ரவை உப்புமா செய்வது எப்படி...
தேவையான பொருட்கள்:::
*மெல்லிய பம்மாய் ரவை - 2 கப்
*தண்ணீர் - 4 1/2 கப்
*வெங்காயம் பெரிது - 3
*பச்சைமிளகாய் - 12
[நீளவாக்கில் அரியவும்]
*கல் உப்பு - 2 டீஸ்பூன் [குவித்து]
*எண்ணையும் நெய்யும் கலந்து - 1/4 கப்
தாளீக்க:
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*உளுததம் பருப்பு - 1 டீஸ்பூன்
*கடலைப்ப்ருப்பு - 2 டீஸ்பூன்
*உடைந்த முந்திரிப் ப்ருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
மேலே அலங்கரிக்க:
*நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்
*தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
*எலுமிச்சை - 1
செய்முறை
1. வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
2. ஒரு வாணலியில், எண்ணையும், நெய்யும் விட்டுச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களையும், பிறகு பச்சைமிளகாய், வெங்காயம், சேர்க்கவும்.
3. வெங்காயத்தை சிவக்க வதக்கவும்.
4. பிறகு ரவையைச் சேர்த்து அனலைக் குறைத்து 2 நிமிடம் வறுக்கவும்.
5. அளந்த தண்ணீரை தனியாகச் சூடாக்கி கொதிக்கும் போது இதில் ஊற்றவும். அனலைக் குறைத்து நன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.
6. ஈரம் வற்றி உப்புமா வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
7. எலுமிச்சம் சாறு பிழிந்து, நன்றாகக் கிளறிவிட்டு, தேங்காய்த் துருவல், அரிந்த மல்லித் தழை இவற்றை மேலே தூவி அலங்கரிக்கவும்...
No comments:
Post a Comment