Tuesday, April 30, 2024

பிரண்டை முழுமையான பதிவு...

 பிரண்டை முழுமையான பதிவு...

வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி.

 ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன.

முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும்.

இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண் பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும், காரத்தன்மையும். எரிப்புக் குணமும், மைக்ககும் இயல்பும் உடையது.இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.

பிரண்டை உப்பு -: பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டிஅரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.

பேதி, வாந்தி -: குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.

வாய்ப்புண் - :வாய் புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.

வயிற்றுப்புண் -: தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 - 96 நாள் இரு வேழை சாப்பிட குணமாகும்.

மூலம் -:நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வெண்ணெயில் 24 -48 நாள் இரு வேழை கொடுக்க குணமாகும்.

பிரண்டை பற்பம் - : 300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.

உடல் பருமன் -: பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

ஆஸ்துமா -: இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.

சூதகவலி - : மூன்று வேழை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.

தாதுநட்டம் -: பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.

செரியாமை -: பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக் கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும்.

நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.

பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேழையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.

காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்துஇரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்கஇந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்றுதுளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.

பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.

பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேழைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.இதனை உணவில் சேர்த்துவர மூலநோய், மலச்சிக்கல், வயிற்றெரிவு, குடற்புண் என்பன நீங்கும். செரியாமை, சுவையின்மை நீங்கிப் பசியுண்டாகும்.

வஜ்ஜிரவல்லிச் சூரணம் செய்யப் பயன்படுகிறது.

உடல் தேற

சிலர் உடல் மெலிந்து எப்போதும் சோகமாகக் காணப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வயிற்றுப் பொருமல் நீங்க

வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

இரத்த மூலநோய் குணமாக

மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.

செரிமான சக்தியைத் தூண்ட

சிலருக்கு மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

முதுகு வலி, கழுத்து வலி குணமாகk

சிலர் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இவர்களின் எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.

இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.

எலும்பு முறிவுக்கு

எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.

இதயம் பலப்பட

உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர் களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன.

பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.

பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும். 

கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

மெலிந்த உடல் குண்டாக

ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

பிரண்டை துவையல்

எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். 

மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்

GL

Monday, April 29, 2024

தன்வினை....32

 தன்வினை....32

By N Krishnamurthy 

ஆற்றங்கரையிலிருந்து அனைவரும் திரும்பி வந்தனர். இரவு உணவு உண்டதும் வீட்டிற்கு வெளியே இருந்த திண்ணையில் அனைவரும் கூடி நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அந்த காலத்தைப்பற்றி பேச்சு எழும்போது,சுமதி தன் மகன் ஜகன் சிறு வயதில் இன்னும் நல்ல கலராகவும், சுருள் முடியுடன் அழகாக இருப்பான் என குறிப்பிட்டாள். இதைக்கேட்ட சிதம்பரம் "நேக்கு ஓரு ஜோக் ஞாபகத்துக்கு வரது. இதை ஜோக்கா எடுத்துண்டு சிரிச்சூடுங்க.யாரும் தப்பா எடுத்துக்க வேணாம் "என்ற பீடிகையுடன் தொடங்கிய பின்  "ஒரு ஊர்ல ஒரு ஆளுக்கு கல்யாணம் ஆகி நாலு வருடம் கழித்து குழந்தை பிறந்ததாம். இந்த சமாஜாரத்தை எதிர் வீட்டிலிருந்த காமு பாட்டிகிட்ட அந்த ஆள் சந்தோஷமாக "பாட்டி எனக்கு ஆண் குழந்தை பொறந்திருக்கு"என்று சொன்னானாம்.  பாட்டி"ரொம்ப சந்தோஷம்டா. கொழந்த யார் ஜாடை "என்று கேட்டாளாம். அந்த ஆள் உற்சாகமாக "கொழந்த என் ஜாடை "என்றானாம். காமு பாட்டி "கவலைய விடு. ஆம்பள கொழந்த அழகாயில்லேன்னா பராவாயில்ல " என்றாளாம். இதைக்கேட்ட அங்கிருந்தவர்கள்,சுமதி உட்பட, வாய் விட்டு சிரித்தார்கள்.

மறுநாள் எழுந்து, குளித்த பிறகு, பிரேக்பாஸ்ட் முடித்து கிளம்ப தயாரானார்கள்.

கேசவதாசுக்கு ஜகனும், வினயாகவும் ஜோடியாக நமஸ்காரம் செய்தார்கள். 

" ஒத்துமையா இருங்கோ.சகல சௌபாக்யம் சித்தி ரஸ்து" என்று அவர் ஆசீர்வதித்தார். ஒரு தட்டில் பத்தாயிரம் ரூபாய் வைத்து கேசவதாசுக்கு  கணேசன் கொடுத்தார். அதே கேசவதாஸ் வாங்க மறுத்து விட்டார். " ஏற்கனவே உங்க கிட்ட வாங்கிண்ட வந்த பணமே எதேஷ்டம். உங்க பொண்ணு கல்யாணத்துக்கு என் சார்பில இதை ஓதி விட்டுடுங்க"என்றார். கணேசனும், விமலாவும்  "கல்யாண பத்திரிக்கை அனுப்புறோம். நீங்க அவசியம் வந்து நடத்திக் கொடுக்கணும்" என்றார்கள். அதற்கு கேசவதாஸ் "உங்க பொண்ணு கல்யாணம் பண்ற சமயத்துல எனக்கு இதுபோல வேற வேலை வந்தூட்டா நான் வரது கஷ்டம். இல்லன்னா அவசியம் கலந்துக்கறேன்" என்றார்.வினயாவை கவனித்துக் கொண்ட இருந்த பெண்மணிகளுக்கும், அர்ஜுனனுக்கும் சில ஆயிரம் ரூபாய்களை வெகுமதியாக அளித்தார் கணேசன். 

சுமார் மூன்றங்குல உயரமிருந்த ஒரு வெள்ளி பகவதி அம்மன் விக்ரஹத்தை வினயாவிற்கு அளித்த கேசவதாஸ் "ப்ரதி திவசம் குளிச்சதக்கப்புறம், மடி உடுத்திண்டு அம்மனை வேண்டிக்கோ. பாலோ,பழமோ, கல்கண்டோ நைவேத்யம் பண்ணு. அம்மன் உன் பங்குல இருப்பா"என்றார்.

எட்டு மணிக்கு திருசூர் செல்லும் பஸ்ஸில் அனைவரும் ஏறி திருசூரை அடைந்தார்கள். 

ஓன்பதரை பஸ் பிடித்து பதினோரு மணிக்கு சோட்டானிக்கரா சென்று பகவதி அம்மனை தர்சித்தார்கள்.

திரும்பவும் திருசூர் வர கிட்டத்தட்ட இரண்டு மணி ஆனது.ஹோட்டல் ஆர்யாவில் பகலுணவை முடித்தனர். பின்னர்  வடக்குநாதனை  தரிசித்தார்கள்.

மாலை ஒரு வேன் பிடித்து குருவாயூர் போய் சேர்ந்தனர்.கோவிலுக்கு அருகில் இருந்த ஒரு லாட்ஜில் ஜகன் மூன்று ரூம்கள் புக் செய்தான். சிறிது நேரம் லாட்ஜில் கழித்த பிறகு கோவிலுக்கு சென்று  குருவாயூரப்பனை கண்குளிர தரிசனம்  செய்தார்கள்.

மூன்று குடும்பமும் அங்கு இரவு தங்கினார்கள். மறுநாள் சீக்கிரமே எழுந்து, குளித்து நிர்மால்ய தரிசனமும் செய்தார்கள். பிறகு கிளம்பி திருசூர் வந்து அங்கிருந்து பஸ் பிடித்து கோயம்புத்தூர் வந்தார்கள். மதியம் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸில் அவர்கள் ஆறு பேருக்கும், சிதம்பரம் மூலம் EQ கோட்டாவில்,  ரிசர்வேஷன் கிடைத்தது. பின்பு சிதம்பரம் அவர்களிடம் "நானும், சாரதாவும் கெளம்பறோம்" என்றார். சிதம்பரத்தின் கைகளை பிடித்துக் கொண்ட கணேசன் கண்களில் நீர் பெருக"  அன்னிக்கு நீங்க என்ன சார்ங்கபாணி கோவில்ல அடையாளம் கண்டுபிடித்து பேசலேன்னா இது போல நான் இன்னிக்கி  நிம்மதியா இருந்திருக்க முடியுமான்னு நெனக்கறேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதூன்னே தெரியல" என்று கூறினார். இதைக் கேட்டு சிதம்பரம் சிரித்தார். "  தோ, பார். கணேசா நீ என்ன பாத்தது ஏதோ எதேச்சயா நடந்துதூன்னு  நெனைச்சுக்காத. எல்லாத்தையும்  பகவான் பிளான் போட்டு வச்சிருக்கான். அவன்தான் நான் உன்ன பாத்து அடையாளம் கண்டு பிடிக்கணும்னு நெனைச்சிருக்கான். அதேபோல  உன் பொண்ணுக்கு ஏற்பட்ட இந்த கஷ்டத்தை நிவர்த்தி பண்ணனும் அவன் தான் மனசுல நெனச்சிருக்கான். அதுக்கு என்ன ஒரு கருவியா பயன்படுத்தினான். நான் தான் உன் பொண்ண சரிப்படுத்தினேன்னு   நெனைச்சிண்டிருந்தா என்ன போல  முட்டாள் வேறு யாரும் கெடையாது" என்று கூறினார்.  சிதம்பரத்தை போன்ற ஒரு பரோபஹாரியை தனக்கு கணவனாக கொடுத்ததற்கு சாரதா மீண்டும் ஒருமுறை மனதிற்குள் கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

சிதம்பரம் அவர்களைப்பார்த்து "சீக்ரமேவ  விவாக பிராப்த்திரஸ்து" என்று ஆசீர்வதித்தார்.  சிதம்பரம், சாரதாவை  அழைத்துக் கொண்டு காந்திபுரம் பஸ் ஸ்டேண்ட்  சென்று கும்பகோணத்திற்கு  பஸ் பிடித்தார். 

அன்று மாலை கோவையில் இருந்து கிளம்பிய அனைவரும், இரவு பத்து மணிக்கு சென்னை  சென்ட்ரலை அடைந்தார்கள். அப்பொழுது ராஜா ராமன் கணேசனிடம் " இனிமே ஆத்துக்கு போய் என்ன பண்ண போறீங்க. வெறும தூங்கணும் ,அவ்வளவு தானே. பேசாம நம்பாத்துக்கு வந்துடுங்கோ. நாளைக்கு  ஜோசியரை பார்த்து கல்யாணத்துக்கு நாள் குறிக்கலாம்" என்றார். கணேசன் "அதெல்லாம் சரி.குறித்த நாளுக்கு  கல்யாண மண்டபம் கிடைக்க வேண்டாமா" என்று கேட்டார்.  இதைக் கேட்ட சுமதி "கவலைப்படாதீங்க மாமா. மண்டபம் கெடக்கலேன்னா கோவில்ல வெச்சு கல்யாணத்த முடிச்சிக்கலாம்.சிறிசுகள் ஏற்கனவே கஷ்டம் அனுபவிச்சூட்டா.சீக்ரம் அவா தம்பதிகளாகட்டும் " என்று கூறினாள். 

சென்ட்ரலில் இறங்கி  ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு எல்லோரும் ஜகனுடைய வேளச்சேரி வீட்டிற்கு விரைந்தார்கள் .

தன்வினை....-30 & 31

தன்வினை....-30

By N Krishnamurthy 

அன்று  மாலையே எல்லோரும் விடை பெற்றுக் கொள்வதாக தீர்மானித்தார்கள்.

கேசவதாஸ் அவர்களிடம் "பிரயாணத்திற்கு நாளைக்கு நாள் நண்ணாயிருக்கு. காலைல ப்ரக்பாஸ்ட் முடிச்சதும் புறப்படுங்கோ" என்றார்.

மாலை சிதம்பரத்தை தவிர மீதி அனைவரும் ஆற்றங்கரைக்கு கிளம்பி போனார்கள்.

கேசவதாஸ் சிதம்பரத்திடம்பேச வேண்டும் என்று சொன்னதால் அவர் போகவில்லை.

எல்லோரும் ஆற்றுக்கு கிளம்பிச் சென்றவுடன், கேசவதாஸ் சிதம்பரத்திடம் நான் "ஒண்ணு, ரெண்டு முக்கியமான விஷயங்களை உங்ககிட்ட பிரஸ்தாபிக்கலாம்னு தான் உங்களை இருக்க சொன்னேன்" என்றார். உடனே சிதம்பரம் "சொல்லுங்க கேட்டுக்கறேன்" என்று கூறினார்.

 உடனே கேசவதாஸ் "நான் சொல்ற விஷயங்களை நீங்க மனசுல வச்சிண்டிருந்தா போதும். அவாளுக்கு சொல்லணம்னு அவசியம் இல்லை" என்று கூறினார்.

"ஆஹா, அப்படியே ஆகட்டும்" என்றார் சிதம்பரம். கேசவதாஸ் அவரிடம் " இதை ஒரு ஆண் கேட்டுக் கொண்டதின் பேரில் ஒரு மாந்திரீகர். செஞ்சிருக்கார் . அந்த ஆண், இவா கூட ஒரு பையன் இருக்கானே,  இவா மாப்பிள்ளை, அவனுக்கு தாய் வழியில் சொந்தமா இருக்கலாம்னு தெரியறது" என்றவர் சிதம்பரத்திடம் "நிறைய கேரளத்து மாந்திரீகர்கள் இதுபோல செய்தவர்களுக்கு திருப்பி இந்த செய்வினையை ஏவி விட்டூடுவா.  ஆனா எங்க வம்சத்தில் நாங்க அதுபோல பண்றது இல்ல. அது பண்றதும்  ஒண்ணு தான், செய்வினை செய்யறதும் ஒண்ணு தான். செய்வினை செய்தவனும் சரி, செய்ய சொன்னவனும் சரி, பிற்காலத்தில் நசிச்சு  போயிடுவா. ஒரு வேடிக்கை என்னன்னா அவாளுக்கு ஒண்ணுமே ஆகாது . அவ ரொம்ப அதிகமா நேசிக்கிற அவ பரம்பரையில் இருக்கிற பேரனையோ, பேத்தியையோ  இது ரொம்ப படுத்தும். செய்வினை பண்ணவனையும்,பண்ண  சொன்னவனையும் இது ஒண்ணு பண்ணாது .ஆனா அவ ரொம்ப நேசிக்கிற அவ சொந்தக்காரா  மேல இது தன் வேலையை காட்டிடும். சில சமயம் அவ பரம்பரையே நாசமா போறதும் உண்டு " என்றார்.

இதைக் கேட்டு சிதம்பரம்"அப்படி பண்றவாளுக்கு பகவான் மன்னிப்பு கொடுக்க மாட்டானா" என்று கேட்டார். இதைக் கேட்ட கேசவ தாஸ் "பகவான் கருணாஸ்வரூபிதான்.  நம்ம பண்ற தப்பு எல்லாம் மன்னிப்பான். ஆனா இது மகா தப்பு. இதை மன்னிக்க  அவன் மனசுல இடமே இருக்காது. எப்பவாவது  ரேரா  யாருக்காவது கருணை காட்டுவான். ஒண்ணு , ரெண்டு வருஷம் அனுபவிச்சிட்டு அவா சரியாயிடுவா. அதுக்கு கூட பூர்வ ஜென்மத்தில் அவாளுக்கு அந்த பலன் இருக்கணும். மத்தபடி யாருக்கும் மன்னிப்பு தர மாட்டான்" என்றார் கேசவ தாஸ்

" எனக்கு ரொம்ப நாளா ஒரு சின்ன சந்தேகம்" என்றார் சிதம்பரம். "சொல்லுங்க, என்ன சம்சயம்" என்றார் கேசவ தாஸ்.

"  இந்த செய்வினையை எல்லார் மீதும் ஏவி விட முடியுமா" என்று கேட்டார் சிதம்பரம். அதைக் கேட்ட கேசவ தாஸ் கிட்டத்தட்ட 98% ஜனங்க மேலே இதை ஏவி விட முடியும். மீதி 2% பேர் இருக்காளே, அவ கிட்ட இதனுடைய பாச்சா பலிக்காது. அப்படிப்பட்டவா மகா யோகியா இருக்கணும். இதுபோல ஆபீசாரம்  ஏற்பட்டால் கூட உடனடியாக நிவர்த்தி பண்ணிக்க அவாளால முடியும் " என்று கூறினார்.

தன்வினை ....-31

"உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்னு நெனக்கறேன். நான் சொல்லப்போற விஷயத்த நான் காது வழியாத்தான் கேட்டிருக்கேன். இது உண்மையிலேயே நடந்துதான்னு நேக்கு தெரியாது" என ஆரம்பித்த கேசவதாஸ் தொடர்ந்தார்.

 "நீலகண்ட ஸ்வரூபமான காஞ்சி மஹா  பெரியவர் ஏதோ ஓர் ஊரில முகாம் பண்ணியிருந்தாளாம். அங்கு இருந்த ஒரு வம்பன் , ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது, மந்திரம் வைப்பது, பில்லி, சூனியம் என்று பணம் பண்ணுபவனுக்கு ஒரு விபரீத எண்ணம் வந்தது. பெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து, ‘நான் பெரியவனா, இல்லை அவரா, பாத்தடறேன்" என்று, "என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும், இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன்" என்றெல்லாம் ஆர்பரித்திருக்கிறான்.

பலர் எடுத்து சொல்லியும் அவன் கேட்பதாக  இல்லை.

அவன அன்னிக்கு திருத்தணும்னு பகவான் முடிவு பண்ணீட்டான் போல இருக்கு.

அன்று பெரியவர் பண்ற சந்த்ரமௌளீஸ்வரர் பூஜையை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தாளாம். இந்த ஆளும்  சென்று  கடைசியாய் இருந்துண்டு கையில் மையை வெச்சிண்டு என்னென்னவோ செய்தானாம். அங்கே அந்த பரப்ரம்மம் பூஜையில் ஒன்றி விட்டிருந்தார்.

பூஜை முடிந்தது. தீர்த்த  பிரசாத விநியோகம் நடந்தது. ஸ்வாமிகள் கை சொடுக்கி இவனை அழைத்தார் . இவனுக்கோ ஒரே ஆச்சிரியம். எப்படி இந்த  ஜனக்கூட்டத்தில்  நம்மை குறி வைத்து அழைக்கிறார் என்று. " யாரை வசியப்படுத்துவேன் என்றானோ, அவரிடமே வசியப்பட்டு, யாரை பொம்மை ஆக்குவேன் என்றானோ அவரிடமே பொம்மையென சென்றான், அமர்ந்தான்.

"பின்னாடி திரும்பி பார்’.என்றாராம் பெரியவா.

பின்னாடி திரும்பியவனுக்கு பிரமை பிடித்தது போலானது.பின்னால் இருந்த மொத்த அடியார் கூட்டமும், பெரியவராய் தெரிந்தது அவருக்கு. ஆம், *எங்கெங்கு காணினும் பெரியவா.

கதறி கதறி அழுதான் நம்ப ஆள். பெரியவா   காலில் விழுந்தான்.  மன்னிக்க கோரினான்.சரணாகதி பண்ணிணான்.

 பெரியவா சொன்னாராம் ‘சித்து பெரிய விஷயமே இல்லை. ஒருத்தர் கிட்ட கூட ஒனக்கு நல்ல பேரு இல்லே.  கெட்ட வழிலே இவ்வளவு பணம் பண்ணிருக்கே’ என்றாராம்.

‘அத்தனையும் விட்டுடறேன். பெரியவா கூட மடத்துக்கு வந்து சொச்ச காலத்தையாவது சேவகம் பண்ணி பாவத்தை  போக்கிகறேன்’ என்றான் அவன்.

‘இல்லே, இன்னும் நிறைய இருக்கு ஒனக்கு. பாவ வழிலே சம்பாதிச்சாலும் பணம் பணம் தான். அதனாலே அத்தன பணத்தையும் நல்ல வழிலே செலவு செய். நெறைய கல்யாணம் பண்ணி வை, ஏழை கொழந்தளை படிக்க வை, அம்பாளை சதா  ப்ரார்த்திச்சிண்டே இரு.

நீ இதுவரை பண்ணியிருக்க பாவத்தை நெனச்சு,நெனச்சு, வருந்தி, அதுக்கு பரிஹாரம் பண்ணு. எல்லோரோட க்ஷேமத்துக்காகவும் உழச்சயான்னா , நீயும் க்ஷேமமா இருப்பே’என்றாராம் அந்த கருணாமூர்த்தி.

'பார்த்த மாத்திரத்தில் பாவத்தை பொசுக்கற அந்த அக்னி, அப்படியே குளிர்ந்த நீரா அவனுக்கு சாதிச்சதாம்" என்று முடித்தார் கேசவதாஸ்.

சிதம்பரம் கண்ணில் நீர் பெருக " ஹர ஹர  சங்கர,சிவ சிவ சங்கர "என்று கூறி உள்ளம்நெகிழ்ந்தார்.

திருப்போரூர் ஸ்கந்தனின் பெருமை:

 திருப்போரூர் ஸ்கந்தனின் பெருமை:

"முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். 

திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணம்) அடக்கினார். 

திருப்பரங்குன்றத் தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். 

திருப்போரூரில் விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார்.

இதனால் திருப்போரூரில் கந்தசுவாமி என்ற பெயரில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. 

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோவில் உள்ளது.

இத்தலத்தில் தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் ஓம் எனும் பிரணவ மந்திர மலை மீது அமைந்து இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் கிழக்கு நோக்கியுள்ள இத்தலத்தில் முருகனை மனம் உருகி வழிபட்டால் முருகரின் அறுபடை வீடுகளையும் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

இத்தலத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் உள்ளார். இங்குள்ள முருகர் தன்னை சுயம்பு உருவாக வெளிப் படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்போரூருக்கு “யுத்தபுரி” என்றும் ஒரு பெயர் உண்டு. திருச்செந்தூரில் கடலோரத்திலும், திருப்பரங்குன்றத் தில் தரையிலும் அசுரர்களுடன் மோதி, சண்டையிட்டு வென்ற முருகன், இத்தலத்தில் அசுரர்களை விண்ணில் போர் புரிந்து அழித்தார்.

போர் நடந்த தலம் என்பதால் அந்த வரலாற்றுப் பின்னணியில் இந்த ஊர் “திருப்போரூர்” என்று அழைக்கப்படுகிறது. 

ஒருசமயம் விருத்தாசலத்தில் சிதம்பர சுவாமிகள் என்பவர் சமாதி நிலையில் தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரின் தவத்தில் முருகபெருமான் காட்சி தந்தார்.

திடுக்கிட்டு கண் திறந்து பார்த்த சிதம்பர சுவாமிகள், “இதற்கு என்ன காரணம்? கனவில் முருகப் பெருமான் வந்தாரே. தூக்கத்தில்தானே கனவு வரும். நாம் தியானம்தானே செய்தோம். அப்படியானால் என் மனம் முருகனை நினைத்து தியானிக்காமல் அமைதியாக உறங்கியதா?.” என்று மனதில் பல சந்தேக குழப்பங்கள் ஏற்பட்டது சிதம்பர சுவாமிகளுக்கு.

இதனால் மதுரைக்கு சென்று மீனாட்சியம்மனை வேண்டி 45 நாள் கடும் தவம் இருந்தார் சிதம்பர சுவாமிகள். அத்துடன் “கலிவெண்பா” பாடினார். இதை கேட்டு மகிழ்ந்து அவர் தவத்தை ஏற்று அன்னை மீனாட்சி காட்சி தந்து, “தேவையில்லாமல் மன குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம்.

முருகன் உன் தவத்தை ஏற்றுதான் உன் கனவில் காட்சி தந்தான். நீ திருப்போரூருக்கு செல். அங்குதான் அகத்திய முனிவர் முருகபெருமானிடம் ஞானோபதேசம் பெற்றார். அத்துடன் அலைமகள் அவ்விடத்தில் தவம் செய்து அவருக்கு இருந்த சாபத்தை நீங்கி திருமாலுடன் இணைந்தார்.

இவ்வாறான சிறப்பு வாய்ந்த இடத்தில் முருகனும் அவருடைய தேவிகளும் மண்ணுக்குள் மறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு கோவில் கட்ட இதற்கு முன்பு 6 தடவை முயற்சிகள் நடந்து தோல்வியில் முடிந்து விட்டது.

எனவே நீ அவர்களை பூமியில் இருந்து எடுத்து அந்த இடத்தில் கோயில் கட்டு” என்றாள் அன்னை மீனாட்சி. அன்னை அருளியதை போன்று சிதம்பர சுவாமிகள் உடனே திருப்போரூருக்கு திரும்பினார்.

அங்கு பல இடங்களில் முருகப் பெருமானின் சிலையை தேடினார். பனை மரகாடாக இருந்த அந்த ஊரில் அன்னை கூறியது போல் ஒரு இடத்தில் முருகபெருமானும் அவருடன் வள்ளி – தேவயானை சிலையாக தோன்றினார்கள். அந்த இடத்திலேயே ஆலயத்தை கட்டும் பணியை தொடங்க நினைத்தார்.

ஆனால் தன்னிடம் அத்தனை பணவசதி இல்லை. அப்படி இருக்கும் போது அன்னை மீனாட்சி தன்னிடம் இப்படி ஒரு திருப்பணிப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாரே என்று தவித்தார். அப்போது, திண்டிவனத்தை அடுத்து கிளியனூரிலிருந்து ஒர் அம்மையார், பொன் ஒன்றை எடுத்து வந்து, “சுவாமி நீங்கள் கோயில் கட்டுவதாக கேள்விபட்டேன்.

என்னுடைய சிறு காணிக்கை.” என்று கூறி சிதம்பர சுவாமிகளிடம தந்தார். மறுநாளே சென்னை பாளைத்தா செட்டியார் என்பவர் இரண்டு பை நிறைய தங்க நகைகளை திருப்பணிக்காக சுவாமிகளிடம் கொடுத்தார். இதுபோல் இறைவனின் சக்தியால் பலர் சிதம்பர சுவாமிகளுக்கு உதவ முன் வந்தார்கள்.

இதன் மூலம் சிதம்பர சுவாமிகள் கோவிலை கட்டி முடித்தார்.

பனை பாத்திரம் :

இத்தலத்தில் ஸ்ரீ சிதம்பர சுவாமிகளால் முருகன் சிலை கண்டறியப்பட்ட போது அது ஒரு பனை மரத்தில் செய்யப்பட்ட பாத்திரத்தால் மூடப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போது கோவில் அலுவலகத்தில் வைத்துள்ளனர். அட்சய பாத்திரத்தைப் போல இந்த பனை பாத்திரம் செல்வத்தை தருவதாக ஐதீகம். நைவேத்தியத்திற்கான அரிசியை இதில் தான் வைத்துள்ளனர்.

மருமகள்களுக்கு நவராத்திரி :

நவராத்திரி நாட்களில் வள்ளி, தெய்வானைக்கு ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்படும். சிவனைப்போல இங்கு ஐப்பசி பவுர்ணமியில் முருகனுக்கு அன்னா பிஷேகமும், சிவராத்திரியன்று இரவிலும் நான்கு கால பூஜையும் நடக்கிறது.

முருகன் உருவ அமைப்பு :

கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப் பட்டுள்ளன.

முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் விளங்குகிறார்.

அருள்பாலிக்கும் குக்குடாப்தஜர் :

மூலவர் சன்னதி பக்கவாட்டில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

 *பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியாதவர்கள், இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டினால், உடனே நிறை வேறும் எனவும், வெளி நாட்டில் உள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்கிறார்கள்.*

திருபூவனூர்_சதுரங்க_வல்லபநாதர்

 திருபூவனூர்_சதுரங்க_வல்லபநாதர் 🙏

சதுரங்கம்_தோற்றுவித்தவர்_சிவபெருமானே    சதுரங்க விளையாட்டு  தோன்றிய  நமது தமிழகத்திலேயே என்கிறது  புராணம்.  நம் பிரதமர் முன்பொருமுறை குறிப்பிட்ட திருப்புவனூர் சதுரங்க வல்லபநாதர் ஆலய தலவரலாற்றை இங்கே காண்போம்.  பிரதமர் கூறியதற்கு   ஆதாரமாகத் திகழ்கிறது திருபூவனூர்   திருத்தலம்.

        தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரையோரமாக அமைந்துள்ள 103 வது  திருத்தலமே  #பூவனூர். இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  சைவ  திருத்தலமாகும். நறுமணம் வீசும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் வனமாக இந்த ஊர் முற்காலத்தில்  இருந்ததால் இதற்கு ‘புஷ்பவனம்’ என்ற பெயர் ஏற்பட்டது.   பிற்காலத்தில் அது பூவனூர் என்றானது.

    இத்தலத்து  சிவபெருமானுக்கு ஶ்ரீசதுரங்க வல்லபநாதர் என்பது பெயர். உற்சவர்_ புஷ்பவனேஸ்வரர்   இங்கு  சிவபெருமானுடன் கற்பகவல்லி,  இராஜராஜேஸ்வரி ஆகிய இரு அம்பிகையர்  உண்டு.  இந்த ஆலயத்தில் அன்னை சாமுண்டீஸ்வரியும் கோயில் கொண்டுள்ளார்.

தலவிருட்சம் __ பலா

தீர்த்தம்__க்ஷீரபுஷ்கரிணி

        இத்தலத்தைப் பற்றி  அப்பபெருமான், தேவாரப் பதிகத்தில் __

"ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே"என்று போற்றிப் பாடியுள்ளார் . 

உமாபதி சிவாச்சாரியார் எழுதிய "திருப்பதிகக் கோவை" மற்றும் இராமலிங்க அடிகளார் இயற்றிய  #திருவருட்பா ஆகியவற்றிலும்  பூவனூர் தல மகிமை  கூறப்பட்டுள்ளது.

தலவரலாறு__

     வசுசேனன் என்ற மன்னருக்கு மகளாகத் தோன்றிய அம்பிகையை சதுரங்கப்போட்டியில் வெற்றி கொண்டு  சிவனார் மணந்தாராம். எனவே  இத்தலத்தில் சிவனாருக்குச் சதுரங்க வல்லபேசுவரர் என்ற திருநாமம்  ஏற்பட்டது.  

இங்கு அருளும் ஈசனுக்கு சதுரங்கவல்லபர் என்று திருநாமம் ஏற்பட்ட தலவரலாறு__

      முற்காலத்தில்  தென்பாண்டி நாட்டை வசுசேனன் என்னும் மன்னர்  ஆண்டுவந்தார். அவருக்கு  நீண்ட காலமாக வாரிசு இல்லை.  மன்னரும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்தப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த அன்னை  உமாதேவியார்,     அவர்களுக்கு அருளும்படி வேண்டினார். நம்மை  அனுதினமும்   பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாடவிடலாமா?  என பார்வதி தேவி, மகேஸ்வரனை வேண்ட,  அதற்குச் சிவபெருமானும்,   இநதப் பிறவியில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது விதி. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து, அவர்களுடைய குழந்தையாக வளர்ந்து வா. உரிய நேரத்தில்  நான்  வந்து உன்னை மணப்பேன்!  என்றார்.

      வசுசேனரும் காந்திமதியும்,  வாரிசு  வேண்டி ஒவ்வொரு சிவாலயங்களாக வழிபட்டு வந்தார்கள் .  ஒருநாள்  அவர்கள்  தாமிரபரணி ஆற்றில் நீராடும் போது, தாமரை மலரின் மீது  ஒரு அழகிய சங்கு  இருப்பதைக் கண்டு, அதையெடுக்க,   அது  ஓர் அழகிய பெண் குழந்தையாக மாறியது.  இது  அந்தச் சிவனாரே  தங்களுக்கு அனுப்பிய குழந்தை; இது உமா தேவியின் அவதாரம்!  என எண்ணி அக் குழந்தைக்கு  #இராஜராஜேஸ்வரி  என்று பெயரிட்டு பேரன்புடன் வளர்த்து வந்தனர்

            .சக்தியே குழந்தை வடிவாக பூமியில் இருப்பதால், குழந்தையை கவனிப்பததற்கென சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டிதேவியையும் பூமிக்கு அனுப்பினார் சிவபெருமான்.  . குழந்தையின் வளர்ப்புத்தாயாக உருவெடுத்து வந்த சாமுண்டீஸ்வரி, ஆய கலைகள் அனைத்தையும் குழந்தை இராஜராஜேஸ்வரிக்குக் கற்றுக்கொடுத்தாள். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தள் இளவரசி   இராஜராஜேஸ்வரி   ஆனால் சநாதனதர்மம் ( =இந்து சமயம்) கூறும் 64 ஆயக்கலைகளில் சதுரங்க விளையாட்டில் தன்னிகரற்று விளங்கினாள் அம்பிகை_இராஜராஜேஸ்வரி.

       இளவரசி  திருமண வயதை எட்டியபோது, "என் மகளை சதுரங்க விளையாட்டில் யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே அவளை மணம் முடித்துத் தருவேன்" என்று  முரசறைந்து தெரிவித்தார்    #மன்னர்_வசுசேனர்.பல நாட்டு இளவரசர்களும் போட்டிக்கு  வந்தபோதிலும், யாராலும்  இராஜராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை.  அனைவரும் தோற்றுப் போய்விட, வருந்திய மன்னர்,   தனது அறிவிப்பினாலேயே  தன் மகளுக்கு திருமணமாகாதோ ? என்று கவலையடைந்து சிவபெருமானே இதற்கு ஒரு வழியைக்  கூற வேண்டுமென வேண்டினாராம் .

          தன் குடும்பத்தோடு காவிரியின் தென்கரையிலுள்ள சிவாலயங்களையெல்லாம்   தரிசிக்க தல யாத்திரை கிளம்பினார் மன்னர். பல சிவாலயங்களைத் தரிசித்தப்  பின்னர் *திருபூவனூர் வந்தனர். புஷ்பவன நாதரைத் தரிசித்து, தன் மனக்குறையை,  சிவபெருமானிடம் முறையிட்டு,  புலம்பி விட்டு அங்கேயே சிறிது காலம் குடும்பத்துடன் தங்கினார் மன்னர். 

        மறுநாள் காலையில், ஒரு  வயோதிகர்  மன்னரைச் சந்தித்து, ‘‘என்னுடன் உங்கள் மகளால் சதுரங்கம் ஆடமுடியுமா?’’ என்று கேட்டக. அரசனும்  சம்மதிக்க,  சதுரங்க ஆட்டம் இராஜராஜேஸ்வரி யுடன்  தொடங்கியது. அதுவரை சதுரங்கத்தில் தோல்வியே கண்டிராத  இளவரசி இராஜராஜேஸ்வரி, அந்த முதியவரிடம் சதுரங்கத்தில்  தோற்றுவிட்டாள்.

       இந்நிலையில் மன்னருக்கு தனது அறிவிப்பு நினைவுக்கு வந்தது.  என் மகளை சதுரங்க ஆட்டத்தில் வெல்பவர்களுக்கு அவளை மணம் புரிந்து தருவேன்!   என்று கூறினோமே ?  இப்பொழுது எப்படி இந்த வயதானவருக்கு  தன்னருமை மகளை  மணம் முடித்துக் கொடுப்பது?  என்று பெரும் கவலையுடன் சிவபெருமானை நோக்கி மன்றாடினார்  மன்னர்.

      மறுகணமே   அங்கே முதியவர் மறைந்து செம்மேனி முக்கண்ணனான சிவபெருமானாக  இளமையோடு காட்சியளித்தார்.  உடனே மன்னரும் அவர் மனைவி காந்திமதியும் மகிழ்ந்து சிவபெருமானை   வணங்கித்  தன் மகள் அம்பிகையின் அவதாரம்!  என்றுணர்ந்து அம்பிகையைச்  சிவபெருமானுக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.

           சதுரங்க ஆட்டத்தில் வென்று,  இராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் இங்குள்ள இறைவனுக்கு அது முதல் ஏற்பட்டது.(#சதுரங்க_வல்லீஸ்வரர் என்றும் கூறுவர்).   அன்னை  இராஜராஜேஸ்வரிக்கு  வளர்ப்புத் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கும் தனியே  சந்நிதி உண்டு. இங்கே சாமுண்டீஸ்வரி தேவி மிகவும் சக்தி உடையவராக விளங்குகிறார் .

        சதுரங்க விளையாட்டில் நல்ல தேர்ச்சியடைய  விரும்புவோர்  திருபூவனூர்  வந்து சதுரங்க வல்லப நாதரை வேண்டி வணங்கினால்   சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்கலாம் என்பது  ஐதீகம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானது  திருபூவனூர்_ஆலயம். 

         ஆஸ்துமா தொந்தரவு,  பூச்சிக்கடி, விஷக்கடி,பிற  விலங்குகள் கடித்த விஷம்   போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. கோயிலின் அகன்ற திறந்தவெளிப் பிராகாரத்தில், அருள்மிகு #கற்பகவல்லி_அம்பாளும் அருள்மிகு #இராஜராஜேஸ்வரி_அம்பாளும் தெற்கு நோக்கி அருள்கிறார்கள். அதே பிராகாரத்தில், தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது.  இங்கு கோயில் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி, மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லாக் கோயில்களிலும் சப்தமாதாக்களுள் ஒருவராக இருக்கும் சாமுண்டி, இங்கே தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறாள்.

          மைசூருக்கு அடுத்தபடியாக, சாமுண்டீஸ்வரிக்கென தனிச் சந்நிதி அமைந்திருப்பது பூவனூரில் மட்டும்தான். விஷ ஜந்துக்களின் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து பலனடைகின்றனர்.  ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் இருக்கும் ஒரு வைத்தியர், எலிக்கடி மற்றும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு, மந்திரிக்கப்பட்ட ஒரு மூலிகை வேரைக் கையில் கட்டிவிடுகிறார். 

               அதற்கு முன்பாக பக்தர்கள் #க்ஷீரபுஷ்கரணியில் நீராடி,  சாமுண்டீஸ்வரி சந்நிதிக்கு வந்து, வைத்தியர் கொடுக்கும் மூலிகை வேரைக் கையில் கட்டிக்கொண்டு, சாமுண்டிக்கு அர்ச்சனை செய்யகிறார்கள். அதன் பிறகு வைத்தியர் கொடுக்கும் மந்திரித்த மிளகை வாங்கி  உண்கிறார்கள். அதன் மூலம் அவர்களுடைய உடலில் இருக்கும் விஷம் முழுவதுமாக குணமாகிவிடுகிறது  என்பதற்கு இங்கு கூடும் பக்தர்களே சாட்சி 

            பிரபஞ்சத்திற்கே நாயகியான அம்பிகைக்கு வளர்ப்புத் தாயாக விளங்கியவள் அல்லவா இந்தச்  #சாமுண்டீஸ்வரி.   எனவே அவரை வணங்கி மந்திரித்த மூலிகைவேரைக் கையில் கட்டிக்கொண்டு மந்திரித்த மிளகை உண்டு பக்தியோடு சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கிவர, அனைத்து விஷகடிகளும் முறிந்து, அனைத்து   நோய்கள் விலகி பக்தரகள் நலமோடு திரும்பிச் செல்கின்றனர். 

         முதன்முதலில்  இவ்வுலகிற்கே #சதுரங்க_ஆட்டம் என்றொரு  விளையாட்டுக் கலையை தோற்றுவித்தவர்  நம்  #தென்னாடுடைய_சிவபெருமானே. அதை அம்பிகையோடு அவர் விளையாடி #சதுரங்கவல்லபநாதர்    என்ற திருநாமத்தையும் பெற்று,  இங்கே விளங்குகிறார் ஈஸ்வரனார். எனவே அனைத்து கலைகளிலும் வெற்றி அடைய  நாம்  இந்தச் சிவபெருமானை  வேண்டி வழிபடுவது அவசியம்.

  சதுரங்கத்தின்_பூர்வீகம்_திருபூவனூர்_ஆன்மிகப்பூமியாம்_நமது_புனிதமான_தமிழகம்

 சதுரங்கவல்லப_நாதரே_போற்றி 🙏 #இராஜராஜேஸ்வரியே_போற்றி 🙏#சாமுண்டீஸ்வரியே_போற்றி 🙏

தன்வினை....-28 & 29

தன்வினை....-28

By N Krishnamurthy 

அதற்கு ஒரு வாரம் கழித்து சிதம்பரம் வந்திருந்தார். அவரும் இரண்டு நாட்கள் இருந்து விட்டு சென்றார்.

கிட்டத்தட்ட முப்பது நாட்கள் பூஜை முடிந்தது. வினயாவின் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. முன்பு மாதிரி பூஜையின் போது எழுந்து செல்ல முயற்சிப்பதில்லை. முன்னம் மாதிரி அதிகம் கத்துவதும் இல்லை . ஆனால் மிகவும் சோர்வாக இருந்தாள். 

பூஜை நாற்பதாவது நாள் நடக்கும் பொழுது ஜகனும், சிதம்பரமும் சேர்ந்தே வந்திருந்தார்கள். ஜகனுக்கு வினயாவை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவள் மிகத் தெளிவாக இருந்தாள். அன்று மாலை கேசவ தாஸ் கணேசன், ஜகன், சிதம்பரம் மற்றும் விமலாவை கூப்பிட்டு அனுப்பினார். வினயா ரூமில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். அப்பொழுது கேசவதாஸ் அவர்களிடம் "பொண்ணு எப்படி இருக்கா" என்று கேட்டார். இதைக் கேட்ட விமலா "ரொம்ப நல்ல குணம் தெரியறது. அனேகமா முற்றிலும் சரியா போய்ட்டான்னு நெனைக்கிறேன்" என்றாள்.  அதற்கு கேசவ தாஸ் " அதே. பொதுவாக இதுபோல கேஸ்களில் 42 ஆவது நாளில்  பரிபூரண குணம் ஆகிவிடும். மீதி ஆறு நாட்கள் அவர்கள் பூஜையில் மிகுந்த ச்ரத்தையுடன் பங்கு கொள்வார்கள்" என்று கூறினார். சிதம்பரம் அவரிடம்"  48ம்  நாள் பூஜை முடிந்த உடனே நாங்கள் இவளை சென்னைக்கு அழைத்துக் கொண்டு சென்று விடலாமா" என்று கேட்டார். "தாராளமாக சென்றுவிடலாம். போகும் போது ஒரு முறை சோட்டானிக்கரா  பகவதி அம்மன், திருசூர் வடக்குநாதர் , குருவாயூர் கிருஷ்ணன் ஆகிய தெய்வங்களை  தரிசனம் பண்ணீட்டு போங்கோ. இதுவரை நீங்கள் கொடுத்த எண்பதாயிரம் போதும். மேல் கொண்டு நீங்கள் ஒன்றும் எனக்கு தர வேண்டாம்"என்று கூறினார்.

அன்று மாலை வினயா  கண் விழித்ததும் ஜகனைப் பார்த்து "கொஞ்சம் வாக்கிங் போயிட்டு வரலாமா" என்று கேட்டாள். ஜகன் மிக சந்தோஷமாக "தாராளமாக போய்ட்டு வரலாம்"  என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த ஆற்றங்கரை பக்கம் போய் சேர்ந்தான். 

ஆற்றங்கரையில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது . அதற்கடியில் கருங்கல்லாலான பெரிய மேடை இருந்தது. அதன் மேல் இருவரும் அமர்ந்து கொண்டார்கள். 

ஆற்றின் நீர் மேல் தவழ்ந்து வந்த தென்றல்,இவர்கள் இருவரையும்  ஜில்லென வருடிக் கொடுத்தது. வினயா அவனிடம் " இப்பல்லாம் நான் ரொம்ப ரிப்ரெஷிங்கா பீல் பண்றேன். மனசுல, இந்த ஆத்துல அடிக்கிற அலை மாதிரி சந்தோஷம் அலை பாயறது . இப்பல்லாம் தூக்க மாத்ரை இல்லாமலே நண்ணா தூங்கறேன். நேத்து தான் அப்பா, அம்மா கிட்ட பேசினேன். எனக்கு என்ன ஆச்சுன்னு சொன்னா. அவா சொன்னத கேக்கும் போது எனக்கு ஆச்சரியமா இருந்தது. யார் எனக்கு இப்படி செஞ்சிருக்க முடியும்னு நேக்கு தோணவே இல்லை. இதை  எல்லாம் விட ரொம்ப முக்கியமான விஷயம். ஒரு சராசரி ஆண் பிள்ளையா இருந்தா, நிச்சயமான ஒரு பெண்ணிற்கு இதுபோல ஆனவுடன் எப்படிடா தப்பிச்சிண்டு போகலாம்னு தான் யோசித்து இருப்பான்.  ஆனா நீங்க ஒரு சாதாரண ஆண்  இல்ல. என்னை எந்த சமயத்திலும் கைவிடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் எனக்கு உடம்பு சரியாக இவ்வளவு தூரம் உழைச்சு இருக்கீங்க. இதுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. நமக்குள்ள இருக்கிற பந்தம் பூர்வ ஜென்மத்திலேந்து  தொடரர்தூன்னு  நேக்கு தோணறது "என்றாள் உணர்ச்சி பெருக்குடன்.  ஜகன் " என்னைக்கு நீ ஆபீஸ்ல முதல்ல நுழஞ்சயோ அன்னைக்கே நீ என் மனசுல நொழஞ்சூட்ட. நீதான் என் மனைவீன்னு தீர்மானிச்சூட்டேன். அதன் பிறகு நடந்ததெல்லாம் என்னை பொறுத்தவரை தேவையில்லாதது என்று நினைக்கிறேன். நீ பரிபூரணமாக குணமாயிட்டத பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு.மெட்ராஸ்  போனதும் கூடிய சீக்கிரம் ஒரு நல்ல முகூர்த்த நாளாக பார்த்து, நாம் இருவரும் மணவாழ்க்கையில் அடி எடுத்து வைக்கணம்" என்று கூறி அவள் கைகளை பற்றினான்.

அவள், அவன் ஸ்பர்சம் பட்டதும், நாணத்தில் முகம் சிவந்தாள்.

தன்வினை....-29

வினயா " அப்பா மட்டும் இந்த சிதம்பரம் மாமாவ பாக்கலேன்னோ என்ன ஆயிருக்கும்னு நெனச்சாலே பயமாயிருக்கு" என்றாள். 

அதற்கு ஜகன் "சிதம்பரம் சாரை போல ஒரு பரோபகாரியை நான் பாத்ததே இல்லை. நேக்கும், உன்ன பெத்தவாளுக்கும் உன்ன சரி பண்ணறதுல ஒரு வெஸ்டட் இண்டரஸ்ட் இருக்கூன்னு வெச்சிகலாம். சம்மந்தமே இல்லாத சிதம்பரம் சார் நமக்கு பண்ணியிருக்கு உதவிக்கு நம்ப வாழ்நாள் பூரா கடமை பட்டிருக்கணம்.

நமக்கு பொறக்கற முதல் கொழந்தைக்கு சிதம்பரம்னு பேர் வெக்கணம். அவன் பேர சொல்லி கூப்பிடும்போதெல்லாம் நமக்கு சிதம்பரம் சார் செஞ்ச பெரும் உதவி ஞாபகம் வந்துண்டே இருக்கணம் "என்றான். 

வினயா வெட்கத்தை முகத்தில் கூட்டி, "அப்போ ரெண்டாவது கொழந்த பொண்ணா பொறக்கணமா" என்றாள்."உனக்கு அதுவே ஆசைன்னா நேக்கும் ஓ.கே தான் " என்று சொல்லி ஜகன் சிரித்தான்.

இருவரும் இப்படி சந்தோஷமா பேசிக்கொண்டே  திரும்ப அக்ரஹாரத்தில் உள்ள கேசவதாசின் வீட்டிற்கு திரும்பினார்கள்.

நாற்பதாவது நாள் பூஜையில் கலந்து கொண்ட ஜகனும், சிதம்பரமும் மறுநாள் கிளம்பி கோயம்புத்தூர் சென்று, அங்கிருந்து ஜகன்  மெட்ராஸுக்கும், சிதம்பரம் கும்பகோணத்துக்கும் சென்றார்கள். திருசூரிலிருந்து கோயம்புத்தூருக்கு பஸ்சில் செல்லும் பொழுது" சார் 48வது நாள் பூஜைக்கு நான் வருவதாக  இருக்கிறேன். நீங்களும் வரீங்களா"என்று கேட்டான். அதை  கேட்ட சிதம்பரம் "அடேடே.நானும் அதே மாதிரி தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

"47 வது நாள் காலை டே எக்ஸ்பிரஸ் பிடித்து மதியம் ரெண்டு மணிக்கு நான் கோயம்புத்தூர் வந்து விடுகிறேன். அந்த சமயத்தில் நீங்களும்  கோயம்புத்தூர் வந்துவிட்டால் நாம் இருவரும் அங்கிருந்து பஸ் பிடித்து  இரவுக்குள் பெருவனம் சென்று விடலாம்" என்று கூறினான். "சரி" என்று  சம்மதித்தார் சிதம்பரம். 

47 வது நாள் மதியம் ஜகன் மற்றும் ராஜா ராமன், சுமதி ஆகிய மூவரும் கோயம்புத்தூர் வந்து இறங்கினார்கள். ஸ்டேஷனில் சிதம்பரம் காத்துக் கொண்டிருந்தார். சிதம்பரத்தின் அருகில் ஒரு கண்ணியம் மிக்க, அழகிய பெண்மணி நிற்பதை கண்ட ஜகன் "சார். இது ... "என்று கேட்டான். "இதுதாம்ப்பா என் சகதர்மிணி சாரதா" என்று தன் மனைவியை ஜகனுக்கும், அவன்பெற்றோர்களுக்கும்  அறிமுகப்படுத்தினார் அவர். பின்பு ஜகன் தன்னுடைய பெற்றோர்களை சிதம்பரத்துக்கும், சாரதாவுக்கும் அறிமுகப்படுத்தினான். 

எல்லோரும் ஸ்டேஷன் எதிர்புற சந்தில் இருந்த கீதா ஹோட்டலுக்கு போய் வயிறார உண்ட பின்னர்,உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்கு ஆட்டோ பிடித்தார்கள். அங்கு அரை மணி நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டி இருந்தது. பின்னர் வந்த திருசூர் பஸ்ஸில் ஏறி மாலை 5:30 மணிக்கு திருசூரை அடந்தார்கள். ஜகன் அப்பொழுது சிதம்பரத்திடம் "சார் இங்க இருந்து பஸ் பிடிச்சு பெருவனம் போக வேண்டாம். ஒரு டாக்சி பிடிச்சுண்டு போயிடலாம்" என்றான். "சரி, ஜகன் .நீ என்ன சொல்றயோ அப்படியே செய்வோம்" என்றார் சிதம்பரம். டாக்சி பிடித்து அவர்கள் அவர்கள் நால்வரும் பெருவனம் போய் சேரும் போது இரவு மணி 8 ஆனது. இவர்களை பார்த்து "வாங்க" என்று வரவேற்ற கேசவதாஸ்"முதல்ல போய் சாப்டூட்டு வாங்க" என்றார். இலையின் முன் அமர்ந்ததும்,  அருமையான அரிசி உப்புமாவும், கத்திரிக்காய் கொத்சும் பரிமாறப்பட்டது. அன்று இரவு அவர்களுக்கு இரண்டு எக்ஸ்ட்ரா ரூம்களை கேசவதாஸ் அரேஞ்ச் பண்ணி இருந்தார். 

ராஜா ராமனையும், சுமதியையும் எதிர்பார்க்காத வினயா அவர்களை பார்த்தவுடன் "வாங்கோ" என்று கூறி, அவர்களுக்கு நமஸ்காரம் செய்தாள். "நல்லபடியா இரும்மா" என்றார் ராஜாராமன். சுமதி அவளை அணைத்துக்கொண்டாள். ராஜாராமனும், சுமதியும் , வினயாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவள் எப்படி இருந்தாள் என்று தெரியாததால், இப்போது அவளைப் பார்க்கும்போது அவர்களுக்கு ஒன்றும் வித்தியாசமே தெரியவில்லை. சிதம்பரம், சாரதாவை கணேசன்,விமலா, வினயாவிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் எல்லோரிடமும் " நான் கொஞ்சம் பூசின  மாதிரி இருக்கிறத்துக்கு  காரணம் சாரதா பண்ணி  போடுற சமையல் தான். நேக்கு கொஞ்சம் நாக்கு நீளம். சாரதா சாப்பாட்ட, சாப்ட்டு சாப்ட்டு  நான் இப்படி ஆய்ட்டேன்  " என்று கூறி சிரித்தார். இதைக் கேட்டு சாரதா உட்பட அனைவரும் சிரித்தார்கள்.சாரதா அவர்களிடம்  "எந்த சூழ்நிலையிலும் எதாவது ஜோக்கடித்து சுற்றி இருப்பவர்கள் மூடை லைட்டாக்குவதுதான் இவர் பலமும், பலவீனமும்" என்றாள்.

மறுநாள் 48வது நாள் பூஜை மிகப் பிரமாதமாக நடந்தது. ஹோமம் முடிந்து பூர்ணாஹுதி ஹோமாக்னியில் இடப்பட்டது. எழுந்த அக்னி ஜ்வாலையில் பகவதியின் ரூபம் தெரிந்தது. சிதம்பரமும் மற்றவர்களும் அம்மனை கண்டு பரவசமடைந்தனர். கேசவதாஸ் பெருங்குரலில் "அம்மே.பகவதி"என்று கூறி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தவர்,பின் மூர்ச்சையானார். இதை ப்பார்த்த  எல்லோரும் கவலை அடைந்தனர். அர்ஜுன் அவர்களிடம் "விசனிக்க வேண்டாம். தாஸ் சேட்டனுக்கு அம்மன் ரூபத்தை நோக்கினதும் இங்ஙனமே  சம்பவிக்கும். அஞ்சு நிமிஷத்தில் சரியாயிடும்"என்றான்.

கொஞ்ச நேரத்தில் கண்விழித்த கேசவதாஸ் விமலாவை பார்த்து பூஜையில் வைத்திருந்த இரண்டு குடங்களை காட்டி "இதை கொண்டு போய் உங்க பொண்ணுக்கு அபிஷேகம் பண்ணி மாத்து ட்ரெஸ் போட்டு அழச்சிண்டு வாங்கோ "என்றார். விமாலா பத்து நிமிடத்தில் வினயாவை அழைத்து வந்தாள். குங்குமத்தை கொடுத்து வினயாவை இட்டுக்கொள்ள சொன்ன கேசவதாஸ் அவள் மணிக்கட்டில் மந்தரித்த பகவதி அம்மன் படம் போட்ட டாலரை கட்டினார். பின்னர் அவளைப்பார்த்து அவர் "நீ ஈலோகத்தில் ஜீவத்திருக்கிற நாள் பர்யந்தம் எந்த துர்சக்தியும் உன்ன அணுகாது. இதுக்கு நான் கேரண்டி" என்றார்.

சிதம்பரத்திற்கு கேசவதாசின் குரலே வித்யாசமாக பட்டது.

தன்வினை....-27

 தன்வினை....-27

By N Krishnamurthy 

மறு நாள் காலை பிரேக்பாஸ் முடித்துக் கொண்ட பிறகு பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால், சிதம்பரமும், ஜகனும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு திருசூருக்கு பஸ் பிடிக்க கிளம்பிச் சென்றார்கள். 

கிளம்புவதற்கு முன் சிதம்பரம் கேசவதாசிடம் "வினயாவுக்கு தூக்க மாத்திரை கொடுத்திண்டிருக்கு.அதை தொடரணமா,நிறுத்தூடலாமா "என்று கேட்டார்.

அதற்கு கேசவதாஸ் "தோ பாருங்கோ. பல காரணங்களால மனக்லேசம் ஏற்படறது. சிலபேர் தங்க கஷ்டத்தை வெளியிலே சொல்லாம, மனசுலே போட்டு வெச்சிண்டு மருகிண்டிருப்பா.நாளாவட்டத்ல மனசு கொழம்பி போய், மன சிதைவு உண்டாகறது.

சிலருக்கு செய் வினையால இப்படி ஆறது. பாத்திரத்து தண்ணீல அடீல கலங்கியிருந்தா நம்ப என்ன பண்றோம்? படிகாரத்தை தண்ணீல சேக்கறோம். தண்ணி தெளிவாயிடறது.

அது போல கொழம்பி இருக்கற மனசு தெளிவடைய தூக்க மாத்ரை அவசியம் போட்டுக்கணம். நான் செய்யற பூஜைல இந்தபொண்ணுக்கு கொஞ்சம்,கொஞ்சமா குணமாகும் போது மாத்திரையின் அளவையும்,மாத்திரை போட்டுக்கும் காலத்தையும் கொறச்சுகலாம். முழுசும் குணமான பிற்பாடு ஈஸ்வர த்யானம்ற மகா ஔஷதம் தான் உதவும். நானே மாத்திரையை எப்ப கொறைக்கணம்னு சொல்றேன்" என்றார்.

அந்த இடத்தை விட்டு கிளம்பு முன் சிதம்பரம், தூக்க மாத்திரை பற்றி கேசவதாஸ் சொன்ன விளக்கத்தை கணேசனுக்கு சொன்னார்.

கிட்டத்தட்ட 10 நாட்கள் ரொட்டீனாக பூஜை போய்க்கொண்டிருந்தது. கணேசனுக்கும், விமலாவிற்கும் வினயாவுக்கு  கொஞ்சம் குணம் இருப்பது மாதிரி  தெரிந்தது. 

பதினைந்து  நாட்கள் போனதும் ஜகன் வந்திருந்து இரண்டு நாட்கள் இருந்து விட்டு சென்றான்.அவனும் வினயா உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக உணர்ந்தான்.

தினமும் காலையிலும், மாலையிலும் கணேசன் தவறாமல் சுப்ரமண்ய மாலா மந்திரத்தை ஒதிக்கொண்டிருந்தார்.

சில நாட்கள் ஆனதும்,கணேசனும், விமலாவும், மாலையில் அங்குள்ள மகாதேவர் கோவிலுக்கு வினயாவை அழைத்துச்சென்றனர்.

துணைக்கு அந்த இரண்டு பெண்களும் வந்தாலும், அவர்களுக்கு வேலை தராமல் இருந்தாள் வினயா.

அங்கிருந்த குருக்கள் இவர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்திருப்பதை அறிந்ததும், உற்சாகமாகி, தனக்கு தெரிந்த தமிழில் "பரசுராமர் உண்டு பண்ண அறுபத்தி நாலு கிராமங்கள்ல பெருவனத்துக்கு முக்ய இடம் இருக்கு.

ஹஸ்தினாபுரத்த ஆண்ட *யயாதி* ராஜாவின் குமாரரான   *பூரு மகரிஷி* இந்த அம்பலத்த  கட்டினாராம். ஆதில இந்த ஊருக்கு பூருவனம்தான் பேரு. நாளாவட்டத்ல பெருவனும்னு ஆய்ட்த்து.

இங்க சிவனுக்கு ரெண்டு சன்னதிகள் இருக்கு. வடவண்ட இருக்றது ரெட்டயப்பன் சன்னதி.ரெட்டயப்பன் சன்னதில ரெண்டு சிவ லிங்கங்கள் இருக்கு. 

தென்னண்ட இருக்றதுமாததிலப்பன் சன்னதி. இத தவிர பக்கத்ல பத்ரகாளி,சுப்ரமண்யர் கோவில்களும் உண்டு.

இங்க இருக்கற சிவன் மகா சக்தி வாஞ்சவர். அவர நண்ணா வேண்டிக்கோங்கோ.கர்ம வினையெல்லாம் அழிஞ்சு போய்விடும்  "என்றார்.

வினயாவிற்கு மனம் கொஞ்சம் கொஞ்சமாக  தெளிய ஆரம்பித்தது. 

தூக்க மாத்திரை தினம்  இரண்டு வேளை கொடுத்துக்கொண்டிருந்தவர்கள், கேசவதாஸ் சொன்னபடி, இப்போதெல்லாம் இரவு மாத்திரம், அதுவும், அரை மாத்திரை மட்டும் கொடுத்தார்கள்.