ஆனியன் ரவாவும்
மெனுதர்ம சாத்திரமும்...
பாக்கியம் ராமசாமி
'ஆனியன் ரவா' என்பது ஆனியன் ரவா தோசையையே குறிக்கும். அதுவே மரபு. 'அந்தி வானம் குங்குமமாயிருந்தது' என்பது, 'அந்தி வானம் போன்று சிவப்பாயிருந்தது' என்று பொருள்படுகிறதல்லவா? அதுபோல!
'உவமைத் தொகை கூறாதொழிந்தது' என்பார் தொல்காப்பியனாரும் ஏனைய இலக்கண ஆசிரியர்களும். (ஹிஹி! அப்படிச் சொன்னார்களா என்ன?)
ஆனியன் ரவாவின் நீள அகல தினுசைப் பார்ப்போம்.
நன்கு தயாரிக்கப்பட்ட ஓர் ஊட்டமான ஆனியன் ரவா முப்பத்தைந்து செ.மீட்டர் நீளமும், இருபத்தைந்து செ.மீட்டர் அகலமும் கொண்ட பரப்பளவில் இருக்க வேண்டும்.
பெரும்பாலும் இந்தப் பரிமாணமுள்ள தோசைகள் ஓட்டல்களில்தான் தயாரிக்கப்படும். வீட்டில் பெண்மணிகளோ ஆண்மணிகளோ எவ்வளவு முயன்றாலும் ஓட்டல் தயாரிப்பளவுக்கு பரந்த ஆனியன் ரவா செய்வது கடினம்.
தோசைக்கல்லின் அளவு, மனசின் அளவு, மாவின் அளவு, தரப்படும் சூடு, விடப்படும் எண்ணெய், சாப்பிடப் போகிறவரின் அவசரம், தயாரிப்பவர் ஒதுக்கும் நேரம் இவை ஓட்டல், வீடு ஆகிய இரு தரப்பினரிடையேயும் மிகுந்த வேறுபாடுகள் கொண்டதாயிருக்கும்.
ஆகவே, கலை அழகு கொண்ட அசல் ஆனியன் ரவாவை ருசிக்க விரும்புபவர்கள் தரமான ஓட்டலுக்குச் செல்லுவதே இனிமை பயக்கும்.
அதைச் சாப்பிடுவது ஓர் அருங்கலை. மசாலா தோசை மாதிரி கன்னாபின்னாவென்று எப்படி வேண்டுமானாலும் ஆனியன் ரவாவை சாப்பிடுவது, பரத நாட்டியத்துக்கென அமைந்த அரங்கில் டப்பாங்குத்து ஆடுவதற்கொப்பானது.
ஆகவே ஆ. ர-வை முறைப்படி, கலையழகோடு சாப்பிடுவது எப்படி என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
சாதாரணமாக ஒரு ஆ.ர. 35 செமீ நீளமும், 25 செமீ அகலமும் கொண்டதாக இருக்கும் என்று குறிப்பிட்டோம்.
சில இடங்களில் அளவில் சிறிது வேறுபாடு இருப்பது உண்டு.
ஆ.ர. தயாரிக்கப்பட்டவுடன் அதனை 22 செ.மீட்டர் விட்டமுள்ள தட்டில், 19 செ.மீட்டர் வட்ட இலையின் மேல் வைத்து சப்ளையர் கொண்டு வருவார்.
ஆர்டர் கொடுத்து முப்பத்தேழு நிமிடங்களுக்குப் பிறகுதான் ஆனியன் ரவா கொண்டு வரப்படும்.
சாதா தோசைக்கு ஆர்டர் கொடுத்தவர் மாதிரி சிலர் அவசரப்படுவார்கள். அது தவறு. முழு வளர்ச்சி அடைந்த ஆ.ர. பொன்னிறத்தையும், முறுகலான தன்மையையும் அடைய அவ்வளவு மணித் துளிகள் தேவை.
ஆர்டர் கொடுத்துப் பொறுமை இல்லாத சிலர், ஆ.ர. தயாராகி வருவதற்குள் வேறு ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமே என்று போண்டா - பஜ்ஜி என்று எதையாவது லைட்டாகச் சாப்பிடுவார்கள். இது மகா தப்பு! பின்னர் வரும் ஆனியன் ரவாவை முழுவதுமாக சுவைத்து சாப்பிட முடியாதபடிக்கு இந்த லைட் அயிட்டங்கள் இடைஞ்சல் செய்துவிடும்.
ஒரு குறிஞ்சிப் பூ மலர பன்னிரண்டு வருடம் காத்திருக்கும் ஆர்வம் உள்ளவனுக்குத்தான் அது பூத்ததும் அதன் அருமையும் அழகும் தெரியும்.
அரைமணி நேரம் காத்திருக்கும்போது மாகஸீனோ, பத்திரிகையோ படிக்கக்கூடாது.
சிலர் பத்திரிகை படித்தவாறே டிபன் சாப்பிடுவார்கள்.
மிகவும் கண்டிக்கத்தக்கது இது. செய்திச் சுவையில் தோசைச் சுவை எடுபடாமலோ அல்லது ருசியில் சில விழுக்காடுகள் குறைவதற்கோ வாய்ப்பு உண்டு.
ஆகவே ஆனியன் ரவா வரும்வரை அதைக் கற்பனையில் கண்டு, கற்பனையிலே வரவேற்று, உமிழ்நீர்ச் சுரப்பிகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.
ஏதோ தோசைக்குப் பறக்கிற பக்கி என்று யாரும் எண்ணிவிட மாட்டார்கள். அப்படியே நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. விலையுயர்ந்த ஒரு கலையைப் பயில்வது என்றால் நாலுபேர் நாலு விதமாகத்தான் சொல்லுவார்கள். பரவாயில்லை.
ஆனியன் ரவா வரும்வரை அதைப்பற்றியே சிந்தியுங்கள். நாசியால் சிந்தியுங்கள், கண்களால் சிந்தியுங்கள், நாவினால் சிந்தியுங்கள், ஸ்பரிசத்தால் சிந்தியுங்கள், புத்தியால் சிந்தியுங்கள்.
முதலிரவில் மனைவியை எதிர்கொள்ளக் காத்திருக்கும்போது ஏற்பட்ட மெய்ப்பாடு, ஆனந்தக் களிப்பு உடம்பில் உங்களுக்கு ஏற்பட வேண்டும்.
வந்துவிட்டது ஸ்பெஷல் ஆனியன் ரவா.
மேஜை மீது வைத்துவிட்டார் வெயிட்டர். இப்போது வெயிட்டரிடம் 'தயவு செய்து ஃபேனை அணையுங்கள், அல்லது சின்னதாக வையுங்கள்!' என்று கேட்டுக் கொள்ளுங்கள்.
ஆ.ர-வின் முதல் எதிரி மின்விசிறிதான். அதன் ருசியில் நாற்பத்தொன்பது சதவிகிதத்தை வகிப்பது அதனுடைய சூடுதான்.
ஆகவே அந்தச் சூட்டைப் போக்குகிற முயற்சி செய்யும் மின்விசிறி சுழலாதிருப்பதே நல்லது.
மேஜைமீது தட்டில் உள்ள ஆ.ர.வை விரலால் ஸ்பரிசியுங்கள். நாசியால் மணத்தை அனுபவியுங்கள். கண்ணால் அதன் பொன்னிற விளிம்புகளையும், இதர லாவண்யங்களையும் காவியக் கண்ணோடு கண்டு களியுங்கள்.
சூரியனென்றால் சுற்றிலும் உபகிரகங்கள் போல் பச்சை நிறமொரு சட்னி, பழுப்பு நிறமொரு சட்னி, இனம் தெரியாத இன்னொரு வகை சட்னி, வெள்ளை நிறமொரு சட்னி, அப்புறம் ஷேவிங் கிண்ணத்தில் சாம்பார்.
ஆ.ர.வை மேலும் நன்கு கவனியுங்கள்.
ஆ.ர.வானது பிளேட் வட்டத்துக்குள் அடங்காமல் பல இடங்களில் மேஜையைத் தொட்டுக் கொண்டிருக்கும்.
ஆ.ர.வின் சிறப்புகளில் இது ஒன்று. என்னதான் மடித்திருந்தாலும் அதனுடைய சில விளிம்புகள் ஓட்டலில் எச்சில் மேஜையை உரசிக் கொண்டிருக்கும்.
கண்டும் காணாதது மாதிரி சிலர் அதை மடித்து உள் எல்லைக்குள் அடக்கிக் கொள்வர். அது சரியல்ல. அவ்வளவு ரூபாய் கொடுத்துவிட்டு அதை ஊரார் எச்சில் பட வைக்கலாமா?
தனியே ஒரு பிளேட் கொண்டுவரச் சொல்லி கவனமாக விளிம்பு சர்வே செய்து மேஜையோடு ஒட்டியிருக்கும் பகுதிகளை மெதுவாகப் பிய்த்து அந்தத் தனி பிளேட்டில் போட்டுவிடுங்கள்.
இந்த ஆபரேஷனை செய்யும்போது உங்களுக்கு மனசு கஷ்டமாகத்தான் இருக்கும். ஐயோ 'மொறு மொறு' பகுதியெல்லாம் அநியாயமாக வீணாகிறதே என்று இருந்தாலும் வேறு வழியில்லை. கொஞ்சம் தியாகம் புரிந்திடல் இங்கு அவசியம்.
நாம் ஆ.ர.வின் புற அழகை மட்டுமல்ல... தூய்மைமையும் கவனிக்கவேண்டிய நிலையில் உள்ளோம். அழகான பெண் குணவதியாகவும் இருந்தால் அந்த அழகு இரட்டிப்பாகுமே!
இப்போது சாப்பிடத் தொடங்குங்கள். கட்டை விரல் நீங்கலான மீதி நான்கு விரல்களால் அதை லேசாக அழுத்திப் பாருங்கள்.
சரிவின் உச்சி சிறிது மெத்தென்றும் கீழே இறங்க இறங்க முறுகலாகவும் இருக்கும். நல்ல சாதி ஆ.ர-வுக்கு அதுதான் அடையாளம்.
ஆ.ர-வின் சருமத்தை நிதானமாகக் கவனியுங்கள். நுணுக்கமான ஆபரேஷன் செய்யும் சர்ஜன் மாதிரி உற்றுக் கவனியுங்கள்.
மேல் மடிப்பு எது? உள் மடிப்புகள் எவை?
'மொத்தமாகக் காட்டுத்தனமாக ஸ்பூன்களைச் செலுத்தி ஆ.ர-வைச் சிதைப்பவன் நரகத்துக்குப் போவான்' என மெனு தர்ம சாத்திரம் கூறுகிறது.
ஆகவே லேயர் லேயராகவே சாப்பிட வேண்டும். சாம்பாரையோ, சட்னி தினுசுகளையோ அதன் மீது கொட்டி அதன் முறுகல் தன்மையைப் போக்கிவிடாதீர்கள்.
கடைசிவரை இளமையோடியிருக்கக் கூடிய ஆ.ர.வை இளமையிலேயே மூப்பு தட்டிவிட வைத்துவிடாதீர்கள். முதல் லேயரைச் சிறிது சிறிதாக ஒடித்துச் சட்னியோ, சாம்பாரோ சிறிது சிறிது தொட்டுக் கொண்டு சாப்பிடுவதே அழகு.
நன்கு தயாரிக்கப்பட்ட ஆ.ர.வானது சிறுசிறு, பெருபெருவென்று பல்வேறு அளவிலான துவாரங்கள் கொண்டதாக இருக்கும். ஆகவே பிய்ப்பது எளிது.
முதல் லேயர் முடிந்ததும் ஆ.ர.வைத் திருப்பிப் போடுங்கள்.
முதல் லேயரின் மறுபாதி தோசையின் அடிப்பகுதியில்தான் இருக்கும்.
அதையும் உரிய மரியாதை கொடுத்து சாப்பிட வேண்டும்.
இடைஇடையே சட்னி, சாம்பார் கேட்காதீர்கள். அது வராது. அல்லது வரத் தாமதமாகும். வருகிற வரையில் ஆ.ர.வை ஆறப் போட்டுக் காத்திருந்தால் அதன் ருசியே பாழாகிவிடும்.
ஆகவே, ஆ.ர-வுக்கு ஆர்டர் கொடுக்கும்போதே தீர்க்க சிந்தனையுடன் அதிகப்படி சட்னி - சாம்பாருக்கும் ஆர்டர் கொடுத்துவிடுங்கள்.
கான்கிரீட் வேலை தொடங்கியாயிற்று என்றால், ஜல்லி காய்வதற்குள் சரசரவென கலவை கொட்டப்படுவது போல ஆ.ர. ஆறுமுன் சாப்பிட்டுவிடவேண்டும்.
எப்படி வேகமாகச் சாப்பிட்டாலும் கடைசி ஐந்து நிமிடத்தில் மிச்சமுள்ள பகுதி ஆறிவிடும். அந்தப் பகுதிகளுக்கு மட்டும் சூடான சாம்பாரை அப்ளை செய்யவும். (அல்லது ஏற்கனவே வயிறு நிரம்பிவிடும் பட்சத்தில் அந்தப் பகுதியைப் போனால் போகட்டும் என்று நிராகரித்துவிட்டு எழுந்து விடலாம்)
இப்போது சாப்பிட்டாயிற்று. வாய் பூரா ஆனியன் ரவா தோசையின் நறுமணம்.
அத்துடன் எழுந்து விடுங்கள். காபியோ, கூல்டிரிங்கோ எதுவும் குடிக்கக் கூடாது.
குடித்தால் நீங்கள் இவ்வளவு நேரம் கலைச் செறிவோடு உழைத்த உழைப்பு வீணாகிவிடும்.
வாயில் அந்த கமகமப்பு ஒரு மணி நேரமாவது இருக்கவேண்டும்.
நீங்கள் அடுத்து சந்திப்பவர்கள் ''என்ன, ஆனியன் ரவா சாப்பிட்டுட்டு, வந்தீர்களா? கமகமன்னு வாசனை தூக்குகிறதே'' என்று விசாரிக்க வேண்டும்.
முக்கிய பின்குறிப்பு:
ஆனியன் ரவா ரசிகர்களில் 'வீர ஆ.ர.ர.' (வீர ஆனியன் ரவா ரசிகர்) என்று ஒரு பிரிவினர் உண்டு.
அவர்கள் சட்னி தினுசுகளோ சாம்பாரோ எதையும் தொடமாட்டார்கள்.
ஆ.ர-வுக்குத் தொட்டுக் கொள்ள மிளகாய்ப் பொடி, எண்ணெய் மட்டுமே சேர்த்துக் கொள்வர். (எண்ணெய் முக்கால், பொடி கால் என்ற விகிதத்தில் பொடிக் கலவை இருக்க வேண்டும்.)
கட்டுரையில் கூறியுள்ளபடி ஆ.ர-வை ரசித்துச் சாப்பிட்டவர்களும், சாப்பிட்டதைப் பார்த்தவர்களும், சாப்பிட்டதைக் கேட்டவர்களும் நீங்காத ருசி பெற்று வாழ்வார்களாக!
Friday, November 2, 2018
CHEMICAL WITH HARPIC WHILE CLEANING BATHROOMS
DONT EVER MIXING BLEACHING POWDER OR ANY OTHER CHEMICAL WITH HARPIC WHILE CLEANING BATHROOMS
Please read the whole story on how a regular household item (harpic) can cause serious health hazard if not used properly.
It was a usual Sunday morning and I was helping my wife on the regular household cleaning chores. It was my turn to clean the bathroom tiles, and each time i really find it very frustrating to clean those old stained tiles completely.
We regularly use Harpic on the floor but as the stains were not going with only using Harpic, I thought to add some bleaching powder. First, I poured bleaching powder on the affected areas and then sprayed Harpic over it.. It reacted very quickly and within a very small time the bathroom was filled with poisonous chlorine gas, I was exposed to the gas for merely half a minute but i suddenly felt chocking sensation and was breathless, I was immediately rushed to the nearest hospital, where the oxygen level on my body was found to be 73 (it should be above 90 for a normal person), my lungs were not able to take enough oxygen due to the damaged caused by the gas, I was kept in the ventilator for nearly 4-5 hours with oxygen mask and IVF with Antibiotics & Steroids were injected.
My Lungs started to respond normally after 7-8 Hours and I was kept off the ventilator for the next 20 hours of medical observation.
Now that I am back to normal (hopefully) thought to share this with the persons I care for. Please read those very small instructions carefully.
I have learned this in a very hard way and don't want anyone of my list to suffer.
எனது சுயசரிதை – சிவாஜி கணேசன்
#திமுக கட்சியில் இருந்த நடிகர் திலகம் #சிவாஜி_கணேசன்
ஒருமுறை #திருப்பதி சென்று பெருமாளை வழிபட்டு வந்தார்.
திருப்பதி போனதற்காக சிவாஜியைக் குறிவைத்துக் தாக்கினர் தி.மு.க. வினர். அவருடைய போஸ்டரில் சாணி அடித்தார்கள், அவருடைய கார்மீது கல்லெறிந்தார்கள்.
அது பற்றி சிவாஜி கணேசன் கூறியது உங்களுக்காக...
(எனது சுயசரிதை – சிவாஜி கணேசன் / பக்கம் 130 -136)
"நான் திராவிடக் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்ததில்லை.
பெரியாருடைய கொள்கைகளையும் அண்ணாவுடைய கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டேன். ஆகையால் அதைப் பிரசாரம் செய்தேன்.
அந்தக் கொள்கைகளை நான் ஒத்துக்கொண்டேனே தவிர, கட்சியில் நான் உறுப்பினராக இருந்ததில்லை.
எனது குடும்பம் #தேசபக்தி உள்ள குடும்பம். நாங்கள் எல்லாம் தேசியவாதிகள்.
அதோடு நாங்கள் #இந்து_தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர்.
மேலும் குடும்பத்தில் எல்லோரும் #பக்தி_மிகுந்தவர்கள்.
இவை அனைத்தையும் நான் உதறித்தள்ளிவிடவில்லை.
சில பகுத்தறிவுக்கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டது.
அந்தக் கருத்துக்களை படங்கள் மூலம் சொன்னேன். அவ்வளவுதான்.
’புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூல் செய்து தாருங்கள்’ என்று #அறிஞர்_அண்ணா அவர்கள் கூறினார்கள் (1956).
அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு சேலத்தில் படப்பிடிப்புக்காக நான் சென்றுவிட்டேன். ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.
அப்போது அண்ணா அவர்கள் #அதிகமாகப்புயல்நிவாரண_நிதி வசூலித்தவர்களுக்கு ஒரு பாராட்டு விழா வைத்தார்.
நான் சேலத்திலிருந்து எனது தாயாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ‘இன்று விழா நடக்கிறது யாராவது அழைப்பு கொடுத்தார்களா?’ என்று கேட்டேன். ‘இல்லையென்று’ கூறினார்கள் என் தாயார்.
உடனே அந்த நேரமே #சேலத்தில் இருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன்.
விழாவிற்காக என்னைக் கூப்பிட வருவார்கள் என்று வீட்டில் காத்துக்கொண்டிருக்கிறேன். என்னை யாரும் கூப்பிட வரவில்லை.
மாலை ஆறு மணி அளவில் பாராட்டுக் கூட்டம் நடக்கிறது. அப்பொழுதுதான் முதன்முதலில் எம்.ஜி.ஆரைக் கூட்டிச் சென்று அந்தக் கூட்டத்தில் மேடையேற்றி கௌரவிக்கிறார்கள்.
#அதிகமாகநிதிவசூலித்தவன்நான்தான். ஆனால் #எம்ஜி_ஆர் அவர்களை அந்தக் கூட்டத்தில் மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.
பல நாட்கள் நான் வருத்தமாக இருந்தேன். ஒரு நான் என்னுடைய நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார்.
அவர் என்னிடம் வந்து, ’சிவாஜி பாய், ஏன் தலையில் கைவைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள் திருப்பதி போய் வரலாம்’ என்றார்.
நான் ‘சாமி கும்பிடும் மனோநிலையில் இல்லை. எனக்கு எதற்கு திருப்பதி’ என்றேன். நான் கோவிலுக்குள் அதிகம் போனதில்லை. ஆனால் #பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, #திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
அப்போது பயங்கர மழை. சாலை முழுவதும் வெள்ளம் இருந்தாலும் எப்படியோ #திருப்பதி சென்றடைந்தோம்.
நான் திருப்பதியிலிருந்து மாலையில் சென்னை வந்தேன்.
‘நாத்திக கணேசன் ஆத்திகனாக மாறினார்’ என்று தினத்தந்தியில் தலைப்புச்செய்தி வந்தது.
வரும்போழுது ரோடு முழுவதும் பார்த்தால் என்னைப் பற்றி ‘#திருப்பதிகணேசாகோவிந்தா’ என்று எழுதியிருந்தார்கள்…
நான் அந்த வாசகங்களையெல்லாம் படித்துக் கொண்டே வந்தேன்.
அப்பொழுது பீம்சிங் கூறினார். ‘கவலைப்படாதே கணேசா, அப்படித்தான் எழுதுவார்கள், நீ உயர்ந்த நடிகன், எதைப்பற்றியும் கவலைப்படாதே’ என்றார்.
யார் ‘திருப்பதி கணேசா கோவிந்தா’ என்று எழுத வைத்தார்களோ அவர்களுடைய மனைவி மற்றும் வீட்டுப் பெண்கள் எல்லாம் இப்போது திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டிருக்கிறார்களே. எல்லாமே போலியாக இருக்கிறது.
என்றைக்கு என்னைக் கேலி செய்தார்களோ அன்றே
#திருப்பதி_ஆண்டவன் கண்விழித்துப் பார்த்து அருள்புரிந்துவிட்டார்.
நான் நடித்த படங்களெல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. ’மக்களைப் பெற்ற மகராசி, வணங்காமுடி, தங்கமலை ரகசியம், அம்பிகாபதி, உத்தமபுத்திரன்’ போன்ற படங்கள் அப்போதுதான் வெளிவந்தன."
இவ்வாறு சிவாஜி கனேசன் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்..
பின்குறிப்பு
சிவாஜி கனேசன் சாதாரண நடிகராக வாழ்ந்த ஆரம்ப காலத்தில்,
தி.மு.க. வினர் திருப்பதி போனதற்காக சிவாஜியைக் குறிவைத்துக் தாக்கினர் . அவருடைய போஸ்டரில் சாணி அடித்தார்கள், அவருடைய கார்மீது கல்லெறிந்தார்கள்.
ஆனால் கடவுள் எதிர்ப்பிலும் அவர்களுக்கு உறுதி இல்லை.
பத்துவருடங்களுக்குப் பிறகு ‘தனிப்பிறவி’ என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் முருகனாக நடித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தாரிடமிருந்து முக்கல் இல்லை; முனகல் இல்லை; முணுமுணுப்புகூட இல்லை; ஏனென்றால் எம்.ஜி.ஆர். அப்போது வளர்ந்துவிட்டார்.
வலியோரை வாழ்த்துவதும் எளியோரை தாழ்த்துவதும் இந்த திமுக கட்சியினரின் வழக்கமல்லவா?
(க.சுப்பு அவர்கள் எழுதிய #திராவிட_மாயை என்ற நூலில் இருந்து ..)

திதத் தத்தத் தித்தத் திதி தாதை தாததுத் தித்தத் திதா
திதத் தத்தத் தித்த திதித் தித்த தேதுத்து தித்தி தத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாத தத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
திதத்தத் தத்தித்த = "திதத்த தத்தித்த" என்னும் தாளம் போட்டு
திதி தாதை = நடனம் செய்யும் தந்தை சிவபெருமானும்
தாத = மறைக் கிழவனாகிய பிரம்ம தேவனும்
துத்தி = புள்ளி வைத்திருக்கும் (படம் எடுக்கும்)
தத்தி = பாம்பு (ஆதி சேடன்)
தா தி = அந்த இடத்தில், நிலையாக இருந்து
தத்து = தளும்புகின்ற
அத்தி = கடல் (பாற் கடலையே தன் கைவசம் வைத்திருந்தாலும்)
ததி = தயிர் (ஆயர்ப்பாடியின் தயிர்)
தித்தித்ததே = தித்திப்பா இருக்கு-ன்னு
து = உண்டானே வாரி வாரி (அந்த அழகிய கண்ணன்!)
துதித்து = இவர்கள் எல்லாம் போற்றும்
இதத்து ஆதி = இதம் தருவதில் ஆதியே! அன்பர் இதத்தாதீ!
தத்தத்து = தந்தம் உடைய
அத்தி = ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை = கிளி போல் கொஞ்சும் தெய்வயானைக்கு
தாத = தாசனே! தேவானை தாசனே முருகா!
தீதே துதை தாது = தீமை நிறைந்த இரத்தமும் மாமிசமும்
அதத்து உதி = மரணமும் பிறப்பும்
தத்து அத்து = ஆபத்தும் நிறைந்த
அத்தி தித்தி = எலும்பு மூடிய பை (உடல்)
தீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்
திதி = அந்நாளிலே
துதி தீ = உன்னைத் துதிக்கும் அடியேனின் புத்தி
தொத்தது = உனக்கே தொத்துப்பட (ஆட்பட) வேணும்!

திருவரங்கத்தில் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ( ஆடி 18)
திருவரங்கத்தில் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ( ஆடி 18) கொண்டாடப்படும் விதம்
ஆண்டாள் மாலை மாற்றல் வி்பரம்
நன்றி: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
நித்தியப்படி பகலில் ஏற்பட்ட பொங்கல் பெரிய அவசரம் என்ற இரண்டுகால திருவாராதனங்களையும் தளிகையையும் கண்டருளி காலையில் புறப்பட்டு, வழிநடை இளகல் உபயங்களை அமுது செய்துகொண்டு மத்தியானம் பெருமாள் தென்திருக்காவேரிக்கு எழுந்தருளுவார். அங்கு திருவாராதனம், தளிகை நிவேதனம் - முதலியவை ஆனபிறகு தாலிப் பொட்டையும் கூரைப் புடவையையும் நம்பெருமாள் திருமுன்பே வெள்ளித் தட்டில் வைத்தெடுத்துக் கொண்டு, யானைமேல் முதலில் ஸ்தாநீகரும், பின்னால் சாமரத்தோடு ஊழியக்காரரும், பிரஸாதத்தோடு பின்னால் நாச்சியார் பரிகரமும், திருப்பணியாரத்தோடு பின்னால் பணியாரக் காரருமாய்ப் புறப்பட்டுப் பிரவாஹத்திலிறங்கி, காவேரித் தாயாருக்கு தாலிப்பொட்டு கூரைப்புடவை, பிரஸாதம், திருப்பணியாரங்களை ஸமர்ப்பித்துத் திரும்புவார்கள். இரவு பெருமாள் புறப்பட்டு கொல்லம்பட்டரைத் தெரு வழியாய் எழுந்தருளி வெளியாண்டாள் ஸந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டு ஸந்நிதிக்கு எழுந்தருளுவார்.
நம்பெருமாள் ஆண்டாளுக்கு எதிரில் நிற்க, ஆண்டாளுடைய மாலையைக் களைந்து முதலில் நம்பெரு மாளுக்கு சாற்ற நம்பெருமாளுடைய மாலையையும் கஸ்தூரித் திருமண்காப்பு, சந்தனம் ஆண்டாளுக்கு சாற்றுவது. ஆண்டாள் சூடிக் கொடுத்த நாய்ச்சியாராகையால் அவள் சூடிக்கொடுப்பதைப் நம்பெருமாள் சாற்றிக்கொண்டு பிறகு தன்னுடைய மாலையை அவளுக்கு சாற்றுகிறார்.
ஆண்டாள் தவிர மற்றை நாச்சியார்களில் மாலையைப் நம்பெருமாள் சாற்றிக்கொள்வதில்லை. ஸ்ரீ ரங்க நாய்ச்சியார், உறையூர் நாய்ச்சியார்களுக்கு நம்பெருமாள் மாலை சாற்றுவ துண்டேயன்றி அவர்களுடைய மாலையைப் நம் பெருமாள் சாற்றிக்கொள்ளமாட்டார். மற்றை நாய்ச்சியார் களின் மாலையையும் நம்பெருமாள் சாற்றிக் கொண்டால் அவர்களைக் காட்டிலும் ஆண்டாளுக்கு ஏற்பட்ட பெருமை வெளிப்படாது.
ஜ்யேஷ்டாபிஷேகத்தன்று பெரியபெருமாளுக்குத் தைலம் சாற்றியதால் திருவடி சேவை கிடையாது. இன்று முதல் திருவடி சேவை உண்டு.
இந்த உத்ஸவத்திற்கு ‘கங்கோத்பத்தி’ உத்ஸவம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த உத்ஸவத்தைப் பற்றிய குறிப்புகள் ஸ்ரீப்ரச்ந ஸம்ஹிதை 43-ம் அத்யாயத்தில் காணப் படுகின்றன. ஸ்ரீயினுடைய ப்ரச்சங்களுக்கு (கேள்விகளுக்கு) பகவான் சொல்லும் உத்தரமாயிருப்பதால் இந்தக் கிரந்தத்துக்கு ஸ்ரீப்ரச்ந ஸம்ஹிதையெனப் பெயராயிற்று.
நன்றி: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
”அடை” ஆராய்ச்சி!
”அடை” ஆராய்ச்சி!
கேட்ட மாத்திரத்தில் “அட” என்று வியக்க வைக்கும் டிபன் “அடை” – அந்தக் காலப் பாட்டிகளின் ஃபேவரிட் பலகாரமும் அடையும் வெல்லமும்தான்!
மாலை வேளையில், மத்திய தர ஓட்டல்களின் கரும்பலகைகளில், பச்சை, சிவப்பு, நீலம் என பல வண்ண எல் ஈ டி பல்புகளின் ஒளிர்வில், இரண்டு ஸ்டார்களுடன் மெனுவின் கடைசி ஐட்டமாய் வசீகரிக்கும் சூப்பர் ஸ்டார், “அடை – அவியல்”!
இட்லி, தோசை, பூரி போன்ற ஃபாஸ்ட் பெளலர்கள் போரடித்தால், மாற்றுக்கு வரும் ஸ்பின் பெளலர் அடை! ( என்னது, உப்புமாவா? அவர் ட்வெல்த் மேன் – அவசரத்துக்கு கூப்பிட்டுக்கொ ’ல்லலா ’ம்!).
காலையில் ஊறவைத்த அரிசி, து.பருப்பு, க.பருப்பு கலவையை மதியம் காபி கடையுடன் (மதிய காபி நேரத்துக்கு செல்லப் பெயர்!) மிக்சியில் (அல்லது கல் உரலில்) இரண்டு, மூன்று மிளகாய் வற்றலுடன் சிறிது கரகரவென்று, கூழாக இல்லாமல் அரைப்பது, மாலை சற்றே தடிமலான ‘மொறு’’மொறு’ அடைக்கு உத்திரவாதம்!
மஞ்சளுக்கும், ஆரஞ்சுக்கும் இடைப்பட்ட ‘பீச்’ கலரில் அடைமாவு – சிறு சிறு புள்ளிகளாக சிவப்பு மிள்காய்த் துகள்கள், எடுத்த கரண்டியில் தளும்பாமல், ஸ்திரமாய் நிற்பது – தோசைக் கல்லில் நடுசெண்டரில் இருந்து மெதுவாகப் பரவத் தோதானது! சிறிது தாராளமாக வார்க்கப்படும் எண்ணை, தடிமனான அடையின் மெரூன் கலரில் முறுகலான ஓரங்களுக்கு முக்கியம்! அவ்வாறே அடையின் நடுவில் கீறப்படும் ஓட்டையில் விடும் எண்ணையும்!
கருவேப்பிலை, முருங்கை இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பல்லு பல்லாய் (சின்ன அழகிய அரிசிப்பல் போல!) தேங்காய்த் துண்டுகள், சிறு கத்தரித் துண்டுகள் சேர்ப்பதில் வேலை மெனக்கெடல் உண்டென்றாலும், அடையின் சுவைக்கு அவற்றின் பங்கு, அலாதியானது!
தோசையைப் போல் ஒல்லியாக வார்ப்பதுவும், ஓட்டல்கள் போல் ஒரு பக்கம் மட்டும் வேக வைப்பதுவும் அடைக்கு விரோதமானவை! மெரூன் கலரில் ‘க்ரிஸ்ப்’பான ஃப்ரில் ஓரங்களும், அங்கங்கே நம்மை முறைத்துப் பார்க்கும் தேங்காய்/ வெங்காயத் துண்டுகளும் நேசமான அடையின் அடையாளங்கள்!
லாரல் இணை ஹார்டியைப் போல் அடைக்கு இணை, அவியல்தான்! காய்கறிகளுடன் ஓடும அவியலைவிட, வைத்த இடத்தில் நிற்கும் ( ராமன் முதுகில் அம்பறாத்துணியில் சொறுகி வைத்த அம்புகளைப் போல், நீளமாய் வெட்டப்பட்ட உருளை, சேனை, பீன்ஸ், மாங்காய், கேரட் துண்டுகள் துருத்திக் கொண்டு நிற்பது அவசியம்!) அவியலே என் சாய்ஸ்!
நல்ல திடகாத்திரமான மோர்க்குழம்பு இதற்கு பல்லில்லாதவர்களுக்கு உதவும் வகையில் அடைக்கு ஏற்ற ஜோடி!
(நீரோட்டமான ‘கடி’ – வடநாட்டு மோர்க்குழம்பு – இதற்கு உதவாது!),
மிளகாய்ப் பொடி – நல்லெண்ணை // வெல்லம் – வெண்ணை // வீட்டில் வைத்த அரைத்துவிட்ட சின்ன வெங்காய சாம்பார் எல்லாம் என்னதான் ஜோடி சேர்ந்தாடினாலும், கொஞ்சம் ’ஆபத்துக்குப் பாவமில்லை’ ரகம்தான்!
கல்லிலிருந்து, நேராகத் தட்டுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும் அடைகளுக்கு, உடனே வாயில் அடைக்கலம் கொடுப்பதுதான் நாம் அடைக்குச் செய்யும் மரியாதை. ஆறினது, ஹாட் பேக்கில் வியர்த்ததெல்லாம், ‘ஆறின கஞ்சி…..’ கதைதான்!
முதல்நாள் அடை மாவில், வெட்டிய வெங்காயம் சேர்த்து, நல்ல தேங்காய் எண்ணையில் மறுநாள் வார்க்கப்படும் முறுமுறு அடைக்கு ஒரு தனி மவுசும், ருசியும் உண்டு.- தே.எண்ணையுடன் சேர்ந்த மி.பொடியுடன் அந்த அடை உள்ளே செல்லும் ஒவ்வொரு முறையும் காதில் நாரத கானம் கேட்கும் பாக்கியம் பெறக்கூடும்!
ஆந்திர அன்பர்களின் அடை, ‘பெசரெட்’ – கொஞ்சம் அரிசியும், நிறைய பயத்தம்பருப்பும் சேர்ந்தது – தோசை போல மெல்லியதாக வார்த்து, மேலே பச்சைமிளகாய் விழுது, வெங்காயம், கொத்துமல்லி மற்றும் பெயர் தெரியா பொடிகள் தூவி ஒரு பக்கம் வேகவைத்த வஸ்து – தேங்காய் அல்லது கொத்தமல்லி கார சட்னியுடன் கண்ணில் நீரை வரவழைக்கும் டூயட்! இந்த பெசரெட்டின் நடுவில் ஒரு கரண்டி உப்புமாவை வைத்து மடித்துக் கொடுத்தால், அது ’’பெசரெட் உப்புமா” – நன்றாக இருந்ததாக என் நண்பரின் பெண்ணின் திருமணத்தில் சாப்பிட்டவர்கள் சொன்னார்கள் – பெண்ணின் தோப்பனாருக்கும் எனக்கும் அந்த பாக்கியம் இல்லை – நாங்கள் போனபோது தோசைக்கல்லும், கரண்டியும் மட்டும் கேட்பாரற்றுக் கிடந்தன!
அடையும் வெல்லமும் அந்தநாளைய பாட்டிகளின் பலகாரம் – ஆரோக்கியமானது. பருப்பில் புரதமும், வெல்லத்தில் இரும்புச் சத்தும் சேர்ந்து, ரத்தம் ஊறுகிறது – பாட்டிகளை மிஞ்சும் டயடீஷியன் இனிமேல்தான் பிறக்க வேண்டும்!
தயிர் சாதத்துக்கு, அடையும், மிளகாய்ப் பொடியும் நல்ல சைட் டிஷ் – அறியாதவர்கள், முயற்சித்து முக்தி அடையலாம்!
கொஞ்சமும் அடை ஜாடையே இல்லாத காரடையான் நோன்பு வெல்ல அடைக்கும்,, உப்பு அடைக்கும் அந்தப் பெயர் ஏன் வந்தது – தெரிந்தவர்கள் சந்தேகத்தைத் தீர்த்து, சொந்த செலவில் பக்கத்து ஓட்டலில் அடையுடன் வெண்ணை முழுங்கி பிறவிப் பயன் அடையலாம்!
அடையிடம் அடைக்கலம் அடைந்தோர் 👌👌👌👌👌👌👌👌👌
BEWARE SENIOR CITIZENS;
BEWARE SENIOR CITIZENS;*
While booking Train tickets. For travelling in trains Senior citizens have been given concession as below:
40% Concession in fare for Men over 60 years of age and
50% Concession for Women over 58 years of age .
The concession was given after much deliberations and discussions as a welfare measure towards senior citizens.
Now while booking train tickets online through IRCTC,
now a screen appears at the time of booking with two tricky option
for the senior citizens to give up the concession so far availed.
The screen comes with two option OK to give up the concession and Cancel to proceed booking with concession.
YOU MAY THINK THAT
OK MEANS THAT YOU WANT TO CONTINUE WITH THE CONCESSION AND
CANCEL MEANS TO FOREGO THE CONCESSION.
IN RAILWAY'S PARLANCE IT IS NOT SO. It should be YES or NO.
So they indulge in such jugglery of words to confuse the senior citizens/passengers.
Always click CANCEL TO AVAIL THE CONCESSION.
Never click OK -
As IRTC is now using technical words to loose your senior citizen benefits..... Forever
Just spread the awareness... 👍
OLIVER PETER D' SOUZA
EXECUTIVE SECRETARY
RLY YATRI SEVA SANGHA., MUMBAI

Subscribe to:
Posts (Atom)