Wednesday, September 25, 2024

காஞ்சிபுரம் இட்லி

 காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி ...

காஞ்சிபுரம் இட்லி செய்வதற்கு இரண்டு கப் அளவு பச்சரிசி மற்றும் ஒரு கப் புழுங்கல் அரிசி இரண்டையும் சுத்தம் செய்து மெஷினில் கொடுத்து ரவை போல் உடைத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அரிசி ரவையில் செய்தால் தான் இந்த இட்லி சுவையாக இருக்கும்.

இப்பொழுது ஒரு கப் உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்து ஒரு மணி நேரம் ஊறிய பிறகு கிரைண்டரில் சேர்த்து மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். உடைத்து வைத்திருக்கும் அரிசி மாவையும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது ஆட்டி வைத்திருக்கும் உளுந்து மாவுடன் ஊறிய அரிசி மாவையும் கலந்து கரைத்து கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கரைக்கவும் இதனை குறைந்தது 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அல்லது முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலை ஊற்றலாம். ஆறு மணி நேரம் கழித்து ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றை உரலில் ஒன்றிரண்டாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் சுக்கு பொடியையும் எடுத்துக் கொள்ளவும். இவை மூன்றையும் மாவில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வழக்கமாக இட்லி ஊற்றுவது போல இந்த மாவில் இட்லி ஊற்றி எடுத்துக் கொள்ளலாம்.

அவ்வளவுதான் கோவில் சுவையில் காஞ்சிபுரம் இட்லி தயாராகி விட்டது!

Sunday, September 15, 2024

பருப்பு சாம்பார்

பருப்பு சாம்பார் செய்வது எப்படி.....

தேவையான பொருட்கள்;::;

பாசி பருப்பு – 100 கிராம்
தக்காளி – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
மல்லி இலை – 2 கொத்து
மசாலா பொடி – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடுகு ‍ 1/2 டீஸ்பூன்
வெந்தயம் ‍ 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1 எண்ணம்
கறிவேப்பிலை – 2 கீற்று
மிளகாய் வற்றல் – 1 எண்ணம்

செய்முறை::::

பாசி பருப்பினை தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.

தக்காளியை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக வெட்டிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி ஒடித்துக் கொள்ளவும்.

மல்லி இலையை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் மசாலா பொடியை எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

மசாலாப் பொடியைக் கரைத்ததும் குக்கரில் பாசி பருப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.

பாசி பருப்பு வேகும்போது பாசிப் பருப்பினை அடுப்பில் வைத்த பின்பு காய்களை வெட்டிக் கொள்ளலாம்.

பாசிப் பருப்பு எளிதில் வெந்து விடும். துவரம்பருப்பினைப்போல் தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆதலால் அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.

ஒருநிமிடம் கழித்து அதனுடன் கரைத்து வைத்துள்ள மசாலா பொடியைச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துக் கிளறி பின்னர் தேவையான தண்ணீர் (3 டம்ளர்) மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.

குக்கரை மூடும் முன்பு குக்கரில் ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் மூன்று நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒருசேரக் கிளறி விடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.

தாளிதம் செய்யும்போது சுவையான பாசி பருப்பு சாம்பார் தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் முருங்கைக்காய் சேர்த்து சாம்பார் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் மசாலா பொடிக்குப் பதிலாக கொத்த மல்லிப்பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி மற்றும் மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து சாம்பார் தயார் செய்யலாம்...

Thursday, September 12, 2024

மோர் ரசம்

 மோர் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புளித்த தயிர் - அரை கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்

அரைக்க :

வறுக்காத‌ வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் (உரித்தது) - 2
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:

தயிரைக் கடைந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அரைக்க வேண்டிய பொருள்களை தேவையான அளவு தண்ணீர் விட்டு, பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இதைத் தயிரில் கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள். இந்த மோர் ரசம், திக்கான சாம்பார் போல இருக்க வேண்டும். அதற்கேற்ப தயிரில் தண்ணீரை ஊற்றுங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றித் தாளிக்க வேண்டியதைப் போட்டு தாளித்து தயிரில் சேருங்கள்.

நீங்கள் சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பு இதைச் செய்து வைத்தால், தாளித்தவை எல்லாம் இறங்கி ரசம் சாப்பிட அமிர்தமாக இருக்கும்.

சின்ன வெங்காய காரக்குழம்பு

 சின்ன வெங்காய காரக்குழம்பு....

தேவையான பொருட்கள்

 30 நிமிடம்
 4 பரிமாறுவது
1கப் சின்ன வெங்காயம்
1 தக்காளி
6பல் பூண்டு
சிறிதளவுகறிவேப்பிலை
எலுமிச்சை பழ அளவு புளி
1/2ஸ்பூன் மிளகாய்த்தூள்
2ஸ்பூன் மல்லி தூள்
1ஸ்பூன் குழம்பு பொடி
தேவையானஅளவு உப்பு
சிறுதுண்டு வெல்லம்
தேவையானஅளவு தண்ணீர்
2குழிக்கரண்டி நல்லெண்ணெய்
1ஸ்பூன் சீரகம்
1ஸ்பூன் கடுகு
1/4ஸ்பூன் வெந்தயம்

சமையல் குறிப்புகள்

அடுப்பில் மண் சட்டி வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து பூண்டு தட்டி சேர்த்து வதக்கவும்.

பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதம் மாறும் வரை வதக்கவும்.

தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மல்லி தூள், குழம்பு பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

மசாலா வாசனை போனதும் புளி கரைத்து வடிகட்டி கரைசலை ஊற்றவும். பின்னர் கொதிக்க வைக்க வேண்டும்.சிறிது எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

சின்ன வெங்காய காரக்குழம்பு(kara 

எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறு துண்டு வெல்லம் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.

சின்ன வெங்காய காரக்குழம்பு(kara 

சுவையான சின்ன வெங்காய காரக்குழம்பு தயார். நன்றி

#sujisujiaarthi

தண்ணி சட்னி

 நம்ம சட்னி வச்சாலே அது தண்ணியாதான இருக்கும்... தண்ணி சட்னி வச்சா எப்படி இருக்கும்னு யோசிக்காம சட்டுப்புட்டுன்னு இந்த மதுரை தண்ணி சட்னி செஞ்சி அசத்துங்க...

தண்ணி சட்னி என்பது தமிழகத்தின் ஒரு பாரம்பரிய சட்னி வகையாகும். இதை சாதாரணமாக, சாதத்திற்கு அல்லது இட்லி, தோசைக்கு பக்கத்துண்டாக செய்து சாப்பிடுவார்கள். இதன் சுவை மிகவும் மெல்லிதாகவும் சத்தானதாகவும் இருக்கும்.

தண்ணி சட்னி செய்வதற்கான செய்முறை:

தேவையான பொருட்கள்:

- தேங்காய் – 1/2 கப் (துருவியது)
- சின்ன வெங்காயம் – 6-8
- பச்சை மிளகாய் – 2 (சுவைக்கேற்ப)
- வர மிளகாய் - 2
- பூண்டு – 2 பல்
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- இஞ்சி – ஒரு சிறு துண்டு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

1. முதலில், தேங்காயுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

2. இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான தீயில் சட்னியை நீர்த்தபடியே செய்ய வேண்டும்.

3. கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு தாளித்து, கறிவேப்பிலையையும் சேர்த்து தண்ணி சட்னியில் ஊற்றவும்.

4. சட்னியை நன்றாக கலக்கி, உடனடியாக பரிமாறவும்.

இந்த தண்ணி சட்னி சாதம், இட்லி, தோசை, அல்லது அப்பத்தோடு நன்றாக ஒத்துப்போகும்.

Wednesday, September 11, 2024

மைசூர் ரசப் பொடி

 மைசூர் ரசப் பொடி

தேவையான பொருட்கள்*

3/4 கப்தனியா
1/2 கப் து.பருப்பு
2 டேபிள் ஸ்பூன்மிளகு
3 டேபிள் ஸ்பூன்சீரகம்
25- சி.மிளகாய்
ஒரு கைப்பிடி கருவேப்பிலை
2 டேபிள் ஸ்பூன் பெருங்காயத் தூள்
1டேபிள் ஸ்பூன் மஞ்சள் கிழங்கு (உடைத்தது)
1 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு
1 டேபிள் ஸ்பூன் தே.எண்ணெய்

 *சமையல் குறிப்புகள்* 

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், தே.எண்ணெய் காய்ந்ததும்,

து.பருப்பை, நன்கு வறுத்து, தட்டில் ஆற விடவும்.

பிறகு தனியாவை வறுத்து சேர்க்கவும்.

அடுத்து கடுகை கருகாமல் வறுத்து சேர்க்கவும்.

பின், மிளகு, சீரகம்,வெந்தயத்தை,வறுத்து சேர்க்கவும்.

மிளகாய், உப்பை வறுத்து சேர்த்து, ஆறவிடவும்.

அடுப்பை சிம்மில் வைத்து,தனியாக, கருவேப்பிலை, உடைத்த மஞ்சளை, வறுத்து, ஆற விடவும்.

அடுப்பை நிறுத்தி விட்டு, அதன் சூட்டிலேயே, பெருங்காயத் தூளை கருகாமல், வறுத்துக் கொள்ளவும்.

பெரிய மிக்ஸி ஜாரில், முதலில், வறுத்து ஆறின, மிளகாய்,உடைத்த மஞ்சள், உப்பை சேர்த்து அரைக்கவும்.

அடுத்து, தனியா, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.

கருவேப்பிலையை அரைக்கவும்.

கடைசியாக, வறுத்த, பெருங்காயத் தூளை சேர்த்து, ஒரு சுற்று சுற்றி, அரைக்கவும்.

அனைத்தையும் ஒன்று சேர கலந்துக் கொள்ளவும்.

பின், பௌலுக்கு மாற்றவும்.இப்போது வாசனையான,வீட்டிலேயே, தயாரித்த, சுத்தமான மைசூர் ரசப் பொடி தயார். 

பொடியை கன்டெய்னரில், போட்டு, வைக்கவும். 3 மாதம் வரை, இதனை உப யோகப்படுத்தலாம்.இந்த பொடியில், து.பருப்பு, தே.எண்ணெய், சேர்த்ததால், சுவை அதிகம்.

கல்லுப்பை வறுத்து அரைத்ததால், பொடியில், வண்டோ, பூச்சியோ, வரவே வராது.

இந்த பொடியில் மைசூர் ரசம் செய்து அசத்துங்கள்.☝🏻

Sunday, September 8, 2024

மங்களூர் மசாலா தோசை

 மங்களூர் மசாலா தோசை செய்வது எப்படி......

தேவையான பொருட்கள்

தோசை மாவு – 2கப்
நெய்/ எண்ணெய் தேவைக்கு
இட்லி பொடி – தேவைக்கு

உருளை ஸ்டப்பிங் செய்ய தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு -1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி-1
பச்ச மிளகாய் – 3-4(கார தேவைக்கு)
சாம்பார் பொடி – 1டேபில் ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள்தூள் -சிறுது
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி இலை தேவைக்கு

தாளிக்க:

கடுகு, சீரகம் – 1ஸ்பூன்
உளுந்து-1/2 ஸ்பூன்
கடலைபருப்பு – 1ஸ்பூன்
சிகப்பு மிளகாய் – 2-3
கறிவேப்பிலை ஒரு கொத்து.

தக்காளி சட்னி:

பல்லாரி வெங்காயம்- 1
தக்காளி – 3-4
சிகப்பு மிளகாய் – 5 (கார தேவைக்கு)
மிளகு,சீரகம், உளுந்து, கடலைபருப்பு – தலா அரை ஸ்பூன்
சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன்
பூண்டு – 2பல்
கடுகு -1/4ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
கொத்தமல்லி இலை சிறுது
ந.எண்ணெய் – 2ஸ்பூன்

உருளை ஸ்டப்பிங் செய்முறை:

1.முதலில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும்.

2.கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களை சேர்க்கவும்.

3.நீட்டமாக நறுக்கிய பல்லாரி வெங்காயத்தினை சேர்க்கவும். அதில் நறுக்கிய தக்காளி பொடியாக நறுக்கிய பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து சிறுது வதக்கவும். பச்ச வாசனை போன பின்பு அதில் மசித்த உருளை சேர்த்து கிளரி 5-7நிமிடம் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

தக்காளி சட்னி செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து விட்டு மேல் சொன்ன பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக குறைந்த தனலில் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

மசாலா தோசை செய்முறை:

தோசை தவாவில் மெலிசாக, பரவலாக தோசை ஊற்றவும். மேலே சுற்றி வரை நெய்/எண்ணெய் சிறுது ஊற்றவும். 1-2நிமிடங்கள் கழித்து அதன் மேல் பரவலாக தக்காளி சட்னி தேய்க்கவும் அதன் மீது இட்லி பொடி சிறுது தூவி அதன் மேல் உருளை ஸ்டப்பிங் பரவலாக வைத்து மேலே சிறுது எண்ணெய் ஊற்றி முக்கோண வடிவில் மூடிவிடவும்..

சுவையான மங்களூர் மசாலா தோசை ரெடி…

தேங்காய் சட்னி, சாம்பர் பொடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்…

Saturday, September 7, 2024

அச்சு அசல் ஹோட்டல் தோசை செய்வது எப்படி...

 அச்சு அசல் ஹோட்டல் தோசை செய்வது எப்படி...

தேவையான பொருட்கள்

2 கப் புழுங்கலரிசி 

ஒரு கப் பச்சரிசி 

கால் கப் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு

அரை கப் உளுந்து மேலும் 2 டீஸ்பூன் வெந்தயம் 

செய்முறை

அனைத்தையும் நன்றாக ஊறவைத்து அரைத்து, புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும். 

தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். 

தோசை ஊற்றப்போகும் நேரத்தில் சிறிதளவு சர்க்கரை, கடலை மாவைச் சேர்த்து தோசை மாவுடன் கிளறி தோசை வார்த்து மிதமான சூட்டில் நிதானமாக வேகவைக்க வேண்டும். 

இந்த முறையில் தோசை சுடும்போது, அது ஹோட்டல்களில் இருப்பதைப் போலவே பொன்னிறமாகவும் அதிக மொறுமொறுப்புடனும் இருக்கும்.

குழம்பு பொடி

 குழம்பு பொடிக்கு.......

தேவையான பொருட்கள் 

மிளகாய் வத்தல் – 1 கிலோ,
மல்லி விதை – 1 கிலோ,
மஞ்சள் – 200 கிராம்,
சோம்பு – 100 கிராம்,
பெருங்காயம் – 200 கிராம்,
கடுகு – 75 கிராம்,
வெந்தயம் – 75 கிராம்,
கசகசா – 50 கிராம்,
பச்சரிசி – 100 கிராம்,
சீரகம் – 200 கிராம்,
மிளகு – 100 கிராம்,
துவரம் பருப்பு – 100 கிராம்,
உளுந்து – 100 கிராம்,
கடலை பருப்பு – 200 கிராம்,
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி,

மிளகாய் வற்றல் மற்றும் மல்லி விதையினை இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். மிளகாவானது அழுத்தி பார்க்கும் போது நொறுங்கும் அளவிற்கு மிளகாய் காய்ந்திருக்க வேண்டும். மிளகாய் மற்றும் மல்லி விதை நன்கு காய்ந்தவுடன் காற்று புகாத அளவிற்கு ஒரு பையில் போட்டு இறுக்கமாக கட்டி வைக்கவும்.

பின்பு மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வறுக்க வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு வாணலியில் வைத்து, பச்சரிசியை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அரிசியை வறுத்த பின்பு காயவைத்து தனியாக எடுத்து வைத்துள்ள மிளகாய் வற்றலில், வறுத்த இந்த அரிசியை கொட்ட வேண்டும்.

அதன் பிறகு சீரகம், சோம்பு, கடுகு, மிளகு, வெந்தயம், கசகசா, மஞ்சள் ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து மிளகாய் வற்றலில் கொட்ட வேண்டும். அடுத்ததாக கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் பொன்நிறமாகும் வரை வறுத்து எடுத்து மிளகாய் வற்றலில் கொட்டிவிடவும்.

இதை தொடர்ந்து கட்டிப் பெருங்காயத்தையும் வெறும் வாணலியில் போட்டு பொரியும் வரை வறுத்து கலவையில் கொட்டவும். இறுதியாக கறிவேப்பிலையை உருவி வெறும் வாணலியில் போட்டு மொறு மொறுவென்று வரும் வரை வறுத்து கலவையில் கொட்டவும். இந்த வறுத்த அனைத்து கலவைகளும் நன்கு ஆறியதும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

#sujisujiaarhi

எல்லா வகையான குழம்பு பொடி

 எல்லா வகையான குழம்பு வகைகளுக்கும் ஏற்ற, தரமான, காரமான மிளகாய் பொடி செய்வது எப்படி ..... 

தேவையான பொருட்கள் ::::

மிளகாய்   - 1 கிலோ 
கொத்துமல்லிவிதை   - 3/4 கிலோ 
சீரகம்  -  200கிராம்
மிளகு   - 50 கிராம்
துவரம்பருப்பு    - 150 கிராம்
கடலைப்பருப்பு  - 150கிராம்
சோம்பு   - 50கிராம்
வெந்தயம்   - 50கிராம்
கடுகுஉளுந்தம்பருப்பு  - 100கிராம்
பெருங்காயம்  - 25கிராம்
உப்புக்கல் சிறிதளவு
விரல்மஞ்சள்  - 150கிராம்
கசகசா 25கிராம்

செய்முறை::::

கசகசா மிளகாய் தவிர அனைத்தையும் நன்கு வறுத்து சிறிதுநேரம் நல்ல வெயிலில் காயவைக்கவும்.

பின்னர் இவைகளுடன் இரண்டு கறிவேப்பிலை கொத்தை இலைகளை ஆய்ந்து இச்சாமான்களுடன் சேர்த்து நன்கு பட்டுப்போல் மிஷினில் கொடுத்து அரைக்கவும்.

பின்னர் நன்கு ஆறவைக்கவும்.

அவ்வளவுதான்.

எல்லாக்குழம்புக்கும் பயன்படுத்தலாம்.

நன்கு வாசமாகவும் ருசியாகவும் இருக்கும்.....

Wednesday, September 4, 2024

பீன்ஸ் பருப்பு உசிலி

 *பீன்ஸ் பருப்பு உசிலி ஒருமுறை இப்டி சுலபமாக ருசியாக செய்து பாருங்கள்* 

5 ஸ்பூன் கடலை பருப்பு , 2 ஸ்பூன் துவரம்பருப்பு  2 மணிநேரம் ஊற வைத்து ஒரு மிக்ஸிஜரில் சேர்க்கவும் 

கூடவே 2 காஞ்சமிளகை , ஒரு ஸ்பூன் சீரகம் , மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து வடைபோல் தட்டி ஒரு இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள் 

ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பில்லை சேர்த்து பொரியவிடவும் 

பிறகு நறுக்கிவைத்த பீன்ஸ் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் நல்ல பீன்ஸ் வெந்து வந்தவுடன் வேகவைத்து எடுத்த பருப்பை உதிர்த்து கடைசில் சேர்த்து இறக்கவும்.

ஃப்ரைடு ரைஸ்

 ஃப்ரைடு ரைஸ்.......

தேவையான பொருள்கள்

வடித்த சாதம் - 3 கப்
வெங்காயம் - 3
தக்காளி - ஒன்று
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 20 பற்கள்
உப்பு - அரை மேசைக்கரண்டி
கேரட் - 3
எண்ணெய் - அரை கப் 

செய்முறை

பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

தோலுரித்த பூண்டுடன் மிளகு சேர்த்து அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள பூண்டு, மிளகுத் தூள் போட்டு தாளிக்கவும்.

பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கேரட் துருவல் போட்டு 4 நிமிடங்கள் வதக்கவும்.

நன்கு வதங்கியதும், உப்பு சேர்த்து வதக்கவும்.

அதனுடன் வேக வைத்த சாதத்தைப் போட்டு மசாலாவுடன் சாதம் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறவும். (பாஸ்மதி அரிசி சாதமாக இருந்தால் மிகவும் பொலபொலவென்று இருக்கும்).

பிறகு தோசைக்கரண்டியால் சாதத்தை நன்கு அழுத்தி சமப்படுத்தி, 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

எளிதாகச் செய்யக் கூடிய ஃப்ரைடு ரைஸ் தயார். இதை குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

அவரைக்காய் பொரியல்

 அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி 

கா‌‌ய்க‌றிகளை பொ‌ரிய‌ல் செ‌ய்வது ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ந‌ல்ல‌து.

தேவையான பொருட்கள்::::

அவரைக்காய் - கா‌ல் ‌கிலோ 
வெ‌ங்காய‌ம் - 1
பூ‌ண்டு - 5 ப‌ல் 
தாளிக்க - கடுகு, உ.பருப்பு
மஞ்சள் பொடி, உ‌ப்பு - தேவையான அளவு 
தேங்காய் துருவல் - அரை க‌ப் 
கருவேப்பிலை

செய்முறை:::: 

அவரைக்கா‌ய், வெ‌ங்காய‌த்தை நன்கு பொடியாக அரிந்து கொள்ளவும். 

பூ‌ண்டை த‌ட்டி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். 

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கா‌ய்‌ந்த ‌மிளகாயை ‌கி‌ள்‌ளி‌ப் போ‌ட்டு, உ.பருப்பு, க‌றிவே‌ப்‌பிலை போ‌ட்டு தாளி‌க்கவு‌ம். 

‌பி‌ன்ன‌ர் வெ‌ங்காய‌த்தையு‌ம், அவரைக்காயையு‌ம் சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம். பூ‌ண்டு சே‌ர்‌‌த்து வத‌க்கவு‌ம். 

வத‌ங்‌கியது‌ம் தேவையான அளவு உப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சேர்த்து வதக்கவும். துருவிய தேங்காயை இதனுடன் சேர்த்து ஒரு ‌கிளறு ‌கிள‌றி இறக்கவும்.

ரவை உப்புமா

 ரவை உப்புமா செய்வது எப்படி...

தேவையான பொருட்கள்:::

*மெல்லிய பம்மாய் ரவை - 2 கப்
*தண்ணீர் - 4 1/2 கப்
*வெங்காயம் பெரிது - 3
*பச்சைமிளகாய் - 12
[நீளவாக்கில் அரியவும்]
*கல் உப்பு - 2 டீஸ்பூன் [குவித்து]
*எண்ணையும் நெய்யும் கலந்து - 1/4 கப்

தாளீக்க:

*கடுகு - 1/2 டீஸ்பூன்
*உளுததம் பருப்பு - 1 டீஸ்பூன்
*கடலைப்ப்ருப்பு - 2 டீஸ்பூன்
*உடைந்த முந்திரிப் ப்ருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
மேலே அலங்கரிக்க:
*நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்
*தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
*எலுமிச்சை - 1

செய்முறை

1. வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.

2. ஒரு வாணலியில், எண்ணையும், நெய்யும் விட்டுச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களையும், பிறகு பச்சைமிளகாய், வெங்காயம், சேர்க்கவும்.

3. வெங்காயத்தை சிவக்க வதக்கவும்.

4. பிறகு ரவையைச் சேர்த்து அனலைக் குறைத்து 2 நிமிடம் வறுக்கவும்.

5. அளந்த தண்ணீரை தனியாகச் சூடாக்கி கொதிக்கும் போது இதில் ஊற்றவும். அனலைக் குறைத்து நன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.

6. ஈரம் வற்றி உப்புமா வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

7. எலுமிச்சம் சாறு பிழிந்து, நன்றாகக் கிளறிவிட்டு, தேங்காய்த் துருவல்,  அரிந்த மல்லித் தழை இவற்றை மேலே தூவி அலங்கரிக்கவும்...

சாம்பார் இட்லி

 சாம்பார் இட்லி செய்வது எப்படி....

தேவையான பொருள்கள்:

1. இட்லி மாவு
2. துவரம் பருப்பு
3. சாம்பார் வெங்காயம்
4. பெரிய தக்காளி
5. புளி
6. எண்ணெய்
7. கடுகு
8. உளுந்து
9. பெருங்காயம்
10. கருவேப்பில்லை, கொத்துமல்லி
11. உப்பு
12. நெய்

செய்முறை:

1. துவரம் பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் இல்லாவிட்டால் இரண்டே, இரண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளலாம். அத்துடன் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. இரண்டு டீ ஸ்பூன் தேங்காய்த் துருவல்,  2 டீ ஸ்பூன் கடலைப் பருப்பு,  1 டீ ஸ்பூன் சீரகம்,  அரை ஸ்பூன் வெந்தயம், ஆறு காய்ந்த மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் தனியா ஆகிய இவை அனைத்தையும் சிறிது எண்ணெய்யை விட்டு வாசனை வரும் வரையில் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

3. இட்லி மாவைக் கொண்டு குட்டி இட்லியாக ஊற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும். (பொதுவாக இட்லி செய்யும் முறை ஏற்கனவே இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. பார்த்துக் கொள்ளவும்)

4. கடுகு, உளுந்து, தாளித்து நறுக்கிய வெங்காயம் போன்ற இவற்றை வாசனை வரும் வரையில் வதக்கவும்.

5. பின்பு தக்காளியும் உப்பும் சேர்த்து தக்காளி கரையும் வரையில் வதக்கி அதில் புளியை 1 தம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

6. புளி நன்கு கொதிக்கும் சமயத்தில் நீங்கள் அரைத்து வைத்து உள்ள மசாலா, பெருங்காயம், நன்கு குழைந்த பருப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

7. இறுதியாக கறிவேப்பில்லை, சிறிது மல்லித் தழை சேர்த்து மூடவும்.

8. இப்போது பரிமாறும் சமயத்தில் பத்து குட்டி இட்லிகளை வைத்து அதன் மேல் கலக்கிய சாம்பாரை ஊற்றி, அத்துடன் சிறிது நெய்யும் ஊற்றி, பொடிப் பொடியாக நறுக்கிய கொத்து மல்லி தழைகளைத் தூவிப் பரிமாறவும்.

9. இதோ இப்போது சுவையான சமைப்பார் இட்லி மனம் கமழும் வாசனையுடன் தயார்.