Thursday, January 31, 2019

எழுது கோல்

எழுது கோல்.....

கவிதை எழுதிட
பாறையில் உளி
பறவை இறகு
எழுத்தாணி
தொட்டெழுதும்
கட்டைப்பேனா
நீறூற்றுப்பேனா
பால்பாயிண்ட்..
ஜெல் பேனா என
பல வடிவம்
எடுத்து இன்று
சமர்த்துப்பேசியின்
விசைப்பலகையின் முன்
உருவிழந்த
நண்பனே....
பெருமை உனக்கன்று....
நீ இருப்பது
வள்ளுவன் கையிலா
கள்ளுக்கடை
கணக்கனின்
கையிலா
என்பதைப்பொறுத்தே
உனது பெருமை
           வேங்கடன்

கேரளப்பெண்

கேரளம்
கடவுளர்களின்
சொந்த நாடு
என
கேள்விப்பட்டுள்ளேன்
உன் போன்ற
தேவதைகளின்
நாடெனவும்
தெரிந்து கொண்டேன்

இயற்கையின்
வனப்பிடையே
என் காதல் குளிருக்கு
கதகதப்பூட்டும்
அழகின் கணப்பு.

நீல வானத்தில்
வெண்மேகங்கள்
மிதப்பதுண்டு
உன்
வெண் பட்டு
புடைவை
வானத்தில்
நீலத்துண்டு
மேகமாய்
ரவிக்கை...

உன் கைத்துணியாய்
என் மனம்
பிழியப்படுகையில்
உன்
வெண்டை விரல்
உரசும்
கெண்டைமீன்களாய்
நழுவும் என்
நினைவு ...
            வேங்கடன்

தோழி

முன்னாள் தோழிகள்..


போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்தப் பிறந்த நாளில்
இருக்கேனா.., செத்தேனா?எனத் தெரியவில்லை ,

அடுத்த
கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி
தனக்கே வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளின் புதிய எண்களும்
என்னிடம் இல்லை

மூன்று வேளைகளும்
சாப்பிட்டாயா? என குறுந்தகவலில் குடைச்சல் தந்ததோழியின் அலைபேசிக்கு
அழைக்கிறபோதெல்லாம் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகச்சொல்லப்படுகிறது.

என் மகளைத்
தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்னதோழி
ஒருத்தி -
அவள் திருமணத்துக்கே
என்னை
அழைக்கவில்லை.

திருமணத்துக்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த தருணமொன்றில் தோழி ஒருத்தியிடம்
கோபித்துக்கொண்டேன்அவளோ
அவர் சரி,
அத்தைமாமாவிடம்
சிநேகிதன் ஒருவன் இருந்தானெனஎப்படிச் சொல்வது?'என்றாள்.

இருந்தானில் இறந்துபோயிருந்தது,
எங்கள் நட்பு!

      - யாரோ

கவிதை

தமை
கருப்பென
அடிமை செய்த
வெள்ளையர் பூமியை
நுரை நீர்க்குமிழியாய்
அலைக்கழித்து
உடைத்து மகிழும்
கருப்பின சிறுவன்

ஒரு 47

ஒரு 47
நாட்டுக்கு
விடுதலை தந்தது
AK 47
பலர் உயிருக்கு
விடுதலை தந்தது
கொலைக்கருவிகளுக்கு
காந்திகளுக்கும்
வீரப்பன்களுக்கும்
வித்யாசம் தெரியாது!
ஈயக்குண்டுகளால்
உயிர் சலிக்கும்
சல்லடையே!
மாயக்கண்ணனைப்போல்
போர்த்தொழில் பழகி
எதிரிகளை கெலிக்கும்
இயந்திரனே
குண்டுகள் என்னும்
எழுது கோலால்
குருதி மை தோய்த்து
மரணக்கவிதை எழுதும்
கவிஞனே!
அன்றைய
சர்வாதிகாரிகளிடம்
நீ இருந்திருந்தால்
வதை முகாம்களுக்கு
வேலையின்றி
கதை முடித்திருப்பாய்.
          வேங்கடன்

Thursday, January 24, 2019

ஸ்வேதாவும் ஒரு கப் காபியும்...

ஸ்வேதாவும் ஒரு கப் காபியும்...

பட்டுக்கோட்டை பிரபாகர்


மழையின் தடயம் சாலையில்இருந்தது. ஈரம் காற்றில் இருந்தது. நடப்பது சுகமாக இருந்தாலும் ஷூவை சகதிக் குளியலிலிருந்து காப்பாற்ற சாகசம்செய்ய வேண்டியிருந்தது. ஒருசைக்கிளை நகர்த்தி வைத்து, மாட்டை செல்லமாகத் தட்டி, கோலத்தை மிதிக்காமல் தாண்டி,குப்பைக் குவியலுக்குப் பதுங்கிப் பதுங்கி,அக்கா வீட்டை நெருங்கும் வரை ஒலித்த போனை எடுத்துப்பார்க்கத் தோதுப்படவில்லை .முதுகிலிருந்து பேக்கைக் கழற்றி திண்ணையில் வைத்துவிட்டு, போனை எடுத்துப்பார்த்தால்... ஸ்வேதா.

அழைத்தேன்.

“அக்கா என்ன சொன்னாங்க ராஜ்?”"

இரு... இரு... ஜஸ்ட் இப்பதான் அக்காவீட்டு வாசல்ல வந்து நிக்கிறேன். பஸ், மூணுமணி நேரம் லேட். அப்புறமா கூப்புடறேன்!”பேச்சுக் குரல் கேட்டு அழைப்பு மணிக்குஅவசியம் இல்லாமல் கதவைத் திறந்தஅக்கா, “வாடா...'' என்று பேக்கை எடுத்துக்கொண்டாள்.சாய்வு நாற்காலியில் அமர்ந்து டி.வி,பார்த்தபடி, விளம்பர இடைவேளையில் பேப்பர் படித்தபடி அக்காவின் மாமனார்நிமிர்ந்து, "என்னப்பா ராஜேந்திரா, வழியில்மழையா? பஸ் பிரேக்டவுனாமே...''என்றார்.இரண்டில் எந்தக் கேள்விக்கு முதலில்பதில் சொல்வது?

ஆமா மாமா...' என்றேன் ஷூ, சாக்ஸைக் கழற்றியபடி.

"எல்லா ஊர்லயும் மழை பெஞ்சாலும்உங்க சென்னையில் மட்டும் மழையேபெய்ய மாட்டேங்குதே, ஏன்?"

"ரமணன் சாரைத்தான் கேட்கணும்."

“பாவம் செய்றவங்க நிறையப் பேர்சென்னைலதான் இருக்காங்க” ஜோக்காகநினைத்துச் சொல்லி, அவரே சிரித்துக்கொண்டார்.
'எல்லா ஊர்ல இருந்தும் வந்தவங்கதான்மாமா இப்ப சென்னையில் அதிகமாஇருக்காங்க' என்று சொல்வதைவிட அசட்டுத்தனமாகச் சிரிப்பது தான், அக்காவுக்குநல்லது என்பதால் சிரித்தேன்.

"அப்புறம் குளிக்கலாம்:பசியா இருப்பே. பல்லு மட்டும்தேச்சிட்டு வந்து டிபன் சாப்பிடு..." என்ற அக்காவுக்காகத்தான் வந்து போகிறேன்.

"மாமா ஆபீஸ் போய்ட்டாராக்கா?"ஆபிஸ் விஷயமா திருவாரூர் போயிருக்கார். வர,ரெண்டு நாளாகும். உன்னைப் பாத்துட்டு தான் ஸ்கூலுக்குப் போவோம்னு ரெண்டு பசங்களும் அடம் பிடிச்சாங்க. சமாதானப்படுத்தி அனுப்பி வெச்சேன். இருப்பீயல்ல ? 

"இல்லக்கா. நைட்டு பஸ்ஸுக்கு டிக்கெட் வாங்கிருக்கேன். திட்டாதக்கா, ஆபீஸ்ல ரொம்ப பிரஷர்...முறைக்காதே!"

"பிரஷர், ஆபீஸ்ல இல்ல. உன் மைண்ட்ல தான்இருக்கு."ஆனாலும் நான் குளித்து விட்டே தோசைசாப்பிட்டேன். கண் கலங்கினேன். '"வீட்டு தோசை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சிக்கா. இந்த டேஸ்ட் அப்படியே அம்மா செய்றமாதிரியே..." குரல் அடைத்து மிச்ச வார்த்தைகளை
விழுங்கிவிட... உணர்வுகள் அக்காவையும்தொற்றி, என் தலையைத் தடவி, "சாப்பிடுறா. "என்றாள், "இதுக்குத்தானே கல்யாணம் பண்ணிக்கச் சொல்றோம்?"

“ அப்ப ரெண்டு பேருக்கும் ஹோட்டல்லஆர்டர் பண்ணணும். இல்ல இன்ஸ்டன்ட் மாவுவாங்கி ஊத்திக்கணும். ஃப்ரெண்ட்ஸ் வீட்லல்லாம் இப்படித்தான் நடக்குது."

“உங்க சாஃப்ட்வேர் பசங்களோட லைஃப்ஸ்டைலே புரியலைடா. நல்லா சம்பாதிக்கிறீங்க.நல்லா செலவு பண்றீங்க. சந்தோஷமா இருக்கீங்களானுதான் தெரியல. இல்ல... சந்தோஷம்னா என்னன்னு உங்களுக்குத் தெரியல."
"அக்கா... அக்கா... எல்லா டாக் ஷோஸ்லயும்எங்களை ரவுண்டு கட்டி அடிக்கிறது பத்தாதா? நீயுமா? அநாதை இல்லத்துக்குப் போய் சர்வீஸ் பண்றோம். ப்ளட் டொனேட் பண்றோம். கிராமத்தைத் தத்து எடுக்குறோம். ஜெனரலைஸ் செய்யாதேக்கா... எல்லாரும் அப்படி இல்ல"என்று கை கழுவ எழுந்தேன்.துவைத்த பனியன், ஜட்டியை மொட்டைமாடியில் காயப்போட்டுவிட்டு எல்லாப் பக்கங்களிலும் தெரிந்த கோயில் கோபுரங்களைப்பார்த்தபடி நின்றேன். காபியை ஆற்றியபடிஅக்கா வந்தாள்.

''ஏன்க்கா .. நான் கீழ வர மாட்டேனா?"
''பரவாயில்லடா... இந்தா. இளைச்சிட்டேடா... கொஞ்சம் கறுத்தும் போய்ட்டே "

 ""சோழிங்கநல்லூர்ல ஆபீஸ், நங்கநல்லூர்லரூம், தினம் பைக்ல போய்ட்டு வர்றேன். ஃபேஸ்க்ரீம், எல்லாம் விளம்பரத்துல மட்டும்தான்.வேலை செய்யுது.""யார்றா ஸ்வேதா?''
“அக்கா!'' என்றேன் ஆச்சர்யமாக.

"உன் செல்போன் அடிச்சுது. எடுக்கறதுக்குள்ளே நின்னுடுச்சு. ஸ்வேதா காலிங்னு பார்த்ததால கேட்டேன்."

"அக்கா... ஆக்சுவலா அவளைப் பத்திப்பேசத்தான் உன்கிட்டே நான் வந்தேன்.”

"லவ்வா? நானும் அவரும் வந்து அவங்கவீட்ல பேசணுமா? எப்ப வரணும்னு சொல்லு.”

"அய்யோ! ரொம்ப ஷார்ப்க்கா நீ. முதல்ல நீ அவளைப் பாத்துப் பேசணும். நீ ஓ கே.
சொன்னாதான் அடுத்த ஸ்டெப்."

“சும்மா கிரீடம் வைக்காதே, என்னைக்கேட்டுதான் லவ்வை சொன்னியா?"

 |"அதுக்கா... வந்து... எனக்கு உன் ஒப்பீனியன்ரொம்ப முக்கியம்."

"காபி குடி. இங்க வேணாம். கோயிலுக்குப்போய்ப் பேசலாம்" என்றாள் அக்கா.சாரங்கபாணி கோயிலில் பகல் நேரம்என்பதால் கூட்டம் அதிகம் இல்லை. சுவாமிதரிசனம் முடித்து, பிராகாரத்தில் செளகர்யமாக கருங்கல் படிக்கட்டு ஒன்றில் அமர்ந்துகொண்டோம்.
"குருக்கள் சிரிச்சாரே இந்தக் கோயிலுக்குஅடிக்கடி வருவியாக்கா?"
“மனசு கஷ்டமா இருக்கிறப்பல்லாம் வருவேன்."

"உனக்கு என்னக்கா பிரச்னை?""அது இருக்கு ஆயிரம். வீட்டை புரமோட்டருக்கு வித்து, ஃபிளாட்ஸ் கட்டி நமக்கு ஒருஃபிளாட் எடுத்துக்கலாம். மிச்சப் பணத்தை பேங்க்ல போடலாம்னு சொல்றார் அவர். 'என் காலத்துக்கு அப்புறம் எது வேணாலும் பண்ணிக்கோ , அது வரைக்கும் விக்கக் கூடாதுங்கறாரு மாமனாரு. கால்குலேஷனுக்கும் சென்ட்டிமென்ட்டுக்கும் நடுவுல நான் மாட்டிக்கிட்டுத்தவிக்கிறேன்."

"மாமா சொல்றதுதான் ரைட்டு. ரெண்டுபொண்ணுங்க வெச்சிருக்கே. மாமா சம்பளம்மட்டும் எப்படிப் போதும்? பிராக்டிக்கலா யோசிக்க வேணாமா? என்ன சென்ட்டிமென்ட் வேண்டிக் கிடக்கு?

"இந்தியா - பாகிஸ்தான் உறவு மாதிரி எப்பவும் வீடு டென்ஷன்லயே இருக்கு. இப்போதைக்கு முடிவுக்கு வராது. அதை விடு. ஸ்வேதா பத்திச்சொல்லு. கூட வேலை பாக்கறவளா?"

"ஆமாக்கா.. பாரு."மொபைலில் இருந்த ஸ்வேதாவின் புகைப்படங்களைக் காட்டினேன். ஒரு போட்டோவைஅவசரமாக நகர்த்தினேன்.

"பாத்துட்டேன். ஒண்ணா ஸ்விம் பண்றஅளவுக்குப் போயாச்சா?''

“இல்லக்கா. அது, ஒரு பிக்னிக் போனப்போ ..

"அழகா இருக்காடா. எந்த ஊரு?

"பெங்களூர் பொண்ணு. அப்பா, அம்மாரெண்டு பேரும் டாக்டர்ஸ். ஒரே பொண்ணு.வொர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கா..கார் இருக்கு. ஒரு ஃபிளாட் வாங்கி வாடகைக்குவிட்டிருக்கா. மேரேஜ் ஆச்சுன்னா, அங்க மூவ் பண்ணலாம்னு சொல்றா. வெரி இன்டலிஜென்ட் .நல்லாப் பழகுவா. ஃபேஸ் புக்ல நிறையஃப்ரெண்ட்ஸ். பிளாக்ல கட்டுரைகள் எழுதுறா.அவளோட வெளிப்படையாப் பேசுற குணம்தான்,என்னை முதல்ல அட்ராக்ட் பண்ணிச்சிக்கா.”

"அவங்க அப்பா அம்மாவுக்குத் தெரியுமா?அவங்க என்ன சொல்றாங்க?"

“அது... வந்து... அவ இப்போ பேரன்ட்ஸோடபேசறது இல்லைக்கா. அவங்க பெர்மிஷன் அவசியம் இல்லை. மேரேஜுக்குக்கூட அவங்கவர மாட்டாங்க."

“அடப்பாவி! பெத்தவங்களோட அப்படிஎன்னடா சண்டை ?"

"டிஃபரன்ஸ் ஆஃப் ஒப்பீனியன். அக்கா ...ஸ்வேதா ஒரு டைவர்ஸி."

"என்னடா சொல்றே?"

"பேரன்ட்ஸ் பாத்து செஞ்சுவெச்ச கல்யாணம்.திலீபுக்கும் ஸ்வேதாவுக்கும் செட் ஆகலை.அவங்களுக்குள்ள பேசி முடிவெடுத்து... லீகலா பிரிஞ்சிட்டாங்க. டைவர்ஸ்ல, இவ பேரன்ட்ஸுக்கு சம்மதம் இல்லை . இது.. அவ சுதந்திரத்துக்குக் கொடுத்த விலை."

அக்கா, முழங்கால்களைக் கட்டிக்கொண்டுஎன்னை ஆழமாகப் பார்த்தாள்.
"நீ எப்படி அவளை லவ் பண்ணே ?"

"ஒரே ஆபீஸ், ஒரே பேட்ச். அவள் குணம்முதல்ல பிடிச்சது. அவளோட அழகும்தான்.அவள் ஒருநாள் லீவு போட்டா, மனசு கெடந்து தவிச்சது. அவள் புன்னகைக்கு எங்கிட்டநிறைய ரியாக்ஷன், கை குலுக்கறப்ப அலுவல்தொடர்பு மீறி வேற ஒரு நெருக்கம் ஃபீல் பண்ணேன். ஒரு காபிக்குக் கூப்புட்டேன். வந்தா.பட்டுனு சொல்லிட்டேன். ரெண்டு நாள்லயோசிச்சு சொல்றேனு சொன்னா. ரெண்டு நாள்கழிச்சு அதே காபி ஷாப். அப்பதான், 'தான்ஒரு டைவர்ஸினு என்கிட்டே சொன்னா. எனக்கு ஷாக்தான். ஆனா, அவள் மேற்கொண்டு
சொன்ன தகவலெல்லாம் அந்த அதிர்ச்சியைஎதுவும் இல்லாமப் பண்ணிருச்சு. அன்னைக்குரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டோம்னா..."
------
ஐந்து நிமிடங்களுக்கு மேல் தீவிரமாககாபியை ஒரு கப் குடிப்பதும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதுமாக இருந்தோம்."திலீப் மேல எனக்குக் கோபமில்லை ராஜ்.பேரன்ட்ஸ் மட்டும்தான் அவன் உலகம். அவனுக்கு அவங்க மனசு காயப்பட்டுடக் கூடாது.எனக்கு என் மனசு காயப்படக் கூடாது. யாராச்சும் ஒருத்தர் காம்பரமைஸ் பண்ணிக்கணும்.அவங்க பேரண்ட்ஸால முடியல. என்னாலயும் முடியலை"என்ற ஸ்வேதா தன் நகங்களைப் பார்த்துக்கொண்டாள்.

"ஸ்வேதா... என்ன பிரச்னைனு நான் கேக்கமாட்டேன். நீ விலகினதுக்கு நியாயமான காரணம் இருக்கும்னு தெரியும். அதனால், எனக்குநீ எந்த விளக்கமும்..."-

 "இல்ல ராஜ்... உனக்குத் தெரியணும். நான்டிரான்ஸ்பரன்ட்டா இருக்க விரும்பறேன்.இதுக்கு முன்னாடி நான் வேலை பார்த்த இடத்துல, எனக்கு பதவி உயர்வோட ஆஸ்திரேலியாபோறதுக்கு ஒரு வாய்ப்பு வந்துச்சு. நான் ஏங்கின நல்ல வாய்ப்பு. அந்த நேரம் பாத்துநான் கர்ப்பமாகிட்டேன். திலீப்கிட்டே பேசினேன். கலைச்சுடுறேன்னு சொன்னேன். முதல்ல அவனுக்குப் பிடிக்கலை, அப்புறம் புரிஞ்சிக்கிட்டு ஓ.கே. சொல்லிட்டான். ஆனா, அவன் அப்பாஅம்மா சம்மதிக்கவே இல்லை. நூறு காரணம் சொன்னாங்க. என் கேரியர் முக்கியம்னு சொன்னா,அவங்களால் புரிஞ்சுக்க முடியல. தீலீப் ஒருவாரம் ஊர்ல இல்லை. நானே ஹாஸ்பிட்டல் போய் டெர்மினேட் பண்ணிட்டேன். ஊர்லேர்ந்து வந்து, குதிச்சான். 
'உனக்கு ஓ.கே-ன்னுதானே சொன்னே... இது நம்ம வாழ்க்கை . அதை உன் அப்பா, அம்மா டிசைட் பண்ணக் கூடாது'னு சொன்னேன்.

"அப்புறம்?"

"தினமும் திகட்டத் திகட்ட விவாதங்கள்,ஈகோ க்ளாஷ். வேலையை விடு, ஆஸ்திரேலியாபோகக் கூடாதுனு அபத்தமான நிபந்தனைகள்நான் கர்ப்பத்தைக் கலைச்சிக்கிட்டதே அதுக்குத்தானே... அந்த வாய்ப்பை எப்படி விட முடியும்? என் அப்பா, அம்மாகிட்ட சொன்னார்,
அவங்களும் என் மேலதான் கோபப்பட்டாங்க. டைவர்ஸுக்கு அப்ளை பண்ணிட்டு ஆதிரேலியா போயிட்டேன். திரும்பி வந்ததும் தீர்ப்பு கிடைச்சது. இந்த கம்பெனியில நல்ல ஆஃபர் குடுத்தாங்க,ஏதோ கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கு எனக்கு.'

"ஏன்?"- 

"இங்க வந்ததால்தானே உன்னை சந்திச்சேன். எனக்கு உன்னைப்பிடிக்கும் ராஜ், நீ புரப்போஸ் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன்.எனக்கு ஒ.கே. நீ உன் காதலை மறுபரிசீலனை செய்யலாம். பந்து இப்பஉன் கோர்ட்ல!"

''ஸ்வேதா... இதான் உன் ஸ்பெஷாலிட்டி. கோபம்னா..கோபம், வெறுப்புன்னா வெறுப்பு: காதல்னா காதல் கண்ணாடி மாதிரி அப்பட்டமா உள் உணர்வுகளை வெளிப்படுத்தும் உன்கிட்ட ரெண்டு பெர்சன்ட் கூட வேஷம் இல்ல, என் லவ்வுல எந்த மாற்றமும்இல்ல. கும்பகோணத்துல என் அக்கா இருக்கா. அவதான் எனக்கு எல்லாம். அவ சம்மதம் எனக்கு முக்கியம்.

"வெல். போய்ட்டு வா. அவங்க ஓகே. சொல்லலைன்னா உன் காதலை ரப்பர் வெச்சி அழிச்சிடுவே.. ரைட்?"

"இல்லை! என் லவ் பென்சில் ஆர்ட் இல்லை. கல்லில் செதுக்கின சிற்பம்!''

"மை காட்! கவிதையா? சிற்பம்னா, அப்போ உளி வெச்சுதான்உடைக்கனுமா?"

“ஏன் இப்படி நெகட்டிவாப் பேசறே? அக்கா சொன்னா, எனக்குயானை பலம்!"

"இப்ப நோஞ்சானா இருக்கேல்ல"

ஸ்வேதா.. ப்ளீஸ்.

"எய்.. சும்மா கலாய்ச்சேன். அக்காவைப் பாத்துட்டு வந்தே முடிவு சொல்லு. நீ சரி சொன்னா, காதலிக்கலாம். 'வேண்டாம்' சொன்னா, 'காதலிக்க வேண்டாம், அவ்வளவுதானே"

"உன்னால அவ்வளவு சிம்பிளா எடுத்துக்க முடியுமா?"

"திலீப் கிடைக்கலைன்னா, கொஞ்சம் வருத்தமாதான் இருக்கும், ஆனா,கடல்ல குதிக்க மாட்டேன். வேற வேலைக்கு மாறவும் மாட்டேன். 'ஒரு வாரத்தில் அந்த ஏமாற்றத்துல இருந்து வெளியே வந்துடுவேன். 'அதேசமயம் இந்த ஆண்கள் எல்லாருமே சுத்த மோசம்னு பச்சை குத்துற பைத்தியக்காரத்தனம் செய்ய மாட்டேன்."

"ஏன் இப்படிலாம் பேசற,நெகட்டிவா எந்த முடிவும்எடுக்கலையே!"

"பாசிட்டிவாவும் எடுக்கலையே.. ரெண்டு நாளைக்கு முன்னாடி உன் காதல் அத்தியாயத்துல உன் அக்கா வரலையே. உன் தயக்கம் ரொம்ப நியாயம் ராஜ்.வேணும்னா உனக்கு ஒரு சாய்ஸ் தாட்டுமா? நாம் கொஞ்சநாள் 'லிவிங் டு கெதரா இருக்கலாமா? சரியா வரலைனா, 'கை குலுக்கிட்டுப் பிரிஞ்சிடுவோம். என்ன சொல்ற?"

கன்னத்தில் கை வைத்து வியந்து பார்த்தேன்அவளை!
✳✳✳✳✳✳✳✳கன்னத்தில் கைவைத்து வியந்து என்னைப்பார்த்துக்கொண்டிருந்தாள் அக்கா.

"இப்படிலாமா ஒருத்தி பேசுவா? புக்ஸ்லபடிக்கிற மாதிரி இருக்குடா. ஒரு காபி குடிக்கிறநேரத்துல எல்லாத்தையும் முடிவு பண்ணடமுடியுமாடா?"

"இப்போ நிறையப் பேர் இப்படித்தான்க்கா ."

"இப்ப நான் என்ன சொல்லணும்?""உனக்கு என்ன தோணுதோ சொல்லு!"

“புரியலை ராஜ். நிஜமாப் புரியல. இதெல்லாம்தான் சுதந்திரமாடா? புருஷன் வேணாம்,பெத்தவங்க வேணாம், வயித்துல உதிச்சகுழந்தை வேணாம். நீ நோ சொல்றியா... அப்ப நீயும் வேணாம்.. எதுவுமே வேணாமா? என்னதான் வேணும்? சுதந்திரம் மட்டும்தானா?அதாவது முடிவெடுக்கிற சுதந்திரம்! என்னால முடியுங்கற சுதந்திரம்! அப்ப, மனுஷங்க, உறவு,அவங்க உணர்வு எதுவுமே முக்கியமில்லயா?"

"உன் ஜெனரேஷன் வேறக்கா. இப்பல்லாம் மைண்ட்செட் மாறிடுச்சுக்கா!" 

|“என்னடா மைண்ட்செட்? இது சுயநலம் இல்லையா? என் புருஷனுக்கும் எனக்கும் நூறுசண்டை வந்திருக்கு. ரெண்டு தடவை அடிச்சிருக்கார். அப்ப பத்துப்பதினஞ்சு தடவை நாங்க டைவர்ஸ் பண்ணிருக்கணும்."- "

"அக்கா, தப்பா எடுத்துக்காதே. ஒருவேளை நீ வேலைக்கு போய் சம்பாரிச்சுட்டு இருந்தா,நீயும் அதை நிஜமா யோசிச்சிருப்பே!"

"உளறாதே, சம்பாரிக்கிறது அன்பைத் தொலைச்சுட்டு அநாதையா தெருவுல நிக்கிறதுக்கா? வீட்ல சண்டை நடக்கிறப்பலாம் மாமனார் சொல்றவார்த்தைக்கு நாங்க எப்பவோ தனியாப் போயிருக்கணும். பெரியவங்களை மதிச்சு விட்டுக்கொடுத்து வாழ்ந்துட்டு இருக்கோமே... நாங்கள்லாம் முட்டாள்களா ராஜ்?

"அது மனப்பூர்வமா இல்லையேக்கா.சகிச்சுக்கிட்டுதானே அட்ஜஸ்ட்பண்ணிட்டு இருக்கீங்க? நெட்ரிசல்ட், நிம்மதி இல்லையே!"

“பாசத்துக்கும் நன்றிக்கும் கட்டுப்
பட்டு வாழ்ற வாழ்க்கைல குறைகள் இருந்தாலும்,ஒரு பெருமிதம் இருக்குடா. தன்னை ஆஸ்திரலியாவுக்கு அனுப்பிவெச்ச கம்பெனியை விட்டுட்டுபெட்டர் ஆஃபர்னு இப்ப இந்த கம்பெனிக்குவந்திருக்காளே... இதுல எத்திக்ஸ், விசுவாசம் எதாவது இருக்கா? அதெல்லாம் லைஃப்ல வேணவே வேணாமா?"

கைகளைக் கட்டிக்கொண்டு அக்காவைப்பார்த்தேன்.“ஸோ... ஸ்வேதாவை மறந்துடு! அவ உனக்குவேணாம். அதானே?"- 

அக்கா அமைதியாக தன் வளையல்களை நிமிண்டிக்கொண்டிருந்தாள்.

“ராஜ், நான் சொல்றதை வெச்சு... நீ முடிவெடுக்கப்போறதில்லை. எனக்குத் தெரியும்.”

“அப்படி இல்லைக்கா. உன்னால் ஸ்வேதாவைப் புரிஞ்சிக்க முடியலை. நீ ஒரு ஜெனரேஷன் பின்னாடி இருக்கே. ஒருவேளை... நீ அவளோடபழகினா"

அக்கா பெருமூச்சுவிட்டாள். கொஞ்ச நேரம்கோபுரக் கலசத்தைப் பார்த்தாள்.


"ராஜ்... நம்ம தாத்தாவும் பாட்டியும் கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்துக்கவே இல்ல.நம்ம அப்பாவும் அம்மாவும் பேசிக்கவே இல்லை.நானும் உன் மாமாவும் திருட்டுத்தனமா கோயிலுக்குப் போனோம். நீங்க டெஸ்ட் ட்ரைவ் பண்ணி கார் வாங்குற மாதிரி ஒரு டிரையல் லைஃப் பத்தி யோசிக்கிறீங்க. இதுல எது சரி,எது தப்பு? இது உங்க உலகம்! உங்க நியாயங்களும் சிந்தனைகளும் வேறயா இருக்கு. இதுக்குள்ள எங்க நியாயத்தை எப்படிப் புகுத்த முடியும்? நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ ராஜ்.நாளைக்குப் பிரச்னைனு பிரிஞ்சாலும் ரெண்டுபேரும் வருத்தப்படப்போறதில்லை. அப்ப ட்ரை பண்ணிப் பார்க்குறதுதானே சரி?”

 "மனசார சொல்றியா.. இல்ல நான் வருத்தப்படக் கூடாதுன்னு சொல்றியா?"

"என்னால அவங்கப்பா, அம்மா மாதிரி உன்னோட சண்டை போட்டுக்கிட்டு பேசாமஇருக்க முடியாதுடா, நீ எதிர்பார்க்குற பதிலைச் சொல்லிட்டேன்ல... விட்டுடேன்!" என்றாள்.

எனக்குப் புரிந்தது. ஆனாலும் புரியவில்லை.

பத்து வருடம்

அருமை யார் எழுதியதுனு தெரியாது.  காப்பி பேஸ்ட்

பத்து வருடம்

பத்து வருடங்கள் என்பது ஒரு சிறு கால அளவாக தோன்றுமாயின் அது மிக பெரிய தவறு.

பத்து வருட கால அளவுகளில் எத்தனை குடும்பங்கள் வேலையிழந்தது எத்தனை அழிவுகளை சந்தித்தோம் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா?

1980 களில் தொலைக்காட்சி பெட்டி வந்தது.... பக்கத்து வீடுகளின் நட்பு துண்டாக ஆரம்பித்தது... ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தது...

செயற்கை உரங்கள் ஊடுருவ ஆரம்பித்தது... இயற்கை விவசாயம் அழிய ஆரம்பித்தது...

குளிர்பானங்கள் ஊடுருவ ஆரம்பித்தது...
இளநீர், பதநீர் அழிய ஆரம்பித்தது...

வெள்ளை சக்கரை பரவலாக பிரபலம் ஆனது... சர்க்கரை நோய் படர ஆரம்பித்தது...

சிகரட்டுகள் அதிக அளவில் விற்பனை தொடங்கின... வெற்றிலை பாக்கு அழிய ஆரம்பித்தது...புற்றுநோய் முலைக்க ஆரம்பித்தது...

ரீல் கேசட்டுகள் வந்தன... பாடல் நிறைந்த தட்டு கிராமோஃபோன்கள் ஒலிக்காமல் போயின...

ரஸ்னா வந்தது... எலும்பிச்சை சாறு ஆவியானது...

பெரிய ஊரிலிருந்து இன்னொரு பெரிய ஊருக்கு போகும் வழியே ஒற்றை தார் சாலை.... புளியமரங்கள் இருபுறமும் இருந்தது.

*மாவட்டத்திற்க்கு ஐந்து ஆறு மருந்து கடைகள் இருந்தது...

1990 களில்
வண்ண தொலைக்காட்சி வந்தது வண்ணவண்ண விளம்பரங்கள் வரதொடங்கின... நோய்கள் அதிக அளவில் வேர்விட ஆரம்பித்தது...

ஐஸ்வர்யா ராய் எல்லாம் ஒரு அழகி,  அவளை உலக அழகி என்றார்கள்.... மஞ்சள் பூசிய பெண்கள் ஃபேர் அன்ட் லவ்லிக்கு மாறினார்கள்...

கலர்கலராய் பேஸ்ட்கள் வந்தது... கோபால் பல்பொடி, பையோரியா பல்பொடி, வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கரித்தூள், உப்பு, செங்கல்தூள் போட்டு பல் விளக்கியவர்கள் பேஸ்ட் பிரஷ் சகிதம் பல்லை பளிச் ஆக்கினார்கள்...

இரு சக்கர வாகனங்கள் நடுதர வர்க்கத்தினரும் வாங்ககூடி அளவுக்கு விலையில் குறைந்தது சைக்கிலில் பயனித்தவர் பலர் இன்று மூட்டுவலியோடு சக்கர நாற்க்காலியில்.

ஒன்றிரெண்டு வீடுகளில் இருந்த தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி அதிகமான வீடுகளை தொட்டது... தபால் நிலையங்கள் ஓய்வு நிலையங்களாக மாறதொடங்கின...

சீ.டி பாட்டு தட்டு வந்தது... ரீல் பாட்டு கேசட்டுகள் ரீல் உருவபட்டன...

சரக்கு பாட்டில்கள் பல வடிவங்களில் வந்தன பலர் பல கோணங்களிலில் தெருவில் நடந்தனர்...

மேகி வந்தது... பழைய சாதம், இட்லி,  தோசை, இடியாப்பம் போன்ற காலை உணவு செரிக்காமல் போனது...

ஐஸ்கட்டி பெப்ஸி வந்தது... கப்ஐஸ், பால்ஐஸ், சேமியாஐஸ் கரைந்து போனது...

ஏசி பிரபலம் ஆனது... மரங்களுக்கு பிராபளம் ஆனது...

வாசிங் மெஷின் வந்தது... இன்று பெண்கள் எலும்பு சத்து கால்சியம் ஹார்லிக்ஸ் குடிக்கிறார்கள்...

ஃபிரிட்ஜ் வந்தது... மண்பானைகள் உடைந்தது...

ஓசோன்ல ஓட்டைங்கற புது வார்த்தை காதுக்குள் பாய்ந்தது...

வீடியோ கேம்ஸ் வந்தது... பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுல் போன்ற விளையாட்டுக்கள் மாயமானது...

ஊருக்குள்ளே ஒரு பெரிய பகுதியிலிருந்து இன்னொரு பெரிய பகுதிகளுக்கு தார்சாலை... ஊர்சாலை இருவழி சாலையாக மாற்றப்பட்டது... மரங்கள் வெட்டப்பட்டது...

*தாலுக்காவுக்கு பத்து பதினைந்து மருந்துக்கடைகள்... இருந்தது...

இன்னும் பல...

2000 களில்
ஆர்.ஓ சுத்திகரிப்பு வீட்டுக்குவீடு மாட்டப்பட்டது... சளி சிந்த ஆளுக்காளுக்கு கைக்குட்டை அவசியமானது... ஜலதோஷமா? ஆமாப்பா ஆமா, மூக்கடைப்பா? ஆமாப்பா ஆமா, விளம்பரம் பயன்பட்டது... மருந்து கம்பெனிக்காரன் கட்டிட கட்டுமான பொருட்களுக்கு புக் பண்ணான்.

மஞ்சள் பூசியபோது வராத தோல் நோய்கள், பரு, கரும்புள்ளி எல்லாம் மெல்லமாய் சருமம் மேல் தலைகாட்ட முகம் கருமமாக மாற கவலையடைந்த நம்ம ஊர் ஐஸ்வர்யாராய்களுக்கு விடைகிடைத்தது வண்ண தொலைக்காட்சி பெட்டியில் வந்த அடுத்தடுத்த விளம்பரங்கள்... இந்த முறை மருந்து கம்பெனிக்காரன் கட்டுமான பொருட்களையே தயாரிக்கவே ஆரம்பிச்சுட்டான் அவனோட அடுத்த கட்டிடங்களுக்கு...

டிஜிட்டல் கேமராக்கள் வந்தது... பல பிலிம் நிறுவனங்களும், ஸ்டுடியோக்களும் கடையை காலிசெய்தனர்.

குடிநீர் பாட்டில் வந்தது... ஏங்க கொஞ்சம் குடிக்க தண்ணிக்குடுங்க என்ற வார்த்தைகள் காணமல்போனது...

பட்டன் வச்ச செங்கல் செல்ஃபோன் போயி சிறுவடிவ செல்ஃபோன் வரை வந்தது லேண்ட்லைன் ஃபோன், பேஜர்களுக்கு பேஜார் ஆனது. விபத்துக்கள் அதிகம் ஆகின... ஹெல்மெட் வியாபாரம் பட்டைய கிளப்பின...

தெருவுக்கு தெரு தார்சாலை... ஊர்சாலைகள் நான்கு வழிபாதையாக மாற்றப்பட்டது... நன்கு மடங்கு மரங்கள் அழிக்கப்பட்டது...

வெப்பம் அதிகரித்தது ஆர்டிக் பனி உருக ஆரம்பித்தது...

*போஸ்ட்க்கு இருபது முப்பது மருந்து கடைகள் இருந்தது...

2010 லிருந்து
உங்களுக்கே தெரிந்திருக்கும்.... தெரியலைனா தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு...

நாம் இப்பவும் ஆர்டிக் பனி உறைஞ்சு வந்தா என்ன அதான் ஓசோன்ல ஓட்டை இருக்கே அதுவழியா தண்ணி வெளியே போயிடும்யானு மொட்டை தலைக்கும் மொழங்கலுக்கும் சம்மந்தமே இல்லாம முடிச்சிபோட்டுக்கிட்டு ஜாலியா இருக்கோம்.

*வீட்டுக்கு வீடு மருந்து கடை தொடங்கும் அளவுக்கு மருந்துகள் உள்ளது.

ஆக இந்த பத்து வருடம் என்பது வளர்ச்சி தரும் கால அளவுனு தீர்மானிச்சா... அது முற்றிலும் தவறு... அடுத்த பத்து வருடத்தில் அதாவது 2020 லிருந்து 2030 க்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர் விற்பனைக்கு வந்துவிடும். ஏற்கனவே சினாவில் வியாபாரம் ஆக தொடங்கி விட்டது

இப்போதுதாவது விழித்துக்கொள் நண்பா... மரங்களை நடு ஆக்ஸிஜன் தானாக கிடைக்கும், மழை வரும்... நீர்நிலைகளை சரிசெய்து மழைநீரை சேமித்திடு... பாசனத்திற்க்கு திறந்து விடு. விவசாயம் பெருகும்... கால்நடைகளை பெருக்கு... இவைதான் எல்லா தொழிலுக்குமே மூலதனம்... சிந்தித்து செயல்படு.... மரமே மந்திரம்... மரம் ஒன்றே ஒரே மந்திரம்...

ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் !

ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் !

அருள்மிகு உத்தமர் திருக்கோவில் !!



👉 அருள்மிகு உத்தமர் திருக்கோவில் திருச்சிராப்பள்ளியிலிருந்து சேலம் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலமாகும். ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் உலகின் ஒரே திருத்தலம் இதுவாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசமாகும்.

தல வரலாறு :

👉 சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி, அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தார். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார்.

👉 இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை.

👉 அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார்.

👉 அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசியை நீக்கியது. இதனால் தாயார் 'பூரணவல்லி" என்ற பெயரும் பெற்றாள். பெருமாளும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.

தல பெருமை :

👉 புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமாதலால், உத்தமர் கோவில் எனப் புகழ் பெற்றது. பல மன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்ததாக இங்கு காணப்படும் குறிப்புகள் வெளியிடுகின்றன.

👉 பெருமாள் கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார்.

ஏழு குருபகவான் :

👉 பிரம்மகுரு

👉 விஷ்ணுகுரு

👉 சிவகுரு

👉 சக்திகுரு

👉 சுப்ரமயணிகுரு

👉 தேவகுரு பிரஹஸ்பதி

👉 அசுரகுரு சுக்ராச்சார்யார்

ஆகிய ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் உலகின் ஒரே திருத்தலம். தென்முகமாக குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில் பிரம்மா அருளும் தலம். பிரம்மாவின் இடப்புறம் தனிசன்னதியில் ஞானசரஸ்வதி குடிக்கொண்டு இருக்கும் தலம்.

தல சிறப்பு :

👉 மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியருடன், அருகருகே தனித்தனி சன்னதிகளில் அமைந்து அருளும் திருத்தலம் இந்தியாவில் இது ஒன்றே.

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல்,

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வ மரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.  (இயற்கை மருத்துவ குறிப்புகளிலிருந்து)

சனீஸ்வர் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

சனீஸ்வர் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்
🌼திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்தர் சொன்ன பரிகாரமுறை இது.
🌼நீங்கள் எத்தனை கோடி ,
கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,
🌼நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.
தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.
🌼ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால் , உங்களுக்கு அந்த சனிபகவான் முழு அருள் கடாட்சம் வழங்கி உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி.
🌼அப்படிப்பட்ட ஒரு தேவரகசியம் போன்ற தகவலை , நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்
மட்டற்றமகிழ்ச்சி…….
🌼தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
🌼உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.
🌼இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி, வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படைத்தாலும், ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
🌼காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா.. இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….
தெரியவில்லை!..
🌼ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
🌼செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான்.
🌼உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி காக்கை இனம்.
🌼குடும்ப ஒற்றுமை வேண்டும்  என்று நினைக்கும் சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.
தன் உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,
தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தகாணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.
🌼திறந்தவெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள்.
🌼அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,
ஏழு, ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடி அளவுஎடுத்துவைத்து,
🌼காக்கைகளை “கா…கா…’என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின் அழைப்பினை ஏற்றுகாக்கைகளும்பறந்துவரும்.
🌼அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போது அந்தக்காக்கைகள்
🌼 “கா…கா…’என்று கூவி தன்கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக்காக்கைகள் உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,
🌼அந்தவாழை இலையில் பொரி,பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.
🌼இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
🌼இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.
மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்
திருப்திப்படுத்தியதாவு ம்
கருதுகிறார்கள்.
🌼காக்கை சனிபகவானின்வாகனம்.
காக்கைக்குஉணவுஅளிப்பது சனிக்குமகிழ்ச்சிதருமாம்.
🌼காக்கைகளில் நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சிலவகைகள் உண்டு.
🌼காக்கையிடம்உள்ளதந்திரம்வேறு எந்தப்பறவைகளிடமும்காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்துமனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின்நிலையைஅறிவாராம்.
🌼அதனால்காக்கைக்குஉணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும்
சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால், காக்கைக்குஉணவிடுவதால்ஒரேசமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.
தந்திரமான குணம் கொண்ட காகம் காலையில்நாம்எழுவதற்குமுன்,
காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்தகாரியம் வெற்றிபெறும்.
நமக்குஅருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக்கரைந்தால் நல்லபலன் உண்டு.
🌼வீடுதேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும்
🌼எனவே, காக்கை வழிபாடு செய்வதால்
🌼சனிபகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்றுமன மகிழ்வுடன் வாழலாம்

டிகாக்ஷன் போடும் கலை

படித்தேன் ! ரசித்தேன் ! ருசித்தேன் ! பகிர்கிறேன் ! சுஜாதா சுஜாதாதான் !
மனுஷன் அப்படியே சமையலறை ஸீனை கண்முன் காட்டுகிறார் !

 டிகாக்ஷன் போடும் கலை!

டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் –அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.

மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி.வெறும் ஸ்டெரெய்ன்தான் – இரண்டு நாள் ரெஸ்ட்டாக இருந்தால் போதும் என்று டாக்டர்சொல்லிவிட்டார்.

ரெஸ்ட் என்பதில் காப்பி கூடப்போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால்வழக்கம்போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது...மனைவி காப்பிபோடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்கு மேல்தான் தெரிந்தது.

”டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்க”என்று சொல்லிவிட்டு தனது தூக்கத்தின் இன்ப எல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.

நான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனே தவிர போட்டுப் பழகாதவன். ஓரளவு காப்பி நடவடிக்கைகளைஎட்ட இருந்து கவனத்திருக்கிறேன் என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளாதவன்.

மனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராகஇருக்கும். இன்னும் சில சமயம் நாம எதைக் குடித்தோம் என்றே தெரியாது. மனைவி அமைவதெல்லாம்மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.

காப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்குஇருக்க வேண்டும்.

மழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால்எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள் கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் ·புல் காப்பிப் பொடிபட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன்மேலெல்லாம் நம்ம திருஷ்டி படும் என்று அவர்கள் நினைத்து காரில் கண் திருஷ்டி கணபதி ஒட்டிவைப்பதில்லை.

ஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டு விடுவாளாம்.எல்லாம் சைக்கோ கேஸ்.

‘காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப்ஆகிவிட்டது. காப்பிப் பொடியை ·பில்ட்டரில் போடவேண்டும்  என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும்மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்கு விஷயம் தெரிந்த ஞானஸ்தன்.

ஆனால் எந்த ·பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவதுகலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும். சில பேர் இருபது ரூபாய் நோட்டாகசேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டிவகையறா…

மனைவி ஒரு ·பில்ட்டர் கலெக்டர். பல வகையான ·பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்துஇருக்கும். அது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால்சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.

மேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதைஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(?) ஆகிவிட்டது.

எந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டு பிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார்அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம் பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும்போலாகிவிட்டது.

நல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறது’ என்று குரல் வரவில்லை.

சற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்தபின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகலஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. (ஆனால் நான் கொஞ்சம் சூட்சுமமூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படிபாட்டிலில் இருந்தது மஞ்சள் தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப்போகிறதென்று அலம்பிவிட்டு – சே! என்ன அவசரம், ஏன் ஆர்வம் – காப்பிப்பொடி பாட்டிலில் ஈரமாகவேநுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச் சேதத்துக்குரிய மாபெரும் குற்றமில்லாவிட்டாலும்; நாளைக்குகோர்ட் முன் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என்நறுக்கு பதில்களும். (கற்பனைதான்).

நீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்?

ஏதோ ஒரு ஸ்பூன்.

மிளகாய்ப் பொடி ஸ்பூனா?

அந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.

துடைச்சீங்களா?

ஊம்… ஊம்…

சரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.

சரியான ஞானக் கண்ணி!

காப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னு… சே! அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை?

மஞ்சள் தூள் பாட்டிலையா? நல்லா மூடினேனே.

நான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும்ஆயிடுட்டுது…
ஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு,தப்புத்தானே….

இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம் போகவேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக் கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.

சே! காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான்அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச் சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான்சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலேஅம்மா ஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்த ஆக்கிவந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு – உங்ககண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.

அந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப்போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்ல சாதகமாயிருக்கும்.

ஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா? ‘நீங்க பெரிய ரஜினி? வாய்ஸ்குடுக்கறீங்களா வாய்ஸ்?’ என்று எழுப்பப்பட்ட புலி உறுமக் கூடும்.

இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை (குமாச்சியா) போட்டாயிற்று.

அப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாகஇறங்குமாம்.

ஒரு குண்சாகச் சர்க்கரை போட்டே ன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.

பாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக்குடித்துவிட்டு அவளுக்கும் தர வே
ண்டியது.

பாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது. சிறிது சூடானதும் பாலில் வினோதமானகொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன. உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. ‘இறைவா,தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பா’ என்ற பிரார்த்தனைஎடுபடவில்லை.

இத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான்அடுப்பேற்றினேன்.

இதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி,தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டு சேராக் கூட்டணி மாதிரி பால் அதுஇஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது.
மிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரதயுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கி அமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில்கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.

அமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர்இருபத்து நாலு ஆச்சே.

ஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே…

இப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது.

”இன்னுமா காப்பி போடறீங்க?”

”தோ ஆச்சு!”

”நான் வரட்டுமா?”

”வேணாம், வேணாம்” அவசரமாக அவள் வருகையை ரத்து செய்தேன்.

முக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாகமறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் போகிற வழியில்மனைவியின் ‘என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க?’ என்றால் விபரீதம். கொலைசெய்வதைவிட அதை மறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்தபாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.

அதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக்கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்தி சக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்துஅலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும்படலம் முடிந்தது.

இனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.

பில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும்பழமொழிக்குச் சிறந்த உதாரணம் – பில்ட்டரைக் கழற்றுவதுதான்.

எவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக்கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடி துணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும்விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.

இடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒருஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கலாம்… ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துஅதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.

அதற்குள் மனைவியிடமிருந்து

‘என்னாச்சு! நான் வரட்டுமா?’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டுகால்கள்தான்).

”இதோ ஆச்சு!” என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன்ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப் பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால்என்று ஜோடி பிரிந்தது. செய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.

பிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கிமனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்கு திரும்புவதற்குள்,

‘தூ தூ… என்று மனைவியின்கூப்பாடு.

”அழுத்தவே இல்லியா…” கூவினாள் – காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி,உரக்க அழைத்திருக்க மாட்டான்.

”எதை அழுத்தலையா?” செயற்கையான வீரத்துடன் காளிமாதாவிடம் மோதினேன்.

”மனுஷி குடிப்பாளா?” என்று ஆற்றிக் காட்டினாள்.

மணல் மாரி! கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.

”அழுத்தவே இல்லியா? காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது! அழுத்தணும்னுதெரியாது?”

”எதை?”

”என் தலையை!”

மனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளுதள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரை ஆராய்ந்தாள்.

”ஒரு வாய்ச் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம்பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது. மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.

”எதையடி அழுத்தணும்…?”

”காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் –வேலை முடிஞ்சிதுன்னு.”

நான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம்தெரிவித்தேன்.  அதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை…

”இதனுடைய மேல் பில்ட்டர்எங்கே… அட ராமா! நாலு ஸ்பூன் பில்ட்டருக்கு இரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சிகாப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”

”காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.”

”உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது? நாலு ஸ்பூன்அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன் பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”

”அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.”

”காப்பிப் பொடியை அழுத்தணும்… இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப்போட்டுத்தர ஆள் இல்லை.”

”செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாகஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.

கால்மணியில் மனைவி காப்பியோடுவந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.

”போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு!” என்று பாராட்டினேன். ”எனக்கும் காப்பி போடமுறைப்படி கத்துக் கொடுத்துடு” என்றேன்.

”கத்துக் குடுக்கறாளாக்கும் கத்து? கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னாபொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேல் ஷாவனிஸம்!”v

”வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பிபோடுகிறார்கள் மேலாவது ஷாவனிஸமாவது. உளறல்
-------------------------------------------------------------------------------------------------------------------
இதை நான் முக நூலில் போட்டு எனக்கு வந்த பதில் 
இதை எழுதியது ஸ்ரீரங்கம் Swaminathan Ramasubramanian
...Read his reply ..
தம்பட்டம் 
-------------------

ஹலோ ராஜா , ஆபீஸ்லேந்து வந்துட்ட்டியா?

அப்பவே வந்துட்டேனே..

உடம்பு வெறும்ன இருக்கியாப்பா?

நல்லா இருக்கேன் சித்தப்பா.

சாப்பிட்டயாம்மா?

ஆயிடுத்து. சொல்லுங்கோ.

உனக்கு ஒண்ணு வாட்ஸ் அப்ல அனுப்பிச்சிருக்கேன் பார்த்தாயா?

என்னது  பார்க்கலையே 

சுஜாதா ரியலி கிரேட்.! ஹீ இஸ் எ ஜீனியஸ்! 

வாவ்.. நீங்க தமிழ் புக்செல்லாம் படிக்கறேளா?  

ரிட்டையர் ஆனப்புறம் எனக்கும் பொழுது போகணுமே.. தமிழ்ல நன்னா எழுதறாப்பா.

தமிழ்ல நல்லா தான் எழுதுவாங்க. அப்படி என்ன படிச்சீங்க ? 

பில்டர் காப்பி பத்தி எழுதி இருக்கார் பாரு.. நீ  ரொம்ப ரசிப்ப.. 

அவர் ஐ ஐ டி தானே ?

இல்ல சித்தப்பா.. எம் ஐ டி.. குரோம்பேட்டை.. நம்ம செயின்ட் ஜோசெப்ஸ்.  

பிரில்லியண்ட்பா அவரு .. நீ கண்டிப்பா படிச்சுட்டு கூப்பிடு 

ஹலோ.. படிச்சியாடா?

ம். நல்லா இருந்துச்சு.

அந்த காபி போடறத கார்த்தாலேந்து பொம்மனாட்டிகளுக்கு கூட தெரியாதுடா. என்ன டீடைலா கொடுத்துருக்காரு  மனுஷன்.நம்ம ஊர் பத்மா காப்பி.. ஞாபகம் இருக்கா.. அவர் பையன்  என் ஸ்டூடெண்ட் தான். உங்க ஸ்ரீரங்கம் ரங்கபவனம் காபி எப்படி இருக்கும்!!!!.. அந்த கடைசில 'டொய்ங்'' னு ஒரு பன்ச்ல  முடிச்சார் பார்த்தியா.. ஹில்லரியஸ். உங்க சித்திட்ட படிச்சு காண்பிச்சேன்.

சித்தப்பா, அய்யங்கார்ல ராமநாதன்னு பெயர் வச்சுப்பாளா?

பொதுவா வச்சுக்க மாட்டாங்க. அது சிவன் பெயராச்சே..

சுஜாதா அய்யங்கார்.. என்னோட ராமநாத மற்றும் சீனு பெரியப்பான்னு எழுதி இருக்காரே, கவனிச்சீங்களா?

அட  ஆமாம் . ஆனா   சுஜாதா  காபி பற்றி எழுதியதுன்னு   முன்னாடி போட்டிருந்ததே.   

இந்த வாட்ஸ் அப்லயும் ,  ஃபேஸ் புக்லயும் இது தான் ப்ராப்ளம்..பெரிய ஆட்களளோட பெயரை எல்லாம் தப்பா பயன்படுத்திப்பாங்க.. ஒண்ணுமே செய்ய முடியாது.

சுஜாதாவோட உண்மையான பெயர் ஸ்ரீரங்கம் எஸ். ரங்கராஜன்.. ஆரம்ப காலத்துல ஸ்ரீரங்கம் எஸ் ஆர்ன்னு எழுதினாராம்..

ஆனா இந்த பில்டர் காபி பத்தி நீங்க அனுப்பிச்சீங்களே அவரும் ஸ்ரீரங்கம் எஸ். ஆர். தான்.. அதாவது ஸ்வாமிநாதன் ராமசுப்பிரமணியன். அவர் பெரியப்பா ராமநாதனை கூட உங்களுக்கு தெரியும். அவர் இப்ப இல்லை.

அட படவா.. நீயா எழுதினே?.  எனக்கு அப்பவே ஒரு டவுட்டு..

ஹி !... ஹி .. ஹி  

பின் குறிப்பு : 

இரண்டு நாட்களாக நான் இருக்கும் பத்து வாட்சப் க்ரூப்பிலும் என் பழைய பில்டர் காபியை பற்றிய புராணம் சுஜாதாவின் பெயரை போட்டு ஓடு ஓடு என்று ஓடி எனக்கே வந்து கொண்டு இருக்கிறது. வாத்யார் கதையை சுட்டா தான் தப்புன்னு நினைச்சுகிட்டு இருக்கிறோம். அவர் பெயரை தப்பா பயன்படுத்தினாலும் தப்பு தானே. என்ன சார் உங்களுக்கு க்ரெடிட் கொடுக்காமல் இப்படி ஷேர் பண்ராங்களே என்று  என் நல விரும்பிகளும், முகநூல் நண்பர்களும் தங்கள் ஆதங்கத்தை அன்புடன் வெளிப்படுத்தவே, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு  இந்த லொலொளாய் பதிவு. என் காபி பதிவை  படிக்காதவர்கள் உங்கள் வாட்சப்பை மீண்டும் பார்க்கவும். எப்படியாவது வந்திருக்கும் அல்லது வந்து சேரும்.


50 வயதைத் தொட்டவுடன்

இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் கற்பிதம் செய்து கொள்கிறார்கள்.

50 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கி பயணிக்கற பலரை இப்போது பார்க்க முடிகிறது.

50 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம்.

10,000 கி.மீ பதவுசா வண்டியை ஓட்டுங்க, அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்.....  50 வயதும் அப்படிதான்..... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான்!!!

50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்....

1.  புதியதை தேடுங்கள்:  சிலர் “பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூனாக” இருக்கலாம்..... 50களில் வாழ்க்கையில் ஓரளவு செட்டில் ஆகியிருந்தால் இந்த உந்துசக்தி குறைந்து போகும்..... சோம்பேறித்தனம் சொம்போடு உட்கார்ந்து மொக்கை போடும்...... எனவே புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான ஒன்றைக் கையிலெடுங்கள்...... உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தோதாக ஒன்றைச் செய்யுங்கள்.

2.இளைஞர்களோடு பழகுங்கள்:50 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து அங்கிள் அசோசியஷனை உருவாக்காதீர்கள்...... உங்களை விட வயதில் குறைவானவர்களோடு பழகுங்கள்!! உங்களுக்கு 25 வயதில் இருந்த, அவர்களிடம் இருக்கும், அந்த எனர்ஜி உங்களுக்கும்கிடைக்கும்.....அங்கிள்அசோஷியனில் உட்கார்ந்தால் இன்னும் வயசாகும்!!!

3.  அழகாக உடை உடுத்துங்கள்:  அழகான உடைகளை தேர்வு செய்யுங்கள்..... காமா சோமா என்று ஒரு காம்பினேஷனில் உடை போட்டுக் கொண்டு திரியாதிர்கள்!!!!! 50 வயதில் நரையும் வழுக்கையும் அழகுதான்!!!!! உலகின் அழகான நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+கார்கள்தான் அதிகம்!!!!

4.  பயணம் செல்லுங்கள்:  உடனே 50+ ஆட்கள் பத்துபேரை கூட்டிக் கொண்டு கோயில் கோயிலாக கிளம்பிவிடாதீர்கள்!!!!! இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...... வித்தியாசமான இடங்களுக்கு செல்லுங்கள்!!!!! வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா பயணங்கள் செல்லுங்கள்..... இல்லையென்றால், 50 வயதில் அங்கிள் ஆன நீங்கள், 60 வயதில் கிழவனாகி விடுவீர்கள்!!!

5.நிறைய படியுங்கள்:   மூளைக்கு தீனிபோட, நிறைய படியுங்கள்..... தேர்வு செய்து படியுங்கள்!!!  புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசியுங்கள்..... அவர்கள் பேச்சை கேளுங்கள்."அறிவுப் பகிர்தல் நடக்கும் இடங்களில் எல்லாம் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்!!!

மேற்சொன்ன விஷயங்களை செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை!!!!!

மூளையும் மனசும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வரப் போகிறது?????

எப்போதுமே முதல் இன்னிங்கசை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்    பெரும் பங்கு வகிக்கறது..... நீங்கள் 50+ கார்ராக இருந்தால் தாமதிக்காதீர்கள்!!!!

இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்!!!!!

🌹🌹🌹🌹

வீட்டுக்கு வெளியே ?

வீட்டுக்கு வெளியே ? நாய் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.
தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர்.
அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது.
மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது.
மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். 
உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது.
வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. 
பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது.
இவருக்கோ குழப்பம். எதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது.
இங்கே எதற்காக வந்தது.?
எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்துஅலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது.
வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.
மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள்.
மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். 
அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது.
மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.
இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய்
எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்.
ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார். 
மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில்
 வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது. 
படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அப்படி என்ன தான் எழுதியிருந்தது?..
"அன்பு மிக்கவருக்கு வணக்கம். 
இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது. 
தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி".
பி.கு."ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன."🤣🤣🤣🤣