Wednesday, December 4, 2024

பெருமாள் கோயில் தீர்த்தப் பொடி

 பெருமாள் கோயில் தீர்த்தப் பொடி

தீர்த்த பரிமளம் :

புனித தீர்த்தம் நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து

1 – ஏலம்,
2 – இலவங்கம், 
3 – வால்மிளகு, 
4 – ஜாதிப்பத்திரி,
5 – பச்சைக் கற்பூரம் 

இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கும் சேர்க்கவும்.

முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து, பொடித்துக் கொள்ளவும். 

பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து, இதனுடன் கலந்து கொள்ளவும். 

இதனை பதனம் செய்து பூஜை அறையில் வைக்கலாம். 

இந்த தீர்த்தப் பொடியை திரிகடி ( மூன்று விரல் அளவு )எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து, முதல்நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த, சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும். 

சைவ வழிபாட்டில் உள்ளவர்கள், வில்வம் சேர்த்து, வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள், துளசி சேர்த்து அருந்தலாம். 

இருதயம், இரைப்பை பலம் பெரும், கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி,சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .

இது நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட, அரிய சஞ்சீவி மருந்து ஆகும்.

படித்ததை பகிர்ந்தேன் 🙏🙏

Tuesday, December 3, 2024

தந்தூரி மசாலா

 Partagé de mes Notes:

வீட்டில் தயாரிக்கப்பட்ட தந்தூரி மசாலா 

 தேவையான பொருட்கள்:-  

 4 முழு சூடான சிவப்பு மிளகாய் உலர்ந்த
 8 முழு காஷ்மீரி சிவப்பு மிளகாய் காய்ந்தது
 ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
 2 டீஸ்பூன் கசூரி மேத்தி
 2 தேக்கரண்டி இஞ்சி தூள்
 4 அங்குல இலவங்கப்பட்டை சிறிய துண்டுகளாக உடைக்கவும்
 1 தேக்கரண்டி கிராம்பு
 1 டீஸ்பூன் மாஸ்
 2 டீஸ்பூன் சீரகம்
 1 தேக்கரண்டி ஆம்சூர் தூள்
 4 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகள்
 1 தேக்கரண்டி ஜாதிக்காய் தூள்
 1 தேக்கரண்டி கருப்பு மிளகுத்தூள்
 2 துண்டு பெரிய ஏலக்காய்
 2 டீஸ்பூன் ஏலக்காய்

 வழிமுறைகள்

 குறைந்த வெப்பத்தில் ஒரு பரந்த பாத்திரத்தை சூடாக்கவும்.

 சிவப்பு மிளகாய், கிராம்பு, மசாலா, சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை, பெரிய ஏலக்காய், சிறிய ஏலக்காய் போன்ற அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்க்கவும்.  கசூரி மேத்தியை சேர்க்க வேண்டாம்.

 மசாலாவை வறுக்கவும், குறைந்தபட்சம் 2-3 நிமிடங்கள் அல்லது மசாலா வாசனை வரும் வரை எல்லா நேரத்திலும் கலக்கவும்.

 வெப்பத்தை அணைக்கவும்.

 கசூரி மேத்தி மற்றும் அனைத்து பொடிகள் அதாவது மஞ்சள், ஜாதிக்காய், இஞ்சி, ஆம்சூர் பொடிகள் சேர்க்கவும்.  நன்றாக கலக்கவும்.

 மசாலாவை சிறிது குளிர்விக்க கலவையை ஒரு தட்டுக்கு மாற்றவும்.  மசாலா எரிக்கப்படலாம் என்பதால் சூடான பாத்திரத்தில் விடாதீர்கள்.

 மசாலா அல்லது காபி ஆலையைப் பயன்படுத்தி, மசாலாவை நன்றாக தூளாக அரைக்கவும்.

 தந்தூரி மசாலாவை காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.

#சமையல் Cousine traditionnelle indienne TN

கல்யாண வீட்டு ரசப்பொடி

 கல்யாண வீட்டு ரசப்பொடி செய்வது எப்படி ....

தேவையான பொருள்கள் -

மிளகாய் வத்தல் - 10
மிளகு - 5 மேஜைக்கரண்டி 
சீரகம் - 5 மேஜைக்கரண்டி 
கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி 
கடலைப்பருப்பு - 5 மேஜைக்கரண்டி 
காயத்தூள் - 1 தேக்கரண்டி 

செய்முறை -

காயத்தூள் தவிர மற்ற  எல்லா பொருள்களையும்  வெயிலில் 2 மணி நேரம் காய வைத்து சிறிது நேரம் ஆற விடவும். 

ஆறிய பிறகு அரைக்க கொடுத்த பொருள்களோடு காயத்தூளையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு திரித்து ஒரு பேப்பரில் பரப்பி விடவும். 

நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில்  எடுத்து வைக்கவும். இந்த அளவு 10 தடவை ரசம் வைக்க வரும்...

முடக்கத்தான்🥬கீரை ரசம்

 முடக்கத்தான்🥬கீரை ரசம்

கீரை🥬சமையல்

முடக்கத்தான் கீரை
(பொடியாக நறுக்கியது) - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
புளி - கொட்டைப்பாக்கு அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

பொடித்துக்கொள்ள

மிளகு - ஒரு டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

🥬தாளிக்க.:

கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பூண்டு (நசுக்கியது) - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

🥬ஒரு கப் சூடான தண்ணீரில் முடக்கத்தான் கீரையைப் போட்டு அரை மணிநேரம் மூடிவையுங்கள். 

🥬பொடித்துக்கொள்ளக் கொடுத்திருக்கும் பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளுங்கள். 

🥬அடி கனமான பாத்திரத்தில் புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். 

🥬ஒரு கொதி வந்ததும், பொடித்துவைத்த பொடியையும் முடக்கத்தான் கீரை ஊறிய சாற்றையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வரும்வரை வேகவிடுங்கள். 

🥬தாளிக்கக் கொடுத்த பொருட்களைக் கொண்டு ரசத்தைத் தாளித்து இறக்கி, முடக்கத்தான் கீரையைத் தூவிப் பரிமாறலாம். 

🥬மழை, குளிர் காலங்களில் மூட்டு வலி வரும்போது, இந்த ரசத்தைச் சாப்பிட்டால் வலி குறையும்.

🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬

சப்பாத்தி கெடாமல் இருக்க

நீண்ட நாட்கள் சப்பாத்தி கெடாமல் இருக்க

எத்தனை நாட்கள் ஆனாலும் சாஃப்டாக சப்பாத்தி இருக்க கோதுமை மாவுடன் சிறிது கொண்டைக்கடலை மாவும் சேர்த்து பிசைய வேண்டும். கொண்டைக்கடலை மாவு சப்பாத்திக்கு சாஃப்டான தன்மை மற்றும் சுவையையும் கூட்டி கொடுக்கும்.

ஹோட்டலில் சப்பாத்தி சாஃப்டா இருக்க மாதிரியே வீட்டிலையும் சப்பாத்தி சாஃப்டா செய்யலாம். அப்படி சாஃப்டா சப்பாத்தி செய்யறதுக்கு இந்த வழிமுறைகளை மட்டும் பின்பற்றுங்கள் போதுமானது. 

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1/2கிலோ
கொண்டைக்கடலை மாவு - 50கிராம்
சர்க்கரை-1 ஸ்பூன் 
எண்ணெய்-1ஸ்பூன் 
உப்பு-தேவையான அளவு 

அரை கிலோ கோதுமை மாவுடன் 50 கிராம் கொண்டைக்கடலை மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு சூடு தண்ணீர் ஊற்றி மாவு பிசைய வேண்டும்.இதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவு பிசைந்து எடுக்கவும். 

பின்னர் எப்போதும்போல மாவு பிசைந்து எடுத்து சப்பாத்தி சுட்டால் சப்பாத்தி எத்தனை நாட்கள் ஆனாலும் சாஃப்டாக இருக்கும். குழந்தைகள் சாப்பிடவும் மிருதுவாக இருக்கும்.

Monday, December 2, 2024

செட்டிநாடு சாம்பார் பொடி

 Partagé de mes Notes:

செட்டிநாடு சாம்பார் பொடி

தேவையானவை:

காய்ந்த மிளகாய் – அரை கிலோ
மல்லி (தனியா)  –  ஒரு கிலோ
கடலைப்பருப்பு – 100 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
உளுத்தம்பருப்பு – 100 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
சோம்பு – 25 கிராம்
சீரகம் – 50 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
மிளகு – 50 கிராம்

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாகச் சிறு தீயில் வைத்து வறுத்து எடுக்கவும். ஆறியபின் மாவு மெஷினில் கொடுத்து நைஸாக அரைத்து வரவும். அரைத்த பொடியை பேப்பரில் பரப்பி நன்கு ஆறவிடவும். இதுவே செட்டிநாடு சாம்பார் பொடி. இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைக்கு ஏற்றவாறு பொடியைச் சின்ன டப்பாவுக்கு மாற்றி உபயோகிக்கவும்.

உபயோகிக்கும் முறை: சாம்பார் செய்யும்போது கால் கப் பருப்புக்கு ஒரு டேபிள்ஸ்பூன் செட்டிநாடு சாம்பார் பொடியைப் பயன்படுத்தலாம். மேலும், காரக் குழம்பு, கூட்டு, மசாலா வகைகள், பொரியல், பச்சடி வகைகள் எனச் சைவ மற்றும் அசைவச் சமையல்களிலும் பயன்படுத்தலாம். ....

#சமையல் Cousine traditionnelle indienne TN

கரம் மசாலாப் பொடி

 கரம் மசாலாப் பொடி செய்வது எப்படி  😋😋😋😋

தேவையான பொருட்கள் :

Partagé de mes Notes:

கரம் மசாலாப் பொடி செய்வது எப்படி  😋😋😋😋

தேவையான பொருட்கள் :

மிளகாய் -20கிராம்
கிராம்பு - 10 கிராம்
பட்டை - 40கிராம்
ஏலம் - 40 கிராம்
ஜாதிக்காய் - 2
சீரகம் - 20 கிராம்
சோம்பு -40கிராம்
மிளகு - 20 கிராம்
தனியா - 120கிராம்
சுக்கு - 10 கிராம்

செய்முறை :

இவையனைத்தையும் வெய்யிலில் காய வைத்து, பொடித்துக் கொள்ளவும் ,

சூப்பரான கம கம கரம் மசாலா ரெடி ,

வெயிலில் காயவைத்து அரைத்தால் எப்பொழுதுமே மனம் குறையாமல் இருக்கும் ,

வறுத்து அரைத்தால் அப்போதைக்கு மட்டும் மனம் அதிகமாக இருக்கும் .

பிறகு மணம் குறைந்துவிடும் ,

குறிப்பு :

கிராம்பும் ஏலக்காயும் சரிசமமாக இருக்க வேண்டும் ....

கிராம்பு குறைவாகத்தான் பயன்படுத்த வேண்டும் ..

#சமையல் Cousine traditionnelle indienne TN

செய்முறை :

இவையனைத்தையும் வெய்யிலில் காய வைத்து, பொடித்துக் கொள்ளவும் 

சூப்பரான கம கம கரம் மசாலா ரெடி ,

வெயிலில் காயவைத்து அரைத்தால் எப்பொழுதுமே மனம் குறையாமல் இருக்கும் ,

வறுத்து அரைத்தால் அப்போதைக்கு மட்டும் மனம் அதிகமாக இருக்கும் .

பிறகு மணம் குறைந்துவிடும் ,

குறிப்பு :

கிராம்பும் ஏலக்காயும் சரிசமமாக இருக்க வேண்டும் ....

கிராம்பு குறைவாகத்தான் பயன்படுத்த வேண்டும் ..

#சமையல் Cousine traditionnelle indienne TN