Sunday, July 12, 2020

திருப்பாற்கடல் அத்தி ஆதிமூல ரங்கன்

(வேகநதி என்னும் பாலாற்றின் கரையில், (சமீபகாலமாக திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்) சுமார் 2000-வருடங்களுக்குமேல் பழமையான 108-திவ்ய தேசங்களில், 107-தேசமான நம் மானிட உடல் மூலம் காண முடியாத,  திருப்பாற்கடல் வாசன்  அருட்குடியிருக்கும் (வைகுந்தம்) தலத்திற்கு இணையானதாக கருதப்படும் இத்தலத்தில், சுமார் 9-அடி நீளமும்,.3-அடி உயரமும் கொண்டு ஆதிசேஷனின்மேல் சயனித்த திருக்கோலத்தில், அத்திரங்க ஆதிமூல சுவாமியாக அழகுற அருட்காட்சியளிக்கிறார். 

அத்தி மரத்தாலான மூர்த்தமான  அத்திரங்க தரிசனம் நம் பாவ வினைகளெல்லாம் போக்கும் என்பர்.( 'ஷீராப்தி' (பாற்கடல்) திருக்கோலத்தில் காட்சிதருவதால், ஷீராப்தி நாதன் (பாற்கடல் நாதன்) என்ற பெயரும் இந்த அத்தி ஆதிரங்கநாதருக்கு உண்டு. இத்தலவூர் முற்காலத்தில், திருக்கரைபுரம் என்றிருந்து பிற்காலத்தில் திருப்பாற்கடல் என்றானதாம். 

(ஒரு சுவையான புராண நிகழ்வின்படி) ஸ்ரீசரஸ்வதியின் கோபத்திற்கு ஆளான ஸ்ரீ பிரம்மாவின் யாகத்திற்க்காக, ஸ்ரீவிஷ்ணு வேகமாக ஓடிவரும் நதிக்கு அணையாக (இருக்க) பாற்கடலில் ஆதிசேஷனின்மேல் பள்ளிகொண்ட ரங்கநாதராக அருட்காட்சியளித்த தலம் என்பது சிறப்பு. (ஸ்ரீஎம தர்மராஜாவின் கணக்குப்பிள்ளை) சித்ரகுப்தன் இத்தலத்தில், அத்திமர சமித்துகளைக்  கொண்டு மிகப்பெரிய ஹோமம் நடத்தி திருமாலை வழிபட்டிருப்பதால், இத்தல அத்திமர ஆதி ரங்கநாதரை வழிபட, சித்ரகுப்தன் எழுதிவைத்த மொத்த பாவக்கணக்கும் தீரும் என்பது ஐதீகம். தேவையற்ற மனக்குறைகளையும் அதனால் ஏற்படும் மன கவலைகளையும் அணைபோட்டு தடுத்திருவாராம் இந்த அத்தி ஆதிமூல ரங்கன்).

🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக:

No comments:

Post a Comment