Wednesday, October 18, 2023

ரகோபதேஸம்தொடர்ச்சி_10

 #ரகோபதேஸம்தொடர்ச்சி

ரகோபதேஸம்தொடர்ச்சி_10

By பாஸ்கர் சத்யா

அவர் சில நாட்கள் பிஸியாக இருந்ததால் சில நாட்கள் கழித்தே எங்கள் சந்திப்பு மடத்தில் இருந்தது.

'ரொம்ப பிஸிடா பாஸு.  ஏகப்பட்ட கல்யாணம், உபநயனம், சமாராதனை.  மூச்சு விடவே நேரமில்லாம இருந்தது பாஸூ.  அப்பைக்கப்ப ஒன் ஞாபகமும் வரும்.  கொழந்த ஆசையா கத்துக்க வருவானே பாஸுன்னு விஜாரமா கூட இருக்கும்.  என்ன பண்றதுடா?  ஜீவனத்தையும் பாக்கணுமோன்னோ?'

'உங்காத்து மாமி என் அம்மா கிட்ட நீங்க பிஸியா இருக்கேள்னு சொன்னாளாம்.  அதனால அம்மா உங்களை தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு சொன்னா.  அதனாலதான் நானும் இந்த பக்கம் வரல.'

'இன்னும் நாலஞ்சு நாளைக்கு பெரும்படி வைதீக காரியங்கள் எதுவும் இல்லை.  கவலப்படாத.  ஏதாவது கத்துக்கலாம்.'

'வியாசர் கதை சொல்றதா சொன்னேளே!'

'இன்னும் மறக்கலையா அத?  சரியான சிஷ்யன் டா நீ.  சரி வியாசர் கதை அப்புறம் சொல்றேன்.  அதுக்கு முன்னாடி ஏதோ ஒரு கிளாஸ்ல உபநிஷத்துக்கள் பத்தி கேள்வி கேட்டியோன்னோ?  அதப்பத்தி ஆரம்பிப்போமா?  நீ தெரிஞ்சுக்கிற அளவுக்கு சொல்லி தரேன் உனக்கு bபோர் அடிக்காம, சரியா?'

இருக்கை ஏற்பாடுகளும் நமஸ்காரங்களும் முடிந்த பிறகு வகுப்பை துவங்குகிறார்.

'பாஸு, உபநிஷத்துகளை பத்தி பேசறதுக்கு முன்னாடி இன்னும் ஒண்ண சொல்லித் தர ஆசைப்படறேன்.'

ஒரு வஸ்துவைப் பத்தியோ அல்லது ஒரு விஷயத்த பத்தியோ அறிஞ்சுகறதுக்கு சாதாரணமா லோகத்துல மூணு  முக்கிய வழிகள் இருக்கு.'

'முதல் வழி ப்ரத்யக்ஷம். அதாவது நேரில் பார்த்து தெரிஞ்சுக்கறது.

அதாவது நம் இந்த்ரியங்கள் மூலம், கண்ணால் பார்த்தோ, காதால் கேட்டோ, நாசியால் நுகர்ந்தோ, நாக்கினால் ருசி பார்த்தோ அல்லது தொடு உணர்ச்சியாலோ தான் எந்த விஷயத்தைப் பற்றியும் அனுபவம் ஏற்படுகிறது.

சுகம் துக்கம் என்பதைக் கூட இந்த்ரியங்கள் மூலம் உண்டான அனுபவத்தால தான் உணர்கிறோம். இப்படி உணர்ச்சி எண்ணம் எல்லாமே ப்ரத்யக்ஷம் மூலம் தான்.

'அடுத்த வழின்னு பார்த்தோமேயானால் அனுமானம்.  அதாவது ஒன்றை அனுமானத்தினால் அறிவது.

தூரத்துல எங்கேயாவது புகை மூட்டம் கண்ணுக்கு தெரியறதுன்னு வெச்சிக்கோ.  . உடனே அங்கு நெருப்பு இருக்குன்னு இங்க இருந்தபடியே அனுமானிக்கறோம்.   நெருப்பை பிரத்யக்ஷமாக பாக்கலைனாலும் நெருப்பில்லாமல் புகையுமா என்ற அனுமானத்தின் மூலம் தெரிஞ்சுக்கறோம்.'

'அடுத்த வழி

உவமானம்.  சில விஷயங்கள இதைப்போல் அது என்ற உவமானத்தின் மூலம் அறிகிறோம்.  உதாரணமா புலியை பத்தி நோக்கு

தெரியாதுன்னு வெச்சிப்போம்.  நீ காட்டுக்குள்ள  போகும்போது வழிப்போக்கன் ஒருவன் ‘அங்கே புலி இருக்கும் ஜாக்கிரதை” என்கிறான்.  அவன்கிட்ட புலி எப்படி இருக்கும்னு நீ கேட்டா பூனயைப்போலதான் இருக்கும் ஆனால் பெரிதாக மஞ்சளாக இருக்கும் மேலே கோடுகள் இருக்கும்னு அப்படி இப்படின்னு சொல்வான்  இல்லையா.  அந்த மாதிரி ஒரு உருவத்தை நீ பாத்தா அது புலி அப்படின்னு யூகிப்பியோன்னோ?'

'இந்த மூணு வழிகளையும் தாண்டிய நாலாவது அறியும் முறை தர்க சாஸ்திரப்படி சப்தம் அல்லது வர்பல் டெஸ்டிமனின்னு ஆங்கிலத்துல சொல்லுவாளே.

சப்தம் என்பதை ஆப்த வாக்கியம்னு கூட சொல்லாம். அதாவது நமக்கு நம்பத்தகுந்த நபர் ஒன்று சொன்னால் அதை அப்படியே உண்மையாக எடுத்துக்கறோம்.  யாராவது நம்ம நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கக்கூடிய ஒருத்தர் ஒரு செய்தி  சொன்னா அதை நம்பி உடனே செயல்படறோம் இல்லையா?'

'இதை போலத்தான் வேதங்களை நாம எடுத்துக்கறோம். பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக தேவர்களாலும் ரிஷிகளாலும் நமக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய வேதங்களை நம்பத் தகுந்த ஆதாரமாக ஏற்கிறோம்.  அந்த தேவர்களும் ரிஷிகளும் நாம தொன்று தொட்டு வணங்கக்கூடிய ருஷிகளாகவும்  தேவர்களாகவும் இருப்பதால வேதங்களை அப்படியே ஏத்துக்கறோம் அனுஷ்டிக்கிறோம் நம் கடமையாக அவா சொன்னபடி நடைமுறையாக பயன்படுத்திண்டு மேன்மை அடையறோம்.    பிரம்மத்தை அறிய வேதங்கள் மூலம் அவர்கள் காட்டியுள்ள வழிகளை பின்பற்றறோம்.'

'மனுஷாளோட உயர்வுக்கு ஆதாரமாக இருக்கக்கூடியது வேதம்னு புரியறது.  அனைத்து வேதங்களையும் கற்றுத் தெளிவது சற்று கடினமாக இருக்கறதால அவைகள சுருக்கமாக சூத்திரங்கள் வாயிலாக எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக அடுத்தடுத்து வந்த ரிஷிகளும் மூதாதையர்களும்  கொடுத்திருக்கா.  வேதங்கள முழுமையா கத்துக்க முடியாட்டாலும் சூத்திரங்கள் மூலமாக வேதங்களைப் பற்றிய புரிதல் பலம் பெற்றிருக்கு. காலப்போக்கில் மாற்றங்களைக் கண்ட வேத சூத்திரங்கள் கூட உபநிஷத்துகள்னு பெயர் வடிவம் பெற்றிருக்கு.'

'ஏனென்றால் பிரம்மத்தை ப்ரத்யக்ஷம் மூலம் அறிய முடியாது. இந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டது என்பதனால்.

அனுமானமும் உவமானமும்  ஆகாது.  எப்படின்னா புகைய பார்த்து நெருப்புன்னு யூகிக்கற வஸ்து வேதங்களில் அரிது.  கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.  கேள்விப் பட்டிருக்கியோன்னோ? அதனால் உபநிஷதமே பிரம்மத்திற்கு பிரமாணமாக இருக்கு அப்படிங்கிறதையும் மறுக்க முடியாது.'

'உபநிஷத்துக்கள் பண்டைய இந்திய தத்துவ இலக்கியம்.  ஹிந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ வகைப் படுத்தப் பட்டவை.  வேதங்கள்ல இவை கடைசியாக வந்ததால இந்த உபநிஷத்துக்களுக்கு வேதாந்தம் அப்படிங்கற பெயரும் இருக்கு.'

சமிஸ்க்ருதத்துல எழுதப்பட்ட இந்த இலக்கியத்துல பெரும்பாலும் யோகம் தத்துவம் இது மாதிரியான விஷயங்களே விவாதிக்கப் படறது.  பெரும்பாலும் குரு–சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைக்கப்பட்டிருக்கு.'

'உபநிஷத் என்ற பெயரிலேயே இதோட அர்த்தத்தை புரிஞ்சிக்கலாம்.  இந்த வார்த்தையில மூன்று வேர்ச்சொற்கள் இருக்கு.  உப, நி, ஸத் ..  இந்த மூன்றும் தான் அந்த வேர் சொற்கள்.  முதல் இரண்டு வேர்ச் சொற்களான 'உப' மற்றும் 'நீ' மூன்றாவது வேர்ச் சொல்லான 'ஸத்' தோடு சேரும் போது ஷத் அப்படின்னு ஆகறது.'  மொத்தத்துல உபநிஷத் அப்படிங்கற சொல்லை கொடுக்கறது.'

'உப' என்ற சொல்லினால் குருவை பயபக்தியுடன் அண்டி அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்பதைக் குறிக்கறது.

'நி' என்ற சொல்லினால், புத்தியின் மூலம் ஏற்படும் சந்தேகங்கள் ஐயங்கள் அகலும்படியும், மனதில் காலம் காலமாக ஊறியிருக்கும் பற்பல எண்ண ஓட்டங்களின் பாதிப்பு இல்லாமல் அந்த உபதேசத்தை  உள்வாங்கிக் கொள்வத குறிக்கறது.

'ஸத்' என்ற சொல்லினால் அந்த உபதேசத்தின் பயனான அஞ்ஞான-அழிவும், பிரம்ம ஞானம் ஏற்படுவதை குறிக்கறது.

'சுருக்கமா சொன்னா உபதேசம் கேட்பது கேட்டதை உள்வாங்குவது பிறகு தெளிவு பெறுவது அல்லது ஞானம் பெறுவது ...  இந்த மூன்றும் சேர்ந்ததை இந்த இலக்கிய நூல் தருவதால இதற்கு உபநிஷத் அப்படின்னு மிகச் சரியான தலைப்பு வந்திருக்கு.'

உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த என்னை சற்று மெய்சிலிர்க்க வைத்தது அவருடைய விளக்கங்கள்.  என்னையும் அறியாமல் கண்களில் குளமாக தேங்கிய கண்ணீரை அவர் கவனிக்க தவறவில்லை.

'பாஸு ...  கொஞ்சம் ஆஸ்வாச படுத்திக்கோ.  பாடம் நடத்தும் போது ஒரு சிஷ்யன் புல்லரிச்சுப் போறான்னா  ஆசானுக்கு அவன் நன்றி செலுத்தறான்னு அர்த்தம்.  இதே போலத்தான் ஸ்கூல்லயும் கவனமா பாடங்களை கேட்கணும்.  அப்பத்தான் எத்தனை வருஷங்களானாலும் நோக்கு  பாடங்கள் மறக்காம இருக்கும்.  பிற்காலத்துல உன் மூலம் மற்றவர்களும் இந்த மாதிரி நல்ல விஷயங்கள தெரிஞ்சிக்க சௌகரியமா இருக்கும்.'

'என்ன சொல்றதுன்னே தெரியல மாமா.  அந்த அளவுக்கு மனசுக்குள்ள உங்களோட வார்த்தைகள் கேட்டுக்கொண்டே இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்.  நீங்க ரொம்ப gக்ரேட் மாமா.  எவ்வளவு எளிமையா பாடம் எடுக்கறேள்?'

'எப்போதும் நான் தான் உன்ன புகழ்ந்திண்டிருப்பேன்.  இன்னைக்கு உன்னோட டர்ன் ஆக்கும்?'

அவர் இப்படி சொல்ல இருவரும் சிரிக்கிறோம்.

'மீதிய நாளைக்கு பாப்போமா?'

'உங்களுக்கு சௌகர்யப்பட்டா இப்பவே கன்டின்யூ பண்ணலாம் மாமா?'

'அமிர்தம் சாப்பிட்டா கூட அளவோடு சாப்ட்டா தானே நன்னா இருக்கும்?  நாளைக்கு வா.  தொடரலாம்.'

அன்று என்னிடம் இருந்த உணர்வுகளாலோ என்னவோ அவருக்கு செலுத்திய சாஷ்டாங்க நமஸ்காரத்திலிருந்து எழுந்து கொள்ள சற்று நேரம் பிடித்தது.

தொடரும்...

ரகோபதேஸம்தொடர்ச்சி_9

 #ரகோபதேஸம்தொடர்ச்சி

ரகோபதேஸம்தொடர்ச்சி_9

by பாஸ்கர் சத்யா

அரை மணிக்குள் தன் வேலைகளை முடித்துக் கொண்டு என்னிடம் வருகிறார்.

'என்ன பாஸு ஆரம்பிக்கலாமா?'

தலையசைக்கிறேன். தொடர்கிறார் வகுப்பை.

'பிரம்ம யக்ஞயத்துல கணேச வந்தனம் பார்த்தோம்.  பிராணாயாமம் சங்கல்பம் முடிஞ்சது.  காயத்ரி மந்திரத்தையும் பிரணாயாமத்தையும் முறைப்படி பிருச்சி பிருச்சி சொன்னோம்.   அதுக்கப்புறம் நான்கு வேதங்களுடைய ஆரம்ப மந்திரங்களைப் பத்தி பேசினோம்.  ரித்விக்னா யாரு?  ஹோதான்னா யாரு?  அக்னியோட அவா எப்படி தொடர்புடையவா?  இப்படி எல்லாம் கூட பாத்தோம்.  அனுதினமும் அனுஷ்டிக்க வேண்டிய பஞ்ச யக்ஞங்கள்ல மூன்று யக்ஞங்களின் தொகுப்பாக அல்லது சுருக்கமாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த பிரம்ம யக்ஞம் அப்படிங்கிறது புரிஞ்சுண்டோம் இல்லையா?  இப்ப யக்யங்களுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய அக்னி தேவரையும் கடைசியாக நம் பிரார்த்தனைகள் சேர வேண்டியவரான ப்ரம்மனையும் இணைச்சு ஒரு மந்திர நமஸ்காரத்த இப்ப பாக்க போறோம்.  எங்கே சொல்லு ஓம் நமோ ப்ரம்ஹணே....'

அவர் ஆரம்பிக்க நான் அந்த மந்திரத்தை தொடர்கிறேன்.

ஓம் நமோ பிரம்ஹணே, 
நமோ ஸ்தவக்னயே
நம: ப்ருதிவ்யை 
நம ஓஷதீப்ய:; 
நமோ வாசே, 
நமோ வாசஸ் பதயே, 
நமோ விஷ்ணவே, 
ப்ருஹதே கரோமி

'கடைசி வார்த்தையான கரோமி என்பதற்கு செய்கிறேன் அப்படின்னு பொருள்.  எதை செய்கிறோம்? நமஸ்காரம் செய்கிறோம்.  அக்னியைப் போன்ற தேவாந்தரங்களுக்கு நம: பதம் கூறப்பட்டிருப்பது, அந்த தேவர்கள் உம்முடைய விபூதியாவார்கள் என்பது இங்கு இருக்கக்கூடிய தாத்பர்யம்.'

'இந்த ஓம் நமோ ப்ரஹ்மணேன்னு தொடங்கற மந்திரத்த மூணு தடவை சொல்லணும்.  இந்த மந்திர நமஸ்காரமானது அவா காதுகளில் உன்னுடைய ஜபமாக ஒலிக்கணும் அப்படிங்கறத புரிஞ்சிக்கணும்.'

இதுக்கப்பறம் 'வ்ருஷ்டிரஸி வ்ருச்சமே பாப்மானம் அம்ருதாத் ஸத்யமுபாகாம் தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே' அப்படின்னு சொல்லிட்டு தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கணும்.'

'பாஸு, இங்க ஒரு விசேஷத்தை பார்த்தியா?  முதன்முதலில் இந்த பிரம்ம யக்ஞத்தை ஆரம்பிக்கும் போது ஜலத்தை தொட்டு கையை அலம்பிண்டு தலைக்கு ப்ரோக்ஷணம் பண்ணும் போது வித்யுதஸி அப்படின்னு ஆரம்பிக்கிறோம்.  கிட்டத்தட்ட பிரம்மயக்ஞத்த முடிக்கும் போது‌ 'வ்ருஷ்டிரஸி' அப்படிங்கறோம்.

'அந்த வித்யுதஸி அப்படின்னு ஆரம்பிக்கிற மந்திரத்த சொல்லும்போது அதற்கான பொருளை சொன்னேனே ஞாபகம் இருக்கா?  'பரம்பொருளே, நீ மேகத்திடைல பிரகாசிக்கும் மின்வெட்டு போன்றவன்.  என்னோட பாவத்தை நீ அறிவாய்.  ருதமாகிய உன்னுடைய லீலா விபூதியினின்று சத்யமாகிய நித்திய விபூதியை நாடுகின்றேன்.'

'இப்ப முடிக்கும்போது 'வ்ருஷ்டி ரஸி' அப்படின்னு ஆரம்பிக்கிற மந்திரத்தை சொல்றோம்.  இதோட பொருள பார்த்தோமானால், 'பரம்பொருளே நீ மழையாக இருக்கிறாய்.  என்னுடைய பாவத்தை சேதிப்பாய் அல்லது போக்குவாய்.  லீலா விபூதியினின்று நித்திய விபூதியை அடைந்தவனாகிறேன்'.

'மேகம் மின்னல் கோடுகள் மழை வருவதற்கான அறிகுறிகளோடு பிரார்த்தனையை பிரம்ம யக்ஞம் ஆரம்பத்துல வெச்ச நாம மழை பெய்து பாவங்கள் தொலைந்து பரிபூரண அனுக்கிரஹம் கிடைத்த உணர்வோட முடிக்கிறோம்.'

'மந்திரங்கள்ல இருக்கிற வார்த்தைகள் அனுக்ரஹ உணர்வுகளை கொடுப்பதாக சொல்லப்பட்டிருக்கு அப்படின்னா நாம எவ்வளவு பக்தி ஸ்ரத்தையோடையும் கடமை உணர்ச்சியோடும் இந்த பிரம்ம யக்ஞத்த பண்ணியிருக்கோம் பாரு.  ஏதோ எந்திரமா இவைகள சொல்லக்கூடாது பக்தி ரஸத்தோட பண்ணனும் அப்படிங்கறது ஒளிஞ்சிண்டிருக்கிற உள் அர்த்தம்.  இதையும் நீ புரிஞ்சுக்கணும்.'

'எப்படி நிறைவு செய்கிறோம் பிரம்ம யக்ஞத்த?  தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம் கொடுத்து கடைசியாக ஆசமனம் செஞ்சு முடிக்கிறோம்.

'ஏற்கனவே சொல்லியிருக்கேன்.  தர்ப்பணம் என்பது நன்றி கடன் செலுத்துவது.  தேவாதி தேவர்களுக்கும் நம் ஹிந்து மதத்திற்கு ஆதாரமாக இருந்து கொண்டிருக்கிற ரிஷிகளுக்கும், கடும் தபஸ்கள் மூலம் ஒலிகளை அறிந்து அவைகளுக்கு லிபிகளை கொடுத்து நாம் பகவானை அதிக சிரமம் இல்லாமல் அடைவதற்கு உண்டான பாதைகளையும் சூத்திரங்களையும் அமைத்துக் கொடுத்த ரிஷிகள் குடும்பத்திற்கு நாம காலம் காலமா நாமும் நம் சந்ததியினரும் நன்றி தெரிவிப்பது தானே முறை?  அவர்கள் படைத்து நமக்கு அருளிய வேதங்களுக்கும், இதிகாசங்களுக்கும் புராணங்களுக்கும் கல்பங்களுக்கும் நம் நன்றியை சொல்லிக் கொண்டே இருக்கணும் இல்லையா?  இவைகளை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம் பிறப்பதற்கு சாத்தியமாகிய மூதாதையர்களுக்கும் சேர்த்து நன்றி சொல்வது தானே விசேஷம்?'

'எனவே பிரம்ம யக்ஞயத்தை விடாமல் கடைபிடித்து நாம நம்மள முன்னேத்திக்கணும்.'

'நான்கு வேதங்களையும் முழுசா சொல்வது பெரும்பாலும் சாத்தியம் இல்லாத விஷயமாக இருப்பதால் நான்கு வேதங்களின் ஆரம்ப மந்திரங்களை மட்டும் சுருக்கமா ஸிம்பாலிக்கா இந்த பிரம்ம யக்ஞத்தில் சேர்த்திருக்கா.  அதேபோலவே எல்லா தேவாதி தேவர்களையும் எல்லா ரிஷிகளையும் எல்லா பிதுர்க்களையும் பெயர்கள் சொல்லி நன்றி சொல்வது சத்தியம் இல்லாத காரணத்தால முக்கியமான ரிஷிகள், குறிப்பாக வியாஸர், காண்டரிஷிகள், திவ்ய பித்ருக்களை குறிப்பாக ஸிம்பாலிக்காக சொல்லி நன்றி தெரிவிக்கிறோம் இந்த பிரம்ம யக்ஞத்துல.'

'ஏற்கனவே நான் சொன்னது போல பிதா ஜீவித்திருக்கும் போதும் பிரம்ம யக் ஞத்தில் வரக்கூடிய பித்ரு தர்ப்பணம் பித்ருமானாகிய ஸோமன், அங்கீரஸ்வான் ஆகிய எமன், கவ்யவாஹனனாகிய அக்னி முதலிய திவ்ய பித்ருக்களை உத்தேசித்து செய்ய வேண்டும்.'

'மந்த்ரத்திலேயே இது ரொம்ப கிளியரா இருக்கு பாரு.'

'ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.......'

எனக்கு இப்போது ஒரு சந்தேகம் வருகிறது.

'மாமா வியாசர் பேரு சொன்னதா சொன்னேளே.  மந்திரத்துல இருக்கா என்ன?'

'ஏண்டா இல்ல?  'க்ருஷ்ண த்வைபாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்ப்பயாமி'. 

'ஓ.  உன் சந்தேகம் வியாசர் அப்படின்னு இல்லையேன்னு தானே?  வியாசருக்கு இன்னொரு பெயர் 'க்ருஷ்ண த்வைபாயனர்'.  வியாசர் பிறந்த கதை ரொம்ப விசித்திரமானது.'

'அந்த கதையை சொல்லுங்கோ மாமா.... ப்ளீஈஈஈஈஸ்.'

'சொல்றேன்.  ஆனா இன்னிக்கு இல்ல.  இன்னொரு நாள் சாவகாசமா ...  சரியா?'

சற்றே வருத்தம்.  'சொல்லாம எங்க போயிடப்போறார்?  சொல்லலன்னா சும்மா விட்டுடுவோமா?' இது என் மனதில் அப்போது விழுந்த ஹாஸ்யமும் நம்பிக்கையும் சேர்ந்த ஒரு எண்ணம்.

வகுப்பு நிறைவு பெற்றதாக அவர் கூற நானும் நானும் அவரை நமஸ்கரித்து விடைபெறுகிறேன்.

தொடரும்..

பிராண்டை பயன்கள்

 பிராண்டை பயன்கள்

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.

                    அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது.                 

                      குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

                      பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது.

                  சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...

                  பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் .

                   பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..

               மூலம் நோய் உள்ளவர்களுக்கு உரிய  மருந்தாகவும், ஏற்ற உணவாகவும் பயன்படுகிறது.

                 இந்த மூலிகையை "குத ரோக நாசினி" என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

                    இவ்விதமாக நிறைய வயிறு சம்மந்தப்பட்ட  குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது.மற்றும் இயற்கை கால்சியம்  அதிகம் உள்ளது  .

                   இவ்வாறு இருக்க  நாம்  ஏன் அனாவசியமாக  கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும். யோசிங்க.....

                 வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.

                  உலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

               தேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால்தானோ என்னவோ இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" எனப்படுகிறது.

Tuesday, October 17, 2023

மாற்றான் தோட்டத்து மல்லிகை - முடிவுரை

 மாற்றான் தோட்டத்து மல்லிகை  - முடிவுரை

இந்தக் கதைக்கு ஏற்கனவே வேறு மாதிரி ஒரு முடிவைத்தான்  நான் எழுதி வைத்திருந்தேன். என் ஒரிஜினல் முடிவின்படி சுகுமாருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்தது அவன் காதல் மனைவி நிரஞ்ஜனா தான்.

மாற்றான் தோட்டத்து மல்லிகை - 4 ல் ஒரு வியாழக்கிழமை சுகுமார் நர்சிங் ஹோமிலிருந்து வந்து 20 நிமிடம் கழித்து தான் தன்னுடைய ரூமில் இருந்து சாப்பிட வந்தான் என்று எழுதி இருந்தேன். அந்த இருபது நிமிடம் அவன் அங்கே என்ன செய்து கொண்டு இருந்தான்  என்பது அறிய நிரஞ்ஜனா ஆவலாக இருந்தாள். அவன் சாப்பிட்டதும் , அவன் அருந்தும் பாலில் ஸ்லீப்பிங் டேப்லெட் இரண்டை போட்டு விட்டாள் நிரஞ்ஜனா. அவன் நன்றாக உறங்கி விட்டான் என்று தெரிந்ததும், அவனது தனி அறைக்க சென்று, வெகு நேரம் தேடி தேடிப் பார்த்து கடைசியில் பொட்டாசியம் சயனைடு என்று ஓட்டப்பட்டிருந்த பாட்டிலை பார்த்தாள். இதுவரை அது மாதிரி ஒரு பாட்டில் அவள் அங்கு  என்றும் பார்த்ததில்லை.அதைக் கொண்டு வந்து  சுகுமார் பத்திரப்படுத்தி இருக்கிறான்  என்று அவளுக்கு புரிந்தது. அதை அவளுக்காகத்தான் கொண்டு வந்திருக்கிறான் என்றும் அவளுக்கு புரிந்தது. ஏற்கனவே ஃபார்மா படித்திருந்தால் அவளுக்கு பொட்டாசியம் சயனைட் கடும் விஷம் என்று தெரிந்திருந்தது.

உடனடியாக அதில் ஒரு சிட்டிகை எடுத்து தன் வாயில் போட்டு கொண்டு விடலாம் என்று கூட அவள் நினைத்தாள்.  அப்போதுதான் அவள் இரண்டு விஷயங்களைப் பற்றிய யோசித்தாள்.

முதலில் தான் அப்படி தற்கொலை செய்து கொண்டால், அப்பொழுது  சுகுமாருக்கு ஜாஸ்மினை திருமணம் செய்து கொள்வது மிகவும் சுலபமாகிவிடும். ஏற்கனவே ஜாஸ்மின் மோகத்தில் இருக்கும் அவன், தன்னுடைய இரு குழந்தைகளையும் சரியாக கவனித்துக் கொள்ள மாட்டான். குழந்தைகள் இரண்டும் அனாதையாக தான் இருக்க வேண்டி வரும். எனவே தற்கொலை செய்து கொள்வது தவறான முடிவு என்று தீர்மானித்தாள்.

அடுத்ததாக நான் ஏற்கனவே முன்பு ஓரு இடத்தில் கூறியிருந்தபடி, நிரஞ்ஜனாவின் அம்மா அவளிடம் படித்து, படித்து சொல்லி இருக்கிறாள்.தவறு செய்தவர்கள் நமக்கு வேண்டியவர்களாக இருந்தால் கூட அவர்களை நாம் தண்டிக்க  வேண்டும். அப்படி தண்டிக்க முடியாவிட்டால் அவர்களை விட்டு  விலக வேண்டும் . நிரஞ்ஜனாவின் அம்மா  இப்படித்தான் கணவனை விட்டு பிரிந்து இருந்தாள். நிரஞ்ஜனாவின் அப்பா ஒரு குடிகாரன். எவ்வளவு முறை சொல்லிப் பார்த்தாலும், அவன் திருந்துவதாக இல்லை. அவனை கொல்லும் அளவிற்கு அவள் தாயாருக்கு மன வலிமை இல்லை. எனவே அவனை விட்டு பிரிந்து விட்டாள். ஆனால் நிரஞ்ஜனா அப்படி இல்லை. அவள் பாரதி கண்ட புதுமைப்பெண். எனவே அவள் தவறு செய்யும்  சுகுமாரை தீர்த்துக்கட்ட கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை. மறுநாள் வெள்ளி அன்று சுகுமார் நரசிம்ஹோமுக்கு சென்ற பிறகு, நாட்டு மருந்து கடைக்கு போய் ஆமணக்கு கொட்டையை வாங்கி வந்தாள்.அந்தக் கொட்டையில் உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து அதை பொடி செய்து வைத்துக் கொண்டாள். அதுதான் ரிசின்(Ricin) இன்னும் விஷம் என்று அவளுக்கு தெரியும்.(Ricin is very toxic. It works by getting inside the cells of a person's body and preventing the cells from making the proteins they need. Without the proteins, cells die. Eventually this is harmful to the whole body, and may cause death)

அவர்களுடைய திருமண நாள் அன்று அதை சுகுமார் குடிக்கும் காபியில் கலந்து விட்டிருந்தாள். அதைக் குடித்த சுகுமார் நர்சி ஹோமுக்கு சென்று அன்று முழுவதும் உடல் உபாதையை உணர்ந்தான். நிரஞ்ஜனா, அவன் குடித்த காபி கப்பை உடைத்து சாக்கடையில் எறிந்து விட்டாள்.எல்லா இடத்தையும் துடைத்து தடயம் ஏதும் இல்லாதவாறு செய்திருந்தாள்.

இதற்கு முன்னர் சுகுமார் ஐம்பது லக்ஷத்துக்கு இன்ஷுரன்ஸை எடுத்து, அதில் ஜாஸ்மினை பெனிபீஷீயராக கொடுத்திருந்ததை அவனது லேப்டாப்பை பார்த்து தெரிந்து வைத்திருந்தாள்.இது ஜாஸ்மின் சுதாகரை கொலை செய்ய வேண்டிய மோடிவ் என போலீஸ் சுலபமாக புரிந்து கொள்வார்கள் என்று அவளுக்கு தெரியும்.எனவே சுகுமார் இறந்த பின் போலீஸ் விஜாரிக்கும் பட்சத்தில், ஜாஸ்மினை கை காட்டி விடலாம் என்று பிளான் பண்ணியிருந்தாள்.

மறுநாள் அவள் கமலாவிற்குபோன் செய்து, சுகுமார் ஃப்ரியாக இருக்கிறாறா என்று கேட்டது Indirect ஆக சுகுமாருக்கு ஏதேனும் ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ளும் ஆவலால் தான்.(ஆனால் கதை முடிவை நான் மாற்றிய பிறகு கமலாவிற்கு போன் செய்து சுகுமார் ஃப்ரியாக இருக்கிறாறா என்று கேட்டது By chance ஆக சுகுமாருக்கு தங்களுடைய திருமண நாள் நினைவுக்கு வந்து அதை கொண்டாட வீட்டிற்கு கிளம்பி விட்டானா என்று தெரிந்து கொள்ளத்தான்)

நிரஞ்ஜனா தான் கொலை செய்தாள் என்பதை நம்முடைய நிறைய வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்களோ மாட்டார்களோ என்ற தயக்கமும்,பயமும் எனக்குள் இருந்தது. எனவே தான் திடீரென்று இந்த பிளாட்டை மாற்றி, ஜோசப் குருவில்லா என்ற ஒரு புது பாத்திரத்தை உண்டாக்கி, அவன் சுகுமாருக்கு விஷத்தை கொடுக்கச் செய்து,அவனையே கடைசியில் இறந்து போகிற மாதிரி செய்ய வேண்டிய ஆகிவிட்டது. ஐ அம் வெரி சாரி குருவில்லா. நான் வேண்டுமென்றே உன்னை கொல்லவில்லை. என் கதைக்காக தான் உன்னை கொல்ல வேண்டி ஆகிவிட்டது.

நீ கர்த்தருடைய சாம்ராஜ்யத்தில் உறங்குவாயாக!

கதைக்கு "மாற்றான் தோட்டத்து மல்லிகை" என்று பெயர் கொடுத்ததால், டாக்டர் ஜாஸ்மின்(பெயர் பொருத்தம்) என்ற பெயரை நான் தேர்ந்தெடுக்கவில்லை.அந்த பெயர் தானகவே அமைந்துவிட்டது.

அம்புடுதே.

இந்த கதையை படிக்கும் எனது நண்பன் செய்த கமெண்ட். 

" ஏண்டா பாவி.இவ்வளவு பேரை கொலை பண்ணிட்டியேடா. " 😀

 *முற்றும்*

மாற்றான் தோட்டத்து மல்லிகை -12

 மாற்றான் தோட்டத்து மல்லிகை -12

அடுத்த ஒரு வாரத்திற்குள் ஜாஸ்மின், ராபர்ட், மற்றும் ஜோசப் குருவில்லாவின் வழக்குகள் ஒரு வழியாக போலீசாரால் முன்னெடுத்து செல்லப்பட்டன.

தான் பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தது சுகுமாருக்கு நன்றாக புரிந்தது. இனி இதுபோல சபலத்துக்கு தான் அடிமையாகக் கூடாது என்று மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.

அன்று மாலை வீடு திரும்பியதும் அவன் நிரஞ்ஜனாவிடம் "சாரி நிரா. எதோ சபலத்தில் நான் பெரிய தப்பை செய்ய இருந்தேன். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நீ இவ்வளவு நாள் இருந்தது உன்  பெருந்தன்மையை காட்டுகிறது. நம் குழந்தைகள் மேல் சத்தியமாக நான் இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன்" என்று  அவள் கைகளை பிடித்துக்கொண்டு கூறினான். நிரஞ்ஜனா

"உங்களுக்கு நான் என்ன குறை  வைத்தேன். இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு இருந்தீர்களே"

என்று  சொல்லுவாள் என்று அவன் எதிர்பார்த்தான். நிரஞ்ஜனா அப்படி சொல்லவில்லை. "நீங்கள் நடந்து கொண்டது  உங்களுக்கே  நியாயமாக இருக்கிறதா?

 நீங்கள் உங்கள் மனசாட்சிப்படி நடக்க வேண்டாமா?

நம் இருவருக்கும் வளர்ந்து வரும் குழந்தைகள் இருக்கிறார்கள். சமுதாயத்தில் அவர்களுக்கு உங்களால் அவப்பெயர் வர வேண்டுமா,வேண்டாமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" என்று கூறினாள். இதற்கு I am sorry  என்று  பதில் அளித்தான் சுகுமார்(இக்கட்டான சூழ்நிலையில் தமிழை விட கை கொடுப்பது ஆங்கிலமே).  பின்பு அவளிடம்"நாம் இப்போது குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு, பக்கத்தில் இருக்கும் முருகன் இட்லி கடையில் இரவு சாப்பாட்டை  முடித்துக் கொண்டு வரலாமா" என்று கேட்டான். நிரஞ்சனா இதை கேட்டு மிகுந்த சந்தோஷம் அடைந்தாள்.

"எனக்கு 15 நிமிஷம் டைம் கொடுங்கள். நான் ரெடி ஆகி விடுகிறேன்" என்று கூறி, அதே மாதிரி பதினைந்து நிமிடத்தில் அவள்  ரெடியானாள். அவள் அணிந்திருந்த கரும்பச்சை பட்டு புடவையும்,மேட்சிங் ரவிக்கையும், தலையில் வைத்திருந்த ஜாதி மல்லியும் அவளை ஒரு தேவதை ரேஞ்சுக்கு உயர்த்தி காட்டியது.

இரண்டு குழந்தைகளுக்கு அவள் தாய் என்று நம்ப முடியாதபடி அவ்வளவு திருத்தமாக இருந்தாள். தனது மனைவி இவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று ரொம்ப காலம் கழித்து தான் அந்த முட்டாளுக்கு புரிந்தது. 

நால்வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு, இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

மறுநாள் காலை எட்டு  மணிக்கு பிரக்பாஸ்ட்டை முடித்துக் கொண்ட சுகுமார், நிரஞ்ஜனாவிடம்  சொல்லிக்கொண்டு, நர்சிங் ஹோமுக்கு புறப்பட்டு சென்றான். அவன்  போன அரை மணிக்கு பின் நிரஞ்ஜனா அவளது தங்கை ஷோபனாவுக்கு போன் செய்து எல்லா விஷயத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். அதைக் கேட்ட ஷோபனா "பரவாயில்லை நிரா. தலைக்கு வந்தது தலைப்பாயோடு போயிட்டது . சுகுமார் பாவ மன்னிப்பு கேட்டது நிஜமாகவும் இருக்கலாம் .எதற்கும் இனிமே நீ கொஞ்சம் கவனமாக இருக்கணும் .ஆண்களை கொஞ்சத்துல நம்ப கூடாது" என்று கூறி அட்வைஸ் செய்தாள். "ஓ.கே. ஷோபி நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறி போனை வைத்தாள் நிரஞ்ஜனா.

மதியம் 2 மணிக்கு மேல் கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான் சுகுமார். அப்போது அறை கதவைத் தட்டி உள்ளே நுழைந்த சீப் டாக்டர் சபேசன் தனது அருகில் இருந்த லேடி டாக்டரை  காண்பித்து "டாக்டர் சுகுமார்.இவுங்க  டாக்டர் ரோஜா. யூ எஸ்ல ஐந்து வருடம் பணியாற்றி விட்டு இந்தியாவுக்கு திரும்பி இருக்கிறார்.

இவங்களை டாக்டர் ஜாஸ்மினுக்கு ரீப்ளேஸ்மென்ட்டா எடுத்திருக்கு. இவர் உங்களுக்கு கீழே வேலை செய்யப் போகிறார்.You have to take care of her " என்று அறிமுகப்படுத்தினார். டாக்டர் ரோஜா  அவன் கைகளை குலுக்க, தன் கையை நீட்டினாள். சுகுமார் அவள்  கையை பிடித்து குலுக்கினான். அவளது உள்ளங்கை ஜாஸ்மினுடைய கையை விட மிகவும் மிருதுவாக இருந்ததை உணர்ந்தான்.

அப்பா சுகுமாரா. உனக்கு அனந்த கோடி  நமஸ்காரங்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகை எழுதிய என்னை   அடுத்தபடி மற்றான் தோட்டத்து ரோஜாவை எழுதச்செய்யாதே.

 **முடியும்** என்று போடத்தான் நினைத்தேன். சில விஷயங்களை தெளிவு படுத்த வேண்டி இருப்பதால், அடுத்த பதிவோடு *முடியும்* .

மாற்றான் தோட்டத்து மல்லிகை -11

 மாற்றான் தோட்டத்து மல்லிகை -11

மாலை இரண்டு மணிக்கு  சுகுமார், ஜீவா நர்சிங் ஹோமில் இருந்த டியூட்டி டாக்டரை போனில் அழைத்தான்.

"எனக்கு விஷம் கொடுத்தவர் யார் என்று ஓரளவுக்கு யூகித்திருக்கிறேன். இதை நான் போலீஸிடம் சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் என்னை அங்கே அட்மிட் செய்யும் பொழுது நீங்கள் என் போலீசுக்கு தெரிவிக்கவில்லை என்று உங்களுக்கு ஏதேனும் பிராப்ளம் வருமா" என்று கேட்டான். அதற்கு அந்த டாக்டர் "டாக்டர். நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தல்லாகுளம் எஸ்.பி என்னுடைய சித்தப்பா தான். அவர் பெயர் சற்குணம். அவரிடம் நானே விவரத்தை கூறி உங்களை தொடர்பு கொள்ள செய்கிறேன்" என்று கூறினார்.

அடுத்து ஒரு மணி நேரத்தில் சற்குணம் சுகுமார் வேலை செய்து கொண்டிருக்கும் நர்சிங்ஹோமுக்கு வந்தார். ரிசப்ஷனிஸ்டை பார்த்து "டாக்டர் சுகுமாரை பார்க்க வேண்டும்" என்று கூறினார். என்றுமில்லாத திருநாளாக காலை கொஞ்சம் போலீசும், மாலை மற்றொரு போலீசும் வருவது கண்டு கொஞ்சம் ஆச்சரியமடைந்தாள் ரிசப்னனிஷ்ட் வனிதா. பின்பு அவள் எஸ்.பி ஐ டாக்டர் சுகுமாரின் ரூமுக்கு அழைத்துச் சென்றாள். உள்ளே சென்றதும் சற்குணம் "நான் சூப்பிரெண்டண்ட் ஆப் போலீஸ் சற்குணம்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சுகுமார் "சார்,வாருங்கள்"என்று கூறி தனக்கும் ஜாஸ்மினுக்கும் உள்ள நெருக்கமான உறவை உறவு குறைத்துக் கூறி, தனக்கு யாரோ விஷம் வைத்ததையும் கூறினான். சற்குணம் அவனிடம் "நேரடியாகவே நீங்கள் யாரையாவது சந்தேகப்படுகிறார்களா" என்று கேட்டார். அதற்கு சுகுமாரன் "இங்கே டாக்டர் ஜோசப் குருவில்லா  என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு டாக்டர் ஜாஸ்மின் மீது ஒரு கண். நான் இதற்கு குறுக்கே இருக்கிறேன் என்ற அனாவசிய  சந்தேகத்தில் அவர் எனக்கு விஷம் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். நேற்று அவரே எனக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார். அதில் தான் விஷம் கலந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். அத்தோடு இல்லாமல் பார்மசியில் தாலியம் கலந்த மருந்துகளை யார் வாங்கினார்கள் என்று ரெஜிஸ்டரை செக் செய்தேன். மூன்று நாட்களுக்கு முன் டாக்டர் குருவில்லா அந்த மருந்தை வாங்கியது ரெஜிஸ்ட்டரில் பதிவாகி இருக்கிறது" என்றான். இதைக் கேட்ட சற்குணம் "தேங்க்யூ டாக்டர் சுகுமார். என்னுடைய வேலையை சுலுபமாக்கி விட்டீர்கள்" என்று கூறி "இனி நான் ஆக வேண்டியது பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்" என்று கூறினார் . சற்குணம் பின்பு ஜோசப் குருவில்லாவை தேடிச் சென்றார்.இதற்குள் ஒரு போலீஸ் ஆபிசர் யாரையோ தேடுவதைப்பார்த்து  சந்தேகப்பட்ட ஜோசப் குருவில்லா கடகடவென பார்க்கிங் லாட்டிற்கு சென்று, தன்னுடைய மோட்டார் சைக்கிளை ஆன் செய்து அதில் ஏறி கிளம்ப தயாரானான். ஆனால் அவன் போதாத காலம்  சில வண்டிகள் எதிரும் புதிரும் நிற்க வைக்கப்பட்டு இருந்தால், அவனால் அவ்வளவு  சுலபமாக வெளியில் செல்ல முடியவில்லை. அதற்குள் அவனைத் தேடிக் கொண்டு வந்த சற்குணம் அவன் வெளியே தப்பி சென்று விட்டதை அறிந்து பார்க்கிங்  லாட்டுக்கு சென்று, சுகுமார் அடையாளம் காட்ட, அவனை பிடித்தார். முதலில் அவன் ஒன்றையும் ஒத்துக் கொள்ளவில்லை. சற்குணத்திடம் அவன் "டாக்டர் சுகுமார் ஏற்கனவே கல்யாணமானவர். அவர் ஜாஸ்மினுடன் தகாத உறவு வைத்துக் கொண்டிருந்தார். அதை நான் பலமுறை கண்டித்து இருக்கிறேன்.அதனால் அவர் என் மீது வீண் பழி போடுகிறார். மற்றபடி நான் அவருக்கு விஷம் கொடுக்கவில்லை. எனக்கு ஒன்றுமே தெரியாது" என்று சாதித்தான். இதைக் கேட்ட சற்குணம் "தாலியம் கலந்த மருந்தை நீங்கள் எதற்கு பார்மசிலிருந்து வாங்கினீர்கள்" என்று கேட்டார் . அதற்கு அவனால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. அவனை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற எஸ். பி, கேட்கிற விதத்தில் அவனை கேட்க ஆரம்பித்ததும், வேறு வழி இல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்டான். அவனை ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க கட்டளையிட்டார் சற்குணம்."எனக்கு இரண்டு நிமிடம் டைம் கொடுங்கள்" என்று கூறிவிட்டு பாக்கெட்டில் ரெடியாக இருந்த பொட்டாசியம் சயினெட் பவுடரை எடுத்து ஒரு துளி நாக்கில் தடவிக் கொண்டான்.அடுத்த நிமிடத்தில் டாக்டர் குருவில்லா நாக்கில் நுரை  தள்ள போலீஸ் ஸ்டேஷனில் மரணத்தை தழுவினான். இந்த முறை டாக்டர் சுகுமார் தப்பித்து விட்டதால் அடுத்த முறை அவருக்கு பொட்டாசியம் சயனைடு  விஷயத்தை கொடுக்க அவன் வாங்கி வைத்திருந்த விஷம்,  கடைசியில் அவனையே காவு  வாங்கிவிட்டது

(தொடரும்)

மாற்றான் தோட்டத்து மல்லிகை -9 & 10

 மாற்றான் தோட்டத்து மல்லிகை -9

தான் செய்யப் போகும் காரியத்திற்கு இன்னும் கொஞ்சம் சரக்கு ஏற்றிக்  கொண்டால் தான் நன்றாக இருக்கும்  என்று ராபர்ட் நினைத்தான்.

எட்டு மணி ஆனபோது,வெளியே சென்ற ராபர்ட் பக்கத்திலிருந்த டாஸ்மாக் கடையில் ஒரு குவார்ட்டர் விஸ்கி வாங்கிக் கொண்டு வந்தான். வீட்டுக்கு வந்ததும் அதை,அந்த ராவில், ராவாக குடித்தான்.

இரவு 10:30 மணி அளவில் கார் பார்க்கிங்கில் சென்று ஆள் நடமாட்டம் இல்லை என்று உறுதி செய்து கொண்ட ராபர்ட், திரும்பி வந்து கார் சாவியை எடுத்துக்கொண்டு, ஜாஸ்மினை தூக்கிக்கொண்டு, கார் பார்க்கிங்கை அடைந்து 

அவளை(அதை)காரின்  பின்சீட்டில்  உட்கார வைத்து, காரை  கிளப்பினான். கார் தல்லாகுளத்தில் இருந்த ஜாஸ்மின் வீட்டை விட்டு மெதுவாக ஓட ஆரம்பித்தது.  அடுத்த டிராபிக் ஜங்ஷனில் ரெட் லைட் எரிந்து கொண்டிருந்தால், காரை நிறுத்த வேண்டி இருந்தது. க்ரீன் சிக்னல் விழுந்ததும் வண்டியை மெதுவாக  கிளப்பினான் ராபர்ட். கொஞ்ச தூரம் சென்ற உடனே, ரோட்டை மரித்து செக்கிங் செய்து கொண்டு இருந்த டிராபிக் டீம் ராபர்ட்டை  பார்த்து வண்டியை ஓரம் கட்ட சொன்னார்கள். ராபர்ட் மெதுவாக இடது கை பக்கம் திரும்பி ஓரம் கட்டுவது போல் நடித்து, பின்பு வேகமாக காரை ஓட்ட ஆரம்பித்தான். அவன் இவ்வாறு செய்தவுடன் சந்தேகம் எழுந்த டிராபிக் இன்ஸ்பெக்டர் உடனடியாக அடுத்த ட்ராபிக்  ஜங்ஷனில் இருந்த போலிசுக்கு ஒயர்லெஸ் மூலம் தகவல் தர, அடுத்த ஜங்ஷனில் ராபர்ட் தடுத்து நிறுத்தப்பட்டான். இதற்குள் அவனைத் தடுத்து நிறுத்திய முதல் ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து சேர்ந்தார்.கார் கதவை திறந்து  ராபர்ட்டை  வெளியே இழுத்தார். தன்னிடமிருந்து கருவியை அவன் வாயருகில்  வைத்து ஊதச்சொன்னார். அவன் நன்றாக போதையில் இருப்பதை அந்த கருவி காட்டிக்கொடுத்தது. "குடித்துவிட்டு வண்டி ஓட்டக்கூடாது என்று தெரியாதா" என்றார் போலிஸ்.

"தெரியும் சார். குடித்திருக்கிறேன். அதனால்  வண்டியை ஓட்டுவதாக இல்லை. திடீரென்று என் மனைவிக்கு உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது. அவள் பின் சீட்டில் மயக்கமாக இருக்கிறாள்.அவளை நர்சிங் ஹோமிற்கு கூட்டிச்செல்கிறேன். அதனால்தான் வண்டியை ஓட்ட வேண்டிய நிர்பந்தம்" என்றான். அவன் கூறியதை சிறிதளவு நம்பிய அந்த இன்ஸ்பெக்டர், வண்டியின் பின் சீட்டிற்கு சென்று "என்னம்மா உங்களுக்கு உடம்பு சரியில்லையா" என்று கேட்டார் .பதில் வராமல் போகவே அவர் கதவை திறந்தார். ஜாஸ்மின் தலை வெளியே சாய்ந்தது. இதற்குள் ராபர்ட் ஓட  ஆரம்பித்தான். அவனை இன்னொரு டிராபிக் கான்ஸ்டேபிள் துரத்த ஆரம்பித்தார். அதற்குள் எதில் வேகமாக வந்த லாரி ராபர்ட் மேல் மோதியது. ராபர்ட் அதே இடத்தில் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு ஒரு நொடியில் துடி துடித்து இறந்தான்.

அங்கு கிடுகிடுவென கூட்டம் கூடிவிட்டது. போலீசார் ஜாஸ்மின் உடலை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு, அவள் உடலை ராஜாஜி அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார்கள். ராபர்ட் உடலும் அனுப்பி வைக்கப்பட்டது.வாழ்க்கையில் ஜோடியாக இருந்து,பின்னர் சிறிது காலம் பிரிந்திருந்த இருவரும், இப்போது மீண்டும்  ஜோடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.அடுத்த நாள், காரின் நெம்பரை வைத்து, அவள் பிரபல இருதய நர்சிங் ஹோமில் வேலை செய்து கொண்டு இருந்த டாக்டர் ஜாஸ்மின் என்று போலீஸ் தெரிந்து கொண்டது(தொடரும்)

--------------------------------------------------------------

இன்று ஞாயிற்றுக்கிழமை.

இலவச இணைப்பாக கீழே

மாற்றான் தோட்டத்து மல்லிகை - 10

------------------------------------------------------------

 மாற்றான் தோட்டத்து மல்லிகை-10

மறுநாள் காலை, வழக்கம்போல, சுகுமார் நர்சிங் ஹோமுக்கு சென்று விட்டான். காலை ஒன்பதரை மணிக்கு அவன் அனுமதிக்கபட்டிருந்த  நர்சிங் ஹோமிலிருந்து டூட்டி டாக்டர் அவனை தொடர்பு கொண்டார். "டாக்டர் சுகுமார். நீங்கள் சாப்பிட்ட உணவில் நேற்று யாரோ 

*Thalium* * 

கலந்து இருக்கிறார்கள். நல்லவேளை சரியான சமயத்தில்  எங்களிடம் வந்ததால்  காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள்" என்று கூறினார். சுகுமாருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. யார் தனக்கு தாலியம் கொடுத்திருக்க முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தான். எதற்கும் ஜாஸ்மின் வரட்டும் ஆலோசித்துப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.ரிசப்ஷனிஸ்ட் வனிதாவிடம் சுகுமார் "டாக்டர் ஜாஸ்மின் இன்னும் வரவில்லையா" என்று கேட்டான்.

" இல்லை டாக்டர். இன்னும் வரவில்லை"என்றாள் வனிதா. அவன் தன்னுடைய ரூமுக்கு திரும்பிச் சென்றதும் வனிதா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.நல்லா இருந்த இந்த  மனுஷன் ஸ்டெப்னியை தேடி அலைகிறாரே என்று நினைத்துக் கொண்டாள்

அந்த சமயத்தில்  ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டேபிளுடன்  உள்ளே நுழைந்தார்கள். ரிசப்ஷனிஸ்டிடம் சென்று" சீப் டாக்டரை பார்க்க வேண்டும்" என்று கேட்டார்கள் ."சீப் டாக்டர் இன்று லீவில் இருக்கிறார்.நீங்கள் வேண்டுமானால் டாக்டர் சுகுமாரை பார்க்கலாம்" என்று கூறினாள் வனிதா. இருவரும் சுகுமார் ரூமுக்கு சென்று கதவைத் தட்ட, சுகுமார் கமின் என்று சொன்னான்.உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் " ஐ அம் ஃப்ரம் தல்லாகுளம் கிரைம் பிரான்ச். உங்க ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர் ஜாஸ்மின் நேற்று இரவு கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதுவிமில்லாமல் ஜாஸ்மின் உடலை அப்புறப்படுத்த வேண்டி ஒருவன்  காரை ஓட்டிக் கொண்டு வந்த போது அவன்  மீது லாரி மோதி, அவனும் இறந்து விட்டான். ஜாஸ்மினைப்பற்றி விவரம்வேண்டும்" என்று சொன்னார்.தன்  தலை மீது கை வைத்துக் கொண்டு சுகுமார் "மை காட். ஜாஸ்மின் செத்துவிட்டாளா. ஐயோ பாவம் "என்று இடிந்து போய் உட்கார்ந்தான். இன்ஸ்பெக்டர் "டாக்டர் ஜாஸ்மின் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்திருக்கிறார். அவருக்கு விரோதிகள் யாரும் உண்டா"என்று கேட்டார்.தனக்கும் ஜாஸ்மினுக்கும் இருந்த உறவை தவிர ஜாஸ்மினின் மற்ற எல்லா விவரங்களையும் இன்ஸ்பெக்டரிடம்   சுகுமார் கூறினான்.

அப்போது அறைக்குள் நுழைந்த டாக்டர் குருவில்லா "என்ன டாக்டர் சுகுமார். உங்க க்ளோஸ் பிரண்ட் டாக்டர் ஜாஸ்மின் இறந்து போய்விட்டார்களாமே" என்று கூறினான். க்ளோஸ் என்ற வார்த்தையை அழுத்தம் கொடுத்து சொன்னான். அப்பொழுது தான் இன்ஸ்பெக்டரையும், கான்ஸ்டபிளையும் பார்த்த மாதிரி" ஐ அம் வெரி சாரி. நான் அப்புறம் வருகிறேன்" என்று கூறிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தான். இன்ஸ்பெக்டர் ஏதோ க்ளூ கிடைத்த சந்தோஷத்தில்  சுகுமாரை பார்த்து "நீங்கள் நேற்று மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது  மணி வரை எங்க இருந்தீர்கள் என்று கூற முடியுமா" என்று கேட்டார். அதைக் கேட்ட சுகுமார் "உங்கள் கேள்வியின் அர்த்தம் எனக்கு நன்றாக புரிகிறது. இந்தக் கொலையை நான் செய்திருப்பேனோ என்று உங்களுக்கு சந்தேகம் வருகிறது. நேற்று மாலை ஐந்தரை மணியிலிருந்து இரவு ஒன்பது  மணி வரை ஜீவா நர்சிங் ஹோமில் படுத்து கிடந்தேன். ஐந்து மணிக்கு என்னை அங்கே கொண்டு போய் சேர்த்ததே டாக்டர் ஜாஸ்மின் தான். நீங்கள் வேண்டுமானால் ஜீவா நர்சிங் ஹோமில் விசாரித்துக் கொள்ளலாம்" என்றான் சுகுமார். அதற்கு இன்ஸ்பெக்டர் "நாங்கள் விசாரிப்பதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இப்பொழுது வந்து விட்டு போனவர் யார்" என்று கேட்டார்  இன்ஸ்பெக்டர்."அவர் பெயர் டாக்டர் ஜோசப் குருவில்லா" என்றான். என்றான் சுகுமார்.

கடைசியில் சுகுமார் "ஜாஸ்மின் கணவனை விட்டு பிரிந்து இருந்திருக்கிறாள். அவர் கணவன் பெயர் ராபர்ட் என்று அறிகிறேன். அவன் ஒரு மொடாக்குடியன்.அவள் உடலை எடுத்துக் கொண்டு சென்ற ஆள் ஒருவேளை ராபர்ட்டாக கூட இருக்கலாம்" என்று கூறினான்.

*-Thallium-201 is a radiopharmaceutical agent used in the diagnosis of coronary artery disease and parathyroid hyperactivity.

(தொடரும்)