இருக்கும். இப்படி யெல்லாம் மன வருத்தங்கள் ஏற்படாமல் பித்ரு கர்மாக்களை முடிந்த அளவு சரியாக செய்வதற்காக நம்மை ஓரளவு தயார் செய்து கொள்வதற்காகவே இந்த பதிவு. 

ஆகவே, காசி யாத்திரை சென்று பித்ரு கர்மா செய்ய இருப்பவர்கள் இத்தொடரை கவனமாக படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். 

பொதுவாக, எல்லோருமே படித்து எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்வது நல்லது.

மறு நாள் காலை, அறையிலேயே குளித்து கோவிலுக்குச் சென்று ஸ்படிக லிங்க தரிசனம் (ஐந்து முதல் ஆறு மணி வரை). பின் இருக்கும் இடம் திரும்பி ஸ்நான சங்கல்பம் செய்து அக்னி தீர்த்தத்தில் (இந்திய பெருங் கடல்) முதல் குளியல் போட வேண்டும். 

அதென்ன அக்னி தீர்த்தம்? ஸ்ரீசீதையை மீட்டு வந்த ஸ்ரீராமன் அவளை அக்னிப் ப்ரவேசம் செய்யச் சொன்னான். இதை கேட்டு அக்னி பயந்தான். ஸ்ரீ சீதை அவனை சமாதானப் படுத்தினாள் ‘உன்னால் எனக்கு ஒரு தீங்கும் நேராது. உன் வெப்பம் என்னை தாக்காது. நான் இக்குளியல் செய்வதனால் உனக்கு எந்த வித அபகீர்த்தியையும் உண்டாகாது. என் பதிவ்ரதத்தீ உனக்கு புகழே சேர்க்கும்’ என்று. 

அவள் தீ புகுந்த இடமே இன்று ‘அக்னி தீர்த்தக் கரை’யாக விளங்குகிறது. அக்னியும் அவளை சுடாமல் குளிர்ந்தான். தன் பாவம் நீங்க இங்கு நீராடியிருக்கிறான். ஆகவே, ‘அக்னி தீர்த்தம்’. (இங்கு தான் ஸ்ரீசீதை இதை சொல்லி இருப்பாள், அக்னி பிரவேசம் செய்திருப்பாள் என்று நினைக்கும் போதே சிலிர்க்கிறது. 

இப்படிப்பட்ட ஸ்தலங்களை நாம் காண்பதற்கே பல ஜன்மாக்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்).

அக்னி தீர்த்தத்தில் இருந்து ராமநாத ஸ்வாமி கோவிலை நோக்கி வரும் போது வளைவில், இடத்தில் உஜ்ஜயினி காளி கோவில். இருக்கும். வலதில் ஸ்ரீசங்கர மண்டபம் (பிரயாகை பாலத்தில் செல்லும் போது (காசியில் இருந்து) கங்கை, யமுனை, சங்கமத்தில் படகுகள் இவற்றைத் தவிர தூரத்தில் தென்படுவது ஸ்ரீசங்கர விமானமே. 

இதற்கெல்லாம் காரணம் யார்? வேறு யார்? நம் ஸ்ரீ மஹா பெரியவா தான். காசியிலும் பஞ்சாயதன முறையில் ஒரு கோவில் கட்டி இருக்கிறார்). 

ஆலயத்தில் நுழைந்து தீர்த்தப் பிரகாரத்தை சுற்றி வந்தால் இருபத்தி இரண்டு புண்ணிய தீர்த்தங்கள். இவற்றில், ஸ்ரீமஹா லக்ஷ்மி, சேது மாதவ தீர்த்தங்கள் மட்டும் குளங்கள். மற்றவை கிணறுகள். 

அனைத்துமே விசேஷம். எனினும் சர்வ, சேது மாதவ, கோடி தீர்த்தங்கள் மிகவும் ஸ்ரேஷ்ட மானவை. ஸ்ரீராமன் தன் வில்லினால் சிவ அபிஷேகத்திற் கென உண்டாக்கியதே கோடி தீர்த்தம். 

 தன் மாமன் கம்சனை கொன்ற தோஷ நிவர்த்திக்காக ஸ்ரீக்ருஷ்ணனே இதில் நீராடி இருக்கிறான்.

ஆனால், ஸ்வாமி அபிஷேக்கதிற்கு இந்த தீர்த்தம் பயன்படுத்தப் படுவதால் இதில் நாம் நேரடியாக ஸ்நானம் செய்ய முடியாது. உள்ளிருந்து கொட்டும் நீர் கோமுகம் வழியாக நம்மை நனைக்கும் . 

 காசி யாத்திரை முடிந்து மீண்டும் இங்கு வந்து கங்கையினால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு ஊர் திரும்பும் போது ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கோடி தீர்த்தமும் வாங்கிக் கொண்டு போய் அதையும் கங்கை சொம்பு களுடன் சேர்த்து வைத்தே சமாராதனை பூஜை செய்ய வேண்டும்.

தீர்த்தக் குளியல்கள் முடிந்ததும் இருப்பிடம் அடைந்து (சிருங்கேரி மடம் அல்லது நீங்கள் தங்குமிடம் ) உடை மாற்றி பார்வண (அ) ஹிரண்ய ஸ்ராத்தம் செய்து, பின் சுவாமி தரிசனம் (பித்ருக்களை காக்க வைத்து விட்டு கோவிலுக்கு செல்லக் கூடாது).

அக்னி மற்றும் கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களில் ஸ்நானம் பண்ணி இருக்குமிடம் அடைந்து உடை மாற்றி உடனே தீர்த்த ஸ்ராத்தத்தை ஹிரண்யமாக செய்யவும். 

அதற்குப்பின் ஸ்வாமி தரிசனம்…செக்யூரிட்டி (செல், கேமரா, வாலட் மற்ற காபின் லக்கேஜில் தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு இங்கும் அனுமதி கிடையாது) 

செக் முடிந்ததும் நேரே கோவிலுக் குள்ளே சென்று . வலப்பக்கம் திரும்பிப் பார்த்திருந்தால் வித்யாசமான செந்தூர ஹனுமனை தரிசிக்கலாம். ஆனால், நாம் முதலில் பிள்ளயாரைத் தானே நாடுவோம். 

ராமநாத ஸ்வாமி கருவறை நுழை வாசலில் எப்போதும் போல் இடப்புறத்தில் சற்றே பிரம்மாண்டமான கணபதி. அவருக்கு தோர்பிகரணம் போட்டுக் கொண்டிருக்கும் போதே வாயிலின் வலப்பக்கம் நிலை கொண்டிருக்கும் முருகப்பெருமானை பார்க்கலாம்.  

இவர்களை சுற்றி வந்தால் மிக பிரம்மாண்டமான சுதை நந்தி கண்ணில் படாமல் போகாது. அவரையும், கொடி மரத்தையும் வலம் வந்து ஸ்வாமி சன்னதிக்குள் பிரவேசிக்கும் போது, முதலில் காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டுத் தான் ராம நாதரை பார்க்க வேண்டும் என்பது பலருக்கு மறந்து விடுகிறது. ஏன் அப்படி?

ராவணனை கொன்றதால் ஸ்ரீராமனை பிரம்ம ஹத்தி பிடித்துக் கொண்டது. தோஷம் நீங்க சிவ பூஜை செய்ய வேண்டுமென கூறினர் ரிஷிகள். 

ராமன் ஹனுமனை அழைத்து உடனே விஸ்வநாத க்ஷேத்ரமான காசி சென்று நர்மதா லிங்கத்தை கொண்டு வர பணித்தார். காசியில் சிவன் எல்லோருடைய காதுகளிலும் தாரக மந்திரமான ராம நாமத்தை ஓதிக் கொண்டிருக்க, அதில் லயித்துப் போன அஞ்சனை மைந்தன் தான் வந்த கார்யத்தை மறந்தார் (இதற்கு வேறொரு கதையும் உண்டு. காசியின் காவல் தெய்வமான காலபைரவரின் அனுமதி பெறாமல் லிங்கத்தை கொண்டு வந்ததனால் அவர் ஹனுமனை வழியிலேயே அதை வைத்து விடுமாறு செய்து விட்டார். 

அந்த இடம் தான் நாகலாபுரம். ஆகவே, மாருதி மீண்டும் காசி சென்று கால பைரவரிடம் பிரார்த்தித்து எதற்கும் இருக்கட்டும் என்று ஒன்றுக்கு இரண்டாக லிங்கங்களை கொண்டு வரும்படி ஆயிற்று. அதனால் தான் கால தாமதம்).

இங்கே முகூர்த்த நேரம் கடந்து விடும் என்பதால் ஸ்ரீசீதை மண்ணைக் கொண்டு சிவலிங்கம் பிடிக்க ராமன் அதற்கே பூஜையை செய்து விட்டார். 

கைக்கு ஒன்றாக இரு லிங்கங்களை கொணர்ந்த வாயு புத்திரனுக்கு வந்ததே கோபம். சீதை பிடித்த சிவலிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தார். அது அசையக்கூட இல்லை. 

ஹனுமன் தன் தவறை உணர்ந்து ராமனிடம் சரணடைய அவரும் ஆறுதல் கூறி வானர வீரன் கொண்டு வந்த இரு லிங்கங்களில் ஒன்றை அருகேயே பிரதிஷ்டை செய்து அதற்கே முதலில் பூஜை, தரிசனம் என்று பிரச்சனைக்கு நல்ல தீர்ப்பு வழங்கி விட்டார். 

ஆகவே, ராமனின் கூற்றுப்படி நாம் காசி விஸ்வநாதரை பார்த்துவிட்டுத்தான் ராமநாத தரிசனம் செய்ய வேண்டும். காசிநாதருக்கு அருகிலேயே பிராகாரத்தில் விசாலாக்ஷி. 

தொட்டடுத்து ஜோதிர் லிங்கம், சஹஸ்ரலிங்கம்….சரி, ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம்? 

அவர்தான் ஆத்ம லிங்கமாக கோவில் வாசலில்  செந்தூரனின் சன்னதியின் பின்புறம் குடி கொண்டுள்ளார். 

இவர்களை பார்க்காமல் நீங்கள் கோவிலை விட்டு வெளியே வந்து விட வாய்ப்பு உண்டு. அவசியம் தரிசனம் செய்யுங்கள்…..

எங்கிருந்து எங்கு வந்து விட்டோம்? திரும்பிப் போய் சுவாமியைக் காண வரிசையில் சேர்ந்து கொள்வோமா?

ராமநாதர் ! அற்புத தரிசனம்! நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யார் யாரோ கொண்டு வந்திருந்த கங்கை தீர்த்தம், பூக்கள், பால் சேர்ந்த கலவையால் ராமேஸ்வரனுக்கு அபிஷேகம். 

இதே போல் நாமும் ஒரு நாள் அந்த புண்ணிய தீர்த்தத்தை எடுத்து வந்து அபிஷேகம் செய்வோம் என்று நினைக்கும் போதே சிலிர்க்கிறது. 

ஆரத்தியை கண்களில் ஒற்றிக் கொண்டு கீழே இறங்கி பிராகாரத்தை சுற்றி வந்தால் கோஷ்டத்தில் மஞ்சள் வஸ்த்திரம் அணிந்து தக்ஷிணா மூர்த்தி. நடராஜர், சஹஸ்ரலிங்கம், வஜ்ரேஸ்வரர், துர்க்கை, மகா லட்சுமி….

ஸ்வாமி சன்னதியில் இருந்து உமையை (பர்வதவர்த்தினி) காணப் போகும் வழியில் சுக்ரவார மண்டபத்தில் அஷ்ட லக்ஷ்மிகள். 

மண்டபத் தூண்களில் மனோன்மணி, மாஹேந்திரி,கௌமாரி, ராஜ ராஜேஸ்வரி புவனேஸ்வரி, அன்னபூரணி என்று அம்பாளின் பதினாறு வடிவங்கள். 

பர்வத ராஜனின் புத்ரியை கண், மனம் குளிர தரிசித்து வலம் வந்தால் மேற்கு பிராகாரத்தில் சப்த மாதர்கள். அட இதென்ன, இங்கே பள்ளி கொண்ட பெருமாள்? 

சடாரி வைத்துக் கொண்டு, தீர்த்தம் பெற்று வெளியே வந்து கோடி மரம் முன்பு வீழ்ந்து வணங்கி எழுந்து இரண்டாம் பிராகாரம் வலம் வரலாம் என்று நினைத்தால், தரை முழுவதும் தண்ணீர். ஓஹோ, இதுதான் தீர்த்தங்களுக்கு செல்லும் பிராகாரம், நாம் தான் காலையில் இருந்த அவசரத்தில் கவனிக்காமல் விட்டு விட்டோம் போலும், அப்படியானால் அந்த உலகப் பிரசித்த பிராகாரம்? 

அது மூன்றாவது. கிழக்கு மேற்காக 640 அடி. கிழக்கும், மேற்கும் 400 அடி. ஐந்தடி உயரமுள்ள மேடையின் மீது வரிசையாக தூண்கள். கண் கொள்ளா காட்சி. 

பிரமிப்பின் உச்சத்துக்கே போய் விடுகிறோம்! 

வந்த கார்யம் முடிந்து விட்டது. தீர்த்த ஸ்ராத்தம் செய்து, பிரயாகையில் கரைக்க வேணி மாதவரை பத்திரப் படுத்திக் கொண்டாகி விட்டது. 

ராமேஸ்வரத்துக்கு வெளியே, உள்ளே உள்ள இதிகாச, புராண, சரித்திர புகழ் பெற்ற கோவில்களில் உறையும் தெய்வங் களையும் ஆலயத்திற்குள்ளே அனைத்து சன்னதிகளையும் தரிசனம் செய்தாகி….வெயிட். இன்னுமொரு மூர்த்தத்தை பார்க்க வேண்டியுள்ளது. 

ராமநாத ஸ்வாமியின் பின்புறம் இரண்டு, மூன்றாவது ப்ராகாரங்களுக்கு இடையே வெள்ளை சலவைக்கல்லால் (ஆகவே, ஸ்வேத மாதவர்) ஆன சேது மாதவர் ‘என்னை பார்க்காமல் போகிறீர்களே, என்னாலும் உங்களை சந்திக்க வர முடியாமல் கால்களில் சங்கிலி போட்டு கட்டி இருக்கிறார்களே’ என்று வருத்தத்துடன் சொல்கிறார். 

வாருங்கள், ஏன் அவரை அவ்வாறு பிணைத்திருக் கிறார்கள் என்பதை அறிந்து, நம் அனுதாபத்தை தெரிவித்து, தரிசனமும் செய்து விட்டு வருவோம்.

பாண்டிய மன்னன் யாகம் செய்ததன் பொருட்டு தன் மனையாளோடு கடலாடி திரும்பும் போது அழுது கொண்டிருந்த சிறுமி ஒருத்தி எதிர்ப்பட்டி ருக்கிறாள். 

அரசன் தன்னோடு வருமாறு அழைக்க, அவள் ஒரு நிபந்தனை விதித்தாள் ‘என் விருப்பமின்றி என்னை யாராவது தொட்டால் அவரை தண்டிக்க வேண்டும்’ என்று. வேந்தன் அதிர்ந்தான். என்றாலும் சம்மதித்தான். 

பின்னொரு நாள் எவனோ ஒருவன் அவளை கைப் பிடிக்க அவள் கூச்சலிட்டாள்.

கோன் ஓடோடி வந்தான். கை பிடித்தவன் கால்களை சங்கிலியால் பிணைத்து விட்டான். அன்றிரவு கனவு. வந்த கள்வன் ஸ்ரீமன் நாராயணனே, அவன் பிடித்த கைகள் ஸ்ரீமஹா லக்ஷ்மியுடயதே என்பதையும், அவள் தன் பக்தியை சோதிக்கவே செய்தாள் என்றும் புரிந்து கொள்கிறான். 

உருகி உருகி சேது மாதவ லக்ஷ்மி ஸ்துதி பாடுகிறான். இதை சேது மகாத்மியம் சிறப்பித்துக் கூறுகிறது.

ஸ்ரீமஹா லக்ஷ்மி இப்படி என்றால், பர்வத வர்த்தினி அப்படி. எப்படி?அவள் ராமர் பாதம் பதிந்த கந்தமாதன பர்வதத்தையே தன் பிறந்த வீடாகக் கொண்டு ஆடி மாதத்தில் அங்கு போய்விடுகிறாள். 

ஸ்ரீராமனாதர் திருக்கல்யாண உற்சவத்தின் போது மாமனார் வீடு சென்று தங்குகிறார் (அங்கேயும் இதே கதை தானா?). 

 *இந்த சமயத்தில் ராமேஸ்வர ஆலயம் அடைக்கப் பட்டிருக்கும். ஆகவே, ஆடி மாதம் ராமேஸ்வரம் போகிறீர்கள் என்றால் விசாரித்துக் கொண்டு செல்லவும்.* 

சொல்வதற்கு இன்னும் ஓரிரு விஷயங்கள் உள்ளது. ஸ்ரீ சீதை இம்மண்ணை எடுத்து சிவலிங்கம் பிடித்ததால் ராமேஸ்வரத்தில் ஏர் கட்டி உழவில்லை, சூளையிட்டு சட்டிப்பானை சுட்டெடுப்பதும் இல்லை, சிவலிங்க வடிவமாக இருப்பதால் செக்கு ஆடுவதும் கிடையாது.

சரி, இப்படியே போய்க்கொண்டிருந்தால் எப்போது காசி சென்று சேர்வது? ஆகவே, ராமேஸ்வர பார்ட்டை இத்துடன் முடித்துக் கொள்வோமா? 

இப்போது நாம் வடக்கு நோக்கி வாயு புத்திரனைப் போல பறந்து சென்று வாராணசி என்கிற காசி யாத்திரை இனிமேல் தான் போகப் போகிறோம் ........

 *மேலும் சொல்கிறேன்* .....

Written / Compiled by

M.S. Ramesh Salem

Mob - 8754780924

Saturday, May 11, 2024

நினைக்கத்தெரிந்தமனமே_1

நினைக்கத்தெரிந்தமனமே_1

எழுத்தாக்கம்: பாஸ்கர் சத்யா

ஒரு‌ சிறிய குடும்பத்துக்குள் போவோமா?

வாசு என்கிற வாசுதேவன்.  இவர்தாங்க‌ இந்த கதையின் ஹீரோ.  இருபத்தேழு வயது தற்போது.  தனியார் கம்பெனி ஒன்றில் உத்யோகம்.  எப்போதாவது கம்பெனி கிளைகள் சரியாக சென்று கொண்டிருக்கிறதா என்பதை பார்ப்பதற்காக ஒரிரு நாட்கள் அலுவலக டூர்களோடு கூடிய உத்யோகம்.   குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள கிளைகளில்.  மார்க்கெட்டிங் இண்டெலிஜன்ஸ் பொறுப்புகள் உள்ள அதிகாரி அந்த நிறுவனத்தில் என்று கூட சொல்லலாம்.

சுமதி.  வாசுவின் சுந்தரி.  நுங்கம்பாக்கம் எக்ஸைஸ் அலுவலகத்தில் கணக்கு உத்யோகம்.  வாசுவை விட ஒரு வயது கம்மி.  மாதக் கணக்கில்தான் வயது வித்யாசம் என்பதே கூட உண்மை.   பதவி உயர்வுகளுக்கு அலுவலக பரிட்சை எழுத விருப்பம்.  ஆனால் பதவி உயர்வு கிடைத்து விட்டால் வேறு இடத்துக்கு மாற்றலாகி விட்டால் என்ற பயத்தில் பரிட்சை எழுதுவதில் சற்று தயக்கம்.

பெற்றோர் சம்மதத்திற்காக ஒரு வருடத்திற்கு மேல் காத்திருந்து காதல் திருமணம் எளிய முறையில் மைலாப்பூரில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதில்.

உண்மையாக சொல்லப்போனால் இவளுக்குத்தான் அவன் மீது அதீத ப்ரேமை.  கங்கணம் கட்டிக் கொண்டு பெற்றோர் சம்மதத்திற்காக சில முறை ருத்ர தாண்டவங்கள் ஆடி ஒப்புதல் பெற்றது அவள் தான்.  என்னவோ அவனைப் பிடித்துவிட்டது.  மனம் சில மாத காலங்கள் அவனையே நினைக்க நினைக்க வலியப் போய் தானாகவே அவனிடம் கேட்க, ஆரம்பத்தில் 'நோ' வில் தொடங்கி மெல்ல மெல்ல அவனும் சம்மதிக்க‌ அவரவர் வீட்டு குளியலறையில் காதல் டூயட்டுகள் பாடி மகிழ மனங்கள் நெருக்கத்தை கொடுத்துவிட்டன.

வாசுவை நிராகரிக்க காரணத்தை பெரிதாகத் தேட முடியாவிட்டாலும் அவனுக்கு  அரசாங்க உத்யோகம் இல்லை என்ற சாக்கு சுமதியின் பெற்றோருக்கு.

மன்னார்குடி-தஞ்சாவூர்; அய்யர்-அய்யர்;

வடமாள்- வடமாள்;

ஹரிதம்-பாரத்வாஜம்; பூரட்டாதி- திருவோணம்.

இப்படி பொருத்தம் இருந்ததால் ஏதாவது சாக்கு சொல்லி தட்டிக் கழித்தால் தானே பெற்றோர்.

ஒரு வருஷம் தானே வித்யாசம் என்று கொஞ்ச நாள் முரண்டு பிடித்தார்கள் ஆரம்பத்தில் அவளது பெற்றோர்கள்.  பிறகு அதுவும் அவளிடம் தோற்க அரசாங்க உத்யோகம் இல்லை என்பது வாதப் பொருளாயிற்று.

'இப்படியே தட்டிண்டே இருந்தா கட்டுன புடவையோட அவாத்துக்கு கிளம்பிடுவேன் பாத்துக்கோங்கோ.  அப்பறம் என் மேல‌ வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை.'

'கண்ணுக்கு லக்ஷணமா இருக்கான்.  கை நிறையன்னு‌ இல்லாட்டியும் குடும்பம் நடத்தற அளவுக்கு சம்பாத்தியம்.  போதாக்குறைக்கு என் சம்பளமும் இருக்கு.  எனக்கு அவன புடிச்சிருக்கு.  வாழ்க்கை நடத்த போறவ நான்.  அப்படியே கஷ்டப்பட்டாலும் இங்க வந்து கதவை தட்டமாட்டேன்.'

அவள் காட்டிய உறுதி அவர்களை வேறு வழியின்றி சம்மதிக்க வைத்தது.

'அப்பறம் என்னன்னா?  இதுக்கு மேல அவளோட பேசி ஜெயிக்கப் போறோமா என்ன? போய் பேசிட்டு வருவோம்னா.  சிலதுகளுக்கு பட்டாத்தான் தெரியும்.  அவனோட அங்க நின்னா இங்க நின்னா அப்படி இப்படின்னு எல்லாரும் பேசறதுக்கு முன்னாடி முகூர்த்த நாள் பாருங்கோ.  பெத்த கடனுக்கு ரெண்டு அட்சதைய போட்டுட்டு நம்ம வேலைகள பார்ப்போம். ‌அதோட தலையெழுத்து எப்படியோ அப்படியே நடந்துட்டு போறது.'

அம்மா பர்வதமே இப்படி பேசியவுடன் அப்பா சுந்தர மூர்த்தி சும்மா இருக்க முடியுமா?

வாசுவின் அம்மா கோமதி வந்தவர்களை வரவேற்றாள்.  கிழக்கு தாம்பரம் மோகன் தெருவில் அப்போது வீடு.

'புள்ள சொன்னான் நீங்க வருவேள்னு.  ரெண்டு தடவை சுமதி நம்மாத்துக்கு வந்துருக்கா.  உங்க பொண்ணு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு பேசறா.  பேசறதெல்லாம் பாத்தா அப்படியே இந்திரா காந்திதான்.  இந்த காலத்து பொண் கொழந்தைகள் இப்படித்தான் இருக்கணும்.  எனக்கு புடிச்சு போச்சு.  அவன் கிட்டயே சொல்லிட்டேன்.  அவதான் இந்தாத்து மாட்டுப் பொண்ணுன்னு.  நான் பாட்டுக்கு பேசிண்டே போறேன் பாருங்கோ உங்களுக்கு மனப்பூர்வமா சம்மதம் இருக்கான்னு தெரிஞ்சுக்காம.'

'மாமி, பொண்ண பெத்தவா‌ இல்லையா நாங்க.  உண்மையா உங்க கிட்ட பேசணும்னா எங்களுக்கு ஒரே பொண்ணு சுமதி.  அவ  கல்யாணத்த எப்படி எப்படியோ  பண்ணனும்னு தான் ஆசை.  அரசாங்க வேலைல அவ இருக்கறதால ஏகப்பட்ட ஜாதகம்  வந்துண்டு போயிண்டு இருக்கு.'

'நீங்க பேசறத பாத்தா உங்களுக்கு என் புள்ள வரன்ல அவ்வளவா அபிப்ராயம் இல்லையோன்னு சந்தேகமா இருக்கே. எதா இருந்தாலும் மறைக்காம சொல்லிடுங்கோ.   அதனால உங்கள வித்தியாசமா எடுத்துக்க மாட்டேன்.  என் புள்ளைக்கு நல்ல தனம் சொல்லி புரிய வைக்கிறேன்.'

'மாமி, நான் ஒண்ணும் சொல்ல வந்தத முழுசாவே முடிக்கலையே.  பெத்தவாளுக்கு இருக்கிற அபிலாஷைய சொன்னேன்.  எங்க பொண்ணு கிட்ட நிறைய பேசிட்டோம்.  உங்க புள்ளையாண்டானத் தான் புடிச்சிருக்கு கல்யாணம்னா உங்க புள்ளையோடத்தான் அப்படின்னு ஒத்த காலுல நிக்கறா.  அதுக்காகத்தான் உங்க அபிப்ராயத்தையும் தெரிஞ்சுண்டு மேற்கொண்டு ஆக வேண்டியத பார்க்கலாம்னு ....  ஏன்னா, நான் மட்டுமா இங்க வந்திருக்கேன்.  நீங்களும் நாலு வார்த்தை பேசலாமே.  மாமியும் சங்கோஜம் இல்லாம பேசறாளில்லையோ?'

'பர்வதம், நீதான் அழகா பேசிண்டு வரியே.  நா வேற தனியா பேசணுமா என்ன?  மாமி, ரெண்டாத்துலேயும் விஷயம் தெரிஞ்சிருக்கு.  தள்ளிப் போட வேண்டாம் இனிமேலைக்காவது.  என்ன நான் சொல்றது?  பெத்தவாளோட கல்யாண ஒப்புதல தாண்டி நிறைய இருக்கோண்ணோ?'

'சார், பையன் உத்யோகத்துக்காக இங்க வந்தோமே தவிர எங்க மனுஷாக்கள் எல்லாம் கும்பகோணம் மன்னார்குடி பக்கம்.  எல்லார் கிட்டேயும் தம்பட்டம் அடிச்சிண்டிருக்க வேண்டாம்.   ஆளுக்காள் பேச ஆரம்பிச்சா திருஷ்டி தான் மிஞ்சும்.   என் பொண்ணு ரேவதி பெங்களூர்ல இருக்கா.   வாசுவோட அஞ்சு வயசு மூத்தவ.  அவ கிட்ட அரசல் புரசலா பேசிட்டேன்.  அவளும் சரின்னுட்டா.  ரேவதி கல்யாணத்துக்காக வாங்கின கடன் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு.  அது விஷயமா புள்ள கிட்ட பேசணும்.  வர பொண்ணு தலைல அந்த சுமை ஏறக்கூடாது பாருங்கோ.  வாசுவுக்கு அப்பா இருந்திருந்தா இப்படி பேச வேண்டிய அவசியம் எனக்கு இருந்திருக்காது.'

'அப்ப என்ன சொல்ல வரேள்?  கடனெல்லாம் முடிஞ்சாத் தானா மத்ததெல்லாம்?'

'நான் அப்படி அந்த அர்த்தத்துல சொல்லல.  இன்னிக்கு கொஞ்சம் டைம் கொடுத்தேள்னா வாசுவையே‌ வந்து பேச சொல்றேனே.  கடன் விவகாரங்கள் எல்லாம் அவனுக்குத் தான‌ தெரியும்?  அந்த அர்த்தத்துல சொன்னேன்.'

'கடன் காச்சி பிரச்சனையெல்லாம் தெரியாமையே எங்காத்துல இருந்துட்டோம்.  எங்க பொண்ணுக்கு என்ன பதில் சொல்றது இப்ப?  அத மாத்ரம் சொல்லுங்கோ?'

'மாமி, நீங்க எப்படியெல்லாமோ பேசறேள்.  நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே.  சுமதி தான் என் மாட்டுப் பொண்.  ரெண்டு மூணு நாளுல என் புள்ள வந்து பேசுவான்.  எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோங்கோ.  நான் ஏதாவது பேசத் தெரியாம பேசிட்டேனோன்னு தெரியல.'

'நீங்க சரியாத்தான் பேசறேள்.  எங்காத்து அசமஞ்சத்துக்கு கடன் கத்திரிக்கா விஷயம் புரியாம நாளைக்கே கல்யாணம்னு பேசிட்டு வரச் சொன்னா.  சரி மாமி, கடனுக்கு ஒரு வழி பண்ணிட்டு சொல்லி அனுப்புங்கோ.  திரும்ப வந்து பேசறோம்.'

அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்த கோமதிக்கு ஒரே குழப்பம்.  'சுமதிய பெத்தவாளுக்கு விருப்பம் துளி கூட இருக்கற மாதிரி தெரியலையே?  நாமதான் அவசரப்பட்டு சுமதி கிட்ட வாக்கு  கொடுத்துட்டோமா?  நேக்கு ஒண்ணும் புரியலையே.'

லேக் வ்யூ ரோடுக்கு பக்கத்தில் உள்ள காந்தி தெருவில் மெட்ராஸ் வேலைக்காக சுமதி குடியிருக்கும் போர்ஷனுக்குள் நுழைகிறார்கள் பர்வதமும் சுந்தரமூர்த்தியும்.  தஞ்சாவூரிலிருந்து ஒரு வருஷமாக இழுத்துக் கொண்டிருக்கும் இந்த 'காதல்' பிரச்சனைக்காக பிரத்யேகமாக வந்திருக்கிறார்கள்.

ஆஃபீஸிலிருந்து வழக்கத்துக்கு முன்னதாகவே ஆத்துக்கு வந்து அவர்களாக பேச்சை ஆரம்பிப்பார்கள் என்று காத்திருந்த சுமதிக்கு பொறுமை போய்க் கொண்டிருந்தது.  எனவே அவளே ஆரம்பித்ததில் வியப்பில்லை.

'என்னம்மா, போய் பேசினேளா?  என்ன சொன்னா வாசு அம்மா?'

'அவாத்துல ஏதோ பொண்ணு கல்யாண கடன் இருக்காம்.  இப்ப சப்திக்கு தோது படாதுங்கறா.  எவ்வளவு கடன்னு சொல்லித் தொலைச்சாலும் கல்யாண செலவோட செலவா அதையும் சேத்துக்கலாம்.  நன்னா புடிச்சே டி மாப்புள்ளைய ஒரு கடன்கார குடும்பத்துலேந்து.'

ஏதோ சிக்கல் பேச்சுவார்த்தையில் என்று புரிகிறது சுமதிக்கு.

'அப்பா இங்க வா.  அம்மா நீயும் இப்படி உட்காரு.  ஒண்ணு விடாம என்ன பேசிட்டு வந்தேள்னு இப்பவே சொல்லியாகணும்.  மறைச்சு கிறைச்சு பேசற வேலையெல்லாம் வேண்டாம்.  ரெண்டு மாலை, கையெழுத்துப் போட ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா போதும்.  ரிஜிஸ்டர் ஆஃபீஸ் இருக்கவே இருக்கு.  கௌரவம் கௌரவம்னு எப்போ பார்த்தாலும் வாய் ஓயாம சொல்லிண்டிருக்கேளேன்னு பாக்க வேண்டியிருக்கு.  நீங்க ஆரம்பிக்கறத பார்த்தா ஒழுங்கா வாசு அம்மா கிட்ட பேசியிருப்பேள்னு தோணல.'

'செல்லம் கொடுத்து கொடுத்து நீ இழுத்த இழுப்புக்கு தான் வந்திண்டிருக்கோமே.  அந்த மாமி சொன்னது இதுதான்.  கல்யாண கடன் இருக்காம்.  ரெண்டு நாளுல அவாத்து புள்ள அதான் வாசு வந்து பேசுவானாம்.'

'அம்மா அப்பா உங்க ரெண்டு பேரையும் கெஞ்சி கேட்டுக்கறேன்.  இனிமே என் கல்யாண விஷயத்துல நீங்க இனி தலையிட வேண்டாம்.  எனக்கு கல்யாணம்னு ஒண்ணுன்னா அது வாசுவோட தான்.  அதுக்காக மத்த பொண்கள் மாதிரி கண்ண கசக்கிண்டு இடுஞ்சி போய் ஓரத்துல ஒக்காந்திருப்பேன்னு மாத்திரம் தப்பு கணக்கு போட்டுடாதீங்கோ.  ஏதோ வாசு அம்மா உங்க ரெண்டு பேர் சம்மதத்தோடத்தான் அந்தாத்துக்கு வரணும்னு பிடிவாதமா சொன்னதாலத் தான் இவ்வளவு கெஞ்சல் உங்க கிட்ட.  ஒண்ணும் மசியலைனா வாசு அம்மாவை எப்படி ஒத்துக்க வைக்கறதுங்கறதும் நேக்கு தெரியும்.'

இப்படி சுமதியின் பிடிவாதமும் போர்க்குணமும் ரெண்டு குடும்பங்களின் மனங்களைத் தளர்த்தி சுமதியின் விருப்பத்திற்கேற்ப மிக எளிய முறையில் மைலாப்பூர் தியாகராஜர் சமாஜத்தில் சாஸ்த்ரோக்தமாக நடத்தி வைத்தன.

தொடரும்

Sunday, May 5, 2024

சொர்க்கவாசல் 2:

 சொர்க்கவாசல் 2:


ஸ்ரீவைகுண்டம் சொர்க்கவாசல் திருநாள் வந்தாலும் வந்தது; அவ்வூர்க் குடும்பஸ்தர்க தலளின் வீடுகளில் இட நெருக்கடி ஏற்படவும் காரணமா இருந்தது. பக்கத்து ஊரில் உள்ள உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், படைப்படையாக வந்து ஒவ்வோர் வீட்டிலும் முகாம் போட்டு விடுவது வழக்கம். அவ்வூரில் ஜனசங்கியை எதிர்பாராவகையில் ஏறுவது இரண்டே இரண்டு நாட்களில் தான். ஒன்று, சொர்க்க வாசல் திறக்கப்படும் வைகுண்ட் ஏகாதசி அன்று. பிறகு ஐந்தாம் திருவிழா அன்று, என்றோ வரும் ஐந்தாம் திருநாளில் எங்கிருந்தோ வரும் பிரபல நாதஸ்வர வித்வான்களின் வாசிப்பைக் கேட்கக் கூடுவார்கள். ஏகாதசியனறோ புண்ணியம் சம்பாதிக்கக் குழுமுவார்கள்!

அத்தகைய ஏகாதசி யன்று, புண்ணியம் சம்பாதிக்கக் கிளம்பிய ‘ பட்டாளம்’ ஒன்று அழகு சேரியிலிருந்து வந்து ஸ்ரீவையில் ஓர் விட்டில் முகா மிட்டது. மறுநாள் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கு முன்பு கல் வீட்டிலேயே நரகத்தின் வாசல் திறக்கப்பட்டு விட்ட்து. ஐந்தாறு ‘குழந்தை குட்டிகள் ‘, மூன்று ‘ வாண்டுப் பயல்கள் ‘, நாலு வனிதா மணிகள் ஆகியோர் அத்திருப்பணியை ஆற்றினர். அவர்களில் அகிலாண்டமும் கலந்து கொண்டாள்.

அவள் படிப்பிலே ‘பிரைமரி ‘யைத் தாண்டி விட்டாள் என்பதனால், அழகு சேரியில் அவளுக்கோர் தனி மதிப்பு. அவளுக்கோ முழுத் தேர்ச்சியும் இல்லாத நாகரிகத்தில் அவ்வூருக்கே ‘அத்தாரிட்டி’ அவள் தான்! அந்த லட்சணத்திலே, எடுத்ததற் கெல்லாம் லகானைச் சுண்டி இழுக்க, அவள் கணவன் இங்கு இல்லை. கேட்க வேண்டுமா அவள் ஆர்ப்பாட்டத்தை!

அவளுக்கு உதவிக்கு வந்து சேர்ந்தாள் மீனாட்சி. பக்கத்துப் பட்டிக்காடுகளில் எதையோ ஒன்றைச் சேர்ந்தவள் தான் அவள். நாகரிகக் கலையிலும், கல்வியிலும் தனக்கு நிகர், தானே என்று தலை நிமிர்ந்து திரியுங் குட்டி. அவ் வாடை பட்ட அகிலாண்ட்ம், அவளுடன் சேராமல் இருப்பாளா? ஆகவே, இரண்டு பேரும் கூடினார்கள், கூடினார்கள் ‘கூண்டு வண்டிக் காளை போலே!’

இவர்கள் இருவரும் தனிக் கட்சியானதும் அழகு சேரி அம்மாமிகள், அவர்களைப் பற்றி வம்பளக்க ஆரம்பித்தனர். அவர்களை ‘மேய்த்து அடக்க’ வந்த அண்ணாச்சி, தமது கடமையைச் செய்து முடித்தாயிற்று என்ற தைரியத்தில் எங்கோ மறைந்து விட்டார். தட்டிப் பேச ஆள் இல்லாததால் அவர்கள் பாடு ஒரே தொம்பப்பாளையம் தான்!

ஸ்ரீவைகுண்டம் கண்ணபிரான் சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பன்று அமர்க்களத்திற்குக் குறைவா? நல் திருப்பதி என்று சொல்லிக் கொண்டு அங்கு மிங்கும். எல்லோரும், இங்கேயே சொர்க்கத்தில் சீட் ரிசர்வ் செய்ய் அடிகோல முயல்பவர்களும் போக, சின்னப் பயல்களின் அட்டகாசமும் கூடி ஊரே சலசல வென்றிருக்கும்.

அத்துடன் கண்ணுக்கினிய விஷயங்களும் இல்லாமலா போகும்! வானவில்லிலும் காண முடியாத வர்ண வேறுபாடுகளை உடைய சேலைகளை அணிந்து, அப்படியும் இப்படியும் திரிபவர்கள் அழகை வர்ணிக்க ஒரு கம்பராகவோ, சுவாரஸ்ய் மாகப் பேசி மகிழ ஒரு வம்பராகவேர் தான் இருக்க வேண்டும்.

இக் கூட்டத்திலே தீவிரமாகக் கலந்து கொண்டனர் அகிலாண்டமும், மீனாட்சியும். தங்கள் திறமையைக் கொட்டித் தங்களை அலங்கரித்து, ஏராளமாக நகையணிந்து திரிந்தனர்.

சொர்க்க வாசல் திறக்கும் நேரம். மேளம் அலறுகிறது. எங்கும் கோஷம். கதவு திறப்பதைக் காண ஓடி வந்தனர் பக்தர்கள். அவர்களிடையே நின்ற அகிலாண்டம், சாமி தரிசனம் செய்யத் தலை நிமிர்ந்ததும், தன்னையே கூர்ந்து கவ்னிக்கும் இரு கண்களை நோக்கினாள். ஆச்சர்யத்தால் மீண்டும் கவனித்தாள்.

ஆம்! சந்தேகமேயில்லை. கோபக் கனல் பறக்கும் விழிகள், அவள் கணவர் சிதம்பரம் பிள்ளையினுடையவை தான். சாக்ஷாத் அவரே தான் அங்கு நின்றார். அம்முகம். திறக்கப் போகும் சொர்க்கவாசலையோ, பக்தர்களுக்கு மோக்ஷம் தருவதாக உறுதி கூறி நின்ற சாமியையோ, கூட்டத்தையோ கவனிக்க வில்லை. வேண்டாத அழகெல்லாம் செய்து கொண்டு, அடுக்கடுக்காக நகையணிந்து ஆடித் திரிந்த அகிலாண்டத்தை எரித்து விடும் பாவனையிலே குத்திட்டு நின்றன அவர் கண்கள்!

பாவம், அகிலாண்டம்! இளமையின் துடிப்பிற்கு, இயற்கையின் தூண்டுதலுக்கு இணங்கி விட்டாள். அழகு செய்ய விரும்புவது பெண்ணின் குணந்தானே? எனினும், அவள் மனம் துடித்தது. அவர் போக்கு அவளுக்குத் தெரியும். தான் வர வில்லை என்று சொல்லி விட்டு இன்று வந்திருக்கிறாரே! ஏன்! தன்னைச் சோதிக்கலா?..,என்று எண்ண எண்ண அவள் தேகம் பதறியது. அங்கு முழங்கிய வாத்திய கோஷங்கள் அவளை வதை செய்தன. தலை நிமிர முடியவில்லை அவளால். அவ்வளவு கடுமையான பார்வை! அதை அவளால் மறக்க முடியவில்லை. அங்கு நிற்கவே நிலை கொள்ள வில்லை அவளுக்கு.

இன்னும் சொர்க்க வாசல் திறக்க வில்லை; திறந்தால் தான் என்ன? அவள் உள்ளத்திலே புகுந்த அந்தகாரத்தைத் துரத்தக் கூடிய ஜோதியா தோன்றிடப் போகிறது அங்கே!

அகிலாண்டம் கவலையுடன் தளர் நடையில் வீடு சேர்ந்தாள். அவசரம் அவசரமாகத் தன் நகைகளைக் கழற்றினாள். மணிக்கணக்காக-பாடுபட்டு செய்த அலங்காரத்தை வெறுப்பாகக் கலைத்தாள். அழகை எடுத்துக் காட்டிய் நாகரிக முறைச் சேலைக் கட்டைக் குலைத்துச் சாதாரண முறையில் உடுத்துக் கொண்டாள். இருந்தும் அவள் மனதில் அமைதி சூழவில்லை. இதயத்திலே துடித்த கலவரத்தின் சாயை அவள் முகத்தில் பிரதிபலித்தது.

தன்வினை....-36 கடைசி பாகம்

 தன்வினை... கடைசி பாகம்

தன்வினை....-36

By N Krishnamurthy 

 முடிவுரை

வழக்கம் போல கதாபாத்திரங்களின் சில பிற்கால நிலையை சொல்ல முனைகிறேன்.

வினயாவும், சௌஜன்யாவும்  என்னதான் முன் போல பழக முயன்றாலும், அவர்கள் நட்பில். பழைய நெருக்கம் இல்லை.

சௌஜன்யாவிற்கு பிறந்த ஒரே பெண் குழந்தை மூளை வளர்ச்சி குன்றியதாக இருந்தது.

இதனால் அவள் வாழ்க்கையே இருண்டு போனது.

ரயில் பாதையை கடக்க முயன்ற கேசவன் நம்பூத்ரி  மீது ரயில் மோதி தூக்கி எறியப்பட்டார். குற்றுயிரும், குலையுயிருமாக இருந்த அவர் அயனாவரத்திலிருந்த ரயில்வே ஆஸ்பத்ரியில் சேர்க்கப்பட்டு ஆறு மாதம் படுக்கையில் இருந்தார். வலது கை முற்றிலுமாக நீக்கப்பட்ட நிலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

வினயாவிற்கும், ஜகனுக்கும் கல்யாணம் முடிந்த இரண்டாவது வருடத்தில் ஆண் குழந்தை பிறந்தது. முன்பே தீர்மானித்தபடி குழந்தைக்கு சிதம்பரம் என பெயரிட்டனர். அவனை அவர்கள் செல்லமாக *சித்* என அழைத்தனர். 

மனோகரன் வாழ்க்கை நரகமானது. அவரது மனைவி கோமாவிலிருந்து மீளாமாலே இறந்தாள்.  மனோகரன் கிட்டத்தட்ட துறவியாகி விட்டார். ஓரிடத்தில் நில்லாமல், கோவில், கோவிலாக சென்று வாழ்க்கையை கழித்தார்.தான் செய்த காரியத்தை நினைத்து,நினைத்து வருந்தினார். கண்ணீர் விட்டார். கடைசியாக காசிக்கு சென்று காலத்தை கழிக்க ஆரம்பித்தார்.

 மைதிலி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மன நோய் காப்பகத்திலிருந்து, பின்னர் குணமாகி வெளியே வந்தாள். வேறெங்கும் வேலை கிடைக்காததால், அவள் மன நோய் காப்பகத்திலேயே பணி புரிந்து காலத்தை கடத்தினாள். தனக்கு ஏன் மனநோய் வந்தது என்று தினமும் எண்ணி எண்ணி மாய்ந்து போனாள்.

சிதம்பரம், வினயாவிற்கு யார் செய்வினை செய்தது என்று தெரிந்தபோதிலும் அதை யாரிடமும் (மனைவி சாரதா உட்பட) வெளியிடவில்லை.

வினயாவும்,ஜகனும் வருடம்தோறும்  மூன்று நாட்களாவது  குருவாயூர்,திருசூர், சோட்டானிக்கரா செல்வது மட்டுமல்லாமல் பெருவனம் சென்று கேசவதாசை சந்தித்து ஆசி பெற்று வந்தனர்.

கணேசனும்,விமலாவும் ,கணேசன் ரிடயர் ஆன பின், வேளச்சேரியில் ஜகன் வீட்டருகிலேயே ஒரு அப்பார்ட்மெண்ட்டிற்கு குடி பெயர்ந்தனர்.

வினயா இரண்டாம் முறை கர்பமாக இருப்பதாக கேள்வி.

சொர்க்கவாசல் - 1

 சொர்க்கவாசல்

அகிலாண்டம்…அகிலாண்டம்!’ என அவசரமாக, அன்பு வழியும் குரலில், கூப்பிட்டுக் கொண்டே நுழைந்தார் சிதம்பரம் பிள்ளை. 

அடுப்பங்கரையிலே ‘கர கர’வென்று பாத்திரங்களை அலம்பும் பொழுதே கோர நாதங்களை ஒலி பரப்புவதில் ஈடுபட்டிருந்த அகிலாண்டத்தின் காதுகளில் அவரது அன்பழைப்பு விழ வில்லை. ஒரு பதிலும் வராததைக் கண்ட பிள்ளை, மறுபடியும் கத்தினார், கொஞ்சம் கடுமையான குரலில்.

‘என்னா?’ என்ற பதிலை வீட்டினுள்ளிருந்து எல்லா அறைகளையும் தாண்டி அவர் காதில் வந்து விழுவதற்கும், ‘சவம், கூப்பிட்டா உடனே வந்து தொலையறதில்லை’ என அவர் முணு முணுப்பதற்கும் சரியாக இருந்தது.

அம்மாளும் வழக்கம்போல் ‘இந்தா வந்துட்டேன்’ என்று முன்னறிவிப்புக் கொடுத்து விட்டு வந்து சேர்வதற்குக் கால் மணி நேரம் பிடித்தது. தம் முன்னால் வந்து நின்றவளை முறைப்பாக விழித்தார் பிள்ளை. ‘என்னா கூப்பிட்டேளே? எனக்கு வேலை கிடக்கு’ என்றாள் அகிலாண்டம்.

‘ஹும். உனக்கு எப்பவும் வேலை தான், எப்பவும் அவசரந்தான்?’

‘இந்த வீட்டுக்கு வேலை செஞ்சு சாகணும்னு தான் வந்தாச்சே. பிறகு அழுதா முடியுமா? அதிருக்கட்டும்…இப்ப கூப்பிட்டேளே என்னத்துக்காம்?’ என்று சிடுசிடுப்பாகக் கேட்டாள்.

‘சரிதாங் கேள், ஆரம்பிச்சுடாதே உன் பாட்டை! ஆமா, நீ ஸ்ரீவைகுண்டத்துக்கு சொர்க்க வாசல் பார்க்கப் போகணும் னியே, போறயான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்.’

‘அம்மாடி, உங்க மனசு இளகிட்டுதா?’ என்று ஏகத்தாளமாகக் கேட்டாள் அவள்.

‘சரி, சும்மாகிட! நம்ம பெரிய வீட்டு அண்ணாச்சி, மதனி, நடு வீட்டு ஆச்சி, அவ இவ எல்லோரும் போறா! நீயும் வேணும்னா போறியான்னு கேட்டா…’

அவள் அவரை மேலே பேச் விட வில்லை. ‘ஏன், நீங்க வரலையா? நம்ப ரெண்டு பேரும் போனா எடுப்பா இராதோ?’ என்றாள். ‘எள்ளும் கொள்ளும் வெடிக்கும்’. அவள் முகத்திலே ஆனந்தம் துள்ள ஆரம்பித்தது.

‘அதல்லாமில்லே, எனக்கு ஜோலி நிறையக் கிடக்கு’ என இழுத்தார் பிள்ளை.

‘என்ன ஜோலி! என்னைக்குமா போறோம்? ஏதோ வருஷத்திலே ஒரு நாள்…’

‘ஆமாமா? மூந்நூத்தி அனுபத்தஞ்சு நாளிலே ஒவ்வொரு கிழமையும் வருஷத்திலே ஒரு நாள் தான். நீ போறதானாப் போ. இல்லைன்னா வெட்டிக் கதை ஏன்?’ என்றார் பிள்ளை, கண்டிப்பாக.

அவர் குணத்தை அறிந்த அகிலாண்டம் எதற்காக வீண் கதைகள் பேசப் போகிறாள்? ‘சரி, போயிட்டு வாறேன்’ என முனங்கினாள். அக்குரலிலும் மகிழ்வு கலந்து ஓடியது.

‘சரி, அப்படின்னா அண்ணாச்சியிடம் போய் சொல்லிட்டு வாறேன்!’ என்று அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே எழுந்தவர், அங்கு தெளிந்த புன்னகையைக் கண்டதும் ‘அட சிரிப்புத்தானா’ என நைசாக அவள் கன்னத்திலே ஒரு தட்டுத் தட்டினார்.

‘சும்மா இருங்கன்னா’ என நாணங் கலந்த குரலில் கூறினாள் அவள், அதற்காகப் பிள்ளை அவளுடன் விளையாடாது போய் விடுவாரா! வாலிபப் பருவம் முழுவதையுமா இழுந்து விட்டார் அவர்! இல்லை, நான்கு வருடக் குடும்ப வாழ்வ, மனதில் ஊறிய அன்பில் வளரும் குறும்புத் தனத்தை அழித்து விட முடியுமா?

Wednesday, May 1, 2024

தன்வினை....-34 & 35

 தன்வினை....-34

By N Krishnamurthy 

வினயாவிற்கு செய்வினை செய்தவர்கள் யார் என்று சந்தேகம் உங்கள் எல்லோருக்கும் இருந்திருக்கும். அனேகமாக கதை போய்க் கொண்டிருக்கும்போதே, பலவிதமாக  யூகித்திருப்பீர்கள். இதற்கு விடை கூறும் முன்  இந்தக் கதையில் இடையில்  விட்டுப்போன சிலவற்றை பார்க்க வேண்டி இருக்கிறது.

பலர் இது சௌஜன்யாவின் வேலைதான் என்று எண்ணியிருப்பீர்கள்.

சௌஜன்யா கேசவன் நம்பூத்ரியிடம் பேசிய  பின்பு, கேசவன் நம்பூதிரி சௌஜன்யாவிடம் ஒரு வசிய மருந்து பொட்டலத்தை கொடுத்து அதை ஜகன் சாப்பிடும் காபியில் கலந்து விடச் சொன்னார். "அதன் பின்னர் ஜகன் உன் பின்னாடி  பட்டி மாதிரி வந்து கொண்டிருப்பான்" என்று கூறினார். மறுநாள் அந்த வசிய மருந்தை பத்திரமாக ஆபீஸ் எடுத்துக் கொண்டு சென்ற சௌஜன்யா, ஜகன் சூடான காபியை கொண்டு வந்து ஒரு டேபிளிள் அமர்ந்திருப்பதை பார்த்தாள். அப்போது போன் வந்திருப்பதாக அங்கிருந்த பணியாளர் சொன்னவுடன்,ஜகன் ஃபோனை அட்டென்ட் செய்ய எழுந்து சென்றான். அப்பொழுது அந்தப் பக்கம் வந்த சௌஜன்யா, யாரும் பார்க்காத வகையில், வசிய மருந்தை ஜெகன் காபியில் சேர்த்தாள். அப்படியே சீட்டுக்கு திரும்பி விட்டாள். ஜகன் போன் பேசி விட்டு திரும்பி வரும்போது  ஜகன் ஃபரென்ட் வினோத் வந்து கொண்டிருந்தான். "டேய் வினோத்,என்ன அர்ஜெண்டா பார்க்கச் சொல்லி பணிக்கர் கூப்பிட்டிருக்கார். அங்கே என் காபி இருக்கு. அத நீ குடிச்சூடு" என்று கூறி விட்டு வேகமாக சென்றான். வினோத் அந்த காபியை குடித்தான். அவ்வளவுதான் அன்றிலிருந்து வினோத் சௌஜன்யாவை தொடர ஆரம்பித்தான்.

(நம்பூத்ரி கொடுத்த வசிய மருந்துக்கு இவ்வளவு பவரா?

இதை நம்பி நம்பூத்ரி அட்ரசை  என்னிடம்  யாரும் கேட்க வேண்டாம்).

முதலில் சௌஜன்யாவுக்கு இது ஏன் என்று புரியவில்லை. ஒரு வாரம் கழித்து நம்பூதிரி "என்ன ஏதாவது பிராகரஸ்  இருக்கிறதா" என்று கேட்டார். அப்போது அவள் இந்த விஷயத்தை அவரிடம் கூட அதற்கு அவர் "அடிப்பாவி. நீ கொடுத்த காபியை அந்த வினோத் பையன் குடித்துவிட்டு இருக்கிறான்" என்று கூறினார். சௌஜன்யாவும் யோசித்துப் பார்த்தாள். ஜெகனுக்கு வினோத் ஒண்ணும் குறைந்தவனில்லை. கிட்டத்தட்ட இருவரும் ஒரே வயது. ஒரே மாதிரி சம்பாதிக்கிறார்கள். வினோதும் நல்ல மாதிரி தான் . எப்படி இருந்தாலும் நமக்கு ஜகன் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டு சௌஜன்யா வினோத் கிடைத்தாலே போதும் என்று அவனிடம் சகஜமாக பழக ஆரம்பித்தாள்.  நாளடைவில் இது கல்யாணத்தில் முடிந்தது. 

அப்படியானால் சௌஜன்யா வினயாவிற்கு செய்வினை செய்ய ஏற்பாடு பண்ணவில்லையா? அப்படி இல்லை  என்றால்  யார் பண்ணி இருப்பார்கள் ?.அடுத்த விட்டுப் போன இன்னொரு  விவரத்தை நான் கூறினால்தான்  உங்களுக்கு அது விளங்கும்.

தன்வினை....-35

தன் பெண் மைதிலிக்கு ஜகன் கிடைக்க மாட்டான் என்று அறிந்த மனோகரன் மிகவும் கொதிப்படைந்தார். ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்தார். கோயம்புத்தூரில் இருந்த அவர் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு மலையாள மாந்திரீகர் இருந்தார். அவரிடம் போய் மனோகரன் விஷயத்தை கூறி "அந்தப் பையனுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.. அதற்கு அவர்   "என்ன இருந்தாலும் அவன் உன்னுடைய அக்கா பையன். உனக்கு என்ன, அந்தப் பையன் உன் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கணம், அவ்வளவு தானே. முதல்ல அந்தப் பையன் இப்போ நிச்சயம் பண்ணியிருக்க பொண்ண வெறுக்கும்படி பண்ணுவோம். அப்புறம் படிப்படியா அந்த பையன்  உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடிவு செய்வான் " என்றார். "என்ன பண்ணலாம் என்றார்" மனோகரன்.

" ரொம்ப சிம்பிள், அந்த பொண்ணுக்கு சூனியம்  வெச்சுடலாம்" என்றார் அவர்." அது தப்பு இல்லையா" என்று கேட்டார்  மனோகரன். "தப்புதான். நீ தான் முடிவு செய்யணும்" என்றார் மாந்த்ரீகன். 

" சரி. அந்த மாதிரியே செய்துவிடலாம்" என்று  மனோகரன் வேறு வழி தோன்றாமல் கூறினார்.

கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் செலவழித்து அவரிடம் வினயாவிற்கு சூனியம் வைக்க மனோகரன்  கூறினார். மாந்த்ரீகரிடம் தான் கஷ்டப்பட்டு சேகரித்த பணத்தை  கொடுக்க, அவர் இந்த மோசமான வேலையை செய்தார். அவருக்கு, இது மாதிரி செய்கிறவர்கள் எல்லாரையும், பூமராங் மாதிரி, அந்த செய்வினை திரும்பி வந்து சேரும் என்று அவ்வளவாக தெரியாது. 

வினயாவிற்கு கேரளாவில் பரிகாரம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு நாள் மனோகரனின் மனைவி பின்பக்கத்தில் இருந்த பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு ஹாஸ்பிடல் சேர்க்கப்பட்டாள்.  இன்று வரை அவள் கோமாவில் இருக்கிறாள்.  இது நடந்த ஒரு மாதத்திற்கு பின் திடீரென்று அவரது மகள்  மைதிலி வினயா மாதிரி கத்த ஆரம்பித்தாள். அங்கே கேசவதாஸ் வினாவிற்கு பரிகாரம் செய்து கொண்டிருக்க, இங்கே மைதிலி நிலைமை ரொம்ப மோசமாகிக்கொண்டேபோனது. ஒரு சமயத்தில் மனோகரன் மைதிலிக்கு வைத்தியம் செய்வதா, மனைவியை  ஹாஸ்பிடல் சென்று பார்த்துக்கொள்வதா  என்று புரியாமல் தவித்தார்.  வேறு வழி இல்லாமல் மைதிலியை  ஒரு மனநல  ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டிருந்தார் இந்த சமயத்தில் தான் அக்கா  சுமதி, மகன்  கல்யாணம் என்று மீண்டும் அவனைக் கூப்பிட்டிருந்தாள். " சரி கல்யாணத்துக்கு சென்று விட்டு சென்று வந்து விடலாம்" என்று எண்ணி  கல்யாணத்துக்கு சென்றார் மனோகரன். கல்யாணப் பெண் வினயா வெகு சகஜமாக இருந்தது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. தமக்கையிடம்  என்ன நடந்தது என்று  எல்லா விவரத்தையும் கேட்டுக் கொண்டார். சரி தன்னுடைய பெண்ணையும் கேரளாவுக்கு அழைத்துக் கொண்டு போய் சரி செய்து விடலாம் என்று நினைத்தார். அதற்கு முன்னால் அக்கா  கூறியபடி சிதம்பரத்தை போய் பார்த்தால் என்ன என்று அவருக்கு தோன்றியது . ஒருநாள் ராஜ ராஜபுரம்  சென்று சிதம்பரத்தை பார்த்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்பு தன் பெண் மைதிலிக்கும் இது மாதிரி வந்திருப்பதாக அவர் கூறினார். மிக புத்திசாலியான சிதம்பரம், மனோகரன் சுமதிக்கு தம்பி என்றும் அவன் தன் பெண் மைதிலியை  ஜெகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று இருந்ததையும்  தெரிந்து கொண்ட அவருக்கு ,கேசவதாஸ் கூறியது ஞாபகத்துக்கு வர, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று மிக சுலபமாக நடந்ததை  புரிந்து கொண்டார். 

மனோகரனிடம் அவர் கூற ஆரம்பித்தார்

 "என்னால்  உங்களுக்கு உதவி பண்ண முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. ரமண மகரிஷி சொல்லுவார்" நீ ஏதாவது யாருக்காவது செய்தாயேயானால், அது உனக்கு நீ செய்து கொள்கிற மாதிரி என்று. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு கடவுள் மட்டும்தான் ஆறுதலளிக்க முடியும்.செஞ்ச தப்புக்கெல்லாம் அழுது,அழுது அவன் கிட்ட வேண்டிக்கோங்க.

காசிக்கு போய் கங்கைல ஸ்னானம் பண்ணினா பாவம் போயிடுன்னூவா.நீங்க காசிக்கு போய் கங்கைல ஸ்னானம் பண்ணினா, அந்த கங்கைக்கே பாவம் வத்துடும்.புரிகிறதா?" என்றார் சிதம்பரம். மனோகரன் செய்த செயலின் கடுமையை உணர்ந்ததால், சிதம்பரத்திற்கு அவருடன் கடுமையாக பேசவேண்டி இருந்தது.

"நன்றாக புரிந்தது சார்.நான் செஞ்சது மஹா பாவம். மன்னிப்பே கெடயாதூன்னு தெரிஞ்சுண்டேன் சார்" என்று துக்கத்துடன் கூறிக் கொண்ட மனோகர் அடுத்த பஸ்ஸை பிடித்து கோயம்புத்தூர் வந்து சேர்ந்தார்.   

தன் வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என்று சும்மாவா சொன்னார் பட்டினத்தார்.

நாளைய பகுதியுடன் தன்வினை.... முடிவடையும்.

தன்வினை....-33

 தன்வினை....-33

By N Krishnamurthy 

அடுத்த ஒரு மாதத்தில் ஒரு  முகூர்த்தத்தில் வினயா, ஜகனின் கல்யாணம்,

நங்க நல்லூரிலுள்ள உத்தர குருவாயூரப்பன் கோவில் பக்கத்திலுள்ள கல்யாண மண்டபத்தில் நடந்நது. திருமணத்திற்கு நிறைய பேர்கள் வந்திருந்தார்கள்.  பெருவனத்தில் இருந்து கேசவதாசும், அர்ஜுனும் வந்திருந்தார்கள். 

ராஜராஜபுரத்திலிருந்து சிதம்பரம்,சாரதா மற்றும் ஜகதீசன்,சீதா வந்திருந்தார்கள். சிதம்பரம் எல்லோருக்கும் ஜகதீசனையும்,சீதாவையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.ஜகன் ஆபிசிலிருந்து பணிக்கரும் மற்ற பலரும் வந்திருந்தனர்.

பணிக்கர் வினயாவை பார்த்து "சீக்கிரம் ஆபிஸ் ஜாயின்பண்ணீடு.வேல தலைக்கு மேல இருக்கு"என்றார் ."ஆகட்டும் சார்.அப்படியே செய்யறேன்"என்றாள் வினயா.ஜகன் சிரித்துக்கொண்டே அவரிடம் "ஹனிமூனுக்கு ரெண்டு வாரம் லீவு வேணும் சார்"என்றான். பணிக்கரும் சிரித்துக்கொண்டே "ஓகே.  சேங்ஷன்ட் "என்றார். இதையெல்லாம் அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த சிதம்பரம் ஜகனிடம் "வினயா கல்யாணம் முடிஞ்ச உடனே ஆபிஸ் ஜாயன் பண்ணணம். உனக்கு ஹனிமூனுக்கு ரெண்டு வாரம் லீவுன்னா புரியலயே.இடிக்கறதே.அப்போ நீ மட்டும் ஹனிமூனுக்கு போகப்போறயா" என்றார்.இதை கேட்ட அனைவரும் சிரித்தனர்.

சௌஜன்யாவும், அவள் அப்பா, அம்மாவுடனும், அவளுடைய கணவன் வினோதுடனும் வந்திருந்தாள். 

வினயாவின் இரு கைகளைப் பற்றிக் கொண்ட சௌஜன்யா, "ஏதோ முட்டாள்தனமாக நான் நடந்துகொண்டு விட்டேன். உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். பழையபடி நாம் இருவரும் நட்பாக இருக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள். இதைக் கேட்ட வினயா அவளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு

 " எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா" என்று கூறினாள். "அப்புறம் ஒரு நாள் உன் வீட்டுக்கு நான் வரேன். உனக்கும் வினோதுக்கும் நடந்த காதல் கல்யாணத்தை பற்றி விவரமாக எனக்கு சொல்லணம்" என்று கண் சிமிட்டினாள் . 

" நிச்சயம்" என்றாள்  சௌயன்யா. மனதுக்குள் வசியப்பொடி மேட்டரை மறைத்து மீதி எல்லாவற்றையும்  வினயாவிடம் சொல்லி விடலாம் என சௌஜன்யா எண்ணினாள்.

மனோகரன் மட்டும் மருமானின் கல்யாணத்திற்கு வந்திருந்தார். அவர் முகத்தில் மருந்துக்கூட சுரத்தில்லை.

 சுபம்  போட்டு கதையை இத்தோடு முடித்திருக்கலாம் ஆனால் இன்னும் சில அத்தியாயங்கள் பாக்கி இருக்கின்றன.