Saturday, September 7, 2024

குழம்பு பொடி

 குழம்பு பொடிக்கு.......

தேவையான பொருட்கள் 

மிளகாய் வத்தல் – 1 கிலோ,
மல்லி விதை – 1 கிலோ,
மஞ்சள் – 200 கிராம்,
சோம்பு – 100 கிராம்,
பெருங்காயம் – 200 கிராம்,
கடுகு – 75 கிராம்,
வெந்தயம் – 75 கிராம்,
கசகசா – 50 கிராம்,
பச்சரிசி – 100 கிராம்,
சீரகம் – 200 கிராம்,
மிளகு – 100 கிராம்,
துவரம் பருப்பு – 100 கிராம்,
உளுந்து – 100 கிராம்,
கடலை பருப்பு – 200 கிராம்,
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி,

மிளகாய் வற்றல் மற்றும் மல்லி விதையினை இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். மிளகாவானது அழுத்தி பார்க்கும் போது நொறுங்கும் அளவிற்கு மிளகாய் காய்ந்திருக்க வேண்டும். மிளகாய் மற்றும் மல்லி விதை நன்கு காய்ந்தவுடன் காற்று புகாத அளவிற்கு ஒரு பையில் போட்டு இறுக்கமாக கட்டி வைக்கவும்.

பின்பு மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வறுக்க வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு வாணலியில் வைத்து, பச்சரிசியை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அரிசியை வறுத்த பின்பு காயவைத்து தனியாக எடுத்து வைத்துள்ள மிளகாய் வற்றலில், வறுத்த இந்த அரிசியை கொட்ட வேண்டும்.

அதன் பிறகு சீரகம், சோம்பு, கடுகு, மிளகு, வெந்தயம், கசகசா, மஞ்சள் ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து மிளகாய் வற்றலில் கொட்ட வேண்டும். அடுத்ததாக கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் பொன்நிறமாகும் வரை வறுத்து எடுத்து மிளகாய் வற்றலில் கொட்டிவிடவும்.

இதை தொடர்ந்து கட்டிப் பெருங்காயத்தையும் வெறும் வாணலியில் போட்டு பொரியும் வரை வறுத்து கலவையில் கொட்டவும். இறுதியாக கறிவேப்பிலையை உருவி வெறும் வாணலியில் போட்டு மொறு மொறுவென்று வரும் வரை வறுத்து கலவையில் கொட்டவும். இந்த வறுத்த அனைத்து கலவைகளும் நன்கு ஆறியதும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

#sujisujiaarhi

எல்லா வகையான குழம்பு பொடி

 எல்லா வகையான குழம்பு வகைகளுக்கும் ஏற்ற, தரமான, காரமான மிளகாய் பொடி செய்வது எப்படி ..... 

தேவையான பொருட்கள் ::::

மிளகாய்   - 1 கிலோ 
கொத்துமல்லிவிதை   - 3/4 கிலோ 
சீரகம்  -  200கிராம்
மிளகு   - 50 கிராம்
துவரம்பருப்பு    - 150 கிராம்
கடலைப்பருப்பு  - 150கிராம்
சோம்பு   - 50கிராம்
வெந்தயம்   - 50கிராம்
கடுகுஉளுந்தம்பருப்பு  - 100கிராம்
பெருங்காயம்  - 25கிராம்
உப்புக்கல் சிறிதளவு
விரல்மஞ்சள்  - 150கிராம்
கசகசா 25கிராம்

செய்முறை::::

கசகசா மிளகாய் தவிர அனைத்தையும் நன்கு வறுத்து சிறிதுநேரம் நல்ல வெயிலில் காயவைக்கவும்.

பின்னர் இவைகளுடன் இரண்டு கறிவேப்பிலை கொத்தை இலைகளை ஆய்ந்து இச்சாமான்களுடன் சேர்த்து நன்கு பட்டுப்போல் மிஷினில் கொடுத்து அரைக்கவும்.

பின்னர் நன்கு ஆறவைக்கவும்.

அவ்வளவுதான்.

எல்லாக்குழம்புக்கும் பயன்படுத்தலாம்.

நன்கு வாசமாகவும் ருசியாகவும் இருக்கும்.....

Wednesday, September 4, 2024

பீன்ஸ் பருப்பு உசிலி

 *பீன்ஸ் பருப்பு உசிலி ஒருமுறை இப்டி சுலபமாக ருசியாக செய்து பாருங்கள்* 

5 ஸ்பூன் கடலை பருப்பு , 2 ஸ்பூன் துவரம்பருப்பு  2 மணிநேரம் ஊற வைத்து ஒரு மிக்ஸிஜரில் சேர்க்கவும் 

கூடவே 2 காஞ்சமிளகை , ஒரு ஸ்பூன் சீரகம் , மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து வடைபோல் தட்டி ஒரு இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள் 

ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பில்லை சேர்த்து பொரியவிடவும் 

பிறகு நறுக்கிவைத்த பீன்ஸ் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் நல்ல பீன்ஸ் வெந்து வந்தவுடன் வேகவைத்து எடுத்த பருப்பை உதிர்த்து கடைசில் சேர்த்து இறக்கவும்.

ஃப்ரைடு ரைஸ்

 ஃப்ரைடு ரைஸ்.......

தேவையான பொருள்கள்

வடித்த சாதம் - 3 கப்
வெங்காயம் - 3
தக்காளி - ஒன்று
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 20 பற்கள்
உப்பு - அரை மேசைக்கரண்டி
கேரட் - 3
எண்ணெய் - அரை கப் 

செய்முறை

பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

தோலுரித்த பூண்டுடன் மிளகு சேர்த்து அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள பூண்டு, மிளகுத் தூள் போட்டு தாளிக்கவும்.

பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கேரட் துருவல் போட்டு 4 நிமிடங்கள் வதக்கவும்.

நன்கு வதங்கியதும், உப்பு சேர்த்து வதக்கவும்.

அதனுடன் வேக வைத்த சாதத்தைப் போட்டு மசாலாவுடன் சாதம் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறவும். (பாஸ்மதி அரிசி சாதமாக இருந்தால் மிகவும் பொலபொலவென்று இருக்கும்).

பிறகு தோசைக்கரண்டியால் சாதத்தை நன்கு அழுத்தி சமப்படுத்தி, 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

எளிதாகச் செய்யக் கூடிய ஃப்ரைடு ரைஸ் தயார். இதை குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

அவரைக்காய் பொரியல்

 அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி 

கா‌‌ய்க‌றிகளை பொ‌ரிய‌ல் செ‌ய்வது ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ந‌ல்ல‌து.

தேவையான பொருட்கள்::::

அவரைக்காய் - கா‌ல் ‌கிலோ 
வெ‌ங்காய‌ம் - 1
பூ‌ண்டு - 5 ப‌ல் 
தாளிக்க - கடுகு, உ.பருப்பு
மஞ்சள் பொடி, உ‌ப்பு - தேவையான அளவு 
தேங்காய் துருவல் - அரை க‌ப் 
கருவேப்பிலை

செய்முறை:::: 

அவரைக்கா‌ய், வெ‌ங்காய‌த்தை நன்கு பொடியாக அரிந்து கொள்ளவும். 

பூ‌ண்டை த‌ட்டி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். 

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கா‌ய்‌ந்த ‌மிளகாயை ‌கி‌ள்‌ளி‌ப் போ‌ட்டு, உ.பருப்பு, க‌றிவே‌ப்‌பிலை போ‌ட்டு தாளி‌க்கவு‌ம். 

‌பி‌ன்ன‌ர் வெ‌ங்காய‌த்தையு‌ம், அவரைக்காயையு‌ம் சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம். பூ‌ண்டு சே‌ர்‌‌த்து வத‌க்கவு‌ம். 

வத‌ங்‌கியது‌ம் தேவையான அளவு உப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சேர்த்து வதக்கவும். துருவிய தேங்காயை இதனுடன் சேர்த்து ஒரு ‌கிளறு ‌கிள‌றி இறக்கவும்.

ரவை உப்புமா

 ரவை உப்புமா செய்வது எப்படி...

தேவையான பொருட்கள்:::

*மெல்லிய பம்மாய் ரவை - 2 கப்
*தண்ணீர் - 4 1/2 கப்
*வெங்காயம் பெரிது - 3
*பச்சைமிளகாய் - 12
[நீளவாக்கில் அரியவும்]
*கல் உப்பு - 2 டீஸ்பூன் [குவித்து]
*எண்ணையும் நெய்யும் கலந்து - 1/4 கப்

தாளீக்க:

*கடுகு - 1/2 டீஸ்பூன்
*உளுததம் பருப்பு - 1 டீஸ்பூன்
*கடலைப்ப்ருப்பு - 2 டீஸ்பூன்
*உடைந்த முந்திரிப் ப்ருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
மேலே அலங்கரிக்க:
*நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்
*தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
*எலுமிச்சை - 1

செய்முறை

1. வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.

2. ஒரு வாணலியில், எண்ணையும், நெய்யும் விட்டுச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களையும், பிறகு பச்சைமிளகாய், வெங்காயம், சேர்க்கவும்.

3. வெங்காயத்தை சிவக்க வதக்கவும்.

4. பிறகு ரவையைச் சேர்த்து அனலைக் குறைத்து 2 நிமிடம் வறுக்கவும்.

5. அளந்த தண்ணீரை தனியாகச் சூடாக்கி கொதிக்கும் போது இதில் ஊற்றவும். அனலைக் குறைத்து நன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.

6. ஈரம் வற்றி உப்புமா வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

7. எலுமிச்சம் சாறு பிழிந்து, நன்றாகக் கிளறிவிட்டு, தேங்காய்த் துருவல்,  அரிந்த மல்லித் தழை இவற்றை மேலே தூவி அலங்கரிக்கவும்...

சாம்பார் இட்லி

 சாம்பார் இட்லி செய்வது எப்படி....

தேவையான பொருள்கள்:

1. இட்லி மாவு
2. துவரம் பருப்பு
3. சாம்பார் வெங்காயம்
4. பெரிய தக்காளி
5. புளி
6. எண்ணெய்
7. கடுகு
8. உளுந்து
9. பெருங்காயம்
10. கருவேப்பில்லை, கொத்துமல்லி
11. உப்பு
12. நெய்

செய்முறை:

1. துவரம் பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் இல்லாவிட்டால் இரண்டே, இரண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளலாம். அத்துடன் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. இரண்டு டீ ஸ்பூன் தேங்காய்த் துருவல்,  2 டீ ஸ்பூன் கடலைப் பருப்பு,  1 டீ ஸ்பூன் சீரகம்,  அரை ஸ்பூன் வெந்தயம், ஆறு காய்ந்த மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் தனியா ஆகிய இவை அனைத்தையும் சிறிது எண்ணெய்யை விட்டு வாசனை வரும் வரையில் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

3. இட்லி மாவைக் கொண்டு குட்டி இட்லியாக ஊற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும். (பொதுவாக இட்லி செய்யும் முறை ஏற்கனவே இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. பார்த்துக் கொள்ளவும்)

4. கடுகு, உளுந்து, தாளித்து நறுக்கிய வெங்காயம் போன்ற இவற்றை வாசனை வரும் வரையில் வதக்கவும்.

5. பின்பு தக்காளியும் உப்பும் சேர்த்து தக்காளி கரையும் வரையில் வதக்கி அதில் புளியை 1 தம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

6. புளி நன்கு கொதிக்கும் சமயத்தில் நீங்கள் அரைத்து வைத்து உள்ள மசாலா, பெருங்காயம், நன்கு குழைந்த பருப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

7. இறுதியாக கறிவேப்பில்லை, சிறிது மல்லித் தழை சேர்த்து மூடவும்.

8. இப்போது பரிமாறும் சமயத்தில் பத்து குட்டி இட்லிகளை வைத்து அதன் மேல் கலக்கிய சாம்பாரை ஊற்றி, அத்துடன் சிறிது நெய்யும் ஊற்றி, பொடிப் பொடியாக நறுக்கிய கொத்து மல்லி தழைகளைத் தூவிப் பரிமாறவும்.

9. இதோ இப்போது சுவையான சமைப்பார் இட்லி மனம் கமழும் வாசனையுடன் தயார்.