Sunday, July 12, 2020

சிறுகதை போட்டி

பானு ....இங்கே பாரேன் ஒரு சிறுகதை போட்டி வந்திருக்கு . பரிசு பத்தாயிரமாம் . 

என்ன டைட்டில் ன்னா ? 

டைட்டில்லாம் ஒண்ணுமில்லை . இந்த படத்துக்கு பொறுத்தமா ஒரு கதை எழுதுங்கறா 

என்ன படம் இது . கொஞ்சமும் பொறுந்தறாப்பலயே  இல்லையே . ஒரு டீ கடை பாய்லர் எதிரக்க ஒரு குழந்தை ஒரு அண்டால உடகாரந்திண்டு இருக்கு . அதுந்தலைல மழைத்தண்ணி சொட்டிண்டு என்னண்ணா இது ?? கண்டறாவியா இருக்கு ! குழந்தைக்கு உடம்புக்கு ஆகுமோ ? அது அம்மாக்காரி எங்க போயட்டா ?? குழந்தைய இப்படி தனியா விட்டுட்டு ??மகா பாவி !!!!

பானு ... பானு ... ஹோல்ட் ஆன் 
ஹோலட் ஆன் ....

ஈஸியா குடுத்துட்டு பத்தாயிரம் பரிசு கொடுப்பாளா ? இந்த மாதிரிதான் ட்ரிக்கியா கொடுப்பா . கொஞ்சம் பொறுமையா யோசிச்சா எதாவது நாட் கண்டிப்பா கிடைக்கும் . 

என்னமோன்னா.... அந்த குழந்தையோட சிரிச்ச மூஞ்சி என் கண் முன்னாடியே இருக்கு !!!

அந்த அம்மாக்காரி மட்டும் என் கையில ஆப்டுண்டா அவ தொலஞ்சா . குழந்தய வளரக்கத்துப்பில்ல ??  தனியா குண்டால உடகார வெச்சுட்டு எங்கேயோ போயிட்டா ....!

பானு ... ஒன்ன ஒண்ணு கேகட்டுமா ... கோவிசுக்க மாட்டியே ?? 

சொல்லுங்கோண்ணா ....

பானு ..... நமக்கு ஒரு கொழந்த இல்லேன்னு உனக்கு வருத்தமா இருக்கா ?? 

இருக்காதா பின்னே !!! கல்யாணம் ஆன இந்த 25 வருஷத்துல நான் பட்ட அவமானம் கொஞ்சமா நஞ்சமா 
 ஒரு , நாள் , கிழமை , கோவில் குளம் எங்க போனாலும் என் பேச்சுதான் . வெளிப்படையா கிண்டல் பேசறவாளும் ....பின்னாடி பேசறவாளும் .... அப்பப்பா 


ஒரு பாவமும் செய்யாத நமக்கு ஏன் பகவான் இப்படி ஒரு வலியை க்கொடுத்தான் ? நம்ம யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம் ?  நம்ம கடைசிகாலம் இப்படி யாருமே இல்லாமலே தனிமையிலேயே போயிடுமோ ??

ஏன்னா.... நான ஒண்ணு சொல்லட்டுமா ... 

சொல்லு பானு ,

நம்ம அடுத்த தெருவில  அந்த வைதேகியையும் அவ கைகொழந்தையும் நாம கொண்டு வந்து வச்சிண்டு வளரக்கலாமா ? ரொம்ப பாவமனா அவ . போன வருஷம்தான் கலயாணம் ஆச்சு நம்ம மணியோட . 

அடப்பாவமே ....யாரு நீலுப்பாட்டியோட பேரன் மணியா ? 

ஆமான்னா .... நம்ம நீலுப்பாட்டியோட ஒரே பேரன் 
மணிதான் . 
போன மாசமதான் ஜீப் , வேனுன்னு   தெருவே திமுலோகப்பட்டுதே ...ஏதோ கல்வான் வாலி ....ஃபைரிங் அவன்தான் ... மணிதான் போய்டடானே..........

அரசாங்க காராள்ளாம் வந்தா . அழாதே . உன் ஆம்பிடையான் தேசத்துக்காக உசுரையே கொடுத்திருக்கான் னு சொல்லிட்டு போயிட்டா . 
பாவம் . அவளுக்கு அவா சொன்னது பாதி புரியல . என்ன நடந்தது சொலவார் யாருமில்ல . 

கைகொழந்தய வெச்சிண்டு என்ன பண்ணறதுன்னே  தெரியாம இருக்கா. 

அவளுக்குன்னு யாருமே இல்லன்னா  ! 

எங்க கிளம்பிட்டேள் 

வைதேகிய அழைச்சிண்டு வர்ரேன் . நீ பேசி சம்மதிக்க வை.  

பானு முகத்தில் சிரிப்பு .

சரி இந்த கதை போட்டி என்னாச்சு ? 

அதை வேற யாராவது நன்னா எழுதறவா எழுதட்டும் . நான் போய் வைதேகிய அழைச்சிண்டு வர்ரேன் .

சர அப்படியே ஒரு டீகடை பாய்லரும்  வாங்கிட்டு வந்திடுங்கோ .

அது எதுக்கு ???

என் பேரன் அதுக்கு எதிரக்க அண்டால உட்காரந்துண்டு விளையாட.     .....

No comments:

Post a Comment