Saturday, April 30, 2022

சாப்பாடு

 "சாப்பாடு"

என் கவனம்  முழுவதுமே  உப்புமா  கிண்டுவதிலிருந்தாலும்  மனம் முழுவதும் என் கணவர்  எப்போதும் போல கோபத்தில்  சொல்லி விட்டுப்போன  வார்த்தைகள்தான்  சுழன்று கொண்டிருந்தன.

“40 வருடத்திற்கு முன்னால் நான் செய்த  பெரிய தப்பு,  என் அத்தை பேச்சைக் கேட்டு உன்னைக்  கல்யாணம் செய்து கொண்டது.  என் அப்பா  எவ்வளவோ சொல்லியும்  கேட்கவில்லை.  இப்போது தினமும் அதை உணர்கிறேன்.  இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த  கண்றாவியைச்   சகித்துக் கொள்ள வேண்டும்  என்று தெரியவில்லை”

“ஒன்று செய்யுங்கள்.  சாப்பாட்டில்  கலந்து  சாப்பிடுவதுபோல்  ஏதாவது விஷம் இருந்தால்  வாங்கிக்  கொடுங்கள்.  தின்றுவிட்டு  ஒழிந்து விடுகிறேன்.  உங்கள் நெடுநாளைய  பிரச்சனையம்  தீர்ந்துவிடும்”

“ ஏன்,  நீ செத்து ஒழிந்து  அந்தப் பழி  என்மேல்  விழ வேண்டுமா ?”  சாவதற்கு  வேறு பல  சுலபமான வழிகள்  இருக்கின்றனவே”

அவ்வளவுதான்.  செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.  எனக்கு இப்போது வயது  58.  அவருக்கு 65  நடக்கிறது.  இந்த வயதிலும் இப்படித்  தினமும் சுடுசொல்  கேட்காவிட்டால்  அன்று இரவு தூக்கம் வராது என்பது போன்ற கேவலமான நிலைமை என்னுடையது.

மிகச்சிறிய வயதிலேயே  எங்களுடைய திருமணம்.  முன்னோர் செய்த பாவமோ,  எங்கள் இருவரில்  ஒருவர் செய்த  பாவமோ …... என்னவென்று தெரியாத  காரணம்…. எங்களுக்கு குழந்தைகள் இல்லை.

எல் ஐ சி யில்  வேலை பார்க்கும் வரை  தினமும் காலை ஒரு முறை, பிறகு இரவு ஒரு முறை என்றுதான்  என்னைத் திட்ட முடிந்தது.  அவருடைய  பதவி ஓய்வுக்குப் பிறகு,  நிறைய நேரம் கிடைப்பதால்,  நிறைய என்னை திட்ட முடிகிறது. பணத்திற்கு என்றுமே பஞ்சமில்லை. சொந்த வீடு, அவருடைய பென்ஷன், என்னுடைய சேமிப்பு, என் அப்பா எனக்கும், என் சகோதரி வேணிக்கும் எங்களுடைய ஊரான கோமலில் விட்டுச் சென்ற நிலத்திலிருந்து வரும் வருமானம்.....எல்லாமே இருக்கிறது.....குழந்தை சிரிப்பு / அழுகை....மனதில் நிம்மதி தவிர.....

எனக்கு காரணம் தெரியவில்லை.  என்னுடைய சகோதரி வேணியின் குழந்தைகளோ,  அவருடைய சகோதரி அம்சாவின் குழந்தைகளோ  எப்போது வந்தாலும்,  நான் செய்பவற்றை எல்லாம்  விரும்பித் தான் சாப்பிடுவார்கள்.  சிலமுறை, “ இதுபோல மிளகு ரசம் சாப்பிட்டதே இல்லை”  என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு,  வேணியின் மகன் பிரபு இரண்டு மூன்று  முறை  டம்பளரில்  ஊற்றிக் கொண்டு  குடிப்பான்.

“ உங்கள் உருளைக்கிழங்கு  ரோஸ்ட்டுக்கு என் மகள் செல்வி அடிமை.  அப்படி என்னதான்  செய்கிறீர்களோ?”  இது அம்சா அடிக்கடி என்னை கேட்கும் கேள்வி.

“ போன பொங்கலுக்கு,  ஒரு மாதிரியாக மசால் வடை  செய்தீர்களே பெரியம்மா நினைவிருக்கிறதா?  அதுமாதிரி இன்னொரு முறை செய்ய முடியுமா?”  இது வேணியின் மகன் பிரபுவின் கேள்வி.

நினைவுகள்….. நினைவுகள்…..

”சாப்பாட்டிற்கு என்று ஏதாவது ஆஸ்கார் விருது இருந்தால்  அது பெரியம்மாவுக்கு தான்”  என்று சொல்லும் பிரபுவை பார்த்து  என்னால் புன்னகைக்க மட்டுமே   முடியும்.

40 வருடங்களில் ஒருமுறைகூட  என்னுடைய சமையலைக்  குறை சொல்லாமல்  அவர் சாப்பிட்டதே இல்லை.  அதுமட்டுமில்லாமல்,  குழந்தைகள் இல்லாத குறையும்  என்னால்தான் என்ற பழியும்  என் மீது அடிக்கடி விழும்.

“என் அப்பா சொன்ன மாதிரி,  அகிலாவைத்  திருமணம் செய்து கொண்டிருந்தால்,  இப்போது அவளுக்கு இருப்பது போல எனக்கும் வீடு நிறைய மூன்று செல்வங்களும்,  பேரக்குழந்தைகளும் இருந்திருக்கும்.  எல்லாம் விதி.  எதுவும் நடக்கவில்லை.  உன்னைப்போன்ற  ஒரு  உதவாக்கரையை என் தலையில் கட்டிவிட்டு,  என் அத்தை போய்ச்  சேர்ந்து விட்டாள்”  மடைதிறந்த வெள்ளம் போல,  எழுத்து மாறாமல்,  குற்றச்சாட்டு மழை  பொழியும்.  எனக்கு இது  சகஜமாகிவிட்டது.

திருமணம் நடந்து,  மூன்று, நான்கு ஆண்டுகள் கழிந்த பின்,  பொங்கல்,  தீபாவளி என்று எதற்கும் அவர் புதுத்துணி எடுத்ததில்லை.  ஒவ்வொரு வருடமும்  என் சகோதரி வேணி வீட்டில்  இருந்தோ,  அல்லது அவர் சகோதரி அம்சா வீட்டில்  இருந்தோ தான் புதுத் துணிகள்  வரும்.

பிரபு சம்பாதிக்க ஆரம்பித்த வருடம்,  எங்கள் திருமண நாளன்று  புது துணிகளோடு  வீட்டிற்கு வந்தபோது ஆரம்பித்தது பூகம்பம். “ நீ வேலை செய்கிறாய்,  சம்பாதிக்கிறாய்.   உன்னைப்  பெற்றவர்களுக்கு  துணி வாங்கிக் கொடுத்தால்  அது புண்ணியம்.  எங்களுக்கு எதற்கு ?”

கேள்வி கேட்டவரை  அதிசயமாக பார்த்துவிட்டு, “ என்ன பெரியப்பா,  நினைவில்லையா?  இன்று உங்கள் திருமண நாள்!”  என்று பிரபு சிரித்தபோது,

“அது ஒன்றுதான் குறைச்சல்.  இந்தக் கருமத்தை  நான் மறக்க வேண்டும் என்று ஒரு வருடம் கூட அதைக் கொண்டாடுவது இல்லை.  உனக்கு விஷயம் தெரியாது என்று நினைக்கிறேன்.  இப்போது அந்தத் துணி எதற்கு?”

பிரபுவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. “ஆசையுடன் வாங்கி வந்துவிட்டேன்.  உங்கள்  இஷ்டம்.”  வீட்டிற்கு வந்துவிட்டு ஒரு காபி கூட குடிக்காமல் சென்றுவிட்டான்.

அந்த துணிகள்,  அந்த வருட தீபாவளிக்கு  உபயோகமாயிற்று.

தொலைபேசி மணி அடிக்கும் சத்தம் கேட்டு என் கவனம் கலைந்தது.

"ஹலோ...."

நான் மேற்கொண்டு எதுவும் கேட்பதற்கு முன் ஒரு ஆண் குரல் குறுக்கிட்டது.

"இன்று  லஞ்ச்  சாப்பிட எனக்கு ஒரு தாய் நூடுல்ஸ்,  கார்லிக் சிக்கன் கிரேவி,  ஸ்வீட் அண்ட் சால்ட்  லஸ்ஸி….. இது போதும்.  நான்கு நாட்களுக்கு முன்னால்  பெப்பர் சிக்கன்  என்ற பெயரில் ஒரு கிரேவி கொடுத்தீர்கள்.  அதில்  பெப்பர் தான் அதிகமிருந்தது.  சிக்கன் மிகக் குறைவு.  350 ரூபாய் வாங்கும்போது  அநியாயம் செய்யாதீர்கள்”  என்று படபடப்பாக  அந்தக் குரல் பேசிக் கொண்டே போனது.

“ நான் சொல்வதை……”  என்னை முழுவதும்  பேச விடவில்லை.

“ இல்லை,  நான்  அனாவசியமாக    பழி சொல்ல மாட்டேன். தினமும் வேறு யாரையும் எதிர்ப்பார்க்காமல்  உங்களிடமே  ஆர்டர்  செல்கிறேனே,  அதைப்  பாராட்டுங்கள்.  பசியோடு இருக்கிறேன்.  உடனே அனுப்புங்கள்”  முடிக்கும் முன்  நான் குறிக்கிட்டேன்.

"நீங்கள் யாரோ என்று  நினைத்துக்கொண்டு……”  மறுபடியும் அந்தக் குரல் குறுக்கிட்டது.

“ அதே கார்த்திக் தான்.  கிட்டத்தட்ட ஒரு வருடமாக  உங்களிடம் தினமும் லஞ்ச் ஆர்டர் செய்து  சாப்பிடும் அதே கார்த்திக் தான்”

நான் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். பசி என்று இருப்பவன் சாப்பிட ஏதாவது கேட்கும்போது அதைத் தயார் செய்து கொடுப்பது தவறா?

"சரி,  உங்கள் விலாசம்? "

“ஹலோ,  இது என்ன புதிதாக கேட்கிறீர்கள்?  அதே டாக்டர் ராதாகிருஷ்ணன்  சாலைதான்,  அதே  சிட்டி சென்டர் தான்,  அதே  இரண்டாவது  மாடி தான்”  நான் மேற்கொண்டு  எதுவும் பேசும்முன்  தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

வீட்டில் சமைப்பதை தவிர,  வேறு பெரியதாக எந்த வேலையும் இல்லாததால்,  சரசரவென்று  அந்தத் தொலைபேசிக்   குரல் கேட்டவற்றையெல்லாம்  இரண்டு மணி நேரத்தில்  தயார் செய்துவிட்டேன்.  அழகாக பாக்கிங் செய்வதற்குத் தேவையான  பொருட்கள் வீட்டில் இருந்ததால் ( பிரபு உபயம்),  தயார் செய்துகொண்டு  கிளம்பிவிட்டேன்.

சிட்டி சென்டர்  என்ற பிரபலமான ஷாப்பிங் மாலை  அடைந்து,  இரண்டாவது மாடி  சென்றபோது  அங்கே இருந்த செக்யூரிட்டியிடம்  கார்த்திக் பற்றி விசாரித்தேன்.  அவன்  கார்த்திகை மேசை மேலிருந்த  தொலைபேசி  மூலம்  அழைத்தான்.

கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு  வெளியே வந்த கார்த்திக்,  என் சகோதரி மகன் பிரபு வயதில்தான்  இருப்பான்.

என்னை சந்தேகமாகப்  பார்த்துவிட்டு, “ என்ன வேண்டும்?”  என்கிறான்.

கையிலிருந்த பையை அவனிடம் கொடுத்துவிட்டு, “ உங்கள் லஞ்ச் ஆர்டர்”  என்றேன்  சிரிப்புடன்.

என்னுடைய  வயதான தோற்றமா,  அல்லது  என்  பேச்சா  எது என்று  தெரியவில்லை. “ இதுவரை  உங்களை பார்த்ததே இல்லையே ?  கேட்டரிங்  சர்வீசில். உங்களை மாதிரி  பெரியவர்களை எல்லாம்  சேர்க்கிறார்களா  என்ன?”  அவனுடைய  சந்தேகம் /  கேள்வி  நியாயமானது  தான்.

தொலைபேசியில் வந்த    ராங்க் காலை  பற்றிச் சொன்னேன்.  பெரிதாக சிரித்துவிட்டு, “ அதற்காக,  இவ்வளவையும்  தயார் செய்துகொண்டு நீங்கள் வரவேண்டுமா?  உங்களுக்கு நான்  மிகப் பெரிய நன்றி சொல்கிறேன்.  இதற்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”  என்றான்.

நான் பதிலுக்கு சிரித்துவிட்டு, “ நீங்கள் சாப்பிடும் வரை இங்கே காத்திருக்கிறேன்.  சாப்பிட்டுவிட்டு  பாத்திரங்களை திரும்பக் கொடுத்தால் போதும்”  என்றேன்.

கார்த்திக், நான் வயிற்றில் சுமந்து பெறாத மகனாக,  எனக்குக் கிடைத்த கதை இதுதான்.

பகிர்வு - தகவல் உலா✍️

பருப்புத் தேங்காய் கூடு

 பருப்புத் தேங்காய் கூடு

இப்போல்லாம் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸிலோ அல்லது ஏ2பியிலோ ஆர்டர் கொடுத்தா சாயங்காலத்துக்குள்ளே வந்துடரது. நீங்க சொல்ர வெயிட்டுக்கு. கூடு உங்ககிட்டே இருந்தா சரி, இல்லைன்னா வெயிட்டுக்கு பொறுத்தமா அளவா அவாளே தந்துட்ரா.

முன்னெல்லாம் ஆத்துலேயே செஞ்சுப்பா, இல்லைன்னா பரிஜாரகனை பண்ணச்சொல்லி வாங்கிப்பா. எல்லா பிராம்ணாத்துலேயும் ரெண்டு ஜோடி பருப்புத்தேங்காய் கூடாவது இருக்கும். எங்காத்தில் ரெண்டு பொண்களுக்கு கல்யாணம் செஞ்சு அப்புரமும் சீர் சினத்தின்னு அப்பப்போ தேவைப்பட்டதில் பரணில் 3 ஜோடி இன்னமும் ஒட்டடை பிடிச்சு கிடக்கு. எங்காத்து மாமி அப்பப்போ அதுகளை ஆசையா எடுத்து பத்துப்பாத்திரத்தோட போட்டு தேச்சு வாங்கி வச்சுப்பா. நாளைக்கு பேரனுக்கு பூணூல்னா வேணுமே. அதுவும் 20 வருஷமா இருக்கரதுனால ஆவி வந்ததாம். உள்ளுக்குள்ள காலியா இருப்பதால் ஆவி பூந்திண்டிருக்குமோ? என்னை “மேலேந்து சித்த எடுத்துக்கொடுங்கோ”ன்னு சொல்லுவா, பயந்துண்டே எடுத்துக் கொடுப்பேன்னா பாத்துக்கோங்கோ.

எப்படி பக்ஷணங்களில் அதிரசமும், முறுக்கும் முக்கியமோ, அதேபோல பருப்புத்தேங்காய் கூடும் பிராம்ணாளுக்கு முக்கியம். உயரமா ரெண்டு கூடு பளபளன்னு நடுவில் தாம்பாளத்தில் (ஜிகினாவெல்லாம் இப்போ ஒட்டி வைக்கரா) விசேஷம் நடக்கிர இடத்தில் பாக்கலாம். அங்கேயும் இங்கேயுமா சின்னஞ்சிருசுகள் ஓடி ஆடி விளையாடரச்சே கூட்டை தட்டிவிட்டுடப் போராளோன்னு பதபதைப்பா இருக்குமே! 

கூடு அழகா ரொம்ப ஒல்லியா உயரமா இல்லாம கீழே எத்தனை பெரிசா இருக்கோ அதுமாதிரி அதுக்குத்தகுந்த உயரத்தோட எப்போவும் ஜோடியா இருக்கணும். கூட்டில் நசுங்கல் ஏதும் இல்லாம, குறையேதும் இல்லாம வேணும்.

ஆனா அதைவிட உள்ளே என்னத்தை கூட்டில் அடைக்கிரோம்கிரது முக்கியம். விதவிதமா அடெச்சு நான் பாத்திருக்கேன். மனோகரம் ரொம்ப ஃபேமஸ். அதுன்னா எனக்கு உசிரு. ஆனா யாராவது சொன்னாலோ அல்லது எடுத்துப்பாத்தால்தான் உள்ளே என்னன்னு தெரியும். அதுவரைக்கும் நாம கெஸ் செஞ்சாலும் அது ஒரு மிஸ்டரிதான். கல்யாணங்களுக்கு போனாலோ அல்லது வேர விசேஷங்களிலோ கொஞ்ச நாழி உள்ளே என்ன இருக்கும்னு சில ஹேஷ்யங்கள் செஞ்சுட்டு வேர விஷயத்தை யோசிக்க ஆரம்பிச்சுடுவேன்.

மிட்டாய் பருப்புத்தேங்காய்னு ஒன்ணு. கலர் கலராய் மிட்டாய்களையும் வச்சு அடெச்சிருப்பா. மிட்டாய்களை சர்க்கரை பாகில் போட்டு எடுத்து கெட்டியா ஆகியிருக்கும். அதைத்தவிர கொலெஸ்ட்ராலை பத்திக்கவலைப்படாமல் முந்திரிபருப்புத் தேங்காய், மைசூர்பாகு பருப்புத்தேங்காய், பூந்தி (லட்டு) வேர்கடலை, பொட்டுக்கடலை பருப்புத்தேங்காய்னு பல விதங்கள். வித்யாசமா இருகட்டும்னு இப்போ டிரைஃப்ரூட் பருப்புத்தேங்காய் கூட. டிரைஃப்ரூட்னா நீங்க வேர லெவல். 

ஒரு காலத்தில் பருப்புத்தேங்காய்க் கூட்டில் இருக்கும் இனிப்பு வகை மட்டுமேதான் பக்ஷணத்தில் இனிப்பு. வெளீலெ முறுக்கும் தேங்குழலும்தான். ஆனால் இப்போ வகை வகையா எல்லாத்தையும் செஞ்சுட்டு முன்னாடியெல்லாம் வைப்பாளேன்னு பருப்புத்தேங்காய்க் கூட்டையும் வைக்கரான்னு நினைக்கிரேன். சாஸ்திரமாம்.

ஆதிகாலத்தில் நமக்குத்தெரிந்த கடவுள் சிவனும் பார்வதியும்தானாம். அதனால் ரெண்டு பருப்புத்தேங்காய் கூடும் அவாளை குறிப்பனவை. அவா முன்னிலையில் வச்சு நாம நல்ல காரியங்களை நடத்திக்கரோம். உள்ளே இருப்பது வெளீலெ தெரியாம, ஒரு மிஸ்டரி மாதிரி, சிதம்பர ரகஸியம் போல். விசேஷத்துக்கு வந்தவா எல்லாரும் சின்னதா ஒரு ஆத்ம விசாரம் செய்யட்டுமேன்னு. 

முறைப்படி பார்த்தால் ஒரு கூடு இன்னொண்ணைவிட கடுகளவாவது சின்னதா காட்சி அளிக்கணும். இது நிறையபேருக்கு தெரியுமான்னு தெரியலை. இருந்தாலும் அதை வச்சிருக்கும் விதத்தில் அந்த உயர வித்யாசம் தெரியாமக்கூட போயிடும். இதுக்கு அந்த வடிவம் ஏன் வந்ததுன்னு கேட்டா எனக்குத்தெரிஞ்ச ஒருத்தர் இப்படி சொன்னார்.

அந்த காலத்தில் தாமரை இலையிலோ அல்லது வாழை இலையிலோதான் சாப்பாட்டு ஐடெம்கள் தரப்படும். நிரம்பதூரம் பிரயாணம் பண்ணி வந்திருப்பவாளுக்கு இலையை கோன் வடிவத்தில் மடிச்சு அதில் உணவைபோட்டுகொடுப்பது சுலபம். இப்போ கடலை பொட்டலம் இருக்கே அதுமாதிரி. ஆகவே எதுவானாலும் அந்த வடிவத்தில் வச்சுப்பார்ப்பது வழக்கமானது. அதுவுமில்லாம கவுத்துப்பாக்கிர அந்த வடிவம் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பா வச்சுக்குமாம். எகிப்திய பிரமிட்கள் இன்னொரு உதாரணம். (எனக்கு தெரியும்  இந்த இடத்தில்  இது சரியான உதாரணம் இல்லைன்ந்னு).   

பருப்பு, தேங்காய், வெல்லம் இவை மூன்றும்தான் இதை செய்வதற்கு பயன்படுத்தினார்கள். எளிய உணவு, சீக்கிரம் செய்யக்கூடியது, நிறைய சத்து கொடுக்கவல்லது. இதை சிலநாட்களுக்கு எடுத்துண்டு போய் பிரயாணத்திலும், அப்புரமும் சாப்பிட. இதில் கடவுளரையும் கூப்பிட்டு இதுதான் கடவுள்னு பாவித்து, பூஜித்து என்னவெல்லாம் செஞ்சிருக்கா நம்ம மக்கள்?

சீர் எடுத்துண்டு பொண்கள் ஊஞ்சல் கல்யாணம் முடிஞ்சதும் பொண்ணு மாப்பிள்ளையோட பின்னாடியே வருவா. அப்போ வீடியோலே சரியா பிராமினென்ட்டா விழணும்னு கொஞ்சமா தளுக்கிண்டு போவா. பருப்புத்தேங்காய் கூட்டை தாம்பாளத்தில் வச்சு எடுத்துண்டு வர பொம்மனாட்டி மேல ஸ்ட்ரோப் லைட் ஃபோகஸ் செஞ்சு கொஞ்சநாழி கூடுதலா விடீயோக்காரன் எடுப்பான். 

காஞ்சீபுரத்தில் ஒரு ஐயங்கார் பூணல். போயிருந்தோம். அப்போ பருப்புத் தேங்காய்க்கூட்டை யாருக்கு கொடுக்கரதுன்னு ஒரு சின்ன விவாதம் வந்துடுத்து. பிள்ளையாண்டனோட பாட்டி, பார்த்தா, யாரும் சொன்ன பேச்சை கேக்கிரதா இல்லை. சரின்னுட்டு அந்தத்தாம்பாளத்தை தூக்கி என் ஆத்துக்காரிகிட்டே தந்துட்டா, நீங்க எடுத்துண்டு வாங்கோன்னு. பூணல் கல்யாணத்துக்கு வந்த ஸ்மார்த்தா மாமிகிட்டே பருப்புத்தேங்காய் கூட்டை கொடுத்து கவுரவம் பண்ணிட்டான்னும் அதேசமயத்தில் ஆத்து மனுஷாளை  இன்சல்ட் செஞ்சுட்டான்னு பலபேருக்கு மனஸ்தாபம் ஆயிடுத்து. இதை அவாளுக்குள்ளே பேசிண்டிருந்திருக்கா, அதைக்கேட்ட ஒரு மாமி எங்களோட சென்னைக்கு காரில் வரச்சே சொன்னா. 

காரை ஓட்டிண்டு வந்த எனக்கு இது ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. சர்ருன்னு ஆக்ஸிலரேடரை அழுத்தி, ஹாரனை அடிச்சு என் மகிழ்ச்சியை பிரகடனப்படுத்திண்டேன்னா பாத்துக்கோங்கோ.

இது ஒருபுரம் இருக்க இப்போல்லாம் படத்தில் இருக்காப்புலெ கூடு விதவிதமா ஃபேஷனபிளா வந்தாச்சு. உள்ளே சாஸ்திரத்துக்கு கொஞ்சமா அடைப்பதுங்கிரதும் வழக்கமாப்போச்சு. கூட்டை உள்ளே முழுசா அடைக்காமல், ஏனோதானோன்னு அடைப்பது ஒரு விவகாரமான தப்பான செயல். முழுசா அடைக்கணும்னு பார்த்தால் நிறைய அந்த எடுத்துக்கொண்ட பண்டத்தை செய்யணுமே, அதுவே ஒரு காரணம். எதுக்காகச் செய்யரோம்னு இல்லாமல், செஞ்சாப்போரும்னு ஆயிடுத்து.

நம்மாத்து விசேஷங்களுக்கு எல்லா சீர் வரிசைகளையும் வச்சுட்டு அதையெல்லாம் ஒரு போடோ எடுத்துக்கோங்கோ. அப்புரம் நடுவுலே ஒரு ஜோடி பருப்புத்தேங்காய்க் கூட்டையும் வச்சு இன்னொரு போடோ எடுங்கோ. ரெண்டையும் கம்பேர் செஞ்சுப்பாருங்கோ. ரெண்டாவதுதான் சோபிக்கும். 

பொண்ணு மாப்பிள்ளை கட்டிண்டிருக்க புத்தாடை கூட கொஞ்சம் டல்லா இருக்கலாம், பொண் தெத்துப்பல்லாவும் மாப்பிள்ளை தொந்தியோட கொஞ்சம் வழுக்கை விழுந்திருந்தாலும் பரவாயில்லை, பருப்புத்தேங்காய்க் கூட்டோட ஒரு போடோ எடுத்துப்பாருங்கோ அப்போ தெரியும் நான் சொல்ல வரது!

அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள்.

 அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள்      

அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர்…. தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க… ஒரு பெரிய கடையின் முன், தன் காரை நிறுத்துகிறார்.

பிரபலமான பூக்கடை அது…

எவ்வளவு விலை சார் இது

250 டாலர்…!

இதைவிட அருமையான ‘பூ ‘காண்பிக்க முடியுமா…?

வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது…

இது “ஆர்கிட்” வகைப் பூ… மிகஅருமையா இருக்கும்…. ஒரு வாரம் வரை வாடாது

“500 டாலர்”…!

சரி, இதையே , ‘பேக் செய்யுங்க…

உங்களிடம், “கொரியர்” சர்வீஸ் இருக்கா…?

கொரியர் சர்வீஸ்’சும், செய்கிறோம்… அதற்கு ஒரு 100 டாலராகும்.

வேண்டாம்… இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும் இன்று என் தாயின் பிறந்தநாள் கொரியர் சர்வீஸ்’ பல காரணங்களுக்காக தாமதமாகலாம் எனக்கு இன்றே போகணும்….

ஒன்று செய்யுங்க… ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து… இந்த பூங்கொத்தை,இன்றே என் தாயிடம், இந்த அட்ரஸ் சில் சேர்த்திடுங்க.

ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்துவிடும்…. அதற்கும் சேர்த்து 500 டாலர்.

நோ ப்ராப்ளம் பணத்தையும், அம்மாவின், வீட்டு அட்ரஸ் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்த பணக்காரர். 

மனம் முழுக்க மகிழ்ச்சி, தன் பிஸி நேரத்திலும், தன் அம்மாவின் பிறந்தநாளை மறக்காமல், பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரை காரில் ஏறப் போக….

ஒரு சின்ன சிறுமி ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் அழுதபடி இருக்கிறாள்…. குழந்தை ஏன் அழறே…?

அங்கிள், எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா…?

ஓகே, ஒரு டாலர் தானே தரேன் எதற்குப் பணம்…? ஏன் அழுகிறாய்…? ஏதாவது தொலைத்து விட்டாயா…?

நோ அங்கிள் எங்க அம்மாவின் பிறந்தநாள் அங்கிள் இன்று…

நான் வருடா, வருடம் அம்மாவின் பர்த்டே க்கு, அம்மாவுக்கு பிடித்த ஒரு ரோஜா பூ வாங்கித் தருவேன் என்று அம்மாவின் பிறந்தநாள்… என்னிடம் பணம் இல்லை…. நீங்க ஒரு டாலர் கொடுத்தால் ஒரு ரோஜா பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன்.

அம்மா எனக்காக வெயிட் டிங்’…. ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா…?

பாவம் ஏழை பெண் அவள்… ஒரு டாலர் என்னமா…! 10 டாலர் தரேன் எடுத்துக்கோ…

வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும்…. என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு ‘சிட்’டாக பறந்தாள் அச் சிறுமி.

ஏதோ சாக்லேட் வாங்க தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ…? என நினைத்து அந்த பணக்காரர் மெதுவாக காரை அவள் செல்லும் இடம் நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம்.

ஒரு சின்ன பூக்கடையில் ஒரு டாலர் கொடுத்து ஒரு சிகப்பு ரோஜா பூ வாங்க கடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார்.

மிகுந்த சந்தோஷத்துடன், அச்சிறுமி பூ வை எடுத்தபடி ஓட…. அச் சிறுமி எங்கு போகிறாள்…? எந்த வீடு…? தாய் யார்…? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின் பின்னால் போக சொல்லுகிறார்.

சிறுமி, பல தெருக்களைக் கடந்து ஓடுகிறாள்…. அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறது கார் பல வளைவுகளை, தெருக்களை கடந்து, ஓடும் அவள்… போய் நிற்கும் இடம் சமாதி…. ஒரு கல்லறையின் அருகில் போய் நின்று, ரோஜா பூவை வைத்து…. “அம்மா, ‘ஹாப்பி பர்த்டே’ உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன் மா…. என கூறி அம்மாவின் கல்லறையில் வணங்கி…. முத்தமிட…. பார்த்துக்கொண்டிருந்த பணக்காரர்களில் கரகரவென நீர் சுரந்தது .

சார் , மீட்டிங்கிற்கு நேரமாச்சு… டிரைவர் அவசரப்படுத்த, கண்ணை துடைத்த படி அவசர அவசரமாக காரில் ஏறி, கடைக்கு போய், தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை, எடுத்துக்கொண்டு வண்டியை, வீட்டிற்கு போக சொன்னார்.

பெரிய கார், தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த… 92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி, யாரது…? என பார்க்க….

அம்மா என அழைத்தபடி பூங்கொத்தை கொடுத்து… பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா என காலில் விழுந்த, மகனை ஆரத் தழுவிய தாய்…

உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே…!

அம்மா, அன்பை எப்படி வெளிப் படுத்துவது, என ஒரு சிறுமியிடம் நான் கற்றேன்.

உயிரோடு இல்லாத தன் தாய்க்கு அச் சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினாள்…. நெகிழ்ந்து விட்டேன்… ஆனால் நான் ?… அச் சிறுமியின் மூலமாக அன்பை, எப்படி வெளிப் படுத்துவது என அறிந்தேன்.

உயிரோடு இருக்கும், என் தாய்க்கு நேரில் வந்து வாழ்த்து, பார்த்து, வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு ஏது?… மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத் தாய்.

தாய், தந்தை இருப்பவர்கள்…. அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, அன்பை, வாரி வழங்க தவறாதீர்கள்…. அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள்.

உங்களின், உங்கள் பண்பின், அன்பை நினைத்து, மகிழ்ந்து…. ஒரு சொட்டு கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால்….. உங்கள் வாழ்க்கை சிறக்கும்….

எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி, உயர்வு என்றும் சந்தோஷம்

சந்தோஷத்தில்… மகிழ்ச்சியில், எல்லா தாயின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தான் சுரக்கும்….

தாயை நேசியுங்கள்…

அம்மாவுக்கு ஒரு பட்டுப் புடவை

Shared .....படித்ததில் அழுதது 😭


அம்மாவுக்கு ஒரு பட்டுப் புடவை

“ஏண்டா, போய்தான் ஆகணுமா ? இங்கேயே பக்கத்துல மாயவரம், கும்பகோணத்துல வேலை ஒண்ணும் கிடைக்காதா?” என்று அம்மா அடுப்பை மெழுகிக்கொண்டே கேட்க, “இல்லம்மா, பெரிய பெரிய கம்பெனி எல்லாம் மெட்ராஸ்லதான் இருக்கு” என்றேன். 

“சரி...இங்க இருந்தபடியே அங்க வேலை தேடு. கிடைச்சவுடன போயிடலாம். அது வரைக்கும் அப்பாவுக்கு ஒத்தாசையா இருக்கலாமோனோ. அவருக்கும் இப்பல்லாம் தள்ளாம ஜாஸ்தியா ஆயிண்டிருக்கு.”

அப்பா குறுக்கிட்டு “அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அம்மா இப்படித் தான் ஏதாவது சொல்லிண்டிருப்பா. உன் ப்யூச்சர் முக்கியம். ஒண்ணு பண்ணலாம். நாளைலேந்து சுதேசமித்திரனை நிறுத்திட்டு ஹிண்டு வாங்கறேன். அதுல வர அட்வர்டைஸ்மெண்ட பார்த்து அப்ளை பண்ணு. கிடைச்சவுடனே கிளம்பிடு. என்ன ?” என்றார். 

“இல்லப்பா. அதெல்லாம் சரிப்பட்டு வராது. அங்க போய் உட்காந்து தேடினா தான் கிடைக்கும்.”

“அதுவும் சரிதான். நம்ம கிருஷ்ணமாச்சாரி கூட அங்க

தான் புரசவாக்கத்துல இருக்கான். அவனுக்கு லெட்டர் போடறேன். தூரத்து உறவு தான். போய் 

கொஞ்ச நாளைக்கு அவனோட இருக்கலாம். அப்புறமா வேற இடம் பாத்துக்கோ.”

“நீங்க வேற, அவன் தான் சின்ன வயசு, போறேன், போறே..ன்னா நீங்களும் டிக்கெட் வாங்கிக் கொடுத்து ரயில் ஏத்தி விட்டு விடுவேள் போல இருக்கே".

கண்ணா, இன்னும் ஒரே ஒரு வருஷம் இங்கே இருந்துட்டு போயேண்டா.” 

“இல்ல அம்மா. இங்க இந்த மாடு, நிலத்தையெல்லாம் என்னால் கட்டிண்டு அழ முடியாது. 

( சொன்ன உடனேயே பல்லைக் கடித்துக் கொண்டேன். சொல்லியிருக்கக் கூடாது ). 

அது இல்ல, நான் என்ன சொல்ல வரேன்..னா, இங்கேயே இருந்தா எனக்கு லைஃப்ல முன்னுக்கு வரவே முடியாதுமா".

"‘உங்களுக்கெல்லாம் இப்ப புரியாது. வேலை கிடைச்ச அடுத்த மாசமே திருவல்லிக்கேணில ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து உங்களையெல்லாம் கூட்டுண்டு போய் வைச்சுக்கப் போறேன். நீங்களும் தினமும் கார்த்தால பார்த்தஸாரதி கோவிலுக்கு போயிட்டு வரப் போறேள். அப்ப தெரியும்.”

அம்மாவுக்கு கண் லேசாக கலங்கியது போல் தெரிந்தது. 

"“நான் நம்ம ஊர் பெருமாளை விட்டு விட்டு எங்கேயும் வருவதாயில்ல.” என்றார் அப்பா. 

ஒரு நாள் அம்மா ட்ரங் பெட்டியை எதற்கோ திறந்த போது அதில் இரண்டு புடவைகளைப் பார்த்தேன். ஒன்று அரக்கு கலர், மற்றொன்று மஞ்சள், சிவப்பு, பச்சை வர்ணத்தில் சிறு சிறு கட்டங்கள் போட்ட புடவை. 

“ஏம்மா இதையெல்லாம் நீ கட்டிக்கிறதே இல்லை?”

“இதெல்லாம் பட்டுப் புடவைடா. 

நீ பொறக்கறதுக்கு முன்னாடி வாங்கினது. ஏதாவது கல்யாணம் கார்த்திகை..ன்னா தான் கட்டிக்க முடியும். ரொம்ப நாளா எடுக்காதனால் மடிப்புல எல்லாம் இத்து போயிடுத்து. இப்ப கட்டிக்க முடியாது, தூக்கி எறியவும் மனசு வரல்லை.”

“உன் கல்யாணத்துக்கு வாங்கினதா அம்மா ?”

“ஆமாண்டா, ஒண்ணு கூறப் புடவை”. இந்த வயதிலும் முகத்தில் லேசாக வெட்கம். 

“இப்போ ஏதாவது கல்யாணம்..ன்னா என்ன பண்ணுவ ?”

“ஏன், நீ வாங்கித் தர மாட்டயா ?”

“அம்மா, எனக்கு வேலை கிடைச்சவுடன முதல் மாச சம்பளத்துல உனக்கு ஒரு பட்டு புடவை வாங்கித்தரேன்.” 

முதல் மாத சம்பளம் வாங்கிய பிறகு தான் புரிந்தது, அது ரூம் வாடகைக்கும், மெஸ் கூப்பனுக்கும், பஸ் பாஸுக்குமே சரியாக இருக்கும் என்பது. ஒரே மாதத்தில் என் பைனான்ஷியல் ஸ்டேட்டஸ் நன்றாக புரிய, என் லைஃப் ஸ்டைலை உடனடியாக மாற்றிக் கொண்டேன். தனி ரூமை விட்டு மூன்று பேர் இருக்கும் ரூமுக்கு மாறினேன். பஸ்ஸுக்கு பதிலாக டிரெயின் ப்ளஸ் இரண்டு கிலோ மீட்டர் நடை. மதியம் லிமிடெட் 

மீல்ஸ். இரவு ஸ்பெஷல் மசாலா அல்லது ரவா தோசை, காப்பியை துறந்து ஒரு ப்ளேட் இட்லி. 

“என்ன சார், டயட்ல இருக்கீங்களா?” என்றார் சர்வர். 

இந்த ஒரு வருட சிக்கன நடவடிக்கையாலும், ஓவர் டைம் செய்து கிடைத்த எக்ஸ்ட்ரா வரும்படியாலும் ஓரளவுக்கு பணம் சேர்ந்தது. அடுத்த வாரம் வரப் போகும் தீபாவளிக்கு அம்மாவுக்கு கரும்பச்சை நிறத்தில் மாங்காய் ஜரிகை பார்டர் போட்ட அழகான பட்டுப் புடவை வாங்கிக் கொண்டேன். ரூமுக்கு வந்து அதை ஊருக்கு எடுத்துச் செல்லும் பெட்டியில் பத்திரப்படுத்தும் போது மனதுக்குள் ஒரு பெருமிதம். லேட்டானாலும் சொன்னபடி வாங்கி விட்டேன். அம்மாவிடம் இப்போது சொல்லப் போவதில்லை. தீபாவளியன்று சர்ப்ரைஸாக கொடுக்க வேண்டும். 

தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கும் போது காலை ஆறு மணிக்கு லாட்ஜ் ஆபீஸ் பையன் கதவைத் தட்டினான். “கண்ணன் சாருக்கு போன்.” இந்த டயத்துல  யார் போன் ? என்னவா இருக்கும். கொஞ்சம் திகிலோடு தான் போனை எடுத்தேன்.  ஊரிலிருந்து மாமா தான் லயனில் இருந்தார். “கண்ணா...ஒண்ணும் இல்ல...அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. நீ உடனே புறப்பட்டு வா.” 

இரவு பத்து பாத்திரங்களை அலம்பி விட்டு வந்து படுத்தவள் காலை எழுந்திருக்கவில்லையாம். 

“என்ன, இன்னும் வாசல் தெளிக்கும் சப்தம் கேட்க வில்லையை என்று அப்பா எழுந்து வந்து பார்த்த போது தான் தெரிந்ததாம். அப்போதெல்லாம் என்ன காரணம், ஹார்ட் அட்டாக்கா, ஸ்ட்ரோக்கா என்றெல்லாம் அலசுவது கிடையாது. உள்ளூர் கம்பௌண்டர் வந்து நாடி பார்த்து உதட்டைப் பிதுக்குவார். அவ்வளவு தான். 

“ஆயுசு முடிஞ்சுடுத்து. போயிட்டா.” கொடுத்து வைச்சவளாம். சுமங்கலியா போயிட்டாளாம். 

போயிட்டா..ன்னு சொன்னால் எனக்கு ஷாக் ஆகிவிடும் என்று அப்பா தான் மாமாவிடம் உடம்பு கொஞ்சம் சரியில்லை என்று  போனில் சொல்லச் சொல்லி இருந்தார். மாமா நேரில் பார்த்தபோது சொன்னது. 

“தீபாவளிக்கு கும்பகோணம் போய் வேஷ்டி, புடவை, உனக்கு சட்டை எல்லாம் வாங்கிண்டு வரணும்.ன்னு அப்பா சொன்ன போது ‘எனக்கு வேண்டாம், கண்ணன் பட்டுப்

புடவை வாங்கிண்டு வருவான்’.ன்னு சொன்னாடா கண்ணா”, மாமா அழுதார். 

“உன் கூட வந்து கொஞ்ச நாள் இருக்கணும்..ன்னு அடிக்கடி சொல்லிண்டே இருப்பாள்.

நான் தான் வேலைல செட்டில் ஆகி தனி வீட்டுக்குப் போகட்டும், நாமும் போகலாம்.ன்னு சொல்லுவேன்” அப்பாவுக்கு தொண்டை அடைத்தது.  

காரியங்கள் முடிந்து பதிமூன்றாம் நாள் மாலை ஆபீஸுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன். 

அப்பா வந்தார். “கண்ணா, நீ கேக்கறதுக்கு முன்னாடி நானே ஒண்ணு சொல்லிடறேன். இந்த 

வீடு, நிலம், மாடு, கன்று இதையெல்லாம் விட்டுட்டு  என்னால் உன் கூட மெட்ராஸ்ல வந்து இருக்க முடியாது. அப்படியே நான் வந்தாலும் இதையெல்லாம் பாத்துக்கறத்துக்கு இங்க மனுஷா கிடையாது.”

நான் பதில் கூறவில்லை. 

“என்ன எழுதிண்டு இருக்க? லீவை எக்ஸ்டெண்ட் பண்ணறயா?”

“இல்லப்பா. என்னோட ரெசிக்னேஷன் லெட்டரை எழுதிண்டிருக்கேன். நான் இனிமே இங்கதான் இருக்கப் போறேன். அம்மா சொன்னது போல உங்களுக்கு ஒத்தாஸையா இருப்பேன். உங்கள நன்னா பாத்துக்குவேன். . வயல், மாடு எல்லாத்தையும் நான் தான் பாத்துக்கப்போறேன்.”

அன்றே கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் புடவையை காண்பித்து தயங்கியபடி கேட்டேன், “அம்மாவுக்காக வாங்கினது. தாயாருக்கு சாத்தலாமில்லையா?”

“ஓ, பேஷா. தாயாருக்காக வாங்கினது தானே!” என்றார் சிலேடையாக. “இப்பவே சாத்தறேன்.”

மாங்காய் ஜரிகை பார்டர் போட்ட கரும்பச்சை பட்டுப் புடவையில் ‘அம்மா’ என்னைப் பார்த்து சிரித்தாள்.

Important numbers to remember

 HAPPY WORLD HEALTH DAY TO ALL...

Important numbers to remember : 

1. Blood pressure: 120 / 80

2. Pulse: 70 - 100

3. Temperature: 36.8 - 37

4. Respiration: 12-16

5. Hemoglobin: Males (13.50-18)

 Females ( 11.50 - 16 )

6. Cholesterol: 130 - 200

7. Potassium: 3.50 - 5

8. Sodium: 135 - 145

9. Triglycerides: 220

10. The amount of blood in the body: 

Pcv 30-40%

11. Sugar: for Children (70-130)

 Adults: 70 - 115

12. Iron: 8-15 mg

13. White blood cells: 4000 - 11000

14. Platelets: 150,000 - 400,000

15. Red blood cells: 4.50 - 6 million..

16. Calcium: 8.6 - 10.3 mg/dL

17. Vitamin D3: 20 - 50 ng/ml (nanograms per milliliter)

18. Vitamin B12: 200 - 900 pg/ml

  Tips for those who have reached Over:

   the 40 years

   the 50

   the 60


 First tip:

Always drink water even if you don't feel thirsty or need it... the biggest health problems and most of them are from the lack of water in the body. 

2 litres Minimum per day (24 hours).

Second tip:

Play sports even when you are at the top of your preoccupation...the body must be moved, even if only by walking...or swimming...or any kind of sports. 

🚶 Walking is good for a start... 

 Third Tip:

Reduce food...

Leave excessive food cravings... because it never brings good. 

 Don't deprive yourself, but reduce the quantities. Use more of protein,  reduce carbohydrates based foods.

 Fourth tip

As much as possible, do not use the car unless absolutely necessary... Try to walk on your feet for what you want ( grocery, visiting someone...) or any goal. Claim stairs, than use elevator,  escalator.

Fifth tip

 let go of ANGER...

 let go of Anger...

 let go of anger...

 Let go of Worry.... try to overlook small things...

 Do not involve yourself in situation of disturbance.. they all diminish health and take away the splendor of the soul.   Talk to people who are positive. Listen more.

Sixth tip

As it is said..leave your Money in the Sun.. and sit in the shade.. don't limit yourself and those around you... money was made to live by it, not to live for it.

Seventh tip

Don't make yourself feel sorry for anyone, nor on something you could not achieve, nor anything that you could not Own.

Ignore it, Forget it.

Eighth tip

Humility.. then humility.. for Money, Prestige, Power and Influence... they are all things that are corrupted by Arrogance and arrogance..

 Humility is what brings people Closer to you with Love. 

Ninth tip

If your hair turns Grey, this does not mean the End of Life.  It is proof that a Better life has Begun. 

 Be Optimistic, live with Remembrance, Travel, Enjoy yourself. Make Memories!

 World Health Day

கற்பூரவள்ளி பயன்கள்

கற்பூரவள்ளி பயன்கள்

கற்பூரவள்ளி பயன்கள்

சுவாச பிரச்சனைகள்

மழை மற்றும் குளிர்காலங்களில் வயது பேதமின்றி அனைவருக்கும் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்றவை ஏற்படுகின்றது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த இலையின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இல்லை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.

தோல்

நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நனவு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும். சில பூச்சிகள் கடிப்பதால் தோலில் இருக்கும் அப்பூச்சியின் நஞ்சையும், தோலில் ஏற்பட்ட்டிருக்கும் வீக்கத்தையும் போக்கும்

ஆஸ்டியோபொராஸிஸ் என்பது உடலில் இருக்கும் எலும்புகள் மற்றும் மூட்டு பகுதிகளை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எலும்புகள், மூட்டுகள் தேய்மானம் அடையவும் செய்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் எலும்புகள் , மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஒமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இந்த இலைகளை கொண்டு செய்யப்பட்ட தைலத்தை மூட்டுகள், எலும்பு பகுதிகளில் தேய்த்து வருவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

புற்று நோய்

உடலின் அனைத்து பகுதிகளிலும் புற்று நோய் ஏற்படுகிறது. புற்று நோய்களில் பல வகைகள் உண்டு. இதில் தற்போது உலகளவில் அதிகம் பேர் பாதிக்கப்படும் புற்று நோய்களாக மார்பக புற்று நோய் மற்றும் பிரஸ்ட்ரேட் புற்று நோயும் இருக்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் நிறைந்திருக்கும் ஒமேகா – 6 வேதிப்பொருட்கள் இந்த வகையான புற்று நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக புற்று நோய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படபடப்பு

ஒரு சிலர் அவ்வப்போது தேவையற்ற விடயங்களுக்கு எல்லாம் பயம் மற்றும் கவலை கொள்வார்கள். இதனால் அவர்களின் மனதில் ஒரு அமைதியின்மையும், படபடப்பு தன்மையும் ஏற்படும். கற்பூரவள்ளி செடிகளின் இலைகளின் வாசத்தை அடிக்கடி சுவாசிப்பவர்களுக்கு, அந்த இலைகளில் இருக்கும் ரசாயன பொருட்கள் நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்தி, மன அழுத்தம், படபடப்பு தன்மை போன்றவற்றை போக்குகிறது.

சிறுநீரகங்கள்

நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.

ஜுரம்

சீதோஷண நிலை மாறுபாடு காரணமாக பலருக்கும் அப்பருவ காலத்தில் ஜுரம் ஏற்படுவது இயற்கையானது தான். இந்த ஜுரத்தை போக்குவதற்கு உடனடியாக ஆங்கில வழி மருந்துகளை நாடுவதற்கு முன்பு சில கற்பூரவள்ளி கசக்கி அதன் துளிகளை உள்ளுக்கு அருந்துவதாலும், நெஞ்சு,கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு கசக்கி சூடு பறக்க தேய்த்து கொள்வதாலும், ஜுரம் சீக்கிரம் நீங்கும்.

ஆஸ்துமா

சுற்றுசூழல் மற்றும் காற்றில் ஏற்படும் மாசுகள் நிறைந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் நிலையில் வருபவர்களுக்கு ஆஸ்துமா னாய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் மூச்சிரைப்பு அதிகம் ஏற்படும். ஆஸ்துமா நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினமும் கற்பூரவள்ளி செடியின் இலைசாற்றை பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றோடு கலந்து சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.

புகைபிடித்தல்

புகை பிடித்தல் என்பதும் ஒரு வகை போதை பழக்கம் ஆகும். இந்த புகைப்பிடிப்பதால் நுரையீரலில் அதிகளவு நச்சுக்கள் சேர்ந்து சுவாசிக்கும் போது சிறிது சிரமத்தை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தில் நுரையீரல் புற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை நன்கு சுண்டக்காய்ச்சி, அதில் பாடியளவை நன்கு வடிகட்டி அருந்தி வந்தால் புகைப்பிடிப்பதால் நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுகள், மாசுகள் நீங்கும். நுரையீரல் சம்பந்தமான புற்று நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.

அஜீரணம்

சிலருக்கு சில வகையான உணவுகள் அதிகளவிலும், நேரங்கடந்து சாப்பிடும் போதும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது. நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னையும் உருவாகிறது. இப்படிபட்ட சமயங்களில் கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் உணர்வும் போகும்.



கற்பூரவள்ளி நன்மைகள்

தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

ஊட்டச்சத்துக்கள்

100 கிராம் கற்பூரவள்ளியில் 4.3 கிராம் கொழுப்பு, 25 மிகி சோடியம், 1,260 மிகி பொட்டாசியம், 69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ (34%), கால்சியம்(159%), வைட்டமின் சி (3%), இரும்புச்சத்து (204%), வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%) உள்ளது.

இப்போது கற்பூரவள்ளி இலைகளால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.

நன்மை #1

கற்பூரவள்ளி இலைகளை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை குறையும்.

நன்மை #2

கற்பூரவள்ளியில் பலரும் அதிகம் எடுக்கத் தவிர்க்கும் அத்தியாவசியமான வைட்டமின் கே ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. வைட்டமின் கே சத்தானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் தமனிகளில் கால்சியம் நுழைவதைத் தடுக்கும். இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் சரியான இரத்த உறைதலை ஊக்குவிக்கும்.

நன்மை #3

சமீபத்திய ஆய்வில் ஒரு கிராம் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் கற்பூரவள்ளி ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு, பல்வேறு சரும நோய்களையும் எதிர்க்கும்.

நன்மை #4

கற்பூரவள்ளி இலைகளில் டயட்டரி நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த இலைகளை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

நன்மை #5

கற்பூரவள்ளி இலைகளில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் என்னும் உட்பொருட்கள் செரிமான சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள தைமோல் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் செயல்களைச் செய்கின்றன.

நன்மை #6

காய்ச்சல், சளி மற்றும் அடிவயிற்று வலி போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், கற்பூரவள்ளி இலையை பச்சையாக வாயில் போட்டு மென்று திண்பது நல்லது. இதனால் அதில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் உடனடி நிவாரணம் அளிக்கும்.

நன்மை #7

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நற்பதமான கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.

நன்மை #8

நெஞ்சு சளியில் இருந்து கற்பூரவள்ளி எண்ணெய் விரைவில் நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு டம்ளர் ஜூஸ் அல்லது வெதுவெதுப்பான நீரில் 3 துளிகள் கற்பூரவள்ளி எண்ணெயை சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இப்படி 4-5 நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், நல்ல பலன் கிடைக்கும்.

நன்மை #9

கற்பூரவள்ளி இலையில் மக்னீசியம் மற்றும் கால்கியம் அதிகம் உள்ளது. இது எலும்பு மெட்டபாலிசத்திற்கு மிகவும் முக்கியமான பொருட்களாகும். எனவே உங்கள் எலும்பு ஆரோக்கியமாக பிரச்சனைகளின்றி இருக்க வேண்டுமானால், கற்பூரவள்ளி இலையை அன்றாடம் சாப்பிடுங்கள்.

நன்மை #10

கற்பூரவள்ளி அஜீரண கோளாறுகளைத் தடுக்கும். அதுவும் இது பித்த நீரின் உற்பத்தியைத் தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்யும். ஒருவேளை உங்களுக்கு லேசான அஜீரண கோளாறு என்றால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால், ஜூஸ் அல்லது வெதுவெதுப்பான நீரில் 2-3 துளிகள் கற்பூரவள்ளி எண்ணெயை சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் செரிமானம் விரைவில் மேம்படும்.