Tuesday, July 4, 2023

காதலிலே தோல்வியுற்று

காதலிலே தோல்வியுற்று

R.C. Natarajan

"சாப்பாடு பரிமாறட்டுமா?" அந்தணக் கிழவர் கேட்டார்.

"இதோ, கைகழுவிட்டு வர்றேன்," சென்று வந்தான். பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தான். என்ன வயது என்று நிர்ணயிக்க முடியாதத் தோற்றம்.

சுருக்கமாக சாப்பிட்டான்.

"ஏன்? சாப்பாடு நன்னால்லையா?" கிழவர் கேட்டார்.

"நல்லாயிருக்கு. போறும்." எழுந்து சென்று வாய் கைகழுவி வந்தான்.

கிழவர் அவன் சாப்பிட்ட இலையை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, கைகழுவி வந்தார்.

"வேற மனுஷங்க யாரையுமே காணலியே. ஏன் ?"

"எப்பவாவது யாராவது வருவா. சாப்டுட்டு ஏதானும் குடுத்துட்டு போவா. இப்படியே ஜீவனம் ஓடறது."

தன் பையிலிருந்தது சில நாணயங்களை எடுத்துக் கொடுத்தான்.

"அய்யய்யோ, இவ்வளோ வேணாம். இது போறும்." திருப்பிக் கொடுத்தார்.

"பரவால்லை, வெச்சுக்கங்க. தேவைக்கு உதவும்."

"நீங்க தீர்க்காயுசா இருக்கணும். ஒங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. ஸ்வாமி ஒங்களுக்கு எல்லா சந்தோஷத்தையும் குடுப்பார்."

"ஹ்ம்ம்..." பெருமூச்சு விட்டான்.

"ஏன் பெருமூசசு விடறேள் ? ஏதாவது கவலையா?"

அவரை உத்து நோக்கினான்.

அவர் கண்கள் கொஞ்சம் மருண்டன. "தப்பா கேட்டுட்டேனா? மன்னிச்சுக்கோங்கோ."

"தப்பில்லை." மௌனித்தான்.

"கவலையை வாய்விட்டுச் சொன்னா பாதி எறங்கிடும்னு பெரியவா சொல்லுவா."

"நீங்களும் பெரியவர்தானே? வயசுல என்னைவிட ரொம்ப பெரியவர். வர்றவங்களுக்கு சாப்பாடு போட்டு பசி தீர்க்கறீங்க. அப்படி பார்த்தா நீங்களும் பெரியவர்தானே?"

"ஒங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. அற்புதமா, மனசுக்கு இதம்மா பேசறேள். ஆனா எதோ ஒரு கவலை மனசுக்குள்ள இருக்குன்னு தெரியறது. என் மனசுல அப்படிப் படறது."

"நீங்க சொன்னது சரிதான் பெரியவரே." மௌனம்.

"இன்னொன்னு சொல்லட்டுமா?"

"சொல்லுங்க."

"எதோ பொம்மனாட்டி விஷயம்னு தோணறது."

வியப்புடன் அவரை நோக்கினான். "எப்படி சொல்றீங்க?"

"எவ்வளவோ பேரை பார்க்கறேன்; பேசறேன். அந்த அனுபவம்."

மேலும் மெளனமாக இருந்தான்.

கிழவர் உள்ளே சென்று ஒரு குவளையில் நீர் கொண்டு வந்தார்.

"இந்தாங்கோ. தீர்த்தம் சாப்பிடுங்கோ."

வாங்கி குடித்துவிட்டு "ரொம்ப நன்றி பெரியவரே," என்றான்.

"ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலேன்னு முன்னோர் சொல்லியிருக்கா. கேட்டிருக்கேளா?"

"இல்லை. ஆவது பெண்ணாலே, புரியுது. அழிவது, எப்படி?"

"நல்ல யோசிச்சுப் பாருங்கோ. அழிவதுன்னா செத்துப் போறதுன்னுதான் அர்த்தமா என்ன?"

"பின்னே?"

"மனநிம்மதி அழிஞ்சா வாழ்க்கை அழிஞ்ச மாதிரிதானே?"

"அதுவும் சரிதான்," என்று மறுபடியும் சிறிது நீரைப் பருகினான்.

"நீங்க ஒரு பெண்ணை காதலிச்சேள், சரிதானே?"

"ஆமா. எப்படி தெரியும்?"

"ஒரு அனுமானந்தான். கொஞ்ச நாள்அவளும் உங்களை காதலிச்சா. இல்லையா?"

"உண்மை."

"அவளுக்காக நிறைய்ய செலவு பண்ணிருப்பேளே?"

"செஞ்சேன்."

"இப்போ கைப்பணமெல்லாம் செலவாகியிருக்குமே?"

"ஆமா."

"மேலே குடுக்க பணமில்லையா?"

"ம்ம்... எப்படி தெரியும்?"

"உங்க பையிலே இருந்த பணம் பார்த்தேன். சில்லறையாத்தான் இருந்தது. பணம் இல்லேன்னதும் அவ்வளோதான், போயிட்டுவான்னுட்டாளா ?"

"உண்மை."

"உங்க தன்மானத்தை அழிச்சிருக்கா. இதுதான் ஒரு மனுஷனுக்கு பெரிய அழிவு... உயிரோட வாழும்போதே செத்துப்போயிட்டாப்ல தோணும். உங்க மனக்கவலை எனக்கு புரியறது."

"ரொம்ப சரி. ஏண்டா வாழணும்னு தோணுது."

"சிவ சிவா. அப்படியெல்லாம் பேசாதீங்கோ. எப்போவுமே பகவான் நல்லவாளுக்கு கைகுடுப்பான். கவலைப் படாதேள்."

"அதுவும் சரிதான்."

"என்ன பண்றதா இருக்கேள் ?"

"மதுரைப் பட்டணம் போய் ஏதாவது வியாபாரம் பண்ணி வாழலாம்னு தோணுது."

"பண்ணுங்கோ. பட்டணம் போற பட்சத்துல ஒரு யோசனை."

"என்ன?"

"அரசாங்கத்துல பெரிய பதவில இருக்கறவாள்ட்டேருந்து தூர விலகியே இருங்கோ. கொஞ்சம் ஆபத்தானவா. உங்க முகத்தைப் பார்க்கறப்போ உங்களுக்கு ஏதோ ஆபத்து நடக்க வாய்ப்பிருக்குன்னு மனசுல தோணறது. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கோ."

"கண்டிப்பா மனசுலே வெச்சுக்கறேன்."

"வியாபாரத்துக்கு மூலதனம் வேணுமே? என்ன பண்ணப் போறேள்?"

"வீட்டுல இருக்கற எதையாவது வித்து பணம் திரட்டணும். பார்க்கறேன். பேசினா தெரியும்."

"யாரோட பேசினா?"

"வீட்ல என் பெண்டாட்டி இருக்கா. அவகிட்ட."

"என்னது? பெண்டாட்டியா?"

"ஆமா. அவ பேரு கண்ணகி," என்று கூறிவிட்டு வெளியேறினான்.

-oOo-

குந்தவையின் காதல் - சுஜாதா

குந்தவையின் காதல் - சுஜாதா சிறுகதை

ராஜேந்திரன், வீரசோழ நெடுஞ்சாலையைக் கடந்து திருபுவன மாதேவியார் அங்காடித் தெருவில் வந்தபோது இருட்டத் துவங்கி, விளக்குப் பொருத்திக் கொண்டிருந்தவர்கள் இளவரசைப் பார்த்ததும் பயந்து தத்தம் காரியங்களில் ஸ்தம்பித்தனர். உடன் குதிரையில் வந்த திருமெய்க்காப்பாளனிடம், "என்ன, எல்லோரும் இப்படிப் பார்க்கிறார்கள்?" என்றான்.

"ரட்டபாடிப் போரைப் பற்றிப் பல வதந்திகள்."

"என்னவாம்?"

"சேதம் அதிகமாம் தோணூர் வரை சென்று முழுவதையும் நாசம் செய்து பெண்கள், பிராமணர்கள், குழந்தைகள்..."

''போதும் நிறுத்து! நான் வென்றேன். அவ்வளவு தான்.''

"நீங்கள் செய்யவில்லை. உங்களுடன் வந்திருந்த குஞ்சிர மல்லர்களும் கைக்கோளர்களும் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார்களாம்."

"ஒரு போரில் இதெல்லாம் இயற்கையே. தந்தையார் அதற்குத்தான் விளித்திருக்கிறாரோ?"

"இருக்கலாம்."

அங்காடித் தெருவிலிருந்து குந்தவை மருந்தகத்துக்குத் திரும்புகையில் ஒரு சாளரத்தின் திரை விலகி ஒரு பெண் ராஜேந்திரனைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.

"என்ன பார்க்கிறாய்? நெற்றிக்கண் காணாத மற்றொரு காமவேள் என்பது இவனுக்கும் பொருந்தும். இப்போதே இரண்டு மனைவியர்," என்றாள் அவள் தோழி.

அரண்மனைக்குள் பல வேழத்தினர் ஊடாடிக் கொண்டிருக்க ராஜேந்திரனைப் பார்த்ததும் அடங்கி ஒடுங்கி நடந்தனர்.

''அதிகம் தழைகிறார்கள் எவரையும் நம்பக்கூடாது. போரில் கைப்பற்றப்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதில் எனக்கு விருப்பமில்லை. எல்லாம் தந்தையார் பிடிவாதம்." சுற்றிலும் பார்த்து, "தனிச் சேவகங்களின் எண்ணிக்கையே எத்தனை இருக்கும்?"

"பதினெட்டு இளவரசே"

''அனைவரும் சோம்பித் திரிவோர். இது என்ன பாட்டும் கூத்தும்?"

ராஜேந்திரன் பிரதான அரங்கில் நுழைய, அனைவரும் சொல்லி வைத்தாற் போல எழுத்து பாட்டுப் பாடி, ஆட ஆரம்பித்தார்கள்.

ராஜேந்திரன் போதும் என்று கையைக் காட்ட அனைவரும் சிலை போல உறைந்தார்கள்.

பாதி நடனத்தில் நிறுத்தியிருந்த ஒரு பெண்ணிடம், போய். "பெண்ணே, உள் பெயர் என்ள?"

"அருண்மொழி, இளவரசே."

"ஆறாயிரம் பெண்களில் ஒருத்தி" என்றான் திருமெய்.

அவள் கன்னத்தில் தன் விரல் நகத்தால் நிரடி. "அருண்மொழி நல்ல பெயர் எனக்குப் பெண் பிறந்தால் உன் பெயர் வைக்கிறேன்."

திருமெய் அவளுக்கு ஒரு மோதிரம் கழற்றிக் கொடுத்து. "போ போ!" என்றான்,

“ஓய் தனிச் சேவகரே, பெயர் என்ன?"" என்றான். அவர் மீசையை நீவி விட்டுக் கொண்டு, குறுகி இளவரசரிடம் வந்து, "கோதண்டராம உடையார்"

'"உள்ளே இருக்கிறாரா ராஜராஜ சக்கரவர்த்தி) காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய கோ, இராஜகேசரிவர்மர், மும்முடிச் சோழர்....".

"சுருக்கமாகச் சொன்னால் உன் தந்தை" என்று திறந்த கதவிலிருந்து வெளிப்பட்டு ராஜராஜ சோழர் தன் மகனிடம் வந்தார்.

''வணக்கம் தந்தையே.''

சக்கரவர்த்தி அவனை அணைத்துக் கொண்டு, ''வா மதுராந்தகா. உன்னுடம் முக்கியமாக ஒரு விஷயம் பேச வேண்டும்."

"அதற்கு முன் என்னை மதுராந்தகன் என்று அழைப்பதை நிறுத்தக் கோருகிறேன்."

"ஏன் பிடிக்கவில்லையா?"

"உங்களுக்கு வேண்டுமெனில் உங்கள் சிறிய தந்தையின்பால் அன்பிருக்கலாம். எனக்கு இல்லை.''

பெரியவர் சிரித்து, "எப்போதும் எதிர்ப்பு தான் உனக்கு, ரட்டபாடியில் அதிகம் சேதமாமே?"

"அதைக் கேட்கத்தான் என்னை அழைத்தீர்களா தந்தையே?"

''அதையும் கேட்கத்தான். மசுனே போரில் தேசம் என்பது மிகவும் குறைந்த அளவு இருக்க வேண்டும். வெற்றி ஒரு கள் வெறி போல, தலைக்கு ஏறிவிட்டால் ஏது செய்கிறோம் என் பதை மறந்துபோய் விடுவாய். சத்யாச்ரயன் இப்போதே தன்னைத் திகுளமாரி என்று பட்டமேற்றுக் கொண்டுவிட்டான். "

"புரியவில்லை. ''

“திகுளமாரி என்றால் தமிழர்க்கொல்லி, ''

“எனக்கும் ஏதாவது பட்டப்பெயர் கொடுங்களேன். சாளுக்கிய மாரி என்று? போய்க் கவனிக்கிறேன் “

*"நீ திரும்ப வந்ததும் அவன் தோணூர் வரை வந்து இழந்ததைக் கைப்பற்றிவிட்டது என்னவோ நிசம்,"

“இப்போர் சொல்லுங்கள். திரும்பப் பறித்து விடுகிறேன். வளநாடு மண்டலங்களாகப் பிரித்துச் சோழ அரசை நிலை நாட்டச் சமயம் போதவில்லை எப்போது வேண்டுமெனிலும் அதைப்பற்ற முடியும் என்னால் “

"சேதங்கள்?'"

ராஜேந்திரன் அலுத்துக் கொண்டான்.

''தந்தையே, சேதங்கள் ஒரு போரில் தவிர்க்க முடியாதவை. ஓர் அளவுக்கு வெறியையும் உணர்ச்சிவசப்பட்ட காரியங்களையும் தவிர்க்கவே இயலாது. ஊரை விட்டு, வேரைவிட்டு வெகுதூரம் வந்தார்கள். இயலாது வந்தவர்கள் வெற்றியைக் கொண்டாடுவதில் தப்பில்லை. உங்கள் வெற்றி விழாக்களையே எண்ணிப் பார்த்தால் தெரியும்.'

"தப்பில்லைதான். இருந்தும் பெண்களைவிட்டு வைக்க வேண்டியது வெற்றிவாகை நேரத்தில் முக்கியமாகிறது.'

"கூடியவரையில்தான் முயல முடியும்."

“போருடன் தொடர்பில்லாதவர்களைக் கொல்வதில் எனக்குச் சம்மதமே இல்லை.''

"அதைச் சொல்லவர அழைத்தீர்கள்?" என்றான் அலுப்புடன் ராஜேந்திரன்,

"இந்தப் பேச்சு உனக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிகிறது; தான் அழைத்தது குந்தவையைப் பற்றிப் பேச"

“எந்தக் குந்தவை? உங்கள் சகோதரியா, என் சகோதரியா?"

"உன் சகோதரி, என்மகள், “

“என்ன அவளுக்கு? கவிதை எழுதுகிறாளா? அந்தக் கெட்ட பழக்கத்தை நிறுத்திவிட்டாள் என்று நினைத்தேன் ''

"பழையாறைக்குப் போய் அவளைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும்.''

"விமலாதித்தனைத் திருமணம் செய்துகொள்ள..."

ராஜேந்திரன் ஆச்சரியத்துடன், தந்தையைப் பார்த்தான்.

"விமலாதித்தன் கீழைச் சாளுக்கியன்?"

"ஆம்.''

"தந்தையே, என்ன இது? என் தங்கை சாளுக்கிய வம்சத்தில் போவதா? சாளுக்கியர்கள் நம் எதிரிகள் தந்தையே."

'மேலைச் சாளுக்கியர்கள் தாம் நம் எதிரிகள்".

"மேலோ கீழோ, எல்லாச் சாளுக்கியர்களையும் கொல்ல வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே எனக்குப் போதிக்கப் பட்டிருக்கிறது தந்தையே"

"போதனையில் ஒரு திருத்தம். கீழைச் சாளுக்கியர்கள் நம் எதிரிகள் இல்லை. திருவையாற்றில் தஞ்சம் கொடுத்துள்ளேன்.

''கலிங்கத்தின் மேல் மறுபடி படையெடுக்க வேண்டுமா?"

''ஆம் அதனால்தான் இந்தத் திருமண ஏற்பாடு வீணாக அவர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்க இணக்கமில்லை எனக்கு, விமலாதித்தனுக்குக் குந்தவையைக் கொடுத்து விட்டால், நம் போர் முயற்சிகளுக்கு ஒரு காரணம் கிடைக் கிறது. சோழ விசுவாசம் வடக்கே பரவுகிறது."

ராஜேந்திரன் அலுப்புடன், "இப்போது என்ன?" என்றான்.

'குந்தவையைத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் நீ சொன்னால் கேட்பாள்,"

"ஒப்புக்கொள்ளவே மாட்டாள் “

"யாரையாவது காதலிக்கிறாளா?"

"இது காதல் விவகாரம் இல்லை தந்தையே குந்தவை சிந்திக்கும் ஒரு சுதந்திரப் பெண் அலனைக் கேட்காமல் நாம் எவ்வாறு தீர்மானிக்கப் போகும்?"

"கேள்"

"மறுத்தால்?"

"ஒரு நாள் தாழ்த்தி மறுபடியும் கேள். சம்மதிக்கவில்லை எனில் பட்டினி போடு. சம்மதிக்க வை."

''தந்தையே, இது என்ன விந்தை? எதற்காக விமலாதித்தனை அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்?"

''வாக்குக் கொடுத்திருக்கிறேன்.''

"யாருக்கு?"

''அவன் அண்ணன் சக்திவர்மனுக்கு. எல்லோரும் திருவையாற்றில் வீற்றிருக்கிறார்கள். சக்திவர்மன். விமலாதித்தன், அவர்கள் தாய்..."

''வீண் சோறு!''

"சக்திவர்மன் முழுவதும் பட்டத்துக்கு வந்ததும் நமக்குத் தான் உதவப் போகிறான். இதற்குத்தான் வீண் சோறு! மேலும் வாக்களித்தேன்.''

"என்ன வாக்கு? தம்பிக்கு மகளைக் கொடுக்கிறேன் என்றா?""

"இல்லை. அவனை வேங்கி நாட்டிற்கு வேந்தனாக முடிசூட்ட"

"புரியவில்லை, அதற்கும் விமலாதித்தனுக்கும்...."

"ராஜேந்திரா. நீ இன்னமும் அரண்மனைச் சதிகள் பழக வில்லை. சக்திவர்மனுக்குப் பிறகு அவன் தம்பிதான் வேங்கி நாட்டுக்கு அரசன்,!!

"அப்படி யார் சொன்னது?"

"அது நான் தீர்மானித்தது."

"இப்படிச் சுற்றி வளைப்பதைவிட சக்திவர்மனுக்கே குந்தவையைக் கொடுக்கலாமே?"

'''சக்திவர்மன் இதுவரை இரண்டு திருமணங்கள் ஆனவன். " ராஜேந்திரன் சிரித்து,

"இது யார் பேசுவது? சோழமாதேவி, திரைலோக்கிய மாதேவி, பஞ்சவன் மாதேவி. அபிமானவல்லி, இலாட மாதேவி, மீனவன் மாதேவி அப்புறம் என்ன..? எனக்கே கணக்கில் வைத்துக் கொள்ள முடியாத மனைவிமார்கள் கொண்ட தாங்களா?!!

பெரியவர். மீசையை நீவி விட்டுக்கொண்டு. "ராஜேந்திரா. பட்டத்துக்கு வருமுள் மற்றொரு அறிவுரை, சோழ சக்கரவர்த்திகள் வேறு, சிற்றரசர்கள் வேறு. நம் நடைமுறைகளே வேறு. திருமணம் ஒரு பயனுள்ள அரசியல் திறன்! உள் தங்கையை விமலாதித்தனுக்குக் கொடுப்பதில் நம் மண்டலத் துக்குப் பல்வேறு நற்பயன்கள் உள்ளன வடக்கே ஒரு விசுவாசி வேண்டும். வேங்கி. கலிங்கம் எல்லாவற்றையும் இங்கிருந்து கவனித்துக் கொள்வது மிகவும் அரியதாயிருக்கிறது. நம் வம்சம் பரவ இந்த முறையை ஏற்கத்தான் வேண்டும். பெண்கள் எதற்கு? புதிதாக சோழ சாளுக்கிய வம்சம் ஒன்று நிறுவவேண்டும். ''

*குந்தவையைக் கேட்டுப் பார்த்தீர்களா?"

'இன்னும் இல்லை. நீதான் கேட்டுச் சம்மதிக்க வைக்க வேண்டும்."

சக்ரவர்த்தி, ராஜேந்திரள் அருகில் வந்து அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டு, "நான் இன்னமும் அதிக காலம் இருக்கப் போவதில்லை உனக்கு இளவரகப் பட்டம் கட்டியாயிற்று. என் இதயமெல்லாம் ஒரு ஆசை இது சோழ மண்டலம் வளதாடு கவிங்கத்திலிருந்து பரவி இடைதுறை நாடு, வளவாசி. கொள்ரிப்பாக்கை என்று.…."

ராஜேந்திரன் குறுக்கிட்டு, "தந்தையே வேண்டிய அளவு போரிட நான் தயார்."

""ராஜேந்திரா, சில நாடுகளைப் போரிட்டுக்கைப் பற்றிக் கொள்ள வேண்டும் சிலவற்றைப் பெண் கொடுத்துக் கொள்ள, வேண்டும். போ, குந்தவையைப் போய்ப்பார்."

ராஜேந்திரன் அரண்மனையை விட்டு வெளியே வந்த போது திருமொய்க்காப்பாளனிடம், "முன்னூற்றுவா. காலை பழையாறைக்குப் போக வேண்டும்" என்றான். -

"உத்தரவு இளவரசே '

“குந்தவை அங்கேதான் இருக்கிறாளா?".

'கடிகை மாராயனைக் கூப்பிடு, காலை பயணப்பட வேண்டும். அதிக ஆட்கள் வேண்டாம்."

முன்னூற்றுவன் ராஜேந்திரனை ஒருவாறு பார்த்து,

''இளவரசே,ஏதும் குழப்பமா?"

''இல்லை, தூது. ''

''அப்படியா?''

"பெரியவர் பெரிய திட்டம் போட்டிருக்கிறார். அதற்கு ஒரு பகடைக்காய் என் தங்கை "

"யார் குந்தவையாரா?"

'ஆம் முன்னூற்றுவா! நீ விமலாத்தித்தனைப் பார்த்திருக் கிறாயா?" என்று வினவினான் ராஜேந்திரன்

"இல்லை இளவரசே..!!

குதிரை மேல் தாவி ஏறிக்கொள்ள தெருவில் இடங்கையர் இளவரசரின் முன்னேற்பாட்டைப் பார்த்ததுமே அப்படியே தரையில் படிந்தனர்.

"நான் பட்டத்துக்கு வந்ததும் இந்த இடங்கை வலங்கையை ஒழிக்கப் போகிறேன்.''

மிகவும் கடினமான காரியம் அரசே. கிராமத்தையே எரித்தார்கள். சதுர்வேதி மங்கலம்.

"விமலாதித்தனைப் பற்றிச் சொல். குந்தவை பார்த்திருக்கலாம். தேவையெனில் பார்க்க வைக்கலாம். போக வேண்டுமா?"

''ஆம் தந்தையர் இல்லையெனில் கோபித்துக் கொள்வார். "

பின்னிரவின் நிலா வெளிச்சத்தில் தஞ்சாபுரியின் பெரிய கோயில் கோபுரம் ஒரு கரிய பெரிய கிரீடம்போல விளம்பில் ஒளிர

"அதைபோல் மற்றொரு கோயில் கட்ட வேண்டும். என்றான் ராஜேந்திரன் ''

''எதற்கு?'' என்றாள் திருமெய்

"அப்போதுதான் என்னை ராஜேந்திரன் என்று ஒப்புக் கொள்வார்கள்."

"இல்லையெனில்?"

"ராஜராஜன் மகன் என்பார்கள்."

உள்ளாலையிலிருந்து புறம்பாடிக்கு வந்து பழையாறை நோக்கிய சாலையில் செல்லும்போது தீப்பந்தங்களின் வெளிச் சத்தில் ராஜேந்திரனின் மனசஞ்சலம் முகத்தில் பிரதிபலித்தது. குந்தவை அவள் செல்லத் தங்கை. அவளைக் கட்டாயமாகத் திருமணம் செய்து கொள் என்று கேட்பதே தப்பு என்று தோன்றி யது. இருந்தும் அரசகாரியங்களுக்காகச் சில தியாகங்கள் செய்யத் தான் வேண்டும் குந்தவை இதை எப்படி எடுத்துக் கொள்வாள்? முதலில் அத்தையை அணுகலாமா? வேண்டாம். அவள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவள். ஒப்புக்கொள்ள மாட்டாள்.

''முதலில் உங்களுக்குச் சம்மதமா இளவரசே?" என்றான் முன்னூற்றுவன்.

''நான் விமலாதித்தன் என்கிற பிறவியைப் பார்த்ததே இல்லை,

"அழகானவன்தானாம்."

"அழகு மட்டும் போதுமா?"

குந்தவை கண்களைத் துடைத்துக் கொண்டு தூக்கம் இன்னும் கலையாத நிலையில் வந்தாள். அதிகம் நகைகள் அனைத்தையும் கழற்றி வைத்துப் பெண்டாடிப் பெண் தொடர நடந்து வரும்போது காலில் சலங்கை மட்டும் புலம்பியது.

"என்ன அண்ணா இத்தனை அதிகாலையில்?"

"குந்தவை, சுகமா?"

''சுகம் கேட்கவா தஞ்சையிலிருந்து வந்தீர்கள். "

"இல்லை"

"நீங்கள் போவதற்குள் நான் எழுதிய கவிதையைப் படித்துத் தான் ஆகவேண்டும்."

''குந்தவை, நாள் வெறும் போர்மல்லன். வில்லைப் பற்றிப் பேசு. சொற்கள் எனக்கு நேர விரயம்."

"உன் போன்ற சூன்யங்களையும் நான் சொல்லப் போகும் கவிதை குணப்படுத்தும்."

"நீ எழுதியதா'?

'''இல்லை, மற்றொருவர். “ என்று கண் சிமிட்டினாள்,

"நான் கவிதை பற்றிப் பேச வரவில்லை. குந்தவை நேராகச் சொல்லிவிடுகிறேன். தந்தையார் உனக்கு மணமுடிக்க விரும்புகிறார்."

குந்தவையின் இனிய புள்ளகை சட்டென்று உறைத்தது. ''மணமா? எனக்கா?"

''ஆம்"

அவள் நேர்ப்பார்வையைத் தவிர்த்தாள்.

"யாருடன்?"

"விமலாதித்தன். கீழைச் சாளுக்கிய இளவரசன்,''

"அண்ணா! என்னைக் கேட்காமல் தீர்மானித்தீர்களா?"

''சோழ வம்சத்தில் பெண்களைக் கேட்கும் வழக்கம் இல்லை.".

''அத்தை?''

''அத்தை விதிவிலக்கு,''

"நானும் அத்தையைப் போல..."

"யாரையாவது காதலிக்கிறாயா? சொல், தலையைச் சீவி விடுகிறேன்.!'

"அண்ணா, எள்ன, இது? நான் என்ன பகடைக் காயா?"

“ஏறக்குறைய அப்படித்தான்."

"முடியாது. ஏய்! யாரங்கே!' கை தட்டினாள்.

பெண்டாடடிப்பெண், "இளவரசி" என்று பணிவுடன் வர.

"அத்தையைக் கூப்பிடு."

"குந்தவை, அத்தையைக் கூப்பிட்டுக் குழப்பாதே நமக்குள் பேசிக்கொள்ளலாம். சொல், உளக்கு விருப்பமில்லை. அப்படித்தானே?"

''யாரை மணம் செய்ய விருப்பம்?"

"தமிழ்ப் புலவர் யாராவதா?"

“இல்லை. எனக்கு தமிழ்மேல்தான் காதல், திருவிசைப்பா என்று ஒரு புலவர் தஞ்சையில் பாடிக் கொண்டிருக்கிறாரே கேட்டாலோ"

"எனக்கு நேரமில்லை குந்தவை உனக்கு விமலாதித்தனை மணம் செய்துகொள்ளச் சம்மதமா இல்லையா?"

“இல்லை! இல்லை முடியாது! நான் ஒன்றும் உங்கள் அரசியல் விளையாட்டின் பாவை இல்லை. "

"குந்தவை தந்தையின் சொல்லை மீறுகிறாயா?"

"அண்ணா, நீங்கள் உண்மையாகவே என்னைக் கட்டாயப் படுத்த விரும்புகிறீர்கள்? அவ்வளவுதான் உங்கள் பாசமா!"

அவள் கரிய கண்களில் கண்ணீர் கரையிட, ராஜேந்திரன் அதைத் துடைத்தான்.

"சொல்லுங்கள் அண்ணா!" என்றாள்.

''என்னத்தைச் சொல்வேன்? குந்தவை, சில திருமணங்கள் தேவைப்படுகின்றன. நானே இரண்டாம் திருமணம் எதற்குச் செய்து கொண்டேன்? முக்கோக்கிழானடிகள் என்ற பெயர் கொண்ட பெண்ணை உன் அண்ணன் மணந்துகொள்வான் என்று எதிர்பார்த்திருப்பாயா? எல்லாம் அரசியல்தான்.''

''உங்களுக்கு அரசியல் தேவை. அதில் எங்களைப் பலி

வாங்காதீர்கள்."

"என்ன சொல்கிறாய்? விமலாதித்தனை மணக்கமாட்டாயா?"

"ஆள் கருப்பா சிவப்பா, அந்த மனிதர் யாரென்றே தெரியாதே அண்ணா?

''உங்களுக்கெல்லாம் முக்கியமல்ல ராஜேந்திரா, உங்களுக்கு முக்கியமானது வேலும் வில்லும் வேழமும்தான்."

'“வணக்கம் அத்தை பெரிய குந்தவைப் பிராட்டியார் உள்ளே நுழைந்து தன் சால்வையைப் பணிப்பெண்ணிடம் கொடுத்து,

''ராஜேந்திரா, எத்தனை முறை பழையாறை வருகிறாய். உன் அத்தையைப் பார்க்க நேரம் கிடைக்கவில்லையா?"

"அப்படி இல்லை அத்தை நான் பழையாறைப் பக்கமே வருவதில்லை. பல திங்களாயிற்று. முன்னூற்றுவா கடைசியாக எப்போது பழையாறை வந்தோம்?"

“நான்கு தினங்களுக்கு முன் இளவரசே. ''

ராஜேந்திரன் அவனை முறைத்துப்பார்த்து, "பொய் சொல்லாத வாய்க்குப் போசனம் கிடையாது முன்னூற்றுவா. " என்றான்.

பெரிய குந்தவைப்பிராட்டியார் சிரித்து, சிறியவளின் கூந்தலை வருடி, 'என்ன சொல்கிறான் உன் அண்ணன்?*

"யாரையோ திருமணம் செய்துகொள்ளவேண்டுமாம். அத்தை! ஆணை பிறப்பிக்கிறார்கள். "

''யாரையோ இல்லை. சாளுக்கிய இளவரசனை. பெயர் விமலாதித்தன். "

"பெயர் நன்றாகத்தான் இருக்கிறது. எதற்காம்?"

''அரசியல் அத்தை, அரசியல்.''

"யார், ராஜராஜன் உன்னை அனுப்பினானா?''

''ஆம் அத்தை.''

"நேரில் வந்து கேட்கமாட்டானோ?"

"அப்படியில்லை. நான் சொன்னால் குந்தவை ஒப்புக்

கொள்வாள் என்று..."

பிராட்டியார் இளம் குந்தவையைப் பார்த்து, "என்ன சொல்கிறாய் பெண்ணே?"

"எனக்குச் சம்மதமில்லை அத்தை. திருமணம் என்பது எப்படி இருக்கும்?"

'நாடு முழுவதும் கோலாகலமாக இருக்கும். குழலும் யாழும் பேரிகையும் முழங்கும். வீதிதோறும் நடனம் எல்லோருக்கும் கழஞ்சுப் பொன், பட்டங்கள், பட்டயங்கள்..."

''உங்கள் திருமணம் அப்படித்தான் நடைபெற்றதா அத்தை! நீங்கள் காதலித்துத்தானே..."

"என் திருமணத்தைப் பற்றிப் பேசாதே'' 'வல்லவரையரைக் கேட்டுப் பார்'

''அவர் இப்போது ஊரில் இருந்தால்தானே! அது என்ன? பழியிலி ஐன்னூற்றுவராமே?'' ராஜேந்திரன் தன் மெய்க்காப்பாளளைப் பார்த்து. "புதிய படையா என்ன?"

“ஆம் இளவரசே, ரகசியப் படை,"

*'குந்தவை. இப்போது என்ன சொல்கிறாய்? திருமணத்துக்குச் சம்மதமா இல்லையா?"

"இளவரசனைப் பார்க்காமல் அவள் சொல்ல மாட்டாள்."

''முன்னூற்றுவா, நீ விமலாதித்தனைப் பார்த்திருக்கிறாய் அல்லவா?"

அவன் கைவிரவைப் பற்றி இழுத்தான். "அ..ஆம் அரசே."

"விவரி"

முன்றூற்றலன், "நல்ல அழகும் திறமையும் உள்ளவர் விமலாத்திதர்."

"ஓவியம் ஏதாவது இருக்கிறதா?"

''ஓவியம் ஏமாற்றம். விமலாதித்தனை வரச் சொல். குந்தவை அவனைச் சந்திக்கட்டும். இப்போது எங்கே இருக்கிறா அவன்?"

"திருவையாற்றில்தான்"

''அழைத்து வா.''

''அதற்கு அவசியம்தானா அத்தை?''

''உறுதியாக அவசியமானது. பெண்களை நீங்கள் பகடை காய்கள் போல, பலி ஆடுகளைப் போலப் பயன்படுத்துவதை நான் எதிர்க்கிறேன் என்று உன் அப்பனிடம் போய்ச் சொல்" என்றார் மூத்த குந்தவைப் பிராட்டியார்.

"அப்படியெனில் விமலாதித்தனை..."

''வரவழைத்தே ஆகவேண்டும். இல்லையேல் திருமணத்துக்குச் சம்மதமில்லை."

''இளையவளே, நீ என்ன சொல்கிறாய்?"

"எனக்கு ஏதும் சொல்லத் தெரியவில்லை அண்ணா.''

''குந்தவை, எதற்கும் என்னைக் கேட்காமல் ஒப்புக்

கொள்ளாதே."

''திருமணத்தில் புதிய உடைகள் அணியலாம் குந்தவை.'

என்றான்.

"பெண்ணே, புதிய உடைகள், திருமணம் இல்லாமலேயே.. அணிந்து கொள்ளலாம்." "பெண்களுக்குச் சோழநாட்டில் அதிக சுதந்திரம்."

"என்ன சொன்னாய்?"

''ஒன்றுமில்லை அத்தை... கலிங்க நாட்டில் ஒரு படையெடுப்புக்குப் போகும்படி தந்தையார் எனக்குப் பணித்திருந்தார். அங்கொரு குலூத வேந்தன் இருக்கிறான். அவன் பெயரும் விமலாதித்தன்,"

''குழப்பாதே.நீ பெண் கொடுக்கப் போகிறாயா, இல்லை. போரிடப் போகிறாயா?" "குந்தவைக்குப் பார்த்திருப்பது மற்றொரு விமலாதித்தன். கீழைச் சாளுக்கிய மன்னன்."

"அது எந்த விமலாதித்தனாக இருப்பினும் குந்தவை அவனைப் பார்த்தே ஆக வேண்டும். அதன் பின்தான் மேற்பேச்சு."

ராஜேந்திரன் முகத்தை வருடிக்கொண்டு, "அப்படியா?' என்று அறையைவிட்டு வெளியே வந்தான். "நீராடவேண்டும். களைப்பாக இருக்கிறது. முன்னூற்றுவா, முதலில் திருவையாற்றுக்குச் செய்தி சொல். அவன் வரட்டும்.''

"சிக்கல்! விமலாதித்தனைப் பெரிய பிராட்டியாருக்குப் பிடிக்கவில்லையென்றால் சிக்கல்."

"அந்தச் சிக்கலை அப்போது எதிர்கொள்ளலாம்." அவர்கள் போனதும் பெரிய குந்தவைப்பிராட்டியார்,

"சோழப் பரம்பரையில் பெண்ணெடுப்பவன் வந்தே ஆக வேண்டும். குந்தவை கவலைப்படாதே. அவனை வரவழைத்து அவனைப் பார்த்து உனக்குப் பிடித்திருந்தால்தான் திருமணம்." என்றார்.

குந்தவை பெரிய பிராட்டியை அணைத்துக்கொண்டு 'அத்தை. நீங்கள் எனக்குத் தெய்வம்போல."

"இந்த ஆண்களை ஒரு அளவுக்குக் கட்டுப்படுத்தி வைத்திருத் தல் வேண்டும். இல்லையேல் இப்படி விருப்பப்படி செய் வார்கள்."

''அத்தை, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்.?''

"ஒரு கட்டாயமும் இல்லை. அவன் வந்ததும் பார். பிடித்திருந்தால் சம்மதம் சொல். இல்லையேல் முடியாது என்று சொல்லிவிடு. பெண்ணே உன் உரிமைகளை அறிந்துகொள்'

''அத்தை" என்று அணைத்த தன் மருமகளைக் குந்தவைப் பிராட்டியார் உச்சி மோந்தார். ''அத்தை, உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.'' என்ற அவள் கன்னத்தை வருடிக் கொடுத்தாள்.

'பெண்ணே, யாரையேனும் காதல் செய்து, விரும்புகிறாயா. இப்போதே சொல்,"

"இல்லை அத்தை. அப்படி ஒருவரும் இல்லை.''

"பேச்சில் தயக்கம் இருக்கிறது. அச்சப்படாதே, சொல்! ஒரு பெண்ணைப் பெண்ணால்தான் புரிந்துகொள்ள இயலும். " "வந்து ஒரு முறை.., ஒருமுறை. ஏதோ ஒருவிழாவில் தான்

ஒருமுறை அவரைப் பார்த்தேன்"

"யார் அது? பெயர் என்ன?"

"தெரியாது"

"என்ன விழா?"

''அதுவும் தெரியாது.''

"பின் என்னதான் தெரியும்?"

''அந்த முகம் மட்டும்."

குந்தவைப் பிராட்டியார் சிரித்து, "நன்றுதான். அந்த முகம் திரும்ப வரும் வரைக்கும் காத்திருப்பாயா பேதைப் பெண்ணே? இவ்வாறெல்லாம் யாரையாவது பார்த்து மனத்துக்குப் பிடித் திருந்தால் உடனே செயல் படவேண்டும். யார் என்ன என்று செய்தி அறிந்து கொள்ள, எத்தனை பேர் பெண்டாட்டிப் பெண்கள் இருக்கிறார்கள் அரண்மனையில்... போ, கவலைப் படாதே. இந்தத் திருமணத்தை எப்படியாவது தட்டிக் கழித்து விடுகிறேன்! நீ தேர்ந்தெடுப்பவன் உனக்கு எவ்விதத்திலும் இசைந்தவனாக இருத்தல் வேண்டும்."

குந்தவை உற்சாகத்தில் அத்தையைக் கட்டிக்கொண்டு முத்த மிட்டு "நிஜமாவா அத்தை" என்று கேட்டாள்.

''உன் அத்தை தீர்மானித்தால் யாரும் அதை அசைக்க முடியாது. நான் வல்லவரையரை மணந்த கதையை ஒரு நாள் விவரமாகச் சொல்கிறேன்.'

''அத்தை உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?"

''உன் மற்ற ஆசைகள் என்ன சொல்?" "மற்ற என் ஆசைகள் தமிழ்க் கவிதைதான்! அத்தை, திருக்குறள் திருமொழி..."

"பக்திப்பாடல்கள் ஏதாவது இருந்தால் சொல்.''

திருவையாற்றிலிருந்து விமலாதித்தனும் அவன் தமையன் சக்திவர்மனும் வரவழைக்கப்பட்டனர். அவர்களை நேரில் சந்திக்கப் பெரிய பிராட்டியார் சம்மதிக்காததால் ஒரு விழா வொன்று அமைத்து அதன் கோலாகலமாகப் பழையாறை அரண் மனையின் முன் ஊர்வலம் செல்வதாக அழைத்து, சாளரத்தி லிருந்து அத்தையும் தங்கையும் பார்க்குமாறு ராஜேந்திரன் ஏற்பாடு செய்தான்.

ஆனையாட்களும் குஞ்சிரமல்லர்களும் கைகோளப் பெரும் படையினரும் சாரிசாரியாக நடந்து செல்ல, அதன் பின் அரண் மனை நாட்டியக்காரர்களும் இசைக்கலைஞர்களும் வர. "ராஜேந்திரா, இந்தக்கூட்டக் நான் யார் என்று விமலாதித்தனைத் தேடுவது?"

"பொறுத்திருங்கள், பொறுத்திருங்கள். தனியே அலங்கார ரதத்தில் வருகிறான் பாருங்கள். குந்தவை, சரியாகப் பார்த்துக்கொள். இவன்தான் உன் கணவனாக வரப் போகிறவன்.'

மூலை திரும்பியதும் அந்தத் தங்க நிறத்தேர் மெல்ல அசைந்து வர, அதில் விமலாதித்தன் மட்டும் நின்று கொண்டு வந்த இருபுறமும் நோக்கி அவ்வப்போது புன்னகைத்துக் கொண்டு வீதி மக்களை வணங்கிக் கொண்டேவந்தான். சாரளத்தை அணுக மெல்ல நிமிர்ந்தான். குந்தவை பிரமித்தாள்!

''அத்தை.அத்தை! இவர்தானா அது!''

"இவர்தான் என்றால்?"

"நான் முன்பு சொன்னேனே? ஒரு விழாவில் பார்த்தே என்று இவர்தான்'' மகிழ்ச்சிப் பெருக்கில் பறவை போக கிறீச்சிட்டாள்.

''அதாவது, உன் உள்ளம் கவர்ந்த, பெயரில்லாத ஆணழக இவன்தானா?" '

'ஆம் ஆம் இவரேதான்"

"நல்லதாயிற்று! பழம் நழுவிப் பாலில் விழுந்தது ராஜேந்திரா உன் தங்கை சாமர்த்தியக்காரி."

''என்ன அத்தை?''

"ராஜேந்திரா. உன் தங்கைக்கு மனத்துக்குப் பிடித்தமானவன் அவன்தான். முன்பே ஒருமுறை பார்த்திருக்கிறாளாம். காவிரி விழாவில்தான் பார்த்திருக்கவேண்டும்."

"அப்படியா! பெண்கள் இந்தக் காலத்தில் என்னவெல்லாம் சாமர்த்தியம் பழகுகிறார்கள்."

"உங்கள் - அரசியல் சாமர்த்தியங்களுக்கு ஈடு கொடுக்க வேண்டியுள்ளதே?" "என் மனைவி கடும்வேகத்தில் தேர் ஒட்டுகிறாள்" என்றான் முன்னூற்றுவன்.

"சம்மதமா குந்தவை? அவனுடன் எதற்கும் ஒருவார்த்தை பேசி என்னவெல்லாம் பிடிக்கும். எது எது படித்துள்ளான் என்றெல்லாம் கேட்க வேண்டாம ? இல்லை. முன்பே சந்தித்துப் பேசியாகி விட்டதா?"

"இல்லை அத்தை"

"கண்கள் கூடப் பேசியதில்லையா? "

"போங்கள் அத்தை கேலி செய்யாதீர்கள்"

அவள் கண்களில் இப்போதே கனவு தீட்டியிருந்தது.

அண்மையில் சோழ மண்டலத்தில் அந்த வகையில் சிறப்பான திருமணமே பார்த்ததில்லை என்று அனைவரும் பேசிக் கொண்டார்கள். மக்கள் அனைவரும் தத்தம் வீட்டில் திருமணம் போலக் கொண்டாடினார்கள். கோயில்களிலும் அங்காடி களிலும் தீபங்கள் இடைவிடாமல் எரிய, நாடகங்களும் நாட்டி யங்களும் வித்தைப் பயிற்சிகளும் வில்வித்தைக் காட்சிகளும் சாரிசாரியாக மக்களுக்குப் பொன்கழஞ்சும் சோறும் கைதி களுக்கு விடுதலையும் கலைஞர்களுக்கு முகைவர் பட்டங்களும் எல்லாம் முடிந்து, ராஜகுருவின் ஆசிபெற்று குந்தவைக்கு விமலாதித்தனுடன் பேசத் தனியறையில் வாய்ப்புக் கிடைக்கப் பத்து நாட்களாயின.

பொன் இழைத்திரைச் சீலைகளை விலக்கி கரும்புச் சாறும் பழங்களும் யவனர்களின் வாசனைத் திரவியங் களும் அகிற்புகையும் மீறி அவள் முகத் திரையை விமலாதித்தன் விலக்கிக் கண்கொட்டாமல் பார்த்து, அவள் முகத்தை விரல் களால் நிமிர்த்தினான்.

அவன் மந்தகாசப் புன்னகையில் சற்று நேரம் லயித்திருந்தவள், மெல்லப் பேசினாள்.

''உங்களை நான் முன்னமேயே காவிரி விழாவில் பார்த்திருக் கிறேன். அப்போதே என் நெஞ்சில் பதிந்து விட்டீர்கள். உங்கள் உருவத்தை மறக்கவே இல்லை. இப்போது நீங்கள்தான் எனக்கு மணாளனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று தெரிந்ததும் என் மனம் துள்ளியது. என் விருப்பமெல்லாம் இரண்டே! ஒன்று நீங்கள். மற்றொன்று தமிழ் இலக்கியம்..."

விமலாதித்தன் அவள் உதட்டில் விரல் வைத்து முதன் முறையாகப் பேசினான்.

"நேனு நீ பாஷானு அசலு அர்த்தம் சேஸுகோ லேதுன்னானு. தெலுகுலோ பாஷிம்சு சுமா... வில்யத்தே தெலுகு பாஷனு நேர்ச்சு கோ.

'' ("எனக்கு நீ பேசுவது சரியாக அர்த்தம் செய்துகொள்ள இயலவில்லை. தெலுங்கில் பேசு, கண்ணே...... முடிந்தால் தெலுங்கு பாஷை கற்றுக்கொள்.')

சாம்பார்

 தக்காளி, வெங்காயம் இல்லாமல் சாம்பார்

#அம்மா_சமையல்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கு, கேரட், கத்தரிக்காய் போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் எலுமிச்சை அளவு புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். 

அதன்பின் 50 கிராம் துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து, இரண்டு முறை நன்றாகக் கழுவி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரை மூடி அடுப்பின் மீது வைக்க வேண்டும்.

குக்கரில் பிரஷர் வந்ததும் விசில் போட்டு 4 விசில் வரும் வரை துவரம்பருப்பை வேக வைக்க வேண்டும். 

பின்னர் குக்கரை இறக்கி வைத்து, அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு, கால் ஸ்பூன் வெந்தயம், 4 காய்ந்த மிளகாய் இவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்.

பின்னர் இரண்டு சில்லு தேங்காயை துருவி இவற்றுடன் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி இவற்றை ஒரு தட்டிற்க்கு மாற்றி ஆற வைக்க வேண்டும். 

பின்னர் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். அதன் பின் மறுபடியும் கடாயில் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக விடவேண்டும். 

பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி இவை நன்றாக கொதித்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கொதிக்கவிட வேண்டும். 

பிறகு இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான காய்கறி சாம்பார் தக்காளி, வெங்காயம் இல்லாமல் தயாராகிவிட்டது

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 50 கிராம், 
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், 
தனியா – முக்கால் ஸ்பூன், 
வெந்தயம் – கால் ஸ்பூன், 
சீரகம் – கால் ஸ்பூன், 
காய்ந்த மிளகாய் – 4, 
பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, 
உருளைக்கிழங்கு – 1, 
கேரட் – 1, 
கத்தரிக்காய் – 1, 
புளி – எலுமிச்சை பழ அளவு, 
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன், 
உப்பு – முக்கால் ஸ்பூன், 
எண்ணெய் – 4 ஸ்பூன், 
கடுகு – அரை ஸ்பூன், 
கறிவேப்பிலை – 2 கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

நுழைவுத் தேர்வு - சுஜாதா

 நுழைவுத் தேர்வு - சுஜாதா சிறுகதை

பட்டாபி போய்ப் பார்த்தபோது,அந்த அருண்குமார் இருபது பேருடன் 'ராப்பிட் செஸ்' ஆடிக் கொண்டிருந்தான். ஐந்து ரூபாய் கட்டி ஆட வேண்டும். ஜெயித்தால் நூறு ரூபாய்.

"அருண், உன்னைப் பார்க்கணுமாண்டா..."

"சார், நீங்க அவன் கூட செஸ் ஆடணுமா?"

"இல்லைப்பா, வேறு ஆட்டம்" என்று பட்டாபி பான் பராக்கைக் கிழித்து உதிர்த்து வாயில் தட்டிக்கொண்டார்.

செஸ் போர்டை மடியில் வைத்து, கார் பானட்டின் மேல் வைத்து, மேசையில் வைத்து என்று பலவித நிலைகளில் கண்ணாடி அணிந்த சிறுமிகள், நெற்றியில் விபூதி தொட்ட சிறுவர்கள், நகத்தைக் கடிக்கும் சுடிதார்கள், கன்னத்தில் கை வைத்த ஐடி இன்ஜினீயர்கள் அனைவரும் ஒரே எதிரியுடன் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரையும் வீதிவலம் வரும் பெருமாள் மண்டகப்படி போல, கொஞ்சம் கொஞ்சம் நின்று ஒரு கணத்தில் காயை நகர்த்திவிட்டு நகர்ந்து கொண்டிருந்தான் அருண்.

பத்து நிமிஷத்தில் ஏறக்குறைய அனைவருக்கும் கை கொடுத்துவிட்டு வந்தவன், நல்ல சிவப்பாக இருந்தான். உதடுகள் சிகரெட் பிடித்ததில் கருநீலமாக இருந்தன. கண்ணாடிக்குப் பின் கண்ணின் புன்னகையில் சிநேகம் இருந்தது.

"இன்னும் ஒரு கேம்தான் பாக்கியிருக்கு. இதோ வந்துருவான்"

"உன் பேர் என்னப்பா?"

"கோதண்டராமன். கால் மீ கோண்ட்ஸ் - அருணுடைய அசிஸ்டண்ட்"

பட்டாபி, "அருண் என்ன படிக்கிறான்?" என்று கேட்டார்.

"ட்ராப்-அவுட் சார், தனக்குச் சொல்லித்தர லெக்ச்சர்ஸ் இல்லைங்கிறான். மகாவிஷ்ணு மாதிரி பேசுவான். கண்டுக்காதீங்க. அம்மா-அப்பா தண்ணீ தெளிச்சுவிட்ட கேசு"

"டேய், என்னைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லாதே. எப்படி எதுகை மோனை. என்ன சொன்னான்?"

"நல்லதுதான் சொன்னான். நீ ஒரு ஜீனியஸ்னான்"

"அறிவாளி யார் தெரியுமா? தன் அறியாமையை ஒளிச்சு வைக்கத் தெரிஞ்சவன். என்ன விஷயம்? டோர்னமெண்ட்டுக்கு ஸ்பான்சர் பண்றீங்களா? உங்ககிட்ட ரெய்க்கி படி பாசிட்டிவ் எனர்ஜி கக்கறது. உங்களுக்கு தொப்புளை நோண்டினா மூத்திரம் வருமா?"

"இல்லைப்பா. நான் ட்ரை பண்ணதில்லை" என்ற பட்டாபி, 'சரிதான், இது நிசமாவே கிறுக்கு. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என்று தீர்மானித்தார்.

என் பெயர் பட்டாபி…..சரவணன் என் ஒருவர்தான் உன்னை….. உங்களைப் பற்றி சொன்னார்”

“ வந்த விஷயத்தை சொல்லுங்க, பட்டு மாமா”

“ ஒரு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதணும்…”

“ எழுதுங்கோ…. பிரமோஷன் பரிட்சையா,…. கோச்சிங் வேணுமா, பேப்பர் திருத்தறவன் மனதைத் திருத்தணுமா?

"பரீட்சை நீ எழுதணும்"

"நானா? இருக்கிற எல்லா எக்ஸாமும் போனவருஷம் பாஸ் பண்ணியாச்சு ஓய்.....சொன்னியாடா கோண்ட்ஸ் ?"

"இன்னொரு பையனுக்குப் பதிலா"

"ஆள் மாறாட்டமா?"

"ஆமா, சட்னு புரிஞ்சுண்டுட்டையே!"

"ஆளை விடு சாமி. இடத்தைக் காலி பண்ணனும். எஸ்கேப்..அபீட்..."

"அஞ்சு லட்சம்"

எழுந்து சென்றவன் நின்றான்.

"அத்தனையும் கேஷா....நீ ஏதோ அமெரிக்காவில் ஃபிலிம் எடுக்கற கோர்ஸ் சேரணும்னு சரவணன் கிட்ட சொன்னியே....அதுக்குதானே குருவி சேக்கறாப்புல காசு சேத்துக்கிட்டிருக்கே ...."

"வாங்க பேசலாம்"

"அஞ்சு லட்சமா?" என்றாள் கிருஷ்ணவேணி.

"அஞ்சு லட்சம் ரொம்ப சீப் சகோதரி. கேப்பிடேஷன் எதனை தெரியுமா?"

"இன்னிய தேதிக்கு மெடிக்கலுக்கு மினிமம் பதினெட்டிலிருந்து இருபத்தஞ்சு லட்சம். அஞ்சு லட்சத்தில் கச்சிதமா முடிச்சுத் தரலாம். இந்த பட்டாபி உத்திரவாதம் தரேன்"

"சுரேஷ் என்ன செய்யணும்?"

"அவன் பரீட்சைக்கான அட்மிஷன் கார்டை எங்கிட்ட கொடுக்கணும். அவ்வளவுதான்"

அப்புறம்"

"சுரேஷுக்குப் பதிலா அருண்குமார் எண்ட்ரன்ஸ் எழுதிடுவான்"

"அய்யோ , மூஞ்சியை வச்சுக் கண்டுபிடிச்சிடமாட்டாளோ?"

"அதெல்லாம் பிரச்சினை இல்லை. போட்டோவை மாத்தி ஒட்டிடலாம். பாரு வேணி, உன் மகன் எண்ட்ரன்ஸ் எழுதி ராங்க் வாங்கற கொடுப்பினை இல்லாதவன். அவன் உன் புருஷன் மாதிரி டாக்டர் ஆகணுமா இல்லையா?.... அதுதானே அவரோட கடைசி ஆசை?"

"ஆமா....ஆனா ஒத்துப்பானா?"

"அதை நான் பாத்துக்கறேன். சுரேஷ் பூச்சி சொன்ன பேச்சு கேட்கும்."

"எதுக்காக அந்தப் பையன் இதைச் செய்ய சம்மதிக்கிறான். ரிஸ்க் இல்லையா, பட்டாபி?"

"அதுதான் சொன்னேனே .....அவன் ஒரு மேதை. என்னை ஒரு கேள்வி கேட்டான் பாரு....வேண்டாம்...போன வருஷம் ஆல் இந்தியா. ஸ்டேட் எல்லா எண்ட்ரன்ஸ்ஸும் எல்லாத்திலயும் ராங்க் ஹோல்டர்.ஆனா எதுலயும் சேரலை.... மனசு மாறி ஷார்ட் ஃபிலிம் எடுக்கப் போறானாம், ஏதோ ஃபெஸ்டிவலுக்கு அனுப்ப. அதுக்கு அமெரிக்காவில் ஒரு கோர்ஸ் சேரணுமாம். அஞ்சு, பத்தா சேர்த்துக்கிட்டிருக்கான். ஒரு மூணாவது மனுஷன் மூலமா அப்ரோச் பண்ணேன். இந்த மாதிரி சொன்னேன். 'அகப்பட்டா ஜெயிலுக்குப் போகவேணும்னு சொன்னேன். அதையும் பார்த்துரலாமே, என் ஃபிலிமுக்கு உதவும்ங்கிறான். இந்தக் காலத்து இளைஞர்களை ஒண்ணும் சொல்ல முடியறதில்லை."

"பணம் எப்போ வேணும்?"

"பரீட்சை எழுதி முடிச்சு மெள்ளக் கொடுத்தா போதும். ஏமாத்தமாட்டான். என்ன...சுரேஷ் எப்படிரா இருக்கே?"

"நல்லாருக்கேன், பட்டாபி மாமா" என்றான்.

பயந்த சுபாவன் என்பது கண்களில் தெரிந்தது. ப்ளஸ்டூவில் ரெண்டுங் கெட்டானாக மார்க். அதனால் தாய்க்குத் தந்த ஏமாற்றத்தை நன்கறிவான். காட்டாங்குளத்தூரில் ஒரு பி.எஸ்.சி கிடைக்கும் போல இருந்தது. அதற்கும் அலைச்சல். இல்லையேல், திருச்சி மணச்சநல்லூரில் ஒரு ஆர்ட்ஸ் காலேஜில் சைக்காலஜி, லாஜிக், ஜியாலஜி என்று வினோதமான கோர்ஸ் கிடைத்திருக்கிறது.

ஜிப்மர் , எய்ம்ஸ் எழுதுவதற்கான தீவிரம் தன்னிடம் இருப்பதாக அவன் நம்பவில்லை. அம்மாவின் முகத்தைப் பார்க்கவும் தயங்கினான்.

"உன் எண்ட்ரன்ஸ் எக்ஸ்சாம்கான ஐடி கார்டைக் கொடு.."

"எதுக்கு மாமா...நான் எழுதப்போறதில்லை..."

"குடேன்..."

"பரீட்சை எழுதாமலே பாஸ் பண்ண வைக்கிறேங்கிறார் பட்டாபி மாமா"

அவன் கண்கள் விரிந்தன.

"எப்படிச் சாத்தியம்?"

"ஏற்பாடு செய்யலாம்"

"லஞ்சமா?"

"இல்லை. இது வேறு டெக்னிக்"

"பரீட்சை எழுதாமலேயா?"

"டீடைல்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ எக்ஸாம் ஹால் பக்கம் தலைவெச்சுப் படுக்க வேண்டாம்"

"ஆர் யூ ஷ்யூர் மாமா. இது தப்பில்லையா?"

"பாரு, தப்பு ரைட்டெல்லாம் ரிலேட்டிவ். நீ வாங்கின எண்ணூத்தி நாற்பது போறாது. அவனவன் ஆயிரத்து நூத்தியெண்பது, தொண்ணூறுன்னு வாங்கிருக்கான். நமக்கெல்லாம் கோட்டா கிடையாதுங்கிறது தெரிஞ்ச விஷயமாச்சே. உங்கப்பாவுடைய கடைசி ஆசையை நிறைவேத்தணும்னா கேப்பிடேஷன் இருபத்தஞ்சு லட்சம் கொடுக்கணும். அத்தனை பணம் இல்லை.அஞ்சு லட்சம் புரட்ட முடியும். அதிலே முடிக்கிற மாத்தி சீப்பா ஒரு வழி இருக்கு."

அவன் மேற்கொண்டு கேட்க விருப்பமின்றி "அலமாரிலதான் எங்கேயோ வெச்சுருக்கேன். என் கார்டை எடுத்துக் கொடும்மா. மாமா, நீங்க நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுலபமில்லை"

*************************************

கிருஷ்ணவேணி வீட்டுப் பத்திரத்தையும், லாக்கரில் இருந்த தங்க நகைகளையும் அடகு வைத்து, ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் புரட்டிக் கொடுத்தாள்.

***************************************

சுரேஷ் இரண்டு லட்சம் பேர் எழுதிய பரீட்சையில், மூன்றாவது ரேங்க்கில் பாஸ் பண்ணியதற்கு, பட்டாபி ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். அவன் சிநேகிதர்களுக்கு.

***********************************

எப்படிரா... அந்த ரகசியத்தை எங்கிட்டேயும் சொல்லேண்டா?"

பட்டாபிதான் பதில் சொன்னார்...

"வருஷம் பூரா தினம் ஃபோகஸ்டா காலைல ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் ப்ரிப்பேர் பண்ணான். கடைசி மூணு மாசம் கோச்சிங் கிளாஸ் போனான்."

"எப்படா சுரேஷ்? எங்க கூட கிரிக்கெட் ஆடிண்டிருந்தே!"

சுரேஷ் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். அருண்குமார் எட்டரைக்கு வந்தான்.

சிகரெட்டை மிதித்து அணைத்துவிட்டு உள்ளே வந்து சுரேஷின் கையைக் குலுக்கி, "கங்கராட்ஸ், ஓபி அடிச்சு பாஸ் பண்ணிட்டே" என்றான்.

பட்டாபியிடம், "இவன்தானா?"

"ஆமா, நீ தனியா வா! ராபணான்னு ஏதாவது சொல்லி வெக்காதே."

"கேஷ் கொண்டு வந்துட்டீங்களா?"

"பெட்டியிலே இருக்கு. அம்பதாயிரம் அதிகமாகவே இருக்கு. அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்."

"அந்த மாதுஸ்ரீயைச் சந்திக்கலாமா?"

"தேவையில்லை."

"எப்படி மூணாவது ரேங்க் வந்துச்சுன்னே தெரியலை. என்னைவிட புத்திசாலி ரெண்டு பேர் இருக்காங்களா? நம்ப முடியலை. எங்கேயோ ஒரு மல்டிப்பிள் சாய்ஸ்ல மிஸ்டேக் பண்ணியிருக்கேன். பென்சில் கூரா இல்லை. ரீவேல்யுவேஷன் கேளும். ரேங்க் இம்ப்ரூவ் ஆகும்."

"வேண்டாம்ப்பா! மூணாவது ரேங்க் போதும்பா... ஆளை விடு... தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம். சிக்கன் சாப்பிடு."

"நான் ஹிட்லர் மாதிரி வெஜிட்டேரியன் சாமி. எனக்கு வேறே வேலை இருக்கு. ஒரு ஜெர்மன் ஃபிலிம் ப்ரொஜக்ஷன் இருக்கு" என்று பெட்டியை வாங்கிக்கொண்டு புறப்பட்டுச் சென்றான்.

அவர்கள் எல்லோரும் புஃபே சாப்பிட்டுவிட்டுக் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

"எந்தக் காலேஜ்லே சேரப்போறே"

"எதிலே வேணா சீட் கிடைக்கும். எம்.எம்.சி. அவப்பா படிச்சது. இன்னும் தீர்மானிக்கலை" என்றார் பட்டாபி.

"என்னடா நீ பேசவே மாட்டேங்கறே. அவரே பதில் சொல்லிக்கிட்டிருக்காரு. அவரா பரீட்சை எழுதினாரு?"

சுரேஷ், "மாமா ரொம்ப நாழியா அந்த ஆசாமி எதுத்தாப்பலே டேபிள்ல உக்காண்டிருக்காரே,நம்ம பார்ட்டிக்கு வந்தவரா"

பட்டாபி பார்த்தார். தனியா ஒரு மேசையருகில் சாந்தமாக உட்கார்ந்துகொண்டிருந்தவரை அணுகி, "சார் உங்களுக்கு யார் வேணும்?"

"சுரேஷுங்கறவரைப் பார்க்கணும்" என்றவருக்கு நாற்பத்துச் சொச்சம் வயசிருக்கலாம். அவர் கிராப்பும் தோரணையும் அதிகாரம் காட்டியது. சஃபாரி சூட் அதற்கு இன்னும் கனம் சேர்த்தது.

'நீங்க...?"

"என் பேரு மனோகர். ஸ்டேட் போலீஸ்ல சி.ஐ.டி. பிராஞ்ச்ல இன்ஸ்பெக்டர். ஒரு இன்வெஸ்டிகேஷன் பண்ண வந்திருக்கேன். சுரேஷுங்கறவரைப் பார்க்கணும்."

பட்டாபி பதறாமல், "அதுக்கு சுரேஷ் எதுக்கு?"

"அந்தப் பையனைக் காட்டுங்க முதல்ல."

"எதுக்கு?"

"என்ட்ரன்ஸ் எக்ஸாம் பத்தி விசாரிக்கணுங்க."

"பர்ட்டிகுலரா என்ன விசாரிக்கணும்?" என்றார் பட்டாபி.

"அவருடைய ஐடி கார்டைப் பார்க்கணும். போலி ஏதோ நடந்திருக்கு. அது சம்பந்தமா ரேங்க் வாங்கின மாணவர்கள் மாஸ்டர் ரிஜிஸ்டர்ல கொடுத்திருக்கிற போட்டோவும் ஐடி கார்டில இருக்கிற போட்டோவும் ஒத்துப்போவுதான்னு பார்க்கணும்."

பட்டாபி பதற்றத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, "நிச்சயம் கோ-ஆப்பரேட் பண்றோம். இப்ப பார்ட்டி நடக்குது."

"நீங்க யாரு?"

"சுரேஷுடைய மாமா."

"அவசரமில்லை. வீட்டு அட்ரஸ் சொல்லுங்க. இல்லை காலைல பத்தரை மணிக்குள்ள ஜே த்ரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க" என்றவர்,

"நாளைக்கு காலைல ஐடி கார்டைத் தேடி எடுத்து வையுங்க என்ன... என்ஜாய் யுவர் பார்ட்டி. குட் நைட்!" என்று புறப்பட்டுச் சென்றார்.

பட்டாபி சுரேஷைத் தனியாக அழைத்தார்.

யார் மாமா அது?"

"சுரேஷ்! நாளைக்குக் காலைல இந்த ஆசாமி வந்து ஐடி கார்டு கேட்பார். 'தொலைஞ்சு போச்சு. தேடி அப்புறம் தரேன்'னு சொல்லிடு. எக்காரணத்தைக் கொண்டும் ஐடி கார்டைக் காட்டாதே."

"என்ன ஆச்சு மாமா?" என்றான் குரல் நடுக்கத்துடன்.

"அது வந்து... ஒரு மாதிரி பிரச்னை ஆய்டுத்து. கவலைப்படாதே. சமாளிக்கலாம். அம்மா எங்கே?"

கிருஷ்ணவேணி அரிதாகப் பட்டுப் புடவை அணிந்து எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். பட்டாபி அவளைத் தனியாக அழைத்து, " உங்கிட்ட பாக்கி எவ்வளவு பணம் இருக்கு?"

"ஓ... ஆயிரம் ரெண்டாயிரம் இருக்கும்... அது பார்ட்டிக்குப் போயிடும். ஏன்?"

"ப்ச்! போறாது."

"எதுக்கு பட்டாபி?"

"இல்லை... ஒரு சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் விசாரிக்க வந்தான்."

சுரேஷ் கைகள் நடுங்க, "எல்லாம் உன்னாலே... உன்னாலே! டாக்டர் ஆகணும், டாக்டராகணும்னு உசிர பிடிங்கினே... இப்பப் பாரு ஜெயில்ல போடப்போறா."

"இர்றா... ஐடி கார்டு கிடைக்கலை. தூக்கி எறிஞ்சுட்டேன்னு சொன்னா ஒண்ணும் பண்ண முடியாது."

"அப்பவும் சந்தேகப்படுவாளே... ஒரிஜினல் ஜெராக்ஸ் வெச்சிருந்தா."

"இர்றா... நீயே உங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்லிடுவ போலிருக்கே. என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்கோ! கிருஷ்ணவேணி உனக்குப் புரியலே.."

"இல்லை" என்றாள்.

"ஒண்ணும் பிரச்னை இல்லை. கார்த்தால பார்த்துக்கலாம். அவன் யாரு, என்ன பேரு, எப்படி அப்ரோச் பண்ணணும்னு.."

"பட்டாபி! அவன் லஞ்சம் கேட்டாலும் காசில்லையே!"

"அந்தப் பையனையே கடன் கேட்டுப் பார்க்கலாம்."

"குடுப்பானா?"

"என்ன பட்டாபி.. நீதானே இதில மாட்டிவிட்ட எங்களை?"

"ஆமாம் நான்தான் மாட்டிவிட்டேன். நல்லது நினைச்சு இந்த துரை ஊர்ச் சுத்தாம ஒழுங்கா படிச்சிருக்கலாமில்லையா?"

சுரேஷ் விம்மி விம்மி அழ ஆரம்பித்தான்.

"இரு... இரு! நீ அழாத. ஜெயிலுக்குப் போறதா இருந்தாலும் நான்தான் போகணும். உனக்கு ஒண்ணும் ஆகாது! அவங்களுக்கு எவ்வளவு தெரியும்னு நமக்குத் தெரியாதவரை ஒண்ணுமே நடக்கலைங்கற அஸம்ஷன்லதான் யோசிக்கலாம்."

"கண்டுபிடிச்சுட்டாங்களா! அடடா..." என்றான், அருண்குமார் மந்தைவெளியில் மூன்றாவது மாடியில் அவனுடைய ஒரு ரூம் ஃப்ளாட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவன்.

"கண்டுபிடிச்சதா தெரியலை. சந்தேகத்தின் பேரில் விசாரிக்க வந்திருக்கார். லஞ்சம் கேட்டா அந்தம்மாகிட்ட மேற்கொண்டு பணமில்லை. என்ன செய்றதுன்னு முழிக்கிறோம்... நீ வேணா கைமாத்தா..."

அருண்குமார், "பணத்தை நான் அப்படியே வச்சிருக்கேன். பெட்டி கிடக்கிறது பாரும். திறந்துகூடப் பார்க்கலை. அதை எடுத்துகிட்டுப் போயிடும். ஏதாவது பிரச்னைன்னா என்னைக் காட்டிக்குடுத்துருங்க. அவங்க வந்து விசாரிக்கட்டும். மைகாட் திஸ் இஸ் த்ரில்லிங். என்.டி.டி.வி., சி.என்.என்., சன், ஜெயா , விஜய் எல்லாரும் வருவாங்க. விசாரிக்கட்டும். தீவிரவாதி மாதிரி மூஞ்சுல கட்டம் போட்ட துண்டைப் போட்டு மறைச்சுண்டு... மை காட்!"

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது அருண்குமார்."

அவன் கவனம் டி.வி. திரையில் இருந்தது. "விட்டாண்டா கேச்சு இவன்தாண்டா மேன் ஆஃப் தி மேச்சு! போலீஸ் தர்ட் டிக்ரீ மெத்தட்ஸ்ல கொட்டையைப் பிசிஞ்சிருவாங்க பட்டாபி! லொக்லொக்குன்னு இருமல் வரும்."

"பயமுறுத்தாதேப்பா!"

"உபயோகப்படும்னா எப்ப வேணா வந்து சூட்கேஸை எடுத்துட்டுப்போங்க!" என்றான் அருண்குமார்.

"அடிச்சாண்டா சிக்ஸர்."

ஜேத்ரீ போலீஸ் ஸ்டேஷன் வாசலில் சற்று தள்ளி ஒரு சந்தில் இன்ஸ்பெக்டர் சந்திக்கச் சொல்லியிருந்தார்.

"பாருங்க பட்டாபி, போலீஸ்கிட்ட எதையும் மறைச்சு பிரயோசனமில்லை. ஐடி கார்டு தொலைஞ்சுபோச்சுன்னு சொன்னதே காட்டிக் கொடுக்குது. உண்மையை ஒப்புத்துக்கிட்டா உங்களுக்கு இந்த ரேக்கெட்டினுடைய ஆழத்தைக் கண்டுபிடிக்க போலீசுக்கு உதவினீங்கன்னு பாராட்டுக்கூட கிடைக்கும். தனி ஆசாமியா, கேங்கா... யோசிச்சுச் சொல்லுங்க?"

"இன்ஸ்பெக்டர் நீங்க எவ்வளவு எதிர்பார்க்கிறீங்க?"

அவர் முகம் இறுகியது. "என்னைத் தப்பா கணக்குப் போட்டுட்டீங்க பட்டாபி. வாங்க ஸ்டேஷன்ல இன்டெராகேஷன் பண்ணலாம். உம் புத்திப் போறது பாரு..."

"ஸாரி... ஸாரி! உண்மையைச் சொல்லிடறேன். அதான் எல்லோருக்கும் நல்லது. பரீட்சை என் மருமான் சுரேஷ் எழுதலைங்க. அருண்குமார்னு ஒரு புத்திசாலிப் பையன் எழுதினான்."

"அப்படி வாங்க வழிக்கு. எத்தனை கொடுத்தீங்க?"

"அஞ்சு லட்சம். அவன் ஏதோ படம் எடுக்கறானாம். கோர்ஸ்ல சேர பணம் சேத்துக்கிட்டிருக்கான். ஒரு மாதிரி கிறுக்கன்."

"அவன் மட்டும் தனியா... இல்லை கூட்டாளிகள் உண்டா?"

"தனி ஆசாமி."

"அவன் விலாசம் கொடுங்க."

"தேவையா?"

அவர் கோபமாகப் பார்த்தார்.

பட்டாபி கொட்டிவிட்டார்.

"மந்தவெளில ஒரு ஃப்ளாட்ல இருக்கான். காலைல போனா பி.எஸ். ஐஸ்கூல்ல செஸ் ஆடிட்டிருப்பான். ப்ளீஸ் அவனை ஒண்ணும் செய்துராதீங்க. எல்லாத்துக்கும் நான்தான் காரணம்."

"பயப்படாதீங்க. அந்தப் பையனை எதும் செய்யமாட்டேன்."

"என்னை அரஸ்ட் பண்ணிக்குங்க."

"அது் தேவையில்லை. கேஸ் க்ளோஸ்டு."

"ஏன்?" என்கிறார் புரியாமல்.

"எனக்கும் ஒரு மகன் மக்குப் பையன் இருக்கான். வர வருஷம் என்ட்ரன்ஸ் எழுதணும்" என்றார்.

பிராப்தம் -7

 பிராப்தம் -7

சுரேஷ் அம்மாவிடம். "இவதான் அம்மா மாலினி. உன்கிட்ட நான் போன் பேசும்போது சொல்லி இருக்கேன். என் கூட ஒரே பிளைட்ல சென்னையிலேந்து  வந்தா. அங்க ரெண்டு வருஷம் மாஸ்டர் முடிச்சுட்டு போய் திரும்பி வந்து இருக்கா"என்றான். பின்பு மாலினி சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு  விடை பெற்று சென்றாள். சுரேஷ் குடும்பம் வீட்டிற்கு வந்தது.

வந்தவுடன் தாத்தா ரூமுக்குச் சென்ற சுரேஷ் "தாத்தா எப்படி இருக்கீங்க" என்றான். "வாடா டாக்டர் சுரேஷ்" என்றார்  தாத்தா. "தாத்தா உங்களுக்கு எப்பவும் நான் உங்கள் சுரேஷ் தான்" என்றான். "தெரியும்டா குட்டி"என்றார் தாத்தா அவனை அணைத்துக் கொண்டு.

குளித்துவிட்டு வந்து காபி சாப்பிட்டவுடன் சாரதா

" ஏண்டா அந்த பொண்ணுக்கு  கல்யாணம் ஆயுடுத்தா" என்றாள். "நேக்கு எப்படிம்மா தெரியும். அனேகமா ஆகலேன்னு  நெனக்கறேன்.

நான் ஏர்போர்ட்லே அந்த பொண்ண மறந்தூட்டேன்.நீ இன்னும் ஞாபகம் வெச்சிண்டிருக்கே. " என்றான்.

"உன் அம்மா அப்படி ஒண்ணும் அசமஞ்சம் இல்ல.அவ கிட்ட நீ வழிஞ்சத நாந்தான் பாத்தேனே.அவள பத்தி நீ என்ன நெனக்கிற" என்றாள் சாரதா. "நல்ல பொண்ணு பாக்கறதுக்கு நல்லா இருக்கா. இன்டெலிஜென்ட். அவ்ளோதான் போதுமா" என்றான் சுரேஷ்."ஏண்டா உனக்கும் வயசாயிண்டே போறது. அவள போல பொண்ணு கிடைச்சா உனக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதமா"என்றாள். "ஏம்மா சுத்தி வளச்சி பேசுற. அவள மாட்டு பொண்ணு ஆக்கிக்கணும்னு பாக்கறயாக்கும்" என்றான் அவன்."அப்படித்தான் வெச்சுகோயேன்" என்றாள் சாரதா.

"நீ ஒண்ணு பண்ணு. அவளுக்கு போன் பண்ணி வர  ஞாயிற்றுக்கிழமை காலைல நம்ம எல்லாம் அவாத்துக்கு வரோம்னு சொல்லு"என்றாள். "என்னம்மா நீ. படு பாஸ்ட்டா இருக்க" என்றான் சுரேஷ். "ஆமாண்டா. சுபஸ்ய சீக்கிரம்" என்றாள் சாரதா. சுரேஷ் மாலினிக்கு போன் செய்தான். "ஹாய் மாலினி. ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீயா இருக்கியா. எங்க அப்பா,அம்மால்லாம்  உங்க ஆத்துக்கு வரணும்னு சொல்றா"என்றான்." சரி வரட்டும்.ஆனா எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா" என்றாள் மாலினி படபடப்புடன். 

"வேற ஒண்ணும் விசேஷமில்லை சும்மாதான்" என்றான் அவன். "தாராளமா வாங்கோ. வரும்போது உங்க தாத்தாவையும் கூப்பிட்டுண்டு வாங்க"என்றாள். ஐந்து நிமிடம் கழித்து மறுபடியும் போன் செய்த மாலினி"எங்க அம்மா அன்னைக்கு எங்க ஆத்துல நீங்க எல்லாம்  சாப்டுடலாம்னு சொல்றா"என்றாள். பின்பு சாரதாவிடம் இதை சொன்ன சுரேஷ்" ஓகே மாலினி அப்படியே பண்ணிடலாம்" என்றான். 

ஞாயிற்றுக்கிழமை காலை. எட்டு மணிக்கு நங்கநல்லூரில் இருந்து டாக்ஸியில் கிளம்பினார்கள். போகிற வழியில் மார்க்கெட்டில் ஐந்து முழம் பூ, மலை வாழைப்பழம் ஒரு டசன், ஐந்து ஆப்பிள், கொஞ்சம் கல்கண்டு, வெத்தலை, பாக்கு,அஒரு பாக்கட் சாக்லெட் இவைகளை வாங்கிக் கொண்டாள் சாரதா. "என்னம்மா இதெல்லாம். பெண் பாக்க போற மாதிரி இருக்கே" என்றான் சுரேஷ். "இப்போதாவது என் அசட்டு பிள்ளைக்கு புரிஞ்சிதே " என்றாள் சாரதா சிரித்துக்கொண்டே.

மாலினியின் வீட்டை அடைந்தவுடன் அவள் தான் கதவை திறந்து எல்லோரையும் பார்த்து "வாங்கோ"என்றாள். வெங்கட்ராமன்,சாரதா, வெங்கட்ராமனின் அப்பா, சுரேஷ் முதலியோர் உள்ளே நுழைந்தனர். உள்ளேயிருந்து கமலா,ராமமூர்த்தி,மாலினி,ராமமூர்த்தினுடைய அம்மா ஆகியோர் எல்லோரையும் வரவேற்றார்கள். எல்லோரும் அமர்ந்தார்கள். மாலினி எல்லோருக்கும் காபி வழங்கினாள்.  "ஒரு தட்டு கொடம்மா" என்று மாலினியிடம் கேட்டு தட்டை பெற்றுக்கொண்ட சாரதா, தான் வாங்கிக்கொண்டு வந்திருந்தவைகளை தட்டில் வைத்து மாலினியிடம் தந்தாள்.

எல்லோரும் பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு மாலினியின்  பாட்டி  சாரதாவிடம்  "உங்களுக்கெல்லாம் எது சொந்த ஊர்"என்று கேட்டாள். அதற்கு சாரதா"எங்க மாமனாருக்கு சொந்த ஊர் திருச்சி" என்றாள். "அப்படியா" என்ற மாலினியின்  பாட்டி "திருச்சில எங்கே" என்று வினவினாள்.  "பாண்டமங்கலம் அக்ரஹாரம்" என்றாள் சாரதா. இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுரேஷின்  தாத்தா, மாலினியின் பாட்டி அருகில் வந்து" எதுக்கு கேக்கறங்கேன்னு தெரிஞ்சுக்கலாமா" என்றார். அதுக்கு மாலினியின் பாட்டி  "எங்களுக்கு கிட்டின உறவு கூட பாண்டமங்கலம் அக்ராஹாரத்தல இருந்திருக்கா"  என்றாள். "யாருன்னு தெரிஞ்சுக்கலாமா" என்றார் அவர்."எங்க அத்தை, அத்திம்பர் அத்தான்  மூணு பேரும் அங்க இருந்திருக்கா"என்றாள் மாலினியின் பாட்டி. சுரேஷின் தாத்தா ஆவலை  அடக்க முடியாமல் "உங்க அத்தை பேர் விசாலாக்ஷியா" என்றார். "ஆமாம்.ஆமாம். உங்களுக்கு அவாளை தெரியுமா" என்றாள் அவள்.உடனே சுரேஷின் தாத்தா "என்ன காமு. என்ன மறந்துட்டியா. அடையாளம் தெரியலையா.

நான்தான்  மணி" என்றார் .

மாலினியின் பாட்டி காமு என்கிற காமாக்ஷிக்கு பேச்சே வரவில்லை."மணி அத்தானா" என்று கேட்டு  ஆச்சரியப்பட்டாள்.நிறய வருடம் கழித்து இப்படி சந்தித்துக்கொள்வோம் என இருவரும் எதிர்பார்க்கவில்லை.

 இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை. எல்லோரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அதிலிருந்து நடந்த எல்லா விஷயத்தையும் அறிந்து கொண்டார்கள். அப்போது சுரேஷ் மாலினியை பார்த்து "நம்ம சொந்த மாய்ட்டோம் போல" என்றான். அதைக்கேட்ட மாலினி

" பாட்டி அத்தானை கல்யாணம் பண்ணிக்க  முடியாமா போய்ட்டுது  வருத்தம்தான்.ஆனா உங்க தாத்தா எஸ்கேப் ஆய்ட்டா" " என்றாள்.

"போடி வாயடி"என்ற காமு அந்த வயதிலும் நாணிணாள்.

மணிஅப்போது குறுக்கிட்டு "எங்கப்பா விச்வேச்வரன்  கடைசி ஆசையா நம்ப பரம்பரைல ஒரு கல்யாண பந்தம் இருக்கணம்னு ஆசைப்பட்டா.அதை நான் நிறைவேத்தணும்னு ஆசைபடறேன்.காமு, உன் பேத்தியை என் பேரனுக்கு தர சம்மதமா" என்றார்.

"என்னா அத்தான் இப்படி கேட்டூட்டேள்.கரும்பு தின்ன கூலி கேப்பாளோ" என்றாள் காமு  கல கல வென சிரித்தபடி. 

சாரதா" பெரியவாள்ளாம் சேந்து முடிவு பண்ணா போறுமா.சிறுசுகள் ஒத்துக்க வேணாமா"என்றாள்.

உடனே சுரேஷ் தைரியம் வந்தவனாக மாலினியிடம் "என்ன கல்யாணம் பண்ணிக்கு நோக்கு சம்மதமா " என்றான்.மாலினி கன்னம் சிவக்க " ரெண்டு வருஷம் முன்னால நான் இந்தியா திரும்பச்சே ஏர்போர்ட்ல வெச்சு இதை சொல்வேள்னு நெனச்சு  ஏமாந்து போனேன்.நீங்க விடை பெத்துண்டு போனதும் ரெண்டு தடவை திரும்பி திரும்பி பார்த்தேன்.ஒரு வேள வந்து ப்ரபோஸௌஸ் பண்ணுவேளோன்னு.

பிளைட்ல ஒரு பாட்டம் அழுது தீத்தூட்டேன்.அம்மா நான் இந்தியா வந்த வுடனே "ஏண்டி கண்ணெல்லாம் வீங்கியிருக்கு.அழுதயான்னா" என்றாள்.நான் " சரியா தூங்கலைன்னு சொல்லி  சமாளிச்சேன் " என்றாள்.சுரேஷ் இருக்கையை விட்டு எழுந்து அவளருகில் சென்று அவள் கைகளை பிடித்துக் கொண்டு தீராக்காதலுடன் " வெரி சாரி மாலு"என்றான்.

"எல்லாம் பாக்கறா கையை விடுங்கோ" என்றாள் தன்னிரு கைகளை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்யாமலே.

"சரி.சரி. கொழந்தைகள் காத்திருந்தது போறும்.சீக்கிரம் முகூர்த்தத்துக்கு நாள் பாருங்கோ " என்றார் மணி தாத்தா.

இப்படித்தான் நடக்கவேண்டும் என்று பிராப்தம் இருக்கும்போது,யார் என்ன செய்ய முடியும்?

 *(முடிந்தது)*

பிராப்தம் -6

 பிராப்தம் -6

இருவரும்  செட்டில் ஆவதற்கு பதினைந்து நாள் பிடித்தது. இருவருக்கும் ஸ்காலர்ஷிப் கிடைத்ததால் யுனிவர்சிட்டிக்கு அருகில், நடக்கும் தூரத்திலிருந்த, குடியிருப்பு காம்பளக்ஸில் சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட் கிடைத்தது.மாலினிக்கு தரைத்தளத்திலும், சுரேஷுக்கு மூன்றாம் மாடியிலும் இடம் கிடைத்தன.சமையலை பொறுத்தவரை அவர்களுக்கிடையே எழுதப்படாத அக்ரிமெண்ட் இருந்தது.காலையில் யுனிவர்சிட்டிக்கு கிளம்பு முன் சுரேஷ் இடத்தில் சுரேஷ் தயாரித்த காலை உணவை இருவரும் உண்டனர்.பிரட் வித் வதக்கிய  தக்காளி,வெங்காயம், ரவா உப்புமா,இட்லி,தோசை, பொங்கல் என விதம் விதமாக செய்தான் சுரேஷ்.இரவு உணவை மாலினி அவள் இடத்தில் தயாரித்து விடுவாள்.சப்பாத்தி,பூரி சில நாட்களிலும்,சாம்பார் அல்லது ரசம் சில நாட்களிலும் செய்வாள்.கத்தரிக்காய், உருளைக்கிழங்கு,முட்டைகோஸ் கறி மாறி மாறி சமைப்பாள்.ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிலோ, இந்திய நண்பர்களுடனோ சாப்பிடுவார்கள்.

நாட்கள் ஓடின.ஒருநாள் மாலினி அவனிடம் "உங்களை கல்யாணம் பண்ணிக்க போறவ கொடுத்து வெச்சவ.நண்ணா டிபன் பண்ணி போடுவேள் " என்றாள்.சுரேஷ் பதிலுக்கு "நானும் அவளைத்தான் வல போட்டு தேடறேன்.கண்ல சிச்கமாட்டேன்றா" என்றான்."குத்து கல்லாட்டம் கண் எதிர்ல நிக்கறது தெரியலையா. அல்லது தெரியாத மாதிரி நடிக்கறயா" என மனதுக்குள் நினைத்தாள் மாலினி.

சுரேஷுக்கும் சொல்லி விட வேண்டுமென்று ஆசைதான்.ஆனால் அவள் சகஜமாக பழுகுவதை நாம் தப்பாக புரிந்து கொண்டு ப்ரபோஸ் செய்யப்போய்  நட்பில் சுணக்கும் ஏற்பட்டுவிடுமோ என பயந்தான். இருவரும் இளம் வயதை கடந்து வந்து,முதிர்ச்சி நிலையில் இருந்ததால் காதலை வெளியிட தயக்கம் இருந்தது.

இரண்டு வருடம் போனதே தெரியவில்லை.சுரேஷ் செய்த உதவியால் மாலினி யுனிவர்சிட்டியில் முதல் ரேங்க் எடுத்திருந்தாள்.அவள் இந்தியா செல்வதற்கு  முதல் நாள் இரவில் அவர்கள் நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தனர். மறந்தும் கூட அன்பை வெளிப்படையாக பறிமாறிக்கொள்ள வில்லை.மறு நாள் அவளை வழி அனுப்ப  ஏர்போர்ட் சென்றான் சுரேஷ்.கிளம்புவதற்கு ஐந்து நிமிடம் முன் அவன் கைகளை பிடித்துக்கொண்டாள் மாலினி."சரிதான்.ப்ரபோஸ் செய்யப்போகிறாள்" என நினைத்தவனுக்கு அவள்"ரொம்ப தேங்க்ஸ் சுரேஷ்.நீ இல்லாவிட்டால் நான் இங்கு தனியாக தவித்துப்போயிருப்பேன்"என்று சொன்னதை கேட்டதும் சப்பென்று,ஊதி உப்பியிருந்த பலூனை பின்னால் குத்தியது போல  ஆனது.அவன் ஏர்போர்ட்டில் திரும்பி நடந்தபோது,மாலினி இரு முறை திரும்பி பார்த்த மாதிரி உணர்ந்தான்.வீண் பிரமை என்று எண்ணிக்கொண்டான்.

அவளை அனுப்பிவிட்டு வந்தவன் வெறுமையை உணர்ந்தான். "தவறு செய்து விட்டேன்.நானாவது வெட்கத்தை விட்டு ஏர் போர்ட்டில் என் மனதை திறந்து காட்டியிருக்க வேண்டும்" என நினைத்தான். இந்தியாவிலிருந்து ஒன்றாக ப்ளைட்டில் வந்ததிலிருந்து நடந்தவைகளை மனதில் அசை போட்டு பார்த்தான்.மனம் விண் விண் என்று வலித்தது.

ஆண்கள் கூட அழுவார்களா என்ன?

அன்று அவன் அழுதான்.

வாரத்திற்கு ஒருமுறை அவனுடன் அப்பா,அம்மா,மாலினியும் தொடர்ந்து பேசினார்கள்.

தினம் பன்னிரண்டு மணி நேரம் யுனிவர்சிட்டியே கதியாக இருந்து அடுத்த இரண்டு வருடத்தில் பி.ஹெச்.டி டிகிரியை வாங்கினான்.

சென்னை திரும்பினான்.சென்னை ஏர்போர்ட்டில் வெங்கட்ராமன்,சாரதா வந்திருந்தார்கள்.லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்து டாக்சியில் ஏறு முன் "சுரேஷ்" என்ற பெண் குரல் கேட்க,திரும்பிய சுரேஷ், மூச்சு வாங்கியபடி ஒடி வந்த மாலினியைப் பார்த்தான் சுரேஷ்.  அவள் அழகு கூடியிருப்பதை பார்த்தான்.அவளை கண்ட மாத்திரம் அவன் முகத்தில் தனி பிரகாசம் வந்தது.பாரதி "பொங்கி வரும் புது நிலவு" என்று இவளை நினைத்துத்தான் பாரதி பாடியிருப்பானோ என எண்ணிக் கொண்டான்.

"நான் வந்த டாக்சி பாதி வழியில் பங்க்சர் ஆயிட்டது. அதான் லேட்" என்றாள். "நீ ஏர்போர்ட்டுக்கு வருவதாக சொல்லவே இல்லையே" என்றான்."மனத்தில் எவ்வளவோ நினைக்கிறோம். எல்லாத்தையும் சொல்லிடறோமா என்ன? சர்ப்ரைஸாக இருக்கட்டும் என நினைத்தேன்" என்றாள் மாலினி.

அவன் பார்த்ததையும்,அவள் தாபத்துடன் பேசியதையும் கேட்ட  சாரதா "ஒஹோ. விஷயம் இப்படி போகிறதோ",என நினைத்து உள்ளுர சந்தோஷப்பட்டாள்.

பிராப்தம்-5

 பிராப்தம்-5

ட்ராலியை தள்ளிக்கொண்டு போகும்போது, மாலினி கீழே வேலட் விழுந்ததை கவனிக்கவில்லை.

அவளையே கவனித்திக்கொண்டிருந்த சுரேஷ் இதை கவனித்தான்.அதை எடுத்து அவளிடம் கொடுத்தபோது"ஓ. மைகாட். தேங்க்யூ ",என்றாள்.ப்ளைட்டில் ஏறி அமரும்போது அவள் அவனது இருக்கைக்கு சரியாக முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாள்.

சென்னையை விட்டு 9:10 க்கு கிளம்பிய விமானம் உள்ளுர் நேரம்  12:30   மணிக்கு ஒரே நிறுத்தமான ஃப்ராங்பர்ட்டை அடைந்தது. பயணிகள் இறங்கி ஏர்போர்ட்டில் சுற்றி வர இரண்டு மணி நேரம் அனுமதிக்கப்பட்டனர்.

ஏதாவது சாப்பிடலாம் என்று எண்ணிய சுரேஷ் ஒரளவுக்கு வெஜிடடேரியன் உணவு கிடைக்கும் கடைக்கருகில் சென்றான். அவனைத்தொடர்ந்த மாலினி"Excuse me. I am also hungry.could you help me with some veg food ",என்றாள்."தமிழ்தானே" என்ற சுரேஷிடம் "ஆமாம்" என்றாள் மாலினி."நான் சுரேஷ்.சென்னை நங்கநல்லூரிலிருந்து" என கை நீட்டினான்.கை கொடுக்கலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்த அவளிடம்" கை கொடுத்தால் ஒன்றும் குடி முழுகிப்போய் விடாது" என்றான் சுரேஷ்.

மாலினி அசடு வழிந்து கொண்டே" என் பேர் மாலினி" என்று கூறி அவன் கையை குலுக்கினாள்.அவள் கை பஞ்சு போல ம்ருதுவாக இருந்தது. கிடைத்த வெஜிடேரியன் உணவை இருவரும் உண்டார்கள்." நீங்கள் எதற்கு யூ.எஸ் போகிறீர்கள் என்று கூறவில்லையே" என்றாள் மாலினி."நீங்கள் இப்போதுதானே கேட்கிறீர்கள்" என்ற சுரேஷ் விவரம் சொன்னவுடன் மாலினி தான் கம்ப்யூடர் என்ஜினியரிங்கில் மாஸ்டர்ஸ் செய்ய செல்வதாக கூறினாள். இருவருமே கார்னெல் யுனிவர்சிட்டியில் சேர்வதாக அறிந்ததும்ஆச்சரியப்பட்டார்கள்.

விமானம் ந்யூயார்க் கிளம்பு தயாராக இருப்பதாக அறிவிப்பு வரவே விமானத்தை நோக்கி இருவரும் நடந்தார்கள். விமானத்தில் இருவரும் நெடு நேரம் பேசிக்கொண்டார்கள்.

இருவருக்கும்  இசையில், அதுவும் கர்னாடக இசையில் ஈடுபாடு இருந்ததை தெரிந்து கொண்டார்கள்.மகாகவி பாரதி கவிதைகளிலும் இருவருக்கும் அதீதமான பற்று உள்ளதை அறிந்தார்கள்.

"உனக்கு ந்யார்க்கிலிருந்து இதகா டாம்ப்கின்ஸ் ரீஜனல் ஏர்போட்டுக்கு எந்த ப்ளைட்" என்றான் சுரேஷ்.அவன் நீங்களிலிலிருந்து நீயிக்கு மாறிவிட்டதை மாலினி ரசித்தாள்.

 "இரவு 21:00 க்கு டெல்டா ப்ளைட்" என்றாள் மாலினி.சுரேஷுக்கு தாங்க முடியாத ஆச்சர்யம். அவனுக்கும் அதே ப்ளைட்.லுப்தான்ஸா விமானம் 19:25 க்கு ந்யார்க்கை அடைந்தது.இருவரும்தத்தம் லக்கேஜ்களை சேகரித்துக்கொண்டு டாம்ப்கின்ஸ் ரீஜனல் ஏர்போட்டுக்கு செல்லும் விமானம்  கேட் அருகில் அமர்ந்தனர்.அவளை லக்கேஜை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அருகிலிருந்த புட் ஷாப்பில் கிடைத்த உணவை இருவருக்குமாக சேர்த்து வாங்கி வந்தான் சுரேஷ்."பாவம்.எனக்காக நீங்க ரொம்ப மெனக்கடறீங்க"என்றாள். "உனக்கு என்னைப்பற்றி தெரியாது. உன்னைப்போல அழகான பெண்கள் கஷ்டப்பட்டால் நான் அழுது விடுவேன்" என்று கண்களை துடைத்துக்கொள்கிற மாதிரி பாவனை செய்தான் அவன்.

." நீங்கள் சொன்ன ரெண்டுமே பொய் என்று எனக்கு தெரியும்" என்றாள்."எந்த இரண்டு" என்றான் சுரேஷ்."ஒன்று நீங்கள் அழுது விடுவேன் என்றது.மற்றொன்று நான் அழகாயிருக்கிறேன் என்றது" என்றாள் மாலதி."சரி.நீயும் ஒரு சராசரி பெண் என்பதை நிரூபித்துவிட்டாய்" என்றான்."எப்படி" என்றாள் மாலினி."ஒரு ஆண் தன்னை அழகானவள் என்று இரண்டு முறை கூற வேண்டும் என அழகான பெண்கள் நினைப்பார்களாம்" என்றான்.இருவரும் சற்று மனதளவில் நெருங்குவதை உணர்ந்தார்கள்.மாலினி தனக்குள் " போதும்டீ. எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ளாதே.

நீ படிக்க வந்திருக்கிறாய்.இவன் பேசியே உன்னை கவுத்துடுவான் போல இருக்கு" என்று நினைத்துக்கொண்டாள்.