Thursday, March 5, 2020

திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது சரியா?



திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது சரியா?

(தெளிவான வழி தெரியாத போது,இக்கட்டான சந்தர்ப்பத்தில் திருப்திகரமான முடிவு எட்ட முடியாத போது, நடுநிலைமை தவறி தீர்மானம் செய்யக்கூடும் என்ற நிலை வரும்போது)

(அர்ஜுனனை முன்னிறுத்தி மனித சமுதாயத்துக்கே கீதாசார்யன் வழி காட்டியது போல-பெரியவாளின் உபதேசம் என்பது தெள்ளத் தெளிவு)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவாளிடம் அபார பக்தி கொண்டிருந்த ஒருவர், பொருள் வசதி இல்லாமலிருந்தார்.

அவருடைய பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்று.

பணத்துக்கு எங்கே போவார்?

பெரியவாளிடம் வந்து பிரார்த்தனை செய்தார்.

"விவாகத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்கே. கவலைப்பட வேண்டாம்" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்கள், பெரியவா.

பின்னர் ஒரு சிஷ்யரை, சென்னையிலிருந்த ஒரு பக்தரிடம் அனுப்பினார்கள். இந்த பக்தர் செல்வந்தர்.அத்துடன் பெரியவா உத்தரவுப்படி பல பேர்களுக்கும் அவ்வப்போது உதவி செய்யும் இயல்புடையவர்.

சிஷ்யர் சென்று விவரம் கூறியபிறகு, சிறிது தொகையை கொடுத்தார் அவர்.

கல்யாணத்துக்கு ரொம்பச் செலவாகும். ஐநூறு ரூபாய் போறாது.." என்றார் சிஷ்யர்.

"இதைப் பாருங்கோ...நான் என்ன செய்தேன் தெரியுமோ?... ரூபாய், இருநூறு,ஐநூறு,ஆயிரம் என்று,ஐயாயிரம் வரை சீட்டில் எழுதி,ஸ்வாமி முன்னே போட்டு, பேத்தியை விட்டு ஒரு சீட்டு எடுக்கச் சொன்னன். ஐநூறு ரூபாய் சீட்டுத் தான் வந்தது. அந்தத் தொகையைக் கொடுத்து விட்டேன்" என்றார் செல்வந்தரான பக்தர்.

சிஷ்யர் திரும்பி வந்து பெரியவாளிடம் விபரம் கூறினார்.

பெரியவா சொன்னார்கள்

"திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது என்று ஒரு பழக்கம் இருக்கு. ஆனா, எப்போ திருவுளச் சீட்டு போட்டு தெய்வத்தினுடைய, திருவுள்ளத்தை அறியணும்?.

"ஒரு பிரச்னையிலே தெளிவான ஒரு வழி நமக்குத் தெரியாத போது... ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில், சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் திருப்தியான ஒரு முடிவு எட்ட முடியாத போது...ஒருத்தர் நடுநிலைமை தவறி தீர்மானம் செய்யக்கூடும் என்ற சந்தேகம் வரக்கூடிய போது...இப்படிப்பட்ட நிலைமைகளில் பகவானுடைய உத்தரவைக் கேட்டு போடப்படும் திருவுளச் சீட்டுக்கு மதிப்பு உண்டு"

"சென்னை அன்பருக்கு நான் தான் குரு. நான் சொன்ன பிறகு, இவர் ஏன் சீட்டுப் போட்டுப் பார்க்கணும்?.தன்னால் முடிந்த அதிகபட்ச அளவு உதவி செய்ய வேண்டியது தானே?

"இவருடைய சம்சாரம் கர்ப்பமாக இருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். பெண் பிறக்குமா? ஆண் பிறக்குமா?.... என்று . சீட்டு எழுதிப் போட்டுப் பார்ப்பாரா? அப்படியே செய்தாலும் சீட்டிலிருந்தபடியே நடக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆண் என்று சீட்டில் வந்து பெண் பிறந்தால் அந்தக் குழந்தையையோ, ஈசுவரனையோ திரஸ்காரம் பண்ணிடுவாரா?"

"கோர்ட்டில் கேஸ் நடக்கிறது.தீர்ப்பு தனக்குச் சாதகமா? விரோதமா? என்று சீட்டுப் போட்டு பார்ப்பாரா? ஒரு ஜட்ஜ்மெண்டில் சாதகம் - பாதகம் இரண்டுமே கூட இருக்கும்.

"சீட்டுப் போட்டுப் பார்ப்பது, ஒரு குழப்பமான சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டியது.அதுவும் கூட சர்வ சாமானியர்கள் செய்யக் கூடியது. இவர் நிறையப் படித்தவர்.தெய்வ பக்தி - குரு பக்தி உள்ளவர். ஒரு ஏழை வீட்டுக்குக் கல்யாணத்துக்குப் போதுமான உதவி செய் என்று நான் சொன்னால் அதை அப்படியே செய்ய வேண்டியது தானே? குழப்பம்,இக்கட்டு அஸ்பஷ்டம் எங்கே வந்தது?,,,,,"

இவ்வளவு நீளமான விளக்கத்தைக் கேட்டு, அங்கிருந்தவர்களுக்கெல்லாம் பேராச்சர்யமாக இருந்தது.ஆனால் இந்த நீண்ட உபதேசம் சென்னை அன்பரை முன்னிட்டு, சிப்பந்திகளுக்கும்,மற்றவர்களுக்கும் செய்யப்பபட்ட ஒரு வழிகாட்டுதல்.,

அர்ஜுனனை முன்னிறுத்தி, மனித சமுதாயத்துக்கே கீதாசார்யன் வழி காட்டியதைப் போல - என்பது தெள்ளத் தெளிவு.

Recipe for Sambar Powder

Recipe for Sambar Powder 
Ingredients required :
1. Dried turmeric 6 pieces
2. Dhaniya half KG
3. Round Dried Chilly half KG
4. Black pepper 200 gms
5. Tur dhal 100 gms
6. Gram dhal 100gms
7. Dried curry leaves one big bunch


Sun dry all these for one full day. Grind it in a machine after checking that nothing else unpalatable is ground bfr grinding this.

Grind the chilles first and keep the powder separately to cool. Then grind all the other ingredients to a nice powder and spread the powder to cool.

Take out 150 gms of ground chilly powder and keep it aside.

Mix all the ground powders nicely and the Sambar powder is ready now.

Store it in an airtight container and it can last a year or more too.

The usage of 150gms chilly powder kept aside will be mentioned later 

வீட்டு பூஜைகள் பற்றிய சில முக்கிய குறிப்புகள்,

1 வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
2. வெற்றிலையின் நுனிப்பாகம் ஸ்வாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி ஸ்வாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
3. ஸ்வாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி ஸ்வாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
4. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.
5. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.
6. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
7. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.
8. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
9. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.
10. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
11. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.
12. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
13. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
14.திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
15. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
16. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
17. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
18. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
19. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
20. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

சுமங்கலி பிரார்த்தனை

சுமங்கலி பிரார்த்தனை / sumangali prarthanai.
கல்யாண சீசன் அடுத்த மாசத்துலேந்து. இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும் ங்கற எண்ணத்துல பதிவு பண்ணறேன்
“ஸுமங்கலீரியம் வதூரிமாம் ஸமேத பச்யத |

ஸௌபாக்யமஸ்யை தத்வா யா தாஸ்தம் விபரேதன ||”

என்கிற வேத மந்த்ர ஆசீர்வாதத்தில் க்ருஹிணீயான கல்யாணமான பெண்ணிற்கு ஸுமங்கலி எனும் அந்தஸ்தையும் அனைத்து ஸௌபாக்யங்களை (மங்கலங்களை)யும் கொடுக்குமாறு தேவர்களைப் ப்ரார்த்திக்கிறது.
நம் ஸனாதன வைதிக தர்மத்தின் ஆதாரமான வேதங்களும், சாஸ்த்ரங்களும் ஆண்களுக்குப் பல்வேறு கர்மாக்களையும், பெண்களுக்கு பற்பல வ்ரதங்களையும் அனுஷ்டிக்கும்படி வற்புறுத்துகின்றன.
அநேக விதமான, க்ரஹ்ய ஸூத்ரங்களும், ப்ரயோக க்ரந்தங்களும் வ்ரத சூடாமணி, வ்ரத கல்ப மஞ்ஜரீ, வ்ரத பூஜா விதானம் முதலிய நூல்களும் கர்மாக்களின், வ்ரதங்களின் செய்யும் முறைகளை விரிவாக விளக்குகின்றன.
இவை தவிர நாம் பல பண்டிகைகளையும் கொண்டாடுகிறோம்.
“ஸுமங்கலி ப்ரார்த்தனை” வைதிக கர்மா இல்லை; வ்ரதமுமன்று; பண்டிகையுமில்லை.
பின் எவ்வாறு அழைக்கலாம்? நீங்களே ஒரு பெயர் சூட்டலாமே! பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் பெண்களின் ஸமாராதனை (ஒரு விசேஷமான விசேஷம்) அவ்வளவே.
வருடம் தோறும் நடத்த வேண்டுமென்பதில்லை. நம் வீடுகளில் கல்யாணம் போன்ற ஸுப கார்யங்கள் நடக்கும்போது, அந்தந்த விசேஷங்களை ஒட்டி, முன்னரோ பின்னரோ இந்த ஸுமங்கலிப் ப்ரார்த்தனையைச் செய்ய வேண்டும். வீட்டில் பெரியவர்களைக் கலந்து ஆலோசித்து அவர்கள் சொற்படி ச்ரத்தையுடனும் ஆசாரத்துடனும் நல்ல முறையில் செய்ய வேண்டும். தேசத்துக்குத் தேசம், மாவட்டத்திற்கு மாவட்டம், ஊருக்கு ஊர், வீட்டுக்கு வீடு, குலத்துக்குக் குலம் ஸம்ப்ரதாயங்கள், நடைமுறைகள் மாறுபடும்.
நம்மில் உட்பிரிவுகளுக்கிடையேயும் (வடமா, பிரஹசரணம், அஷ்டஸஹஸ்ரர், ஸங்கேதி முதலியன) பழக்க வழக்கங்கள் வேறுபடும்.
ஸுமங்கலிப் ப்ரார்த்தனையை நல்ல நாள் பார்த்துச் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையில் செய்வது விசேஷம். திங்கள் அல்லது புதன் கிழமைகளிலும் செய்யலாம்.
கரிநாள், கிரஹணம், அமாவாசை மற்றும் தர்ப்பண தினங்களில் கூடாது. க்ருஹ வாத்யாரிடம் கேட்டு நாள் குறிக்கவும்.
ஒரு வருஷத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு முறைதான் செய்ய வேண்டும். விவாஹத்திற்கு முன் செய்ய நாள் வாய்க்காவிடில் திருமணத்திற்குப் பின் நாட்டுப் பெண் வந்ததும் நாள் பார்த்துச் செய்யலாம். அதே போல் பெண் வீட்டில் புக்ககத்திலிருந்து பெண்ணை அழைத்து வந்தும் செய்யலாம்.
ஸுமங்கலிப் ப்ரார்த்தனை செய்ய நாள் பார்த்துத் தீர்மானித்தவுடன்,
அதற்கு ஓரிரு நாள் முன்பே 9 கஜம் புடவையும், ரவிக்கைத் துணியும், சித்தாடையும் (3 கஜம்) புதிதாக வாங்க வேண்டும். புடவை கறுப்பு, கருநீலம், கரும்பச்சை நிறங்களில் இருக்கக் கூடாது. நூல் புடவை (உறையூர், தேவேந்த்ரா, சுங்கடி) சாலச் சிறந்தது. சித்தாடையும் கருநிறமின்றி சீட்டித் துணியில் எடுக்கலாம்.
(நீண்ட நாட்கள் முன்பு வேறு ஏதாவது விசேஷத்திற்கு வாங்கிய புடவையோ, யாராவது வெற்றிலை பாக்கில் வைத்துக் கொடுத்த புடவையோ கூடாது).
ஸுமங்கலி ப்ரார்த்தனையில் போஜனத்திற்கு உட்காரும் ஸுமங்கலிப் பெண்கள்/மாமிகள் ஆகியோருக்குக் கொடுக்க வேண்டிய ரவிக்கைத் துணிகளையும் கறுப்பு நூல் கலக்காததாக வாங்க வேண்டும்.
மேலும் வெற்றிலைப் பாக்குடன் கொடுப்பதற்கு பழம், தேங்காய், குங்குமம், மஞ்சள், சீப்பு, கண்ணாடி, மல்லிச்சரம் போன்றவற்றையும் வாங்கித் தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஸுமங்கலிப் ப்ரார்த்தனையில் போஜனம் செய்ய முறைப்படி அழைக்கப்படும் ஸுமங்கலிப் பெண்கள் (”பெண்டுகள்” எனப்படுவர்) 5, 7 அல்லது 9 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். கன்யாப் பெண் இருவரையும் சேர்த்து எண்ணி ஒற்றைப்படையில் வருமாறு இலைகளைப் போட வேண்டும். கன்யாப் பெண் என்பவள் 3 வயதுக்கு மேற்பட்ட ருதுவாகாத இலையில் தானாகவே சாப்பிடக்கூடிய பக்குவம் உள்ள பெண்ணாக இருக்க வேண்டும்).
ருதுவான பெண் கன்யாப் பெண் இல்லாவிடினும் நம் வீட்டுப் பெண்ணிற்குத் திருமணம் என்றால் அந்தப் பெண்ணைக் கன்யாப் பெண்ணாக பாவிக்கலாம்). நாட்டுப் பெண்கள், ஓரகத்திகள் பெண்டுகளாக உட்காருவதில்லை. மூன்று மாதத்திற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பெண்டுகளாக இருக்கக் கூடாது. ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்திருந்தால் இறந்தவருடைய நெருங்கிய உறவினர்களை ஒரு வருடத்திற்கு பெண்டுகளாகவிருக்கும் வழக்கமில்லை.
குடும்ப வழக்கப்படி, முதல் நாள் மாலை ஸுமங்கலிப் பெண்டுகளை அவர்கள் வீட்டிற்குச் சென்று குங்குமம், எண்ணெய், சீயக்காய், மஞ்சள் கொடுத்து விட்டு மறுநாள் போஜனத்துக்கு வரச் சொல்லி அழைக்கவும். சில இடங்களில் விசேஷ தினத்தன்று காலை எண்ணெய் நைவேத்யம் செய்து பின் மங்கலப் பொருள்களைக் கொடுத்து அழைக்கும் பழக்கமும் உள்ளது. அன்று நேரம் உள்ளவர்கள் அவ்வாறு செய்யலாம்.
ஸுமங்கலி ப்ரார்த்தனை நடக்கும் நாள் காலை வீட்டை மெழுகி வாசல் தெளித்துக் கோலம் போட வேண்டும்.
புதிய புடவையை மட்டும் நனைத்து கிழக்கு மேற்காக உலர்த்திக் காய்ந்த பின் கொசுவமாகச் சுற்றி ரவிக்கைத் துணியுடன் கோலமிட்ட பலகையில் வைத்து அதன்மீது முகம் பார்க்கும் கண்ணாடி, புஷ்பம், மங்கலப் பொருள்கள் ஆகியவற்றை வைக்கவும்.
சில வீடுகளில் பூவாடாப் பானை (பூவாடாப் பானை, பூவோடுபானை)யில் புடவை வைக்கும் வழக்கம் உண்டு. இது ஒரு மூடியுடன் கூடிய வெங்கலப் பானை, புடவைக் கலம் கிழக்கு நோக்கி அமரும்படி இருக்க வேண்டும். மற்ற பெண்டுகளின் இலைகள் வடக்கு அல்லது மேற்குப் பார்த்து அமரும்படி இருக்க வேண்டும்.
ஒரே அறையில தான் எல்லா இலைகளும் இருக்க வேண்டும். இலைகளின் நுனி உட்காருபவரின் இடது கைப்பக்கம் இருக்க வேண்டும்.
சமையல் விவரம்: குடும்பத்தில் பரம்பரையாக நிலவும் வழக்கப்படி சமையல் செய்யலாம். சில வீடுகளில் மிளகு சமையல் வழக்கமாக உள்ளது. சிலர் ஸமாராதனை சமையல் செய்வர். மிளகாய்ப்பழம், மல்லிவிதை, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு சேர்க்கலாம். பெருங்காயம் சேர்க்கக் கூடாது. மோர்க் குழம்பும், மிளகு ரஸமும் வைக்க வேண்டும். வெல்லப் பாயஸம், இஞ்சி கறிவேப்பிலைத் துவையல் செய்ய வேண்டும். பக்ஷணமாக வடை, அப்பம்,செய்யலாம். ஸுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு சமையல் நம் க்ருஹத்தில்தான் செய்ய வேண்டும். வெளியிலிருந்து எடுப்பு சாப்பாடு வாங்கவே கூடாது.
ஸுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு வரித்திருக்கும் பெண்டுகள் யாவரும் தலைக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து ஒன்பது கஜம் புடவையை அணிந்து மடிசார் மாமிகளாக வர வேண்டும். ஏற்கெனவே பார்த்து வைத்த நல்ல நேரத்தில் வந்திருக்கும் பெண்டுகளை கிழக்கு முகமாக நிற்கச் சொல்லி மஞ்சள் தண்ணீரில் கால் அலம்பி, சந்தனம் குங்குமம் கொடுத்து, போஜனம் செய்ய வாருங்கள் என அழைத்து வரவேற்க வேண்டும்.
அப்படி அழைக்கும் பொழுது ஸுமங்கலிகளாய் இறந்தவர்களின் பெயர்கள் தெரிந்திருந்தால் அவர்களின் பெயர்களைச் சொல்லக் கையைத் தட்டி அழைக்க வேண்டும்.
அப்படித் தெரியாவிடில் ‘லக்ஷ்மி வா’ என்று பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும்.
மருதாணி, நலுங்கு, மஞ்சள் கொடுப்பது முக்கியம். திருமணமாகிச் சென்ற நமது பெண்கள் புடவைக் கலத்திற்கு பக்கத்திலும், பிற பெண்டுகள் மற்ற இலைகளுக்கு முன்பும் அமர வேண்டும்.
எல்லாரும் அமர்ந்ததும், புடவை இலையில் ஆரம்பித்து பிரதக்ஷிணமாகப் பதார்த்தங்களைப் பரிமாற வேண்டும். தெற்கு திசையில் முடியுமாறு பரிமாமறக்கூடாது.
மற்றபடி சாதாரணமாகப் பந்தியில் பரிமாறுவது போலவே பாயஸம், பச்சடி என்ற வரிசைப்படி பரிமாறவும். புடவைக்கலத்துக்கு எல்லாம் பரிமாறிய பின் குழம்பு, ரஸம், தயிர், பானகம், நீர்மோர் ஆகியவற்றைத் தனித்தனி பாத்ரங்களில் அந்தந்த இலைக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும்.
எல்லா கலத்துக்கும் பரிமாறிய பின், வீட்டு மருமகள் அல்லது அவரவர் வழக்கப்படி ஒருவர் நைவேத்யம் செய்ய வேண்டும். (சிலர் புடவைக்கலத்தில் தொடங்கி ப்ரதக்ஷிணமாக தூபம், கற்பூரம் இவற்றை எல்லாப் பெண்டுகளுக்கும் காட்ட வேண்டும்).
நம் ஆத்து புருஷர்கள் (கணவன், பிள்ளைகள்) அனைவரும் புடவையை ஸுமங்கலிகளாக இறந்து போன நம் முன்னோர்களாகப் பாவித்து புஷ்பம், அக்ஷதை ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்து ப்ரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் உத்தரணியில் ஜலம் எடுத்துக் கொண்டு புடவைக்கலத்திலிருந்து தொடங்கி எல்லாருக்கும் தீர்த்தம் வார்த்தபின் கடைசியில் புடவைக்கலத்தில் முடிக்க வேண்டும். ஆபோசனம் ஆனபின் அனைவரையும் நிதானமாகச் சாப்பிடச் சொல்லி வயிராறப் பரிமாற வேண்டும்.
சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் உத்தராபோசனம் செய்யக் கையில் ஜலம் விட வேண்டும். கை அலம்பிய பின்னர், பெண்டுளை கிழக்கு முகமாக உட்காரச் சொல்லி, பானகம், நீர்மோர், சுக்கு – சர்க்கரை கொடுத்துவிட்டு, வெற்றிலைப் பாக்கு, தேங்காய், மஞ்சள், ரவிக்கைத் துணி ஆகியவற்றை ஸுமங்கலிப் ப்ரார்த்தனை நடத்துபவர் தன் சக்திக்கேற்ப அளிக்க வேண்டும். மேலும், புஷ்பம், தக்ஷிணை ஆகியவையும் கொடுக்க வேண்டும்.
புடவைக்கலத்தில் பரிமாறிய உணவை வீட்டில் உள்ள உறவினர் சாப்பிடலாம். பெண்டுகள் சாப்பிட்ட பின்னரே மற்றவர்கள் ஆண் பெண் எல்லாரும் உணவருந்த வேண்டும். பூஜையில் வைத்திருந்த புடவையை அவரவர் வழக்கப்படி வீட்டுப் பெண்களுக்கோ அல்லது ஏழைப் பெண்கள் யாருக்காவது கொடுக்க வேண்டும்.
அரிசியும் சிறிது பாசிப் பருப்பும் போட்டு விட்டு, வெல்லம், ஏலக்காய், நெய் யாவும் எடுத்துக் கொண்டு, கிராமத்து அம்மன் கோயிலில் கொண்டு போய்க் கொடுத்து சர்க்கரைப் பொங்கல் வைத்து
அம்மபாளுக்கு நைவேத்யம் செய்து விநியோகிக்கச் சொல்லவும். வீட்டுக்காரர்கள் வாங்கிக் கொள்ள வேண்டாம். அபிஷேகத்திற்கு பழம், பூ, வெற்றிலைப் பாக்கு கொடுக்கவும்.
இவ்வாறு அவரவர் குல, க்ருஹ ஸம்ப்ரதாயப்படி உரிய காலங்களில் ஸுமங்கலி ப்ரார்த்தனையைச் சிறப்பாகச் செய்து அனைத்து மங்கலங்களையும், பாக்யங்களையும் பெற இறைவன் அருள்வானாக!
மேற்கண்ட ஸுமங்கலீ ப்ரார்த்தனை என்ற வைபவம் நம் கிரஹத்தில் நடைபெறும் பொழுது மிகவும் பக்தி சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் நம் வீட்டில் இறந்த ஸுமங்கலீகளை நினைத்து நடத்த வேண்டும்.
அப்படி நடத்தும் பொழுது ஸுமங்கலீகளாய் மதித்த நம் மூதாதையர்கள் நம்மை மிகவும் ஆசீர்வதித்து நம் வீட்டில் நடக்கும் சுப விசேஷங்களை நிர்விக்னமாக நடத்தி நமக்கும் ஆசி வழங்குவார்கள். நம் குடும்பத்தில் சூக்ஷ்ம ரூபமாகி இருந்து நம்மை வழி நடத்துவார்கள்.

இங்கே ஒரு பாட்டி இருக்கா

"இங்கே ஒரு பாட்டி இருக்கா, அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள் - பல லக்ஷதீபம் போட்டிருக்காள்..."-பெரியவா
"ஸஹஸ்ரபோஜனம் செய்துட்டு வந்திருக்கேன். லட்சதீபம் போட்டிருக்கேன்" என்று தற்பெருமை தொனிக்கப் பெரியவாளிடம் பேசிய பெரிய மனிதருக்கு பெரியவாளின் பதில் மேலே
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராமசர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
ஓர் ஏழைப் பாட்டி, பெரியவாளிடம் அபார பக்தி. கையிலிருந்த சொற்ப பணத்தைக் கொண்டு மிகவும் சிக்கனமாக வாழ்க்கையைக் கழித்து கொண்டிருந்தாள்.மடி,ஆசாரம் பார்ப்பாள் ஏராளமான பக்தி.
தினமும் பெரியவா இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்வாள்.கோலம் போடுவாள். தீபம் ஏற்றி வைப்பாள்.
இரண்டு புடவைகள் தான் அவளுடைய ஆஸ்தி.இன்னொரு புடவை வாங்கக் கூட அந்தப் பாட்டியிடம் பொருளில்லை
ஒரு பக்தர், அரிசிக் குறுணையும்,வெல்லமும் பெரியவாளிடம் சமர்ப்பித்திருந்தார். அவற்றை நல்லபடியாக. விநியோகம் செய்ய வேண்டுமே?
பாட்டிக்கு பெரியவா உத்தரவு போட்டார்கள்.
"காஞ்சீபுரத்தில் உள்ள எல்லா எறும்புப் புற்றுகளிலேயும், கொஞ்சம்,கொஞ்சம் போட்டுட்டு வா.அரை ஆழாக்கு வீதம் போடு..." என்றார்கள்.
அந்தப் பாட்டியும்,பக்தி சிரத்தையுடன் அலைந்து திரிந்து, பல எறும்புப் புற்றுகளில் அரிசிக் குறுணையும், வெல்லமும் போட்டு விட்டு வந்தாள்.
அந்த வேலை முடிந்ததும்,பெரியவா அந்தப் பாட்டியைக் கூப்பிட்டார்கள்.
பெரிய மாலை போலத் திரிநூல் இருந்தது. ஒரு டின் நிறைய எண்ணெய் இருந்தது.
"திரிநூலை கட் பண்ணி ஒவ்வொரு கோயிலுக்காகப் போய்,எவ்வளவு விளக்குக்குப் போட முடியுமோ, அவ்வளவுக்குப் போடு. ஒவ்வொரு நாளும் இரண்டு,மூன்று கோயில்களுக்குப் போய் விளக்கேற்றினாலும் போதும்" என்றார்கள் பெரியவா.
பாட்டிக்கு பரம சந்தோஷம்.பரம சிரத்தையுடன் நாள் தோறும் சில கோயில்களுக்குச் சென்று,பெரியவா உத்தரவை நிறைவேற்றி வந்தாள். சில நாட்களில் இந்தக் கைங்கர்யம் நிறைவு பெற்றது. அந்தச் செய்தியையும் பெரியவாளிடம் தெரிவித்தாள் பாட்டி
பாட்டியின் பணிகள் முடிந்த சில நாட்களுக்குப் பின் ஒரு பெரிய மனிதர், ஆடம்பரமாக மடத்துக்கு வந்தார். பெரிய மனுஷத் தோரணை,அகங்காரம்
"ஸஹஸ்ர போஜனம் செய்துட்டு வந்திருக்கேன்.லட்ச தீபம் போட்டிருக்கேன்.." என்று தற்பெருமை தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னார்.
பெரியவாளுக்கு அவருடைய அகம்பாவம் புலப்பட்டது. தர்ம காரியங்கள் செய்துவிட்டு அதைப் பற்றி பேசிக் கொள்வது புண்ணியத்தைத் தராது. தர்மம் செய்தவருக்கு நற்பலன்கள் கிடைக்காமல் போய்விடும்.
வினயத்துடன் சொல்லியிருந்தால் பெரியவா சந்தோஷப்பட்டிருப்பார்கள். ஆனால்,அந்தப் பெரிய மனிதர் அகம்பாவத்துடன் பேசினார்.
பெரியவா சொன்னார்கள்.
"இங்கே ஒரு பாட்டி இருக்கா. அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள். பல லக்ஷதீபம் போட்டிருக்காள்.
ஆணவப் பணக்காரருக்கு சற்று திடுக்கிட்டது. யார் அந்தப் பாட்டி...அவ்வளவு பெரிய பணக்காரி?' என்று தெரிந்து கொள்ள ஆர்வம் பிறந்தது.
பெரியவா அந்தப் பாட்டியை அழைத்து வரச் சொன்னார்கள்.
இவள் தான் அவ்வளவு பெரிய உத்தமமான காரியம் செய்தவள்.
அழுக்கான கிழிசல் புடவையைக் கட்டிக் கொண்டு வந்து நின்ற பாட்டியைப் பார்த்து, பெரிய மனிதர் அயர்ந்து போனார். பாட்டியின் நெற்றியிலிருந்த வெள்ளை வெளேரென்ற திருநீற்றுப் பூச்சு, அவளுடைய இதய சுத்தத்தை விளக்கினாற்போலிருந்தது.
பெரியவா சொன்னார்கள்.
"ஸர்வ ஜீவனிலும் பகவான் வியாபித்திருக்கிறார். பிரும்மா முதல் பிபீஸிகம் (ஏறும்பு) வரை பகவான் இருக்கிறார். மனுஷ்யாளிடத்திலும் இருக்கிறார்.
"நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கிறாய். ஆனால் இந்தப் பாட்டியோ பல லக்ஷம் ஜீவன்களுக்கு (எறும்புகளுக்கு) .ஆகாரம் போட்டிருக்கிறாள்...,..
"ஏதோ ஒரு கோயிலில் லக்ஷதீபம் போட , நீ திரவியம் கொடுத்திருக்கே . லக்ஷம் தீபத்துக்கு எண்ணெய் - திரி போட்டு உன்னால் ஏற்றவே முடிந்திருக்காது. இந்தப் பாட்டி, பல கோயில்களுக்குப் போயிருக்கிறாள்.பக்தி சிரத்தையாய் அகல் வாங்கி,எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தன் கையாலேயே தீபம் ஏற்றியிருக்கிறாள்..."
கேட்டுக் கொண்டிருந்த பிரமுகர் தலைகுனிந்தார்.
பெரியவாளிடம் பவ்யமாகவும், அகங்காரமில்லாமலும் பேச வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார். பின்னால் பல பக்தர்கள் வந்து நிற்பதைப் பார்த்து சற்றே நகர்ந்து இடம் கொடுத்தார்.
சிறிது நேரம் கழித்து, பெரியவாளே அந்தப் பெரிய மனிதரைக் கூப்பிட்டு, உட்கார வைத்து, பல சமாசாரங்கள் பேசி, பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.

தேங்காய்த்_துவையல்

#தேங்காய்த்_துவையல்#

#தஞ்சாவூர்திருநெல்வேலிபாலக்காடுபிராமின்ஸ்பெஷல்#

தேவையான பொருட்கள் :-

- 7 டேபிள்ஸ்பூன்/அரைமூடி தேங்காய் 
- 8 சிகப்பு நீளமிகாய் 
- 1 மீடியம் நெல்லிக்காய் சைஸ் புளி 
- 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு 
- 2 கொண்டைக்கடலை சைஸ் கட்டி பெருங்காயம் 
- 1/2 ஸ்பூன் கல் உப்பு
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் 

செய்முறை :-

* வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பெருங்காயம் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.

* பின்பு உளுத்தம்பருப்பை சேர்த்து பாதி வறுபடும்போது, மிளகாயும் சேர்த்து வறுத்து உளுத்தம் பருப்பு பொன்நிறமாக ஆனவுடன் ஆற வைத்துக் கொள்ளவும். 

* இந்தத் துவையல் ட்ரிக் அரைப்பதில் தான் உள்ளது.

* முதலில் மிளகாய், புளி, உப்பு, இரண்டு ஸ்பூன் தேங்காய் போட்டு ஒரு சுத்து சுற்றிக் கொள்ளவும்

* பின்பு மீதியுள்ள தேங்காயையும் போட்டு இரண்டு சுற்று சுற்றி நன்கு ஸ்பூனால் மிக்ஸி உள்ளேயே கலக்கவும்.

* பின்பு உளுத்தம் பருப்பை போட்டு ஒரு சுற்று ஒண்ணும் பாதியுமாய் அரைத்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.

* சேர்ந்துக் கொள்வதற்காக ஒண்ணு அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். 

* நல்லா உருட்டுப் பதத்திற்கு அரைத்தால் நீங்கள் எக்ஸ்பர்ட், போட்டோ போடவும். இதில் சின்ன பிட்ஸ் மிளகாய்த் தோல் தெரிகிற மாதிரியும், சாப்பிடும் போது கரகரவென உளுந்து கடிபடணும், அதுதான் பதம்.

* மூன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். 

* சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, அப்பளம், வடாம், நல்ல சதுரமாக சிறிசாக வெட்டிய வதக்கிய உருளைக்கிழங்கு கறி சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

* இந்த தொகையல் தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அமிர்தமாக இருக்கும்.

மாதம் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்து சாப்பிட்டால் உடலுக்கு ரொம்ப நல்லது.

நீங்களும் இதை செய்து பார்த்து சாப்பிடவும். நன்றி. 

குறிப்பு :-

மிளகாய் அளவை பார்த்து பயப்படாதீர்கள். அதற்கு தகுந்த புளி சேர்த்திருக்கிறோம்.

ப்ரெஷ் தேங்காயை உடைத்து அரைத்தால் சுவை நன்றாக இருக்கும். 

* இந்தமுறை உங்களால் இந்த ஸ்டைலிலோ அல்லது உங்கள் ஸ்டைலிலோ செய்து போட்டோ எடுத்துப் போட்டால் பாரட்டப்படும்.😂

ஸ்பெஷல் தாங்ஸ் என் அம்மாவிற்கு.

⚘⚘🙏நன்றி🙏⚘⚘

#Chandoos_kitchen#

https://www.facebook.com/groups/Madhyamar/permalink/133179376367510

Sunday, March 1, 2020

"மஹாபெரியவா சத்யவாக்கு"

"மஹாபெரியவா சத்யவாக்கு"

இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான்.

ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில் உள்ளது.

அப்போ பொண்ணப் பெத்தவாக்கு?

"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"......

கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.

தசாநாம் பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் . 

தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள். 

ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 
21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது

ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்கு திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை வ்ருத்தி செய்வதற்கு உதவுகின்றார் என்றால் இந்த தானம் எவ்வளவு பெரிய தானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்..

ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்.

பெண்ணைப் பெற்ற தந்தைக்கு?
தனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள்,
பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள், 
தன்னுடன் சேர்த்து 21 தலைமுறைகள்,
நிலைத்த விஷ்ணு லோகத்தை அடைவதற்கு
மாபெறும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது

மஹாபெரியவா அருள்,

“தெய்வத்தின் அருள் இருந்தால் ஆண் குழந்தை. 
அந்த தெய்வமே நேரில் வந்தால் பெண் குழந்தை.”

ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..