Tuesday, May 4, 2021

ஶ்ரீராம யாத்திரை - 2

 

                          இரண்டாம் பாகம்                           

அவர் சொல்லிச் சென்றபடி வாலண்டியர்கள் அவரவர் குரூப்பில் உள்ள பயணிகளின்பெயர்கள்  பஸ் பெயர், சீட்நம்பர்  லிஸ்டை தந்தனர்..என்னுடைய பஸ் நம்பர் -5- (ஐந்து)  bus பெயர் மாருதி சீட்நம்பர் 23. சீட் நம்பர்கள் அவ்வப்போது மாறும் .பஸ் மாத்திரம் மாறாது.  என் பஸ்சின் வாலண்டியர்களில் ஒருவர் ஸ்ரீஎதிராஜன் மற்றவர் சதீஷ் .இருவருமே பாகவ தர்கள். எங்களுடன் யாத்திரையின்  இறுதி வரை நன்றாக பழகி. உதவினர்.  

ரயில்வண்டி வேகமாக போய்க் கொண்டிருந்தது எல்லோரும் பத்து மணிக்கு ஸ்லீபர் பலகையை  கொக்கிகளில் மாட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தோம். கம்பார்ட்மென்ட்களின்  வழிநடையில் மாத்திரம் நீல வண்ண ஜீரோ வாட்ஸ் பல்பு இரண்டு மூன்று எரிந்து கொண்டிருந்தது. எதோ ஒரு நிலாவொளியில் உறங்குவது போன்ற உணர்வை பெற்றேன். .இரவு 11-௦௦ மணிக்கு இட்டார்சி ஸ்டேஷன் ,12-௦௦ மணி வாக்கில் போபால்ஸ்டேஷன், விடிகாலை 4-3௦ மணிக்கு ஜான்சி ஸ்டேஷன் களில் வண்டி நின்று  போய்க் கொண்டிருந்ததை அந்தந்த ஸ்டேஷன்-களில் வண்டி நின்ற பிளாட்பாரங்களில் அந்த இரவிலும் சாயா காபி என்று கூப்பாடு போடுவோர் சப்தங்களில் இருந்தும் ரயில்வே கைடை பார்த்தும் அறிந்தேன். அதன்பின் ஒரு இரண்டு மணி நேரம் கொஞ்சம் கண் அயர்ந்து விழித்தபோது காலை மணி 6-3௦ சக யாத்ரிகர்கள் எழுந்து பல்விளக்கி முகங்களை வாஷ் பேசின்களில் அலம்பிக் கொண்டிருந்தார்கள்.அடியேன் அப்பர் பெர்த்தில் இருந்ததால் யாரும் எழுப்பவில்லை. சரியாக இருக்கும் இப்போது எழுந்தால் என்று நானும்  எழுந்து பல்தேய்த்து முகத்தை அலம்பி லேசாக திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டேன். ஒரு கப் பால்சர்க்கரைபோட்டு  என் டம்ளரிலேயே  வாங்கி ஸன்ரைஸ் காபி பௌடரை ஒரு ஸ்பூன் போட்டு  கலக்கி சூடாக சாப்பிட்டபோது தூக்கம் நன்றாக கலைந்து விட்டது. மணி ஏழாகி விட்டது. தோள்பைகளில் வைக்க வேண்டிய வேஷ்டி உத்திரியம் டவல் ,திருமண்பெட்டி ,  தட்டு, டம்ளர்,கொடிகயிறு போன்றவைகளை அவர் சொன்னபடியே செக் பண்ணி வைத்துக் கொண்டேன். மற்றவைகளை சூட்கேஸில்அடுக்கி வைத்து பூட்டினேன்.மணியை பார்த்தேன்காலை  7-3௦.                                       பக்கம் –பதிநான்கு

 பரவாயில்லை இன்னமும் ஒரு மணி காலம் உள்ளது. பயணிகள்  ஐந்து கம்பார்ட்மேண்டுகளிலும் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா, ராம கிருஷ்ணா ஹரே ஹரே

என்றுஒருவர் சொல்ல மற்றவர்கள் கோரஸாக சொல்ல ஒரு இனிய  கோஷம் வலுத்துக் கொண்டிருந்தது. வேளுக்குடி சுவாமியும், திருப்புல்லாணி சுவாமியும் ஒரு வாகிங் மாதிரி

ஐந்து பெட்டிகளையும் ஒரு தரம் வடக்கு தெற்காக  நடந்து பின் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர் முகம் சற்று புன்னகையை காட்டினாலும் ஒரு பொறுப்பு உணர்ச்சியையும் காண முடிந்தது. வண்டி நின்றதும் பொறுமையாகவும்  வரிசையாகவும் இறங்குங்கள்  வண்டி ஒரு பத்து நிமிஷம் நிற்கும். கார்டிடம் சொல்லியுள்ளேன். டி.ஸி.களிடமும் சொல்லி யுள்ளேன். அவசரம் காட்டி, பிடித்து தள்ளிக்கொண்டு இறங்க வேண்டாம் என்றெலாம் பொதுப்படையாக அங்கங்கு சற்று நின்று சொல்லிக்கொண்டே போனார்.அவர் எச்சரிக்கையில் பயணிகளுக்கு எந்தவித அசம்பாவிதமும் நேரிடக் கூடாது என்ற கவலை தெரிந்தது. வண்டி சரியாக கான்பூர் ஸ்டேஷனில் 8-3௦ மணிக்கு நுழைந்து கொண்டிருந்தது. அந்த பிளாட்பாரமே நம் யாத்திரிகர்களால் நிரம்பி இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர், என்ஜின் டிரைவர், கார்ட் எல்லோருமே அவரவர் இடத்தில் இருந்து பொறுமையாக கையில் சிகப்பு கொடியை சுருட்டி காட்டிக்கொண்டு பச்சைக் கோடியை பிரித்து கையில் தொங்கவிட்டுக்கொண்டு  காத்திருந்தார்கள். சுமார் பத்து நிமிடமாகியது எல்லோரும் இறங்கியாகி விட்டாலும், சாப்பாட்டு அண்டாக்களும் கூடை கரண்டிகள், ,அகப்பை போன்ற அயிட்டங்களையும் எடுத்துக்கொண்டு இறுதியாக சமையற்காரர்கள் குரூப் இறங்கியவுடன் ஸ்வாமி ஸ்டேஷன் மாஸ்டரை பார்த்து கைகுவிக்க அவரும் சிக்னல் காட்ட, வண்டியும்   எங்களுக்கு விடை கொடுப்பது போல் மெதுவாக நகர்ந்தது. முழு வண்டியும் நடைமேடையை விட்டு நகர்ந்தவுடன் , அவரவர்கள் தங்கள் லக்கேஜ் களை சக்கரங்கள் பொருத்தி இருந்தபடியால் தள்ளிக்கொண்டு  படிகள் ஏறி மேற்குபக்கமாக  இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து பார்க்கையில் சுமார் பத்து பதினோரு VALVO PUSHBACK AIRBUS-கள் கம்பீரமாக நம்பர் பெயர் அட்டைகளுடன்  நின்று கொண்டிருந்தது..என்னுடைய 5-ம் நம்பர்  மாருதி பஸ்ஸை நோக்கி அடியேன் நகர்ந்தேன். என்னுடன் பயணிப்பவர்கள் 35-பேர்கள், அருகே சென்றதும் இரு  வாலண்டியர்களும்  எங்கள் சூட்கேஸ் களை வாங்கி பஸ் சைடு வாக்கில் இருந்த டிக்குகளில் உள்ளே அடுக்கி எங்களை பஸ் ஏறி எங்கள் சீட் நம்பரை பார்த்து அமரச் சொல்ல அப்படியே நடந்து கொண்டிருந்தது. சுவாமி பஸ்களின் முன்னாள் நின்று பாட்டரி சார்ஜ்  செய்திருந்த ஒலிபெருக்கி மூலம் வழிகாட்டிக் கொண்டிருந்தார். அங்கே சிலமும்பைக்காரர்கள் எதோ குழப்பம் விளைவிக்க,எல்லோருக்கும் ஒரே விதிதான் உங்களுக்கு குறிப்பிட்ட பஸ்சின் குறிபிட்டுள்ள சீட்களில் சென்று அமருங்கள் மணி ஒன்பதாகி விட்டது, நாங்கள் மும்பை யிலிருந்து வந்துள்ளோம் என்று எதோ கூற,அதற்கு ஸ்வாமி மும்பை   யாத்ரிகர்கள் தங்களுக்கு ஒரு கொம்பு முளைத்து விட்டதாக எண்ணிவிடக் கூடாது. என்று கொஞ்சம் கண்டிப்பாகவே சொல்லிக்கொண்டிருந்தார். ஆரம்பமே கண்டிப்பாக இல்லாவிடில் யாத்திரை சுமுகமாக போகாது என்று அவர்

                              பக்கம் பதினைந்து

அனுபவம் சொல்லியிருக்கும். இதையெல்லாம் எழுதணுமா என்று படிப்பவர்கள் நினைக்க வேண்டாம். நடந்த விஷயங்களை நடந்தபடி எழுதினால்தான் நாங்கள் இருந்த சூழ்நிலை புரியும் எவ்வளவு முன்யோசனையுடன் ஏற்பாடு செய்திருப்பினும்,அதை குலைக்கும் வகையில்ஒரு குருப் தங்களுக்குபிரத்தியோக உரிமைகளை கோருவதால்   என்னவெல்லாம் நடக்கும் என்று தெரிவிக்கவே எழுதியது. என் பஸ்சிலும் இதுமாதிரி ஒரு சிறிய குழப்பம்  நடக்க அதனால் அடியேனுக்கு மிகவும் ஆப்தராக ஒரு அன்பர் இன்றுவரை நட்புணர்வு தொடர அமைந்தது அந்தமாதிரி ஒரு கெட்டத்தில் தான். அதை பின் வருமிடத்தில் கூறுவேன்

.பஸ்களில் எல்லோரும் அமர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக பதினோரு பிரமாண்ட பஸ்கள்ஓடிக்கொண்டிருந்ததை பலரும் கொஞ்சம் வியப்புடன் பார்ப்பது மாதிரி தெரிந்தது. காரணம் நகரத்தை தாண்டி கொஞ்சம் கிராம புறமாக வண்டிகள் போய்க் கொண்டிருந்த படியால். சுமார் பத்து மணிக்கு கங்கை நதியின் கரை கண்ணுக்கு  தெரிந்தது. நாங்கள் ஸ்டேஷனில் ஏறி உட்கார்ந்தபோது கொஞ்சம் சுளீர் என்று வெட்பமாகவும் இருந்த சூழ்நிலைமாறி பஸ்கள் பிட்டூர்-ஐ நெருங்கிய சமயம் இருட்டிக்கொண்டு லேசாக தூறல் போட்டுக் கொண்டிருந்தது.வண்டிகளை மரங்களின் ஓரத்தில் நிறுத்தியவுடன் எல்லோரும் இங்கே இறங்கி ஸ்நானம் பண்ணலாம் என்று ஒலிபெருக்கியில் சுவாமி கூற வளண்டியர்கள் பஸ் கதவுகளை திறந்து பயணிகளை தோல்பைகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு குளித்து ஆடைகளை மாற்றிக்கொண்டு ஈரத் துணிகளை நன்றாக இறுக்கி பிழிந்து  ஒரு பிளாஸ்டிக் கவர் தந்து அதுனுள் போட்டுக்கொண்டு வருமாறும் தருமசாலை போனதும் கயிறு கட்டி காயப் போட்டுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

பிட்டூர் கங்கை நதிக்கரை. இது குளிக்கும் துறையாதலால் நதியின் அகலமும், ஆழமும், வேகமும் இருந்தது.போட்டோவில் புலப்படவில்லை. கொஞ்சம் உறைப்பாகவே மழை பெய்து கொண்டிருந்தது.ஒரே நேரத்தில் சுமார் நானூறு பேர் குளித்த படியால் அதன் வேகம் கொஞ்சம் தடைப்பட்டதால் நன்கு குளிக்க முடிந்தது. தண்ணீரின் ஓட்டம்உடம்பில் இருந்த அழுக்குகளை ஒரே நிமிடத்தில் சோப்பு போடாமலே அலம்பிவிட்டது

                         பக்கம் பதினாறு

போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.. இது அநேகமாக எல்லோருமே உணர்ந்து சொன்னது. ஆளையே அடித்துப் போகும் வேகம். மழை வேறு பத்தே நிமிடத்தில் அனைவரும் கங்கையில் ஸ்நானம் பண்ணியாயிற்று. துரையின் இடையில் ஒரு சிறிய கோவில் சிகப்பும் பச்சையுமாக  தெரிகிறது பாருங்கள். அங்கே தான்  ஸ்ரீ வால்மீகிக்கு காட்சி கொடுத்த பிரம்மா நின்ற இடமாம். பிரம்மாவின் இரு திருவடிகள் அங்கே பாறையில் சேவையாகிறது. குளித்துவிட்டு கரையில் நிறைய சிறிய சிறிய அறைகள் உள்ளன. அங்கே வேஷ்டியை உடுத்திக்கொண்டு திருமண்காப்பு சாற்றிக்கொண்டு அந்த பிரம்மா கோயிலை ஒரு பிரதக்ஷனம் வந்தோம். ஈரத்துணிகளை நன்கு அலசி பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டு மெதுவாக எங்கள் பஸ்சில். வந்து அமர்ந்தோம்.அநேகமாக எல்லோருக்கும் கொஞ்சம் பசி. மணி 11-3௦ இருக்கும்.மழை தூறல் சற்று நின்றிருந்தது.

சில ஸ்திரீகள் நனைத்த துணிகளை உதறி இரண்டு பக்கம் தள்ளி நின்றுபிடித்துக்கொண்டு  அந்த காற்றில் உலற்றி கட்டிக்கொண்டு கூட வந்து விட்டார்கள். அரைமணி காலத்தில்.பனிரெண்டு மணிக்கு பஸ்கள் அங்கிருந்த ஒரு தருமசாலையின் வாசலில் நிற்க அனைவரும் இறங்கினோம்

 இதுதான் நாங்கள் பிட்டூர் (கான்பூ ரில்) தங்கியிருந்த தர்மசாலை

 

அவரவர் சூட்கேஸ்களை பெற்றுக் கொண்டு ரூம்களிலும் ,வெராண்டாக்களிலும் படுத்துக்கொண்டு கொஞ்சம் ஒய்வு எடுத்துக்கொண்டோம். முதல் இரண்டு மாடியிலும், நிறைய ரூம்கள். கீழே முன்னூறு பேர்கள் உட்கார்ந்து சாப்பிட  வசதியாக பெரிய ஹால்.பெருக்கி சுத்தமாக இருந்தது. ஆனால்  மேசை, நாற்காலிகள் கிடையாது. தரையில் அமர்ந்தே   சாப்பிட வேண்டும்.மணி 1-௦௦ ஆகி விட்டது.சாப்பாடு ரெடியாக இருந்தது.தரையில் பந்திப்பாய் ஒன்றை நீட்டாக போட்டார்கள்   அந்த நாட்களில் உ.பி.,பீகார் போன்ற மாநிலங்களில் நிறைய கரென்ட் கட் உண்டாம்.அதை பிரத்யட்சமாக அனுபவித்தோம். அடிக்கடி மின்சாரம் போகுமாம். வர ரொம்ப நேரமும் ஆகுமாம். அதலால் FAN-கள் ஓடவில்லை. விளக்குகள் எரிய வில்லை. எப்படியோ பகல் வேலை, மழை பெய்து கொண்டிருந்தது, வெளிச்சம் இருந்தது, காற்றும் தேவைப்படவில்லை. உட்கார்ந்து அவரவர் கொண்டு வந்த தட்டை போட்டுக்கொண்டு சாப்பிட்டோம். நம் குரூப்பை சேர்ந்த சமையற்காரார்கள் ஒரு கறியமுது, பருப்பு குழம்பு, சாற்றுமுது , வடை, பாயசம் மோர், தும்பைபூ போன்ற சாதம்,   ஊறுகாய் என்று வாய்க்கு ருசியாக

 

                       பக்கம் –பதினேழு

பரிமாறினார்கள். போடப் போட திருப்தியாக சாப்பிட்டு எழுந்தோம். துணிகளை கயிற்றை கட்டி காயப் போட்டு ஒருமணி காலத்தில் உலர்ந்தவுடன் எடுத்து மடித்து வைத்துக் கொண்டோம்.மேலும் சிறிது நேரம் ரெஸ்ட். மாலை மூன்று மணிக்கு வரச் சொல்லி வாலண்டியர்களுக்கு அறிவிப்பு வர எல்லோரும் கிளம்பி சென்றோம். பஸ் இல்லை நடைதான்.

ஒரு பர்லாங் தூரத்தில் ஸ்ரீ வால்மீகி ஆஷ்ரமம் இருந்தது.

இங்கு நாம் சேவிப்பது ஸ்ரீ வால்மீகி ஆஷ்ரமம் ஸ்ரீ வால்மீகி பகவான் சிலையுடன்  .இன்று கோவிலாக காணப்படுகிறது.                                                                                                                        ஆஷ்ரமத்தின் மற்றொரு தோற்றம்:  பக்கத்தில் காண்பது ஸ்ரீ வால்மீகி பகவன் சிலை ஸ்ரீ ராமபிரான் அனுப்பிய அஸ்வமேத குதிரையை லவ,குசர்கள் கட்டிப் போட்ட இடம்.

ஸ்ரீ ஹனுமனை லவகுச்சர்கள் கட்டிப்போட்ட இடம் /மரம் சீதையின்திருமடைபள்ளி ஹனுமனை கட்டிபோட்ட மரம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது  

                       பக்கம் பதினெட்டு

இரண்டு யுகங்களுக்கு முன் நடந்தது ஸ்ரீ ராம அவதாரம். இந்த இடங்களை எந்த ஆராய்ச்சியும் செய்யாமல்.  மக்களின் நம்பிக்கையை நாம் ஏற்று வணங்குவோம்.                                                                                                                                                    

சீதை தனக்கு பிறந்த லவகுசர்களோடு தங்கியிருக்கையில் ஸ்ரீ வால்மீகி  ஸ்ரீ ராமாயணத்தை இயற்றி ஸ்ரீ ராமர் திருக்குமாரர்கட்கு அந்த இதிகாசத்தை முதன் முதலாக கேட்கப் பண்ண ஸ்ரீ ராமன்முன்னிலையிலேயே பாடவும் செய்தவர். ஆக, இங்கே நிறைய சேவிக்க வேண்டிய ஸ்தலங்கள் உண்டு. முதலில் சீதை, லவ  ,குசலர்கள்  சந்நிதியை சேவித்தோம். எல்லாம் சலவைக்கல் சிலைகள். அடுத்து நூறு அடி தூரத்திற்குள் ஸ்ரீ வால்மீகி ஆஷ்ரமம். அங்கே ஸ்ரீ வால்மீகி சிலை. 24-மணி நேரமும் பூட்டப் படுவதில்லை.இங்குள்ள ஒரு கிழவருக்கு 11௦-வயது ஆகிறதாம் எலும்பும் தோலுமாக காணப்பட்டார். கண்பார்வை தீட்சண்யமாக இருந்தது..தன் இளமைக் காலத்திலிருந்து ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தை பாராயணம் பண்ணிக்கொண்டு இருக்கிறாராம். பல சாதுக்கள் நீண்ட வெள்ளைத்தாடியுடன்  மாற்றி மாற்றி ஸ்ரீ ராமாயண பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.குத்து விளக்குஇரவும் பகலும் எரிந்து கொண்டே இருக்குமாம். வெள்ளை வஸ்த்ரம் தான் ஆனால் ரிஷிகள் மாதிரியே வெந் தாடிகளுடன் பலர்  காணப் படுகிறார்கள். சிலர் ராம் ராம என்று ஜபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.உள்ளே சென்று ஸ்ரீ வால்மீகி பகவானை சேவித்து விட்டு பிரதக்ஷணமாக வருகையில் ஒரு குதிரை சிலை உள்ளது. இந்த இடத்தில்தான் ஸ்ரீ ராமர் அஸ்வமேதயாகம் செய்வதற்காக ஒரு குதிரையை பல ராஜ்யங்களுக்கு அனுப்புகையில் அந்த படையை அழித்து அந்த குதிரையை லவ, குசலர்கள் கட்டிப் போட்ட இடமாம்.பின்னர் அதை மீட்க ஹனுமான் வர அவனையும் யாரென்று அறியாமல் ஒரு மரத்திலே குரங்கு என்று நினைத்து கட்டிப் போட்டு விட்டனர். அதற்கு பக்கத்தில் சீதை சமையல் செய்து சாப்பிட்ட இடம். வெளியே வந்த சீதை  ஹனுமானைப் பார்த்து ஓடி வந்து யார் கட்டிப் போட்டது என்று விசாரிக்க அவன் லவ,குச்சலர்களை காட்டி இவர்கள் ஸ்ரீ ராமபிரானின் திருக்குமாரர்கள் என்று அறிவேன் அதனால் அவர்கள் திருக்கரங்களினால் கட்டுப் பட பாக்கியம் செய்தேன் என்று சொல்லி மகிழ சீதை சிறுவர்களை அழைத்து அவிழ்க்க சொல்ல அவர்களும் அப்படியே செய்தனர். அந்த ஹனுமான் திருப்பாத தூளி பட்ட பூமியை அனைவரும் வணங்கினோம்..அந்த மரம் பலமுறை பட்டுப் போய் உள்ளதாம். ஆனால் மீண்டும் அது துளிர் விட்டு பெரிய மரமாக வளருமாம். சிலர் மரத்தடியில் உள்ள மண்ணை அனுமன் திருவடிகள் பட்ட மண் என்று சிரசில் தரித்து  ஒரு சிட்டிகை  பொட்டணம் கட்டி எடுத்துப் போயினர்.  சீதை சமைய பண்ணிய திருமடைப் பள்ளி,ஹனுமான் கட்டுண்டிருந்த மரம், குதிரை கட்டுப்பட்டு இருந்த ஸ்தலம் ஸ்ரீ வால்மீகி பகவான் அர்ச்சை திருமேனி  எல்லாவற்றையும் நீங்கள் கான்பூர் ஸ்ரீ வால்மீகி ஆஷ்ரம் என்று கூகூளில் தட்டினால் சேவிக்கலாம். சிலவற்றை இங்கேயும் காட்டியுள்ளேன்  சேவித்தவுடன் அங்கேயே எல்லோருக்கும் ஹாட் கேனில் காபி கொண்டுவரப் பட்டு மரங்களின் அடிவார  நிழலில் எல்லோருக்கும் அவரவர் டம்ளர்களில் காபி  கொடுக்கப் பட்டது. பருகிவிட்டு அங்கிருந்த முற்றவெளியில் யாத்ரிகர்கள் மற்றும் அங்கு தங்கியுள்ள சாதுக்களின் உபயோகத்திற்கான குழாய்களில் கழுவிக் கொண்டு துடைத்து கைப்பைகளில் வைத்துக்கொண்டோம். மாலை மணி  4-௦௦.  எல்லோரும்

               பக்கம் –பத்தொன்பது                               

 

முற்றத்தில் இருந்த ஷெட்டில் அமர்ந்தோம். அங்கே ஸ்ரீமான்கள் திருப்புல்லாணி சுவாமியும், வேளுக்குடி சுவாமியும் பத்ரி நாராயண பட்டர் சுவாமியும்,காஞ்சி ஸ்ரீநிதி சுவாமியும் சேர்ந்து ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் பால காண்டம் முதலிரண்டு சர்க்கங்களை சேவிக்க, கலந்துகொண்ட யாத்ரீகர்களும் ஸ்ரீ இராமாயண ஸ்ரீகோசம் வாங்கிக் கொண்டு வந்தவர்களும் மற்றவர்களும் புத்தகம் உள்ளவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சேவிக்கவோ அல்லது செவி மடுக்கவோ வேண்டியது என்ற திட்டப்படி  ,கூடவே சேவித்தனர். அடியேனும் ஒரு தமிழ் வால்மீகி இராமாயண  ஸ்லோக புத்தகம் வாங்கி வந்திருந்தபடியால் மாப்பிள்ளையுடன் சேர்ந்து சேவித்தேன். அதன் சுருக்கம் ஏற்கனவே ஸ்ரீ திருப்புல்லாணி சுவாமி ட்ரெயினில் சொன்னதே.அதனால்அந்தகதை பகுதியை இங்கே மீண்டும் எடுத்து சொல்லப்படவில்லை.

அதன் பிறகு ஸ்ரீ வேளுக்குடி சுவாமி இந்த ஸ்தலத்தின் பெருமையை ஒருவாறு விவரித்துச் சொன்னார்.. அதன் சாராம்சம். இந்த வால்மீகி ஆஸ்ரமத்தில்தான் ஸ்ரீ நாரதராலும், ஸ்ரீ பிரம்மாவாலும் ஸ்ரீ வால்மீகிக்கு ஸ்ரீ இராமாயண இதிஹாசத்தை இயற்ற

அனுகிரஹிக்கப்பட்டது. இராமயணத்தை இயற்றுகையில் நடந்த நிகழ்ச்சிகளை அவர் தன்

உள்மனதில் காண்பார் என்றும் பிரம்ம சொல்லிச் சென்றார். ஆக, ஸ்ரீ இராமாயணம் ஆரம்பித்த ஸ்தலம் இதுவே. ஸ்ரீ இராமாயண கடைசி உத்திரகாண்டத்தின் வரும் ஸ்தலமும் இதுவே. ஸ்ரீ ராம பிரானின் திருக்குமாரர்களான லவ,குசர்களுக்கு இந்த ஸ்ரீ ராமாயண ஸ்லோகங்களை சொல்லி கொடுத்து அவைகள் ஸ்ரீ அயோத்தியில் ஸ்ரீ ராமபிரான் திருச்செவி சாத்தும்படி  செய்த ஸ்தலம். ஆக ஆரம்பமும் முடிவும் கலந்த இடம் என்று சொல்லி அடுத்து நாம் விரைவாக ஐந்து  மணிக்குள் கிளம்பி அயோத்தி செல்கிறோம்.ராத்திரி பத்து மணிக்குள் சென்று விடலாம். நாஷனல் ஹைவே 27 லக்னௌ வழியாக ஐந்து மணி நேரப் பயணம்.அயோத்தியில்  பிர்லா தர்மசாலையில் தங்குகிறோம். அவரவர்களுக்கு ஒரு அறையில் நான்கைந்து நபர்கள் தங்கும்படி ஒதுக்கியுள்ள அறைகளை வாலண்டியர்கள் காட்டுவார்கள்.எல்லா அறைகளிலும் பாத் attached வசதி உண்டு..நாளை காலை அமாவாசை. தர்ப்பனாதிகள் செய்ய வேண்டியவர்கள் கையில் தர்ப்பை, எள், தர்ப்பன புத்தகம் கொண்டு வந்திருப்பீர்கள்.ஏற்கனவே சென்னையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் சொல்லியுள்ளது.அன்னவர்கள் காலை ஆறேழு மணிக்கு இதே வீதியில் ஒரு பர்லாங்கு தூரத்தில் உள்ள சரயு நதிக்கு சென்று அங்கேயே நீராடி தர்ப்பணத்தை செய்துவிட்டு வரலாம். பித்ருக்களுக்கு ரொம்ப விசேஷமும்கூட. முடியாதவர்கள் தங்கள் ரூமை அடுத்துள்ள வேராந்தாக்களில் செய்யலாம். அதன்பிறகு ஏழு--எட்டு  மணிக்குள் காபி,இட்லி பலகாரம் முடித்துக் கொண்டு நம் தர்மசாலை வீதியில் இருந்தே ஸ்ரீ ராம ஜன்ம பூமியை சேவிக்கப் போகும் வரிசையில்  சேர்ந்து கொண்டு சென்று சேவித்து வரலாம் கையில் ஒன்றும் கொண்டுபோகக் கூடாது மணிபர்ஸ் தவிர மிலிடரி செக்யூரிட்டி.தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டார்கள். பேனா,செல்போன் எதைக் கொண்டு போனாலும் பிடுங்கி போட்டு விடுவார்கள். மூக்கு கண்ணாடி அணிந்தவர்கள் ஜாக்கிரதை. குரங்குகள் இங்கு அதிகம்.  

                                                                    பக்கம் –இருபது

 

பிடுங்கி கொண்டு போய் விடும். கையில் தின்பண்டங்களை வைத்துக்கொண்டு போனாலும் அதேகதி தான். ஒரு மணி காலத்திற்குள் க்யூவில் சென்று சேவித்து வாருங்கள் வாலண்டியர்கள் உங்களுடன் வர மாட்டார்கள். எல்லோரும் பத்து மணிக்குள் இந்த காரியங்களை முடித்துக் கொண்டு  பிர்லா தர்ம சாலைக்குள் தங்கியுள்ள இடத்தில் ஆஜராக வேண்டும். அதன் பின் அயோத்தியில் நிறைய பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளது. அந்த இடங்களுக்கு நாங்கள் அழைத்துப் போவோம்.  அவை நாளை காலை பத்து மணிக்கு சொல்லப்படும். இப்போது நம் பஸ்கள் ரெடியாக உள்ளன பெட்டிகளை கொடுத்துவிட்டு பஸ்ஸில் அமருங்கள், அயோத்தி நோக்கி கிளம்புகிறோம்.அவரவர் நம்பர்

பஸ்கள் அதே சீட்டில் அமர்ந்து பயணம் செய்யலாம்.மாற்ற வேண்டாம்.ஷர்ட் ,போர்வைகளுடன் பஸ்ஸில் அமருங்கள் சில சமயம் குளிரும் ஏ-ஸி பஸ். ராத்திரி பத்து மணிக்குள் சென்று விடுவோம்.சுமார் ஐந்து மணி நேர பயணம். அங்கு பொங்கல் கொத்ஸு சித்தப்படுத்தி இருப்பார்கள். நாம் செல்லும் சமயம் சரியாக இருக்கும். சாப்பிட்டுவிட்டு உறங்கப் போகலாம்.என்று கூறி முடித்தார்.

அதன் பிரகாரம், நாங்கள் எல்லோரும் கைப்பையை எடுத்துக்கொண்டு பெட்டிகளை பஸ்ஸில் வைத்துப் பூட்டி தங்கள் அமர்ந்து வந்த சீட்டுகளிலேயே அமர்ந்து அயோத்தி நோக்கி பிரயாணப் பட்டோம்,.ஒரு கப் காபியும் மிக்ஸர் பொட்டனமும் கொடுக்க வாங்கிப் பருகிவிட்டு காராபூந்தியை வாயில் போட்டு மென்றுகொண்டே பிரயாணப்பட்டோம். மத்தியானம் ஒரு மணிக்கு சாப்பிட்டது. இரவு இன்னும் ஐந்து  மணி நேரத்தில் அயோத்தியில் இரவு பலகாரம். அதனால் கொஞ்சம் காலி வயிராகவே பிரயானப்பட்டது. நீண்ட பயணம் வழியடைவில் யாருக்கும் எந்த சிரமும் இல்லாமல் தூங்கிக் கொண்டே போக சௌகரியப்படும் வகையில் சிறிது ஸ்நாக்ஸ்-ம் இரண்டு காபியும் வழங்கப் பட்டது.

 

இப்போதெல்லாம் பஸ் கிளம்புகையில் ஹரே கிருஷ்ணா , ஹரே ராமா கோஷங்களுடன் கிளம்புவதும், இறங்கும் இடம் வருகையில் அதையே சொல்லுவதும், திவ்ய பிரபந்தம், ஸ்தோத்திரங்கள், பஜனை போன்றவைகளை ஒரொரு பஸ்சில் உள்ளோர் ஒவ்வொரு விதமாக ராம நாமத்துடன் ஐக்கியமாவதும் ஒரு பழக்கமாகி வந்து கொண்டிருந்தது.

பஸ் நேஷனல் ஹைவே 27- ல் பயணமாகி சென்று கொண்டிருந்தது. மணி ஐந்தரை. பயண தூரம் சுமார் 23௦ கிலோ மீட்டர்கள். பயண நேரம் ஐந்து  மணி நேரம்.ஸ்வாமி  பத்து என்று சொன்னது சரியே. ஆனால் பஸ் அயோத்தியை அடைந்தபோது மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. இறங்கியதும் பெட்டிகளை வாங்கிக்கொண்டு அவரவர் ரூம்களில் போட்டுவிட்டு பொங்கல் சாப்பிட விரைந்தோம். எல்லோருக்கும் நல்ல பசி.,சூடான நெய் நிறைந்த பொங்கலும் கொத்ஸும் தேவாமிருதமாய் இருந்தது.  பிறகு படுத்தாயிற்று. தூக்கம் பஸ்சிலேயே நிறைய நேரம் தூங்கி விட்டதால் அவ்வளவு சீக்கிரம் வரவில்லை.

இரண்டாம் பாகம் முற்றுகிறது.

ஶ்ரீராம யாத்திரை - 1

 சிலரால் ஶ்ரீராம யாத்திரை download செய்ய இயலவில்லை என தெரிவிப்பதால் அதனை காபி பேஸ்ட்செய்கறேன்

பக்கம் ஒன்று

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமான் உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி  தலைமையில் நடந்த ஸ்ரீராம அநுயாத்திரை யில் அடியேன் பெற்ற பங்கும் அனுபவங்களும்

பகிர்பவர் :எஸ். விஜயராகவன் 

முன்னுரையும் முதல் பாகமும்

 வடுவூர் ஸ்ரீ ராமனும்,சீதையும்

இந்த யாத்திரையின் நோக்கம் , ஸ்ரீ ராமர் திருப்பாதம் பட்ட இடங்களை எல்லாம் நாமும் அடியொற்றி சென்று முடிப்பதுடன் அந்தந்த இடங்களில் நடந்த விசேஷங்களை ஒட்டின ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்களை பாராயணம் செய்வதும் மற்றும்  ஸ்ரீ வேளுக்குடி சுவாமியின் அந்த ஸ்தலத்திய ஸ்ரீ ராம கதைகளை சுருக்கமான உபன்யாசமாக கேட்டு மனதில் தரிப்பதும் முக்கியமாக கொள்ளப்பட்டது

     இந்த யாத்திரை .பிட்டூர் ஸ்ரீ வால்மீகி ஆச்ரமத்தில் தொடங்கி இறுதியில் ஸ்ரீ ரங்கத்தில்முடிவு பெறும்படியாக இடங்களை ஒன்று கூட விடாமல் சேவித்து யாத்திரையை பூர்த்தி செய்வது என்ற பெரிய நோக்கத்துடன் 22-௦8-2௦௦6 முதல் ௦8-௦9-2௦௦6 வரை சீரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதிசயம் எழுதுவிக்க ஒன்னாததே. இருப்பினும் அடியேன் புல்லறிவைக் கொண்டு எழுத்தில் வடிக்க முயல்கிறேன். இந்த யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் ஆண்கள், பெண்கள் ,உபந்யாஸகர்கள், வாலண்டியர்கள்  சேர்ந்து மொத்தம் 37௦ திருநாமங்கள்.  ஆரம்ப கட்டத்தில் பலர் பல இடங்களில் சேர்ந்து கொண்டார்கள். அடியேன் அறிந்தவரை இதன் விவரம்.அமெரிக்காவிலிருந்து 22 பேர்கள் இவர்கள் சென்னை,வந்து ஆரம்பத்திலிருந்தே கலந்து கொண்டவர்கள்..மும்பையிலிருந்து கான்பூர் வந்து கலந்து கொண்டவர்கள் சுமார் 19 நபர்கள்.பெங்களூரில் இருந்து சென்னை வந்து கலந்து கொண்டவர்கள் 3 நபர்கள், 32 நபர்கள்  .ஹைதராபாத், குடந்தை போன்ற இடங்களில் இருந்து வந்து கலந்து கொண்டவர்கள் மூன்று நான்கு நபர்கள். ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீஉ.வே. பத்ரி நாராயண பட்டர் ஸ்வாமியும் மற்றும் பலரும்,,, காஞ்சியிலிருந்து ஸ்ரீ உ.வே.ஸ்ரீ நிதி சுவாமியும்,இன்னும் சிலரும் அடங்குவர். யாத்திரையில் குறிப்பிட்ட ஸ்தலங்களில் குறிப்பிட்ட காண்டங்களில் குறிப்பிட்ட ஸர்கங்களை வால்மீகி ஸ்ரீராமாயனத்திலிருந்து பாராயணம் நடத்தஸ்ரீ உ.வே.திருப்புல்லாணி  சுந்தரராஜ அய்யங்கார் சுவாமியும் மற்றும்  ஸ்ரீ வைஷ்ணவர்கள் சிலரும் வந்திருந்தனர்.., மீதி நபர்கள் சென்னை திருவல்லிக்கேணி, மயிலை, மாம்பலம் தாம்பரம், மற்றும் புற நகர் பகுதிகளை சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அடங்குவர். இதில்தென்கலையார், வடகலையார், ஸ்மார்த்தர்கள், மாத்வர்கள்,பாகவதர்கள் என்று பலரும் அடங்குவர்                                                            

                               பக்கம் இரண்டு.. 

மூன்று டாக்டர்கள் (அலபதி மற்றும் , ஹோமியோபதி) இவர்களும் தற்செயலாக இந்த யாத்திரையில் பங்கெடுத்தவர்கள். இருப்பினும் தங்கள் துணை தேவைப்படலாம் என்று சில குறிப்பிட்ட மருந்து வகைகளுடனும் சில முக்கிய ,உபகரணங்களுடனும் பயணம் செய்துள்ளனர் என்பதை பின்னர் அறியநேர்ந்தது..இது போக இரண்டு குரூப்பாக யாத்ரிகர்களுக்கு மூன்று வேலையும் குறிப்பிட்ட இடங்களில் காலை காபி பாலபோஜனம், மதியம் உணவு,, இரவு உணவு போன்ற தளிகைகளை கவனிக்க ஒரு குருப் பிரயாணம் செயதவர்களுடனும், மற்றொரு குருப் தனி வேன்களில், மளிகை சாமான்கள், மற்றும் பாத்திர பண்டங்களுடனும் முன்பாக யாத்திரை ரூட்டில் சென்று கொண்டிருந்தனர். முன்பாக செல்பவர்கள் அடுத்து தங்கக் கூடிய இடங்களில் தளிகை, பலகாரங்களை செய்து முடித்து யாத்திரையுடன் வரும் குருப்பிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி அடுத்த ஹால்ட் இடத்துக்கு முன் சென்று விடுவர். அதனால் எந்த இடத்திலும் உணவிற்காக யாத்திரிகர்கள் காத்திருக்காமல் காலதாமதம் செய்யாமல் தங்கள் புரோகிராம் படி சென்று கொண்டே இருக்கலாம். எங்கேயும் தொய்வு வரக் கூடாது. காரணம் சில இடங்களில் ட்ரைன் பயணம், சில இடங்களில் PUSHBACK A/C AIRBUSகள்.,என்று பிடித்து போகவேண்டி இருந்தபடியால் எங்கேயானும் HELD UP ஆகிவிட்டால் அவ்வளவு பேருக்கும் இடை இடையே RESERVE செய்திருந்த TRAINகள்/பஸ்கள் மிஸ் ஆகி விடக் கூடும் என்று இந்த ஏற்பாடு.

யாத்திரை கால அட்டவணையில் எந்த மாற்றமும் இன்றி செல்வது முக்கியமாக கருதப்பட்டது. ப்ரோக்ராமில் உள்ள எந்த ஸ்தலமும் விடாமல் ரத்து செய்யாமல் பார்த்துக் கொண்டு போனதும் முக்கியம். 

 நானும் என் மாப்பிள்ளை ஸ்ரீ கண்ணன் சுவாமியுடன் சேர்ந்து கொண்டேன். (இவர் திருவல்லிக்கேணி பகுதி  வாலண்டியர்) சுமார் 35 நபர்கள் கொண்ட ஒரு கோஷ்டிக்கு இரண்டு  வாலண்டியர் களை ஒப்படைத்து அவர்களிடம் GUIDE பண்ணும் பொறுப்பை ஒப்படைத்திருந்ததால் அவர்களை இலவசமாக இந்த யாத்திரையில் பங்கு பெற  ஏற்பாடாகி இருந்தது. எனக்கும் அவர் கூட வந்தது ஒரு துணைதான்.. ஆக,இந்த முப்பது நபர்களையும் யாத்திரை கோஷ்டியில் சேர்த்துக் கொண்டால் யாத்திரையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 38௦ நபர்கள் ஆகிறது. சுவாமி ஏற்கனவே ஒரு கூட்டம் போட்டு யாத்ரிகர்கள் என்னென்ன  பொருட்கள் கொண்டு வரவேண்டும் அவைகளை எப்படி பாக் செய்து எடுத்து வரவேண்டும் என்றெல்லாம் விவரமாக சொல்லி இருந்தார். அதாவது குறைந்த பட்சம் இரண்டு அதிக பட்சம் மூன்று செட் வேஷ்டி உத்தரியங்கள். ஆண்டாள் கோஷ்டியார் அதேபோன்று இரண்டு மூன்று நாளைக்கான ஆடைகள்,, டவல், திருமண்பெட்டி, டார்ச்லைட்,மற்றும் தேவையான உள்ளாடைகள் பேன்ட்/ஷர்ட், சீப்பு,பேஸ்ட், பிரஷ் கண்ணாடி போன்ற இதர வஸ்துகள், இவைகள் ஓரு பெட்டியில் வைத்து பூட்டி வைத்துக்கொள்வது. கூடியவரை லக்கேஜ்களை

                               பக்கம் – மூன்று

குறைத்து பயணம் செய்து கொள்வது நல்லது. இந்த பெட்டிகளை அடிக்கடி எடுக்க முடியாது. எந்தெந்த ஸ்தலங்களில் இரவு தங்குதல், உள்ளதோ அந்தந்த இடங்களில் மட்டுமே தருவர். மற்ற சமயங்களில் பஸ்களின் டிக்குகளில் அந்தந்த வாலண்டியர்களின் கட்டுப்பாட்டில் பெட்டிகள் இருக்கும். மற்ற முக்கிய சாதனங்கள், சாப்பிடும் தட்டு, பாராயண புத்தகம், ஒரு செட் டபரா டம்ளர், அனுயாத்திரைகையேடு, போர்வை ,துணிகளை காயப்போடும் கயிறு டார்ச் லைட் அவரவர்க்கு தேவைப்படும் மருந்து வகைகள் மட்டும் கைப்பையில் வைத்திருக்க வேணும்.. இதற்காக அடிக்கடி பெட்டியை கொடுத்து வாங்கி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.. மாற்று துணிகள், திருமண்பெட்டி, டவல்,.பேஸ்ட், பிரஷ்,சோப்பு, சீப்பு, கண்ணாடிகள் போர்வை,AIRPILLOW போன்றவைகள் தோள்பைகளில் அடக்கம். இரவு தங்கும் இடங்களில் கொடுக்கப்பட்டு, காலை குளியல்,ஆடை மாற்றல் ஆகி,முன்னாள் உடுத்திய துணிகளை சோப்பு போட்டு கசக்கி காயப்போட்டு விட்டு காலை பால போஜனம் காபி போன்றவைகளை முடித்துக்கொண்டு உள்ளூர் ஸ்தலம் சேவித்து திரும்புகையில் காய்ந்த துணிகளை மடித்து பெட்டியில் போட்டு பூட்டி திரும்பவும் வளண்டியரிடம் ஒப்படைக்க வேண்டும்.அடியேன் நல்ல மயில்கண் வேஷ்டி உத்தரியம் ஒன்றை சலவை செய்து வந்ததை யாத்திரையில் சீதா கல்யாணம்,போன்ற முக்கிய நிகழ்ச்சிகளிலும் நடக்கையிலும் மற்றும் அயோத்தி, திருக்குறுங்குடி, ஆழ்வார் திருநகரி, திருப்புல்லாணி, திருகோஷ்டியூர், ஸ்ரீரங்கம் போன்ற திவ்ய தேசங்களில் சேவிக்கும் காலங்களிலும் உடுத்திக்கொள்ள எக்ஸ்ட்ராவாக எடுத்து வைத்துக்கொண்டேன் இரண்டு செட்டோடு மூன்றாவதாக ஒன்று எடுத்துக்கொண்டேன். .இது ஒரு நல்ல ஏற்பாடே. அடிக்கடி பெட்டியை திறக்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் மதியம், இரவு சாப்பாட்டு நேரங்களில் தட்டு டம்ளர் மட்டும் கைப்பையில் இருந்து எடுத்தால் போதுமானது.சில சமயங்களில் வண்டிகளிலேயே பிரசாதங்களை உட்கொள்ள வேண்டியிருந்தால் தட்டு தம்ளர்கள் கைப்பையில் இருப்பது சௌகரியமாக இருக்கும். தீர்த்தம் எங்கே வேண்டுமானாலும் பஸ் நிற்கும் இடங்களில் பாட்டல்கள் வாங்கிக் கொள்ளலாம். இவ்வளவு இந்த விஷயங்களை பற்றி எழுதணுமா என்று சிலர் நினைக்க கூடும். சுமார் நானூறு பேர்களை அழைத்துக்கொண்டு 85௦௦ கிலோ மீட்டர் பயணம் வடக்கே நேபாள தேசத்திலிருந்து தெற்கே திருப்புல்லாணி வரை பயணிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. மேலும் பல இடங்கள் காடுகள், நகரங்களில் அவ்வளவு பேருக்கும் தங்க இட வசதிகள், ஆகார வசதிகள் இடையிடையே ரயில்பிரயாண  டிக்கெட் ரிசெர்வேஷன்கள் பாதுகாப்பு விஷயங்கள் என்றிப்படி   எவ்வளவோ விஷயங்கள் முன் யோசனையுடன் செய்யப் பட்டிருந்தது

முன்னுரை முற்றிற்று.

 இனி அநுயாத்திரை விவரங்கள் ஆரம்பம்                       

 பக்கம் –நான்கு

20-08-2006 –காலை (ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி எம்பெருமானை கால சந்தியில் சேவித்து தீர்த்த பிரசாதங்களை பெற்றுக்கொண்டு எல்லா சந்நிதிகளையும் சேவித்துக் கொண்டு எம்பெருமானிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு அகம் சேர்ந்து திருவாராதனத்தை முடித்துக்கொண்டு மாடியில் இருந்த அத்யாபகர் பார்த்தசாரதி அய்யங்கார் சுவாமியிடம் ஸ்ரீ ராம அனுயாத்திரை விவரங்களை எடுத்துக் கூறி வெற்றிலை பாக்கு பழத்தட்டில் ரூ.1௦௦/=ஐ வைத்து யாத்திரா தானமாக தட்டை அவரிடம் கொடுத்து தண்டம் சமர்ப்பித்து விட்டுவந்தேன். யாத்திரை  2௦-௦8-2௦௦6 தொடங்கி ௦8-௦9-2௦௦6 வரை நடக்குமாதலால் அகத்து நித்ய திருவாராதன பொறுப்பையும் நாங்கள் இருவருமே செல்வதால் கவனித்துக் கொள்ள வேண்டுமாய் பிரார்த்தித்து கீழிறங்கி பிறகு.போஜனாதிகள் ஆனபின்பு பாக்கிங் வேலைகளை கவனித்தோம்  அடியேனும் அடியேன் மாப்பிள்ளையும் இரண்டு பெரும் இரண்டு சிறிய சூட்கேஸும், இரண்டு தோள்பைகளும் தயார் படுத்திக்கொண்டு சுமார் ஒரு நாற்பது சிறிய நூறு கிராம் எடை கொண்ட கல்கண்டு,முந்திரி,திராட்சை கொண்ட பாக்கெட்டுகள் வாங்கி வைத்திருந்ததையும் எடுத்துக்கொண்டோம். அங்கங்கே திவ்ய தேசங்களில் பெருமாளுக்கு காட்டி ஒரு பாலிதீன் பையில் அர்ச்சகர் எடுத்துக்கொண்டு போக தருவதை சேமித்து வந்தால் யாத்திரை பூர்த்தியாகி அகம் சேர்ந்தவுடன் விசாரிக்க வருபவர்களுக்கும், ஆத்தில் உள்ளவர்களுக்கும் பிரசாதமாக தரலாம் என்று நோக்கத்தில் கொண்டு போனது...கைச்சிலவுக்கு தேவைப்படலாம் என்று பர்சில் சிறிது பணமும் செல் போனும். இதற்கு மேல் தேவைப்படின் ATM கார்டும் வைத்திருந்தோம். பெரிய ப்ளான் எதுவும் எங்களுக்கு இல்லை. சென்னை டு கான்பூர் வரை ரிசெர்வ்செய்து  ரயில் டிக்கெட் எங்கள் இருவருக்கும் ஏற்கனவே கொடுக்கப் பட்டிருந்தது.. மற்ற ஏற்பாடுகள் எல்லாம் ஸ்வாமியே எல்லாம் பார்த்துக் கொள்வதால் விசாரம் .ஒன்றும் இல்லை. முடிய மணி பதினொன்று ஆகியது. பிறகு சிறிது ஒய்வு எடுத்துக்கொண்டு இரவு ஆகாரம் ஆனவுடன் ஒன்பது மணிக்கு சென்ட்ரல் ஸ்டேஷன்-ஐ நோக்கி பயணப்பட்டோம். ஸ்டேஷனை பத்து மணிக்கு முன்னமே அடைத்தாகி விட்டது .நாங்கள் பிரயாணப்படவேண்டியடிரெயின் ராப்தி சாகர் எக்ஸ்பிரஸ்  திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி சென்னை வழியாக இரவு பதினோரு மணிக்கு கோரக்பூர் நோக்கி பயணமாகும் வண்டி.. இரண்டு இரவுகளும் ஒரு பகலும்  பயணப்படவேண்டிய தூரம் .பத்துமணி யிலிருந்தே நம் யாத்த்ரிகர்கள் ஜேஜே என்று வந்த வண்ணமா யிருந்தனர். சுவாமியை மாற்றி மாற்றி தெண்டன் சமர்ப்பித்தவாறு இருந்தார்கள். எங்கே பார்த்தாலும் பஞ்சகச்ச வேஷ்டிகளும், நெற்றியில் திருமண்காப்புகளும், மடிசார் புடவைகளுமாய் அந்த இரவு மின் ஒளியில் அந்த ஸ்டேஷனே ஒரு வித்யாசமான ஸ்ரீ வைஷ்ணவ

                                  பக்கம் – ஐந்து

பயணிகள் கூட்டத்தை காட்டிக்கொண்டு இருந்தது..சுமார் ஐந்து போகிகள் (ரயில் பெட்டிகள்) நமக்கு புக் ஆகி இருந்ததில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வருவோர்கள் மட்டும் பயணமாகி வந்திருப்பர் என்று எண்ணுகிறேன். வண்டி பத்தேகாலுக்கு. பிளாட்பாரத்தில் நுழைந்து விட்டது. ஸ்லீபர் கம்பார்ட்மெண்டுகள் ஆனபடியால் முட்டி மோத வேண்டிய அவசியமின்றி ஒரு அரை மணி காலத்தில் சீட்களை பார்த்து அமர்ந்தாகி விட்டது.. சுவாமியும் அவருடைய தேவிகளும், உபன்யாசக சுவாமிகளும், இன்னும் சில பெரியோர்கள் கூடுதல் பணம் கட்டி ஏ,ஸி பெட்டியில் பயணப்பட்டனர். அவர்களுக்கு பல  வேலைகள் இருந்தன. பல திக்குகளில் இருந்து சென்னை வந்தவர்கள் எல்லோரும் வண்டியில் ஏறி விட்டனரா, யாரேனும் வாராமல் இருந்திருந்தால் அவர்களை செல்போனில் அணுகி விவரத்தை தெரிந்துகொண்டு அந்த இடத்தை RAC-ல் புக்பண்ணப் பட்டிருந்தவர் களுக்கு வாங்கி தருதல், சமையற்காரர்களுக்கு என்று தனியாக ஒரு அரை போகி புக் செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் ஏறி அமர்ந்தாகி விட்டனரா என்றும் மறுநாள் மூன்று வேளைக்கு தயார் செய்யப்ப பட்ட உணவு வகைகளை மற்றும் உணவுப் பாண்டங்களை சரியாக எற்றியாகி விட்டதா என்றும் .செக் பண்ணிக் கொண்டு கார்டிடம் சொன்ன பிறகே வண்டி பதினொன்றே காலுக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஐ விட்டு கிளம்பியது. அடியேனுக்கும் என் மாப்பிள்ளை க்கும் சமையற்காரர்கள் இன்னும் சில வாலண்டியர்கள் பயணித்துக் கொண்டிருந்த போகியில் தான் ஸ்லீபர் வசதி கிடைத்தது. காரணம் அடியேன் ரொம்ப கடைசி நேரத்தில் இந்த யாத்திரையில்  பயணிக்க முடிவெடுத்தேன். அதனால் இந்த சமையற்காரர்கள் பட்ட கஷ்டங்கள் மறுநாள் மூன்று வேலைக்கும் ஆகாரதிகளை கெடாத வகையில் பேணிக் காத்த விவரங்களையும் ருசி குறையாமல் குளிர்பதன சாதனங்கள் இல்லாமல் எப்படி பாதுகாப்பது என்ற விவரங்களையும் நேரில் அறிய முடிந்தது..

.ரயில்பெட்டியிலேயே இரவு .யாத்த்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு ஸ்ரீ ராம அநுயாத்திரை,-ஸ்ரீ இராமாயண சரித்திரம்,மற்றும் க்ஷேத்திர விளக்கப் புத்தகம்   என தலைப்பு கொண்ட ஒரு கையேடு வழங்கப் பட்டது. இரவு சுமார் ஒருமணி வரை ஒரொரு போகியாக ஸ்ரீ திருப்புல்லாணி சுந்தரராஜ ஐயங்கார் சுவாமி ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தை வெகுவாக சுருக்கி ஒரு உபந்யாசத்தை ஒரு மொபைல் ஒலிபெருக்கி கருவியுடனும் மைக்குடனும் ஸாதித்தார்.. நம் ரிசெர்வ் பெட்டிகளில்  வேறு பயணிகள் இல்லாததால் பிரச்சனை ஒன்றும் இல்லை.எல்லோரும் ஆகாராதிகளை அகங்களிலேயே முடித்துக்கொண்டு வண்டி ஏறியதால் ராத்திரி ஆகார பிரச்சனை ஏதும் இல்லை. தேவைப்பட்டவர்கள் பழம், பால், பிஸ்கட் போன்றவைகளை வண்டி நின்று சென்ற ஜங்ஷன் ஸ்டேஷன்களில் வாங்கிக் கொண்டனர்.அன்று எல்லோரும் நன்றாகவே உறங்கினோம்.சுவாமி அடிக்கடி சொல்லுவார், இந்த யாத்திரை பிக்னிக் அல்ல பில்க்ரிமேஜ். ஆகையால் ரொம்ப சௌகரியங்களை எதிர்பார்க்காமல்

                                        பக்கம் – ஆறு

புனிதமான ஸ்தலங்களை சேவிப்பதிலேயே கவனத்தை வையுங்கள் என்று. இருப்பினும் அடியேன் ரொம்பவும் விஸ்தாரமாகவே எழுதிப் போகிறேன். இனி 21-08-2006 திங்கட்கிழமை நிகழ்ச்சிகள் காண்போம். அனேகமாக பாதிப்பேர் காலை நாளே முக்காலுக்கே விழித்துக் கொண்டனர். பயணித்தவர்களில் சுமார் அறுபது சதம் நபர்கள் சீனியர் சிடிசன்களே. இராத்திரி பத்து பதினோரு மணி வரை தூக்கம வராதவர்கள், காலை 5 மணிக்கு முன்பே விழிப்பவர்கள்.அதனால் அவர்கள் காலை எழுந்திருந்து பற்களை விளக்கியவுடனே காபியை எதிர்பார்ப்பவர்கள். ஆனால் காலை காபி அவரவர்களே முதல் நாள் மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டியது என்று ஸ்வாமி சொல்லிவிட்ட படியால் அநேகமாக ஐந்தரை மணிக்குள்ளாகவே பலரும் பல் தேய்த்து முகம் கழுவி ஆறு மணிக்கு பெருமூச்சு விட்டுக்கொண்டே வண்டி விஜயவாடா ஸ்டேஷனில் நின்றபொது காபி சாப்பிட தயாராகி விட்டனர்.. பால் வாங்கி  கையில் கொண்டு வந்திருந்த ஹார்லிக்ஸ்-ல்கலந்து சாப்பிட்டனர்.சிலர். பலரும் பால் வாங்கி SUNRISE, BRU பவுடர் சர்க்கரை சேர்த்து பருகினர். பாலுக்கு தோஷமில்லை, காபி பொடி சக்கரை தங்கள் அகத்தில் இருந்து கொண்டு வந்ததாகையால் இது கொஞ்சம் ஆசாரம் என்று அவர்களுக்கு ஒரு சமாதானம் இருந்திருக்கும்.. டம்ளர் டபரா  கைப்பையில் இருந்ததால் ஆத்தி சாப்பிட சௌகரியமாய் விட்டது. கூடியவரை டிபன் அயிட்டங்கள் வெளியே ஸ்டேஷன்களில் சாப்பிடவேண்டாம் என்று சுவாமி சொல்லியிருப்பதாக வாலண்டியர்கள் வேறு கொஞ்சம் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவ்வப்போது பட்டினி கிடக்காமல் பிஸ்கட் பழங்கள் போன்ற அயிட்டங்களை இரண்டொன்று சாப்பிட்டுக்கொண்டு வந்தார்கள். இந்த ஒருநாள் பயணம் ஆரம்பத்திலே சற்று சிரமத்தைக் கொடுத்தாலும் அதன்பின் வேளாவேளைக்கு ஆகாரங்கள் வெகு சுவையாகவே இருந்ததை இங்கேயே சொல்லி விடுவது நல்லது. . இன்று குளியல் இல்லை. வாஷ் பேசினில் நன்றாக முகத்தை கழுவி புதிதாக திருமண்காப்பு இட்டுக்கொண்டு அனைவருமே கொஞ்சம் FRESH ஆகி விட்டனர். மணி 8-3௦ அல்லது ஒன்பதிருக்கும். ட்ரைன் வாரங்கள் (WARANGAL) ஸ்டேஷன் –ல் நின்றது. ராத்திரியே சொன்னபடி, ஒவ்வொருவரையும் விசாரித்து எவ்வளவு தேவயோ கேட்டு கேட்டு மிளகாய்பொடி எண்ணையுடன் புரட்டி எடுத்த இட்லிகளை காலை பாலபோகமாக (BREAKFAST) அவரவர் கொண்டு வந்திருந்த தட்டில் சேர்த்தனர். காரணம் அதிகமாக கேட்டு வாங்கி, சாப்பிட முடியாமல் வேஸ்ட் பண்ணிடப் போகிறார்களே என்று பார்த்து பார்த்து ஸாதிக்கவேண்டிய நிர்பந்தம் பரிசாரகர்களுக்கு. மொத்தம் ஐந்து போகிகள் சேர்ந்தே இருந்தபடியால் வெளி பயணிகள் இல்லை.வாலண்டியர்கள் அவரவர்களுக்கு ஒப்படைத்த 35 நபர்களுக்கும் கிட்ட இருந்து பரிசாரகருக்கு காட்டி வந்ததால் எல்லோரும் ஒரு அரைமணி காலத்தில்.நபருக்கு நான்கு இட்டலிக்கு குறையாமலும்(இட்லியும் நான்றாக சற்று பெரிய சைஸ்சிலியே இருந்தது. சிலருக்கு ஆறேழு வரையும்கூட கேட்டு வாங்கி பால போஜனத்தை முடித்துக்கொண்டனர் தேவாமிருதமாக இருந்தது.. . தேவைப்பட்ட

                                                                                                                                                                         பக்கம் – ஏழு          

வர்கள் அந்த ஸ்டேஷனில் SECOND DOSE காபி வாங்கி சாப்பிட்டார்கள்.. அதில் அடியேனும் மாப்பிள்ளையும் சேர்ந்தவர்களே. டிபன் சாப்பிட்டால் காபி சாப்பிடாவிட்டால்பூர்த்தியாகாது. வண்டி சிறிது நேரம் அந்த ஸ்டேஷனில் அதிகமாகவே இளைப்பாறி புதிய என்ஜின் மாற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அடுத்த ஹால்ட் மதியம் ஒரு மணிக்கு பல்ஹார்ஷா (BALSHARSHAH) என்று போட்டிருந்ததை அடியேன் கொண்டு போயிருந்த ரயில்வே கைடு மூலம் அறிந்தேன்.

இந்த இடத்தில் ஒரு விஷய முன்னாள் ராத்திரி) திருப்புல்லாணி உ.வே.சுந்தரராஜ அய்யங்கார் சுவாமி சுமார் இரண்டு மணி காலத்திற்குள் ஐந்து கம்பார்ட்மென்ட்டுக்கும் சென்று   அனுயாத்திரை பற்றிய ஒரு முன்னோட்டத்தை ஒரு அரை மணிகாலம் உபன்யசித்த விஷயத்தை இங்கே சொல்லிவிடுவது நல்லது. ஸ்வாமி ஸாதித்த விஷயங்கள்: ஸ்ரீமந் நாராயணனின் அவதாரமான ராமபிரான் பாரத தேசத்தின் உயிர்நாடி. அவனுடைய வரலாற்றை வடித்த வால்மீகி ராமாயணம் நம் தேசத்துக்கே ஆதாரம். மஹாலக்ஷ்மியின் அவதாரமான சீதையும், இராமனும் தங்கள் மெல்லடி நோவ வடக்கே அயோத்தி முதல் தெற்கு கோடியில் திருப்புல்லாணி வரை நடந்தனர்.இவர்களின் யாத்ரைக்கு தேசம் முழுவதும் வாழ்ந்த பக்தர்களை கடாக்ஷிப்பதே முக்கியப் பயன். பகவானை பின்தொடர்ந்து செல்வது அநுயாத்திரை என்று போற்றப்படுகிறது. இந்த அநுயாத்திரை நம் உள்ளத்தில் நிறைந்திருக்கிற ஸீதா ராமர்களின் மார்க்கத்தை பின் தொடர்ந்து அவர்கள் திருவடி பட்ட புண்ணிய க்ஷேத்திரங்களை தர்சிக்கும் அவாவோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. ஒவ்வொரு வருக்கும் இது பற்றிய கையேடு ஒன்று  கொடுக்கப் பட்டுள்ளது..அதில் அநுயாத்திரையின் போது வரும் அந்தந்த இடங்களின் பற்றிய இராமாயண ஸ்லோகங்களின் சிறு விளக்கம் முதல் பகுதியிலும், அந்த ஸ்லோக விவரங்கள், மற்றும் யாத்திரையின் பாதை வரைபடங்கள் தரிசிக்கபோகும் முக்கிய ஸ்தலங்களின் வண்ண புகைப்படங்களும் இரண்டாவது ப்பகுதியிலும் தரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..முதல் பாதை ஸ்ரீ ராம,லக்ஷ்மண,பரத சத்ருக்னன் அவதரித்த அயோத்தி, பின் அங்கிருந்து விஷ்வாமித்திர மகரிஷியால் அவர் தன் யாகத்தை முடிக்க ஸ்ரீ ராமனையும், லக்ஷ்மணனையும் அழைத்து செல்லப்பட்டு யாகத்தை முடித்துக்கொடுத்து அங்கிருந்த மிதிலைக்கு நடந்து அங்கே சீதா கல்யாணத்தை முடித்து மீண்டு தசராதிகளுடன் அயோத்தி திரும்பிய பாதை

 இரண்டாவது பாதை அயோத்தியிலிருந்து சித்திரகூடம், சித்திரகூடத்திலிருந்து பஞ்சவடி, பஞ்சவடியிலிருந்து கிஷ்கிந்தை, அதன்பின்பு கிஷ்கிந்தையிலிருந்து திருப்புல்லாணி வரையாக காட்டப்பட்டுள்ளது. ஒரொரு பாதையிலும் இடையிடையே ஸ்ரீ ராமன் சென்ற திருவடி பட்ட முக்கிய ஸ்தலங்கள், ஆஷ்ரமங்கள், எல்லாவற்றையும் நாமும் ஸ்ரீ ராமன் அடியொற்றி தரிசிக்கப்போகிறோம். என்று குறிப்பாக சொல்லி நிறுத்தி, மறுநாள் மதிய ஆகாரம் முடிந்த பிறகு ஸ்ரீ இராமாயணத்தில் பாலகாண்டத்தின் சுருக்கத்தை சொல்லுவேன் என்று சொல்லியிருந்தார். இனி மேலே நடந்த விஷயங்கள்:

 வண்டி பால போஜனம் முடிந்த பிறகு வெகு வேகமாக விரைந்து கொண்டிருந்ததை ஜன்னல்கள் திறந்து விட்டபடியால் அனைவரும் வெளி தேசங்களை கண்டு கொண்டே அந்தந்த  தேசாசார மக்களையும் பார்த்துக்கொண்டே பயணப்பட்டோம். பகல் ஒரு மணி வாக்கில் வண்டி   BALHARSHAH (பல்ஹர்ஷா) என்ற ஸ்டேஷன்-ஐ அடைந்தது. இந்த இடத்தில் பகல் ஒருமணிக்கு சுமார் நாலு மணி நேரம் வேகமாக ஓடி இடையில் எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் ஓடியதால் பயணிகள் சற்று சோர்வோடு இருந்ததை பார்த்தேன்.ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்ததும் குறைந்திருந்தது. இடையில்

                                             பக்கம் – எட்டு

ஒருமுறை கிருஷ்ணன் சுவாமி சக ஆப்தர்களுடன் சம்பாஷித்துக்கொண்டே ஒருமுறை ஐந்து பெட்டியுள்ளும் சென்று யாத்திரை பயணிகளை விசாரித்துக்கொண்டு நடந்தபோது சிறிது கலகலப்பு ஏற்பட்டது. அந்த இடத்தில் .பகல் ஒரு மணியாகி விட்டதால் ஆகாரம்  வழங்க ஏற்பாடுகள் நடந்து வந்தது. காலை பலகாரம் கொடுத்த மாதிரியே ஒவ்வொருவர் தட்டிலும் வாலண்டியர்கள் தொடர்ந்துவர பரிசாரகர்கள் பெரிய அகப்பை போன்ற கரண்டி மூலம் இருமுறை வெத்த குழம்பு சாதத்தை தட்டில் சேர்த்துவிட்டு , ஒரு பாக்கெட் உருளை சிப்ஸ்-ஐயும் தந்துகொண்டே போனார்கள். இன்னொரு குருப் பரிசாரகர்கள் வேறு அன்டாவை நகர்த்திக்கொண்டு வந்து தயிர் சாதத்தை சாதித்துக்கொண்டே போனார்கள். முன் போகியில் இருந்து  திரும்பி பின் போகிக்கு வரும் சமயம் மீண்டும் இரு சாதங்களையும் கேட்டு பரிமாறினார்கள். அந்த வெத்தகுழம்பின் அபாரமான சுவையை 15-வருஷங்களாகியும் என்னால் மறக்க முடியவில்லை. சூடாக  இல்லை என்ற குறை தவிர வேறொன்றும் சொல்ல இயலாது. சாதம் ரொம்ப குழைத்து வடிக்கப்பட்டு ருசியான சுண்டைக்காய், மனத்தக்காளி வத்தல் குழம்பு, புளி,, காரம், உப்பு, எண்ணை எல்லாம் திட்டமாக சேர்த்து, சாதம் குழம்புடன் நெகிழ்ந்து சுவையுடன் மீண்டும், மீண்டும், கேட்டு வாங்கி சப்பிடும்படியாக இருந்தது. தயிர் சாதம் அதற்கு ரொம்ப மேட்ச் .பால் நிறைய சேர்த்திருந்தார்கள் தயிரை குறைவாக சேர்த்து கலந்து இருந்ததோடு,திட்டமான உப்பும் சேர்த்து கொஞ்சம் தளராகவே பகளாபாத் மாதிரி தட்டில் விழுந்தது. ஒருவர் கூடவே அதன்மேல் நன்கு பொறித்த கடுகு, மிளகாய், கருவேப்பிலையை  ஒரு தனி பாலிதீன் பையில் வைத்துக்கொண்டு ,சேர்த்துக்கொண்டே போனார். அவைகள் நன்றாக மொரு மொரு வென்று இருந்தது. வெத்தகுழம்பு சாதத்தை மிஞ்சும் வகையில்  தயிர்சாதம் தொட்டுக் கொள்ள எலுமிச்சை ஊறுகாயுடன் கனகச்சிதமாக இருந்தது. பக்கத்திலிருந்த என் நண்பர் நான் புகழ்ந்ததை கேட்டு, எல்லோருக்கும் நல்ல பசி , எப்படியிருந்தாலும், பசித்து புசித்தால் அதன் சுவையே தனிதான் என்று பேசிக்கொண்டு இன்று ராத்திரி மறுபடியும் தயிர்சாதம் தான். அதான் குழம்பு சாதம் அதிகம் போட்டு தயிர் சாதத்தை குறைவா செலவழிக்கிறார்கள் என்று கூற மற்றவர்கள் அவர்கள் என்ன செய்வார்கள், டிரைனில் சமைக்க முடியாது அதுவும் 35௦-பேருக்கு கஷ்டம்தான். இரண்டு சாதமுமே கெடாதபடியும் ரயில்வே சாப்பாட்டை வாங்கித் தராமலும் கூடியவரை ஆசாரமாகவே கொடுத்து வருவதையும் பாராட்டவேண்டும் என்று சர்டிபிகேட் கொடுத்துக்கொண்டே சமையல் காண்டிராக்ட் யாரு தெரியுமோன்னோ, நம்ம டி.நகர்  புருஷோத்தமனாக்கும் என்று சர்வேஸ்வரனையே சொன்னார் போல் சொல்லி தீர்த்தத்தை பருகி ஏப்பம் விட்டார். எல்லோரும் வாஷ்பேசினில் கைகளை அலம்பிக்கொண்டு  தட்டுகளை அவரவர்களே அலம்பி கொஞ்சம் உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்றபடி SLEEPER பலகைகளை தூக்கி மாட்டினார்கள்...அதைப்பார்த்து மற்றவர்களும் ஸ்லீப்பரை தூக்கி மாட்ட அடுத்த பத்தாவது நிமிஷத்தில் பெட்டியே உறக்கத்தில் இருந்தது.  வண்டி ஐந்து

                                                                                                                                                     பக்கம் –ஒன்பது

மணிக்கு நாக்பூர் வந்தபோது எல்லோரும் முழித்துக் கொண்டனர். ஒரு கப் பால் வாங்கி ப்ரூகாப்பி தயாரித்து பருகினர். வண்டி 5-௦௦ மணிக்கு ஸ்ரீமான் சுந்தரராஜ அய்யங்கார் சுவாமி எங்கள் போகியில் நடுவில் சைடு BOTTOM SLEEPER-ஐ மடக்கி பென்ச் மாதிரி ஆக்கிக்கொண்டு ஒரு  ஒலி பெருக்கியை முன் பெட்டியின் ஆரம்பத்திலும் மற்றொரு ஒலிபெருக்கியை பின்     பெட்டியின் ஆரம்பத்திலும் கொக்கிகளில் மாட்டி ஒரே சமயத்தில் மூன்று பெட்டிகளிலும் உள்ளோர் கேட்கும்படி  தயார் செய்துகொண்டு பேச ஆரம்பிக்கையில் வேளுக்குடி சுவாமி அவர் பக்கத்தில் வந்து  உட்கார்ந்து மைக்கை வாங்கி சில விஷயங்களை கூற தயாரானார்.. கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் நன்கு தூங்கி எழுந்து விட்டபடியாலும் எல்லோரும் முகம் கழுவி தங்களை FRESH செய்துகொண்டு விட்டபடியாலும் ஊக்கத்துடன் ஸ்வாமி சொல்லப் போவதை கேட்க  தயாரானார்கள் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி  சொன்ன விஷயங்கள்:

அடியேன் ஏற்கனவே சென்னையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் சில விஷயங்களை கூறி யுள்ளேன். அதை மீண்டும் இப்போது வலியுறுத்துகிறேன்.

 ஸ்ரீ சீதா ராமபிரான் அருளால் அனேகமாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.எல்லா டிகேட்டுகளும் முன் பதிவு செயப்பாட்டு விட்டன. அந்தந்த ஸ்தலங்கள் வரும் சமயம் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும்.தங்கும் சத்திரங்களும், LODGE களும் அந்தந்த இடத்திலுள்ள வசதிப்படி ஏற்பாடாகி உள்ளது. தினப்படி நிகழ்ச்சி நிரல் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒலிபெருக்கி மூலம் எல்லோரையும் கூட்டி அறிவிப்போம்.

பேட்ஜ் அணிந்துள்ள வாலண்டியர்களை கேட்டாலும் சொல்லுவர். ஸ்ரீ ராமனின் பாதையைப் பற்றி அறிந்த பண்டிதர்களோடும், பல நூல்களின் உதவிகள் கொண்டும் யாத்திரை தயாரிக்கப் பட்டுள்ளது. நம் உதவியாளர்கள் ஏழுபேர்  இரண்டுமுறை சென்று எல்லா இடங்களையும் நேரில் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் சூழ்நிலையை உத்தேசித்து அங்கங்கே நிகழ்ச்சி நிரல் மாறலாம். எல்லா யாத்ரிகர்களும் ஏதாவது ஒரு போட்டோ ஐ.டி. கார்டு கொண்டு வரவேண்டும் என்று சொல்லியிருந்தேன். இது நேபாள எல்லையில் ஜனகபுரி செல்ல தேவைப்படலாம். புனேவில் இருந்து குண்டக்கல்லுக்கு எல்லோருக்கும் ஒரே ரயிலில் இடம் இல்லாததால் அடுத்தடுத்து ஒரு மணிநேர இடைவெளியில் இரண்டு ரயிலில் வருகிறோம். அந்த இடங்களில் கூடஇருக்கும்  வாலண்டியர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். நாளைக் காலை 8-3௦ மன்னிக்கு வண்டி கான்பூர் செல்கிறது.அந்த இடத்தில் நாம் எல்லோரும் இறங்குகிறோம். கான்ப்போரில் இருந்து நாகபுரி வந்து சேரும் வரை 3 5 இருக்கைகள் கொண்ட pushback AIR-BUSகள்ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முதல் பத்து தினங்கள் இதில்தான் நாம் பயணம் செய்கிறோம். அடுத்து ஒரு சுற்று குண்டக்கல் ஸ்டேஷனில் இருந்து  கிஷ்கிந்தா வட்டாரத்திலும், இரண்டாவது சுற்று மைசூர் வட்டாரத்திலும்,மூன்றாவது சுற்று மணியாச்சி ஸ்டேஷனில் இருந்து ஸ்ரீரங்கம்

                                           பக்கம் – பத்து

வரையிலும் 55- இருக்கைகள் கொண்ட 6-பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்த விடங்களில் AIRBUS கள் கிடைக்கவில்லை. ஆனால் மூன்று சுற்றும் சிறு தூரமே பயணம் செய்ய வேண்டியிருக்கும்..ஒவ்வொரு பஸ்சிலும் இரண்டு வாலண்டியர்கள் இருப்பார்கள். அவர்களோடு நன்றாக பரிச்சயப்படுத்திக் கொண்டு ஒத்துழைக்கவும்.பிரயாணத்தில் நாமெல்லோரும் 35௦ பேர்களும்  சீதா ராமர்களின் குழந்தைகள் என்ற உணர்வுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை யுடனும் சகிப்புத் தன்மையுடனும் ஸ்ரீவைஷ்ணவ பண்புகளை கடைபிடிக்க வேண்டும். முடிந்தவரை வழியில் எந்த பொருளையும் வாங்கி சேர்த்துக்கொண்டு லக்கேஜ்-ஐ கூட்டிக்கொண்டு அவதிப்படாதீர்கள்.ஒருபெட்டி ஒரு தோள்பையோடு ஏற்கனவே சொன்னபடி பாராயண ஸ்ரீகோசம்,கையேடு,தட்டு,டம்ளர் ,டார்ச்லைட்,போர்வை, ஊதும் தலையணை கொடிக் கயிறு, அவரவர் வியாதிக்காக சாப்பிட்டு வரும் மருந்துகள் ஏதேனும் இருப்பின் அவைகளையும் , வைத்துக் கொள்ளுங்கள்..உங்களுக்கு தேவைப்படும் குடிநீரை நீங்களே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் .பொது குழாய்களிலோ, நதிகளிலோ நீர் அருந்த வேண்டாம்.விலைஉயர்ந்த பொருள்களையோ நகைகளையோ அணிந்து வரவேண்டாம் என்றும் சொல்லியுள்ளேன்..ஆழமான புண்ய நதிகளில் குளிக்க வேண்டி வந்தால் வயதானவர்கள் படிகளில் அமர்ந்து சொம்புகளில் நதி நீரை மொண்டு குளிப்பது நல்லது. நதிகளில் குளிக்காதவர்கள் தங்கும் இடத்திலேயே குளித்து தயாராகலாம். நேபாளத்தில் கலவரம்இருந்தால் சீதாமர்ஹியிலேயே சீதாகல்யாணம் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஸர்கங்கள் மற்றும் ஸ்லோகங்கள், விவரணம் கையேட்டில் உள்ளது. ஸ்லோகங்கள் சேவிக்கும்போது நீங்களும் கூடவே புத்தகத்தைப் பார்த்துக்கொண்டே சேவிக்கலாம். இதன் விளக்க உரை அடியேன் உபன்யாசங்களில் சொல்லப்படும். யாத்திரையில் பிற இரவு பேசுவது என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்ரீ ராம நாம பஜன் தெரிந்தவர்கள் பாடலாம். அந்த பஸ்ஸில் உள்ளவர்கள் அவருடன் சேர்ந்து பாடுவதும் விசேஷம் இயன்றவரையில் தங்கும் இடம் மற்றும் உணவு ஏற்பாடுகள் நன்றாகவே செய்துள்ளோம். ஆனால் இதில் பல இடங்கள் காட்டுக்குள்ளும் முன்னே சென்று அறியாததாகவும் இருக்கிறபடியால் வசதிக்குறைவு ஏற்படும்..அதை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டுகிறேன் என்று சொல்லி முடித்து பின் இரண்டு போகிகளில் உள்ளவர்களுக்கு இந்த விவரங்களை சொல்ல மைக், ஒலிபெருக்கி உபகரணங்களுடன் சென்று விட்டார். மணி 7-௦௦ ஆகி விட்டது. சிலர் காபி தயாரித்து பருகினர். 8-௦௦ மணிக்கு ததியோண்ணம் (தயிர்சாதம்) ஊறுகாயுடன் பரிமாறப் பட்டது. அவரவர் பசிக்கு தகுந்தபடி பெற்று இரவு உணவை முடித்தனர்.சிலர் பால் வாங்கி அருந்தினர்.இரவு ஒன்பதிலிருந்து பத்து மணி வரை .ஸ்ரீமான் சுந்தரராஜ அய்யங்கார் சுவாமி வந்து அமர்ந்து சுருக்கமாக ஒலிபெருக்கியில் ஐந்து போகி யாத்ரிகர்களையும் இரண்டு பெட்டிகளில் நெருங்கி உட்கார வைத்து சொன்னது:பலர் அவரவர் சீட்டிலேயே காதுக்கு கேட்டவரை போதும் என்று இருந்து விட்டனர். சுமார் 1௦-௦௦ மணி வரை சுவாமி சாதித்த விஷயங்கள்.. நாம் நாளைக் காலைகான்பூர் அருகில் உள்ள பிட்டூர்என்ற ஸ்தலத்தை தரிஸிக்க போகிறோம் .ஆகையால் இந்த இடத்தைப் பற்றிய விஷயங்களை முதலில் பார்ப்போம். மேலும் ஸ்ரீ ராமாயணம் அவதரித்த ஸ்தலமும் இதுவே. என்று சொல்லி ஸ்ரீ ராமாயணத்தில் உள்ள முதலிரண்டு ஸர்க்கங்களை நிதானமாக வாசித்து விட்டு அதன் பொருளை விளக்கிச் சொன்னார்..உலகத்தில் உத்தம புருஷன் யார் என்று நாரதரைக் குறித்து வால்மீகி கேட்டார். ஸ்ரீராமபிரான் அப்பொழுது

                                    பக்கம் – பதினொன்று

கோசலவிடையிறுத்தார். ராஜ்யத்தை ஆண்டு வந்தார். அவர்தான் வால்மீகி கேட்ட உத்தம புருஷன் என்று நாரதர் விடையிறுத்தார். அதுவரை நடந்த ஸ்ரீ ராமபிரானுடைய சரித்திரத்தையும் நாரதர் சுருக்கமாக வெளியிட்டார்.வால்மீகி மகாரிஷியினால் நன்கு பூஜிக்கப்பட்ட பின்பு , நாரதர் பிரம்மா லோகத்தை நோக்கிச் சென்றார்.  பிறகு வால்மீகி தன் சிஷ்யரான பாரத்வாஜருடன் மாத்யாஹ்நிக ஸ்நானத்திற்காகதமஸா நதிக்குச் சென்றார். அதன் கரையில் இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகள் கலவியில் ஈடுபட்டிருப்பதைபார்த்தார் ஒருவேடன் அவற்றில் ஆண்பக்ஷியை அடித்து வீழ்த்தினான். அதைக்கண்ட வால்மீகி நெஞ்சு பொறுக்காமல் “ஏ வேடனே! நீ நீண்ட நாட்கள் வாழமாட்டாய்” என்ற பொருளுடைய ‘மாநிஷாத’ என்ற ஸ்லோகத்தை சொன்னார். அது சாப வார்த்தையாகும்.பிறகு மாத்யாஹ்நிக ஸ்நானத்தை முடித்து விட்டு சிஷ்யருடன் திரும்பினார். அங்கே அப்போது ப்ரம்மா . ராமபிரான் முதலியவர்களுடைய ரஹஷ்ய வ்ருத்தாந்தங்களை பிரகாச விருத்தாந்தங்கள் ஆகிய யாவற்றையும் நீர் உள்ளபடி மனத்தில் காண்பீர் என்று அனுகிரஹித்தார். பிறகு ஸ்ரீ ராமபிரானுடைய சரிதத்தை இயற்றும் என்று அனுகிரஹித்து தன்னுடைய உலகத்துக்கு திரும்பினார்.

 மேலும் அந்த சுவாமி சொன்ன விஷயங்கள் .நாளை 8-3௦மணிக்கு வண்டி கான்பூர் போகிறது. ஸ்டேஷன் வாசலில் பத்து AIRBUS-கள் காத்திருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் போர்டு பஸ் முன்புறம் அட்டையில் எழுதி மாட்டியிருக்கும். தசரதர், ஸ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன், கௌசல்யை, கைகேயி, ஸுமுத்திரை மாருதி என்றிப்படி பெயர்கள் இருக்கும்.எந்தெந்த பெயர் பஸ்களில் எந்தெந்த யாத்ரிகர்கள் பயணம் செய்வர் என்று ஒரு லிஸ்டை உங்களுக்கு தூங்கப் போகுமுன் இன்று ராத்த்ரியே கொடுப்பார்கள். அதன்படி ஏறி அமர்ந்துகொள்ள வேண்டும்.அமரும் முன்பாக ஒருவேளைஆடைகளை மட்டும் உங்கள் தோள்பையில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். காலை எட்டரை மணி வரை நிறைய அவகாசம் உள்ளது. அதற்குள் பல்விளக்கி, காலை கடன்களை ஐந்து மணியில் இருந்து எட்டு மணிக்குள் ட்ரைன் வண்டியிலேயே முடித்துக் கொண்டால் பிட்டூர் சென்றவுடன் பத்து மணிக்கு கங்கையில் குளிக்க சௌகரியப்படும்.திருமண் பெட்டியையும் தோள்பையில் வைத்துக் கொள்ளுங்கள். பெட்டிகள் பிட்டூர் சத்திரம் போன பிறகே கிடைக்கும். ஆற்றங்கரையில் டிக் திறக்கப் படாது என்பதை நினைவில் கொள்ளவும்.   .மும்பையில் இருந்து வரும் யாத்ரிகர்கள் கான்பூரில் நம்முடன் சேர்ந்து கொள்வார்கள். கான்பூரிலிருந்து கனோஜ் செல்லும்மார்க்கத்தில் கல்யான்பூரில் திரும்பி சுமார் முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இந்த பிட்டூர். என்ற ஸ்தலம். கங்கை இங்கே படு வேகமுடன் பாய்ந்து செல்லுகிறது.இங்கே நாம் சுமார் பத்து மணிக்குள் செல்வோம்.கான்பூர் ஸ்டேஷனில் உங்கள் பெட்டிகளை உங்கள் வாலேண்டியர்கள் வாங்கி அவரவர்  பஸ்களின் டிக்குகளில் வைத்து பூட்டி விடுவார்கள். .முதலில் அந்த புண்ய நதியில் ஸ்நானம் பிறகு அங்கிருந்து

                    பக்கம்- பணிரெண்டு

உள்ள சத்திரத்திற்கு பஸ்சிலேயே போகிறோம். நாளை காலை மீண்டும் நம் நிகழ்ச்சி நிரலை ஸ்வாமியே சொல்லுவர்.என்று கூறி முடித்துக் கொண்டார். மணி பத்து.

 பதினோருமணிவரைஎல்லோரும் மதியம் இரண்டு முறை சற்று உறங்கிவிட்டதால் தூக்கம் வராமல் பேசிக்கொன்டிருந்தோம். அந்தசமயம்வாலண்டியர்கள் நாளை காலை நாங்கள் கான்பூர் ஸ்டேஷன் வாசலில் ஏறவேண்டிய பஸ் பெயர் சீட் நம்பர் வாலண்டியர் பெயர்கள் கொண்ட தகவலை ப்ரிண்ட்அவுட் எடுத்துக்  கொடுத்தனர். எல்லோருக்கும்       என் பெயர் ஐந்தாம் நம்பர் மாருதி பெயர் கொண்ட பஸ்சில் இருக்கை நம்பர் 23என்று போட்டிருந்தது.எங்கள் பஸ் வாலண்டியர்கள் பெயர் ஒருவர் பராங்குசர், மற்றவர் சதீஷ் என்று போட்டிருந்தது. அவர்களையும் பரிச்சயப் படுத்தினார். காலை ஏழரை மணிக்குள் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு காபி அருந்திவிட்டு எட்டரை மணிக்கு கான்பூரில் வண்டி நின்றது இறங்கத் தயாராய் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். அச்சமயம் வண்டி இட்டார்சி (ITTAARSI) ஸ்டேஷனை  நெருங்கிக் கொண்டிருந்தது எல்லோரும் அந்த ச்டடிஒனில் ஒரு கப் பால் வாங்கி சாப்பிட்டு விட்டு உறங்க தொடங்கினோம்.அடியேன் தூங்கும் முன்பு ரயில்வே டைம் டைம் டேபிளை புரட்டுகையில் வண்டி இராத்த்ரி 12-3௦ மன்னிக்கு போபாலும்,(BHOPAL)ம் 4-3௦ மணிக்கு ஜான்சி-யும்   8-3௦ மணிக்கு கான்பூர் சென்ட்ரல் ஸ்டேஷன் ஐ அடைவதையும் குறித்துக் கொண்டேன்.  

 

.முதல் பாகம் முடிகிறது.

சுஜாதா

 🌺🌺

முகநூல் பதிவர் அனந்ந நாராயணன்

###############################################

சுஜாதா ... 

அமரர் சுஜாதாவின் பிறந்த தினம் 

###############################################

Note : 

---------------------

‘சுஜாதா’ ... 

"பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல" ... இது 'சிவாஜி' படத்திற்கு சுஜாதா எழுதிய வசனம் தான் ... 

என் மானசீக ஆசான், Virtual Guru, spiritual liberal, scientific wiki, literary enigma, Engineer, creator, brain behind the EVM, story writer, screenplay writer, Cinema dialogue writer, poet, journalist, cinema producer and WHAT NOT WHAT NOT ...

மற்றவர்களின் நினைவு தினத்தில் 2 நிமிடம் மவுனமாக இருக்கவேண்டும் ... ஆனால் சுஜாதாவின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் ... 

இதோ என்னுடைய ஹைக்கூ சமர்ப்பணம் : 

நிறைந்த சுவர் 

அழுத பெயிண்ட் 

frameல் Sujatha 

--------------------------

2007 ஆம் வருடம் ‘சிவாஜி’ பார்த்தவுடன், "அடுத்த வருடம் சென்னை போகும் போது இளையராஜா, சுஜாதா இவர்களைப் பார்த்து விடவேண்டும்" 

என்று  பிளான் செய்து வைத்திருந்தவன், 

2008 ஆம் வருடம் வேலை மாறி சான்டியாகோ சென்றதால் இந்தியா செல்வதை தள்ளிப் போட்டேன். சரி, அப்பாவின் சஷ்டியப்த பூர்த்திக்குச் செல்லும் போது தலைவரை பார்த்து விடலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன் 

கடைசி காலங்களில் ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் எழுதுவதை நிறுத்தி வைத்திருந்தார். வயதானால் என்னன்ன உபாதைகள் வரும், வாழ்வில் எந்த மாதிரி லட்சியம் வைத்துக் கொள்ள வேண்டும் போன்ற அவரின் வழக்கத்திற்கு மாறான பதிவுகள் எல்லாம் வந்து கொண்டிருந்தன. தசாவதாரம் பற்றி நிறைய எழுதி இருந்தார். மிக மிக ஆர்வமாய் எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம் வந்த போது அவரில்லை ... 

இன்னும் ஞாபகம் இருக்கிறது, வேலை மாற்றலாகி, Feb 27 2008 காரை எடுத்துக் கொண்டு சான் ஹொசெவிலிருந்து சான் டியாகோ செல்ல எத்தனித்தேன் ... அண்ணா போன் செய்து "சுஜாதா போய்ட்டார்டடா" என்றான். உண்மையாகவே உடைந்து போனேன் ... ஒரு 25 வயது வாலிபன் ... வாழ்வில் பெரிய அனுபவம் ஒன்றும் இல்லை ... எனக்கும் அவருக்கும் ஸ்நான பிராப்தி கூட இல்லை ... பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து அந்த செய்தி என்னை நிலைகுலைய வைத்து, சான்டியாகோ போவதை ஒரு நாள் தள்ளிப்போட்டேன் ... அது ஒரு கருப்பு தினம் தான் 

“ஒரு சரித்திரம் முடிந்தது; ஒரு சகாப்தம் விட பெற்றது” என்றெல்லாம் நியூஸில் சொன்னார்கள் ... அவர் இதையெல்லாம் கேட்டிருந்தால், "ஜல்லி" என்று சொல்லி இருப்பார். 

அவர் சிரஞ்சீவி ... அப்படி அவர் சரித்திரம் எல்லாம் அவ்வளவு சீக்கிரம், ஏன், என்றுமே முடிந்து விடாது ...

--------------------------

சுஜாதாவுடன் எனக்குண்டான பந்தம் DDயில் 'என் இனிய இயந்திரா' சீரியலில் ஆரம்பித்தது. 7 வயது சிறுவனுக்கு அந்த இயந்திரமும், அது பேசுவதும், பின்னாளில், ‘கற்றால் எலெக்ட்ரானிக்ஸ் தான் கற்க வேண்டும்’ என்கிற உந்துதலைத் தந்து நிறைவேற்றியது. 

நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் குரோம்பேட்டை பள்ளி ஸ்கூல் Annual day பங்க்ஷனில் சீனியர் ஆண்களும் பெண்களும் "ருக்குமணி ருக்குமணி" பாட்டிற்கு கை பிடித்துக்கொண்டு கட்டிப்பிடிப்பது போன்ற ஸ்டெப்ஸ் போட்டு ஆடியதைப் பார்த்த Chief guest சுஜாதா மேடையேறி, "என்ன கருமாந்திரம் இதெல்லாம். இதுக்கா என்னைக் கூப்பிட்டிங்க" என்று திட்ட , கரஸ்பாண்டண்ட் மிரண்டு போனார். பின்னர், கொஞ்சம் சாதுவான பாட்டுக்களுக்கு பிரம்மச்சரிய தாளம் வந்தவுடன் இலகுவாகி, ‘Fortran, dBase, COBOL’ என்று ஆரம்பித்தவர், பிற்காலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலே தகவல் பரிமாற்றம் செய்யலாம் என்றவுடன், எல்லாரும் சிரித்தனர். Truth of life today!!!

"சரி ... இவ்வளவு பூ அலங்காரம் எல்லாம் செஞ்சிருக்கீங்களே. யாராவது பூ பத்தி ஒரு கவிதை சொல்லுங்கோ பாப்போம்" என்று கழுத்தை வெட்டிக்கொண்டு, சிங்கப்பல் தெரிய அவருடைய மானரிஸத்தில் கேட்டார். 

ஆளாளுக்கு அள்ளி அள்ளி விட (கரஸ்பாண்டண்ட்டின் மகன் "பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாபூ" என்ற பாட்டைப் பாடி டபாய்த்தான்), 

You are in the bank of the river

And in a plastic cover 

I will not forget you ever 

that is your smelling power 

என்று நான் எழுந்து சொன்னதும் (இது அத்தனையும் 100% உண்மை, நம்பாதவர்களை, சுஜாதா சொல்வது போல, ‘பசித்த புலி தின்னட்டும்’). அதற்கு அவர் "இனி இங்கிலீஷும் மெல்ல செத்துடும். உன் பேரென்னப்பா" என்று கேட்டு, என் பதிலுக்குக் காத்திராமல் அடுத்த டாபிக் பேசச்சென்றார். 

அப்போது அவர் மீது அவ்வளவு கோபம் வந்தது. "ஒரு நாள் இவர் முன்னாடி இங்கிலிஷ் கவிதை எழுதி இவருக்கு போஸ்ட்ல அனுப்பனும்" என்று கோபம் கொண்டேன் ...  

ஆம் … 'கூடல் ஊடலில் தானே ஆரம்பிக்கும்' ... 

--------------------------

வாராவாரம்  பக்கத்து வீட்டு ரயில்வே மாமா படித்து கொடுத்து விட்ட விகடன், குமுதம் போன்றவற்றிலெல்லாம் ‘சுஜாதா’ என்று ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், "இனி இங்கிலீஷும் மெல்ல செத்துடும்" நினைவிற்கு வந்து கோபம் வரும். 

1996 ஆம் வருடம் இந்தியன் படம் வந்தது. கமலுக்கு மனீஷா மீது வந்த டெலிபோன் மணி காதலை விட, அதையும் தாண்டி Femto metre காதல் எனக்கு சுஜாதா மீது துளிர் விட ஆரம்பித்தது ... 

"மத்த நாட்டுல எல்லாம் கடமையை மீறத்தான் லஞ்சம் வாங்கறாங்க ... இங்க கடமையை செய்யவே " 

"புத்திக்கு தெரியறது ... மனசுக்கு தெரியலையே " 

"பொண்டாட்டி சொல்லாததை டெலிபோன் சொல்லிடுச்சு " 

"அவனுக்கு வலிக்கும்னு மீசையை எடுத்த சேனாபதி, இன்னைக்கு அவனையே கொல்லத் துணிஞ்சுட்டேன் "

"யோவ் ... நாயைப் பாருய்யா " 

போன்ற அற்புதமான வசனங்கள் ... எப்படி ஒரு மனிதரால் யதார்த்தம், நகைச்சுவை, அரசியல் என்று அத்தனையும் 2.5 மணி நேரப் படத்தில் கொண்டு வர முடிந்தது என்று ஆச்சரியமான ஆச்சரியம். அவரைப் பற்றிய ந்யூட்ராலான கண்ணோட்டம் உருவாக ஆரம்பித்த அற்புதத்  தருணம் ... 

--------------------------

பின்னர் நிகழ்ந்ததெல்லாம் ... கரையெல்லாம் செண்பகப்பூ, ஆ, ஊஞ்சல், ரத்தம் ஒரே நிறம், நைலான் கயிறு, அனிதா இளம் மனைவி, காயத்ரி, நிர்வாண நகரம், 24 ரூபாய் தீவு என்று எத்தனை எத்தனை வித்தியாசமான அனுபவங்கள். இங்கு நான் சொல்லாமல் விட்டவை எத்தனை எத்தனை ... சொல்வதற்கு இடமும் இல்லை, அதை எல்லாம் பேச ஆரம்பித்தால் அடுத்த leap year வந்து விடும் ... 

இவற்றை எல்லாம் படித்து, அவர் மீதான ஆச்சரியம் ஆர்வமாகி, ஆர்வம் காதலாகி, காதல் மரியாதை ஆகி, மரியாதை கடைசியில் பக்தியானது ... மதுரகவிக்கு நம்மாழ்வார் மீது வந்தது போல, "அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்" என்று என்னை அவர் ஆட்கொண்டார் . 

சென்னை, அமெரிக்கா, பெங்களுர் என்று நான் எங்கு சென்றாலும், அங்கு ஒரு சுஜாதா என்னுடன் இருப்பார் அவர் புத்தக ரூபமாய் 

--------------------------

நாலாயிர திவ்யப்ரபந்தத்தையும் (உளன் எனில் உளன்) Heisenberg uncertainty theorem ல் சொன்ன wave/particle நிலையாத்தன்மையை அவர் விளக்கியதைச் சொல்லவா? 

மெக்சிகோ சலவைக்காரி போன்ற அவரின் நையாண்டி பக்கத்தை சொல்லவா? 

சராசரி மனிதனுக்குப் புரியும்படி கணினி சமாச்சாரங்களை விளக்கி வெற்றி பெற்றதைச் சொல்லவா? ("Compiler, interpreter என்ன வித்தியாசம்"). 

பூக்குட்டி எழுதிய குழந்தை மனதைச் சொல்லவா? 

கடவுளை ஒரு பிரபஞ்ச கம்யூட்டர் என்று சொன்னதை வியக்கவா? 

கணேஷ் வசந்த் என்னும் வித்தியாசமான காம்போ வித்தையைச் சொல்லவா? 

இளம் கல்வியார்களை ஊக்குவிக்கும் படி nano devices, robot, chips போன்றவற்றை எளிமையாக அறிமுகப்படுத்தியதைச் சொல்லவா 

ஆழ்வார்கள் பற்றி அனுபவித்து எழுதியதைச் சொல்லவா? 

இளையராஜாவின் திருவாசகத்திற்கு அப்படி ஒரு உரையை 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் எழுதியதைச் சொல்லவா? 

திமலா என்னும் சிறுகதையின் அபார Sci-fi கற்பனையைச் சொல்லவா? 

'கடவுள் இருக்கிறாரா' புத்தகத்தில் 'Extended Gravity', 'Anthoropic' பற்றி எழுதியைச் சொல்லவா 

எனக்குப் பிடித்த ஹைக்கூ பகுதியில் 

புறாக்களை வளர்க்கும் சுதந்திரத்தை 

என்னிடமிருந்து பறிக்கிறார் 

பூனை வளர்க்கும் எதிர்வீட்டுக்காரர் 

போன்ற ஹைக்கூக்களை (இது அவர் எழுதியதல்ல) தமிழர்களுக்கு புதுமைப் படுத்தியத்தைச் சொல்லவா ?

WHAT A MAN … WHAT A PHENOMENON … ONE OF ITS KIND 

--------------------------

என்னைப்பொறுத்தவரை 'மால்குடி டேஸிற்கு' கொஞ்சமும் சளைக்காத காவியம் ஸ்ரீரங்கத்து தேவதைகள். அதில் ஒரு அத்தியாயத்தில், "ஆமாண்டா, அவசரத்துக்கு ஒரு வாட்டி குண்டு ரமணியையே ... " என்று ஆரம்பித்து ஒரு வரி சொல்லி இருப்பார். ஒரு முறை ஒரு ரயில் பயணத்தில் அதைப்படித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். 

ஸ்ரீரங்கத்தில் கே.வீ யுடன் ஆடிய அந்த கிரிக்கட்  ஆட்டத்தைப் பற்றி என்ன அருமையாக வர்ணித்திருப்பார் . க்ளாஸ்க்கோவின் புதையல், ஆல்மோஸ்ட் ஜீனியஸ் எல்லாம் என்ன ஒரு கலந்த நிஜக்கதைகள் . 

நான் எழுத ஆரம்பித்த சமயத்தில், எங்காவது நின்று விட்டால் சுஜாதா தான் உந்துகோல். 'குருப்ரசாத்தின் கடைசி தினம்' கதையின் ஆர்வத்தில் உருவானது தான் '8:33'. அதே போல ‘பாலம்’ கதையைப் படித்து, தனி மனித மிருக குணம், வக்கிரம் என்று நிறைய யோசித்து எழுதிய கதை தான் 'மறுபடியும்'. 

இங்கு சம்பந்தமே இல்லாமல் நான் எழுதிய கதைகளை சொல்வதற்கு காரணம் (சுயபுராணம் எல்லாம் இல்லை), இப்படி 90 களுக்குப் பிறகு என்னைப்போல எழுத ஆரம்பித்த ஒவ்வொரு எழுத்தாளனின் நடையிலும் சுஜாதா எங்கோ தெரிவார் என்று சொல்வதற்குத்தான். 

‘ஊஞ்சல் கதை’ அவ்வளவாக ப்ரஸித்தமாகாத கதை. ஆனால் retire ஆகி obsolete ஆன ஒரு மேதையின் குமுறல், தாழ்வு மனப்பான்மையை அப்படி தத்ரூபமாய் சொல்லி இருப்பார். Unique attempt ...

--------------------------

2011ல் எனக்கு ஒரு பெண்ணுடன் பேசி நிச்சயம் செய்து, இந்தியா வந்து, பெண் பார்த்து, இன்னும் 2 நாளில் நிச்சயதார்த்தம் என்னும் போது, அவள் வீட்டில் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட, ஏனென்று கேட்டதற்கு சரியான பதில் சொல்லவில்லை. 

'நான் அமெரிக்காவில் இருந்த போது சாட்டில், கான்பரன்ஸில் அப்படி நன்றாகப் பேசியவள், பாடியவள் ஏன் திடீரென்று வேண்டாமென்றாள்' என்ற குழப்பம் தீராமலேயே திரும்பவும் சிங்கிளாக விமானத்தில் செல்லும் போது, ‘பிரிவோம் சிந்திப்போம் முதல் பாகம்’ படிக்க, அதில் மதுமிதா கதாநாயகனை இப்படித்தான் குழப்பிக் கொண்டே இருந்து, அவனை ரிஜெக்ட் செய்து விடுவாள். ரகு அழுததைப் படித்தவுடன் என்னுடன் correlate செய்து கொண்டேன். 

அவளுடைய அத்திம்பேரின் பொறாமையில் கல்யாணம் நின்றது என்று தெரிந்தது. பின்னர் அதே பெண்ணை அமெரிக்காவில் சோகமான நிலையில், அந்தக்கதையின் இரண்டாம் பாகத்தில்  வரும் மதுமிதாவைப் போல பார்த்ததும் , அன்றிரவு தூக்கம் வரவில்லை ... அதே ரகுவின் நிலை தான் 

அதே போல, கனவுத் தொழிற்சாலையில், ரயிலில் செல்லும் போது இறந்து போகும் தர்மராஜனின் குழந்தையைப் பற்றி இலகுவாய் சொல்லி இருப்பார். பின்னாளில், அது தனக்குப் பிறந்த தங்கை இறந்ததை வைத்து எழுதியது என்று, 'பிரிவோம் சிந்திப்போம்' பகுதியில் சொல்லியிருந்தார்  … என் அண்ணன் அகால மரணம் அடைந்த போது என்னால் அதனுடன் associate செய்து கொள்ள முடிந்தது. 

எதற்கு இந்த மூன்றையும் சொல்கிறேனென்றால், என் ஆசானின் எழுத்து, நகைச்சுவைக்கு, தகவலுக்கு மட்டுமல்ல, அறிவுக்கு, ஆன்மீகத்துக்கு மட்டுமல்லாமல், எமோஷன் சார்ந்த சங்கதியிலும் என்னுடன் பயணித்தது. அவர் ஒரு முழு எழுத்தாளர்

--------------------------

அத்தனை தமிழ் இலக்கியம் தெரிந்திருந்தவர் "ஐகாரக் குறுக்கம் எல்லாம் தமிழ் எம்.ஏ தமிழ் இலக்கியத்தில் கேட்கிறார்கள், நான் கண்டிப்பாக பெயில் ஆகி விடுவேன்" என்று அடக்கமாகச் சொன்னார் . 

அவர் சொன்னார் என்பதற்காகவே தேடிப்படித்த கதைகள், நாவல்கள் ஏராளம் (புதுமைப்பித்தன், The moon and sixpence, The Razor's edge etc) 

சுஜாதா மீது எனக்கு 2 கோபங்கள் உண்டு. 

1) சிறுவயதில் கொஞ்சம் சிகரெட்டைக் குறைத்து நிறுத்தி இருந்திருக்கலாம். பிற்காலத்தில் சர்க்கரை நோயால் ரொம்பவும் பாதிக்கப்பட்டார் என்று தெரிந்த போது, ஒரு வேளை புகைப்பழக்கம் இருந்திருக்காவிட்டால், இன்னும் 10 வருடம் அதிகம் இருந்திருக்க மாட்டாரோ என்ற ஆதங்கம் உண்டு 

2) குமுதம், விகடன், குங்குமம் என்று ஒரு ஜனரஞ்சக வலையில் விழாமல் இருந்திருந்தால் (அதில் வந்த அவர் கதைகள் எல்லாம் அருமை தான் ... இருந்தாலும் ), 'கரையெல்லாம் செண்பகப்பூ', 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' போல நிறைய நாவல்களும், 'ஆ' போன்ற த்ரில்லர்களும் வந்திருக்கும் ... 

--------------------------

சூர்யா - இஷா டியோள் காட்சிகள், மாதவன் - மீரா காட்சிகள், சித்தார்த் - த்ரிஷா காட்சிகள் என்று ஒரே படத்தில் 3 விதமான காதல்களுக்கு 3 விதமான அந்யோனியமான வசனங்கள் ... அதை எழுதும் போது அவருக்கு 68 வயது ... கடைசி வரை அவர் எழுத்திற்கு வயதாகவில்லை 

கொஞ்சமும் பொறாமை இல்லாமல் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவித்ததெல்லாம் அளப்பரிய குணம். 

'நகரம்', 'மாஞ்சு' போன்ற கதைகளை படித்து முடித்த வுடன் ஒரு விதமான சோகம் அப்பிக்கொள்ளும். 

அவருடைய ‘மத்தியமர்’ கதைகளும், 'தூண்டில்' கதைகளும் மிகவும் வித்தியாசமான யாரும் தொடாத எளிய கோணங்கள். 

எந்த சப்ஜக்டிலும் நுனிப்புல் மேய்ந்ததே இல்லை. 'கணையாழியின் கடைசி பக்கங்கள்' புத்தகத்தில், புறநானூறைப் பற்றி பேசும் போது, 'சிற்றில் நற்றூண்' என்று அதன் வரிகளையும் இயல்பையும் வியந்திருப்பார். 'இந்த மனிதருக்கு இத்தனை குறிப்பு எங்கிருந்து வருகிறது' என்று ஆச்சரியம் கலந்த வாசகத்தனம். 

--------------------------

அவருடைய one-liners அத்தனையும் அருமை 

"சுனாமியை விட, அதைப்பற்றி வரும் கவிதைகள் இன்னும் கொடுமை" 

"எதிர்காலத்தில் தீவிரவாதிகளுக்கு வேலை கிடைத்தால் துப்பாக்கியை விட்டுவிட்டு , வேலையில் பிசியாகி விடுவார்கள்" 

"சுட்டும் விழிச் சுடரே" பாட்டை சிலாகித்து விட்டு, அது "கீரவாணி" என்று போகிற போக்கில் சொல்லி இருப்பார். ஆம் கர்நாடக சங்கீதத்தையும் விட்டு வைக்கவில்லை. 

MITயில் இருந்த போது, டெல்லியில் இருந்த போது, பெங்களூரில் இருந்த போது, அப்துல் கலாமுடன் இருந்த போது என்று அவர் எழுதியதைப் படிக்கும் போதே, நாமும் டைம் டிராவல் செய்து அவருடனே  இருந்ததைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்திய சாமர்த்திய நாஸ்டால்ஜிக் எழுத்து. 

எத்தனை கடினமான விஷயத்தையும் இலகுவாகச் சொல்வார். ஒரு முறை Palindrome பற்றி எழுதும் போது "யாமாமா நீ யாமாமா யாழி காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா " என்று மேற்கோள் காட்டினார். 

நான் திருச்சி RECக்கு ஒரு செமினாருக்குச் சென்ற போதும், MITக்கு ஒரு பேப்பர் ப்ரசண்டேஷனுக்குச் சென்ற போதும், ஒவ்வொரு முறை ஸ்ரீரங்கம் சொல்லும்போதும், இப்போது பெங்களூரில் இருக்கும் போதும் எனக்கு  அவர் நினைவுகள் வராத நாளில்லை. இது சாத்தியமான உண்மை 

--------------------------

அவருடைய கதைகளை வைத்தே அவரை வர்ணிக்கிறேன் 

அவர் 'பிரிந்தார்', ஆனால் மனத்தால் 'சந்திக்கிறார்' 

கலைவாணியின் 'கணையாழியின் முதல் பக்கம்' 

அவரிடமிருந்து 'கற்றதும் பெற்றதும்' ஏராளம் 

'எப்படியும் வாழலாம்' என இல்லாமல் வ்யாபித்த 

அவர் எழுத்து ஒரு 'கனவுத் தொழிற்சாலை' 

நவீன தமிழ் இலக்கியத்தின் "தலைமை செயலகம்" 

'ஆ' என ஆச்சரியப்படவைத்த 'ஜன்னல் மலர்' 

'என்றாவது ஒரு நாள் 'மீண்டும் ஜீனோ' போல 

மீண்டும் சுஜாதா வரவேண்டும்

'என் இனிய இயந்திர' எழுத்தாளர் 

'ஆல்மோஸ்ட் ஜீனியஸ்' 

'ஸ்ரீரங்கத்து ஆண் தேவதை' 

(அவர் இருந்து இந்தக் கவிதையைப் படித்தால் "அடாசு" என்று சொல்லி திட்டி இருப்பார்)

அவர் கடைசியாக, Desikan Narayanan அவர்களுடன் ஸ்ரீரங்கத்திற்குச் சென்ற போது, "எப்படியோ ரங்கன் கிட்ட என்னை கொண்டு விட்டு சேர்த்துட்டப்பா" என்று சொன்னது எத்தனை நிதர்சனமான உண்மை. 

காலம் முழுக்க ஸ்ரீரங்கநாதனை சிலாகித்த சுஜாதா என்னும் ரங்கராஜனை, அந்த ரங்கன் ஆட்கொண்டு விட்டான். 

அவர் ஸ்டைலில் சொல்வதானால், "அந்த ஆன்மா அடுத்த ஜென்மத்திலும் இன்னொரு சுஜாதாவாகப் பிறக்க வேண்டும்’ என்று ரங்கனைப் பிரார்த்திக்கிறேன்"

"அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை 

எந்த நிலையிலும் 

அவரின் எழுத்திற்கொரு மரணமில்லை ... "

அது தான் சுஜாதா ... 

"பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல"  

-------------------------

Anantha Narayanan

குமாரசுவாமி ஒரு சோஷலிஸ்ட்!! - சுஜாதா

 வாத்தியாருக்கு பிறந்தநாள் வணக்கம் சொல்லிவிட்டு, அவர் இளமையில் எழுதிய ஒரு கதை இதோ!! 

குமாரசுவாமி ஒரு சோஷலிஸ்ட்!!  - சுஜாதா சிறுகதை 

(கணையாழி, செப்டம்பர் 1965)

டாக்ஸி ஒட்டிக்கொண்டிருந்த குமாரகவாமி தற்போது திரு. ஆதிமூலத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான காரியதரிசி ஆனதை சிவ வரிகளில் சொல்லிவிடலாம். அவன் டாக்ஸியில் ஒரு தடவை பிரயாணம் செய்தபோது ஆதிமூலம் தன் பர்ஸை  மறுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அதை அவர் வீடு தேடித் திரும்பி வந்து கொடுத்துவிட்டுப் பணிவுடன். 

"எல்லாம் சரியாக இருக்கிறதா எண்ணிப் பாருங்கள் சார்” என்று சொன்னான். 

ஆதிமூலம் ஆச்சரியப்பட்டு. 

"இவ்வளவு நம்பிக்கையான ஆசாமியாக இருக்கிறாயே. ஏன் அன்றாடம் காய்ச்சியாக டாக்சி ஒட்டுகிறாய்? என்னிடம் வந்து எனக்கு டினரவர் வேலை பார். மாதம் 100 ரூபாய் தருகிறேன்" என்றார். 

ஒப்புக் கொண்டான்.

டிரைவராக ஆரம்பித்தான். வீட்டுச் சாமான்கள் வாங்குவதையும் கவனித்துக் கொண்டான். பின்பு ஆதிமூலத்தின் சில்லரைக் கணக்குகளையும் கவனிக்க ஆரம்பித்தான். ஒரு பைசா தொடாமல் நெருப்பாக இருந்தான். ஆகிமூலத்துக்கு அவன் பேரில் நம்பிக்கை ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வலுத்தது.

ஆதிமூலத்தின் தொழில் கொஞ்சம் நிழலானது. வாங்கல், விற்றல், எதையும் வாங்குவார். வாங்கின சூட்டில் விற்று விடுவார். இந்தச் சாமர்த்தியம் சங்க காலத்திலிருந்து பரம்பரையாக அவர் குடும்பத்தில் வந்தது. ரத்தத்தில் ஊறின சாமர்த்தியம் வாய்ச் சவடால்,

அவர் முக்கியமாக வாங்கி விற்பவை இவை. டிரான்ஸ்ஸிஸ்டர்கள், கார், ரெஃப்ரெஜிரேட்டர் முதலியவை. கௌரவமான பித்தலாட்டம். வருமான வரி ஆட்களைச் சமாளிக்க, சாமர்த்தியமான கணக்கு. மொத்த வியாபாரமும் டெலிபோன் பேச்சில், தயாராகத் தண்ணீராக ஓடும் பணம். எதையும் கேள்வி கேட்காமல் வாங்குவார். ஒரு தடவை நொடிந்துபோன ஒரு சர்க்கஸ் கம்பெனிக்காரர்கள். இவரிடம் இரண்டு யானைகளை விற்கப் பார்த்தார்கள். ஆதிமூலம் திருவல்லிக்கேணி கோயிலில் விசாரித்து அவர்களுக்கு யானை தேவையில்லை என்று கண்டு கொண்டு அந்த மிருகங்களை வாங்க மறுத்து விட்டார். இந்த ஒரு தடவைதான் மறுத்திருப்பார். 

சாதாரணமாக வர்ஜ்யா வர்ஜ்யம் இல்லாமல் வாங்குவார். சமீபத்தில் டாக்டர் நரசிம்மாச்சாரி என்பவர் தன்னுடைய எம்.எஸ். எஃப்.ஆர்.ஸி.எஸ். (லண்டன்) எஃப். ஆர்.ஸி.எஸ். (எடின்பரோ) டிகிரிகளுடன் காலமானார். பெரிய நரம்பு வைத்திய நிபுணர். அவர் வைத்திருந்த, 'எலக்ட்ரோ என்செஃபலோகிராம்'  (மன்னிக்கவும்) என்கிற கருவியை ஆதிமூலம் தான் வாங்கினார். அவருக்கு எலக்ட்ரோ என்செஃபாலோகிராமுக்கும் ஒரு குடைக்கும் வித்யாசம் தெரியாது. இருந்தும் வாங்கின உடன் அதைத் தூசி கூடத் தட்டாமல் வடக்கே ஒரு ஆஸ்பத்திரிக்கு விற்று விட்டார்.ரூ.8,000 லாபம். 

அவர் வியாபார வெற்றிக்குக் காரணம்

 உடனே பணம். 

அநாவசியக் கேள்விகள் கேட்பது கிடையாது 

எழுத்து விவகாரம் கிடையாது!

குமாரசுவாமி, (அவர் டிரைவர், காரியதரிசி இத்யாதி) ஒரு சோஷலிஸ்ட். செய்தித்தாள்களின் பாஷையில் ஒரு ஆதார இடதுசாரி சோஷலிஸ்டு. அவன் மனத்தில் தன் நிலைமைக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம் வெறுப்பைத் தான் ஏற்படுத்தியது. தான் தினமும் பத்து மணி நேரம் உழைத்து மாதம் நூறு ரூபாய் கிடைக்கிறது. ஆதிமூலம் பேச்சுவாக்கில் பத்தாயிரம், இருபதாயிரம் என்று புரட்டுகிறார். இந்த நிலை ஏன்? என்கிற கேள்விக்குப் பதிலாக அவனுக்கு இரண்டு வழிகள்தான் புலப்பட்டன 

எங்கள் இருவருக்கும் உள்ள நிலை வித்தியாசம் மறைய வேண்டுமானால், ஒன்று ஆதிமூலத்தின் மகளை நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது அவர் பணத்தில் பெரும்பகுதியை சமயம் பார்த்து அபேஸ் செய்ய வேண்டும். (இதனால் சோஷலிஸ்டுகள் எல்லோருமே திருடர்கள் என்று நான் சொல்லவில்லை. குமார சுவாமி அப்படி. அவ்வளவுதான்)

முதல் முயற்சியில் தீவிரமாக இறங்கினான். ஆகிமூலத்தின் பெண் பெயர் பார்வதி அழகான அசடான பெண் வயது: 18 ப்ளஸ். சட்டை சுற்றளவு 36 ' ஐக்யூ' 36 அவளை தினமும் காலேஜிற்கு காரில் கொண்டு விட்டு வருவது வழக்கம்.

ஒரு அக்டோபர் மாதத்தின் இளம் காலையில் குமாரசுவாமி தன் சோஷலிசக் காதல் முயற்சியை ஆரம்பித்தான். காரின் கண்ணாடி வழியாகப் பார்வதியைப் பார்த்துச் சிரித்தான். பார்வதி பதிலுக்குச் சிரித்தாள். குமாரசுவாமிக்கு உற்சாகம் பிறந்து விட்டது.

மறுநாள் ரூ.1.25 கொடுத்துத் தலை வெட்டிக் கொண்டு (மிஷின் போடாமல்)டினோபால் போட்டுத் துவைத்த  வெள்ளை சட்டை அணிந்து கொண்டு அவளை காரில் பார்த்துச் சிரித்தான். அலள் பதிலுக்குச் சிரித்தாள். ஆஹா! அந்தஸ்து, பணம் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும் ஒரே மந்திரம் காதல் என்று எண்ணி, மறுதினம் அவளுடன் பேச்சுக் கொடுக்க எண்ணி உற்சாகத்துடன்...

'சித்தூர் ராணி பத்மினி' என்கிற திரைப்படம் போல் அவன் உற்சாகம் வந்த வேகத்தில் போய்விட்டது. ஏன்? 

அந்தப் பெண் பார்வதி தோட்டக்கார ஏழுமலை (வயது 57) யைப் பார்த்துக்கூட அப்படித்தான் சிரித்தாள். அப்புறம் 

அவர்கள் வீட்டுக் கன்றுகுட்டி லக்ஷ்மி (வயது 1/h)யைப் பார்த்துக்கூட அப்படித்தான் சிரித்தாள். 

சுலபத்தில் முத்துப்போன்ற பல்லைக்காட்டும் அந்தப் பெண், அன்று மாலையில் கடற்கரையில் சக வயது வாலிபன் ஒருவனுடன் உல்லாசமாக நடந்துகொண்டு சென்றதைப் பார்த்ததும் அவன் காதல் முயற்சி ஊதி அணைக்கப்பட்டுவிட்டது. இது நமக்கு உதவாது என்று கைவிட்டு, இரண்டாவது முயற்சியில் தீவிரமாக மனதைச் செலுத்தினான். அது என்ன? பெரிய திருட்டு.

என்னதான் ஆதிமூலத்துக்கு அவன் பேரில் நம்பிக்கை இருந் தாலும், அவர் அலனிடம் இதுவரை இருநூறு முந்நூறுக்கு மேல் பணம் ஒப்படைத்ததில்லை. ஆனால் நம்பிக்கை நாளாக நாளாக ஏறிக்கொண்டு வந்தது. குமாரசுவாமி நிறையத் தொகை பிடிபடும். நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். ஒரு தடவை அவனிடம் அவர் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பாங்கில் சுட்டச் சொன்னார். அப்பொழுது ஆசை தட்டியது. கடைசி நிமிஷத்தில் மனம் மாறியது. இந்த ஆயிரத்தைக் கட்டிவிட்டால் இன்னும் நம்பிக்கை அதிக மாகும். நிஜமாகப் பெரிய தொகை புரளும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தான். காத்திருந்தான். காத்திருந் தான் 

காலண்டர் நாள்கள் கிழிந்தன. அந்த சந்தர்ப்பம் வரவில்லை. அவன் பொறுமையை ஆதிமூலம் நிறைய சோதித்தார். அந்த ஆயிரத்துடனேயே ஓடியிருக்கலாம் என்று வருத்தப்பட்டுக் கொண்டான்,

ஆனால், அந்தச் சந்தர்ப்பம் வராமல் இல்லை. காந்திருந்த தினம் ஒரு வியாழக்கிழமை வந்தது நேரம் காலை பத்து மணி. டெலிபோனை வைத்துவிட்டு ஆகிமூலம் அவனைக் கூப்பிட்டார். "சர்க்கரை செட்டியார் வீடு தெரியுமா?!" என்றார்.

"தெரியும் சார்."

"அவரிடம் இந்தக் கவரைக் கொடுத்துவிட்டு... நீளமான தடிமனான கவர் மேஜையின் மேல் இருந்தது. "அவரிடம் ஒரு அம்பாசிடர் கார் இருக்கும், அதை ஒட்டிக் கொண்டு வந்துவிடு.''

"கடைசியிலே காரை விற்கச் சம்மதித்து விட்டாரா, சார்!"

"ஆமாம்; பதினாயிரத்து சொச்சத்துக்கு தீர்ந்து போச்சு... 900 மைல்தான் ஓடியிருக்கிறதாம். வரும்போது நம்ம சம்பந்தம் 'கராஜில்' கொண்டு காட்டி இன்ஜினைப் பார்த்து எத்தனை மைல் ஓடியிருக்கும் என்று பார்த்துக்கச் சொல்லு. என்ன?... இந்தா. பணம் ஜாக்கிரதை..."

குமாரசுவாமிக்கு அந்த உறையை வாங்கும்பொழுது முதுகுப் பக்கம் ஒரு ஐஸ் நதி ஓடியது. இதுதான்... இந்தச் சமயம்தான், இந்தச் சமயம்தான்... என்று எண்ணிக் கொண்டான்.

"சரிங்க; நம்ம காரை எடுத்துக்கொண்டு போகவா?"

"முட்டாள். வரும்போது இரண்டு காரையும் ஓட்டி வருவாயா?"

"ஓ! மறந்துவிட்டேங்க!" என்று சிரித்தான்.

''குமாரசுவாமி,ஜாக்கிரதை, பதற்றமே காண்பிக்காதே... டாக்ஸியிலே போ, பணம் பத்திரம்."

"கவலைப்படாதீங்க சார். பத்திரமாகச் சேர்ப்பிக்கிறேன்"  என்றான்.

வீட்டுக் காம்பௌண்டை விட்டு வெளியே வந்ததும் அவனுக்கு   வியர்வையில் சட்டை உடலுடன் ஒட்டிக் கொண்டது. 10 ஆயிரம் ரூபாய். இந்தத் தருணத்தை விட்டால் இனி எங்கே கிடைக்கப் போகிறது. இப்போது மணி என்ன? பத்தேகால்! எங்கே போக லாம்? முதலில் சென்னையை விட்டு வெளியே போக வேண்டும் எங்கே?

எங்கே என்று தீர்மானிக்கவில்லை. பையில் உறை கனத்தது. எதிரில் வந்த டாக்ஸியை துரத்தி நிறுத்தி தானே அதன் கொடியை மடக்கிவிட்டு ஏறிக்கொண்டான். நல்ல வேளை. டாக்ஸி டிரைவர் தெரிந்தவனில்லை.

"எழும்பூர் ஸ்டேஷனுக்குப் போப்பா"

எழும்பூர் ரயில் நிலையத்தில் உயரமான போர்டில் வண்டிகள் புறப்படும் நேரத்தை அவசர அவசரமாக அவன் படித்துக் கொண்டிருந்தபோது, அவன் தோளில் ஒரு கை பட்டது. திரும்பினான். பக்கத்து வீட்டு டிரைவர் கதிரேசன்.

"என்ன குமாரசாமி, பார்த்து ரொம்ப நாளாயிற்று. எங்கே இந்தப் பக்கம்?" 

இவன் எங்கே வந்தான் பூஜை வேளையில் குருஷேவ் நுழைந்ததுபோல்! 

"அய்யாவுக்குத் தெரிந்தவர் ஒருவர் வருகிறார். வண்டி கொண்டு வந்திருக்கிறேன்'' என்றான்.

"இப்ப எந்த வண்டி வருகிறது?"

தயங்காமல் "திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் லேட், டெலிபோனில் சொன்னார்கள். பிளாட்பாரம் டிக்கட் லாங்கப் போகிறேன். அப்புறம் பார்க்கலாம், என்ன?" என்று கழண்டு கொண்டு பிளாட் பாரம் டிக்கட் ஒன்றை லாங்கிக் கொண்டு ஒரு வாயிலில் நுழைந்து தள்ளியிருந்த மற்றொரு வாயில் வழியாக ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான்.

என்ன சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டேன். சே! கதிரேசன் என்னை எழும்பூரில் பார்த்ததாகச் சொல்லி விடு வானே... டாக்ஸி!

பாய்ந்து டாக்ஸியில் ஏறி, ''சென்ட்ரல்" என்றாள். டாக்ஸி விருட்டென்று ஓடித் திரும்பிச் செல்லும்போது. அவனை கதிரேசன் மறுபடி பார்த்துவிட்டான். அவன் தலைக்கு மேல் ஒரு கேள்விக்குறி தெரிந்தது... இதையெல்லாம் யோசிக்க இனி நேர மில்லை. முதலில் இந்த ஜில்லாலை விட்டு லெளியேற வேண்டும்.

சென்ட்ரல் நிலையத்தில் பரபரப்பில் மேலே தொங்கிக் கொண்டிருந்த ஒலிபெருக்கி விஜயவாடா. நாக்பூர். இடார்ஸி வழியாக புதுதில்லி செல்லும் கிராண்டிரங்க்  எக்ஸ்பிரஸ் இன்னும் சில நிமிஷங்களில் முதல் பிளாட்பாரத்திலிருந்து...

தில்லி! 

ஆம். அங்குதான் போக லேண்டும். தலைமறைவாக இருக்க தலைநகரம்தான் சரி! உடனே டிக்கட் ஜன்னலுக்கு ஓடினான். சம்பளத்தில் பாதி தனியாக பாண்ட் பைக்குள் இருந்தது. அதில் 45 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினான். அந்தப் 'பணம்? அது பத்திரமாக, ரத்தினமாக உறைக்குள் உறங்கிக் கொண்டு சுலபமாக பை கனத்தது. அதைத் தொட்டுக் கொண் டதும் தைரியம் பிறந்து விட்டது. தில்லிக்குப் போகலாம். மீசையை எடுத்து விடலாம். பாஷையை மாற்றிக் கொள்ளலாம். இருபது லட்சம் ஜனங்களுக்குள் சுவடே தெரியாமல் மறைந்துவிடலா தப்பித்து விடலாம்...

கிளம்பிக் கொண்டிருந்த ரயிலில் தொத்தி ஏறிக் கொண்டான். 

பிட்ரகுண்டா வரை கூட அவன் படபடப்பு அடங்கவில்லை பையில் எத்தனை ரூபாய்? பதினாயிரத்துச் சொச்சம்...

எத்தனை நோட்டுக்கள் இருக்கும்...? அந்த நோட்டுக்கத்தை களை ஒன்று விடாமல் தடவித் தடவி எண்ணிப் பார்க்க அவ விரல்கள் துருதுருத்தன. ரயில் வண்டியில் தனிமையான இடம் எது? அங்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான்.

அந்த உறையை எடுத்தான். ஓரத்தில் கிழித்தான். திறந்தான். உள்ளே சீல் வைக்கப்பட்ட மற்றொரு உறை இருந்தது. கை நடுங்கியது. ரெயில் வண்டியின் சப்தத்துக்கும் மேலாக திடும் திடும் என்று ஒரு சப்தம் கேட்டது. உன்னிப்பாகக் கேட்டதில் அவன் இதயம்! 

நனைந்த விரல்களால் அந்த உறையைக் கிழித்தான். திறந்தான்.

உள்ளே கத்தை கத்தையாக நூறு நூறாக நோட்டுக்கள் இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தான். இல்லை. அழகாக அளவாக வெட்டப்பட்ட வெறும் வெள்ளைக் காகிதங்கள் இருந்தன. அவற்றின் மேலாக இருந்த காகிதத்தில் எழுதியிருந்தது.

"குமாரசுவாமி, உன் மேல் நம்பிக்கை வைக்கலாமா என்று பரிசோதனை செய்யவே இப்படிச் செய்திருக்கிறேன். நீ நம்பிக்கையுள்ள ஆளாக இருந்தால், இந்தக் கவரைக் கிழிக்காமல் சர்க்கரை செட்டியாரிடம் சேர்த்திருப்பாய். அப்படிச் செய்யாமல் கிழித்து இந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய் என்றால் திரும்பி வரவே வராதே. ஒழிந்து போ!... ஆதிமூலம்."

வண்டி தண்டவாளங்களில் இரக்கமின்றி மாறிக் கடகடவென்று சிரித்தது...."