எல்லா வகையான குழம்பு வகைகளுக்கும் ஏற்ற, தரமான, காரமான மிளகாய் பொடி செய்வது எப்படி .....
தேவையான பொருட்கள் ::::
மிளகாய் - 1 கிலோ
கொத்துமல்லிவிதை - 3/4 கிலோ
சீரகம் - 200கிராம்
மிளகு - 50 கிராம்
துவரம்பருப்பு - 150 கிராம்
கடலைப்பருப்பு - 150கிராம்
சோம்பு - 50கிராம்
வெந்தயம் - 50கிராம்
கடுகுஉளுந்தம்பருப்பு - 100கிராம்
பெருங்காயம் - 25கிராம்
உப்புக்கல் சிறிதளவு
விரல்மஞ்சள் - 150கிராம்
கசகசா 25கிராம்
செய்முறை::::
கசகசா மிளகாய் தவிர அனைத்தையும் நன்கு வறுத்து சிறிதுநேரம் நல்ல வெயிலில் காயவைக்கவும்.
பின்னர் இவைகளுடன் இரண்டு கறிவேப்பிலை கொத்தை இலைகளை ஆய்ந்து இச்சாமான்களுடன் சேர்த்து நன்கு பட்டுப்போல் மிஷினில் கொடுத்து அரைக்கவும்.
பின்னர் நன்கு ஆறவைக்கவும்.
அவ்வளவுதான்.
எல்லாக்குழம்புக்கும் பயன்படுத்தலாம்.
நன்கு வாசமாகவும் ருசியாகவும் இருக்கும்.....
No comments:
Post a Comment