Sunday, July 12, 2020

அப்பால ரெங்கநாதர் கோவில் - கோவிலடி

அப்பால ரெங்கநாதர் கோவில் - கோவிலடி

கோவிலடிக்கு திருப்பேர் நகர் என்ற பெயரும் உண்டு

ஒரு காலத்தில் இந்த ஊர் பலாச மரங்கள் நிறைந்த புரசமரக் காடாக இருந்தது. 

இதனால் இத்தலம் பலாச வன ஷேத்திரம் என அழைக்கப்பட்டது

கோவிலடி என்றும் ஒரு பெயர் உண்டு இந்தத் தலத்துக்கு

 உண்மையில் கோவிலடி என்றால்தான் உள்ளூர் மக்கள்ஸ்க்கு நல்லாவே தெரியுது

கிடந்த கோலத்தில் இருப்பு

 நம்ம ஸ்ரீரங்கத்து ரங்கனுக்கும் மூத்தவராம்

பஞ்சரங்கத்தலங்களில் ஆதிரங்கத்துக்கு (ஸ்ரீரங்கப ட்டினம் மைசூர்) அடுத்தது இந்த அப்பால ரங்கம்தான்.

மூணாவது இடம்தான் ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டவனுக்கு. 

நாலாவது சதுர்த்தரங்கம் கும்பகோணம் சாரங்கபாணி,

அஞ்சாம் இடம் நம்ம இந்தளூர் (மாயவரம்) பரிமளரங்கனுக்கு!

சரியாச் சொன்னால் திரு அன்பில் கோவிலுக்கு நேரா குறுக்கால் போனால் நாலே கிமீயில் இந்தக் கோவில் வந்துரும் என்றாலும், கொள்ளிடம் நடுவில் இருக்கே

அதனால் கொஞ்சதூரம் கிழக்கே போய் கொள்ளிடம் பாலம் கடந்து பூண்டி போகும் வழியில் போய் மறுபடியும் மேற்கே போகணும். சுத்துதான் ஒரு பதினாறு கிமீ இருக்கலாம்.

வலப்புறம் திரும்பிப் பாலம் கடந்ததும் ஏதோ வனத்துக்குள் போகுது பாதை. 

பாதையில் அங்கங்கே மயிலாரின் நடமாட்டம்! 

வாகன நடமாட்டத்துக்குப் பழகிய மயில்கள் என்பதால் வண்டிச்சத்தம் கேட்டவுடன் நிமிர்ந்து பார்த்துட்டு, பக்கவாட்டுப் புதர்களுக்குள் போயிருதுங்க

இடதுபக்கம் திரும்பும்படி உத்தரவாச்சு. திரும்பினோம். வழி தவற சான்ஸேஇல்லை! கோவில் வாசலுக்குப் போயாச்சு.

கோவிலடி

கொஞ்சம் உயரமான இடத்தில் இருக்கு கோவில். மூணுநிலை ராஜகோபுரம்! சின்னதா ஒரு தேர் கார்நிறுத்துமிடத்துக்கு அருகில்.

கோபுரவாசல் கடந்து உள்ளே போறோம். எதிரில் இன்னும் ஒரு இருபது படிகள் ஏற்றம். இதுலேதான் கொடிமரமும் ஏறி நடுவழியில் நிக்குது!

நம்ம பெருமாள், மேற்கு பார்த்து கிடந்த நிலையில் ஸேவை சாதிக்கிறார்.

ஒரு கை பாம்புப் படுக்கையின் அருகில் உக்கார்ந்திருக்கும் உபமன்யூ தலையைத் தொட்டு ஆசி வழங்கும் நிலையிலும், இன்னொரு கை ஒரு சின்னக்குடத்தை அணைத்துப்பிடிச்சுத் தூக்கி வச்சுருக்கும் நிலையிலும் காட்சி தர்றார்.

அந்தக்குடம்தான் அப்பக்குடம். அதனால் அப்பக்குடத்தான் என்ற பெயரும் வந்துருக்கு.

பெருமாளின் தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது.

 இக்குடத்திற்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு அதன்மேல் தட்டில் வைத்து அப்பம் நிவேதனம் செய்யப்படுவது தற்போதைய வழக்கமாக உள்ளது. 

 பள்ளி கொண்டுள்ள பெருமாள் தனது ஒரு கரத்தால் மார்க்கண்டேயருக்கு ஆசி கூறுகிறார்

தாயார் பெயர் கமலவல்லி. இந்திரா தேவின்னும் ஒரு பெயர் உண்டு.

சொல்லிவச்சாப்லெ இந்தக் கோவிலுக்கும் நிறைய கதைகள் இருக்கு!

உபமன்யூ என்னும் அரசன், ஒருநாள் தியானம் செஞ்சு அதில் ஆழ்ந்துபோயிருக்கும்போது... துர்வாஸ மகரிஷி வர்றார். மன்னன் உடனே தன்னைக் கவனிச்சு மரியாதை செய்யலைன்னு மூக்குக்குமேல் கோபம் வந்து, 'பிடி சாபம். உன் பலம் அழியட்டும்'என்றார்.

அரசனுக்கு பயம் வந்துருச்சு. புராணங்களின் வழக்கப்படி சாபவிமோசனம் என்னன்னு கேட்க, பலாசவனத்துக்குப் போய் ஒரு லக்ஷம்பேருக்கு அன்னதானம் செய்'என்றாராம். இந்த திருப்பேர் நகருக்கு, அப்போ இப்படி ஒரு பெயர் இருந்துருக்கு.

அதன்படியே சாபவிமோசனத்துக்கான அன்னதானம் தினமும் நடந்துக்கிட்டு இருக்கு. பெருமாள் பார்க்கிறார் . ஒருநாள் கிழவராக உருவம் எடுத்து சாப்பாட்டுக்கு வர்றார்.

சாப்பிட ஆரம்பிச்சவர் , அன்றைக்கு செஞ்சுவச்ச சமையல் முழுசையும் சாப்பிட்டுவிட்டு, இன்னும் எதாவது இருக்குமா என்ற கேள்வியுடன் பார்க்க, திகைப்புடன் இருந்த உபமன்யூ'இன்னும் எதாவது தேவையா பெரியவரே'ன்னு கேட்டதும், ஒரு குடம் அப்பம் வேணும் என்றாராம். உடனே அப்பம் தயாரிக்க ஆரம்பிக்கிறார் சமையல்காரர்.

பெருமாள் ஒரு அலங்காரப்ரியன் என்று சொல்லக்கேள்வி. இப்பப் பார்த்தால்... சரியான சாப்பாட்டுப்ரேமியுமா இருக்காரே! வைகுண்டத்தில் பெருமாளுக்கு அமைஞ்ச சமையல்காரர் சரியா சமைக்கறதில்லை போல!

அப்பக்குடம் கிழவர் கைக்கு வந்ததும் உபமன்யூவின் சாபம் தீர்ந்து பெருமாள் தரிசனம் கொடுத்தார். இவ்ளோ சாப்பிட்டால் அசதியா இருக்காதா? அதான் படுக்கை(யும்) போட்டாச்சு. பக்தர்கள் மனதில் இருந்து இடம் பெயரக்கூடாது என்று விண்ணப்பித்தபடியால் சரி ன்னுட்டு இங்கேயே இருந்துட்டார். அதுவும் திருப்பேர் நகர் என்ற பெயருக்கும் காரணமா இருக்கு.

இன்னொரு கதை என்னன்னா.... இதே உபமன்யூ சிறு குழந்தையா இருக்கும்போது பசிக்குப் பால் வேணுமுன்னு அழுதாராம். அப்போ சிவன் , 'இந்தா பாற்கடலை உனக்குத் தர்றேன். குடிச்சுக்கோ' ன்னார் பக்கத்தில் இருந்த பெருமாள், 'என்னடா இவர் நம்முடைய பாற்கடலை எடுத்து தாராளமா தானம் கொடுக்கறாரே (கடைத்தேங்காய் + வழிப்பிள்ளையார்) என்று (அல்ப்பமா) நினைக்கா மல், ஒரு குடம் நிறைய அப்பம் எடுத்துக் கொடு த்தாராம், பாலில் தொட்டுச் சாப்பிட்டுக்கோன்னு!!

நம்ம அழகர்கோவில் கள்ளழகர் , அவருடைய ஊரில் அப்பம் சுட்டு விற்கும் ஒரு கள்ளர் இனத்துப் பெண்ணிடம், ஏராளமா அப்பங்கள் வாங்கி முழுங்கிட்டு, அதுக்குண்டான காசைக் கொடுக்கா மல் கள்ளனாட்டம் ஓடி வந்துட்டாராம்.(அப்போ, ஒளிஞ்சு ஓடி வந்து கிடந்தது கோவிலடியில்போல!)

இது மெய்தான்னு சொல்லும் சாட்சியமும் இருக்கே! அழகர்கோவில் உற்சவர் சுந்தரராஜர் ஊர்வலம் வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மேளதாளங்கள் எல்லாம் அடிக்காமல் நிறுத்திப்பிட்டு, கப்சுப்ன்னு ஓசைப்படாமல் உற்சவர் பல்லக்கைத் தூக்கிக்கிட்டு ஓடும் வழக்கம் இப்பவும் இருக்காமே!

கள்ளன். இந்தப் பழக்கம் க்ருஷ்ணாவதாரத்திலும் தொடர்ந்திருக்கு பாருங்க. அங்கே அப்பம், இங்கே வெண்ணெய்!

எது எப்படியோ.... அப்பக்குடத்தானுக்கு இங்கே அனுதினமும் அப்பம் நிவேத்தியம் செஞ்சு ப்ரஸாதமா பக்தர்களுக்கு விநியோகிக்கறாங்க. அது சாயரக்ஷைக்கு என்பதால் நமக்கு லபிக்கலை:

பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் வந்து தரிசனம் செஞ்சு, பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்துரு க்காங்க. திவ்யதேசக் கோவில்களின் பட்டியலில் இடம் உண்டு.

நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அதன் பிறகு மோட்சம் பெற்றுவிட்டார்

நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசை யாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்க கோவில்.

சின்ன ஊரா இருப்பதால் நிதானமா நின்னு சேவிக்கலாம்

திருச்சியில் இருந்து 23 கி.மீட்டர் தூரம் பயணித்தால் கல்லணை வழியாக கோவிலடியை சென்றடையலாம்.
நட்புடன்
ச.கணேசன். மதுரை🙏🙏



No comments:

Post a Comment