Saturday, March 27, 2021

விவேகானந்தரை வியக்க வைத்த சோமசுந்தர நாயகர்

 ! விவேகானந்தரை வியக்க வைத்த சோமசுந்தர நாயகர் !! 

*தமிழ் படிக்காமல் இருந்துவிட்டேனே என்று கண்கலங்கிய விவேகானந்தர்

*உங்களைப் போன்று 100 தமிழர்கள்(மதராஸிகள்) என்னிடம் இருந்தால் உலகையே மாற்றிக்காட்டுவேன் என்று கூறிய விவேகானந்தர்.

பாம்பன் சுவாமிகள் வழிவந்த சற்குரு முத்துக்குமரகுரு சாமிகளின் உரையிலிருந்து(முழு உரை ஒளிப்பதிவு முதல் கருத்திடலில்)

"அண்மையிலே இந்துமதத்தின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றிய உத்தமர் வீரத்துறவி விவேகானந்த சாமிகள்.

அவர் உலக அரங்கில் செல்வதற்கு பெரிதும் காரணமாக இருந்தது தமிழகம்;தமிழ்ப் பாரம்பரியம்.

மார்தட்டிக்கொள்ளலாம்.இன்னும் சரியாகச் சொல்லப்போனால் தமிழ் மரபு.அதில் பெரும்பாலும் பங்கு கொண்டவர் சேதுபதி ராஜா.

சேதுபதியின் குலகுருவாக விளங்கியவர் சைவ சமய சண்டமாருதம் சோமசுந்தர நாயகர்.வடமொழி,தென்மொழி என்ற இரண்டு கடலையும் குடித்து எழுந்த ஞானமேகம்.அவருக்கு ஆங்கிலம் தெரியாது.

சேதுபதி ராஜா விவேகானந்தர் வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்தவுடனே விவேகானந்தரையும் சோமசுந்தர நாயக்கரையும் ஒருசேரவைத்து அவர்கள் பேசுகின்றபோது பக்கத்திலிருந்து தான் இன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்று கருதுகிறார்.

அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.இவரே மொழிபெயர்ப்பாளராக அமைகின்றார்.ஏனென்றால் விவேகானந்தருக்குத் தமிழ் தெரியாது.ஒரு சரியான நேரத்திலே பேச்சைத் தொடங்குகிறார்கள்.இது நடந்த நிகழ்ச்சி.

அறிமுகப்படுத்துகின்றபோது எம்முடைய குலகுருவாக விளங்கக்கூடிய சோமசுந்தர நாயகர் என்று விவேகானந்தருக்கும், விவேகானந்தரைக் குறித்து சோமசுந்தர நாயகருக்கும் சொன்ன பின்னர் இருவரும் வணக்கம் தெரிவித்துக்கொள்கின்றனர்.

விவேகானந்தர் கேட்டார், நீங்கள் எந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறீர்கள்?

அவர் சொன்னார் நான் சைவசித்தாந்தத்தைப் பின்பற்றுகிறேன்.

அவர் கேட்டார் நீங்கள் என்ன கொள்கையைப் பின்பற்றுகிறீர்கள்.

நான் வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறேன்.

அப்பொழுது விவேகானந்தர், உங்களுடைய சைவசித்தாந்தத்தில் முடிந்த முடிபாக நீங்கள் சொல்லக்கூடிய கருத்து என்ன என்று கேட்டார்.

இவர் முப்பொருள் உண்மை என்று சொன்னார்.

அப்படியென்றால் என்ன என்று கேட்டார்.

பதி,பசு,பாசம்,---உலகு,உயிர்,இறைவன் என்று சொல்லக்கூடிய மூன்றும் நித்தியப் பொருள்கள் என்பது இந்தக் கொள்கை.

விவேகானந்தர் சொன்னார்,ஒருக்காலும் இருக்கமுடியாது.

அப்பொழுது சோமசுந்தர நாயக்கர் கேட்டார்,நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

இறைவன் ஒருவன்தான் உண்மைப் பொருள்.மற்றவையெல்லாம் உண்மை அல்ல என்பது எங்கள் வேதாந்தத்தின் முடிவான கருத்து.

பிரஹ்ம சத்யம்; ஜகன் மித்யா; ஜீவோ பிரஹ்மைவ நபர(பிரஹ்மத்தைக் காட்டிலும் தனித்து ஆத்மா என்று கிடையாது.)

பிரம்மம் ஒன்றுதான் என்றைக்கும் இருக்கக்கூடியது.இந்த உலகமானது இருப்பதைப்போல ஒரு தோற்றமளிக்கக்கூடிய பொருளேயன்றி உண்மையில் அப்படி இல்லை.

இந்த ஜீவன் என்று சொல்லக்கூடிய உயிர்கள் இறைவனுடைய பகுதிகளாக விளங்கிக்கொண்டிருக்கக்கூடியவையே தவிர இறைவனைவிட்டு வேறொன்றாக இருக்கக்கூடியவை இல்லை.அதனால் இருப்பது பிரம்மம் ஒன்றே.

அப்பொழுது இவர் சொன்னார்,இந்த உலகமானது வெறும் மாயத்தோற்றம் என்று சொன்னால் நாங்கள் அனுபவிக்கிறோமே. கற்பனையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை என்று விவாதம் எழுந்தது.

அப்பொழுது விவேகானந்த சுவாமிகள் மூன்று பொருள்கள் இருக்கின்றன என்று நீங்கள் நிரூபித்தால் நான் ஒத்துக்கொள்கிறேன் என்று சொன்னார்.

ஆஹா, தாராளமாக நிரூபிக்கிறேன்.

அப்பொழுது விவேகானந்தர்,நீங்கள் உங்கள் சாத்திர நூல்களை வைத்து உங்கள் கருத்துக்களை சொன்னால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொன்னார்.

சரி வேண்டாம்.நீங்கள் சொல்லக்கூடியதை வைத்தே சொல்கிறேன்.

வேண்டாம்.நான் சொல்லக்கூடிய வேறுவேறு எல்லாவற்றையும் சொன்னால் நேரம் போதாது எனக்கு என்கிறார் விவேகானந்தர்.

வேண்டாம்.இப்பொழுது நீங்கள் சொன்னீர்களே,பிரஹ்ம சத்யம்; ஜகன் மித்யா; ஜீவோ பிரஹ்மைவ நபர.இதை வைத்துக்கொண்டே நான் என்னுடைய கொள்கையைச் சாதிக்கமுடியும் என்றார் சோமசுந்தர நாயகர்.

இதற்குப் பெரியநிலை வேண்டும்.வேண்டாம் என்றார் விவேகானந்தர்.

எனக்கு முதல் வார்த்தையே போதும் என்றார் சோமசுந்தர நாயகர்.

எங்கே சாதியுங்கள்.நீங்கள் உண்மை என்று நிரூபித்துவிட்டால் ஒத்துக்கொள்ளுகிறேன் என்றார் விவேகானந்தர்.

அப்பொழுது சோமசுந்தர நாயகர் விவேகானந்தரைப் பார்த்து, அந்த முதல் வார்த்தை இருக்கிறதே பிரம்மம் அதற்கு நேரடியான பொருள் என்ன என்று கேட்டார்.

அதற்கு பிரம்மம் என்றால் பெரியது என்று விவேகானந்தர் சொன்னார்.

அப்படியானால் நீங்கள் என்னுடைய கொள்கையை ஏற்றுக்கொண்டீர்கள்.முப்பொருள் உண்மையை ஒத்துக்கொண்டீர்கள் என்று பொருள் என்றார் சோமசுந்தர நாயகர்.

அப்பொழுது விவேகானந்தர், பிரம்மம் பெரிது என்று சொன்னால் பதி,பசு,பாசம் என்று மூன்று பொருள்கள் இருப்பதாக ஒத்துக்கொண்டேன் என்று எப்படி வரும் என்று கேட்டார்.

அப்பொழுது விளக்கினார் சோமசுந்தர நாயகர்.பிரம்மம் என்ற சொல்லுக்கு நீங்கள் சொன்ன அர்த்தம் பெரியது.

பெரியது என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றால் you have to make a comparative study.சிறியது என்று ஒன்று இருந்தால்தான் பெரியது என்று ஒன்று இருக்கமுடியும்.

சிறியது பெரியது என்று இரண்டு பொருள்கள் இருக்குமேயானால் அவைகள் இருப்பதற்கான ஒரு நிலைக்களம் வேண்டும்.

அப்பொழுது பெரியது என்பது பிரம்மம், சிறியது என்பது உயிர்கள் இவை இரண்டுக்குமான நிலைக்களம் உலகம்(பிரபஞ்சம்). 

அப்ப உலகு,உயிர்,இறைவன் என்ற மூன்றையும் பறைசாற்றுகின்றது பிரம்மம் என்ற சொல் என்பதை விளக்கினார்.

விவேகானந்தர் இந்தப் பொருள் எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டார்.

சைவசித்தாந்தத்திலே சிவஞானபோதம் என்ற ஒரு நூல் இருக்கிறது.அது தமிழ் நூல் என்று சோமசுந்தர நாயக்கர் கூறினார்.

நான் இன்னும் தமிழைப் படிக்காமல் இருந்துவிட்டேனே என்று விவேகானந்தர் உண்மையிலேயே கண் கலங்கினார்.

அந்த நேரத்திலே விவேகானந்தர் சொன்னார், உங்களைப் போன்று நூறு மதராஸிகள் எனக்குக் கிடைப்பார்களேயானால் நான் இந்த உலகத்தை மாற்றிக்காட்டுவேன்.

நூறு மதராஸிகள் எனக்குக் கிடைப்பார்களேயானால் நான் இந்த உலகத்தை மாற்றிக்காட்டுவேன் என்று விவேகானந்தர் கூறியதை எல்லோரும் சொல்வார்கள்.

ஆனால் எந்தச் சந்தர்ப்பத்தில்,யாரை முன்வைத்து அதைக் கூறினார் என்பதை கூறாமல் விட்டுவிடுவார்கள்."

🌺ஜெய் சுவாமி ஜீ 🌺ஜெய் குரு தேவ்🌺



வீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்

 Partagé de mes Notes:

வீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்..


வீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்..

பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது.

ஜாதிக்காய்: பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

கிராம்பு: நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இஞ்சி : மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.

புதினா: ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.

ஏலக்காய்: வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.

மல்லி: செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.

மஞ்சள்: காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.

சோம்பு: வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.

பெருங்காயம்: கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.

சீரகம்: சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.

வெந்தயம்: நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.

கடுகு: இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

பூண்டு: வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.

ஓமம்: இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது.

1. சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.

4. செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

6. இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

7. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.

#La médecine traditionnelle

சுவாச பிரச்சனைகள் அனைத்தும் குணமாக

சுவாச பிரச்சனைகள் அனைத்தும் குணமாக:

தே.பொருட்கள்:-
தூதுவளை – 100 கிராம்
துளசி - 100 கிராம்
முசுமுசுக்கை - 100 கிராம்
கண்டங்கத்திரி - 100 கிராம்

     ஆகிய நான்கையும் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன்

சுக்கு – 10 கிராம்
மிளகு – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
அதிமதுரம் – 10 கிராம்
ஜாதிக்காய் – 10 கிராம்
மாசிக்காய் – 10 கிராம்
ஜாதிப்பத்திரி – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
கருஞ்சீரகம் – 10 கிராம்
அக்ரகாரம் – 10 கிராம்
கடுக்காய் – 10 கிராம்

     ஆகியவற்றை எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு பொடியை எடுத்து, தேனில் குழைந்து தினம் காலை, இரவு இருவேளை உணக்குப்பின் சாப்பிட்டு வர, ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற அனைத்தும் தீரும்.

==========================================================================

 இன்றைய (பாட்டி வைத்திய) தகவல் அறிவோம்.

1. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

2. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

3. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

4. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

5. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

கோவைக்காய் சாதம்

 நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வர உதவும் கோவைக்காயில்… ருசியான ரெசிபி செய்யலாம்..!! கோவைக்காய் சாதம் செய்ய தேவையான பொருள்கள்:


கோவைக்காய் சாதம் செய்யதேவையான பொருள்கள்:


பச்சைஅரிசி– 2 கப்
பெரிய வெங்காயம்– 1
கோவைக் காய்– 100 கிராம்
தேங்காய்த் துருவல்– 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள்– 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு– 2 ஸ்பூன்
கடுகு, உளுந்து – சிறிதளவு
கடலைப் பருப்பு – சிறிதளவு
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பெரிய வெங்காயம், கோவைக்காயை எடுத்து நீளமாக வெட்டி கொள்ளவும். பின்பு தேங்காயை எடுத்து துருவி கொள்ளவும்.

அதன் பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

மேலும் அதனுடன் நறுக்கிய கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கியதும், பின்பு அதனுடன் எலுமிச்சம் சாறு சேர்த்து நன்கு கிளறி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

பின்பு அதில் பச்சை அரிசியை போட்டு ஒருகொதி வந்தவுடன் 10 நிமிடம் கழித்து நன்கு கிளறியபின் இறக்கி பரிமாறினால்ருசியான கோவைக்காய் சாதம் தயார்.

G L சமையல்

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கும் சட்னி

 உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கும் சட்னி


தேவையான பொருட்கள்

தனியா (மல்லி) - 4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
தக்காளி - 2 (பெரியது)
வெங்காயம் - 2
மிளகாய் வற்றல் - 7
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை


செய்முறை

வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.

பருப்புகள் நிறம் மாறியதும் தனியா, மிளகாய் வற்றல், புளி சேர்த்து தனியா வாசம் வரும் வரை வறுக்கவும். வாசம் வந்ததும் வேறு தட்டிற்கு மாற்றி விடவும்.

அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி, உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.

வதக்கியவற்றை ஆற வைத்து தனியாவுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

சுவையான தனியா சட்னி தயார். இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி

G L சமையல்

நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்

நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்

பொதுவாக ஒருவர் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல்  போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே.

அதிலும், இன்று உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கண்டு அனைவரும் கதிகலங்கிப் போயிருக்கும் நிைலயில், ஏற்கனவே பலவீனமாக இருப்பவர்கள் சற்று கூடுதலாக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக இந்த வைரஸைக்கண்டு எல்லோரும் பயப்படத்தேவையில்லை.

குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள்தான் பயப்பட வேண்டும்.  உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிலிருந்து காத்துக் கொள்ள நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டும்.

சாதாரணமாக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை  இரண்டு வகைகளில் பெறுகிறோம்.  ஒன்று மரபுவழியாக அமைந்த சக்தி, மற்றொன்று உணவுப்பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே போதும். அந்த வகையில் நோயெதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கக்கூடிய சில உணவு வகைகளைப் பார்ப்போம்.

நம் தமிழ்நாட்டு சமையலில் மிளகு, இஞ்சி, பூண்டு, மஞ்சள் இல்லாத உணவே இல்லை என்று சொல்லலாம். இந்த மூன்றும் பாக்டீரியாக்களை ஒழிப்பதில் சிறந்த பொருட்கள்.

பூண்டு...

பூண்டில் இருக்கும் ஆன்டிஆக்சிடெண்டுகள் மற்றும் அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் அழிக்கக்கூடியது.  ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், நோயெதிர்ப்பு மண்டல ஹோமியோஸ்டாஸிஸை பராமரிக்கவும் நோயெதிர்ப்பு உயிரணுக்களில் நன்மை பயக்கும் விளைவுகளை வெளிப்படுத்தவும் செய்கிறது.

இஞ்சி... 

3.85 மிமீட்டர் நீளம் உள்ள 100 கிராம்  இஞ்சியில் மிக உயர்ந்த நிலை ஆக்சிஜனேற்றங்கள் இருக்கிறது. ஆண்டிமைக்ரோபியல் திறனைக் கொண்டுள்ள இஞ்சி, தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவக்கூடியது. நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடும் சக்தி இதற்கு உண்டு.

மிளகு... 

ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் திறன் கொண்டுள்ள கருப்பு மிளகு நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடும் ஒரு முக்கியமான ஆரோக்கியமான உணவாகும்.

ரெஸ்வெராட்ரோல் (Resveratrol)...

ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) எனப்படும் பாலிபினால் நிறைந்த உணவுகளான கருப்பு திராட்சை (Black grapes), கருப்பு உலர்திராட்சை (Black raisins),  பிஸ்தா (Pistachios) மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில், ஆக்ஸிஜனேற்ற பண்பும், ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக வினைபுரியும் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. ரெஸ்வெராட்ரோலின் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு மற்றும் ஈகோசனாய்டுகளின் உற்பத்தியில் ஈடுபடும் என்சைம்களைத் தடுக்கும் திறன் அதன் அழற்சி எதிர்ப்பில் (ஆன்டிஇன்ஃப்ளமேஷன்) பங்களிக்கிறது. நோயைத் தடுப்பதிலும் இது குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

வைட்டமின் ‘ஏ’ உள்ள உணவுகள்...

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், முருங்கைக்கீரை, ஆடு, கோழி, மாட்டிறைச்சியின் ஈரல், முட்டை, பப்பாளிப்பழம், மாம்பழம், பசலைக்கீரை போன்றவற்றில் வைட்டமின் ’ஏ’ மிகுந்துள்ளது. வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் ‘அழற்சி எதிர்ப்பு வைட்டமின்’  என்று அழைக்கப்படுகிறது. உடல் செல் மண்டலத்தின் நோயெதிர்ப்பு மறுமொழிகள் மற்றும் மனித நோயெதிர்ப்பு செயல்முறைகளை சீர்படுத்தும் செயல்பாட்டில் ‘வைட்டமின் ஏ’  முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் ‘சி’ உணவுகள்...

ஆரஞ்சு, கொய்யா, நெல்லிக்காய், எலுமிச்சை, குடைமிளகாய், தக்காளி போன்றவற்றில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளது. வைட்டமின் ‘சி’ ஒரு ஆக்ஸிஜனேற்றி என்பதோடு, ஃப்ரீ ரேடிக்கல்களால், உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. உடல் முழுவதும் உள்ள திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுது பார்க்க இது அவசியம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்...

சால்மன் மீன், ஆலிவ் ஆயில், ஆளிவிதை (Flax seeds), வால்நட், முட்டை மற்றும் அவகேடோ போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. பொதுவாக ஒமேகா 3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள்,  இதயத்தின் வளர்சிதை மாற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு  மற்றும் ஆக்ஸிஜனேற்ற திறனை மேம்படுத்துகின்றன.

மஞ்சள்...

மஞ்சளைப்பற்றி சொல்லவே தேவையில்லை.  முக்கியமாக மஞ்சளில் இருக்கும் குர்குமின், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நாள்பட்ட அழற்சி நோய்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது உடலில் ஃப்ரீரேடிகல்ஸ்  உள்ளடக்கத்தை குறைக்க உதவுகிறது. குர்குமின் அதன் அழற்சி எதிர்ப்பு விளைவுகளின் மூலம் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. முடிந்தவரை சாம்பார், பொரியல், குழம்பு, கூட்டு என எந்த சமையலாக இருந்தாலும் மஞ்சள் சேர்த்து செய்யுங்கள்.

தக்காளி....

தக்காளி பழங்களில் இருக்கும்  பைட்டோ கெமிக்கலான லைகோபீன்,  முக்கிய எதிர்வினை ஆக்ஸிஜன் இனம் (Reactive Oxygen Species) என்பதால், ஃப்ரீ ரேடிகல்ஸ்களை அழிப்பதில்  திறமையான ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது மரபணுவில் (DNA) உள்ள உயர் எதிர்வினை  எலக்ட்ரானை மிகவும் நிலையான ஃப்ரீ ரேடிக்கல்லாக மாற்றக்கூடியது. இதன்மூலம் நோய்க்கிருமிகளைத் தடுப்பதில் சிறந்த எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களாக செயலாற்றுகிறது.

அன்னாசிப்பூ...

பிரியாணியில் வாசனைக்காக ‘அன்னாசிப்பூவை’ சேர்க்கும் வழக்கம் நம்மிடம் உண்டு. அன்னாசிப்பூவில் உள்ள லிமோனேன் ஒரு கலவையான ஆக்ஸிஜனேற்றியாகும் என்பதால், செல்களின் அழிவுக்கு காரணமான லிப்பிட் பெராக்ஸைடேஷனைத்(Lipid peroxidation) தடுக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கவும் மற்றும் புரத ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் தொடர்புடைய புரத மறுப்பைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது ஒரு அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாக செயல்படுவதோடு, காயங்களை குணப்படுத்துவதை துரிதப்படுத்துகிறது.

கடல் உணவுகள்...

கடல் உணவுகளான இறால், நண்டு, கடல் சிப்பி போன்றவற்றிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.  

பூசணி விதைகள்..  

வெள்ளை மற்றும் சிவப்பு பூசணி விதைகளில், ஆளிவிதைக்கு அடுத்தபடியாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இவற்றையும் சாலட் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

ப்ரோக்கோலி...

ப்ரோக்கோலியில் வைட்டமின் ‘சி’,  ‘ஏ’  மற்றும் ‘இ’ நிறைந்துள்ளது. இதோடு மினரல் சத்துக்களும் நிறைவாக உள்ளன. இதையும் வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்துக் கொள்ளலாம்.

தயிர்...

தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் உணவாகும். இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், வைட்டமின் ‘டி’ யில் இருக்கும் நோய் எதிர்ப்பு சத்தியை தூண்டி வேகமாக செயல்பட வைக்கும். பச்சடி, வெள்ளரி பழம், செர்ரி பழம் போன்றவற்றை தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

கிரீன் டீ..  

நோய் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாக்கும். கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மிகுந்துள்ளதால் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும்

ஆற்றல் உள்ளது.இரவு பாலில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாம். இஞ்சி, பூண்டு, மிளகு, துளசி, ஏலக்காய் போன்றவற்றை தட்டிப்போட்டு அத்துடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் சளி, தொண்டை வலிக்கு இதமாக இருக்கும். முருங்கைக்கீரை பொறியல் அல்லது சூப் வைத்து சாப்பிடலாம்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து, வெல்லம், ஏலக்காய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தக்காளி, மிளகு, பூண்டு ரசம் வைத்து சூடாக அடிக்கடி குடிக்கலாம். சட்னி, சாம்பார் எதாவது ஒன்றில் பூண்டை கட்டாயம் சேர்த்துக் கொள்வது நல்லது. கூடியவரை வீட்டில் தயாரித்த உணவையே சாப்பிடுவதும், ஹோட்டல், வண்டிக்கடை, ரோட்டோரக் கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பதும் கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும்...

வெஜ்_குருமா.../சுண்டைக்காய்/முருங்கை மசாலாப்பொரியல்

 வெஜ்_குருமா...

#தேவையானபொருட்கள்....

கேரட் – 2, உருளைக்கிழங்கு, நூக்கல் –   தலா ஒன்று, பீன்ஸ் – 10 பச்சைப் பட்டாணி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 5 பல், ஏலக்காய் – 3, பட்டை, பிரிஞ்சி இலை – தலா ஒன்று, லவங்கம் – 5, தேங்காய் – அரை மூடி, முந்திரி – 10, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா, பொட்டுக்கடலை –  தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு

#செய்முறை....

கேரட், உருளைக்கிழங்கு, நூக்கல், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைக்கவும்.  ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, லவங்கம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்யவும். தேங்காயுடன் முந்திரி, தனியா, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும்...

குக்கரில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சோம்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆகும் சமயம் பச்சை மிளகாய் – இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை சிறு தீயில் வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, பொடி செய்த மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறி, பச்சைப் பட்டாணி சேர்த்து மறுபடியும் வதக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் (உப்பு போதவில்லை என்றால் சிறிது போட்டுக் கொள்ளவும்). கொதி வந்தவுடன் குக்கரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

இட்லி, சப்பாத்தி, புரோட்டாவுக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்துடன்  சேர்த்து சாப்பிடவும் சிறந்தது இந்த குருமா...

==========================================================================

முருங்கை மசாலாப்பொரியல்

தேவை: முருங்கைக்காய் 3, பெரிய வெங்காயம் 2, தக்காளி 4, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மல்லித் தூள் 1 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல், சோம்பு 1 டீஸ்பூன்.

செய்முறை: முருங்கைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்குங்கள்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பின்னர் முருங்கைக்காய், அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி, மூடி வையுங்கள். தீ மிதமாக எரிய வேண்டும். முருங்கைக்காய் வெந்ததும், தீயை அதிகப்படுத்தி, கறிவேப்பிலை தூவி, சுருளக் கிளறி இறக்குங்கள்.   

--------------------------------------------------------------------------------------------------------------------------

சுண்டைக்காய்

சுண்டைக்காய் செடியின் காயும் வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன கால் பித்த நோயை போக்கும்

 காய் மார்பு சளி மற்றும் இருமலை போக்கும் மூலச்சூடு நீங்கும்

சுண்டை வற்றலோடு நெல்லிக்காய் வற்றல் வெந்தயம் ஓமம் சுக்கு சீரகம் கறிவேப்பிலை காய்ந்தது மாங்கொட்டை பருப்பு மாதுளை ஓடு ஆகியவற்றை சம அளவில் எடுத்து சிறிது அளவு நெய்யில் பொன் வறுவலாக வறுத்து இடித்து சூரணம் செய்து காலை மாலை இருவேளையும் சிட்டிகை வீதம் வாயில் போட்டு பால் குடித்து வர மார்பு சளி ஆஸ்துமா காச நோய் நீங்கும்

இதன் வேரை புளி கரைத்த நீரில் கரைத்து தர நஞ்சை முறிக்கும் இதன் வேரை அரைத்து மாத்திரைகளாக கொண்டு வயிற்று வலிக்கு பயன்படுத்தலாம்

பாரம்பரிய இயற்கை மருத்துவம்.

7358575766 ....