சிதம்பரத்திலிருந்து காசி,கயா,அலகாபாத்,ஹரித்வார்,மதுரா….பகுதி 1
IRCTC ன் சுற்றுலா பிரிவு பாரத தரிசனம் என்ற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள ஆன்மீக,திருத்தலங்களுக்கு செல்லும் யாத்திரை ஆகவும் ,பொழுது போக்கு சுற்றுலாவாகவும் பட்ஜெட் திட்டத்தில் ஏரோப்ளேன் மூலம் செல்லும் சொகுசு சுற்றுலாக்களையும் ஏற்பாடு செய்து இந்தி தெரியாதவர்களையும் அழைத்து ச்செல்கிறது.
அவ்வகையில் இவ் வாண்டு ஆடி அமாவாசை அன்று கயாவிலும் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளுக்கு பிரியமான மதுராவிலும் தரிசிக்க திட்டமிட்டுள்ளது.
அடியேன் ஏற்கனவே தரிசித்த இடங்களெனினும் மனைவி அமெரிக்காவில் உள்ளதால் பொழுது போகவும் தனியொருவன் தனக்கென உணவு தயாரிக்கும் கொடுமையிலிருந்து விடுதலை பெறவும் கொரானா அச்சுறுத்தலை புறம் தள்ளி புக் செய்தேன்.
இதனை முன்னரே பாரத தரிசனம் குழுவில் அறிவித்தும் ஒரே ஒரு நண்பர்(ஹரிஹரன்)மட்டுமே
புக் செய்து உள்ளார்.
இந்த ட்ரெய்ன் ஆகஸ்ட் 4 விடிகாலம் சென்னை வருவதால் அதனை மிஸ் செய்து 10,395 ரூபாயை ரயில்வேக்கு தாரை வார்க்கலாகாது என எண்ணி எனது பூர்வீகமான சிதம்பரத்தில் அதனை முதல் நாள் இரவே பிடிக்கவும் சிதம்பரத்து நடராஜர்,கோவிந்தராஜர்களை திசித்து அருகிலுள்ள மூதாதையர் கிராமத்திற்கு (மாதானம்)சென்று வரவும் எண்ணினேன்..
என் வாழ்நாளில் பார்த்தே இராத 40 ஆண்டுகளுக்கு முன் முப்போகம் விளைந்து கடை மடை என்பதால் காவிரி ப்ரச்னையால் நீர்வரத்தின்றி நஷ்டம் ஏற்படுவதாக சொல்லி 40 வருடங்களாக குத்தகையும் தராமல் நஷ்ட ஈடு என்னைத்தரச்சொல்லும் குத்தகை தாரர் வசம் இருக்கும் இதுவரை பார்த்தே இராத சுமார் 15 ஏக்கர் பூர்விக நிலங்களை
பார்த்து வரவும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியே சிதம்பரம் பஸ் ஏறினேன்.
டிவியில் வரும் கொரானா பயமுறுத்தல் பற்றி சிறிதும் பயம் இன்றி மக்கள் மாஸ்க் மறந்து திண்டிவனம் தாண்டி வயிற்றில் புளி கரைக்கிறார்கள்.
பாண்டி நெருங்க நெருங்க 10 மீட்டருக்கு ஒர. ப்ரமாண்ட கட் அவுட்டில் வாழும் காமராஜரே என ரங்கசாமி சிரிக்கிறார.
(காமராஜர் காலத்தில் கட் அவுட் கலாசாரம் இருந்திருந்தால் ?)
பாண்டி செக் போஸ்டில் ஏறிய போலீஸ்காரர் கண்ணில் எனது பெரிய லக்கேஜ் உறுத்தவே என்னை மது பிரியனாக நினைத்து கைவிட்டு குடைந்து சோதனை போட சுஜாதா மாமி
வலியுறுத்தலுக்கிணங்க திருமண் ஶ்ரீசூர்ணததுடன் நான் இருந்தால் போலீஸுக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டிருக்காதோ என நினைத்தேன்.
கடலூர் மஞ்சக்குப்பம் மாறாத நினைவுகளை 35 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்ல வேலைபார்த்த ஸ்கூல் மற்றும் திருமணத்திற்குபின் முதல் குடித்தனம் இருந்த தெற்கு கவரைத்தெரு நினைவுகள் பசுமையாய். …வசந்த பவனில் காபி சாப்பிட்டபின் சிதம்பரம் பஸ் அடுத்து வேலை பார்த்த பரங்கிப்பேட்டை ஸ்கூல் நினைவுகளை விசிறி விட்டது.
சிதம்பரம் பஸ்ஸ்டாண்டில் இறங்கி நடந்தால் மணிக்கூண்டு அதே 10.45 ல் உறைந்து கிடக்க எதிரே நடராஜா தியேட்டர் இருந்த இடத்தில் வாண்டையார் ஓட்டல். (நான் அடிமைப்பெண் படம் பார்க்க மன நலம் சரியில்லாத சித்தப்பாவுடன் சென்று கூட்டத்தில் நான் மட்டும் 53 பைசா டிக்கட்ஐ வெற்றிகரமாக பெற்று இன்டர்வல்லில் யாரோ ஒருவர் உன் சித்தப்பாவுக்கு கூட்ட அடிதடியில் மண்டை உடைந்தது என சொல்லியும் காலத்தை வென்ற காவிய நாயகனை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தால் சித்தப்பா தலை கட்டுடனும் எனக்கு என்னவாயிற்றோ என்ற கவலையில் இருந்த மற்றவர்கள் என் மேல் பாய்ந்ததும் நினைவில்…)
50 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த அதே பில்டிங்கில் கல்யாணம் லாட்ஜில் சல்லிசாக ரூம் கிடைத்தது.
மாலை நடராஜர் கோவிந்தராஜரை தரிசிக்க கோயில் சென்றேன்.
நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து அடிப்படையான அம்சங்களுக்காகவும் தனித்தன்மையான கோவில்கள் தென்னிந்தியாவில் ஐந்து இடங்களில் கட்டப்பட்டிருக்கிறது. பஞ்சபூத ஸ்தலங்கள் என்று இவை அழைக்கப்படுகின்றன. பூகோளரீதியாக இவை எல்லாமே தக்காண பீடபூமியில், (Deccan Plateau) தற்போதைய தமிழகத்தில் நான்கும் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளன. நீருக்காக திருவானைக்காவல், நெருப்புக்காக திருவண்ணாமலை, காற்றுக்காக காளஹஸ்தி, பூமிக்காக காஞ்சிபுரம் மற்றும் ஆகாயத்திற்காக சிதம்பரம் ஆகிய இடங்களில் இந்த கோவில்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. சிதம்பரம் ஆலயத்துக்குள் நுழைந்ததும் எந்த பிரகாரத்துக்கு எப்படி செல்வது! எந்த மூர்த்தியை வழிபடுவது? என்பன போன்ற குழப்பம் ஏற்பட்டு விடும். அந்த அளவுக்கு இது பெரிய ஆலயம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள் உள்ளன.
இக்கோவிலை பதஞ்சலி முனிவர் உருவாக்கும்போது எந்த ஆடம்பர நோக்கத்துடனும் செய்யவில்லை. ஒரு மகத்தான சக்தியூட்டப்பட்ட புனித ஸ்தலத்தை உருவாக்க என்ன தேவையோ அதை மட்டுமே செய்தார்.
இனி….
(நேற்று இரவு IRCTC ட்ரெய்னை பிடித்து விட்டேன்..கட்டுரை நேரம் கிடைக்கும் போது தொடரும் )
No comments:
Post a Comment