Thursday, July 2, 2020

MAHA PERIAVA'S GRACE FOR TRANSFER ORDER

MAHA PERIAVA'S GRACE FOR TRANSFER ORDER                                                                                                                            Author: IrAsu, Chennai-61
Compiler: T.S. Kothandarama Sarma
Source: Maha PeriyavaL - Darisana AnubhavangaL vol.2
Publisher: VAnathi Padhippaham (May 2005 Edition)


A day several years ago (1989); could have been six in the evening. Sitting in ekAntam--privately, KAnchi Thava Munivar was giving darshan to devotees.

My elder brother Tiru.Sundaram who was earlier a Tahsildar in KAnchipuram and now a Sub-collector, and I are sitting for darshan. During the time this incident happened, my thamayanAr--elder brother, was serving as an official in charge of the welfare of the district backward people in TirunelvEli. His constraint was to have darshan of ParamAchAryAr and return to Chennai that same night.

Our turn of darshan in the queue came. As we got up after prostrating to SvAmigaL who blessed us with a blossoming face, and said looking at us, "In hurry? Can stay for sometime and go." Obeying his command, we sat in front of him.

SvAmigaL asked all the people who were about thirty in number and standing for his darshan to sit down, gesturing it with his hands.

KAnchi Munivar's glance came round and round in that small crowd. As he called a man sitting with bhaya-bhakti in a corner, the man got up. He had removed his shirt and tied it around his waist over his dhoti.

"Your name?" as Periyavar asked, the man said, "Murugesanunga--Murugesan, sir".

SvAmigaL: What is your occupation?

"payirth-thozhil--agriculture, SAmi".

"Lokaththukku sAppADu pODarE--so you feed the world", saying it with a laughter, SvAmigaL asked him to sit down. PeriyavargaL's eyes going round again, his hand pointed to another man. He got up and said that his name was MunuSamy and that he was working as a Revenue Inspector in Vellore.

"How would you serve the people?"

"I give people nilappaTTA--title deed to land, manaippaTTA--title deed to house-plots and other necessary certificates."

Suddenly looking at me, as PeriyavargaL asked, "What occupation you are in now?", I was shaken. Because I was then serving as the Assistant Manager of the Tamilnadu Consumer Federation. The chief duty of that post was to sell the liquor varieties from the godown to the retail liquor merchants. How could this be a podhujana sevA--public service? So with hesitation I told him, "I am serving as the Deputy Tahsildar in TASMAC". However (at that time my face was full of sweat) PeriyavargaL did not ask me to explain my work.

Then as PeriyavargaL's dRShTi--sight, fell on my elder brother sitting near me, he got up and said that through his office they arrange for free education, food and clothes to the backward people and that he was supervising the work. Informing him in addition that they also distribute sewing machines and coal iron boxes, he said that he was a Sub-collector.

Listening to this, PeriyavargaL said, "In this assembly, a Revenue Inspector who gives facilities to people, a Deputy Tahsildar and a Sub-collector have come. Then, what grievances can we have?", with a prankish laugh in his unique manner.

As for me I was very anxious. Any time SvAmigaL's sight might fall on me. How could I explain my work that only gives pAthakam--grievous sin, to people?

Under that circumstance, I prayed mAnasIkam--in my mind, 'SvAmigaLE! I no longer require to be in this job that I am doing it for the last three years. Kindly give me your grace to somehow get out of it.' SvAmigaL who has compassion, did not ask about my work.

Within a few weeks after this meeting took place, I was relieved from that post and was posted as a Deputy Tahsildar in the Collector's Office.

Although it was the Government that served me the transfer orders, there is no doubt that it was only SvAmigaL's good heart that gave the orders to the Government.

பெரியவாளின் சட்ட ஞானம்

பெரியவாளின் சட்ட ஞானம்         

 ஏதோ ஓர் அறக்கட்டளையை கலைத்துவிட அதன் அறங்காவலர்கள்
முடிவு செய்திருப்பதாகவும், அவர்கள் யாவரும் பெரியவாளின்
பக்தர்களாகையால் அதன் சொத்துக்களை அவர் உயிரினும் பெரிதாக
மதித்த வேதரக்ஷண நிதி ட்ரஸ்டுக்கு மாற்றி விட விரும்புவதாகவும்
அவர்களில் ஒருவர் செய்தி கொண்டு வந்தார். அதற்கு ஸ்ரீ சரணருடைய
அநுமதியும் அநுக்ரஹமும் வேண்டினார்.

ஸ்ரீ சரணர் பளிச்செனப் பதிலிறுத்தார்: "நீங்க ட்ரஸ்டீகளெல்லாரும்
எங்கிட்ட பக்தியா இருக்கேன்னா போறுமா என்ன? ஒங்க பக்தியை,
அபிமானத்தை மனஸார அங்கீகரிச்சுக்கறேன். ஆனாலும் ஒங்க
ட்ரஸ்டோட ஆஸ்தி பாஸ்தியை வேதரக்ஷண நிதிக்கு ட்ரான்ஸ்ஃபர்
பண்றதுன்னா, அதுக்குச் சட்டம் எடம் குடுத்தாதானே முடியும்?அந்த மாதிரிக் குடுக்கலியே! "ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே"ன்னு'லா'வுல இருக்கு. அதன்படி, ஒரு டிரஸ்டைக் கலைக்கும்படிஏற்பட்டா அதனோட சொத்துக்களை எந்த லக்ஷ்யத்துல அந்த ட்ரஸ்ட்ஆரம்பிச்சு நடத்துதோ, அதுக்கு ரொம்பக் கிட்டினதான ஒரு லக்ஷ்யத்தோட நடக்கற இ்ன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்த முடியும். ரொம்ப வித்யாஸமான லக்ஷ்யம் இருக்கிற ட்ரஸ்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாது. இப்ப ஒங்க ட்ரஸ்டோட லக்ஷ்யமும் வேதரக்ஷணமும் வித்யாஸமானதுன்னுதான் எல்லாரும் அபிப்ராயப்படுவா.

ஒங்க ட்ரஸ்ட் ஸோஷல் ஸர்வீஸ் லக்ஷ்யத்துல ஏற்பட்டது. வேத
ரக்ஷணத்தைவிடப் பெரிய சோஷல் ஸர்வீஸ் இல்லேன்னு எங்க மாதிரி
சில பேர் வேணா சொல்லலாமே தவிர, அதைப் பொதுவா லோகம்,
கவர்மென்ட், கோர்ட் ஒத்துக்காது. ஆனதுனால், ஒங்க ஆசையைப் பூர்த்தி பண்ண முடியலியேன்னு எனக்கும் கஷ்டமாத்தான் இருக்குன்னாலும் அப்படித்தான் சட்டம் கட்டுப்படுத்தறது.

நீங்க இத்தனை அபிமானமா நெனச்சதே வேதரக்ஷண ட்ரஸ்டுக்குப்
பணத்தைக் கொண்டு வந்து கொட்டும்! ஒங்க பணமும் ஒரு நல்ல சோஷல் சர்வீஸ் ஆர்கனைஸேஷனுக்குப் போய்ச் சேந்து நல்லபடியா பிரயோஜனமாகணும்னு ப்ரார்த்திச்சுக்கறேன்"- அவருக்கே உரித்தான ஆழ்ந்த அநுதாபத்துடன் கூறி, அகம் குவித்துச் சிறிது நேரம்
பிரார்த்திக்கிறார்.

அடுத்து அவரது மொழியியல் ஞானம், பன்மொழிப் புலமை
ஆகியவற்றுக்கும் சான்று படைக்கிறார்.

" 'ஸீப்ரே'-ன்னு சட்டப் பாயின்ட் சொன்னேனே, அதுக்கு ஸ்பெல்லிங்படி
உச்சரி்ப்புப் பாத்தா 'ஸைப்ரஸ்'னு வரும். ஆனா அது ஃப்ரெஞ்ச்
வார்த்தையானதால, அந்த பாஷையோட லக்ஷணப்படி ஸ்பெல்லிங்
ஒரு தினுஸாவும், உச்சரிப்பு வேறே தினுஸாவும் இருக்கும். இந்த
வார்த்தை ஸ்பெல்லிங்படி 'ஸைப்ரஸ்'ன்னு ஆகும்.ஆனாலும்
ஸைப்ரஸ் தீவுக்குப் போடற ஸ்பெல்லிங் இல்லை. அந்தத் தீவுக்கு,
C,Y,P,R,U,S-னு ஸ்பெல்லிங் போடறோம். 'ஸீப்ரே'க்கு C,Y, அப்புறம்
ரெண்டு வார்த்தையை ஒண்ணா சேக்கறப்ப ஸந்தியிலே போடற
ஹைஃபன், ஹைஃபனுக்கு அப்பறம் P,R,E..E, தான் U இல்லே:
U போட்டா ஸைப்ரஸ் தீவுன்னு ஆயிடும்...E க்கு அப்புறம்
கடைசி எழுத்தா S-(CY-PRES). அந்த 'S' உச்சரிப்புல வராது.
'ஸைலன்ட்' ஆயிடும்.

ஃப்ரெஞ்ச் பாஷைல 'ஸீ-ப்ரே-ன்னா 'ரொம்பக் கிட்டே"னு அர்த்தம்.
ஒரு ட்ரஸ்ட் சொத்தை அதனோட லக்ஷ்யத்துக்கு ரொம்பவும்
கிட்டினதான லக்ஷ்யமுள்ள இன்னொரு ட்ரஸ்டுக்குத்தான்
மாத்தணும்னு தெரிவிக்கிறதால அந்த விதிக்கு அப்படிப் பேர்."

திரு ஆதனூர் ஆண்டளுக்கும் ஐயன்

11. திரு ஆதனூர்

மூலவர் :ஆண்டளுக்கும் ஐயன்
தாயார் :  பார்க்கவி, மந்திர பீடேச்வரி கமலவாஸிநி. ரங்கநாயகி. 
உற்சவர் : அழகிய மணவாளன் (ஸ்ரீரெங்கநாதன்)

பாசுரம் 

அன்னவனை ஆதனூராண்டாளக்குமையனை * 
நென்னலையின்றினை நாளையை * - நீர்மலைமேல் 

என்று திருமங்கையாழ்வாரால் பாசுரம் பெற்ற இத்திவ்ய தேசம்.

வழித்தடம்

இத்தலம் சுவாமி மலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு உள்ளது. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த ஊருக்கு நேராகவே பேருந்து வசதி உள்ளது. இத்தலத்து எம்பெருமானைச் சேவித்து விட்டு இங்கிருந்து புள்ளம் பூதங்குடி திவ்ய தேசத்திற்கு நடந்தே சென்று விடலாம். 

தலவரலாறு. 

பிர்ம்மாண்ட புராணத்தின் 3வது பிரிவில் இத்தலம்பற்றி பேசப் படுகிறது.

ஆண்டு அளக்கிறார் நாம் தினமும் சாப்பிட வேண்டும் என்றும்  சாப்பிடறதுக்கு படியளக்க வேண்டியும் பெருமாள்தான் படி அளக்கிறார். ஆண்டு நம்மை அரசனாக இருந்த ஆண்டு அளக்கும்,  நமக்கு அன்னத்தைப் படி அளந்து கொடுக்கும் அய்யன் நெஜமாவே இது பேரோட மட்டுமில்லை அவர் மரக்கால் படியோட தான் அங்கு எழுந்தருளியிருக்கிறார் தன்னுடைய தலைக்கு கீழே ஒரு படி வைத்துக் கொண்டிருக்கிறார்.  படி வைத்தது ஆச்சரியமில்லை கொடுத்தாலும் கணக்குப் போட்டுக் கொடுக்க  வேண்டும்  இல்லையா எத்தனை பக்தர்கள் வந்து கேட்டாலும் கணக்கில்லாத கொடுக்கலாமா அதனாலே இடது கையில் ஓலைச்சுவடி எழுத்தாணி உடன் சயனத்தில் இருக்கின்றார். படியளக்கும் பெருமாள். ஆண்டளக்கும் ஐயன் அதைத்தான் திருமங்கையாழ்வாரால் பாசுரத்தில் பாடியிருக்கிறார்.

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் இந்த  ஊருக்கு ஏன் இந்த பெயர் வந்தது ஆதனூர் ஆ பசு  தன் ஊர் பசு காமதேனு.  காமதேனு பகவானை சேவித்து சிறந்த கதி அடைய வேண்டும் என்பதற்காக இந்த க்ஷேத்திரத்தில் இருந்துதான் தபஸ் பண்ணினாள் அவள் தவம் புரிந்து
பெருமாளை அடைந்த காரணத்தினால் ஆ தன் ஊர் ஆவின் உடைய ஊர் பசுவினுடைய ஊர் ஆதனூர் என்று பெயர் ஏற்பட்டது காமதேனு தபஸ் பண்ணி ஆச்சரியமாக பெருமாளை அடைந்தாள். ஒரு பக்கம் காவிரி மற்றும் கொள்ளிடம் இந்த இரண்டுக்கும் நடுவே அமைந்த திவ்ய தேசம் ஆண்டளக்கும் ஐயன் சயனத் திருக்கோலத்தில் உள்ளார் கிழக்கு நோக்கி பள்ளிகொண்ட திருக்கோலம்.

இங்குள்ள எம்பெருமானை ப்ருகு மஹரிஷியே பிரதிஷ்டை செய்ததாக ஸ்ரீபாஞ்ராத்ர ஆகமத்தில் உள்ள பௌஷகா ஸம்ஹிதையின் மூலம் அறியப்படுகிறது.

ஒரு சமயம் பிறகு வைகுண்டம் சென்று எம்பெருமானையும், பிராட்டியையும் வழிபட பிராட்டி பூமாலையொன்று பரிசளிக்க, அத்துடன் இந்திர லோகம்  சென்ற ப்ருகு அதனை தேவந்திரனுக்குத் தர, அதனையவன் தனது ஐராவதம் என்ற யானைக்குச் சூட்ட அந்த யானை அதனைத் துதிக்கையில் சுற்றி கீழே போட்டுக் காலால் மிதித்து அப்பாலும் இப்பாலும் அசை போடுவதுபோன்று அசைய ஆரம்பித்தது.

இதனால் மிக்க சீற்றங்கொண்ட ப்ருகு இந்திரனைச் சபிக்க இந்திரன் எல்லாச் செல்வங்களும், சுக போகங்களும் இழந்து இறுதியில் திருமாலிடம் பிராயச்சித்தம் கேட்டு நிற்க, அவனை நோக்கிய பிராட்டி நான் ப்ருகுவுக்கு பார்க்கவி என்ற பெயரில் மகளாகப் பிறந்து வளர்ந்து வருங்காலை திருமால் என்னைத் திருமணஞ் செய்யும்போது நீ அந்த ஸ்தலத்தில் வந்து சேவிப்பாயாக, உனது சாபந்தீரும் என்று கூற அவ்விதமே எம்பெருமான் பார்க்கவியைத் திருமணஞ் செய்யும் போது இந்திரன் இத்தலத்தில் வந்துவேண்ட அவனது சாபம் தீர்ந்து இழந்தது பெற்றான். சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ள அது கையில் ஒட்டிக் கொள்ள அதைச் சுட்டெரித்து சாம்பலாக்குமாறு சிவன் அக்னிதேவனிடம் செல்ல அக்னியால் அது முடியாமல் போனது மட்டு மன்றி அவனையும் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. 
அப்பாபம் நீங்க அக்னி பகவான் இத்தலத்தில் கடுந்தவமிருந்து எம்பெருமான் காட்சி தந்து சாபம் போக்கினார்.

எல்லா தேவர்களுக்கும் அக்னி பதிலியாக இருந்தபடியால் அக்நிர்வை
ஸர்வ தேவர் என்பர் இத்தன்மைத்தான அக்னியின் தோஷமும், இந்திரன்
சாபமும் நீங்கினமையால் இத்தலம் தேவாதி தேவர்களின் ஸ்தலமாக
கருதப்படுகிறது.

ஸ்வாமி உ வே வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ  லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

https://youtu.be/5VPMGiBPy40

ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவி

மகாலட்சுமி, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள் ..? 

💫ஆழ்வார்களிலே நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி வைத்தாராம்...

1). மத்ஸ்ய,
2). கூர்ம,
3). வராஹ,
4). நரசிம்ம,
5). வாமன,
6). பரசுராம,
7). ஸ்ரீராம,
8). பலராம,
9). கிருஷ்ண,
10). கல்கி... அவதாரங்களை, வரவழைத்தார்.

முதல் சுற்றில் ..
மத்ஸ்ய, கூர்ம, வராஹ மூன்று அவதாரங்களும் முறையே ..
மீன், ஆமை, பன்றி ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், "அழகு" ப்  போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி நிராகரித்து விட்டார். 

நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும் உடல் மனித வடிவில் இருந்ததால்  அவரை நிராகரிக்கவில்லை.

நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள்.

இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார். 

“மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டுப் பெரிய காலால் மூவுலகையும்  அளந்தவர் நீங்கள். 

அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. 

எனவே உங்களை நிராகரிக்கிறேன்!” என்றார்  திருமழிசைப் பிரான்.

பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும் கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார். 

பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து,  “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது. 

யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று கூறினார். 

தம்பிக்காக பலராமன் 
போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால், “நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!”
என்று சொல்லி அவரையும்  நிராகரித்துவிட்டார். 

இறுதியாக, ..நரசிம்மன், ராமன், கண்ணன், மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.

மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசைப் பிரான்,...
“நரசிம்மர் தான் அழகு!”* என்று தீர்ப்பளித்தார். 

“ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான  மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை. 

கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதிலும் சந்தேகமில்லை. 

ஆனாலும்  ஆபத்தில் யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள். 

பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும்  போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள் நரசிம்மர். 

எனவே அவர் தான் அழகு!” என்று கூறினார்.

பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும், அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம். 

ஏனெனில் நமக்குத்  துன்பங்கள் நேரும்போது அவன் திருவடிகளைத் தான் நினைத்துக் கொள்கிறோம். 

துயரறு சுடரடி’யான அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக்  காக்கின்றன, எனவே அவை தான்  மிகவும் அழகு. 

அவ்வாறே ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர் தான் அவதாரங்களுக்குள் அழகானவர்.

இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து.

என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார்.

அதனால்தான் அழகிய ராமன், அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை. 

ஆனால், நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று  அழைக்கப்படுகிறார்.

அத்தகைய அழகனாக விளங்குவதால், நரசிம்மருக்கு ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது. 

ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.

மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்? 

ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காணமுடியாது.

மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்?
அதனால் தான்... 
ஸ்ரீமானின்  மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்...

 ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி.

மானசரோவர் பயணம் பகுதி 09

துபாயிலிருந்து ஒரு ஆன்மீகப் பயணம்  ஒன்பதாவது (9) அத்தியாயம்.  ஆரம்பமாகின்றது. 😊

By சுபஸ்ரீஸ்ரீராம்
(Subhasri Sriram)


மானசரோவர் பயணம் பகுதி (9)..

இன்று ஜூலை 3ம் தேதி. இரவு கதவை சாத்திவிட்டு, தூங்கி விட்டோம்.. மணி 9.40.. திடீர் என்று கதவு தட்டும் சத்தம். திறந்துப் பார்த்தால், சுபம் நின்று இருந்தார்..

அவர் ஒரு குட் நியூஸ் சொன்னார்..

நாளைக்காலை 5 மணிக்கெல்லாம் ரெடியாக இருங்கள்.. ஹில்சா போகிறோம்னு சொன்னார்.. நான் நிஜமாத் தான் சொல்றீங்களான்னு கேட்டேன். இதில் ஒரு துளிக்கூட மாற்றமில்லை என்றார்.. மேக்சிமம் ஒன்னு அல்லது ரெண்டு நாளுக்குள்ள கைலாஷ் போய்விடுவோம்னு சொன்னார்..

உடனே சந்தோஷத்தில எனக்கு பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது.. தலைக்கால் புரியவில்லை.. தூக்கம் எங்கள் யாருக்கும் வரவில்லை...

இருந்தாலும் துணிகளை எல்லாம் பேக் பண்ணி ரெடியாக இருந்தோம்...

இன்று ஜூலை 4ம் தேதி.. 😊

வழக்கம் போல காலை எழுந்து பல் தேய்த்தோம்.. டீ குடித்துவிட்டு ஹில்சா செல்வதற்கு ரெடியாக இருந்தோம்..  சரியாக காலை 6.30 மணிக்கு ஏர்ப்போர்ட் நடந்தே வந்தோம்... ஒரே சந்தோஷம்..

அதற்கு முன் இங்கு நடந்த சிலவிஷயங்களைப் பகிர்ந்துக்கொள்கிறேன். 

சிமிக்கோட்ல, குளிக்கலாம்னு போனா, தண்ணி எப்போதும், ஒரே செம்ம ஜில்லிப்பு தான் இருக்கும்... சரி வெந்நீர் வருதான்னு பார்த்தா, விடிய காலை 4 மணிக்கு முன்னர் குளிச்சா வெந்நீர் ஓரளவு வெதுவெதுப்பா வரும்னு பக்கத்து ரூம்காரங்க சொன்னாங்க.

எப்படியோ தினமும் குளிச்சுடுவோம்.. 😜 

அடுத்து, நான் ஒரு அம்மாவைப் பார்த்தேன். அவங்க சிமிக்கோட் ஏர்ப்போர்ட்லேர்ந்து, எல்லாருடைய லக்கேஜ்ஜையும் முதுகுல கயிறுக்கட்டிக்கிட்டு தூக்கிட்டு வருவாங்க... கிட்டத்தட்ட கீழ இருந்து மேல தூக்கிட்டு வர்ற 20 நிமிஷம் ஆகும். இவங்க எங்க ரெஸ்ட்டாரண்ட் வாசல்ல சேர்ல தினமும் உட்கார்ந்து இருப்பாங்க.. கூலிக்கு வேலைப் பார்க்கறாங்க.. இவங்க வாய்ப் பேசமுடியாது..  அவங்களுக்கு நான் வைத்த பெயர் “Bag Amma".. 

கையில மொபைல் இருந்தது..அவங்களைக் கூப்பிட்டு போட்டோ எடுத்துக்கொண்டேன். அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம்..

ரெஸ்டாரண்ட்ல நாங்க சோர்வா உட்கார்ந்து இருக்கும் போது ஒரு பையன் வந்து குடிக்க டீ தண்ணி வேணுமான்னு கேட்பாரு.. அவர் சில சமயம் டேன்ஸ்  சூப்பரா ஆடுவாரு. அவர் எங்க ரூம் அருகில் உள்ள சிவனுக்கு தினமும் கிண்ணத்தில் தண்ணீர் வைப்பார்..காலங்கார்த்தால குளிச்சுட்டு, வந்து ஸ்லோகம் சொல்லுவார்..நன்கு காதில் விழும்.  அவர் பேசுவது சரியாக புரியாது... அவர் ஒரு லாமா என்று அருகில்  இருந்தவர் சொன்னார்.. அவருக்கு நான் வைத்த பெயர் “சிமிக்கோட் சல்மான்”.😃

ஒவ்வொரு நாளும் எதிர்ப்பார்த்து, எப்படா கிளம்புவோம்னு இருந்தது. பிறகு எனக்கு, பேசாமா  கேன்சல் பண்ணிட்டு துபாய்க்கு போயிடலாம்னு தோணியது.. பெருமாள் தான் சோதிப்பார்ன்னு கேள்விப்பட்டுருக்கேன். ஆனா அதைவிட டபுள் பங்கு சிவனும் சோதிக்கறார்னு ஸ்ரீராமிடம் சொன்னேன்.. :P

ஒரு நாள் லேடீஸ் எல்லாம் சேர்ந்து இரவு நேபாள் செஃப்க்கிட்ட கெஞ்சி மிளகு ரசமும், முள்ளங்கி சாம்பாரும் செய்தார்கள்.. கைலாஷ் தரிசனம் முடிந்தவர்கள் வேறு இங்கு வந்தார்கள்.. ஒரே கூட்டம்.. அனைவருக்கும் பிடித்திருந்தது... .

 இப்படி சுவையான அனுபவங்கள் பல கிடைத்தது..

சரி விஷயத்திற்கு வருகின்றேன்..

சிமிக்கோட்டில் இருந்து ஹில்சா, ஹெலிக்காப்டரில் 25 நிமிஷப் பயணம்.. பறக்க ஆரம்பித்துவிட்டோம். 😍

உங்களை மாதிரி தான்  நானும் கைலாஷ் தரிசனம் செய்ய நாளைய பொழுது,  எப்பொழுது விடியும்னு காத்துக்கொண்டு இருக்கேன்.. 

மீண்டும் மானசரோவர் பகுதி தொடரும்... நாளை சந்திப்போம்





கடவுள் இயந்திரம் - சுஜாதா

நன்றி: அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

கடவுள் இயந்திரம் - சுஜாதா ( விஞ்ஞான) சிறுகதை - (2001)

ஆபீஸில் அவ்வளவு உற்சாக தினமல்ல. ரூபன் விட்டுப் போய்விட்டான். திலீபனுக்கு எய்ட்ஸ். நேத்ரி இன்னும் வரவில்லை. 10 மணிக்கு நித்யனை பெரியவர் கூப்பிட்டனுப்பினார். உள்ளே நுழைந்ததும் புஸ்தி மீசையும் கழுத்து வரை மூடியிருந்த ஸ்கார்ப்பும், பட்டாபட்டி டீ ஷர்ட்டுமாக புன்னகைத்து எதிர் சீட்டில் அமர்ந்திருந்த பெரிய மனிதரை காட்டினார். ஒட்ட வெட்டப்பட்ட கிராப்புடன் கச்சிதமாக இருந்தார். பக்கத்து சீட்டில் தன் சைஸுக்கு ஒவ்வாத பெட்டி வைத்திருந்தார்.

"பையா, மீட் ப்ரொபசர் ராகவானந்தம். இவர் ஒரு அற்புதம் கண்டுபிடித்திருக்கிறார். நம் கம்பெனி மூலம் அதை விளம்பரப்படுத்த வேண்டும். இது நித்யன், இந்தக் கம்பெனியின் உயிர் நாடி"…..

"என்ன ப்ராடக்ட்?" என்றான் நித்யன்

பேராசிரியர் அவனை அற்பமாக பார்ப்பதை ரசிக்காமல், "கடவுள் பெட்டி. விளம்பரமே இப்படி வெச்சுரலாமே. ப்ரொபசர், பெட்டிக்குள் கடவுள், உங்கள் முட்டிக்குள் கடவுள், முழங்கால் முட்டி ஞாபகம் வரும். ப்ராடக்ட் என்ன செய்யும் சொல்லுங்க" என்றான் நித்யன்.

"சொல்லுங்க ப்ரொபசர், நீங்கதான் கம்பெனி முதலாளியா?"

"இல்லை. நான் கண்டுபிடித்த விஞ்ஞானி" என்று இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளை கிழித்து வாயில் போட்டுக் கொண்டார்

"கடவுள் பெட்டின்னா ! கொஞ்சம் விவரமாக சொல்லுங்க"

"சிம்பிள். கடவுள் எங்கும் இருக்கிறார். இந்த பெட்டிக்குள்ளே அவரை கொஞ்சம் சிரப் மாதிரி, கான்சன்ட்ரேட் மாதிரி அவரை கிரகிச்சு அடச்சு வெச்சிருக்கேன்".....

"மை காட்…. எந்தக் கடவுள்?"....

"எந்தக் கடவுள் தேவையோ அந்தக் கடவுள்"

“யு மஸ்ட் பி ஜோக்கிங், ப்ரொபசர்"

"ஒரு முறை பார்த்தீங்கன்னா நம்புவீங்க. மின்சாரம் இல்லையா அதை பேட்டரியில் அல்லது கப்பாசிட்டரில் சேர்த்து வைக்க முடியும் இல்லையா? மின்சாரம் ஒரு சக்தி. அதுபோல கடவுள் சக்தி தான். எங்கும் இருக்கிறார். அதனால் சப்ளை ப்ராப்ளம் இல்லை, மின்சாரத்தைப் போல. மின்சாரத்தை சேர்த்துவைக்க முடியும் என்றால் கடவுளை சேர்த்துவைக்க முடியாதா?

நித்யனுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் கஸ்டமர் / கிளையண்ட் சொல்வது அனைத்தும் வேதவாக்கு என்பது கம்பெனி பாலிசி

"அந்தப் பெட்டிக்குள் கைவிட்டால் ஷாக் அடிக்குமோ?" என்றான் கேலியாக.

"சில சமயத்தில் தான் ஷாக் அடிக்கும். ராமர் கிருஷ்ணர் அதெல்லாம் மைல்ட். காளி கொஞ்சம் உதறும். அல்லா, இயேசுநாதர் இவங்களெல்லாம் ரொம்ப மைல்டு. . புத்தர் புஷ்பம் மாதிரி ரொம்ப பொறுமை. இந்த கிராமத்து மதுரை வீரன், காட்டுவிரியன், முத்துக்கருப்பன் இவங்கதான் கொஞ்சம் அடக்கமுடியாமப் போயிடும். அதுவும் மகமாயி"…..

"என்ன சொல்றீங்க நீங்க ? இந்தப் பெட்டிக்குள்ளே எந்தக் கடவுளை வேணுமானாலும் அடச்சு வைச்சுக்கலாமா"?

"அடைத்து விற்க போறாரு" என்றார் பெரியவர்

"அமேஸிங். பெட்டியைக் கொண்டுவந்து இருக்கீங்களா?"

அவர் தன்னருகில் இருந்த பெட்டியை எடுத்தார். ஒரு மாதிரி அரக்கு நிற பெட்டி போல உயரமாக குறுகலாக இருந்தது. ஆனால், பளபளப்பாக அரக்கு நிற பழைய காலத்து கிராமபோன் போலவும் இருந்தது. அதிலிருந்து மையமாக ஆனால் விருப்பமான வாசனை வந்தது.

"லெட் மி ஸீ. இதுக்குள்ள கடவுள் இருக்காருங்கறீங்க? என்றான் ஆச்சரியத்துடன்.

"ஆமா, கடைசியா வெச்சது ஜோராஸ்ட்ரிய கடவுள்னு நினைக்கிறேன். கொஞ்சம் சூடா இருப்பார். பாகன் கடவுள் ஒருவன் இருக்கார். இனிமையா ஃப்ளூட் வாசிக்கிறார், கிருஷ்ணர் கூடப் பரவாயில்லை. பிருந்தாவன சாரங்கா ராகத்தை நன்றாக வாசிக்கிறார். தொட்டுக் கேட்டுகிட்டே இருக்கலாம்."

நித்யன் முதலாளியைத் தனியாக அழைத்து, " திஸ் மான் இஸ் எ நட்கேஸ்" என்றான்.

"நமக்கென்ன, விளம்பர ஏஜென்ஸி கொடுக்கிறாங்க.ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் பெரிய பார்ட்டி. அதுக்குள்ளே கடவுள் இருக்கோ, கடலை இருக்கோ? விளம்பர வாக்கியம் அமைச்சு, வசீகரமாக விளம்பரம் செய்யணும். அதானே! தட்ஸ் இட். பையா, கஸ்டமரின் மன ஆரோக்கியத்தைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது."

"இருந்தாலும் மக்களை ஏமாத்தறதில்லையா?"

"கடவுள் பெட்டிக்குள்ள இருந்தா என்ன, வெளியே இருந்தா என்னப்பா, அந்தாளு சொல்றதில கொஞ்சம் அர்த்தம் இருக்கு. டயம் இருந்தா கேட்டுப்பார். ஸ்க்ரிப்ச்சர்ஸ் அத்தனையும் நெட்டுரு.பைபிள், குரான், தம்மபதா, கீதை....உன்னைப் பொறுத்தவரை ஒரு விளம்பர வாக்கியம்...அவ்வளவுதான்...தியாலஜி, பிலாசபி இதெல்லாம் வுட்டுரு . அம்பேல் !"

"இந்தப் பெட்டி என்ன விலை?" என்றான் நித்யன்.

"விலை கொஞ்சம் அதிகம்தான்."

"கடவுள்னா, சும்மாவா!"

"கேலி புரியுது. கடவுளுக்கு விலை இல்லை. கடவுள் சக்தியை கிரகிக்கத் தங்கத்தில் இன்லே வர்க் பண்ண வேண்டியிருந்தது. தங்கம் மின்சாரத்தை அதிகம் கடத்தும்னு தெரியுமில்லே?"

நித்யன் அவர்பால் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு "டாக்டர் பரமானந்தம்..."

"பேரு ராகவானந்தம்..."

"ஸம் ஆனந்தம்...நீங்க நிஜமாவே இதை நம்பறீங்களா?"

"இதில் நம்பிக்கை பிரச்சினையே இல்லைப்பா. கடவுள் இருக்கார். அவர் சக்தியும் இருக்காது. இன்ஸ்ட்ரக்ஷன் மான்யுவலைப் பாருங்க. பைபிள், குரான், தம்மபதா, கீதை, தாவ் ...எல்லாத்தையும் படிச்சு அதனதன் சாரத்தைக் கொண்டுவந்திருக்கேன். எகிப்தியச் சூரியக் கடவுள் ரா கூட ஆப்ஷனா கொண்டுவரப்போறேன்."

"பிள்ளையார், முருகன்..."

"அதெல்லாம் ரொம்பச் சுலபம்..."

ஓகே, ஓகே, இது எப்படி வேலை செய்யுதுன்னு சொல்லுங்க. கடவுளைப் பத்தி இன்னும் தீர்மானிக்காத என்னைப் போல பாமரனுக்குப் புரியும்படி..."

"சிம்பிள். பெட்டி மேல பிளேட் இருக்கு, பாருங்க. இதைத் தொட்டுக்கங்க. தொட்டுக்கிட்டு இந்தக் குமிழ் இருக்கு பாருங்க இதை மெல்ல, மெல்லத் திருகுங்க. உங்களுக்கு என்ன கடவுள் வேணுமோ நினைச்சுக்குங்க. அந்தக் கடவுள் உங்க மேல பரவுவார். அவருடைய சக்திகள் உங்களுக்கு ஏற்படும். இன் அதர் வர்ட்ஸ் டைம் அவுட் வரைக்கும் நீங்க கடவுளா மாறுவீங்க."

:”அதென்ன டைம் அவுட்?"

"பெட்டிக்குள்ள எலெக்ட்ரானிக் டைமர் இருக்கு. சொல்லுங்க, எந்தக் கடவுள் வேணும்?"

"ம்ம்ம்...எனக்குப் பிடிச்சது கிருஷ்ணர்தான்"

"லிஸ்ட்ல இருக்கு. சரி" என்று அதனுள் இருந்த எண் வரிசையில் எட்டாம் நம்பரை வைத்தார்.

நித்யன் பெட்டியைத் தொட்டுக்கொண்டு, மெல்ல அந்தக் குமிழைத் திருகினான்."ம்ஹூம்...எதுவும் இல்லை"

"கிருஷ்ணர் தெரியலை உங்களுக்கு! சரியாப் பாருங்க. கிருஷ்ணருடைய மாயா சக்தி வர ஆரம்பிச்சிருக்குமே!"

"இல்லை" கண்ணை மூடிக் கொண்டான். பார்த்தான். தெரிந்தது எல்லாம் எதிரே இருந்த கே.பி. வெங்கட்ரமணா கம்பெனி காலண்டர்தான். ப்ரொபசர் குமிழைக் கடைசிவரை திருகினார்,

"ம்ஹூம், கடவுளும் இல்லை, கட் பாடியும் இல்லை"

"கை எடுங்க" என்று ப்ரொபசர் பெட்டியை ஜாக்கிரதையாகத் திறந்து பார்த்தார்.

"ஓ, ஓ, இதுதான் ப்ராப்ளம்" என்று அதிலிருந்து சின்னதாக ஒரு பொருளை எடுத்து "தைரிஸ்டர் புட்டுக்கிச்சு"

நித்யன் அவரை வியப்புடன் பார்த்தான். இவரை மேதை என்பதா? பைத்தியமா? ஆனால், எந்தவித பாசாங்கும் இன்றித் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்.தன் கைப்பையிலிருந்து ஒரு குட்டியான ஸால்டரிங் அயர்னை எடுத்து, "நல்லவேளை, ஸ்பேர் இருக்கு" என்று பெட்டியைத் திறந்து எதையோ உருக்கிப் பற்ற வைத்தார். "இப்பப் பாருங்க" என்றார்.

இப்போது நித்யன் அதில் கை வைத்தபோது அதன் குமிழ் முழுவதும் திருப்பட்டிருப்பதை ராகவானந்தம் கவனிக்கவில்லை.

நித்யன் முகத்தில் ஒருவிதமான மாறுதல் ஏற்பட்டது.

"தெரியுதா? உடல் பூரா பொங்குமே, பாட்டு ? புல்லாங்குழல் கேக்குதா? அவர் சக்தி அனைத்தும் உனக்கு இத்தனை நேரத்துக்கு வந்திருக்கணுமே?"

குமிழைப் பார்த்தார். "ஊப்ஸ், கொஞ்சம் அதிகம் வெச்சுட்டேன்" என்று குமிழை அவசரமாக அப்பிரதட்சணமாகத் திருப்பினார்.

நித்யன் எழுந்து மெல்ல ஒரே திசையில் பார்த்துக்கொண்டு, நடந்து பெரிய சன்னல் கதவைத் திறந்து அதன் விளிம்பில் ஏறிக்கொண்டு கைகளை இறக்கை போல விரித்துக் கொண்டு, "பரித்ராணாய சாதூனாம், விநாசாய சதூஷ்க்ருதாம், தர்ம சம்ஸ்தாபனார்த்தாய, சம்பவாமி யுகே, யுகே" என்று ஆறாவது மாடியிலிருந்து குதித்தான்.

அவன் பறப்பானா ? பறந்தானா?

மகாபாரதம் பகுதி-48

🚩மகாபாரதம்   பகுதி-48

   (அண்ணன் ஆஞ்சநேயரும்        தம்பி     பீமனும்..!

திரவுபதியிடம் பீமன், அன்பே! நீ கேட்ட மலர் குபேரபட்டணத்தில் இருப்பதை அறிந்து கொண்டேன். காற்றினும் வேகமாகச் சென்று கணநேரத்தில் பறித்து வருகிறேன், என சொல்லிவிட்டு, பீமன் புறப்பட்டான். தலீவனம் என்ற காட்டின் வழி அவன் சென்ற போது, அவன் வேகம் தாளாமல், காடே அதிர்ந்து மிருகங்கள் அலறியடித்து ஓடின. ஆனால், வழியில் படுத்திருந்த ஒரு குரங்கு மட்டும் பாதையை மறித்துக் கொண்டிருந்தது. இது ஆச்சரியப்பட்ட தன் கதாயு ஏ குரங்கே! போய் படு. வருவது தெரியவில்லை என . அதன் மிக நீளமாக பல இருந்தது.

பீமனை அலட்சியமாக ஏறிட்டுப் பார்த்த அந்தக் குரங்கு, மானிடனே! வேண்டுமானால் சுற்றிப்போ, அல்லது என் வாலை தூக்கி ஓரமாக வைத்து விட்டு போ, வீணே என்னையேன் எழுப்புகிறாய், என்றது. பீமன், அதன் வாலை அலட்சியமாக தூக்கி விடலாம் என கை வைத்தான். ஒரு சிறியவால், அந்த பலவா சக்திக்கு கட்டப்படவில்லை. கொண்ட மட்டும் தூக்கியும் அதை அசைக்கக் கூட முடியவில்லை.குரங்கு சிரித்தது.
என்ன மானிடா! முடியவில்லையா என்றது. ஏ குரங்கே! ஜாலம் காட்டாதே. என் சக்திக்கு முன்னால் நீ ஒரு தூசு. ராமபக்தனாகிய என் சகோதரன் அனுமானின் வாலைத் தவிர, இந்த உலகில் வேறு எந்த குரங்கிற்கும் சக்தி கிடையாது என்பதை அறிவேன். இப்போது பார், என மீண்டும் தூக்க இப்போதும் வால் அசையவில்லை. அனுமான் அப்போது தன் சுய ரூபம் காட்டினார். ராமாயண காலத்தில் பிறந்து ஒரு யுகத்தையே கடந்த சீரஞ்சிவியான அவர், இப்போது முதிர்ந்த கோலத்தில் இருந்தார்.

தம்பி! பீமா! நானே அனுமான், என்றதும், பீமன் அவரது பாதங்களில் விழுந்தான். அண்ணா! என் தெய்வமே! தங்களுடனா நான் வாதம் செய்து கொண்டிருந்தேன். மன்னியுங்கள், என்று நமஸ்காரம் செய்தான். அனுமானின் தாய் அஞ்சனா, வாயு பகவான் மூலம் பெற்ற பிள்ளை ஆஞ்சநேயர். குந்தி தேவியும் வாயு பகவான் மூலமே பீமனைப் பெற்றாள். தாய் வேறு, தந்தை ஒன்று என்ற முறையில் இவர்கள் சகோதரர்கள் ஆகிறார்கள். தம்பியை அணைத்துக் கொண்ட ஆஞ்சநேயர், பீமா! நீ வேண்டும் வரத்தைக் கேள், என்றார். அண்ணா! நாங்கள் துரியோதனனால் பாதிக்கப்பட்டுள்ள விஷயத்தை தாங்கள் அறிவீர்கள். தர்மத்துக்காக நடக்கப்போகும் போரில் தாங்கள் என் தம்பி அர்ஜுனனின் தேரில் கட்டப்படும் கொடியில் வந்து அமர வேண்டும். நான் தங்கள் திருவடியை விரைவில் அடைய வேண்டும், என வேண்டினான்.

அர்ஜுனனின் கொடியில் வந்து அமர்வதாக ஒப்புக்கொண்ட ஆஞ்சநேயர், பீமா! நீ என் திருவடியை அடைய இன்னும் காலம் இருக்ககிறது. உன் தம்பிகளோடும், திரவுபதியோடும் வாழ வேண்டிய காலத்தை முடித்தபின் என்னை அடைவாய், என வரமருளினார். பின்னர் அளகாபுரிக்கு செல்லும் வழியை அனுமனிடம் கேட்டான் பீமன். தம்பி! அதற்கு இன்னும் பல யோஜனை தூரம் செல்ல வேண்டும். அங்கே நீ கேட்கும் மலர் இருக்கிறது. அந்த தோட்டத்தை பல ராட்சஷர்கள் பாதுகா த்து வருகிறார்கள். அவர்களைக் கொன்று அந்த மலரைப் பறிக்க வேண்டும். அல்லது குபேரன் தன் மனைவி சித்ராதே உதவியுடன் அந்த வனத்துக்கு அவ்வப்போது வருவான். நீ நட்பு கொண்டால் மலரை அவனே உனக்கு பரிசாகத்தருவான், என யோசனை சொன்னார். பீமன் அவரிடம் ஆசி பெற்று புறப்பட்டான். செல்லும் வழியில் சக்ரசாகர மலை வந்தது. அங்கே தேவர்கள் தவமிருப்பதுண்டு. புண்டரீகன் என்ற அசுரன் அப்பகுதிக்கு வந்த பிறகு, அவர்கள் அப்பகுதிக்கு வருவதில்லை. அவன் ஒரே நொடியில் இருநூறு யோஜனை தூரம் நடக்குமளவிலான கால்களைப் பெற்றவன். அந்த மலைக்கு பீமன் வந்ததும், அவன் வழி மறித்தான்.

ஏ மானிடனே! வழி தெரியாமல் வந்துவிட்டாயா? திரும்பி ஓடிவிடு, என்றான். கலங்காத பீமன், ஏ அசுரா! உன் அழிவுக் காலத்தை வரவழைத்துக் கொள்ளாதே. வழி விடு, என்று இடி போல் முழங்கினான். உடனே அசுரனுக்கு கோபம் ஏற்பட, இருவரும் கடுமையாகப் போரிட்டனர். அப்போது அசரீரி தோன்றி, பீமா! இவன் உன்னால் தான் அழிய வேண்டுமென்பது விதி. அவனது உயிர் அவனது தோளில் இருக்கிறது. உன் கதாயுதத்தால் அந்த இடத்தில் அடி, என்றதும், பீமனும் கணப்பொழுதில் அவ்வாறே செய்தான். அசுரன் சாய்ந்தான். தேவர்கள் மகிழ்ந்தனர். பின்னர் செந்தாமரை மலர்கள் பூத்துக்கிடக்கும் அளகாபுரி எல்லைக்குள் நுழைந்தான். அங்கே, அனுமான் சொன்னது போலவே ராட்சஷர்கள் உலா வந்து கொண்டிருந்தனர். ஒன்றிரண்டுல. வாமனன் என்பவன் தலைமையில் லட்சம் பேர் இருந்தார்கள். அவர்கள் பீமனை பார்த்துவிட்டனர். ஏ நரனே! நீ எப்படி பூலோகத்தில் இருந்து இந்த அளகாபுரிக்கு வந்தாய். உயிர் மேல் ஆசையிருந்தால் ஓடிவிடு. இங்கே இந்திரன் கூட வருவதற்கு அஞ்சுவான், என்றதும் பீமன் ஏதும் பேசாமல் அரக்கர் இடத்தினரிடையே பாய்ந்தான்.

லட்சம் பேரையும் கணப்பொழுதில் மரங்களை பிடுங்கி அடித்துக் கொன்றான். அவர்களை அம்புகளால் அடித்து சாய்த்தான். ஆர்ப்பாட்டுடன் தோட்டத்தில் நுழைந்தான். இதைக் கண்டு அங்கு வசித்த யட்சர்கள் கலங்கி ஓடி தங்கள் தலைவர் குபேரனிடம் விபரத்தைக் கூறினர். குபேரனின் கண்கள் சிவந்தன.சங்கோடணன் என்ற படைத்தலைவனை அழைத்து, அந்த மானிடனை இழுத்து வர கட்டளையிட்டான். சங்கோடணன் பெரும்படையுடன் அங்கு செல்லவே, பீமன் தன் பலத்தாலும் கதாயுதத்தாலும் பல்லாயிரம் யட்சர்களைக் கொன்று விட்டான். சங்கோடணனுக்கு கொடுத்த அடியில் அவன் புறமுதுகிட்டு ஓடினான். குபேரப்பெருமானே! அவன் சாதாரண ஆளாகத் தெரியவில்லை. சிவபெருமானே இங்கு வந்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது எனவும் குபேரன் அதிர்ந்தான்..!

(குபேரன் என்ன செய்ய போகிறார் என்பதை நாளை பார்ப்போம்..!

ஶ்ரீராம ஜெயம்🙏

     தொடரும்...