Sunday, July 12, 2020

லாக்டௌன்

லாக்டௌன்
 சிறு கதை : நிவேதா 

லாக் டௌன் ஆரம்பிப்பதற்கு முதல் வாரம்தான் நான் ரிட்டையரானேன். மூன்று மாதமாக ரிலாக்ஸ்டாக லேட்டாக தூங்கி லேட்டாக எழுந்து  இஷ்டத்துக்கு சினிமா டிவி என்று பார்த்து ரிட்டையர்மெண்ட் லைஃபை 
ஜாலியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். நேற்று முதல் ஒரு சின்ன நெருடல் . என் மனைவியும் , கல்யாண வயதில் இருக்கும் என் பெண்ணும் என்னிடம் எதையோ மறைக்கிறார்கள் 
என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. இருவரும் கூடி கூடி ரகசியமாக பேசுவதும் , மொபைலை இருவரும் சேர்ந்து பார்த்து எதையோ டிஸ்கஸ் பண்ணுவதுமாக இருந்தார்கள். இன்று காலை நான் தூக்கம் விழித்தும் படுக்கையில் சோம்பலாக படுத்திருந்த போது இருவரும் ரூமில் பேசுவது தெளிவாக கேட்டது. கரண்ட் போனதால் ஃபேன் சத்தம் இல்லாததாலும்
இருக்கலாம். என் மனைவி மகளிடம் சொல்கிறாள்" நீ தான் உன் அப்பாவை கன்வின்ஸ் பண்ணனும். நான் 
சொன்னால் கேட்க மாட்டார்.தவிர எனக்கே இதில் முழு சம்மதம் இல்லை. உன் அப்பா சம்மதித்தாலும் பின்னாடி ஊர் சிரிக்கிற மாதிரி ஆகி விட்டால்? " 
என் பெண் எரிச்சலுடன் குறிக்கிடுகிறாள் " அம்மா அப்படியெல்லாம் ஆகாது. நான் எவ்வளவு பேரிடம் இதை டிஸ்கஸ் பண்ணேன் தெரியுமா? எல்லோரும் வீட்டில் சிம்ப்பிளாக செய்வதுதான் பெஸ்ட் என்கிறார்கள்.லாக் டௌன் முடிந்தாலும் இன்னும் ஒரு வருஷத்துக்கு பப்ளிக் ப்ளேஸ், கூட்டம் இதெல்லாம் அவாய்ட் பண்ணனும் தெரியுமா? " என்றாள். என் மனைவியோ " என் தாத்தா காலத்தில் வீட்டிலேயே செய்தார்கள். " என்றாள். "பார்த்தாயா ! உன் தாத்தா காலம்தான் பெஸ்ட். அப்பாவை நான் சமாளிக்கிறேன் ." என்றாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.என் பெண் யாரையாவது லவ் பண்ணுகிறாளா? வீட்டிலேயே 
கல்யாணம் செய்து விடலாம் லாக்டௌன் சாக்கில்  என்கிறாளா? அப்படி என்ன அவசரம்? எனக்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்தது கரண்ட் இல்லாததாலா இல்லை 
இவர்கள் பேச்சு ஏற்படுத்திய குழப்பத்தாலா என்று தெரியவில்லை. மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து  பாத்ரூமிற்குள் சென்று ப்ரஷ் பண்ணி விட்டு வந்து அமர்ந்தேன். என்ன விஷயமாயிருந்தாலும்  அதை எதிர்கொள்ள தயாராக. 
 என் பெண் என்னிடம் வந்து   என்னை ஒரு போட்டோ  எடுத்தாள். "எதுக்குடி போட்டோ 
 இந்த கண்ராவிய இன்ஸ்ட்டால வேற போடப்போறியா " என்றாள்.
 என் மகள் சிரித்து கொண்டே என்மேல் ஒரு டவலை போர்த்தி " பின்னே ! பிஃபோர் ஆஃப்டர் என்று போடனுமே " என்றவள் " அப்பா ! ஹேர்கட் பண்ணாம உங்க முகத்த பார்க்க சகிக்கல. என் ப்ரெண்டஸ் எல்லோருமே அவங்கவங்க அப்பாக்கு செஞ்சு வீடியோ போட்டுருக்காங்க. பயப்படாதப்பா. நான் நிறைய தரம் வீடியோ பாத்து  கத்துக்கிட்டேன்" என்றாள்.
 நான் வாஞ்சையுடன் என் மகளை பார்த்தேன்.இந்த குழந்தையை பற்றி ஒரு நிமிடம் ஏதேதோ நினைத்து விட்டோமே என்று என்னை நினைத்து நானே வெட்கினேன். "நீ என்னவென்னா செய். உனக்கு ஃபுல் ஃப்ரீடம் " என்று நிம்மதியுடன் கண்களை மூடி நாற்காலியில் சரிந்தேன்.

No comments:

Post a Comment