Friday, November 15, 2024

5 வகையான தோசை

 5 வகையான தோசை

1. தக்காளி தோசை

தேவையானவை: 

பச்சரிசி - ஒன்றே கால் கப், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், தக்காளி - 4, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - பாதி சுண்டைக்காய் அளவு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்). தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு, பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும். பின்னர் உப்பு சேர்த்து, அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.

கலர்ஃபுல்லாக கண்ணைப் பறிக்கும் இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்.

வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

2.ஆலு வெந்தயக்கீரை தோசை

தேவையானவை: தோசைக்கான மாவுக்கு: இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 1 கப், உளுத்தம்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. உருளைக்கிழங்கு மசாலுக்கு: சின்ன உருளைக்கிழங்கு - கால் கிலோ, தக்காளி - 1, வெங்காயத் தாள் - 1 செடி, பெரிய வெங்காயம் - 1, வெந்தயக்கீரை - 1 கட்டு, மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், தூள் உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 6 டீஸ்பூன், வெண்ணெய் - 1 பாக்கெட்.

செய்முறை: இட்லி அரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித்தனியே ஊற வைத்து (2 மணி நேரம்), பின் நன்றாக ஆட்டவும். உப்பு சேர்த்து முதல் நாள் மாலையே கலக்கிவைக்கவும் (12 மணி நேரமாவது புளிக்க வேண்டும்).

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நான்காகவோ அல்லது எட்டாகவோ நறுக்கவும். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியையும் வெங்காயத் தாளையும் பொடியாக நறுக்கவும். வெந்தயக் கீரையில் இலைகளை எடுத்து அலசி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயத்தாள், கீரை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதோடு தூள் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வெந்ததும், சற்று சேர்ந்தாற்போல் இருக்கும்போது (வறண்ட பொரியல் மாதிரி இல்லாமல்) இறக்கவும். இதுதான் ஆலு மசாலா.

பின்னர் தோசைக்கல்லை காயவைத்து அதில் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி மூடி, வெந்ததும் அதன் மேல் சிறிது வெண்ணெயை எடுத்து ஸ்பூனால் தடவி, ஆலு மசாலாவை ஒரு பாதியில் வைத்து மறு பாதி தோசையை அதன்மேல் மடக்கி இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

வெந்தயக்கீரையும் வெங்காயத்தாளும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்குமான சத்தான உணவு இது.

3.மசால் தோசை

தேவையானவை: தோசை மாவு - 2 கப் (மசால் செய்ய) பெரிய உருளைக்கிழங்கு - 3, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், சோம்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 கப்.

துவையலுக்கு: தேங்காய் துருவல் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, உப்பு, இஞ்சி - ஒரு சுண்டைக்காய் அளவு, பூண்டு - 2 பல்.

செய்முறை: ஆலு வெந்தயக்கீரை தோசைக்கு சொன்ன மாதிரியே, தோசை மாவு தயார்செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையைப் பொடி செய்யவும். அடுத்ததாக, மசாலாவுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிது கட்டியும் தூளுமாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, 1 சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். பின் உப்பு சேர்க்கவும். வெங்காயம் வெந்ததும், உதிர்த்த கிழங்கையும் சேர்த்து கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.

துவையலுக்கு கூறியுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக ஊற்றி எண்ணெயை சுற்றிவர ஊற்றி மூடிவிடவும். தோசை வெந்ததும், அடுப்பை குறைந்த தணலில் வைத்து, ஸ்பூனால் துவையலை எடுத்து தோசை மேல் தடவவும். பின் பொட்டுக்கடலை மாவை தூவி, அதன் மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து மறு பாதி தோசையை மடக்கவும். சூடாக எடுத்து பரிமாறவும். சாப்பிட்ட எல்லோரும் ‘ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.

4.கோதுமை தோசை

தேவையானவை: கோதுமை மாவு - 1 கப், வெள்ளை ரவை - 4 டீஸ்பூன், பச்சரிசி மாவு - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - 4, கேரட் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், கெட்டி மோர் - கால் டம்ளர்.

செய்முறை: ரவையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். வெங்காயத்தையும் மல்லித்தழையையும் பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை கழுவி, துருவிக்கொள்ளவும். கோதுமை மாவு, உப்பு, சீரகம், பச்சரிசி மாவு, ஊறிய ரவை, மோர் மற்றும் தண்ணீர் சேர்த்து சாதா தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து கலக்கவும். சூடாக இருக்கும் தோசைக்கல்லில், ஒரு கிண்ணத்தால் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையை ஊற்றி அதன் மேல் துருவிய கேரட்டை தூவவும். கரண்டியால் அதை அழுத்திவிட்டு சுற்றி வர எண்ணெய் விட்டு மூடி, வெந்ததும் தோசையை திருப்பி மறுபுறம் எண்ணெய் விட்டு மொறுமொறுவென வெந்ததும் எடுத்து விடவும். இதற்கு வரமிளகாய், பூண்டு சட்னி மேலும் சுவையைக் கொடுக்கும்.

5.மினி சாம்பார் தோசை

தேவையானவை: (தோசைக்கு) ஆலு தோசைக்கான மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு. (சாம்பாருக்கு) துவரம்பருப்பு - கால் கப், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, பெரிய சைஸ் தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 15, சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன், மல்லித்தழை - 2 டீஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 3. தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன். (தேங்காயை மட்டும் கடைசியாக வதக்கிப் பொடிக்கவும்). தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை.

செய்முறை: முதலில் சாம்பாரை தயாரித்துக் கொள்ளவேண்டும். வேகவைத்த பருப்புடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வேகவிடவும். சாம்பார் பொடி சேர்க்கவும். தக்காளி, வெங்காயம் வெந்ததும் வறுத்து பொடித்த (தேங்காய் சேர்த்த) பொடியைப் போட்டு உப்பு சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியானதும், சிறிது எண்ணெயைக் காயவைத்து, தாளிப்பவற்றை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும். அதோடு வெல்லத்தையும் சேர்த்து கலக்கி, கொதித்ததும் இறக்கி மல்லித்தழை தூவவும்.

தோசை மாவை நன்கு கலக்கி ஸ்பூனில் எடுத்து, குட்டி ஊத்தப்பங்களாக ஊற்றி (தோசைக்கல் சூடானதும் ஒரு தடவைக்கு 10 மினி ஊத்தப்பங்கள் ஊற்றலாம்), எண்ணெய் விட்டு, வெந்ததும் பின்புறம் திருப்பி சற்று சிவந்ததும் எடுக்கவும். சாம்பாரை வாயகன்ற கிண்ணத்தில் ஊற்றி அதில் தோசைகளை மிதக்க விட்டு, சூடாக பரிமாறவும். 1 கப் சாம்பாருக்கு, 7 குட்டி தோசைகள் சேர்க்கலாம். விருந்துகளுக்கு ஏற்ற ஸ்பெஷல் அயிட்டம் இது.

காலிஃப்ளவர் மசாலா

 காலிஃப்ளவர் மசாலா செய்வது எப்படி....

தேவையான பொருள்கள்:

காலிஃப்ளவர் - பெரிய பூவாக ஒன்று
வெங்காயம் - 4
தக்காளி - 3
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வரமிளகாய் - 4
தாளிக்க - கடுகு, உளுந்து, தட்டிய பூண்டு, கடலைப்பருப்பு
அரைப்பதற்கு
தேங்காய் - கால் மூடி
நிலக்கடலை - 2 கைப்பிடி
தனியா - ஒரு கைப்பிடி
மிளகு - அரை தேக்கரண்டி
வர மிளகாய் - 6
பூண்டு -ஒன்று
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4

செய்முறை

🎄    அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய், பூண்டு தவிர அனைத்தையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.

🎄    நிலக்கடலையை தோல் நீக்கி நீர் சேர்த்து மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.

🎄    வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

🎄   காலிஃப்ளவரில் ஒவ்வொரு பூவாக பிரித்து வெந்நீரில் 5 நிமிடம் வைக்கவும்.

🎄   அரைப்பதற்கு கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

🎄    தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்துக்கொள்ளவும்.

🎄   பின்னர் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

🎄    அதில் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிய கிளறவும்.

🎄    பின் காலிஃப்ளவரை சேர்த்து கிளறி தேவைக்கு நீர் சேர்த்து வேக விடவும்.

🎄    கிரேவி பதத்தில் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

🎄    சுவையான கோபி மசாலா தயார்.

🎄   சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் சேர்த்தும், வெறும் சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்

#sujiaarthi

உடனடி புளி சாதம்

 உடனடி புளி சாதம் செய்வது எப்படி...

 தேவையான பொருட்கள்

தேவைக்கேற்ப சமைத்த அரிசி
அரிசிக்கு 1 தேக்கரண்டி எள் விதை எண்ணெய்
அரைப்பதற்கு
30 கிராம் புளி (30 கிராம் அல்லது ஒரு சிறிய எலுமிச்சை அளவு உருண்டை)
4 சிவப்பு மிளகாய்
1 தேக்கரண்டி கல் உப்பு (1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப)
வறுத்த மற்றும் தூள் 
1 தேக்கரண்டி எள் விதைகள்
1/2 தேக்கரண்டி வெந்தய விதைகள்
1/2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
சீசனிங்கிற்கு
50 மிலி இஞ்சி எண்ணெய் (நெல்லென்னை)
1 தேக்கரண்டி கடுகு விதைகள்
1 சிட்டிகை அசாஃபோடிடா
1 துளிர் கறிவேப்பிலை
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
3 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை

வழிமுறைகள்

உடனடி புளி சாதம் செய்வது எப்படி

புளி, சிவப்பு மிளகாய், உப்பு ஆகியவற்றை மிகக் குறைந்த வெந்நீரில் 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

20 நிமிடங்களுக்குப் பிறகு, புளி, சிவப்பு மிளகாய், உப்பு ஆகியவற்றை நன்றாக விழுதாக அரைக்கவும். பேஸ்ட் தயாராக உள்ளது.

1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள் மற்றும் 1/2 டீஸ்பூன் வெந்தய விதைகளை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். கடாயில் இருந்து அகற்றவும்.

அதே கடாயில், எள்ளை உலரவைக்கும் வரை வறுக்கவும். இப்போது மூன்றையும் சேர்த்து பொடி செய்யவும். இந்த மசாலா பொடியை ஒதுக்கி வைக்கவும்.

சமையல் அரிசி

ஒவ்வொரு தானியமும் தனித்தனியாக இருக்கும் வகையில் அரிசியை சமைக்கவும்.

அரிசியுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து ஒரு தட்டில் பரப்பவும். அதை முழுமையாக குளிர்விக்க விடவும்.

சுவையூட்டும்

1/4 கப் நல்லெண்ணெய் (நல்லென்னை) சூடாக்கி, ஒரு தேக்கரண்டி கடுகு, பெருங்காயம், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

கடுகு வெடித்ததும், வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

புளி விழுதில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஊற்றவும்.

அதில் தயார் செய்த பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். புலிகச்சல் தயார்.

இப்போது அரிசியில் தேவையான விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.

எங்கள் புளி சாதம் தயார். அப்பளம் அல்லது பப்பாளி அல்லது பருப்பு வடையுடன் மகிழுங்கள்.

வேர்க்கடலை சட்னி

 வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி ....?

வேர்க்கடலை சட்னி செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் அரை கப் அளவு வேர்க்கடலையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் நான்கு வர மிளகாய்களை கிள்ளி சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பல் பூண்டு மற்றும் ஒரு சிறிய அளவு புளி சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

மிளகாய், பூண்டு, புளி ஆகியவை நன்கு வதங்கிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை மற்றும் வதக்கிய பொருட்களை சேர்த்து இரண்டு மேசை கரண்டி அளவு தேங்காய் பூ சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து இதனை அரைத்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலையை நீண்ட நேரம் அரைத்தால் அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் எனவே நீண்ட நேரம் அரைக்க கூடாது.

இதோ சட்னி அரைத்தாகி விட்டது. இப்பொழுது இதனை தாளிக்க வேண்டியது தான். ஒரு சிறிய தாளிக்கும் கரண்டியில் ஒரு மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்க வேண்டும். கடுகு பொரிந்த பிறகு ஒரு சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் ஒரு வர மிளகாய் சேர்க்கவும். ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு இதனை சட்னியில் சேர்க்கவும்.

அவ்வளவுதான் சுலபமான சுவை நிறைந்த வேர்க்கடலை சட்னி தயாராகி விட்டது!

இட்லி சாம்பார்

 இட்லி சாம்பார் செய்வது எப்படி.....

தேவையான பொருட்கள் :

பொருள்அளவு

துவரம் பருப்பு ஒரு கப் 
வெங்காயம் 2 பெரியது 
தக்காளி 2 
பூண்டு பல் 5 
பச்சை மிளகாய் 3 
கறிவேப்பிலை ஒரு கொத்து 
தனியா தூள் ஒரு டேபிள் ஸ்பூன் 
கடுகு அரை டீஸ்பூன் 
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் 
சீரகம் அரை டீஸ்பூன் 

செய்முறை :

 தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.

 ப்ரஸர் குக்கரில் துவரம் பருப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், பெருங்காயம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

 கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.

 ப்ரஸர் குக்கரில் வேக வைத்துள்ள கலவையை மத்தால் நன்கு கடைந்து விடவும்.

 பின்னர் அந்த கலவையில் தாளித்தவற்றை கொட்டி கிளறவும்.

 சுவையான சாம்பார் ரெடி.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை இட்லியுடன் பரிமாறவும்.

காஞ்சிபுரம் இட்லி

 காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி ...?

காஞ்சிபுரம் இட்லி செய்வதற்கு இரண்டு கப் அளவு பச்சரிசி மற்றும் ஒரு கப் புழுங்கல் அரிசி இரண்டையும் சுத்தம் செய்து மெஷினில் கொடுத்து ரவை போல் உடைத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அரிசி ரவையில் செய்தால் தான் இந்த இட்லி சுவையாக இருக்கும்.

இப்பொழுது ஒரு கப் உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்து ஒரு மணி நேரம் ஊறிய பிறகு கிரைண்டரில் சேர்த்து மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். உடைத்து வைத்திருக்கும் அரிசி மாவையும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது ஆட்டி வைத்திருக்கும் உளுந்து மாவுடன் ஊறிய அரிசி மாவையும் கலந்து கரைத்து கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கரைக்கவும் இதனை குறைந்தது 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அல்லது முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலை ஊற்றலாம். ஆறு மணி நேரம் கழித்து ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றை உரலில் ஒன்றிரண்டாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் சுக்கு பொடியையும் எடுத்துக் கொள்ளவும். இவை மூன்றையும் மாவில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வழக்கமாக இட்லி ஊற்றுவது போல இந்த மாவில் இட்லி ஊற்றி எடுத்துக் கொள்ளலாம்.

அவ்வளவு தான். கோவில் சுவையில் காஞ்சிபுரம் இட்லி தயாராகி விட்டது!

பிஸி பேளாபாத்

 பிஸி பேளாபாத் செய்வது எப்படி....

தேவையான பொருள்கள்:

1. அரிசி

2. துவரம் பருப்பு

3. கடலைப் பருப்பு

4. தனியா

5. லவங்கப்பட்டை

6. கிராம்பு

7. காய்ந்த மிளகாய்

8. பெருங்காயம்

9. தேங்காய்த் துருவல்

10. கடுகு

11. உருளைக் கிழங்கு

12. உப்பு

13. புளி

செய்முறை:

1. கடலைப் பருப்பு, தனியா, துவரம் பருப்பு, லவங்கப்பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகிய அனைத்தையும் எண்ணெயில் வறுத்துத் தேங்காய் உடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இது மசாலா போல வாசனை வரும்.

2. துவரம் பருப்பு, அரிசி ஆகிய இந்த இரண்டையும் மேற்கண்ட அளவு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும்.

3. பாதி வெந்த மாத்திரத்தில் நறுக்கிய உருளைக் கிழங்கை நன்கு கழுவிப் போடவும்.

4. இவை எல்லாம் வெந்தவுடன் 3/4 ஆழாக்கு கரைத்த புளித் தண்ணீரை விட்டு உப்பு போட்டு முன்பு நாம் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாகக் கலந்து மேலும் கொதிக்க விடவும்.

5. கொதிக்கும் சமயத்தில் அடிப் பிடிக்காமல் இருக்க நன்கு கிளறி விடவும். பின்னர் இறக்கி வைத்து விடவும்.

6. உடன் அதே அடுப்பில் கடுகு, கருவேப்பில்லை எண்ணெய்யில் தாளித்து அதில் கொட்டி விடவும்.

7. இதோ, இப்போது சுவையான பிஸி பேளாபாத் தயார் ஆகிவிட்டது.