*Today TRENDING சமையல் TIPS*👉
ஆந்திரா வெங்காய தோசை
தேவை:
இட்லி மாவு - 2 கப் சாம்பார் வெங்காயம் - ஒரு கப் காய்ந்த மிளகாய் - 3 பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: சாம்பார் வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். தவாவில் ஒரு கரண்டி இட்லி மாவை ஊற்றி, தேய்த்து அரைத்த வெங்காய விழுதை 3 டீஸ்பூன் போட்டு, தோசைத் திருப்பியால் தோசை முழுவதும் பரவலாகத் தேய்த்து ஓரங்களில் நல்லெண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவை இல்லை. வாரத்தில் மூன்று நாள்கள் ஆந்திராவின் பிரசித்தி பெற்ற இந்த தோசையைச் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment