Thursday, April 4, 2019

'' பிரதிபலன் பாராமல் உதவி..''..

இன்றைய சிந்தனை..( 13.03.2019)..
...........................................

'' பிரதிபலன் பாராமல் உதவி..''..
...........................................

அமெரிக்காவின் நியூயார்க் நகரம்.      அது ஒரு மருத்துவ மனையின் பிரத்யேக வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். 

அவருக்கு வந்திருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகை புற்றுநோய். இன்னும் ஓரிரு நாள்கள்கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர்களே பேசிக் கொண்டிருந்தார்கள். 

அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்து கொள்ளும் நர்ஸ் வந்தார். 

`சார்... உங்களைப் பார்க்க உங்க மகன் வந்திருக்கார்.’’ 

கிழவர் கண்ணைத் திறந்து பார்த்தார். நீர்த் திரையிட்ட கண்களால், எதிரே மங்கலாக நர்ஸுக்கு அருகே ஓர் உருவம் இருந்ததைப் பார்த்தார். 

அவருக்கு எதிரே 20 வயதுக்குள் இருக்கும் ஓர் இளைஞன் நின்று கொண்டு இருந்தான். சீருடை அணிந்து இருந்தான். 

அவன் அணிந்திருந்த சீருடை 'யூத் மரைன்'  (Youth Marine) என்கிற, அமெரிக்க அரசு நடத்தும் இளைஞர்களுக்கான ஒரு திட்டத்துக்கானது

படுக்கையில் இருந்த முதியவர், நர்ஸிடம் தன் மகன் `யூத் மரைன்’ புரோக்ராமில் இருக்கிறான் என்று ஏற்கனவே சொல்லி இருந்தார். 

அதனால்தான், நர்ஸ் அவனைச் சரியாகக் கண்டுபிடித்து அவர் முன்னே நிறுத்தி இருந்தாள். 

இளைஞன் படுக்கைக்கு அருகே போய் நின்றான். அவர், தன் கைகளால் அவன் கைகளைப் பிடிக்கத் துழாவினார். அதைப் பார்த்ததும் இளைஞன் தன் கையை அவர் கைக்கு அருகே நீட்டினான். 

நடுங்கும் தன் கரங்களால் முதியவர் பாசத்தோடும் வாஞ்சையோடும் அவன் கைகளைப் பற்றிக் கொண்டார். ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து, முதியவரின் படுக்கைக்கு அருகே நர்ஸ் போட்டார்.

இளைஞன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். அன்று இரவு முழுக்க அவர், அவனுடையக் கைகளைப் பிடித்தபடியே இருந்தார். 

அவ்வப்போது அந்த நர்ஸ், அவர் உடல்நிலை எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக உள்ளே வருவார். இளைஞன், முதியவரின் கைகளைப் பற்றியபடி இருப்பான். 

ஒருமுறை பொறுக்க முடியாமல் நர்ஸ் சொன்னார்...

`தம்பி... நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் வெளியே போய் ரெஸ்ட் எடுங்களேன். எவ்வளவு நேரம்தான் இப்படியே உட்கார்ந்திருப்பீங்க?’’ 

வேண்டாம். பரவாயில்லை’’ என்று சொல்லிவிட்டான் அந்த இளைஞன். நர்ஸின் வற்புறுத்தலால் ஒரே ஒரு கப் காபி மட்டும் கேட்டு வாங்கிப் பருகினான். 

அடுத்த நாள் அதிகாலையில் நர்ஸ் வந்தபோது அந்த இளைஞன் சில நல்ல வார்த்தைகளை, முதியவரின் காதில் சொல்வதைக் கண்டாள். 

ஆனாலும் அவர் கண் திறக்கவில்லை. அவர் கைகள் மட்டும், இளைஞனின் கையை இறுகப் பற்றியிருந்தது. 

விடிந்தது. கிழவர் இறந்து போயிருந்தார். இளைஞன், அவருடைய தளர்ந்த கையைத் தன் கையிலிருந்து வெகு ஜாக்கிரதையாக விடுவித்து, மெள்ள படுக்கையில் வைத்தான். 

வெளியே வந்தான். நர்ஸிடம் செய்தியை சொன்னான். 
`ரொம்ப சாரி தம்பி... உங்க அப்பாவின் மரணத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்... என்றார் அந்த நர்ஸ். 

`நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவர் என் அப்பா இல்லை. இதுக்கு முன்னாடி நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை.’’ 

அவர் உங்க அப்பா இல்லைன்னா, நான் அவர் கிட்ட உங்களைக் கூட்டிட்டு வந்தப்பவே சொல்லி இருக்கலாமே.. ஏன் சொல்லலை?’

’ நீங்க அவர்கிட்ட என்னைக் கொண்டு வந்து நிறுத்தினப்பவே தப்பா என்னைக் கூட்டிட்டு வந்துட்டீங்கனு தெரிஞ்சுடுச்சு. 

நீங்க ரொம்ப அவசரத்துல இருந்தீங்க. அதோட அந்தப் பெரியவரைப் பார்த்ததும், அவர் தன் மகனுக்காக ஏங்குறார்ங்கிறதும், அவன் இப்போ இல்லைன்னும் புரிஞ்சுது. 

அதோட அவர் என் கையைப் பிடிச்சதும், அவரால நான்தான் அவரோட மகனா, இல்லையான்னு சொல்ல முடியாத அளவுக்கு நோய் வாய்ப்பட்டிருக்கார்னு புரிஞ்சுது. 

அவரோட அந்தக் கடைசி நிமிஷத்துல அவருக்கு எந்த அளவுக்கு அவரோட மகனின் அருகாமை தேவைப் படுதுனு புரிஞ்சுது. அதான் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.’’ 

நர்ஸ் பதில் பேச முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க, அந்த இளைஞன் மெள்ள நடந்து வெளியே போனான்.,

ஆம்.,நண்பர்களே..,

நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும், உதவி தேவைப் படுபவர்களுக்கும் உதவ வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது..

பிறருக்காக இரக்கப்படும் சுபாவம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, மனிதர்களுக்கு அமைய வேண்டும்.. 

பிறரின் கனவுகளை அடைய நாம் உதவினால், நம் இலக்கை நாம் எளிதாக அடைந்துவிட முடியும் 

நம்மால் பிறருக்கு புது வாழ்க்கை அமையலாம், செல்வம் சேரலாம், தைரியம் தரலாம்,புது நம்பிக்கை அளிக்கலாம். இவையெல்லாம் இரக்கத்தின் மூலமாகத்தான் சாத்தியமாகும்.

பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்வது சிலரின் குணமாகவே கூட இருக்கும்.,

அப்படிப்பட்ட, வணக்கத்துக்குரிய மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள்.🙏🏽🌹

திருச்சியில் பெரியவாளுடைய பரம பக்தர் ஒருவர்

திருச்சியில் பெரியவாளுடைய பரம பக்தர் ஒருவர். போட்டோ எடுப்பவர். அவருக்கு விஸ்தாரமான பூஜையோ, ஸ்லோகமா எதுவும் தெரியாது. பெரியவாளை மட்டுமே தெரியும். தினமும் காலையில் பெரியவா படத்துக்கு முன் தான் சமைத்ததை வைத்துவிட்டுத்தான் வேலைக்குச் செல்வார்.

பெரியவா அப்போது கர்நூலில் முகாம். திருச்சி பக்தருக்கு திடீரென்று பெரியவாளை கர்னூல் போயாவது தர்சனம் பண்ண வேண்டும் என்ற பேராவல் பிறந்தது.

உடனே ஏதோ ரயிலில் கிளம்பி விட்டார். போகும்முன், காய்ச்சி அப்போதுதான் இறக்கிய பாலை ஒரு டம்ப்ளரில் விட்டு, சுடச்சுட பெரியவா முன் வைத்துவிட்டு கிளம்பினார்.

கர்நூலில் ஏகப்பட்ட கூட்டம்! இவரால் உள்ளேயே செல்ல முடியவில்லை. ஒரு மணல் மேட்டில் ஏறி நின்றுகொண்டு பெரியவாளை எட்ட இருந்தே தர்சனம் பண்ணிவிட்டு,
சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிடலாம் என்ற எண்ணத்தோடு, கொஞ்சம் ஏமாற்றத்தோடு கிளம்பினார். கொஞ்ச தூரம் போனவரை யாரோ பின்னாலிருந்து அழைத்தார்கள். ஒரு பக்தர் பின்னால் ஓடி வந்தார்.....

"நீங்கதானே திருச்சிலேர்ந்து வந்திருக்கேள்?....."

"ஆமா......"

"பெரியவா ஒங்களை அழைச்சிண்டு வரச் சொன்னா....."

"என்னையா......?" சந்தேஹத்தோடு இழுத்தார்.

"நீங்க போட்டோக்ராபர்தானே?......"

"ஆமா..."

"அப்டீன்னா.....வாங்கோ! ஒங்களைத்தான் கூப்பிடறா பெரியவா"

இவருக்கோ கால் பூமியில் பாவவில்லை...அவ்வளவு சந்தோஷம்!

ஒரு இனம் புரியாத உணர்வு!

பெரியவா முன் தன்னை மறந்து கண்களில் கண்ணீர் வழிய நின்றுகொண்டிருந்தார். பெரியவா அவரை ஏற இறங்க ஒரு முறை பார்த்தார்.

"என்னைப் பாக்கணும்...ன்னு இவ்ளோ...தூரம் வந்திருக்கே! கடேசீல பாக்காமலேயே கெளம்பிப் போனா, என்னப்பா அர்த்தம்?..."

ஏறக்குறைய அழுதே விட்டார் பக்தர்! என்ன வாத்சல்யம்!

"இல்லே பெரியவா.....கும்பல் நெறைய இருந்தது...அதான் சாயங்காலம் கொஞ்சம் சீக்ரமா வந்துடலாம்..ன்னு..."

"சரி, சரி....சாப்ட்டியோ?.."

அவருடைய அம்மாவுக்கப்புறம், அம்மாக்களுக்கெல்லாம் அம்மாவான பெரியவா "சாப்பிட்டியா?"ன்னு கேட்டார்.

"சாப்ட்டேன்...பெரியவா"

"என்னோட வாயைப் பாத்தியோ?.." என்று கேட்டுவிட்டு, நாக்கை நீட்டிக் காட்டினார். சூடுபட்டது போல் சிவந்து புண்ணாகி இருந்தது.

"ஒதடெல்லாம் கூட புண்ணாயிடுத்து! ஏன்னு தெரியுமோ?..."

பக்தருக்கு எல்லாம் கனவா, நனவா என்றே புரியவில்லை. குதிகாலில் நின்று ஒரு சின்ன இடுக்கு வழியாகவாவது தர்சனம் பண்ண மாட்டோமா? என்று ஏங்குவோர் பல கோடி பேர் இருக்க, அவ்வாறு ஏங்கிய அற்பமான தன்னை, இவ்வளவு அருகாமையில்அழைத்து தர்சனமும் குடுத்து, யசோதைக்கு அப்புறம், தன்னுடைய வாயைத் திறந்து காட்டிய பரம பாக்யத்தை தனக்களித்த அந்த தயாபரனை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"நீ பாட்டுக்கு பாலை கொதிக்க கொதிக்க வெச்சுட்டு, அவசர அவசரமா கெளம்பி வந்துட்டே! அதான்.....வாயெல்லாம் வெந்து போய்டுத்து!.."

அவருக்கு அப்போதுதான் தான் பெரியவா படத்துக்கு முன் பாலை வைத்துவிட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது!

சாஷ்டாங்கமாக பெரியவா பாதங்களில் விழுந்து கதறினார்! "மஹாப்ரபு ! என்னை மன்னிச்சிடுங்கோ!..."

எத்தனை பக்தி அவருக்கு இருந்தால், கொதிக்கும் பாலை பெரியவா ருசி பார்த்திருப்பார்! படம்தானே, என்ற அலக்ஷியம் இல்லாமல், அவர் நம்பிக்கையோடு வைத்தது எத்தனை சத்யம் !

கருணாமூர்த்தி பக்தர்களின் அன்பை எவ்வளவு இயல்பாக ஏற்றுக் கொண்டார்! எவ்வளவு அழகாக பக்தரின் நைவேத்யத்தை தான் ஏற்றதை பக்தருக்குத் தெரிவித்திருக்கிறார்! யசோதம்மாவுக்குக் காட்டிய அதே திருவாயைத் தன் பக்தனுக்குக் காட்டி அருளியிருக்கிறார்....

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

ஔஷதமும் நீயே....

நோயைக் குணப்படுத்த பெரியவா சொன்ன  பரிகாரம் 

கரூர் பண்டிட் ராமசர்மா என்ற ஆயுர்வேத வைத்தியர். சக்திவிலாச வைத்தியசாலையை நிறுவி மருத்துவம் பார்த்தவர். கே.பி. சுந்தராம்பாள், தீரர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் அவரிடம் மருத்துவம் பார்த்தனர்

. ஓவியரான நாமக்கல் கவிஞர், தன் ஆரோக்கியத்தை மீட்டுத் தந்த அவருக்கு, அழகிய முருகன் வண்ணப்படத்தை வரைந்தளித்தார்.

ராமசர்மா, மகாபெரியவரின் பக்தர்.பெரியவர் கரூர் வந்தால் அவர் இல்லத்தில் தான் தங்குவார்.

ஒரு முறை பெரியவர் தனக்குக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், ராமசர்மாவைக் காஞ்சிபுரம் வருமாறும் சொல்லியனுப்பினார். ராமசர்மாவும் வந்தார்.

அவருடைய மருந்துப் பெட்டியை பார்த்து பெரியவர் முகத்தில் புன்முறுவல்!

'உன்னைத்தான் வரச் சொன்னேனே தவிர, மருந்துப் பெட்டியோடு வான்னு சொல்லலியே!' என்றார். ராமசர்மா திகைத்தார்.

'உங்களுக்கு காய்ச்சல் என்று சொன்னதால், மருந்துப் பெட்டியோடு வந்தேன்!' என்றார்.

'உடல் என்றிருந்தால் எப்போதாவது காய்ச்சல் வருவது சகஜம் தான். காய்ச்சலே உடலைக் குணப்படுத்தத் தானே வருகிறது! அது சரி... நோயைக் குணப்படுத்த மருந்து எதற்கு! அதற்கு வேறொரு வித்தியாசமான மருந்து இருக்கிறது! அதைப் பிரயோகம் பண்ணத்தான் உன்னை வரச் சொன்னேன்!' 

ராமசர்மாவுக்குப் புரியவில்லை. அமைதி காத்தார். பெரியவர் தொடர்ந்தார்.

''நீ குளிச்சுட்டுத்தான் வந்திருப்பாய். இரு... நான் இன்னொரு முறை குளிச்சுட்டு வந்துடறேன்!''

காய்ச்சல் இருக்கும்போது குளிக்கிறேன் என்கிறாரே! ராமசர்மாவின் மனம் பதறியது. ஆனால் மறுத்து எதுவும் சொல்லத் தோன்றவில்லை. பெரியவர் வரும் வரை காத்திருந்தார்.

குளித்துவிட்டு வந்த பெரியவர் தன் உடல் உஷ்ணத்தை அளந்து பார்க்கச் சொன்னார். தெர்மாமீட்டர் மூலம் பார்த்ததில் காய்ச்சல் இருப்பது உறுதியானது.

''நல்லது... நாம் இருவரும் இப்போது விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபிக்கப் போகிறோம்!' என்றார் பெரியவர். 

இருவரும் இணைந்து ஜெபித்தார்கள். ஜெபம் நிறைவடைந்ததும் பெரியவர் தன் உடல் வெப்பத்தை மறுபடி சோதிக்குமாறு கூறினார்.

என்ன ஆச்சரியம்! காய்ச்சல் முற்றிலும் குணமாகி இருந்தது! 

உடனே பெரியவர் சர்மாவிடம், ''விஷ்ணு சகஸ்ரநாம ஜெபம் செல்வத்தை மட்டுமல்ல, ஆரோக்கியம் உள்ளிட்ட எத்தனையோ பயன்களைத் தரக் கூடியதுன்னு நான் ஓயாம சொல்றேன். ஜனங்களும் கேட்கறா. அவாளுக்கு அது உண்மைதான்னு நான் நிரூபிச்சுக் காட்ட வேண்டாமோ? அதுக்குத்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திண்டேன்.

கடவுள் நாமம் பிறவிப் பிணியைத் தீர்க்கும்னு தமிழ் சொல்றது. பிறவிப் பிணியையே நீக்கும்னா, பிறவியிலே வர்ற பிணியை நீக்காதா? நோயாளிகளுக்கு நீ வழக்கம்போல மருந்து கொடு. வியாதி வந்தா மருந்து சாப்பிட வேண்டியதுதான். ஆனால், கூடவே விஷ்ணு சகஸ்ரநாமம்கிற மருந்தையும் சேத்துப் பயன்படுத்தலாமே? உன்னைத் தேடி வர்றவாள் கிட்ட, நீ இதையும் உன் பிரிஸ்க்ரிப்ஷன்ல சேத்துக்கலாம் இல்லையா? அதுக்கு ஒனக்கு நம்பிக்கை வரத்தான், உன்னை வரச்சொன்னேன். காந்தி இயற்கை வைத்தியத்தைக் கொண்டாடினாருன்னு உனக்கு தெரியும். 

இயற்கை வைத்தியத்துல பிரார்த்தனைக்கு தான் முதலிடம்,'' என சொல்லி விட்டு குழந்தை போல் சிரித்தார்

ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா 

Miracle / poison—ONION

Miracle / poison—ONION💧

*In 1919, flu killed 40 million people. * A doctor visited the many farmers who had the attack to see if he could help them combat the flu. 
    Many of the farmers & their family had contracted the flu and many died.
     However, the doctor came upon one farmer whose family was healthy and nobody in the house contracted the flu.
    The doctor asked the farmer what he was doing that was different from the others. 
     The farmer's wife replied that she put an unpeeled onion in a dish and placed them in all the rooms in their house.
     The doctor thought that could have been the cure so he asked for one of those onions.
    As he placed it under the microscope, he found the flu virus in the onion. The onions obviously absorbed all the bacteria and thereby kept the family healthy.
    Now, I sent this story to a friend in Oregon who regularly contributes material to me on health issues. She replied with this most interesting experience about onions:
     She said ' Thanks for the reminder. I don't know about the farmer's story but, I do know that I myself got pneumonia and became very ill. From my previous knowledge about onions, I  cut both ends off an onion put it into an empty jar, and place the jar next to myself over night. 
     By the morning, I began to feel better while the onion became black.'
    Lots of times when we have stomach problems we don't know what to blame. Maybe the onions that we ate earlier are to blame.

Onions ABSORB BACTERIA and that is the reason why they are also good at preventing us from getting colds & flu in left peeled in our room !!!
   
And for that very reason we should NOT eat an onion that has been sitting for a time after it has *been cut open.

Left over onions are poisonous

When food poisoning is reported, the first thing the officials look for is whether the 'victim'  ate ONIONS and where those onions came from. Most probably the ONIONS, are the cause.

Onions are huge magnets for bacteria, especially uncooked ones.

Never ever keep a portion of sliced onion over a period of time and thereafter use it to prepare food. It's not even safe if you put it in a zip-lock bag and placed it in your refrigerator. It is still poisonous 

Also, do not give onions to dogs. Their stomachs cannot metabolize onions.

Please remember it is dangerous to cut an onion and try to save it to cook with the next day, it becomes highly poisonous for even a single night - as it creates toxic bacteria which causes adverse stomach infections and food poisoning.

I am forwarding this from another person—
Share this to as many  people as possible  to let them know the poisonous effect of peeled onion left over —which can cause us sick .

கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது

ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ,கையில் தூக்கு வாளியுடன். ஒரு 10 வயது  சின்னக் குழந்தை, "அண்ணே...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...! காசு நாளைக்கு தருவாங்களாம்" என்றது...

ஹோட்டல் நடத்துபவர், "ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா.... இப்போ வாங்கிட்டுப்போ... தூக்கு வாளியை தா, சாம்பார் ஊத்தித் தாரேன்' என்றார் ...

இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.

குழந்தை, "சரி... அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே.... " என்றபடியே குழந்தை கிளம்பிவிட்டாள்.

அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டே விட்டேன்... "நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....?"

ஹோட்டல் முதலாளி, "அட சாப்பாடு தானே சார்.... நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்... அதெல்லாம் குடுத்துடுவாங்க..என்ன கொஞ்சம் லேட் ஆகும்.... எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது?  🤔குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார்,  அந்த அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன், அப்படிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.... நான் உழைச்சி தான்  சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்....ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்".

 நான் உணவு தரவில்லை என்றால் , அந்த குழந்தை , தன் தாய்க்காகத் திருடப் போவான். அல்லது அந்தத் தாய், தன் குழந்தையின் பசிக்காக, தவறான பாதைக்கு செல்வாள் ... ஆனால்,  என்னால் _ நான் நஷ்டபட்டாலும்,   இப்பொழுது நம்  சமுகத்தில் நடக்க இருந்த, இரண்டு தவறுகளை தடுக்க முடிந்திருக்கிறது" என்றார்...

கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?
🙏🏼 அன்பே கடவுள் 🙏 

நாமும் இந்த வினாடியிலிருந்து, பிறருக்கு உதவி செய்வோம்.

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-
சுண்ணாம்பு போடுவது மட்டுமே!

அதிர வைக்கும்
பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்!

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக
இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு
உருவாக்க பட்டது தான். 

முடி வெட்டுவதில்
இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி
உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள்
மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம்
அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில்
கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும்
வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான
காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்
வருகிறது. என்று சொல்கிறார்கள் இது
முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க
கூடியது. 

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது. 

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும். 

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று
தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம்,
கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள
கிருமிகளை மட்டுபடுத்துகிறது. 
ஜீரண சக்தியை அதிகரிக்கவும்
செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு
முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. 

தாம்பூலம்
போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக
மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு
சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக
மாறி விடுகிறது. 

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது. 

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு
ஆகும். 

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின்
காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி
விடுகிறது. 

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு
முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு
சீக்கிரம் ஏற்படாது 

இதற்கு காரணம்
அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக
கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க
பட்டிருக்கிறது. 

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது
பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து
அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க
வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

இதை மீறும்
போது தான் சிக்கல் வருகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....

Note:ஒருத்தருக்குமட்டும் பகிராமல் பலரும் பயன் பெரும் வண்ணம் பகிருங்கள்.

பெரியவா சரணம்

பெரியவா சரணம்

ஜே. டபிள்யூ எல்டர் என்ற ஐரோப்பியர் பெரியவா தரிசனத்திற்காக வந்தார்.

பெரியவா தரிசனமும் கிடைத்தது."பெரியவா சிரிக்கும் போது, குழந்தை கிறிஸ்து சிரிப்பது போலிருக்கிறது! மானுடத்தை விஞ்சிய ஒரு தெய்வீக ஈர்ப்பு இருக்கிறது......." என எண்ணிக் கொண்டார்.

பிறகு, பெரியவாவிடம் ஒரு கேள்வி கேட்டார், "சுவாமிஜி! ஹிந்து சமயக் கோட்பாடுகளில், எந்த இரண்டு தத்துவங்களை, இன்றைய காலகட்டத்தில் அழுத்தமாக விளக்கிக் கூறி, மக்கள் சமுதாயம் பயன் பெறச் செய்ய வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறீர்கள்?"

பெரியவா நீண்ட நேரம் மௌனமாக இருந்தார். திடீரென்று பதில் வெளிப்பட்டது.

"பாரதம் சுதந்திரமடைவதற்கு முன், சுமாராகப் பத்து சதவீத மக்கள் தான் நேர்மை குறைந்தவர்களாக இருந்தார்கள். எல்லாத் தொழிலாளர்களின் பேச்சிலும் சத்தியமும்,நேர்மையும் இருந்தன.

"கடன் கொடுத்தல், பண்டமாற்று முதலியன கூட, சொற்களின் அடிப்படையிலேயே நடந்தன. பேச்சுத் தவறினால், பாவம் வந்து சேரும். நமது சந்ததியினர் துன்பப் படுவார்கள் என்ற பயம் இருந்தது. "

" இப்போது, அதெல்லாம் பேச்சு, வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை என்று சட்டம் போட்டார்கள். அந்த உரிமையைக் கொடுக்கும் முன், அதை அவன் எவ்வாறு உபயோகிப்பான் என்று எண்ணிப் பார்க்க வில்லை. கல்வி அறிவில்லாத, ஏழையான ஒருவனுக்கு இவ்வளவு முக்கியமான உரிமை கிடைத்தால் என்ன செய்வான்?....... என்ன செய்வானோ அதுவே நடந்தது! வாக்குரிமை விலை பேசப்பட்டது. இது, முதலாவது வீழ்ச்சி. . "

மேலும் தொடர்ந்தார் ,

அடுத்து, புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட பொது நல விரோதச் செயல்கள் . போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டால்..... அப்புறம், தண்ணீர் ஆதிசேஷன் தலைவரை போய் விடுகிறது.வருமானம் அதிகரித்து விட்டதால், ஆடம்பரமான வாழ்க்கையில் மனம் ஈடுபடுகிறது.'எது வாழ்க்கைக்குத் தேவை? எது சுகபோகம்? " என்ற உணர்வு மரத்துப் போய் எதைக் கண்டாலும் அனுபவிக்க வேண்டும் என்ற அசுரத் தன்மை வந்து விடுகிறது.

" எளிமையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், அந்த வாழ்க்கை எல்லோருக்கும் நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால்,சுக போகங்களை எல்லா ஜனங்களுக்கும் கிடைக்கச் செய்ய முடியுமா? அவ்விதம் கிடைக்கப் பெறாதவர்கள், நேர்மையைக் கைவிடுகிறார்கள்! "

" வாக்குத் தவறாத நேர்மையும், எளிமையுமே இரண்டு முக்கியத் தேவைகள்........ .. "

அரைமணி நேரம் வெள்ளம் போல கொட்டித் தீர்த்து விட்டார் பெரியவா.

ஐரோப்பியர்,, ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திக்குமுக்காடினார்.

ஐரோப்பியரின் கேள்வி, இன்றைக்கும் பொருந்தக் கூடியது தான்...

பெரியவா பதில், என்றைக்கும் பொருத்தமானது தான்!.....