Thursday, August 1, 2024

ரசம் சாதம்

 சோம்பலா இருக்கா? அப்போ இப்படி ஈசியா ரசம் சாதம் செய்யுங்க.

தேவையான பொருட்கள்

1 கப் அரிசி
துவரம் பருப்பு ½ கப்
பாசி பருப்பு – ¼ கப்
400 எம்.எல் தண்ணிர்
தக்காளி 1 நறுக்கியது
மஞ்சள் பொடி – ¼ டேபிள் ஸ்பூன்
உப்பு
அரை கப் புளி தண்ணீர்

ரசப் பொடி – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கருவேப்பிலை 1 கொத்து
கடுகு, சீரகம்
வத்தல்

கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி சேர்க்கவும். அதில் துவரம் பருப்பு, பாசி பருப்பு, மஞ்சள் பொடி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து வேக வைத்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதில் புளி கரைத்ததை சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் சூடான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து அதில் எண்ணெய், கடுகு, சீரகம், வத்தல், கருவேப்பிலை தாளித்து கொட்டவும். தொடர்ந்து அதில் ரசப் பொடி சேர்த்து கிளரவும். மீணடும் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கடைசியாக  கொத்தமல்லி இலையை தூவ வேண்டும். சூடான ரசம் சாதம் ரெடி.

தால் கிச்சிடி

 தால் கிச்சிடி  

தேவையான பொருட்கள்

அரிசி - பருப்பு கலவையை சமைக்க:

½ கப் மூங் தால்
½ கப் அரிசி
1 டீஸ்பூன் நெய்
750 மில்லி தண்ணீர்
¼ தேக்கரண்டி மஞ்சள்

கிச்சடி தயாரிப்பதற்கு:

2 டீஸ்பூன் எண்ணெய்
3 டீஸ்பூன் நெய்
½ தேக்கரண்டி ஜீரா
1 டீஸ்பூன் இஞ்சி
1 டீஸ்பூன் பூண்டு
2 பச்சை கோலிஸ் பிளவு
2 பைச் ஹீங்
½ கப் வெங்காயம் (நறுக்கியது)
½ கப் தக்காளி (நறுக்கியது)
1 லிட்டர் சூடான நீர்
கோத்மிர் (நறுக்கியது) - சிறிது
1 டீஸ்பூன் கொத்தமல்லி (தன்யா) தூள்
½ தேக்கரண்டி ஜீரா தூள்
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
உப்பு - சுவைக்க
சூடான நீர் - லிட்டருக்கு மேல் இருக்க வேண்டும்
இறுதி சுவையூட்டலுக்கு:
2 டீஸ்பூன் நெய்
2 காய்ந்த மிளகாய் முழுவதும்
½ தேக்கரண்டி ஜீரா
1 தேக்கரண்டி பூண்டு (நறுக்கப்பட்டது)
¼ தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள்

வழிமுறைகள்

அரிசி மற்றும் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 

பிரஷர் குக்கரில் உப்பு, ஹால்டி மற்றும் நெய் சேர்த்து வேகவைக்கவும். மென்மையாகவும் மென்மையாகவும் இருக்கும் வரை சமைக்கவும். ஒதுக்கி வைக்கவும்.

நெய்யை சூடாக்கி, ஜீரா, இஞ்சி, பச்சை மிளகாய், ஹீங் ஆகியவற்றை வறுக்கவும்.

ஜீரா சிறிது சிறிதாக வெந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.

பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும். மஞ்சள்தூள், ஜீரா, தான்யா பொடிகள் சேர்த்து வறுக்கவும், மசாலாக்கள் வெந்து போகாமல் பார்த்துக் கொள்ளவும்.

வறுத்த மசாலாவில் அரிசியை சிறிது சூடான நீரின் உதவியுடன் மென்மையாகவும் மென்மையாகவும் கலக்கவும்.

மீதமுள்ள சூடான நீரை சேர்த்து 4-5 நிமிடங்கள் சமைக்கவும். 

பாத்திரத்தின் அடிப்பகுதியில் அரிசி எரிவதைத் தடுக்க தொடர்ந்து கிளறிக்கொண்டே இருங்கள்.

தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். நறுக்கிய கோத்மீரைத் தூவி, பாத்திரத்தை நெருப்பிலிருந்து இறக்கவும்.

நெய்யை சூடாக்கி, கடைசி மசாலாவின் அனைத்து பொருட்களையும் ஒரு வாசனை வரும் வரை வறுக்கவும். மிளகாய் தூள் சேர்த்து, கிச்சடி மீது தாளிக்கவும்.  சூடாக பரிமாறவும்.

அவியல்

 அவியல் - Aviyal

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 1
கேரட் – 2
பீன்ஸ் – 9
கத்திரிக்காய் – 7
உருளைக்கிழங்கு – 1
முருங்கைக்காய் – 7 துண்டுகள்
கெட்டித்தயிர் – 1/4 கப்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு

அரைக்க

தேங்காய் துருவல் – 1/2 கப்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
பூண்டு பற்கள் – 1
பச்சை மிளகாய் – 3
சீரகம் – 1 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை

1. கேரட்டை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காயையும் தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய் காம்பை நீக்கி பாதியாக நறுக்கி மீண்டும் நடுவில் நறுக்கவும்.

2. ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து 3/4 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.

கேரட் சிறிது நிறம் மாறும் போது நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்.

3. காய்கறிகள் வேகும் போது தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

காய்கறிகள் வெந்ததும் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

4. பின் தயிர் சேர்த்து நன்கு கலந்து சீரகத்தின் பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கும் போது தேங்காய் எண்ணெய் விட்டு கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து மெதுவாக பிரட்டி இறக்கவும்.

வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து சூடான அவியலில் கலந்து மூடிவைக்கவும்.

இதில் தயிருக்கு பதிலாக ஒரு சிறிய துண்டு ஊறவைத்த புளியை தேங்காயோடு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். அல்லது  காய்கறிகள் வெந்த பின் சிறிது நீளமாக நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளரிக்காய், சேனைக்கிழங்கு, வெள்ளை பூசணி, புடலங்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளும் சேர்க்கலாம்.

பரங்கிக்காய் புளிக்குழம்பு

 பரங்கிக்காய் புளிக்குழம்பு - Yellow Pumpkin Pulikuzhambu

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 20
பூண்டு பற்கள் – 10
தக்காளி – 1
புளி – நடுத்தர எலுமிச்சை அளவு
பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் – 1/2 கப்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1.5 டீஸ்பூன்
தனியாதூள் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கடுகு & உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
கட்டி பெருங்காயம் – சிறிய துண்டு
வெல்லம் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஸ்டெப் 1

புளியை சூடான நீரில் ஊறவைத்து 2 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.

ஸ்டெப் 2

கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் அதில் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

ஸ்டெப் 3

பின் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதோடு பொடியாக நறுக்கிய பரங்கிக்காயை சேர்த்து கைவிடாமல் வதக்கவும். பரங்கிக்காய் பாதி வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து தேவையான உப்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து கலந்து மூடி வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

ஸ்டெப் 4

குழம்பு கொதி வர ஆரம்பித்ததும் வெல்லம் மற்றும் கட்டிப் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும். குழம்பின் மேலே எண்ணெய் மிதக்கும் வரை கொதித்ததும் இறக்கவும்.

Wednesday, July 31, 2024

மிளகு பொங்கல்

மிளகு பொங்கல்

தேவையான பொருட்கள் :

அரிசி : 1 கப் 
பாசிப்பருப்பு : 1/2 கப் 
முந்திரி : 10
மிளகு : 1 1/2 ஸ்பூன் 
சீரகம் : 1 ஸ்பூன் 
நெய் : 2 லிருந்து 4 ஸ்பூன் 
இஞ்சி : சிறு துண்டு 
கருவேப்பிலை : 1 கொத்து 
உப்பு : தேவையான அளவு 

செய்முறை :

ஒரு சட்டியில நெய் சேர்த்து அதுல மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து நல்லா தாளிச்சு வச்சுடுங்க.

ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊத்தி (3 கப் தண்ணீர் ) அரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, அது கூட தேவையான அளவு உப்பு சேர்த்து , 5 விசில் வர்ற வரைக்கும் வேக வச்சிட்டு ஆறினதும் அதுல, தாளிச்சது சேர்த்து நல்லா கலந்துக்கோங்க. அவ்வளவுதான் மக்களே...

எவ்வளவு எளிமையான ஒரு செய்முறைன்னு பார்த்தீங்களா 🤗... இதை அப்படியே செஞ்சி ஒரு சட்னியோ, சாம்பாரோ வச்சி சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க 🤗.


உங்களுக்கு மிளகு பொங்கலுக்கு தொட்டுக்க பிடிச்சது சாம்பாரா இல்லை சட்னியான்னு சொல்லுங்க...

என்றென்றும் அன்புடன்

🥗அம்மா சமையல் 🥗

𝐓𝐚𝐬𝐭𝐲 𝐠𝐫𝐨𝐮𝐩😍🥞🍱🍪

𝐋𝐞𝐭'𝐬 𝐜𝐨𝐨𝐤 𝐜𝐨𝐦 𝐨𝐧 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬🍲👨‍🍳

உடுப்பி சாம்பார்

 உடுப்பி சாம்பார் / UDUPI SAMBAR

உடுப்பி  சாம்பாரில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்வது தான் இதன் சிறப்பு.

இதில்கத்திரிக்காய்,கேரட்,முருங்கைக்காய்,வெள்ளை பூசணி சேர்த்து செய்துள்ளேன். காய்கள் இல்லாமலும் செய்யலாம்.

இந்த சாம்பார் இட்லி,தோசை,சாதம் ,பொங்கல் என அனைத்துக்கும் நன்றாக இருக்கும்.

மசாலவை ப்ரெஷ்ஷாக பொடித்து செய்வதும்,கடைசியாக வெல்லம் சேர்ப்பதும்  சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.

புளிகரைசல் - 1 கப்
வெல்லம் -சிறுதுண்டு
உப்பு +எண்ணெய் -தேவைக்கு

பருப்புடன் சேர்த்து வேகவைக்க

துவரம்பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் -1/2டீஸ்பூன்
காய்கள் -1/2 கப்

எண்ணெயில் வறுத்து பொடிக்க

தேங்காய்த்துறுவல் -1/4 கப்
காய்ந்த மிளகாய் -4
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
தனியா- 2 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்
 தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை

பருப்புடன் கொடுக்கபட்ட பொருட்களை சேர்த்து வேகவைக்கவும்.

பொடிக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காயை மட்டும் பொன்னிறமாக வருத்தும் மற்றவைகலை மிதமான சூட்டில் வருத்தும் பொடிக்கவும்.

பாத்திரத்தில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

 பச்சை  வாசனை அடங்கியதும் பொடித்த  பொடி மற்றும் வேகவைத்த பருப்பு கலவை மற்றும் தேவைக்கு நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

கடைசியாக வெல்லம் சேர்த்து இறக்கவும்.

பி.கு

வெல்லம் சேர்ப்பதே இந்த சாம்பாரின் ஸ்பெஷல்.

மசாலா பொடிக்கும் போது சோம்பு சேர்ப்பது இதர்கு தனி சுவையும் மணமும் கொடுக்கும்.

இது சாதத்திற்கும் மிக நன்றாக இருக்கும்.

கல்யாண_வீட்டு_ரசம்

 கல்யாண_வீட்டு_ரசம் 

இருக்குறதுலயே எளிமையான, அதே சமயம் ஹெல்த்தியான ஒரு சவுத் இன்டியன் குழம்பு வகை...

எதுமே தோணலன்னா வச்சுருங்கடா ரசத்தை ன்னு ஃபில் பண்றது இந்த டிஷ்தான்... சாப்டு முடிச்ச பாத்திரத்தை கழுவுறது கூட ஈசி... 

ரசம் ங்குறது ஒரு கொதில இறக்கி வச்சாதான் நல்லா இருக்கும்னு எல்லாரும் சொல்வாங்க... ஆனா எத எப்போ சேர்க்கணும், எந்த ஸ்டேஜ்ல ஒரு கொதில இறக்கணும் ன்னு முறை இருக்கு...

புளிதான் ரசத்தோட உயிரோட்டம்... இந்த புளி வாசம் போகுற அளவுக்கு கொதிச்சா மட்டும் தான் பச்ச வாசனை இல்லாம ரசம் நல்லா இருக்கும்...

ரசத்துக்கு சைடிஷா நிறைய பேர் பருப்பு அல்லது பருப்பு சேர்த்த கூட்டு வைப்போம். அதுல இருந்து கொஞ்சம் பருப்பு வேக வச்ச தண்ணி சேர்த்து வச்சிங்கன்னா ரசம் நல்ல மணமா, ருசியா இருக்கும்... 

ஒருவேளை பருப்பு வேக வைக்கலன்னா கொஞ்சமா பாசிப்பருப்பை எடுத்து லைட்டா வறுத்து, மிளகு, சீரகம் அரைக்குறப்போ சேர்த்து அரைச்சுருங்க..‌

ரசம் வைக்க வத்தல், சீரகம், மிளகு,  சேர்த்து ட்ரையா கொத்தலா அரைச்சு வச்சுருங்க....

பூண்டு, கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து அதையும் அரைச்சு எடுத்து தனியா வச்சுருங்க...

கொஞ்சமா ரசப்பொடி, அதவிட கொஞ்சமா பெருங்காயத்தூள். ஒரு பிஞ்ச் மஞ்சள் தூள் எடுத்து வச்சுருங்க...

புளிய ஊறவச்சு கரைச்சு வடிகட்டி எடுத்துகோங்க...

நல்லெண்ணெய் தாளிப்பு போட்டா ரசத்துக்கு நல்லா இருக்கும்... 

தாளிப்புல பூண்டு கருவேப்பிலை பேஸ்ட போட்டு வதக்கி அதுல தக்காளி சேர்த்து வதக்குங்க...

தக்காளி பாதி வெந்தாலே போதுமானது...

அதுல புளிக்கரைசல ஊத்தி கொதிக்க வைங்க... தேவைக்கு உப்பு சேர்த்துருங்க.‌‌ தண்ணீரும் 3 ல 2 பங்கு சேர்த்துருங்க.

புளி வாசனை போற வரைக்கும் நல்லாவே கொதிக்க விடுங்க.. கம்ப்ளீட்டா புளி வாசனை போன பிறகு தான் மத்ததெல்லாம் சேர்க்கணும்...

பருப்பு தண்ணீர் அல்லது வறுத்த பருப்போட சேர்த்து அரைச்ச வரமிளகாய், மிளகு, சீரகம் காம்போ & ரசப்பொடி, காயப்பொடி காம்போவ உள்ள கொட்டி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட்ருங்க‌...

ரெண்டு பிஞ்ச் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கலாம்...

இப்போதான் அந்த #ஒரு_கொதி விஷயத்தை ஃபாலோ பண்ணணும்... இந்த ரெண்டாவது ஸ்டேஜ்லதான் ஒரு கொதி வந்ததும் இறக்கணும்... 

அடுப்ப ஆஃப் பண்ணிட்டு மல்லித்தழை கட் பண்ணத தூவி விட்ருங்க...

(பொதுவான ஐடியாஸ் மட்டும் கொடுத்துருக்கேன்...

அளவுகளோட ரெசிபி சொல்ல மேலிடத்து உத்தரவு வாங்கணும்...😊😻)

ஒரு பக்கவான கல்யாண வீட்டு ரசம் தயார்... 😋😋😋

#My_Prepration 😘😻😍